• பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 31

    வழக்கம் போல அவள் மனதினில் கேள்விகள் வந்து உட்கார்ந்து கொண்டது. இந்த லீவ்க்கு எங்க போக…… டீச்சர்…….இன்னும் பத்து நாள் உங்க எக்ஸாம் லீவா நம்ம ஸ்கூல்ல சொல்லி இருக்காங்க. அதுனால….ன்னு சொல்லி என்ன என்ன எழுத வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார். கணக்கு படி பார்த்தா கூட இந்த ஹோம் வொர்க் முடிக்கிறதுக்கே கிட்டத்தட்ட மூணு நாள் ஆயிரும் போல….அடுத்து ஒரு வாரம் மட்டும்தான் லீவ். அப்ப எந்த ஊருக்கு போகலாம்….மனதினில் கேள்விகள் கேட்டுக் கொண்டாள்.

    வீட்டுக்கு வந்த பிறகும் கூட இதே எண்ணம் தான் அவளில் இருந்தது. அவள் யோசித்து கொண்டிருப்பதை அவளுடைய அம்மா கூட பார்த்தார்.

    என்ன குட்டிமா…..என்ன யோசித்திட்டு இருக்க….என்ற போது…அம்மா இப்ப ஸ்கூல்ல விட்டிருக்கிற லீவ்க்கு எங்க போகலாம்ன்னு யோசித்திட்டு இருந்தேன். எங்க போகலாம்ன்னு நீங்க சொல்லுங்க, பார்ப்போம்….கேட்டு டென்ஷனை அம்மா தலையில் ஏற்றி வைத்தாள்.

    அவளுடைய அம்மா ஒரே ஒரு வார்த்தைதான் சொன்னார்கள்….ஏன் குட்டிமா, இதுக்கு போய் மண்டையை உடைக்கிற……முதலில் உன் ஹோம் வொர்க்கை முடி. அதுக்குள்ள நம்ம இயேசப்பா எங்க போகணும்னு நமக்கு தெரிவிச்சிருவாங்க. அடுத்து அங்க போகலாம் சரியா…..என்று சொல்லி விட்டு கிளம்பிய போது, அவள் தன் அம்மா மீது குற்றம் சொல்லி கொண்டாள். எங்க அம்மா எப்பவும் இப்படித்தான்….ஏதாவது ஒரு காரியத்தை குறித்து ஆர்வமா கேட்டா ஈஸியா சொல்லிருவாங்க….. இன்னும் நாள் இருக்குதே. ஏன் மண்டையை போட்டு குழப்பிக்கிற…..எவ்வளவு அழகாக தப்பித்து கொள்ள use பண்ணுகிற வார்த்தைகள். நான் என்ன அழகாக பிளான் பண்ணிட்டு இருக்கேன். ரொம்ப சிம்பிளா சொல்லிடாங்க. அப்புறம் பார்த்து கொள்ளலாம்ன்னு…..

    ரெண்டு வார்த்தைகளை அம்மாவை திட்டிய பிறகுதான் அவளுடைய மனதுக்கும் உறைத்தது. நான் ஏன் தேவையில்லாம எங்க அம்மாவை திட்டினேன். அம்மாக்கு சப்போஸ் வேலை இருந்திருக்கலாம். அதை விட்டுட்டு என்னோடு சேர்ந்து வந்து டிஸ்கஸ் பண்ண முடியுமா?? தன் மனதிற்கு அவளே பதில் சொல்லி கொண்டாள். அதுனால அம்மாக்கும் சேர்ந்து நாமே யோசிப்போம்…..மனதினில் நினைத்து கொண்டாள்.

