• பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 25

    ஸ்கூல் பெல் அடித்ததும் ஆட்டோமேடிக்காக அவள் மனது கலங்க ஆரம்பித்தது. ஸ்கூல் முடிஞ்சிருச்சு…… காலையில் பார்த்த கனவு நடக்குமா….. மனதினில் புலம்ப ஆரம்பித்தாள். தேவ வார்த்தைகளின் சத்தியங்களை அறிந்த போது கூட அவளுக்குள் கலக்கம் வந்ததில்லை. இன்னும் இயேசப்பா permission கொடுக்கலையே. ஆனா இந்த காரியம் என்ன நடக்கக் போகுதுன்னு அறிந்து கொண்டது மட்டுமில்லை அது நடக்குமா நடக்காதான்னு என்கிற எண்ணம் வேறு அவளில் மிகவும் கலக்கத்தை உண்டு பண்ணியது.

    ஸ்கூல் வேனில் வந்த நேரங்களில் கூட, இன்னிக்கி சாயந்திரம் மட்டும் வீட்டுக்கு வராம எங்காவது போயிரலாமா….. என்று கூட நினைத்து பார்த்தாள். இந்த மாதிரி நினைச்சா இயேசப்பாக்கு கஷ்டமா இருக்குமே…… அதையும் மனதில் நினைத்து கொண்டாள். இயேசப்பா ஏன் என்னால தேவனுடைய உண்மையை சந்திக்க பயப்படுறேன்னு தெரியலை…… இது நடக்குமா, நடக்காதான்னு வேற மனசில குழப்பமா இருக்கு….. ஒரு சின்ன தரிசனத்திற்கே நான் இப்படி பயந்து போறேனே…… உம்முடைய வார்த்தைகளை இந்த உலகத்திற்கு கொண்டு செல்கிற எத்தனையோ தீர்க்கத்தரிசிகள் இருக்காங்களே….. அவங்க மன உணர்வுகள் எப்படி இருக்கும்.இது நடக்குமா…..நடக்காதான்னு யோசிப்பாங்களோ….. உங்க தீர்க்கதரிசனத்தை மக்களுக்கு சொல்லிட்டு, அது நடக்கலைன்னா என்ன மற்றவங்க சொல்லுவாங்கன்னு மனசில அவங்களும் நினைப்பாங்களோ……. இயேசப்பாவிடம் தன் அனைத்து புலம்பல்களையும் சொல்லி விட்ட பிறகு கொஞ்சம் மனம் லேசானது மாதிரி தோன்றியது.

    ஸ்கூல் வேன் அவளை அவள் வீட்டின் முன்னால் விட்டு சென்றது. தன் பிரெண்ட்ஸ்களுக்கு வெளியில் நின்றவாறு கைகளை அசைத்தாள். இயேசப்பா என் கூட பேசுறதுக்கு எப்பவும் ஒரு ஏஞ்சல் அனுப்புவீங்களே. அவர் இப்ப இங்க வந்து என்னை திடன் கொள்ள பண்ணினார்னா எவ்வளவு நல்லா இருக்கும். மனதில் நினைத்து கொண்டாள்.

    வீட்டின் கேட்டை தள்ளி கொண்டு உள்ளே நுழையும் போதே ஏதாவது கார் தென்படுகிறதா என்றுதான் பார்த்து கொண்டே நுழைந்தாள். கார் ஒன்றும் தெரியவில்லை. அப்பாடா….. இன்னைக்கி என்னெல்லாம் யோசித்து குழம்பிட்டேன். சே….. வெறும் கனவு. மனதில் மகிழ்ந்து கொண்டே….. என்னோடு கூட இருப்பார் இயேசு….. பாடலை ரசித்து பாடி கொண்டே வீட்டினில் நுழைந்தாள். வீட்டினில் நுழைந்தவளுக்கு உண்மையில் அதிர்ச்சி.

    வீட்டின் ஹாலில் ஒரு வயதானவர், பார்ப்பதற்கு அவர் மனைவி போல தெரிந்தது, இருவரும் உட்கார்ந்திருந்தனர். தன் கைகளை கிள்ளி பார்த்து கொண்டாள். இது எதுவும் கனவா…… தன்னில் சொல்லி பார்த்தாள். அவர் முகத்தை பார்த்தாள். கனவில் பார்த்த முகம். திடுக்கிட்டு போனாள். இயேசப்பா…… என் கனவில் பார்த்தது உண்மையில் நடக்குதேன்னு சந்தோசப்படுறதா……. இல்லை இனி நான் சொல்ல வேண்டிய காரியத்தை குறித்து பயப்படுவதா……. உண்மையில் கலக்கத்தோடு வந்திருந்த இருவரையும் பார்த்தாள்.

