-
பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 40
அந்த டிரஸ்ஸில் அவளுக்கே தோன்றியது. தான் மிகவும் அழகாக இருப்பதாய். அடிக்கடி கண்ணாடி முன் நின்று பார்த்து கொண்டாள். அம்மா தன்னை கவனிப்பதை அவளும் பார்த்தாள்.
குட்டிமா….கண்ணாடியில் உன்னை பார்த்தது போதும். உன் பிரெண்ட் உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்க முடியாது. சீக்கிரமா கிளம்பு……..அம்மா அவளை அவசரப்படுத்தி கொண்டிருந்தார்.
இன்று அவள் பிரெண்ட் ரம்யா பிறந்தநாள். அவள் வீட்டுக்கு ஏற்கனவே ரம்யா அம்மா வந்து…..கண்டிப்பா எல்லாரும் வந்திரணும்…..அழைத்து சென்றிந்தார். ஆனா அவள் அம்மாக்கு காலையில் தான் தெரியும்…..
இன்னிக்கி குட்டிமா, அம்மாவுடைய பிரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து ஹாஸ்பிடல் ல உள்ள எல்லாருக்கும் prayer பண்ண போறாங்க. அதுனால அம்மா கண்டிப்பா அங்க போக வேண்டியதா இருக்கு…..அதுனால…அவள் அம்மா இழுத்த போதே அவளுக்கு புரிந்து விட்டது. முதலில் கஷ்டமாக தான் உணர்ந்தாள். ஆனா இது இயேசப்பா விருப்பத்திற்கு உட்பட்ட காரியம் ஆச்சே!!!
மனதினில் நினைத்தவளாய் ஓகே அம்மா. நீங்க என் கூட வர முடியாம போச்சுன்னு வேதனைப்பட வேண்டாம். ஆனா என்னை தயவு செய்து போகும் போதும் மட்டும் அவங்க வீட்டில விட்டுட்டு போயிருங்க, ப்ளீஸ்…..என்ற போது தன் நிலையை உணர்ந்த தன் பெண்ணின் ஞானத்தை குறித்து நினைத்து தன் தேவனுக்கு நன்றிகளை செலுத்தினார் அவள் அம்மா.
அம்மா அங்க சீக்கிரம் prayer முடிஞ்சிருஞ்சுன்னா….நானே வந்து உன்னை கூட்டிட்டு வந்திறேன். சப்போஸ் லேட் ஆச்சுன்னா அப்பா உன்னை கூப்பிட வருவாங்க…..என்று அவள் அம்மா சொன்னதற்கும் சரி….என்றாள்.
ஆட்டோவில் போனாள் ரம்யா வீட்டுக்கு போனால் பத்து நிமிடம்தான். அவளும் அவள் அம்மாவும் ரம்யா வீட்டுக்குள் நுழைந்த போதே, கூட்டம் நன்றாக தெரிந்தது. அவள் சத்தத்தை கேட்ட உடனேயே அவள் பிரெண்ட் ரம்யா ஓடி வந்து அவள் கரத்தை பிடித்து உள்ளே இழுத்து சென்றாள்.
praise the Lord….அவள் சொன்ன போது…. ரம்யா அம்மாவும் அவளை பார்த்து உன் தேவன் உன் கூட என்றென்றும் இருப்பாராக….என்று அவர் சொல்வதற்குள் எல்லா பக்கமும் பார்த்து கொண்டார். இயேசப்பாவை ரகசியமாக ஏற்றுக் கொண்டவர் என்பது அவளுக்கே அவள் அம்மா சொல்லித்தான் தெரியும். ஆர்வ கோளாறில் சொல்லி விட்டு அடுத்துதான் புரிந்து கொண்டாள். ரம்யா அம்மாக்கு இத்தனை பெரிய கஷ்டத்தை கொடுத்திருக்க கூடாது….மனதினில் நினைத்து கொண்டாள் அவள்.
ஆனா ரம்யா அம்மா எதுவுமே நடக்காதது போல நடந்து கொண்டார். என்ன குட்டிமா….உன்னை உன் பிரெண்ட் எவ்வளவு நேரமா எதிர்பார்க்கிறா தெரியுமா….ரம்யா அம்மா கேட்ட போது.