    அவளுடைய அம்மா முதலே சொல்லி விட்டார்கள். உனக்கு கொடுத்திருக்கிற ஹோம் வொர்க்கை எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமா அவ்வளவு சீக்கிரமா முடி. ஏன்னா இந்த லீவ்க்கு அப்பா எங்க கூட்டிட்டு போறாங்கன்னு தெரியாது குட்டிமா..சரி என்று தலை ஆட்டினாலும் இன்னும் எந்த ஊருன்னு முடிவே பண்ணலை…அப்ப எங்க போக….அம்மா சும்மா சொல்லுறாங்க….மனதினில் நினைத்து கொண்டாள்.

    சப்போஸ் போனா எங்க போகலாம்ன்னு பிளான் பண்ணுவாங்க….மனதினில் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தாள். அம்மாவுடைய அம்மா வீடு…பாட்டியுடைய வீடா இருக்குமோ…இல்லை, இல்லை…போன லீவ்க்கு தான போயிட்டு வந்தேன். சப்போஸ் அம்மா சொன்னா கூட கண்டிப்பா சொல்லிரனும்….சாரி அம்மா, வேற பிளான்ன்னு……

    அப்பாவுடைய அப்பா- தாத்தா வீடா இருக்குமோ….இல்லையே சான்சே கிடையாதே. தாத்தா ஏற்கனவே தன் பிரெண்ட்ஸ்களுடன் சேர்ந்து வட இந்தியாவில் நம்ம தேவ பிள்ளைகள் ஊழியம் செய்கிற இடங்களை பார்வை இடுறதுக்காக போன வாரமே டிரிப் கிளம்பியாச்சே. நேத்து கூட அப்பா சொன்னாங்க…உங்க தாத்தாக்கு வட இந்தியா பகுதி ரொம்ப பிடிச்சிருச்சு போல குட்டிமா. உங்க தாத்தாவும் ஊழியம் செய்ய போறேன்னு சொல்லிட்டு இருக்காங்க. எத்தனைநாள் கழிச்சி கிளம்புவாங்கன்னு கேட்டப்ப இன்னும் ஒரு மாசம் வரைக்கும் ஆகும்னு சொல்லிட்டாங்க உங்க தாத்தா…… அப்ப தாத்தா வீடும் கிடையாது.

    அடுத்து ரேஷ்மிகூட அப்பாவும், அம்மாவும் முடிவு பண்ணியிருப்பாங்களா….ஆனா எப்ப பார்த்தாலும் ரேஷ்மி zoo இல்லாட்டி பார்க் பத்திதான பேசுவா. சோ அவளோட போனா கண்டிப்பா இந்த மெட்ராசை தாண்ட விட மாட்டா….. மனதினில் நினைத்து கொண்டாள். அச்சோ…மண்டை குழம்புதே….எங்க தான் கூட்டிட்டு போவாங்க நம்மளை….மனதினில் கேட்டுக் கொண்டாள்.

    வெளியூர்ன்னு அம்மா பிளான் பண்ணினா கண்டிப்பா ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை பகுதியைதான் முடிவு பண்ணுவாங்க. அப்பாவுடைய பிளானா இருந்தா கண்டிப்பா கண்காட்சியகம், zoo, பார்க் அடுத்து பெரிய பெரிய வரலாறு சம்பந்தமான இடங்களைதான் யோசிப்பாங்க. அதுனால என்ன செய்ய போறாங்க….மனதினில் நினைத்தவாறே ஜன்னலை வெறித்து பார்த்துக் கொண்டாள்.

    என்ன குட்டிமா, ஹோம் வொர்க் எழுத சொன்னா நீ எங்கயோ வேடிக்கை பார்த்திட்டு இருக்க….ஒழுங்கா எழுது. அம்மா குரல் கேட்கவும்….சரி அம்மா என்று சொன்னாலும் தனக்கு வீட்டு பாடம் எழுத கொஞ்சம் கூட விருப்பம் இல்லாததை அவளும் தெரிந்து கொண்டாள்.

    அப்பா வருவதை தான் அவள் மனம் எதிர்பார்த்து கொண்டிருந்தது. அப்பா….வந்ததும் கண்டிப்பா இன்னிக்கே இதை பத்தி பேசியிரலாம். ஆனால் அன்னிக்கின்னு பார்த்து அவளுடைய அப்பா வெகு தாமதமாகவே வந்தார்கள்.

