• பைபிள் சம்பவங்கள்(குழந்தைகளுக்காக) – 11

    என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது.

    அதிக சத்தத்தோடு ஒலித்து கொண்டிருந்த அந்த வார்த்தைகளை கேட்டு கொண்டே எழுந்தவள், கண்களை திறக்க முயற்சித்தாள். கண்களை திறக்க சிறிது கஷ்டமாக இருந்தது. கண் விழித்தவளுக்கு ரொம்பவே பிரகாசமான விண்மீன்கள் நடுவில் உலாவும் நிறைய ஏஞ்சல்களை பார்க்க முடிந்தது.

    நிலவை அவர்கள் அனைவரும் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தனர். இங்க மக்கள் ஏற்பாடு செய்யுற அலங்கார விளக்குகள் காட்சி எல்லாம் ஜுஜெபி என்கிற வண்ணம் அந்த பிரம்மாண்டமான காட்சி இருந்தது. ஒரு நொடியில் எல்லாம் மறைந்து போய், அவள் என்றும் அவளோடு பேசி கொண்டிருக்கும் ஏஞ்சல் முன்பு நின்று கொண்டிருந்தாள்.

    ஹாய் குட்டிமா, குட் மார்னிங். இப்ப பதட்டம் எல்லாம் போச்சா.

    ம் ஏஞ்சல். பதட்டம் போய், என் இயேசப்பா மேல இன்னும் அன்பு கூடியிருக்கு. சப்போஸ், என்னுடைய பிடிவாதத்தால், ஸ்கூல் வேன்ல போயிருந்தா, இன்னிக்கி உங்களை நான் பார்த்திருப்பேனான்னு தெரியலை.

    நம்ம தேவன் ரொம்ப அன்பானவர் குட்டிமா. உன்னுடைய வேலைகள் முடியுற வரைக்கும் கண்டிப்பா இந்த உலகத்தில இருந்து உன்னை எடுத்துக் கொள்ள மாட்டாங்க.

    ஆனா அந்த நேரத்தை கடந்து போனப்ப, ரொம்பவே கஷ்டமா இருந்துச்சு ஏஞ்சல். ஏதோ உள்ள இருக்கிற ஒரு உறுப்பு ரொம்பவே வலிச்ச மாதிரி இருந்துச்சு. நான் ஏன் அழுகுறேன்னு புரிஞ்சுக்க முடியாம, என்னுடைய எல்லா டீச்சர்ஸ் எல்லாம் என்னை சமாதானப்படுத்திட்டு இருந்தாங்க. ஆனா என் என்னுடைய எண்ணங்களுக்கு மட்டும்தான் தெரிஞ்சிச்சு. நான் என்னுடைய தேவன் பேச்சை மீறி நடந்துட்டேன். அது மட்டுமில்ல, என் அம்மாவையும் கஷ்டப்படுத்திட்டேன்னு தோணுச்சு. ஆனா என்னை என் தேவன் காத்துக் கொண்டார். உண்மையில் ஒரு விசயம் சொல்லட்டுமா ஏஞ்சல்?

    சொல்லு குட்டிமா.

    தப்பு பண்ணிட்டேன் என்கிற வேதனையை விட, நான் என் தேவனுக்கு விரோதமா தப்பு பண்ணிட்டேன் என்கிற கஷ்டத்தை விட, நானா தப்பு பண்ணினேன் என்கிற காரியம்தான் அப்ப அந்த நேரத்தில ரொம்பவே மனதில வலிக்கிற வேதனையை கொடுத்தது ஏஞ்சல். அது ஏன் அப்படி தோணுது?

    பல நேரங்களில் செய்யுற தப்பு தெரிந்து கொள்ள முடியாத மாய்மாலத்தை உருவாக்கிறது குட்டிமா. இன்னைக்கி உனக்கு நடந்த காரியம்தான் பெஸ்ட் உதாரணம். அம்மா, உன்னுடைய மனதில மண்டி கிடந்த அந்த பாவத்தை வெளிபடுத்தினப்ப உனக்கு என்ன தோணுச்சு?

    இதெல்லாம் ஒரு பெரிய தப்பா?ன்னு அப்ப அந்த நேரத்தில தோணினது.

    உங்க அம்மா அதை வேண்டாம்ன்னு சொன்னப்ப, என்ன மனதில நினைச்ச?