சாரி ஆன்ட்டி….இதுக்கு முழுக்க முழுக்க நான்தான் காரணம்….அவள் பேசி கொண்டிருந்த போதே
சாரி நளினி…..நான் ஒரு இடத்திற்கு போக வேண்டியதா இருக்கு. என் பொண்ணு ரம்யா பர்த்டே பார்ட்டி முடியுற வரைக்கும் இங்கதான் இருப்பா. ஆனா சாரி என்னால கலந்து கொள்ள முடியாது…….என்று சொன்ன அவள் அம்மா ரம்யா அம்மா நளினி பேச வருவதற்குள்
ஹாப்பி பர்த்டே ரம்யா…..நம் தேவன் உன்னோடு கூட என்றென்றும் இருந்து அவர் கண்மணி போல உன்னை பாதுகாப்பாராக…...அவள் அம்மா சொல்லி முடித்த போது
ஏதாவது சாப்பிட்டு போங்க…...என்றவருக்கு
சாரி நளினி. ஆட்டோ வெயிட் பண்ணிட்டு இருக்கு. இன்னொரு நாள் நிதானமா வர்றேன் உங்க வீட்டுக்கு…..என்று சொல்லி முடித்தவர்
குட்டிமா…..அம்மா இல்லாட்டி அப்பா வந்து உன்னை கூப்பிடுக்குவோம். யாரையும் கஷ்டப்படுத்தாம நல்ல பிள்ளையா நடந்துக்கனும்.சரியா…..என்ற போது அவளும் தலை அசைத்தாள்.
அவளுடைய அம்மா ஆட்டோவில் கிளம்பி போகும் வரை அந்த ஆட்டோவையே பார்த்து கொண்டிருந்தாள். அம்மா பக்கத்தில ரெண்டு நாளுக்கு முன்னாடி ஏஞ்சல் நிற்கிறதை பார்த்தேன். எப்பவும் எங்களை பாதுகாக்க ஏஞ்சல் எங்க கூட இருப்பாங்க…..இயேசப்பா கூட பைபிள்ல சொல்லி இருக்காங்க. ஆனா இந்த விசயத்தை ஏன் அம்மாகிட்ட சொல்ல வேண்டாம்னு சொன்னாங்க…..மனதினில் அவளாலும் கட்டுபடுத்த முடியாமல் அந்த கேள்வி வந்து நின்றது.
என் இயேசப்பாக்கு ஏற்கனவே இந்த மாதிரி தேவையில்லாம யோசித்தாலே பிடிக்காது. நான் எத்தனை முறையோ கஷ்டப்பட்டு வர விடாம தடுக்குறேன். ஆனா முடியலை……இந்த நேரத்தில் எல்லார் மத்தியிலயும் கூட இப்படி அழுகை வேறு வருதே…..கஷ்டப்பட்டு தன் அழுகையை அடக்கி கொண்டாள்.
என்ன குட்டிமா….அம்மா போறதை பார்த்து அழுதிட்டு இருக்க. வா….அம்மா சீக்கிரம் வந்துருவாங்க….. உள்ளே அழைத்து சென்றார் ரம்யா அம்மா.
வீடு முழுவதும் கூட்டம். ரம்யாவின் சொந்தகாரர்கள், அவள் அம்மாவின் ஆபீஸில் வேலை செய்யுறவங்க, அப்பா வோடு வேலை செய்யுறவங்க….எல்லாரும் சேர்ந்து நல்ல கூட்டமாக தோணியது அவளுக்கு. ரம்யா அவள் அம்மா, அப்பாக்கு ஒரே பெண். அப்பா கவர்ன்மென்ட் ஜாப் வேறு என்பதால் தன் மகள் பத்தாவது பிறந்தநாளுக்கு எல்லாரையும் அழைத்து ரொம்பவே பிரம்மாண்டாமாய் ஏற்பாடு செய்திருந்தார்.
ரம்யாவின் டிரஸ் ரொம்பவே அழகாக இருந்தது. வெறும் டிரஸ் மட்டுமே பத்தை தாண்டி என்று அவள் சொன்ன போது அவள் கூட ஆச்சரியப்பட்டாள். அவளை தன் வீட்டிற்கு அழைத்து சென்ற ரம்யா தன் அறையில் இருந்த போது முதலில் பேச்சை ஆரம்பித்தாள்.