    அவள் தன் படுக்கையில்  போவதற்கு முன் அட்லீஸ்ட் பத்து தடவையாவது கேட்டிருப்பாள். ஏன்மா….அப்பா இன்னும் வரலை. அப்பாவிடம் கேட்க வேண்டிய விசயம் இருந்தாலும், மறைத்தாள் மனதினில்.

    அப்பா லேட்டாகத்தான் வந்தார் என்பதை அம்மா மூலமாகவே தெரிந்து கொண்டாள். காலையிலும் அப்பாவை பார்க்க இயல வில்லை. உண்மையில அவளுக்கு அழுகையே வந்து விட்டது. அப்பாவிடம் எந்த ஊருக்கு போகலாம் என்பதை பேச முடியாத காரணமா…..இல்லை அதிகமா எதிர்பார்த்த காரியம் ஒவ்வொரு முறையும் ஏமாற்றமாக அமைவதாலா.

    காலையில் எழுந்த உடனே இயேசப்பாவிடம் prayerல் தன் மன பாரத்தை கொட்டி விட்டாள். எதுக்குன்னு தெரிந்து கொள்ள முடியலை இயேசப்பா. தேவையில்லாம நான் ரொம்பவே எதிர்பார்த்ததாலதான் இந்த மன கஷ்டம்ன்னு என் மனதுக்கு தெரியுது. ஆனா இப்ப நான் என்ன செய்யன்னு தெரியலை பிரெண்ட். ப்ளீஸ் எனக்கு உதவி செய்யுங்க…..இன்று அவள் வாசிக்க வேண்டிய பகுதி சங்கீதம்.

    அதில் உள்ள வார்த்தைகள் மூலமாக அவள் தேவன் அவளோடு பேசினதை அவளும் உணர்ந்தாள்.

    கர்த்தர் ஜாதிகளின் ஆலோசனையை விருதாவாக்கி, ஜனங்களுடைய நினைவுகளை அவமாக்குகிறார்.

    சங்கீதம் 33 : 10

    ஆனால் கடிந்து கொள்ளுதல். அவளால் உண்மையில் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் எங்க போகலாம்னு மட்டும்தான யோசித்தேன். அதுக்காக ஏன் இயேசப்பா இவ்வளவு கோபப்படுறீங்க??? நான் யோசித்த காரியத்தால் என்ன பிரச்சனை வந்திர போகுது. நான் யார் வாழ்கையையும் பத்தியோ இல்லை அவங்க கஷ்டப்படணும்ன்னு நினைச்சோ எதையும் யோசிக்கலையே……ஜஸ்ட் என்ன ட்ரிப்ன்னு மட்டும்தான யோசித்தேன். அதுவும் அம்மா மூலமாவோ இல்லை எங்க அப்ப மூலமாவோ நேத்தே நீங்க சொல்லி இருந்தா ஏன் தேவையில்லாம அழ போறேன். நீங்க தப்பு செய்திட்டு என்னை குற்றம் சொல்லுறீங்க பார்த்தீங்களா???? அவசரப்பட்டு வார்த்தைகளை சொல்லி விட்டு, அதன் பின்பு சாரி இயேசப்பா…..நீங்க அர்த்தம் இல்லாம வார்த்தைகள் தர மாட்டீங்க. நீங்க சொன்னதில கண்டிப்பா முக்கியமான அர்த்தம் உண்டு. அதை இப்ப என்னால தெரிந்து கொள்ள முடியலைன்னாலும் நீங்க வெளிப்படுத்தும்போது, தெரிந்து கொள்வேன் பிரெண்ட்…..மனதினில் நினைத்தவளாய் ம்கூம்….இனிமே இந்த காரியத்தை பத்தி யோசிக்காம இருக்கிறது ரொம்ப நல்லதுன்னு நினைக்கிறேன்.

