-
பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 29
காலையில் எழுந்ததில் இருந்தே தலை வலிப்பதை போல உணர்ந்தாள். இன்னிக்கி ஸ்கூல் போகணுமே…..என்ற எண்ணத்தை விட…..இயேசப்பா, இன்னிக்கி எந்த துர்மரண செய்தியையும் நான் கேள்விபடாத வண்ணம் என்னை காத்துக் கொள்ளுங்கஎன்றவாறு நினைத்தாள்.
இயேசப்பா சொன்ன அட்வைஸ் எல்லாம் காலையில் எழுந்த அந்த நிமிஷத்தில் இருந்தே மறந்து போச்சு போல……அவள் மனம் அவளை குற்றப்படுத்தியது. இயேசப்பா, உன்கிட்ட எப்படி prayer பண்ண சொன்னாங்க. நீ என்ன பண்ணிட்டு இருக்க…அவள் மனம் இடித்து காட்டவும்
தன் தவறை உணர்ந்தவளாய் சாரி இயேசப்பா, இந்த உலகத்தில உள்ள எல்லாரும் உம்முடைய பிள்ளைகள். அவங்களை சாத்தான் எந்த வகையிலும் வேதனைப்படுத்தாம உங்க அன்பினால காத்துக் கொள்ளுங்க. அது மட்டுமில்ல இயேசப்பா, என்றும் அவங்க வாழ்கையில் எந்த அளவுக்கு பெரிய துயரங்கள் வந்தாலும் கூட, தப்பான முடிவுகள் எடுக்காம உங்க அன்பினை தேடி ஓடி வருகிற இருதயத்தை கொடுங்க பிரெண்ட், ப்ளீஸ்….. ஆமென். உண்மையில் அவளாலும் புரிந்து கொள்ள முடிந்தது. தேவ சித்தத்துக்கு விட்டு கொடுக்கும் போது, வெளியில் ஏறெடுக்க படும் ஜெபங்கள் மட்டமில்லை மனமே ஒரு வித்தியாசமான உணர்வை……அவளுக்கு வார்த்தைகளில் சொல்ல தெரிய வில்லை…..ஆனா முழுமையா ஏதோ ஒரு சமாதான உணர்வு…… தேங்க்ஸ் இயேசப்பா….. நீங்க கொடுத்த இந்த சந்தோசத்திற்காக நன்றிகள் ஆண்டவரே.
தேவனுக்கு நன்றிகள் செலுத்திய பிறகும் கூட ஏதோ ஒரு காரியத்தை குறித்து கண்டிப்பா பேசியே ஆகணும்……என்பதை போல உணர்ந்தாள். ஆனா எந்த காரியத்தை குறித்து அப்பாகிட்ட பேச ஆசைப்பட்டேன். புரிந்து கொள்ள முடிய வில்லை. மண்டையை போட்டு குழப்பி பார்த்தும் விட்டாள். சப்போஸ் மறந்தருச்சோ…..தன்னையே கேட்டுக் கொண்டாள். சரி, நல்ல விஷயம்தான். இல்லாட்டி மெத்த மேதாவி மாதிரி ஏதாவது ஒரு கேள்வியை கேட்டுட்டு, கடைசியில அப்பாவை கஷ்டபடுத்தி திட்டு வாங்க வேண்டியதா போயிரும்…… அதுனால…..ஞாபகத்தில வராம இருக்கிறது ரொம்ப நல்ல விஷயம்…… மனதினில் நினைத்தவளாய் இயேசப்பா, ஏதோ ஒரு காரியத்தை பத்தி உங்ககிட்ட பேசணும்னு நினைச்சிருந்தேன். ஆனா மறந்து போச்சுன்னு நினைக்கிறேன். இயேசப்பா, so…… அது கண்டிப்பா என் ஞாபகத்திற்கு வராம தயவு செய்து என்னை காத்துக் கொள்ளுங்க,ப்ளீஸ்….. ரகசியமாய் வேண்டி கொண்டாள்.