உன் டிரஸ் நல்லா இருக்கு ரம்யா….என்று சொன்னவளை பார்த்து
எனக்கு இந்த டிரஸ் கொஞ்சம் கூட பிடிக்கலை. அப்பாக்காக போட்டுட்டு இருக்கேன். பாவம் எங்க அப்பா….வெளி நாட்டில வேலை செய்யுர தன் பிரெண்ட்க்கு சொல்லி இந்த டிரெஸ்ஸை அனுப்பி வைக்க சொன்னாங்க. எனக்கு உன் டிரஸ் தான் பிடிச்சிருக்கு. இந்த டிரஸ்ல நீ ஒரு ஏஞ்சல் மாதிரி இருக்க……. ரம்யா சொன்ன போது
தயவு செய்து என்னை புகழாதே. இந்த டிரஸ் எனக்கு எப்படி கிடைச்சிச்சுன்னு தெரிந்தா கண்டிப்பா இந்த டிரெஸ்ஸை குறித்து யோசிக்க மாட்ட. இதை கொடுத்த நம்ம இயேசப்பாவை குறித்து புகழ ஆரம்பிச்சிருவ….அவள் சொன்ன போது
எனக்கு கொஞ்சம் சொல்லு…ப்ளீஸ்….எப்படி இயேசப்பா உனக்கு இந்த டிரஸ் கொடுத்தாங்க ???? ஆர்வமுடன் கேட்டவளை பார்த்து
உன்னுடைய பர்த்டே பார்ட்டி ஆரம்பிக்க போகுது….நீ என்னன்னா என் கிட்ட கதை கேட்க ஆசைபடுற…..அவள் சொன்ன போது
அது ஆரம்பிக்க இன்னும் ரொம்பவே நேரம் ஆகும்….ரம்யா எரிச்சலுடன் சொல்லவும்
ஏன் அப்படி சொல்லுற. கிட்டத்தட்ட எல்லாருமே வந்த மாதிரி தெரியுது. அப்படி இருக்கும் போது
எங்க அப்பா என்னுடைய பிறந்த நாளோட ஒரு சிறப்பு பூஜை வேற ஏற்பாடு பண்ணியிருக்காங்க. அதுனால அதுவே கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு மேல ஆயிரும். அடுத்து தான் பர்த்டே பார்ட்டி ஆரம்பிக்கும்….அவள் எரிச்சலுடன் சொல்லும் போதே அவளுக்கும் புரிந்தது அந்த பூஜையில் ரம்யாக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லை என்பது.
ஆர்வ கோளாறில் வேறு கேட்டு விட்டாள். உங்க அம்மா எப்படி சரின்னு சொன்னாங்க….அவள் கேட்ட போது
அதை ஏன் கேட்கிற. இதுனால எங்க அம்மாக்கும், எங்க அப்பாக்கும் ரெண்டு நாளா பெரிய சண்டை. கடைசில வேற வழி இல்லாம எங்க அம்மாவும் சரின்னு சொல்லிட்டாங்க. பாவம் பூஜை நடக்கும் போது….எங்க அம்மாவும் அந்த இடத்தில் உட்கார வேண்டியதா இருக்கும். என்ன செய்ய போறாங்களோ….ரம்யா வேதனையோடு சொன்னாள்.
உங்க தாத்தா, பாட்டி கூட ஒண்ணும் சொல்லலையா….கேள்வியுடன் நோக்கியவளை
எல்லாருக்கும் இதுல விருப்பம் இல்லை. ஆனா என்ன செய்ய முடியும் அவங்களால, எங்க அப்பா கோபத்திற்கு முன்னாடி…..ரம்யா பேசிய போது அவளுக்கும் வருத்தமாக இருந்தது.
எனக்கு இன்னும் நினைவு இருக்கு. எனக்கு பிட்ஸ் வந்து கொஞ்சம் கூட உணர்வில்லாம ஹாஸ்பிடல்ல கிடந்தப்ப உங்க அம்மா எனக்காக பாரப்பட்டு ஜெபம் பண்ணினது. அடுத்து என்னுடைய உடம்பில் நடந்த அதிசயம். ரெண்டு வருஷத்திற்கு மேல இருக்குமா???? ரம்யா கேட்ட போது அவளும் ஆமாம் என்பது போல தலை அசைத்தாள்.
அடுத்து ஒரு தடவை கூட நான் அந்த பிரச்சனையால கஷ்டப்படவே இல்லை. அன்னிக்கி நம்ம இயேசப்பாக்குள்ள வந்தவங்க தான எங்க அம்மா. எங்க தாத்தா, பாட்டி கூட எங்க அம்மா இயேசப்பா மேல வைச்சிருக்கிற நம்பிக்கைக்கு ஒண்ணுமே சொல்லுறதில்லை. ஆனா எங்க அப்பா மட்டும்தான் ரொம்பவே கோபப்படுவாங்க. அம்மா பைபிள் எடுத்து உட்கார்ந்துட்டா போதும்….அப்பா ரொம்பவே கத்த ஆரம்பிச்சிருவாங்க. பாவம் அம்மா அப்பா கோபத்திற்கு முன்னாடி எதுவும் செய்ய முடியாம அன்னிக்கி தன் சாப்பாடை கூட மறந்துட்டு அழுதிட்டே இருப்பாங்க. இன்னிக்கி கூட அங்க பூஜையில் எப்படித்தான் உட்கார போறாங்களோ…..நான் ஏற்கனவே இயேசப்பாகிட்ட prayer request வைச்சிட்டேன்…..தயவு செய்து எங்க அம்மாவை இந்த பிரச்சனையில இருந்து காப்பாத்துங்கன்னு……ரம்யா சொல்லி விட்டு பெரு மூச்சு விட்டாள்.