    இது என்கிட்ட இருந்து போக வேண்டிய அளவுக்கு ஒண்ணும் பெரிய பாவம் இல்லைன்னுதான் மனதில் நினைச்சேன். அது மட்டுமில்ல ஏஞ்சல், திரும்பவும் எங்க அம்மா ஆட்டோல போகலாமான்னு கேட்டப்ப. எங்க அம்மா, ஏன் தப்பானவளா பார்க்குறாங்கன்னு ஆதங்கம் ஏற்பட்டச்சு. அடுத்து ஸ்கூல் போகுறதுகுள்ள, நான் எங்க அம்மா மேலேயே குற்றம் கண்டுபிடிக்க ஆரம்பிச்சிட்டேன். எனக்கு சொல்லுங்க ஏஞ்சல். இந்த மாதிரி ஏன் எனக்கே புரியாத விசயங்கள் எனக்குள்ள, என் எண்ணங்களில் வந்துச்சு?

    இதைத்தான் நான் மாய்மாலம் என்கிற பேர்ல சொன்னேன். கொஞ்சம் கூட உன் தப்பை, உன்னுடைய பாவத்தை நீ கண்டுபிடிச்சி , உன் இயேசப்பாகிட்ட சொல்லி வெளியே வர முடியாத அளவுக்கு சிக்கலில் மாட்ட வைக்கிற சாத்தானின் தந்திர வலை. 

    ஆனா ஒரே நிமிஷத்தில எத்தனை விதமான வலைகள். எப்படி சிலந்தி பூச்சி தன் வலையில் வந்து மாட்டுற பூச்சிகளை விடாம இருக்க உடனே, உடனே தன் வாயில இருந்து வரும் நீரால வலையை இன்னும் கெட்டி படுத்துற மாதிரி.

    நீ சரியா சொன்ன குட்டிமா. அப்படித்தான் சாத்தான் எல்லாரையும் இன்னும் தங்கள் பொல்லாத வலையில் இருந்து விடுபட விடாம பத்திரமா பாத்துக்குறான்.

    புரியுது ஏஞ்சல். ஆனா நான் என்னுடைய தப்பை வெளிப்படுத்தின எங்க அம்மாவையே கஷ்டப்படுத்தினது எதுக்கு?

    உன்னை அடிக்க வர்ற ஒருத்தனுடைய கை, உன் பக்கம் வரதுக்குள்ள , உன் கை உன்னை தற்காக்க………அடிக்கிற கையை தடுக்கவோ இல்லை அவனை அடிக்கவோ முற்படுகிற ஒரு செயல் மாதிரிதான் இதுவும்.

    ஒரு பெரிய மூச்சு விட்டவள், ஏன் ஏஞ்சல். சாத்தான் இவ்வளவு கேவலமானவனா இருக்கான்.

    அவன் அப்படிப்பட்டவன்தான். தேவன் கொடுத்த எல்லா கிருபைகளையும் வெறுத்து கீழே விழுந்து போன ஒரு ஏஞ்சல். அவனை குறித்து நீ ஏன் எரிச்சல் அடையுற.

    நீங்க இதை குறித்து சொன்னப்பதான் எங்க அம்மா, பொல்லாதவர்களை அதாவது துன்மார்க்கமாய் வாழ்ந்தவங்களை குறித்து சில பரிசுத்தவான்கள் கூட எரிச்சல் அடைந்த விசயத்தை சொன்ன காரியம் ஞாபகத்துக்கு வந்திச்சி.

    நீ ஆசாப், அதாவது சங்கீதக்காரன் எழுதினதை குறித்து சொல்லுறியா?

    ஆமா ஏஞ்சல். ஆனா அவர் பாவம்ல. ஏன்னா உண்மையில் பரிசுத்தவான்கள் கூட, இப்படிபட்டவங்களால் வேதனைப்பட்டுருக்காங்க தன் மனசளவிலும்.

    ஆனா உனக்கு ஒரு உண்மை தெரியுமா குட்டிமா. அவர் தன்னுடைய மனதில அப்படி குத்துண்டப்பட்டது அவர் செயல்கள் அவருக்கு நிறைவாக தெரிந்த இன்னொரு காரணத்தினாலும்.

    என்ன நீங்க இப்படி சொல்லிட்டீங்க ஏஞ்சல். நான் அவரை குறித்து யோசித்தப்ப சே…இவரை கூட பொல்லாதவர்கள் விட்டு வைக்கலைன்னு நினைச்சிட்டிருந்தா….நீங்க ஏதோ அவர் பெருமைப்பட்டு தான் இதை சொல்லி இருக்கார்ன்னு சொல்லிட்டீங்க.