    Paise the Lord…… இருவரையும் நோக்கி கரங்களை கூப்பி செலுத்தினாள். Praise  the Lord…..  இருவரும் சேர்ந்து இவளை நோக்கி மகிழ்ச்சியோடு சொல்லினர். என்ன வகுப்பு படிக்கிறமா……. என்று கேட்டவருக்கு நான் ஐந்தாம் வகுப்பு படிக்கிறேன் அங்கிள்….. என்று சொல்லி கொண்டிருக்கும் போதுதான் அவளுடைய அம்மாவும் நுழைந்தார். பாஸ்டர்….. இவதான் என்னுடைய பொண்ணு….. அவளுடைய அம்மா இவளை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி விட்டு, குட்டிமா…..நீ டிரஸ் மாத்திட்டு வந்திரு….. என்று அவளை அனுப்பி வைத்தார்.

    தன் ரூமில் நுழையும் போதே, இயேசப்பா நீங்க வெளிபடுத்தின தரிசனம் என்பதை தெரிந்து கொண்டேன். ஆனா அந்த பெரியவர்கிட்ட நரகத்தில என்ன நடந்ததோ அதை அப்படியே சொல்ல நீங்கதான் கிருபை பாராட்டணும்…… தன் மனதில் உள்ள பாரத்தை அவரிடம் வைத்தாலோ என்னவோ அவள் லேசாக உணர்ந்தாள். மகிழ்ச்சியாக முகம் கழுவி விட்டு, டிரஸ் மாற்றியவளாய் வெளியே வந்தார். அம்மா அவர்களுக்கு டீ பரிமாறிய வண்ணம் இருந்தார். நீயும் சேர்ல உட்காரு குட்டிமா….. என்று அம்மா சொல்ல அவளும் அமர்ந்தாள்.

    அம்மா டீ எடுத்து அவளிடம் கொடுக்க அவள் டீ குடித்தவாறு அவர்கள் பேசுவதை கவனிக்க ஆரம்பித்தாள். உங்க பொண்ணை நல்லா வளர்த்திருக்கீங்க….. அந்த பெரியவர்தான் இவளை பற்றி பேச ஆரம்பித்தார். அம்மா புன்னகையுடன்…..இது என் கையில இல்லை பாஸ்டர். முழுக்க முழுக்க இவ பிறந்ததுமே நம்ம இயேசப்பாவிடம் சமர்ப்பிச்சிட்டேன். முதல்ல தேவையில்லாத கனவுகள், உடம்பு பிரச்சனைகள் எல்லாமே இவளுக்கு வந்திச்சு. அப்ப, இயேசப்பாவிடம் அழுது  கேட்டப்பதான் என்கிட்டே உன் பிள்ளையை ஒப்படைன்னு சொன்னாங்க. அந்த நாள்ல இருந்து அவர் தான் முழுமையா இவளை நடத்திட்டு இருக்கார். சில நேரம் இவளுடைய குணங்கள் பார்த்து மிரண்டு போனாலும் கூட, அப்ப என்னை முழுமையா ஆறுதல் படுத்துகிறவரும், வழி காட்டுகிறவரும் அவர்தான் பாஸ்டர்.

    அம்மா சொல்லி கொண்டிருக்கும் போதே உண்மையில் அவள் சங்கடமாய் உணர்ந்தாள். அம்மா யாரிடமும் பெருமை காட்டுவது இல்லை. ஆனா இன்று சூழ்நிலைகள் அப்படி கிடையாதே….. ஏற்கனவே அவங்க தன் பொண்ணை பற்றி வேதனையில் இருக்கிறவங்க. அவங்க மனசு இன்னமும் கவலைப்படுமே….. மனதினில் அவள் நினைத்து கொண்டிருக்கும் போதே….. அவர் தன் மனைவியின் பக்கம் திரும்பி பார்த்தது உண்மையில் இவளுக்கு வேதனையா இருந்தது. குளோரி அக்கா சொன்னது போல இப்ப கூட அந்த அக்காவுடையஅம்மா முழுமையான மேக்கப்பில்தான் வந்திருந்தார்கள். குளோரி அக்காவுடைய அப்பா முகத்தில், கண்களில் காணப்பட்ட தாழ்மையை அவளால் அவர்கள் கண்களில் காண இயல வில்லை. தன் அம்மாவின் வார்த்தைக்கு பிறகு அந்த பெரியவருடைய முகம் ரொம்பவே சோர்ந்து போனது அவளால் காண முடிந்தது.

    உங்க தம்பி எப்ப வருவாங்க அம்மா….. அம்மாவிடம் அவர் தன் மாமாவை குறித்து தான் கேட்டுக் கொண்டிருந்தார். இப்ப வந்திருவான் பாஸ்டர்….. இன்னிக்கி உங்களை நான் இங்க, எங்க வீட்டில பார்ப்பேன்னு எதிர்பார்கவே இல்லை. தம்பி உங்களை பற்றி நிறையவே சொல்லி இருக்கான்…… அம்மா சொல்லி கொண்டிருக்கும் போதே மாமாவுக்கு ஏற்கனவே தெரிந்தவங்க போல……மனதினில் நினைத்து கொண்டாள்.