ஏதோ தனக்கு தான் உலகத்தில் உள்ள யாருக்குமே வராத பிரச்சனை வந்தது போல எத்தனையோ முறை கலங்கி இருக்கிறாள். ஆனா ரம்யா அம்மா குறித்து கேட்ட பிறகு அவளுக்கே தோன்றியது…..இயேசப்பா ப்ளீஸ்…..ரம்யா அம்மா வை இந்த பெரிய இக்கட்டில இருந்து காப்பத்துங்க…..தன் தேவனை வேண்டினாள்.
அவர்கள் இருவரும் பேசி கொண்டிருந்த போதே ரம்யா அம்மா உள்ளே நுழைந்தார்கள். இங்க என்னடா குட்டிகளா பண்ணிட்டு இருக்கீங்க. வாங்க பூஜை ஆரம்பிக்க போகுது…..நளினி கூப்பிட்ட போது
முதல்லேயே அவள் மறுத்தாள். ஆன்ட்டி உங்களுக்கும் தெரியும்…...அவள் சொன்ன போது
சரி குட்டிமா…நீ இங்கயே இரு….நீ கண்டிப்பா வர வேண்டியது இருக்கு ரம்யா…போவோமா…..என்று அவர் கேட்ட போது
கண்களில் முழுக்க கலக்கத்துடன் ரம்யா அம்மாவை பார்த்து சொன்னாள். அம்மா எனக்கு என்னமோ மாதிரி இருக்கு…… நம்ம இயேசப்பாக்கு பிடிக்காத காரியம்ன்னு நல்லாவே தெரிஞ்சி அதுல நின்னா அது அவருக்கு கஷ்டத்தை கொடுக்கிற காரியம்ன்னு நீங்க சொல்லி கொடுத்தீங்க. ஆனா இன்னிக்கி நாம செய்ய போற காரியம்…..சொல்லி கொண்டிருந்த போதே அழுது விட்டாள்.
அம்மா, ப்ளீஸ்…நான் வரலை…..என்ன அப்பா சொன்னாலும் பரவாயில்லை. அப்பா என்னை இது வரைக்கும் அடிச்சது கூட கிடையாது. ஆனா இந்த காரியத்திற்காக அடி கொடுத்தாலும் பரவாயில்லை. நாம போக வேண்டாம்….ரம்யா சொன்ன போது
ரம்யா அம்மா கூட அழுது விட்டார். எனக்கும் என்ன செய்யறதுன்னு புரியலை குட்டிமா. ஆனா நம்ம இயேசப்பா நம்மோட இருக்காங்க. அதுனால எந்த வகையிலாவது நம்மளை தப்பிக்க வைச்சிருவாங்க….ன்னு முழு நம்பிக்கையோடு இருக்கேன்….அவர் சொன்ன போது
எல்லாவற்றையும் பார்த்து கொண்டிருந்த அவளுக்கும் கண்கள் கலங்கி விட்டது.
அவள் வாயில் இருந்து அந்த வார்த்தை எப்படி வந்தது என்று அவளுக்கு கூட தெரியாது. ஆன்ட்டி நீங்க கவலைபடாதீங்க. நம்ம இயேசப்பா எப்பவும் உங்க கூட இருக்காங்க. அவர் உங்களை தப்புவிப்பார்…..அவள் சொல்லி முடித்த போது
இருவரும் அவளுக்கு நன்றிகள் சொல்லி விட்டு அந்த ரூமில் இருந்து வெளியேறினர். அவள் கொடுத்த ஆறுதல் வார்த்தை என்றுதான் அவர்கள் நினைத்திருக்க கூடும். ஆனா அவளுக்கு மட்டுதான் தெரியும்….அது தன் தேவன் அவர்களுக்கு அனுப்பின அவருடைய சத்தியம்….என்பது. கண்களை மூடி தன் தேவனுக்கு நன்றிகளை செலுத்தினாள்.