ஸ்கூலில் வேனுக்காக வெயிட் பண்ணி கொண்டிருக்கும் போதே….. கருமேகங்கள் வானத்தை சூழ்ந்திருப்பதை பார்த்து பிரெண்ட்ஸ்டன் இவளும் ரசித்தாள். ரொம்ப நாள் கழித்து மழை மேகத்தை பார்ப்பதால் எல்லோருக்கும் சந்தோசம். கிளாஸ் ரூமில் டீச்சர் இருந்ததால் அதிகம் தங்களுக்குள் பேசி கொள்ள முடிய வில்லை. ஆனால் தங்கள் கண்களால் பேசி கொண்டனர்…..இன்னிக்கி வேன்ல போகும் போது, கண்டிப்பா மழையில என்ஜாய் பண்ணணும்னு…….மெசேஜ் எல்லாம் பாஸ் ஆகி விட்டது.
ஆனால் இருந்த கருமேகம் அனைத்தும் வந்த காற்றினால் இழுத்து செல்ல பட்ட போது, அனைவர் கண்களிலும் கண்ணீர் வராதது தான் குறை…..சே….இப்படி ஏமாத்திருச்சே…….மனதினில் வேதனைப்பட்ட கொண்டனர். வேனில் ஏறிய போது, ஒருத்தர் முகத்திலும் சந்தோசம் தெரிய வில்லை. நாம என்னமெல்லாம் நினைச்சோம். இந்த காத்து வந்து இப்படி சொதப்பிருச்சே…..புலம்பி கொண்டனர்.
சின்ன….சின்ன கரு மேகங்கள்…அந்த சூரிய வெளிச்சத்தின் இடையில் பார்க்க அழகாக இருந்தது…. ஜன்னல் பக்கத்து சீட் என்பதால் அழகாக ரசிக்க முடிந்தது அவளால். தன் பிரெண்ட்ஸ்ம் தன்னோடு ரசித்து கொண்டிருக்கின்றனர் என்பதை தெரிந்திருந்தாலும் வெளியே தெரிந்த கரு மேகங்கள் மட்டுமே அவள் இதயம் முழுவதும் நிரம்பி இருந்தது….. .பேசாம இயேசப்பாகிட்ட கேட்போமா…..மழையில என்ஜாய் பண்ண ஆசையா இருக்கு. அதுனால மழை தருவீங்களா …… என்று. ஆனா போயும் போயும் என்னுடைய காரியங்களை நிறைவேற்ற அப்படி கேட்குறது ரொம்ப தப்புன்னு இயேசப்பா பைபிள்ல சொல்லி இருக்காங்க. இன்னிக்கி இல்லாட்டி என்னைக்காவது ஒரு நாள் மழை வரமாயா போக போகுது. அனைக்கி பார்த்து கொள்ளலாம்…..என்றவாறு நினைத்து கொண்டாள்.
அவள் நினைத்து கொண்டிருந்த போதே ஜன்னலின் வழியா வந்த சாரல்கள் அவள் கையில் பட்டது. ஏய், மழை வந்திருச்சு…..என்று அவள் சொன்னதுதான் தாமதம் எல்லாரும் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி விட்டனர். மழையும் சோவென்று ஆரம்பித்து விட்டது……. அவரவர்கள் தன் பிரெண்ட்ஸ்களுடன் அவர்கள் சீட்டில் உட்கார்ந்து ஜன்னல் வழியாக மழையை ரசித்து கொண்டிருந்தனர். அவள் சீட்டில் யாரும் இல்லை. யாரும் இல்லாதது கூட நல்ல விஷயம் தான…..மனதினில் நினைத்தவளாய் மழையை ரசிக்க ஆரம்பித்தாள். இன்னும் வீட்டை சேரதுகுத்தான் ஐந்து நிமிசத்துக்கு மேல ஆகுமே…….. மனதினில் நினைத்து கொண்டாள். நல்ல மழை…..ஜன்னலின் வழியாக மழை துளிகள் இவளுடைய கைகளை தொட்டு பார்த்தது.
