• பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 43

    வந்த கண்ணீரை துடைத்து கொள்ள கூட மனதில்லாமல் முழங்காலில் நின்றவள் அப்படியே அமர்ந்தாள். ஏன் இயேசப்பா…..கேள்விகள் வந்து கொண்டே இருந்தது.

    கண்காணிப்பவர் ஏஞ்சல்கள் சுத்தியும் நின்றும் கூட ஏதோ என்றும் தெரியாத அத்வான காட்டில் மாட்டி கொண்ட மாதிரி உணர்ந்தாள் அவள். அப்பா, அவ்வளவுதானா…..நான் இனி எப்ப உங்களை பார்ப்பேன்…..மனம் ஊமையாய் ஓலமிட்டது.

    தேவனின் பிரசன்னத்தை உணர்ந்து கொள்ள முடியாத துக்கம் வேறு தொண்டையை அடைத்தது. சோர்ந்து போய் அமர்ந்திருத்த அவளை தேற்ற முடியாதவனாய் கண்காணிப்பவர் நோக்கினான். இந்த பொண்ணை எப்படி நான் சமாதானப்படுத்த…..வழி தெரியாமல் விழித்தான்.

    சட்டென்று சந்தோசத்தில் முகம் பிரகாசமடைந்தவனாய் தன் ஏஞ்சல்களுக்கு கட்டளையிடவும் அவர்கள் விலகி போனார்கள். ஒன்றும் புரியாமல் கண்காணிப்பவரை நோக்கினாள்.

    உன்னுடைய  எஜமானர் இன்னும் கொஞ்சம் நேரத்தில் இங்க வரப் போறாங்க…..அதுனால அது வரை உன்னுடைய இந்த வேதனையை பொறுத்திருந்தா நாங்க ரொம்ப சந்தோசப்படுவோம். நீ ஏன் இந்த அளவு மன கஷ்டம் பட்டேன்னு எங்களால புரிஞ்சுக்க முடியாட்டியும் எங்களை பார்த்து பயந்து போயிருக்கன்னு மட்டும் தெரியுது……நாங்க உனக்கு என்றும் ஆபத்து ஏற்படுத்துகிறவங்க கிடையாது.

    நாங்க எங்க எஜமானர் கொடுத்திருகிற வேலையை செய்கிற அவருடைய அடிமைகள். அதுனால நாங்க என் பண்ணிருவோம்னு இருக்கிற பயத்தில இருந்து நீ வெளியே வந்தா அது எங்களுக்கு ரொம்பவே சந்தோசத்தை கொடுக்கும்…..அவள் முகத்தை பேசி கொண்டிருந்தான். அதில் தெரிந்த ஆச்சரியம் அவனுக்கு கூட புது விதமாய் இருந்தது.

    ஏன்……என்னை பார்த்து ஆச்சரியப்படுற….கேட்ட போது என்ன சொல்லுவது என்று தெரியாமல் முழித்தாள். சொந்த செலவில் குழி வெட்டின கதையா போயிரும்….மனதில் நினைத்தவள் தன் வாய்க்கு பூட்டு போட்டுக் கொண்டாள்.

    சரி…..ஒண்ணும் நீ சொல்லாட்டியும் பரவாயில்லை. ஆனா உன் முகத்தில் இருந்த ஆச்சரியம் என்னால புரிஞ்சுக்க முடியுது. உன்னுடைய மன எண்ணங்களை இங்க இருக்கிற என்னாலோ, என்னுடைய எஜமானர் என்கிட்ட கொடுத்திருக்கிற ஏஞ்சல்களாலோ படிக்க முடியா விட்டாலும்…..நீ என்னுடைய குரலை கேட்டுத்தான் பயந்திருப்பன்னு தோணுது. சரியா…….அவன் கேட்ட போது தன்னையும் மீறி அவள் தலை அசைவதை உணர்ந்தாள்.

    அச்சோ…..இயேசப்பா சாத்தான் பேச்சுக்கு செவி கொடுக்காதீங்கன்னு சொல்லி இருக்கீங்க.  ஆனா இந்த சாத்தான் ரொம்பவே அழகா, தேன் ஒழுகுற மாதிரி பேசுறான்….அன்னைக்கி எப்படி தன் அப்பாவாகிய டேவிட்கிட்ட நீதி விசாரிக்க வந்த இஸ்ரவேல் ஜனங்களை அப்சலோம் தன் வசம் ஆக்கி கொண்டானோ….அதே மாதிரி இவனும் ரொம்பவே ஆட்கள் மயங்குற மாதிரி பேசுறான்…..தயவு செய்து என்னை காப்பாத்துங்க…..தன் தேவனிடம் கெஞ்சினாள்.