பூஜை செய்கிற சத்தம் அவள் இருந்த ரூம் வரைக்கும் கூட தெளிவாக கேட்டது. அவள் மனம் எல்லாம் புரிந்து கொள்ள முடியாத வேதனையினால் கலக்கம் அடைந்தது……ஏன் எதுக்கு என் மனசு எப்படி கஷ்டபடுது…..தேவனுக்கு பிடித்தம் இல்லாத காரியங்கள் செய்யும் போது மட்டுமில்ல….அவருக்கு பிடித்தம் இல்லாத வார்த்தைகளை கேட்கும் போது கூட மனம் வேதனைப்படும் என்பதை அவள் தெரிந்து வைத்திருக்க வில்லை.
அவள் மனம் எல்லாம் பாவம் ரம்யா அம்மாவும், அவளும்….அதை குறித்தே யோசித்து கொண்டிருந்தது. தீடீர்னு ஏதோ பெரிய சத்தம்….அலறல் சத்தம் போல…… பயந்து போனாள். ஏன் என்ன ஆச்சு???? அவள் மனதினில் நினைத்து கொண்டிருந்த போதே…… ரம்யா………ரம்யாவின் அம்மா தான் அலறி கொண்டிருந்தார். இயேசப்பா என் பிரெண்ட்க்கு என்னமோ ஆச்சு. நான் போகலாமா…..என்று அவள் கேட்ட போது மெல்லிய காற்றை உணர்ந்தாள். தேங்க்ஸ் இயேசப்பா….மனதினில் பலமாக சொல்லி கொண்டவள் பூஜை நடந்து கொண்டிருந்த ஹாலை நோக்கி ஓடினாள்.
அவள் வந்த போது ரம்யா மயங்கிய நிலையில் அவள் அப்பா மார்பில் சாய்ந்து கொண்டிருந்தாள். அவள் அம்மாவும் தாத்தா, பாட்டி எல்லாரும் அழுது கொண்டிருந்தனர்.
என்ன சுரேஷ்….பிள்ளையை அப்படியே வைச்சிட்டு இருக்க. வேகமா ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போ. பிள்ளை ஐந்து நிமிசமா கண் திறக்காம இருக்கா. ஹாஸ்பிடல் நம்பர் கொடு. நான் பேசுறேன்….டாக்டர் பேரு என்ன…… ரம்யாவின் அப்பா பிரெண்ட் சொல்ல
ரம்யா அப்பா டாக்டர் பேரை சொல்லி விட்டு…… எல்லாத்துக்கும் உங்க மருமகதான் காரணம். நீங்களும் அவளோடு சேர்ந்து கொண்டுதான என் பிள்ளைக்காக ஏற்பாடு செய்த இந்த பூஜையை வேண்டாம்னு சொன்னீங்க. பாருங்க….கடைசியில் எல்லாத்துக்கும் அழுது அழுது…..இப்ப என் பிள்ளை இப்படி ஆகுறதுக்கும் உங்க மருமக தான் காரணம். என் பிள்ளைக்கு மட்டும் ஏதாவது ஆகட்டும்….அடுத்து அவளுக்கு இருக்கு …..ரம்யா அப்பா கோபப்பட்டு கத்தி கொண்டிருந்தார். எல்லாரும் நடந்த சண்டையை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.
எதுக்குடா அவளை திட்டுற. உனக்கு உன் பிள்ளை மேல எந்தளவு பாசம் இருக்கோ….அதே மாதிரிதான அவளுக்கும் இருக்கும். அவ பூஜை வேண்டாம்னு சொன்னது உண்மைதான். ஏன்னா தன் பிள்ளையை அவளுடைய இயேசப்பா கண் முன்னாடி ஒரு பெரிய அதிசயத்தால காப்பாத்தி இருக்கும் போது…..அவளால எப்படி மற்ற காரியங்களை நம்ப முடியும். ஏன் எனக்கு கூட அந்த இயேசப்பா மேல நம்பிக்கை வந்திருச்சு. ஆனாலும் உனக்கு மனம் கஷ்டம் கொடுக்க கூடாதுன்னு நானும், உங்க அம்மாவும் வெளியே எதுவும் சொல்லாம இருக்கோம்…..முதல்ல பிள்ளையை ஹாஸ்பிடல்ல கூட்டிட்டு போவோம்….அதை விட்டுட்டு அவ மேல ஏன் எரிஞ்சி விழுற…..ரம்யாவின் தாத்தாதான் தான் பையனை திட்டி கொண்டிருந்தார்.