வெளியே இருந்து வந்த மழையுடன் கூடிய குளிர்ந்த காற்று முகத்தில் பட்ட போது, கண்களை மூடி கொண்டாள். நல்லா இருக்கு….என்ற போதுதான் தானும் நனைந்து கொண்டிருப்பதை உணர்ந்தாள். என்னது…..நான் ஏன் மழையில நனையுறேன்……என்றவாறு கண்களை திறந்த போது, தான் ஒரு வெளிச்சமான இடத்தில் நின்று கொண்டிருப்பதை உணர்ந்தாள். புரிந்து கொண்டாள். நான் என் இயேசப்பாவை பார்க்க போறேன்…..நினைத்த போதே மனதினில் சந்தோசம் நிறைந்ததை உணர்ந்தாள். நம்ம ஏஞ்சல் எங்க போனாங்க….. என்று அவள் நினைத்து கொண்டிருந்த போதே, அவள் முன்பு ஏஞ்சல் வந்து நின்றார்.
என்னது, நாம் நினைக்கிறதுக்கு முன்னாடியே எல்லா காரியங்களும் நடக்குதே…..மனதினில் மகிழ்ந்தவளாய் ஏஞ்சலை பார்த்து சிரித்தாள்.
இனிய மாலை வணங்கங்கள் ஏஞ்சல்…..என்று சொல்லிய போது ஏஞ்சலும் அவளை பார்த்து சிரித்தார்.
வேன்ல மழையை ரசித்திட்டே வந்தியா குட்டிமா……என்றவருக்கு
ஆமா ஏஞ்சல், ரொம்ப நல்லா இருந்துச்சு…..ஆனா கண்டிப்பா உங்களை இப்ப மீட் பண்ணுவேன்னு நினைச்சி கூட பார்க்கலை…..தன்னுடைய வியப்பை வெளிப்படுத்தினாள்.
நல்ல மழை ஏஞ்சல் இங்க கூட……என்றவாறு மழை தண்ணீரை தன் கைகளில் பிடித்தாள்.
ஏஞ்சல்……. ஆனா இன்னிக்கி ஏன் இங்க மழை பெய்யுது. ஏதாவது முக்கியமான விசயமா…..ஏன்னா மழைன்னு சொன்னாலே அது ஆசீர்வாதத்தை குறிக்கிற காரியம் ஆச்சே…….கேள்வியுடன் முடித்தாள்.
அவள் சொல்லி கொண்டிருந்த போதுதான் வானத்தில் இருந்து வந்த பெரிய மின்னல் அவள் அருகில் வந்து விழுந்தது. சண்டை நேரத்தில் அக்கினி ஏவுகணை, பாம் என்னென்மோ சொல்லுவாங்களே, அதுதான் வந்து பக்கத்தில் வந்து விழுந்து விட்டதா என்று முதலில் நினைத்தாள்.
ஏன் குட்டிமா, இதுக்கு போய் பயப்படுற……தைரியமா நில்லு……அவர் திடன் சொல்லி பார்த்தாலும் அவள் கேட்பதாக தெரிய வில்லை.
அடிக்கடி வானத்தையும், தன் அருகில் ஏதாவது விழுகிறதா என்று பார்த்து கொண்டாள்.
தன் தேவனிடம் முழு மனதோடு மன்னிப்புக்காக வேண்டினாள். சாரி இயேசப்பா, நீங்க என்னை கூட்டிட்டு வந்திருக்கிற இடம் ரொம்பவே பரிசுத்தமான இடம். ஆனா நான் அந்த காரியத்தை எல்லாம் மறந்திட்டு, என் விருப்பப்படி யோசித்திடேன்…… சாரி பிரெண்ட். இது உங்க சமூகம். நீங்க இந்த உலகத்தை உருவாக்கும் போது உண்டாக்கின ரகசியங்களை வெளிப்படுத்துற இடம். அதை நான் ரொம்பவே சாதாரணமா நினைச்சிட்டேன் போல……அதுக்குதான் இந்த இயற்கையே உன் தேவனுடைய வல்லமையை குறைச்சு மதிப்பிடாத…..என்கிற மாதிரி அந்த மின்னல் என் பக்கத்தில் வந்து போச்சே தவிர என்னை தொட நீங்க அதை அனுமதிக்கலை. நீங்க வெளிபடுத்த போற சத்தியங்களை தெரிந்து கொள்ள இப்ப முழு தாழ்மையோடு காத்திருக்கேன் பிரெண்ட், ப்ளீஸ்….. என்றவாறு அவள் சொல்லி கொண்டிருந்த போதே, அவள் கண்களில் கண்ணீர் வந்து விட்டது.