    இன்னொரு குழப்பமும் அவளுள் வந்து போனது. இயேசப்பா தன்னுடைய வார்த்தைகளின் ரகசியங்களை எனக்கு தெரிவிக்கிற ஏஞ்சல் யாருன்னு இது வரைக்கும் என்னால சரியா தெரிந்து கொள்ள முடியாம போனாலும், அவருக்கு நான் மனதில் நினைக்கிறது கூட தெரியுமே…..ஆனா இங்க இருக்கிற ஏஞ்சல்கள், கண்காணிப்பவர், அடுத்து அந்த புல் எல்லாம் என் முகத்தை பார்த்துதான் நான் என்ன நினைச்சிருப்பேன்……ன்னு சொல்லுறாங்களே தவிர என் மனதில் எண்ணங்கள் என்ன ஓடுதுன்னு தெரிந்துக்க முடியலை….ஏன் ….அந்த குழப்பத்தின் மத்தியிலும் கேள்வி கேட்டுக் கொண்டாள்.

    அதுவும் என் தேவனின் கையில் இருக்கிற விசேஷமான மோதிரமா இருந்தாலும் ஏன் என் இயேசப்பா இந்த காரியத்தை இவனுக்கு மறைச்சி வைச்சிட்டாங்க……மனதில் கேள்வி கேட்டுக் கொண்டாள். அவள் முக மாற்றத்தை பார்த்து கொண்டே இருந்த கண்காணிப்பவர் அவளை பார்த்து சிரித்த வண்ணம்…… நீ என்னமோ யோசித்திட்டே இருக்கன்னு மட்டும் தெரியுது….ஆனா நீ வாய் திறந்து சொல்லாம என்னால எப்படி உன் கேள்விகளுக்கு எல்லாம் பதில் தர முடியும்…..அவன் கேட்ட போது ஒன்றும் சொல்லாமல் அமைதியானாள்.

    பெண்ணே உனக்கு தெரியாதா….நம்ம கண்காணிப்பவருக்கு தெரியாத எந்த ஞானமும் இல்லை…..அவர்கிட்ட நீ உன்னுடைய சந்தேகத்தை சொன்னாதான அவரால பதில் சொல்ல முடியும்……ஒரு ஏஞ்சல் அவளை பார்த்து கேட்ட போது

    ஸ்….நீ சும்மா இரு. ஏற்கனவே நம்மளை பார்த்து பயந்து போயிருக்க அவளை கஷ்டப்படுத்தாதே…..நீ சொல்லு….உனக்கு யாரை பத்தி தெரிந்து கொள்ளணும்னு நினைக்கிற…..ரொம்பவே மெதுவாக…..எண்ணையிலும் மிருதுவாக….அவன் கேட்ட போது பேசத்தான் அவளுக்கும் தோணியது. சங்கீதங்களில் படித்ததும், நீதிமொழிகளில் படித்ததும்……. எல்லா வசனங்களும் முட்டி மோதி கொண்டு அவள் இதயத்தை நிரப்பியது.

    அவன் வார்த்தைகள் எண்ணையிலும் மிருதுவானவைகள். ஆனாலும் அவைகள் உருவின பட்டயங்கள்.

    ஆனா சொல்லவா….என்னுடைய இயேசப்பா permission வராமா நான் எப்படி பேச முடியும்…..அதுவும் இவன்கிட்ட…..ஒன்றும் சொல்ல முடியாமல் தவித்தாள்.

    சரி…..உன்னை பத்தி சொல்லு….நீ எங்க இருந்து வந்திருக்க…..யார் உன்னை இங்க கூட்டிட்டு வந்தா….எல்லாம் நீ சொன்னாதான் அடுத்து என்ன செய்யன்னு பார்க்க முடியும்….அவன் வார்த்தைகளை திருப்பி போட்டு கேட்ட போதும் அவள் வாய் திறக்கவே இல்லை….உண்மையில் இவன் ஞானம் நிறைந்தவன்தான்….என் தேவன் இவனை படைக்கும் போது நிறைய ஞானத்தோடு தான் படைச்சிருக்காங்க…..தன் தேவனை மனதில் பாராட்டி கொண்டாள்.