    ஐந்து நாட்களாக எந்த ஊர் என்று காத்திருந்த அவளுடைய கேள்விக்கும் பதில் கிடைத்தது. அதுவும் கிளம்பும் நாள் அன்றுதான் அவளுக்கும் தெரியும்.

    காலையில் அன்று prayer முடித்த பின்பு அப்பா அவளிடம் மெதுவாக பேச்சு கொடுத்தார். குட்டிமா, நீ உன்னுடைய ஹோம் வொர்க் எல்லாம் முடிச்சிட்டியா…..என்ற போது……அதை எழுதுறதுக்கு நான் ரொம்பவே கஷ்டப்பட்டேன்ப்பா. எப்படா இதை முடிச்சிட்டு உங்ககிட்ட ட்ரிப்பை பத்தி பேசலாம்னு நினைச்சிருந்தேன்…….மனதினில் யோசித்தாலும் எழுதி முடிச்சிட்டேன்பா வெற்றிகரமா….சொன்னாள்.

    உனக்கு எக்ஸாம் லீவ் விட்டுருக்காங்க. அதுனால எங்கயாவது ஊருக்கு போகலாமா…..என்ற போது….சந்தோசத்தில் குதிக்காத குறைதான். தேங்க்ஸ் lord. நான் எத்தனை நாளா இந்த விசயத்திற்கு காத்திருந்தேன். இயேசப்பா கடிந்து கொள்ளுதல் வேறு இருந்ததால அதை குறித்து இப்போதைக்கு பேச வேண்டாம் என்று நினைத்திருந்தாள். ஆனா இன்னிக்கி அவளுடைய அப்பாவே கேட்ட போது ரொம்பவே சந்தோசப்பட்டாள்.

    அம்மாவும் நீயும் சேர்ந்து ஏதாவது ஏற்கனவே பிளான் பண்ணியிருக்கீங்களா???? என்று கேட்ட போது…..இந்த அம்மா இருக்காங்களே….மனதினில் நினைத்தவளாய்

    நான் லீவ் விட்ட முதல் நாளே அம்மா கிட்ட இதை பத்தி பேசினேன்பா. அம்மாதான் அந்த நேரம் பார்த்துக்கலாம்னு சொல்லிட்டாங்க. சோ இது வரை எந்த ஐடியாவும் கிடையாது…… தன் அம்மா மீது சமயம் கிடைத்த போது கோபத்தை தீர்த்து கொண்டாள். அவளின் முன்தான் அவளுடைய அம்மா உட்கார்ந்திருந்தார். தன் செல்ல பெண் தன் மீது கோபத்தை இத்தனை நாள் வைத்திருக்கிறாள் என்பதை அவளுடைய அம்மா தெரிந்து கொண்ட போது, புருவத்தை சுருக்கி….என்ன அப்பாகிட்ட சொல்லி கொடுத்தாச்சா, இப்ப சந்தோசமா…….என்றவாறு கண்களால் கேட்ட போது, அவள் சிரித்தாள்.

    ஒரு முறை தன் மனைவியின் முகத்தை பார்த்தார். அம்மாகிட்ட இதை பத்தி நேத்தே பேசினேன் குட்டிமா. அம்மா ஏற்கனவே சரின்னு சொல்லிட்டாங்க. இப்ப உன்னுடைய பதிலுக்காக தான் நாங்க காத்திட்டு இருக்கோம்……அப்ப எந்த ஊருன்னு ஏற்கனவே முடிவு பண்ணியாச்சா……மனதினில் முழுமையான ஆர்வத்துடன் எந்த ஊர் என்பதை தெரிந்து கொள்வதில் இருந்தாள்.