அவள் டிரஸ் முழுமையும் நனைந்து விட்டது. இப்ப ஏன் அழுதிட்டு இருக்க குட்டிமா. இது நம்ம தேவனுடைய சமூகம். இங்க துக்கம், துயரம், வேதனை எதுவும் இருக்க கூடாதுன்னு உனக்கு தெரியுமே……அவர் சொல்ல
தெரியும் ஏஞ்சல். ஆனா நான் என் மன மேட்டிமையினால் என் தேவன் எனக்கு கொடுத்திருக்கிற கிருபையை ரொம்பவே அற்பமா மதிப்பிட்டது தப்புத்தான???? இயேசப்பா தன்னுடைய சீஷர்களோடு பேசும் போது சொல்லி இருப்பாங்க…… உங்க கண்கள் காண்கிறதையும், உங்க காதுகள் கேட்கிறதையும் எத்தனையோ பரிசுத்தவான்கள் காண வாஜ்ஜையாய் இருந்தாங்க. ஆனா அவங்களுக்கு அது அருளப்பட வில்லை. உங்க தேவ சித்தத்தால உங்களுக்கு அருளப்பட்டிருக்குன்னு. நம்ம இயேசப்பாவோடு அவங்க இந்த பூமியில நடமாடின நாட்களில் அதை உணர்ந்திருப்பாங்களோன்னு எனக்கு தெரியலை. ஆனா கண்டிப்பா நம்ம இயேசப்பா அவங்ககிட்ட இருந்து எடுக்கப்பட்ட பிறகு இதை ரொம்பவே உணர்ந்திருப்பாங்க. நம்ம இயேசப்பா நம்ம பக்கத்தில இருந்தப்ப இன்னும் கொஞ்சம் விளையாட்டு குணம் இல்லாம, உலகத்தை பத்தி யோசிக்காம, மற்றவங்க நம்மளை பத்தி என்ன சொல்லுவாங்கன்னு யோசிக்காம, தூக்கத்தையே மறந்து அவர் பக்கத்திலேயே உட்கார்ந்து நீ பேசிட்டே இருங்க இயேசப்பா, நாங்க கேட்டுட்டே இருக்கோம்…….ன்னு சொல்லி இருக்க மாட்டாங்களா ஏஞ்சல்.
என் தேவனுடைய அருகாமை முழுக்க முழுக்க இனிமையான காரியம். அதை அவர் அருகில் இருந்து ருசித்த அவங்களுக்கே, தேவனால் பிரித்தெடுக்கபட்ட அவங்களுக்கே விலை மதிக்க முடியாத ஒரு பொக்கிஷமா நினைக்கும் போது, நான், ஒன்றும் இல்லாத நான்……எத்தனை தூரம் காத்துக் கொள்ளனும்…..அழுது விட்டாள்.
நம்ம தேவன் நீ தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விசயத்தை…….அதாவது அவர் சந்நிதானத்திற்கு வரும் போது, அவருடைய பிள்ளைகள் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான அலங்காரத்தை சொல்லி கொடுத்திருக்காங்க குட்டிமா………என்ற போது
உண்மையில் புரிந்து கொள்ள முடியாமல் ஏஞ்சலின் முகத்தை பார்த்தாள். அது நம்ம தேவன் விரும்புற தாழ்மை……அது அவருக்கு ரொம்பவே பிடித்தமான காரியம். தன் பிள்ளைகள்கிட்ட காணப்படாதான்னு ஏங்குற காரியமும் கூட. அவளும் புரிந்து கொண்டாள்.
சே…..இந்த காரியத்தை நான் தெரிந்து கொள்ளாததால்தான் பல நேரங்கள் என் இயேசப்பாவை கஷ்டப்படுத்தி இருக்கேன். சாரி பிரெண்ட், நீங்க விரும்புற தாழ்மையை எனக்கு தாங்க, ப்ளீஸ்…..மனதினில் வேண்டி கொண்டாள்.
ஒரு மெல்லிய காற்றை உணர்ந்தாள். கண்களை திறந்து அவள் பார்த்த போது, அவள் பார்க்கும் தூரத்தில் தன் இயேசப்பா நிற்பதை பார்த்தாள். ஓடி போய் அவருக்கு பக்கத்தில் நின்று அவரிடம் பேசி கொண்டே இருக்க அவள் மனம் விரும்பியது. ஆனா……… ஏஞ்சலின் முகத்தை பார்த்தாள்.