    அவள் அமைதியாக நிற்கவும் ஒரு ஏஞ்சல் அவள் அருகில் ஒரு கணம் கூட அவள் நினைக்காத நேரத்தில் வந்து தாக்க வந்தது…..அந்த அதிர்ச்சியில் உறைந்து போனாள்.

    ஆனால் அந்த ஏஞ்சல் அவளை தாக்குவதற்குள் கண்காணிப்பவர் தன் கையில் இருந்த பட்டயத்தால் தடுத்து நிப்பாட்டினான்.

    ஏன் இப்படி செஞ்ச….அந்த ஏஞ்சலை கேட்ட போது அது ஒன்றும் பதில் சொல்லாமல் அமைதியாக நின்றது. நீ என்ன நினைக்கிறன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது. ஆனா நம்ம எஜமானரின் சுவாசத்தை பெற்ற இந்த பொண்ணு எப்படி நமக்கு விரோதியா இருக்க முடியும். அதுவும் நம்ம தேவன் உருவாக்கின தோட்டத்தில் நம்ம எஜமானர் அனுமதி இல்லாம எப்படி அன்னியர்கள் நுழைய முடியும்…..அதுனால தேவையில்லாம எதையும் யோசித்து குழப்பிக்க வேண்டாம்….இன்னும் கொஞ்சம் நேரத்தில் நம்ம எஜமானரே இங்க வரபோறாங்க. அவர்கிட்ட கேட்டு தெரிந்து கொள்ளுவோம்…..அவன் கோபத்தில் கர்ஜனையாக பேசின போது ஒரு ஏஞ்சல் கூட வாய் திறக்க வில்லை. ரொம்பவே அமைதியாக நின்றன.

    இப்போதுதான் அவன் அருகில் நின்று கொண்டிருந்த எல்லா ஏஞ்சல்களையும் பார்த்தாள். கிட்டதட்ட அந்த அரண்மனையே நிறைந்திருந்தது. வாய் திறந்து ஆச்சரியபட்டாள். கண்டிப்பா எண்ணிக்கை கோடியை தாண்டிரும் போல…..கண்டிப்பா இதை பத்தி திரும்பவும் நம்ம ஏஞ்சலை பார்க்கும் போது கேட்கணும்….மனதினில் சொல்லி கொண்டாள்.

    அப்போதுதான் தனக்கு மிக அருகில் ஒரு அற்புதமான வெளிச்சத்தை பார்த்தாள். என்னுடைய இயேசப்பாதான் என் பக்கத்தில் நிற்கிறாங்களா???? சந்தோசத்துடன் அவள் அருகில் இருந்த அந்த கண்ணாடியிலும் மெல்லிய பலூன் போன்று பறந்து கொண்டிருந்த குமிழை பார்த்தாள்.

    என்ன பார்த்திட்டு இருக்க…..அந்த கண்காணிப்பவர் கேட்ட போது

    அது வந்து இந்த சோப்பு குமிழ்….அவள் சொல்லி கொண்டிருந்த போது

    என்னது,,….. சோப்பு குமிழா …..அவன் சொன்னதுதான் தாமதம்…… எல்லா ஏஞ்சல்களும் எங்க இருக்கு…..தேட ஆரம்பித்து விட்டனர். இவள் என்ன சொல்லுவது என்று தெரியாமல் முழித்து கொண்டிருந்தாள்.

    கண்டுபிடிக்க முடியாமல் திண்டாடினவர்கள் கடைசியாக…..இந்த மாணிக்கத்தை பார்த்துதான் இந்த பொண்ணு சொல்லியிருக்கு…..ஒரு ஏஞ்சல் கீழே கிடந்த அந்த மாணிக்கத்தை கண்காணிப்பவரிடம் கொடுத்த போது

    இதைதான் பார்த்தியா……அவன் கேட்ட போது வேறு வழி தெரியாமல் ஆமா என்று ஒத்துக் கொண்டாள்.