இப்ப எதுக்கு பிரச்சனை பண்ணிட்டு இருக்க. பிள்ளையை முதல்ல பார்ப்போம். டாக்டர் இப்ப ஊர்ல இல்லையாம். அவர் அசிஸ்டென்ட் தான் இருக்காராம். உடனே பிள்ளையை கூப்பிட்டு வரச் சொன்னாரு. நம்ம பிரெண்ட் டேவிட் மனைவி கூட நர்ஸ்தான். அவங்க பிள்ளையை செக் செய்யட்டும். அதுக்குள்ள நீ போய் காரை போய் ரெடி பண்ணு…..ரம்யாவின் அப்பா பிரெண்ட்தான் அவரை அரட்டி கொண்டிருந்தார்.
ரம்யா அப்பா கார் கீ எடுக்க ரூமில் நுழைந்த போது, நர்ஸ் ரம்யாவின் மணிக்கட்டில் நாடி துடிப்பு பார்த்து கொண்டிருந்தார். அவருடைய முகம் சுருங்கவும்….எல்லாரும் அவர் முகத்தைத்தான் பார்த்து கொண்டிருந்தனர். ரம்யா அப்பா கூட அங்குதான் வந்து நின்றார். என்ன ஆச்சு…..ரம்யா அம்மா கேட்கவும்
என்னன்னு தெரியலை. நாடித்துடிப்பு சரியா தெரியலை…..பதட்டத்தோடு சொல்லவும் உண்மையில் எல்லாரும் பயந்தனர்.
என்ன ஆச்சு……சரியா பாரு லில்லி…..ரம்யா அப்பா பிரெண்ட் டேவிட் பயந்து சொல்லவும்
கண்களில் கலக்கத்தோடு இல்லைங்க. ஒரு நாடித்துடிப்பு கூட பிள்ளை கையில கேட்கலை. கழுத்து பக்கத்திலயும் செக் பண்ணிட்டேன். ஒண்ணும் கேட்கலை…..பிள்ளை…..என்று அவர் சொல்லி கொண்டிருந்த போதே
அவசரமாக ரம்யாவை தன் மடியில் போட்டு கொண்ட ரம்யா அப்பா….குட்டிமா…எழுந்திரு….உணர்ச்சி மிகுதியில் எழுப்பி கொண்டிருந்தார். அவள் இதயத்திற்கு அருகாமையில் கூட காதை வைத்து கேட்டு பார்த்தார். ஒரு சத்தம் கூட இல்லை……லப்டப் …..எந்த சத்தமும் இல்லாமல் அமைதியாக இருந்தது.
அவர் முகத்தின் வித்தியாசத்தை வைத்தே எல்லாரும் புரிந்து கொண்டனர்….ரம்யா…..இந்த உலகத்தில் இல்லை என்று…..ரம்யாவின் அம்மா…..ரம்யா…..கத்த ஆரம்பித்து விட்டார். எல்லாரும் அழுது கொண்டிருந்தனர்.
நடந்த எல்லாவற்றையும் நம்ப முடியாமல் பார்த்தாள் அவள். சிறிது நேரத்திற்கு முன் வரை கூட தன்னிடம் பேசி கொண்டிருந்த தன் பிரெண்ட் ரம்யா…..இப்போது உயிரோடு இல்லை……அவளும் ரம்யா பக்கத்தில் வந்து கத்தி அழுதாள்.
இயேசப்பா, ஏன் என் பிரெண்ட்டை இவ்வளவு சீக்கிரமா கூட்டிட்டு போனீங்க. நான் என் பிரெண்ட் பர்த்டே பார்ட்டிக்குத்தான வந்தேன்….ஆனா….சொல்ல முடிய வில்லை அவளால்.
அவளுடைய டிரெஸ்ஸை யாரோ பிடித்து இழுப்பது போல தெரிந்தாலும் அதை எல்லாம் கண்டு கொள்ளும் நிலையில் இல்லை அவள். அவள் கண் முன்பு ரம்யா மட்டும்தான் தெரிந்தாள். பிடித்து இழுப்பது அதிகமாகவும்தான் அவளும் கவனித்தாள்.
அவளுடைய ஏஞ்சல்…...ஏஞ்சல்….. துக்கம் தொண்டையை அடைத்ததில் பேச்சு கூட வர வில்லை அவளுக்கு.
ஏஞ்சல் என் பிரெண்ட்…..பேச முடியாமல் அப்படியே கீழே விழ போனவளை ஏஞ்சலை பிடித்து தன் முன்னாடி நிப்பாட்டினார்.
குட்டிமா….கண்ணை திறந்து பாரு……. ஏஞ்சல் சொன்ன போது அவளுக்கு அழுகை மட்டும் தான் வந்தது.