    ஆமா குட்டிமா. என்றும் தேவ பிள்ளைகளுக்கு வர கூடாத வேதனை பெருமை. ஏன்னா, அது அவங்க வாழ்கையில் வந்துட்டா, தன்னுடைய சந்தோசம், ஜீவன் எல்லாத்தையும் சாத்தானுக்கு கொடுத்துட்டு, ஒண்ணும் இல்லாதவங்களாய் உட்கார வேண்டியதுதான். எந்த தேவனுக்காக இது வரை பிரகாசமா எரிஞ்சாங்களோ, அவரை மறந்திட்டு, இருளான ஒரு மனுஷனா வாழ்நாள் முழுவதும், தன் வாழ்க்கையை கழிக்க வேண்டியதா போயிரும்.

    என்ன ஏஞ்சல், தீடீர்னு இப்படி சொல்லிட்டீங்க. ஒரு மனுஷன் நம்ம தேவனுடைய அன்பை ருசிச்ச பிறகு, அவரை மறந்து போற கொடுமை மாதிரி சொல்லுறீங்களே.

    நீ அப்படிப்பட்ட ஆத்துமாவை குறித்து என்ன சொல்லுவ?

    அந்த ஆத்துமா பிறவாதிருந்தால் நலமாயிருக்கும்னு யூதாஸ் ஸ்காரியோத்து குறித்து நம்ம இயேசப்பா சொன்னாங்களே, அது மாதிரிதான் நான் நினைக்கிறேன்.

    சரியா சொன்ன. எல்லா தேவ பிள்ளைகளின் வாழ்க்கையிலும் அவங்க என்னைக்கோ விட்டு வந்த பாவங்கள் கண்டிப்பா திரும்ப குறுக்கிடும். ஆனா எந்த பாவமா இருந்தாலும் அதுனுடைய ஆணி வேர் இந்த பெருமையாதான் இருக்கும்.

    எந்த பாவமா இருந்தாலுமா ஏஞ்சல்.

    கண்டிப்பா குட்டிமா. பவுல் எழுதின கலாத்தியர் புத்தகத்ல மாம்சத்தின் கிரியைகள்னு சொல்லபட்ட 17 கிரியைகளும் பெருமை என்கிற ஆணி வேர்ல உண்டான மரத்தின் கிளைகள்தான்.

    அப்ப எந்த ஒரு தேவ பிள்ளைக்கும் பெருமை வந்துட்டா, அவங்களில் கூட இந்த 17 காரியங்களும் வந்துருமா ஏஞ்சல்.

    கண்டிப்பா குட்டிமா. ஆனா அதை முதல்லயே புரிஞ்சிக்கிட்டு, அந்த ஆணி வேரை நம்ம இயேசப்பா கொடுக்கிற பலத்தினால் தகர்க்காட்டி, எல்லா கிளைகளும் ஒவ்வொண்ணா வந்து, அந்த ஆத்துமா, நரகத்தில மூழ்கடிக்கிற வரைக்கும் சும்மா இருக்காது.

    ஆசாப் சங்கீதக்காரன் பற்றி ஏஞ்சல்.

    அவர் மனதில தன்னை பற்றி நிறைவுள்ளவனா நினைத்த காரியம், அதாவது பெருமை, அவரில் கொடுத்த விஷயம் பொறாமை. ஆனா அவர் நம்ம தேவ பிள்ளையா, தன்னை முழுக்க முழுக்க நம்ம தேவ சந்நிதானத்தில் தன்னை தாழ்த்தி கொண்டதால நம்ம தேவன், அவர் எந்த காரியத்தை குறித்து பொறாமை பட்டாரோ, அது ஒண்ணுமே இல்லைன்னு புரிய வைச்சார். அடுத்து தான் அவர் தெளிவா பாடினார். என்னுடைய நம்பிக்கையும், நலமும் மற்ற மனுசங்களை குறித்து பொறமைபடுறது கிடையாது. என் தேவனை அண்டியிருப்பதேன்னு. எப்படி இருக்கு குட்டிமா.

    ரொம்பவே நல்லா இருக்கு ஏஞ்சல். ஏன்னா, தேவ பிள்ளைகள் மனதில இந்த ,மாதிரி பொறாமைகளோ, பெருமைகளோ வரும் போது, உண்மையில் எது நலம்ன்னு சொல்லி கொடுக்கத்தான் ஆசாப் எழுதின சங்கீதம் இருக்கே. நான் சொன்னது சரியா?