    சரி….இந்த பொண்ணை தனியா விடுங்க. நம்ம எஜமானர் இன்னும் கொஞ்சம் நேரத்தில் இங்க வரப்போறாங்க. அவர்கிட்ட கேட்டு எல்லா விசயத்தையும் தெரிந்து கொள்ளலாம். முதலில் நம்ம எஜமானர் நமக்கு கொடுத்திருக்கிற வேலையை பாருங்க……அவன் அரட்டி சொன்ன போது

    சரி….என்ற வண்ணம் எல்லா ஏஞ்சல்களும் கலைந்து சென்றனர். எல்லாவற்றையும் ஆச்சரியமாக பார்த்து கொண்டிருந்தாள். இவங்க அப்படி என்ன வேலை பார்ப்பாங்க……. அவள் மனதில் கேள்வி கேட்டுக் கொண்டாள்.

    ஒரு ஏஞ்சல் அவள் கண்களுக்கு முன்னாலேயே மேலே ஏறி போய் மேகத்தில் இருந்த அழுக்கு தண்ணீரை எடுத்து ஒரு பெரிய வாளியில் இறைத்து கொண்டிருந்தது. அந்த அழுக்கு தண்ணீர் அகன்று போனதும் அந்த மேகம் மின்னலை போல பிரகாசித்தது…..ரொம்பவே ஆச்சரியமாக பார்த்தாள். ரொம்பவே அழகா இருக்கு…..மனதுள் பாராட்டினாள். அதற்குள் அந்த ஏஞ்சல் அடுத்த மேகத்தை கிளீன் பண்ண சென்று விட்டது. இதுதான் இவங்க வேலையா….ஏதோ ஒரு கனவுலகில் இருப்பதை போல உணர்ந்தாள் அவள்.

    சரி பெண்ணே….நீ இந்த அரண்மனையில எங்க வேணும்னாலும் போய் கொள்ளலாம். ஆனா உன்னோட உனக்கு துணையா நான் என்னடைய ஒரு ஏஞ்சலை விட்டுட்டு போறேன்…..ஏன்னா என் எஜமானர் வருகிற நேரம் இது. அவருடைய வருகைக்கு நான் நிறைய ஆயத்தங்கள் செய்ய வேண்டியது இருக்கு…….அவன் சொன்ன போது

    இவள் பக்கத்தில் நின்ற ஏஞ்சல்…….. கண்காணிப்பவரே ….அப்ப என்னுடைய வேலையை நான்……அந்த ஏஞ்சல் சொல்லி முடிப்பதற்குள்

    அதை நான் செய்யுறேன்….இந்த பொண்ணு நம்ம எஜமானருடைய சொந்தம்…..அதுனால எந்த வகையிலும் அவ கஷ்டப்படாம நடந்துக்க…..எச்சரித்து விட்டு அவனும் காணாமல் போனான்.

    உண்மையில் சாத்தானிடம் அவள் அந்த ஒரு பணிவை எதிர்பார்க்க வில்லை. என்னுடைய இயேசப்பா இவனை குறித்து சொன்னப்ப…… ரொம்பவே பெருமை கொண்டவன்ன்னு சொல்லி இருக்காங்க…..ஆனா தன்னிடம் வேலை பார்க்கும் ஏஞ்சலின் வேலையை கூட இவன் செய்ய நினைச்சா…..இவன் ஒரு நல்லவனா தான இருக்க முடியும்….அவள் நினைத்து கொண்டிருந்தாள்

    அந்த நேரம் மீண்டும் அந்த சோப்பு குமிழ் அவள் அருகில் ரொம்பவே பிரகாசமாக வந்து நிற்கவும் அதை ஆர்வமாக பார்த்தாள். ஆனா இந்த சோப்பு குமிழுக்குள்ளவா என்னுடைய இயேசப்பா என்னை காப்பாத்த வரப் போறாங்க????மனதினில் கேள்வி கேட்டு கொண்டாள்.