    நம்ம தாத்தாவுடைய பிரெண்ட் பையன்…….ஜான் அங்கிள்…. திண்டுக்கல் பக்கத்தில ஒரு கிராமத்தில இருக்கிறது உனக்கு தெரியுமே…..ஆமாப்பா என்று அவள் உதடுகள் சொல்லினாலும்….அப்பா….ப்ளீஸ் அந்த இடத்திற்கு மட்டும் வேண்டாம்ப்பா. சுத்த போர்…..மனதினில் சொல்லி கொண்டாள்.

    அந்த இடத்திற்குத்தான் பிளான் பண்ணியிருக்கு குட்டிமா….நீ என்ன சொல்லுறமா…..என்ற போது அவள் முகம் உண்மையில் சுருங்கி விட்டது. இருவரும் அவள் முகத்தைதான் கவனித்து கொண்டிருந்தனர். அதுனால் அவளுடைய முக மாற்றம் எதற்கு…..என்பதும் அவர்களுக்கு தெரிந்த விஷயம். அவளுடைய அப்பா அவளுக்காக பேச வருவதற்குள்….அவளுடைய அம்மா….கண்களால்….ப்ளீஸ்பா எதுவும் பேச வேண்டாம்……சொன்னார்கள்.

    அவள் என்ன சொல்லுவாள் என்று இருவரும் பார்த்து கொண்டிருந்தனர். அங்க கொஞ்சம் கூட நல்லா இருக்காதே….விளையாடுறதுக்கும் ஆட்கள் இருக்க மாட்டாங்க. ஒரு குக்கிராமத்தில ஊருக்கு ஒதுக்கு புரத்தில ஒரு வீடு. அம்மாவும், அப்பாவும் அங்க போனதும் என்னை மறந்திட்டு அவங்களுக்கு உதவி செய்ய போயிருவாங்க. நான் மட்டும்…..வீட்டில இருக்கிற அந்த மாடுகளை பார்த்துட்டு இருக்கணும்….. அவளுடைய மனதில் அந்த வகையில் தான் எண்ணங்கள் ஓடி கொண்டிருந்தது.

    இதுவும் சேனைகளின் கர்த்தராலே உண்டாகிறது; அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர், செயலில் மகுத்துவமானவர்.

    அவளின் காதுக்கு அருகில் யாரோ வந்து சொல்லி சென்றதை போல உணர்ந்தாள். சுற்றிலும் பார்த்து கொண்டாள். அவளுடைய அப்பாவும், அம்மாவும் இவளுடைய பதிலுக்காக இவள் முகத்தைதான் பார்த்து கொண்டிருந்தனர். அப்ப….யார் என்கிட்ட அந்த வசனத்தை சொன்னது….மனதினில் கேட்டுக் கொண்டாள். இயேசப்பா நீங்க சொன்னீங்களா…..கேட்ட போது மெல்லிய காற்றை உணர்ந்தாள். சோ இதுதான் இயேசப்பா சித்தம் போல…..ஆனா ஏன்……. குரல் எழுப்பினாலும்…..சரிப்பா. நாம அங்கயே போவோம். சொன்னாள்.

    இன்னிக்கி நைட்டே கிளம்புறோம் குட்டிமா. அதுனால உனக்கு தேவையான பொருட்களை நீயே எடுத்து வைச்சிரு…..அவளுடைய முகத்தில் துளி அளவு கூட மகிழ்ச்சி இல்லை என்பதை தெரிந்திருந்தாலும், அவளுடைய பிடிவாதத்தை எந்த வகையிலும் வளரவிட கூடாது என்பதில் அவளுடைய அம்மா கருத்தாக இருந்தார். அப்பா மனதில் கூட வேதனைதான். நம்ம பொண்ணுக்கு பிடிக்காத ஒரு ட்ரிப்பா யோசித்திடோமேன்னு.