ஏஞ்சல் என் பிரெண்ட்…..மீண்டும் புலம்ப ஆரம்பித்தாள்.
இங்க பாரு குட்டிமா….சொன்ன போதுதான் ஏஞ்சலின் பக்கத்தில் இருந்த ரம்யாவையும் பார்த்தாள்.
மீண்டும் அழ ஆரம்பித்தாள். ஏஞ்சல் நம்ம இயேசப்பா ரம்யாவை கூப்பிட்டு வரச் சொல்லிடாங்களா……சொல்லி விட்டு மீண்டும் அழுதாள்.
குட்டிமா…..இது உணர்ச்சி வசப் பட வேண்டிய நேரம் இல்லை. நம்ம இயேசப்பா என்ன சொல்லுராங்களோ அதன் படி செய்……ஏஞ்சல் சொன்ன போது ஒன்றும் புரியாமல் பார்த்தாள்.
அவள் கண்கள் ஏஞ்சலின் பக்கத்தில் சிரித்து கொண்டிருந்த ரம்யா பக்கமே மீண்டும் போனது……
குட்டிமா….கொஞ்சம் இங்க பாரு….இந்த நேரம் ஒரு முழு கூட்டமே நம்ம இயேசப்பா அன்புக்குள் வர நம்ம தேவ சித்தம் வந்திருக்கு. அதுனால உணர்சிகளுக்கு இடம் கொடுக்காம நம்ம இயேசப்பா சொல்லுறதை மட்டும் செய்…….ஏஞ்சல் கண்டித்த போதுதான் தன் நிலையை உணர்ந்தாள்.
இயேசப்பா….நான் ரொம்பவே சின்ன பொண்ணு. ஆனாலும் கொஞ்சம் கூட தகுதி இல்லாத நான் நீங்க என்ன சொன்னாலும் உங்க சித்தத்துக்கு கீழ்படியுறேன்…… என்று அவள் சொன்ன போது ஒரு மெல்லிய காற்றை உணர்ந்தாள்.
அப்பா…..நான் என்னை முழுமையா உங்ககிட்ட சமர்பிக்கிறேன்….சொன்ன அந்த நொடி அவளுக்குள் இருந்த அந்த மெல்லிய சத்தம் அவளோடு பேசியது.
அவளுடைய அடுத்த ஒன்று இது எப்படி ஆகும்….என்று கேட்டுக் கொண்டே இருந்தாலும்…… சரி இயேசப்பா….சரி இயேசப்பா….என்று மட்டும்தான் அவளுடைய உதடுகள் சொல்லியது.
எல்லாருக்கும் மத்தியில் எழுந்து நின்றவள்….நான் ரொம்பவே சின்ன பொண்ணு….ஆனாலும் நான் சொல்லுறதை பைத்தியக்காரதனமா நினைக்காம இயேசப்பா உங்களுக்கு கட்டளையிடுறதை செய்வீங்களா???? அவள் சொன்ன போது அத்தனை குழப்பத்தின் மத்தியில் எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டனர்.
முதலில் வந்தது ரம்யாவின் அம்மாதான். சொல்லு குட்டிமா….இயேசப்பா என்ன சொன்னாலும் இங்க உள்ளவங்க எல்லாரும் செய்வாங்க…..அழுகையின் மத்தியிலும் தன் தேவனுக்கு கீழ்படிய நினைத்தார்.
ரம்யாவை அப்படியே கீழே படுக்க வைங்க அங்கிள்….ரம்யாவின் அப்பாவை கெஞ்சினாள். நீ யாரு…என்னை சொல்லுறது….அவளை நோக்கி கேட்க நினைத்தாலும் ஒன்றும் சொல்ல முடியாமல் அவள் சொன்ன படியே கீழே படுக்க வைத்தார்.
முதலில் உங்க கையை அவ மேல வைங்க அங்கிள் ப்ளீஸ்….என்ற போது திமிறி கொண்டு போக நினைத்தவர்….ப்ளீஸ் அங்கிள்….அவள் மறுபடியும் சொல்லவும்.
அவள் மார்பின் மேலே கையை வைத்தார். ஆன்ட்டி நீங்களும்….ரம்யாவின் அம்மாவும் அவள் மேல் கை வைத்தார். லில்லி ஆன்ட்டி நீங்களும் ப்ளீஸ்……. புரியாமல் இருந்தாலும் தன் தேவனுக்கு செவி கொடுத்து கை வைத்தார். தாத்தா, பாட்டி இப்ப நீங்க…..அவர்களும் கை வைத்தார்கள் அவள் மேல்.