    ஆனால் இவளில் நடக்கும் அந்த மாற்றத்தை அவள் பக்கத்தில் அவளை பாதுகாத்து கொண்டிருந்த ஏஞ்சல் கண்டு கொண்டதாக தெரிய வில்லை. உள்ளிருந்து வந்த பிரகாசம் அவள் மீது கூட பட ஆரம்பித்தது. இப்போது அவள் கண்கள் முன்பு அது பறக்க ஆரம்பிக்கவும், அவசரமாக அதை பார்த்தாள். உள்ளே ஏஞ்சல்கள் கூட்டம்…. எப்படி இது…..அவள் யோசித்து கொண்டிருந்த போதே

    குட்டிமா…. என்று கூப்பிட்ட உடனே தெரிந்து கொண்டாள். அது தன்னுடன் எப்போதும் இருக்கும் ஏஞ்சல் என்று……

    கண்களில் கண்ணீருடன் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து கொண்டிருந்த போது மீண்டும் அவள் கேட்கும் வண்ணம் நீ பயப்பட வேண்டிய அவசியம் இல்லை குட்டிமா….ஏன்னா உன்னை காக்க நம்ம இயேசப்பா இங்க கூட லட்சக்கணக்கான ஏஞ்சல்களை அனுப்பி வைச்சிருக்காங்க. எல்லாரும் உன்னுடைய பாதுகாப்புக்காக உன்னை சுற்றிலும் இப்பயும்  இருக்காங்க….. அதுனால…..ஏஞ்சல் சொல்லி கொண்டிருந்த போதே

    அவள் தன் மனதில் சிரித்து கொண்டாள். நான் ரொம்பவே சாதரணமானவ. போயும் போயும் என்னை பார்த்துக்க என் இயேசப்பா லட்சக்கணக்கான ஏஞ்சல்கள் அனுப்பி வைப்பாங்களா என்ன……. அவள் நினைத்து கொண்டிருந்த போதே….இது என்னுடைய நிஜமான கனவா தான் இருக்கும்….நான் சாத்தான்கிட்ட மாட்டிகிட்டதால என் இயேசப்பா என்னை காப்பாத்த வர மாட்டங்களா…..என்கிற என்னுடைய ஏக்கம் இந்த ஒரு காரியமா வந்திருக்கும்….இந்த சோப்பு குமிழ், அதுக்குள்ள ஏஞ்சல்கள் கூட்டம்….என்னுடைய ஏஞ்சல் உள்ளே இருந்து பேசுற மாதிரி நானா யோசிச்சது…..எல்லாமே என்னுடைய அழகான கற்பனை……ஐயோ…இயேசப்பா ஏற்கனவே சொல்லி இருக்காங்க. கற்பனை கூடாதுன்னு….மனதில் அவள் நினைத்து கொண்டிருக்கும் போதே

    குட்டிமா….உன்கிட்ட நிறைய முறை நம்ம இயேசப்பா எச்சரிக்கை பண்ணி இருக்காங்க. இந்த தேவையில்லாத யோசனை…..அந்த கோபமான குரலில் அவள் ஒரு நொடி பயந்து போனாள்.

    சாரி இயேசப்பா…..அவள் மனதில் சொல்லி கொண்டிருந்த போதே

    என்றும் உன் இயேசப்பா அன்பை சந்தேகப்படாதே……ஏஞ்சலின் குரலில் அமைதியானாள்.

    அவள் கண் முன்பு பறந்து கொண்டிருந்த அந்த குமிழ் உடைந்த ஒரே நொடியில் அவளை சுற்றிலும் உண்மையில் ஏரளாமான ஏஞ்சல்கள் கையில் பட்டயத்தோடு நின்று கொண்டிருந்தனர். அவர்கள் நடுவில்,அவளுடைய ஏஞ்சலும் கையில் பட்டயத்தை பிடித்த வண்ணம்…..உண்மையில் அரண்டு போனாள்.

    இது எப்படி சாத்தியம்….அவள் மனதில் நினைத்து கொண்டிருந்த போதே இப்ப நம்புறியா குட்டிமா. உன் இயேசப்பா உன்னை நேசிக்கிறார். அதுவும் உன்னை மாதிரி தன் தேவனின் வார்த்தைகளுக்கு செவி கொடுத்து கீழ் படியணும்னு நினைக்கிற அவருடைய பிள்ளைகளுக்கு நம்ம இயேசப்பா என்றும் இதே ஒரு பாதுகாப்பை என்றும் தராங்க……. ஏஞ்சல் சொன்ன போது சந்தோஷத்தில் கண்களில் இது வரை தேக்கி இருந்த கண்ணீர் எல்லாம் வடிய ஆரம்பித்தது. அவசர அவசரமாக அந்த கண்ணீரை துடைத்தாள். தன் தேவனுக்கு முழங்காலில் நின்று நன்றிகளை செலுத்தினாள்.