    ஆனா நேற்று காலை வரை கூட அவருக்கு கூட தோணாத விஷயம். தீடீரென்று அவருடைய பிரெண்ட் ஜான் போன் பண்ணி, கொஞ்சம் ஊர்ல பிரச்சனைடா. எங்க ஊர்ல ஒரு கூட்டமே எனக்கு எதிரா நிற்குது. வெறும் மனஸ்தாபம் மட்டுமே. நீ என் கூட நின்னா தைரியமா இருக்கும்ன்னு தோணுச்சு. மத்த விசயத்தை நீ ஊருக்கு வந்த பிறகு சொல்லுறேன்…..அண்ணியையும், பாப்பாவையும் நான் விசாரிச்சதா சொல்லு….என்று சொல்லி போனை வைத்த போது அவருக்கு கூட குழப்பம்தான். இயேசப்பாவிடம் கேட்ட போது, போஎன்றுதான் பதில் வந்தது. ஆனா தான் மட்டும் தனியா என்பதாய்தான் யோசித்து வைத்திருத்தார். ஆனா அவருடைய மனைவிதான்…நம்ம பொண்ணுக்கும் லீவ்தான்….குடும்பமா போவோம்….பிரச்சனையை விளக்கி சொன்ன பிறகும் கூட…எனக்கும் ஏதோ ஒரு பிரச்சனைன்னு தோணுச்சு. ஆனா குடும்பமா போகலாம்னு ஏற்கனவே யோசித்து வைச்சிருந்தேன்….ஏன்னு தெரியலைப்பா…..என்று அவர் முடித்த போது….இருவரும் இயேசப்பாக்குள் நேற்று நைட்டே prayerல் சொல்லி விட்டார்கள். இயேசப்பா….காரியம் இப்படி இருக்குது. நாங்க உங்ககிட்ட சொல்லிட்டோம். நீங்கதான் எங்களை வழி நடத்தணும்…..என்று. அதன் பின்பு இருவருக்கும் மன கஷ்டம் ஒன்றும் தெரிய வில்லை. ஆனா இப்போது தன் பொண்ணு முகம் சுருங்கி போனது உண்மையில் அவருக்கு வேதனையாக இருந்தது.

    எதுக்கு இயேசப்பா, இப்ப நாம அங்க……கேட்டு கொண்டேதான் இருந்தாள்…..அவள் தன் தேவனிடம்.

    பஸ்சில் போய் கொண்டிருக்கும் போகும் போது கூட தன் தேவன் தனக்கு பதில் தந்து விடுவாரா என்றுதான் எதிர்பார்த்தாள். ஆனா அவள் எதிர்பார்த்த பதில் மட்டும் இன்னும் வர வில்லை.

    அவர்கள் அவளுடைய அப்பா பிரெண்ட் ஊரில் இறங்கிய போது இருட்டு நேரமே. அதுனால அவள் ரசிக்கும் படி ஒன்றும் இல்லை. ஆனா ஜான் அங்கிள் இவர்களை கூட்டி செல்ல பஸ் ஸ்டாப்பில் காரோடு காத்திருந்தார். கொஞ்சம் நெகிழ்ச்சியாக உணர்ந்தாள். கிட்டதட்ட 1மணி கூட இருக்கும். அந்த நேரத்திலும் கூட தங்களை வரவேற்க பஸ் ஸ்டாப்பிக்கே வந்தது, அவருடைய அன்பை வெளிபடுத்திய காரியமாக அவளுக்கு தோன்றியது.

    எப்படி குட்டிமா இருக்க….என்று அவர் முகம் முழுவதும் புன்னகையோடு விசாரித்த போது, இவளுக்குத்தான் என்னவோ போல தோன்றியது. இப்படி தன் மேல் அன்பு பாராட்டுகிறவர்கள் வீட்டுக்கு வருவதை பற்றிதான் இதுவரை யோசித்து கொண்டிருந்தாள். இயேசப்பாவிடம் சாரி எதுவும் கேட்க வேண்டியது இருக்குமோ…..மனதினில் நினைத்து கொண்டாள்.