அவள் கருத்தை அவரும் ஆமோதிப்பது போல தலையசைத்தவர் குட்டிமா, நம்ம இயேசப்பா உனக்கு பைபிளில் உள்ள ரகசியங்களை சொல்லி கொடுத்துட்டு இருக்காங்க. இந்த நேரத்தில உன் உணர்வுகள் எந்த வகையிலும் அதை தெரிந்து கொள்ளுவதில் தடுக்காம பார்த்து கொள்ள வேண்டியது உன் கடமை. ஏன்…..இங்கிருந்தே கூட உன்னால நம்ம இயேசப்பாவின் அருகாமையை உணர முடியுமே…..அதுனால நம்ம இயேசப்பா என்ன வெளிப்படுதுறாங்க என்பதை தெரிந்து கொள்வதில் மட்டும் உன் கண்கள் கவனமா இருக்கட்டும்…..அவர் குரல் சிறிது எச்சரிப்பாகவே வந்தது.
தன் நிலைமையை புரிந்து கொண்டாள். தன் வருத்தத்தை மனதினில் மறைத்தாள். கண்டிப்பா என் இயேசப்பாவோடு நான் என் ஒரு நாள் முழுமையும் செலவழிப்பேன், இந்த பூமியில் வாழும் போதே……… மனதினில் நினைத்தவளாய் ஏஞ்சலின் முகத்தை கேள்வியோடு பார்த்தாள்.
ஏஞ்சல் சிரித்து கொண்டிருந்தை இவளும் பார்த்தாள். சப்போஸ் நான் மனதினில் யோசிச்சதை புரிஞ்சிகிட்டதாலதான் சிரிக்கிறாங்களோ……சாரி இயேசப்பா, ஏஞ்சல் எந்த காரியத்திற்காகவும் சிரிச்சிருந்தாலும் நான் அதை குறித்து யோசிக்க மாட்டேன். சப்போஸ் என்னுடைய ஆசை உங்க சமூகத்தில் பெரிய ஆசையா இருந்தா கூட பரவாயில்லை. நான் கண்டிப்பா நம்பிக்கையா காத்திருப்பேன் பிரெண்ட்…..மனதை திடப்படுத்தி கொண்டு
ஏஞ்சல், இப்ப மழை பெய்திட்டே இருக்குது. மின்னல், இடி சத்தம் கூட வருது….. ஆனா இது எந்த நாள்ல நடந்த காரியம். சொல்லுவீங்களா….. ஆவலுடன் அவர் முகத்தை பார்த்தாள்.
நீ இது வரைக்கும் நம்ம இயேசப்பா வெளிபடுத்திய படைப்பின் ரகசியங்களில் எத்தனை நாள் ரகசியங்களை தெரிந்து வைச்சிருக்க குட்டிமா????
முதல் நாள் வெளிச்சம், இரண்டாம் நாளில் வானம் சிருஷ்டிக்கப்பட்ட விதம், மூன்றாவது நாளில் சமுத்திரத்தை பற்றிய உண்மை, அடுத்து பூமி உருவாக்கப்பட்ட விதம்……இவை எல்லாம் இயேசப்பா சொல்லி கொடுத்தாங்க ஏஞ்சல்…….
வெரி குட் குட்டிமா. சரி அப்ப எனக்கு சொல்லு. மூன்றாவது நாள்ல வேற ஏதாவது உருவாக்கப்பட்டதா சொல்லபட்டிருக்கா??? கேட்டார்.
நம்ம தேவன் தன் வார்த்தையாகிய இயேசப்பா மூலமா சமுத்திரத்தையும், பூமியையும் உருவாக்கின பிறகு, பூமியில புல், பூண்டுகள், விருட்சங்கள்……ஏஞ்சல் விருட்சங்கள்ன்னு சொல்லப்பட்டது மரங்களைதான குறிக்குது…….கேள்வியோடு அவர் முகத்தை பார்த்தாள்.
நீ சொன்னது சரி குட்டிம்மா, விருட்சங்கள் என்பது மரத்தை தான் குறிக்குது.