    நான் ஒண்ணு கேட்கலாமா ஏஞ்சல்…..அவள் கேட்ட போது

    எனக்கு தெரியும் குட்டிமா…நீ என்கிட்டே என்ன கேட்க நினைக்கிறன்னு. நீ இந்த காரியத்தில் பாதி விசயங்களை புரிஞ்சுக்க நம்ம தேவன் ஏற்கனவே உதவி பண்ணிட்டாங்க. உனக்கு புரியாத சில விஷயங்களை மட்டும் நான் சொல்லுறேன்.

    நீ நினச்ச மாதிரி இது சாத்தான் நம்ம தேவன் முன்னாடி தன்னை உயர்த்துறதுக்கு முன்னாடி நடந்த சம்பவங்கள் தான். ஏதேன் தோட்டத்தில் அவன் இருந்தது தான் நிஜம்…….ஏஞ்சல் சொன்ன போது

    ஆனா ஏஞ்சல் ஏதேன் தோட்டத்தில் நம்ம தேவன் ஆதாம், ஏவாளை வைச்சது எப்ப????அவள் கேட்ட போது

    அது இதுக்கு பின்னாடி சம்பவித்த காரியங்கள் குட்டிமா…..நீ பைபிள் வாசிக்கும் போது….ஆதியாகமம் புத்தகத்தில் முதல் அதிகாரம், முதல் வசனம் என்ன இருக்கு??? அவர் கேட்ட போது

    ஆதியிலே தேவன் வானத்தையும், பூமியையும் சிருஷ்டித்தார்.

    நீ சொன்னது மிக சரி. நீ அந்த நேரத்தில் தான் இப்ப இருக்க குட்டிமா……ஏஞ்சல் சொன்ன போது

    ஆமா ஏஞ்சல். அதுதான் நம்ம இயேசப்பா எனக்கு எல்லாமே காண்பிச்சாங்களே. முதலில் வெளிச்சம், அடுத்து வானம், மூணாவது நாள் கடல், பூமி, செடி…..எல்லாமே தகுதியே இல்லாத எனக்கு கூட காண்பிச்சாங்களே. அப்ப இது எந்த நேரம்….நம்ம இயேசப்பா பூமியை, தாவரங்களை எல்லாம் உருவாக்கின பிறகா…..அவள் கேட்ட போது

    சிரித்த வண்ணம் ஏஞ்சல்…… நான் உன்கிட்ட சொன்னது நீ முதல் வசனம் நடந்த காலத்தில் இருக்கன்னு சொன்னேன். ஆனா நீ என்கிட்ட 12வது வசனத்தை பத்தி கேட்டிருக்க….அவர் சொன்ன போது உண்மையில் குழம்பி போனாள்.

    ஏஞ்சல் நீங்க என்ன சொல்லுறீங்க….. அவள் புரியாமல் கேட்ட போது

    நீ பூமி நம்ம தேவனால் எப்படி உருவானதுன்னு பார்த்த…அப்படிதான……என்று கேட்ட போது

    ஆமா ஏஞ்சல்…… அவள் சொன்னாள்.

    நம்ம தேவன் கோடிகல்லை வைச்சப்ப ஒரு எக்காளம் போன்ற இரைச்சல் சத்தம் நீ கேட்டியா??? என்ற போது ஆமாம் என்று தலை அசைத்தாள்.

    அது யோபு புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கே ஏஞ்சல்….. விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய் பாடி, தேவ புத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்கள்….ன்னு

    சரியா சொன்ன குட்டிமா…..இப்ப இங்க சாத்தனின் ஏஞ்சல்கள் அவனை என்ன பெயரில் கூப்பிட விரும்புறாங்கன்னு சொன்னாங்க…..ஏஞ்சல் கேட்ட போது

    விடிவெள்ளி, தேவனின் முத்திரை மோதிரம்…ன்னு

    சரி குட்டிமா…..விடிவெள்ளிங்கிறதுக்கு இன்னொரு பேரு விடியற்காலத்து நட்சத்திரம்ன்னு உண்டு. அப்ப……ஏஞ்சல் கேட்ட போது

    அப்ப நம்ம தேவன் இந்த பூமியை உருவாக்கினப்ப நம்ம தேவனால் அங்கீரிக்கப்பட்டிருந்த இந்த சாத்தான் கூட நம்ம தேவனின் படைப்பை வியந்து பாராட்டுனானா???? கேள்வியுடன் ஏஞ்சலின் முகத்தை பார்த்தாள்.