    அந்த நைட் நேரத்திலும் கூட மேரி ஆன்ட்டி இவர்களுக்கு டீ மட்டுமில்ல, இவர்களுக்கு நைட் சாப்பாடு ஒழுங்காக முடித்திருக்க முடியாது…..ட்ராவல் காரணமாக…..என்று நினைத்து…..அந்த இரவு நேரத்திலும் கூட….. டீ முன்பு தோசை பரிமாறியது இவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

    அவர்கள் தங்க வேண்டிய இடம் ரொம்பவே கிளீன்னாக இருந்தது. நைட் தூங்கும் முன்பும் கூட….இயேசப்பா நீங்க இங்க ஏன் கூட்டிட்டு வந்திருக்கீங்கன்னு எனக்கு தெரியாது. ஆனா ரெண்டு நாளுக்கு மேல இங்க இருந்தா உங்களுக்கே போர் அடிச்சிரும்…..சோ ப்ளீஸ்…..அப்பா வேற எப்படியும் ஐந்து நாள் தங்க வேண்டியது இருக்கும்…..ன்னு சொன்னாங்க…..காப்பாத்துங்க….என்று சொல்லி முடித்தாள். ஜான் அங்கிள், மேரி ஆன்ட்டி அன்பை நேரில் பார்த்த பிறகும் கூட….இங்க எனக்கு யாரும் இல்லை…அவங்கவங்க வேலையை பார்க்க போயிருவாங்க. நான் மட்டும் தனியா…..மனதினில் நினைத்து கொண்டாள்.

    காலை எழும்பும் போது முழுக்க குழப்பத்தில் எழுந்தாள். கரத்தருக்குள் மகிழ்ச்சியாய் இருங்கள்ன்னு சொல்லி இருக்காங்க. ஆனா நான் பாருங்க, இயேசப்பா….குழப்பத்தோடு எழுந்திருச்சிருக்கேன். அது என்ன கனவு பிரெண்ட்…..ஏதோ மலை மேல நான் நிற்கிற மாதிரியும்…அந்த நேரம் ஒரு ஆட்டுக் குட்டி என்னை தேடி வருகிற மாதிரியும்…… அதை நான் எடுக்கிறதுக்குள்ள ஒரு ஓநாய் வருகிற மாதிரியும்….அடுத்து யாரோ அதோடு சண்டை போட்டு…ஆட்டுக் குட்டியோட நான் கடைசியில விளையாடுற மாதிரி கனவு வந்துச்சு இயேசப்பா. உண்மையில் எனக்கு புரியலை. சப்போஸ் இந்த ஊரை பத்தி நான் நினைச்சிட்டே வந்ததால ஆட்டு குட்டி, மலை……இந்த மாதிரி தோணி இருக்குமோ…அடுத்து அந்த ஓநாய்…இந்த ஊருக்கு கொஞ்சம் தூரத்தில காடு இருக்குன்னு சின்ன பிள்ளையா இருக்கும் போது கேள்வி பட்டிருக்கேன். சப்போஸ் எல்லாத்தையும் மொத்தமா யோசித்து கனவு பார்த்திருப்பேன் நினைக்கிறேன் பிரெண்ட்…..மனதினில் கேட்டு கொண்டாள்.

    அம்மா காலையில் சாப்பாடு முடிந்ததுமே ஆன்ட்டியோடு வயல் வேலைக்கு கிளம்பி விட்டார்கள். அப்பா கூட அங்கிளோடு ஏதோ முக்கியமான காரியம் என்று அங்கு இருந்த பஞ்சாயத்து ஆபிஸ்க்கு செல்ல வேண்டும் என்று சொல்லி கொண்டிருந்தார். அம்மா போகும் முன்பும் கூட…..  நீ எங்களோட வர்றியா என்று கேட்கத்தான் செய்தார்கள். அவள் தான் இல்லை என்று மறுத்தாள். அவளுக்கு என்று பாதுகாப்புக்கு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு பாட்டி மதிக்க தக்கவர் இருந்தார். அவரிடம் இவளை ஒப்படைத்துதான் சென்றனர்….எல்லாரும் என்னை விட்டு கிளம்புறீங்களே……மனதினில் நினைத்து கொண்டாள். கொஞ்சம் கண்ணீர் கூட எட்டி பார்த்தது அவளுக்கு.