    ரொம்ப சரி குட்டிமா. தேவ பிள்ளைகள் வாழ்கையில் பாவம் மேற்கொள்ளும் போது, தேவன் கொடுக்கும் சில பாடுகள் வேதனையை இல்லை சந்தோசத்தை மட்டும் கொடுக்க கூடியதுன்னு முழுக்க முழுக்க நம்பணும். ஏன்னா, அவருடைய நுகம் மெதுவாயும், சுமை இலகுவாயும் இருக்கிறது.

    அந்த வசனத்தை கேட்டதும் ஆச்சர்யமடைந்தவளாய்……..அப்ப நான் உங்களை பார்க்கிறதுக்கு முன்னாடி கேட்ட சத்தம் இன்னிக்கி என் தேவன் கொடுத்த சத்தியத்தை குறித்துத்தான ஏஞ்சல்.

    கண்டிப்பா குட்டிமா. தேவ பிள்ளையாகிய உனக்கு நியமிக்க பட்டிருந்த பாடு…..அதாவது ஸ்கூல் வேன் ஆக்சிடென்ட்………நுகம்…….உன்னை பொறுத்த வரையில் அது முடியாத சுமக்க முடியாத பாரமா நீ நினைச்சாலும்…………உன்னால முடியும்னு உன்னை பற்றி தெரிந்து கொண்ட உன்னுடைய இயேசப்பா அனுமதித்த லேசான, மெதுவான நுகம். அந்த நுகம் மூலமா உன்னில் தேவன் ஏற்படுத்திய மாற்றம் என்னன்னு உனக்கே தெரியும் குட்டிமா.

    என் இயேசப்பா மத்தேயு புத்தகத்தில சொன்ன நுகம் என்கிற வார்த்தைக்கான அர்த்தம் என்னன்னு, இப்ப புரியுது ஏஞ்சல். அப்ப அந்த வசனத்தை சொன்னது நீங்கதானா ஏஞ்சல்?

    இல்லை குட்டிமா. நாம எல்லாரும் தொழுது கொள்ளுற நம்ம தேவன்கிட்ட இருந்து வந்தது.

    உண்மையாகவா ஏஞ்சல். என் தேவன் தான் என்கிட்டே பேசினாரா?

    ஆமா குட்டிமா. அதுல என்ன சந்தேகம்.

    இல்லை ஏஞ்சல். நான் நேற்று செஞ்ச மடத்தனத்தினால, இனி என் தேவன் கொடுக்கிற சத்தியங்களை தெரிந்து கொள்ள முடியுமோன்னு பயந்துக்கிட்டே இருந்தேன். ஆனா நான் எதிர்ப்பார்க்கவே இல்லை. என்னுடைய தேவன் என்கிட்ட பேசுவார்னு. என்னால நல்லா அவர் குரலை கேட்க முடிஞ்சிச்சு.

    நீ உன்னுடைய தப்பை உணர்ந்து, நம்ம தேவன் வைத்த டெஸ்ட்ல பாஸ் ஆனதாலதான் உனக்கு நம்ம தேவன் விண்மீன்களை சுற்றி உலாவி வர்ற ஆயிரக்கணக்கான ஏஞ்சல் கூட்டத்தை காண்பிச்சாங்க. அது உன்னுடைய வெற்றிக்கு கொடுக்கப்பட்ட கிப்ட்.

    உண்மையில் நான் இதை எதிர்ப்பார்க்கலை. என் தேவனேதான் எனக்காக யுத்தம் செய்தாங்க. என்னை ஜெயிக்க வைச்சவரும் அவர்தான், ஆனா எந்த தகுதியே இல்லாத எனக்கு கிப்ட் எல்லாம் கொடுத்து சந்தோசப்படுறாங்க.

    அதுதான் குட்டிமா, நம்ம தேவன். அவருடைய அன்பை எந்த மனிதனாலும் முழுமையா புரிந்து கொள்ள முடியாது.

    தேங்க் யூ lord. என்னோடு என்றும் கூட இருந்து, என்னை யுத்தத்திற்கு பழக்குவித்து, என்னை வெற்றி சிறக்க செய்பவரே ஸ்தோத்திரம்!!!

    ஆமென். பலமான குரலில் ஏஞ்சல் தன்னுடைய சத்தத்தை தொனிக்க பண்ணி, சாஸ்டாங்கமாய் தேவனை தொழுது கொண்டார். அவளும் தன்னுடைய தேவனை சாஸ்டாங்கமாய் விழுந்து தொழுது கொண்டாள்.  

    Related Post

    Categories: பைபிள் சம்பவங்கள்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    nine × 5 =

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>