    ஆமா குட்டிமா……ஆனா இது நம்ம தேவன் உங்களுக்கு கொடுத்திருக்கிற முதல் வசனத்தோடு தொடர்புடையது……புரியாமல் நோக்கினாள்.

    நம்ம தேவன் முதலில் இந்த பூமியையும், வானத்தையும் படைத்தப்ப அவர் உருவாக்கின எல்லா படைப்புகளையும் பார்த்து பார்த்து ரசித்தவர்களில் இந்த சாத்தானும் ஒருவன்…..அதாவது இதெல்லாம் ஆதியாகமம் முதல் அதிகாரத்தில், இரண்டாவது வசனத்திற்கு முன் நடந்த சம்பவங்கள்…… ஏஞ்சல் சொன்ன போது புரியாமல் பார்த்தாள்.

    ஏஞ்சல்……அவள் கூப்பிட்ட போது

    என்ன குட்டிமா.கொஞ்சம் குழப்பமா இருக்கா….. ஏஞ்சல் கேட்ட போது தலை அசைத்து ஆமாம் என்றாள்.

    நம்ம தேவன் பார்த்து பார்த்து செய்த இந்த பூமியை, வானத்தை அவன் நம்ம தேவனின் சமூகத்தில் இருந்து தள்ளப்பட்டப்பதான் ரொம்பவே ஒழுங்கின்மையா, வெறுமையா…….விழுந்த கோபத்தில் ஆக்கினான்…..ஏஞ்சல் சொன்ன போது அவளும் புரிந்து கொண்டாள்.

    அப்ப ஏஞ்சல்…….அடுத்துதான் அவன் வீணடிச்ச இந்த பூமியை நம்ம தேவன் மீண்டும் சரி பண்ணினாங்களா….அவள் சொன்ன போது

    சரியா சொன்ன குட்டிமா….. தேவன் முதலில் உருவாக்கின உலகத்தை தன் கோபத்தில் பாழடித்த அவன் செய்கையை நம்ம தேவன் சரி பண்ணினார். அதாவது வெளிச்சம், வானம், கடல், வெட்டாந்தரை இதெல்லாம் கிட்டத்தட்ட பாழடைஞ்ச வீட்டை மீண்டும் சரி செய்து அழகு படுத்துற வேலை……அழகாக புரிந்து கொண்டாள் அவள்.

    அதுனாலத்தான் எங்களை பத்தி அவனுக்கு தெரியலையா ஏஞ்சல்….என்ற போது

    இல்லை குட்டிமா…..உங்களை பத்தி அவனுக்கு தெரியும்……ஏஞ்சல் சொன்ன போது உண்மையில் பயந்து போனாள்.

    ஆனா….நான் யாருன்னு இது வரைக்கும் அவனுக்கு தெரியலை ….என்றவளை பார்த்தவர்

    அது உன்னை பாதுக்காக்க நம்ம தேவன் பண்ணின காரியம். ஏன்னா நம்ம தேவன் இந்த பூமியை உருவாக்கும் போதே, உங்களை மனசில் வைச்சே எல்லா விசயங்களும் செய்தாங்க. அதுனால தேவனால் இப்ப உயர்த்தப்பட்டுள்ள, இப்ப கண்காணிப்பவர் நிலையில் காணப்படுற இவனுக்கு எல்லா காரியமும் தெரியும். நீங்க இந்த பூமியில் உருவாக்கப்பட போற விசயம்….. ஏஞ்சல் சொன்ன போது

    ஆனா ஏஞ்சல்…எனக்காக ஏன் அந்த காரியத்தை இப்ப நம்ம இயேசப்பா மறைக்கணும்…கேட்டவளுக்கு

    எப்ப சாத்தான் கீழே தள்ள பட்டானோ, அப்ப நம்ம தேவன் அவன் நிலையில் உயர்த்தி வைச்சு பார்த்தது யாரை……கேட்டவர்க்கு