    அந்த பாட்டிமா கூட வேலை செய்து கொண்டே இருந்த மாதிரி தான் அவளுக்கு தோணியது. வீட்டை காலையிலேயே ஆன்ட்டி கிளீன் பண்ணி சென்று விட்டார். பெரிய இடம் அந்த வீடு…… வீட்டின் முன்பு அவ்வளவு இடம் வெறும் இடமாக இருந்தது. வலது பக்கத்தில தொழுவம் இருந்தது. நாலு மாடுகள் நின்று கொண்டிருந்தது. முதலில் வீட்டின் முன் கிளீன் பண்ணி, தொழுவத்தை சுத்தம் செய்தவர்…..மாடுகளுக்கு தண்ணீர், தேவையான வைக்கோல்…..எல்லாவற்றையும் வைத்தார். எல்லாவற்றையும் பார்த்து மட்டும் கொண்டே இருந்தாள் அவள். இடையில் அவளை பார்த்து சிரித்து கொள்வார் அந்த பாட்டிமா.

    இயேசப்பா நேத்து கூட உங்ககிட்ட நான் சொன்னேனே…இந்த பாருங்க….நான் மட்டும் தனியா இருக்கேன். இந்த விசயத்தை இன்னும் ஒரு நாள் கூட பார்த்தாலே போர் அடிச்சிரும். இன்னும் கூடுதலா ஐந்து நாள் எப்படித்தான் பார்க்க போறேனோ….நீங்க ஏன் என்னை இப்படி கஷ்டபடுத்துறீங்க…..உண்மையில் அவளுக்கு தன் இயேசப்பா மீது கூட கோபம் வந்தது நிஜம். இயேசப்பா என் மேல அன்பா இருக்காங்க. ஆனா என்னை இப்படி ஒரு தனிமை இருக்கிற இடத்திலயா கொண்டு வந்து விடுறது….மனதினில் புலம்பினாள்.

    வீட்டில் யாருடைய அன்பும் இல்லாமல், முழுக்க உதாசீனபடுத்தப்பட்ட நிலையில், எல்லாரும் வெறுத்த நிலையில் காணப்பட்ட அந்த அக்காதான் அவளுடைய ஞாபகத்தில் வந்து நின்றாள். எனக்கு புரியுது இயேசப்பா. அந்த அக்கா எப்படித்தான் தன்னுடைய இரண்டு வருசங்களை தனியா கழிச்சாங்கன்னு தெரியலை. அவங்க அந்த வீட்டில் யாரும் இல்லாமல் தன் உடம்பு சரியில்லாத நிலையில் இருக்கணும்னா கண்டிப்பா தைரியம் வேணும். அது மட்டுமில்ல எனக்கு புரியுது பிரெண்ட்….அவங்க உங்க மேல வைச்சிருந்த அந்த நம்பிக்கை…..அன்புதான் அவங்களை அந்த அளவுக்கு சந்தோஷமாய்…வாழ வைச்சிருக்கு. என்னை கூட இப்படி தனிமை சூழ்நிலையில் நீங்க வைச்சிருக்கிறது உங்க மேல எனக்கு நம்பிக்கை….அன்பு வர வைக்கிற ஒரு பாடமா….இல்லை வேறு எதுவும் காரணமா பிரெண்ட்…… மனதினில் கேட்டு கொண்டு அழ ஆரம்பித்தாள். இவளுடைய வேதனையை தெரியாத அந்த குட்டி நாய் இவள் சாப்பிட ஏதாவது தர மாட்டாளா என்று அவளையே சுற்றி சுற்றி வந்தது.

    Related Post

    Categories: பைபிள் சம்பவங்கள்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    4 − = zero

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>