இவை எல்லாம் முளைப்பிக்க பூமியில முளைப்பிக்ககடவது சொல்லி இருக்காங்க ஏஞ்சல்.
நீ சொன்னது ரொம்ப சரி.அந்த காரியம் ‘தான் இப்ப நடந்திட்டு இருக்கு.
புரியாமல் ஏஞ்சலின் முகத்தை பார்த்தாள். பூமியில புல், பூண்டு, செடி, கொடி, மரம்தான் வளரணும்ன்னா தண்ணீர் வேண்டாமா குட்டிம்மா…….
அப்பொழுது தான் அவளுக்கும் புரிந்தது. சாரி ஏஞ்சல். நான் மறந்தே போனேன். அப்ப என்னுடைய இயேசப்பா இந்த பூமியில அழகான பிளான்ட்ஸ் உருவாக்க போறதை தான் நான் பார்த்துட்டு இருக்கேனா……ஆச்சர்யப்பட்டாள்.
அவள் நின்று கொண்டிருந்த இடத்தில் ஏதோ அவள் கால்களில் தடுக்கவும் என்ன என்று ஆராய்ச்சி செய்யும் நோக்கத்தில் குனிந்து பார்த்து கொண்டிருந்தாள்.
என்ன குட்டிம்மா பார்த்துட்டு இருக்க…..ஏஞ்சல் அவளை பார்த்து கேட்டுக் கொண்டிருந்தார்.
ஏஞ்சல், அது……அவள் பேசி கொண்டிருந்த போதே…..
மண்ணின் வலிமையை உந்தி தள்ளி விட்டு, ஒரு அழகான செடி வெளியே வந்து தன் தலையை எட்டி பார்த்து விட்டு குனிந்து கொண்டது. பார்க்கவே அழகாக இருந்தது.
ஏஞ்சல் இங்க பார்த்தீங்களா…… எவ்வளவு கியூட்டா இருக்கு…….. என்று சொல்லி கொண்டிருந்த போது
ஏஞ்சல் உங்களுக்கு தெரியுமா?? நான் இப்பதான் இந்த மாதிரி உள்ள காரியத்தை பார்க்குறேன். எங்க பாட்டி வீட்டுக்கு போனப்ப கூட, அங்க நான் முட்டையில இருந்து கோழி குஞ்சு வெளி வந்ததை பார்த்திருக்கேன். அந்த கோழி குஞ்சு தன் சின்ன மூக்கால் அந்த முட்டை ஓடை கொத்திட்டு வந்தப்ப பார்க்க ரொம்ப அழகாக இருந்துச்சு….. இதுவும் கூட அதே அளவுக்கு அழகாக இருக்கு. என்ன அழகாக வெளியே வந்து எட்டி பார்த்துட்டு, தன் தலையை குனிஞ்சிரிச்சு……சோ நைஸ்…..அவள் உற்சாகத்தோடு சொல்லி கொண்டிருந்தாள்.
ஆனா ஏன் குட்டிம்மா, மனுசங்க மட்டும் தன்னை படைத்த தேவனுக்கு மரியாதை கொடுக்கிறதில்லை……… அந்த வார்த்தையால் குழம்பி போனாள்.
இப்ப ஏன் ஏஞ்சல்……மனுசனை பத்தி சொல்லுறாங்க……குழப்பத்துடன் ஏஞ்சலை பார்த்தாள்.
நான் எதுவும் தப்பு பண்ணிட்டேனோ……என்ற வண்ணம் அவள் பார்வை தெரிந்தது.