    அது சத்தியமா நாங்கதான் ஏஞ்சல்…… அவள் சொன்ன போது

    இப்ப உன்னை நம்ம இயேசப்பா கொண்டு வந்திருக்கிற சம்பவம்……தேவனால் சாத்தான் எந்த நிலமையில் முதலில் வைக்க பட்டிருந்தான் என்ற சத்தியத்தை தெரிந்து கொள்ளுற நேரம்…..அடுத்து அவன் என்ன நிலைக்கு உயர்த்த பட்டான், எது அவனை பெருமை பட வைத்தது, அவன் எப்படி நம்ம தேவனின் முன்பு தன்னை உயர்த்தினான், அடுத்து அவனையும், அவன் கீழ் இருக்கிற நீ பார்த்துட்டு இருக்கிற ஏஞ்சல்களையும் நம்ம தேவன் எப்படி தள்ளினார்…..என்பதை குறித்த சத்தியம்…..

    ஆனா சாத்தானை குறித்து நீ ஏற்கனவே பைபிள்ல படிச்சிருக்க. ரொம்பவே ஞானம் நிறைந்தவன். அவனுக்கு உன்னை குறித்த காரியத்தை மறைச்சி வைத்திருக்கிறது உன்னை காப்பாற்ற. ஏன்னா நீ தான் அவனுக்கு விரோதமா தேவன் தெரிந்து கொண்ட பாத்திரம்ன்னு தெரிந்து கொள்ளும் போது அவனாலும், அவன் ஏஞ்சல்களாலாலும் உனக்கு ஆபத்து வரும் என்பதாலதான் உன் பாதுகாப்புக்காக இத்தனை ஏஞ்சல்கள் கூட்டம். அதுனால நீ தவறி கூட உன் வாய் விடாம இருக்கிறது உனக்கு நல்லது குட்டிமா. அதை சொல்லதான் நான் இப்ப உன்கிட்ட வந்தேன்…….ஏஞ்சல் சொன்ன அந்த நொடி அவள் பயந்து போனது நிஜம். ஆனால் அடுத்த நொடியே தன்னை தேற்றிக் கொண்டாள். ஆனா என் இயேசப்பாதான் எனக்காக அந்த காரியத்தை அவன் கிட்ட இருந்து மறைச்சி வைச்சிட்டாங்களே!!! என் வாய் திறக்காம இருக்க என் இயேசப்பா எனக்கு தேவையான பலத்தை தருவாங்க….. மனதினில் நினைத்தாள்.

    இன்னொரு முக்கியமான காரியம் குட்டிமா….நம்ம தேவன் அவன் கிட்ட இருந்து மறைத்து வைச்சிருக்கிற காரியம் என்றும் மறைவா தான் இருக்கணும்ன்னு அவசியம் இல்லை….நம்ம தேவன் அந்த காரியத்தின் முடிச்சை அவிழ்க்கும் போது அவனுக்கும் தெரிய வரும்…..சோ பார்த்து நடந்துக்கோ…..சொன்ன அடுத்த நொடி மறைந்து போனார்.

    சற்று முன்பு கூட இங்க இருக்கிறது பிரச்சனையே இல்லை என்று நினைத்து கொண்டிருந்த அவள் தைரியம் உண்மையில் உடைந்து போனது…..இயேசப்பா…..ப்ளீஸ்….சாத்தானுக்கு என்னை பத்தி தெரிந்ததுன்னா….என் நிலைமை மோசம்…..ப்ளீஸ்….இந்த இடம் வேண்டாம்….நாம நம்ம வீட்டுக்கே போவோம்…..தன் தேவனிடம் வேண்டி கொண்டிருந்த போது அவளை பாதுகாத்துக் கொண்டிருந்த ஏஞ்சல்……

    நீ யார்கிட்ட பேசிட்டு இருக்க…..அது கேள்வி கேட்கவும் வேறு வழி இல்லாமல் தன் தலையில் அடித்துக்கொண்டாள்.

    மீண்டும் அதே எண்ணம்….இங்க இருந்து எப்படி தப்பிக்க….அவள் யோசித்து கொண்டிருந்த போது தன்னை தொட்ட தனது தேவனின் மெல்லிய காற்றின் வாசனையை கூட உணர முடியாத வண்ணம் பயம் அவளில் நிரம்பி இருந்தது.

    Related Post

    Categories: பைபிள் சம்பவங்கள்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    one + = 4

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>