இந்த கூட்டத்தில உள்ள எத்தனை பேரு ரம்யா மேல உண்மையில் அன்பு வைச்சிருந்தீங்களோ அவங்க மட்டும் ப்ளீஸ்…..கை வைங்க ப்ளீஸ்…… கிட்டத்தட்ட எல்லாருமே ரம்யாவின் சடலத்தின் மேல் கை வைத்தனர். ரெண்டு, மூன்று பேர் மட்டும் கிறுக்கு பிடிச்சிருச்சு எல்லாருக்கும்…. என்று கிண்டல் பண்ணி கொண்டே ஒதுங்கி நின்றனர்.
அவளும் ரம்யாவின் மேல் கை வைத்தாள். இயேசப்பா ப்ளீஸ்….சொன்ன அந்த நொடி என்றும் நான் உன் கூட இருப்பேன்……அவளால் தெளிவாக கேட்க முடிந்தது தன் தேவனின் சத்தத்தை. அடுத்த நொடி…..ஒரு வல்லமையான கரம் ரம்யாவின் மேல் கைகளை வைத்திருந்த எல்லார் கரங்கள் மீதும் அமர்வதை எல்லாராலும் உணர முடிந்தது.
பனிக்கட்டி போல குளிர்ச்சியாக உணர்ந்தாலும் மின்னலை போன்ற வல்லமையை அவர்கள் உடலில் அந்த வல்லமையை எல்லாரும் உணர்ந்தனர். அந்த ஒரே நொடியில் பக்கத்தில் நின்று சிரித்து கொண்டிருந்தவர்கள் கூட அந்த வல்லமையால் தூக்கி அடிக்க பட்டு கீழே விழுந்தனர். சாரி இயேசப்பா…… சாரி இயேசப்பா…….கீழே விழுந்தவர்கள் கண்களை மூடிய வண்ணம் அதைத்தான் திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருந்தனர்.
ரம்யா அப்பாவால் எல்லாவற்றையும் பார்க்க முடிந்தது. இது வரை இயேசப்பாவும் கிடையாது…..ஒண்ணும் கிடையாது….சொன்ன அவருடைய சொந்த கண்களே பார்த்தது அனைத்தையும். அவருடைய வாயே அறிக்கையிட்டது….. இவரே உண்மையான தேவன்….சொன்ன அடுத்த நொடி தன் பெண்ணின் இதய துடிப்பை தன் கைகளால் உணர்ந்தார்..
அந்த நொடியே தான் உட்கார்ந்திருந்த இடத்திலேயே இயேசப்பா…. உம்முடைய நாமத்திற்கே மகிமை உண்டவாதாக!!!! கத்தி சாஸ்டாங்கமாய் விழுந்து தேவனை தொழுதார் ரம்யா அப்பா. மற்றவர்களால் கூட அந்த வல்லமையை தாங்க முடியாதவர்களாய் தான் இதுவரை உட்கார்ந்திருந்த இடத்திலேயே முழங்காலில் நின்று தேவனை பணிந்து ஸ்தோத்திரம்….. என்றே சொல்லி கொண்டிருந்தனர்.
ரம்யா தன் கண்களை கசக்கி கொண்டே எழுந்தாள். எல்லோர் முகத்திலும் சந்தோசம். முழங்காலில் நின்று தேவனுக்கு ஸ்தோத்திரங்களை செலுத்தி கொண்டிருந்த அவளும் ரம்யாவை பார்த்த உடன்…..இயேசப்பா உங்க நாமத்திற்கே என்றென்றும் மகிமை உண்டவாதாக!!! கத்தி சொன்னாள்.
அப்போது எழுந்த இடியை போன்ற சத்தத்தில் ரம்யாவும் மற்றவர்களை போல முழங்காலில் நின்று தன் தேவனை பணிந்து கொண்டாள்.
இது தேவ நாம மகிமைக்காக ரம்யாவின் வேண்டுதலுக்கு நம் தேவன் தந்த பிறந்த நாள் பரிசு…… நூற்றுக்கணக்கான ஆத்துமாக்கள்….அந்த .கெம்பீர சத்தத்தை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது….இது தன்னோடு என்றும் இருக்கும் ஏஞ்சலின் சத்தம் என்று.
தேங்க்ஸ் இயேசப்பா…… சாஸ்டாங்கமாய் விழுந்து தேவனை தொழுதாள் அவள்.
Bible Incidents (for kids) – 39 Bible Incidents (for kids) – 40
பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 40
Daily Bible Verse
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
« Feb | ||||||
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
Newsletter
Categories
Archives