இனிமே தயவு செய்து இந்த மாதிரி தேவையில்லாம குழப்பிக்காத……என்று பாசமாக கடிந்து கொள்ளவும்
இல்லை ஏஞ்சல். நீங்க சொன்னது சரிதான். இந்த குட்டி செடி பூமியில வந்ததும், முதலில் அப்பாடா……வெளியே வந்திட்டேனா…..ஒரு முறை இந்த பூமியின் மேல் பகுதியை வந்து பார்த்ததும் சந்தோசப்பட்டாலும் அடுத்த நொடியே தன் தேவனின் பிரசன்னத்தை உணர்ந்து எவ்வளவு அழகா தன் தலையை தாழ்த்தி தன்னை படைத்த தேவனுக்கு நன்றிகள் செலுத்துது……. ஆனா நாங்க எப்ப பார்த்தாலும் எங்க இயேசப்பா மேல உள்ள பார்வையையே இழந்துட்டோம்ன்னு நினைக்கிறேன் ஏஞ்சல். ஏன்னா இந்த சின்ன செடிக்கு இருக்கிற ஒரு நன்றி உணர்வு கூட எங்களுக்கு இல்லை. உலகத்தை பார்த்துட்டு எங்க இயேசப்பாவை நாங்க ஓரம் கட்டிடோம்ன்னு நினைக்கிறேன்…..சொல்லிய அவள் கண்களில் அடுத்த செடியும் அதே மாதிரி தன் தலையை உயர்த்தி பார்த்து விட்டு, கீழே குனியவும் வெட்கமாய் போனது.
உடனே தான் நின்று கொண்டிருந்த இடத்திலேயே முழங்கால்களை ஊன்றி, தலை தரையில் படும் வண்ணம் குனிந்து இயேசப்பா, நீங்க இந்த பூமியில என்னை உருவாக்கினதற்க்காக நன்றிகள் ஆண்டவரே!!! நாங்களும் கூட இந்த குட்டி செடி மாதிரிதான இயேசப்பா. சாத்தான் இந்த பூமியில நாங்க வராம இருக்க எத்தனை தந்திரங்கள் பண்ணினாலும், இந்த செடி எப்படி மண்ணின் மேல் பகுதியை உங்க உதவியால துளைத்து கொண்டு எட்டி பார்த்ததோ, அதே மாதிரி எங்களுக்கு விரோதமா அவன் போடுற எல்லா காரியங்களையும் உடைத்து எரிய வைச்சி, எங்களை எங்க அம்மாவின் கருவில் இருந்து பிரித்தெடுத்து இந்த பூமியை பார்க்க வைக்குறீங்க……ஆனா நாங்க அப்படி உலகத்தை பார்த்த நேரம் இதே மாதிரி வணக்கம் செலுத்தினோமான்னு தெரியலை. ஆனா இப்பவும் உங்க அன்பை தெரிந்து கொண்ட பிறகும் உங்களுக்கு மகிமையை செலுத்தாம இருந்தற்காக சாரி பிரெண்ட். சகல துதியும் கனமும் மகிமையும் உமக்கே என்றென்றும் உண்டவாதாக, ஆமென்…..என்று சொல்லி கொண்டிருந்த போதே ஆமென் என்று ஏஞ்சல் சொல்லும் சத்தத்தையும் கேட்டாள்.
அவள் முகத்தை மெல்லிய காற்று வருடவும் இயேசப்பா என்று முனங்கியவாறு அவள் கண் விழிக்கவும் பாம்….பாம் என்று வேன் சத்தத்தைதான் கேட்டாள். ஒரு நிமிசம் தன் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை ஆச்சர்யமாக பார்த்தாள்.
என்னடி இது, எங்களை மழைன்னு சொல்லி எழுப்பிட்டு நீ மட்டும் தூங்கிட்டு இருந்தியா…..அவள் பிரெண்ட்ஸ் அவளை பார்த்து கேட்கவும்…..சிரித்தாள்.
அவளுடைய ஸ்டாப்பில்தான் வேன் நின்று கொண்டிருந்தது. அவசர அவசரமாக தன் பேக்கை தோளில் மாட்டியவள் தன் பிரெண்ட்ஸ்களிடம் bye……என்றவாறு விடைபெற்றாள்.
கீழே இறங்கியவளை மழை சாரல் தன் கைகளை விரித்து வரவேற்பதை போல உணர்ந்தாள். தேங்க்ஸ் பிரெண்ட்…….வாய் திறந்து சொல்லியவள், உற்சாகமாக இயேசு நல்லவர்….இயேசு நல்லவர்…… என்ற சண்டே ஸ்கூல் பாடலை பாடிய வண்ணம் வீட்டினில் நுழைந்தாள்.
Bible Incidents (for kids) – 28 Bible Incidents (for kids) – 29
பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 29
Daily Bible Verse
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
« Feb | ||||||
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
Newsletter
Categories
Archives