    மாமாமாவின் கார் சத்தம் கேட்டது. ஆவலாக எல்லாரும் அவள் மாமாவின் வருகையைதான் எதிர்பார்த்தனர். மாமா வீட்டிற்குள் நுழையும் போதே….. சாரி பாஸ்டர்…..உங்களை ரொம்ப நேரம் காக்க வைச்சிட்டேன். என்றவாறுதான் ஆரம்பித்தார் பேச்சை. இவள் பக்கம் திரும்பியவராய் பாப்பா, நீயும் வந்திட்டியா….. சொல்லி கொண்டிருக்கும் போதே… முதலில் நீங்க உட்காருங்க பீட்டர். அந்த பெரியவர் பேச ஆரம்பித்தார்.

    அவளுடைய மாமாவும் அமர்ந்தார். பெரியவர்கள் பேச ஆரம்பித்து விட்டனர். இனி இங்கே உட்காருவது சரி வருமா….. என்று யோசித்து கொண்டிருக்கும் போதே…. பீட்டர் போன விஷயம் என்ன ஆச்சு. என் பொண்ணை பற்றி ஏதாவது தெரிந்ததா. அவர் முழுக்க உடைந்த குரலில் பேச ஆரம்பிக்கவும் இவளும் அவர் கஷ்டத்தை உணர்ந்தவளாய் வேதனைப்பட்டாள்.

    அவள் தன் அம்மாவின் முகத்தை பார்த்தாள். அம்மா…. நான் எழுந்து போகட்டுமா என்றவாறு அந்த பார்வை இருந்தது. இல்லை குட்டிமா, நீ அவர்கிட்ட ஜெபம் பண்ணி ஆசீர்வாதம் வாங்க வேண்டியது இருக்கு…..என்ற வகையில் அம்மா கண்களால் பதில் சொல்லவும்….இயேசப்பா, என்னை நீங்க நல்லா வம்பில மாட்டி விட்டுடீங்கன்னு தெரியுது. ஒன்றும் சொல்ல முடியாமல் அவர்கள் பேசுவதை கவனிக்க ஆரம்பித்தாள்.

    பாஸ்டர்…. நீங்க கவலைப்படாதீங்க. உங்க பொண்ணை கல்யாணம் பண்ணிட்ட பையனுடைய பிரெண்டைதான் பார்த்திட்டு வந்தேன். அவன் சொன்னான்…. கண்டிப்பா இரண்டு நாளுக்குள்ள உங்க பொண்ணு எங்க இருக்காங்கிற விசயத்தை கலெக்ட் பண்ணி சொல்லுறேன்ன்னு…….

    அது புதிய இடம் என்பதை கூட மறந்து அவர் கண்களில் கண்ணீர் எட்டி பார்த்தது. அவளால் ஒன்றும் சொல்ல முடிய வில்லை. பொண்ணை நான் வளர்க்க வேண்டிய விதத்தில் வளர்க்க மறந்திட்டேன்னு நினைக்கிறேன் பீட்டர். இப்ப அவ எங்க இருக்கிறா….. என்ன மாதிரி இருக்கா….ன்னு எண்ணம் மட்டும்தான் முள்ளா குத்துது. நைட் படுத்தா தூக்கம் கூட வர மாட்டிகிது. அவ முகம் மட்டும் தான் மனசில நிற்குது. என்னால ஒண்ணும் செய்ய முடியலை….. என்று சொல்லி ஆரம்பித்து அழ ஆரம்பித்தார்.

    உண்மையில் அவள் ஆச்சர்யப்பட்டாள். ஒரு வார்த்தை கூட தன் மனைவிதான் காரணம் என்று குற்றம் என்று சொல்ல வில்லை. அவளும் புரிந்து கொண்டாள். ஏன் தன் இயேசப்பா தன்னிடம் இந்த தரிசனத்தை வெளிபடுத்தினார் என்று. இயேசப்பா, உண்மைதான். இவர் நீங்க நேசிக்கிற பிள்ளை. இவருடைய மன பாரம் உங்களை கஷ்டப்படுதினதால் தான் நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கீங்க. ஆனா தன் பொண்ணு உயிரோடு இருக்கிறான்னு நினைச்சிட்டிருக்கிற இவர் இறந்து, அதுவும் நரகத்தில கஷ்டப்படுகிறதை தெரிந்து கொண்டா என்னவாகும்.

    இன்னிக்கி ஒரு மீட்டிங் அட்டென்ட் பண்ண கோயம்புத்தூர் போக ரெடியா இருந்தேன். அப்பதான் தீடீர்னு வண்டி பிரேக் டவுன் ஆகி உங்களை சந்தித்து, உங்க மூலமா என் பொண்ணை பற்றி தெரிந்து கொள்ள முடிஞ்சுச்சு. ரொம்ப தேங்க்ஸ் பீட்டர். உண்மையில் உங்களை நம்ம இயேசப்பாதான் அனுப்பி வைச்சிருக்காங்க. என்னுடைய வேதனைக்கு இன்னும் இரண்டு நாள்க்குள்ள முடிவு வரப் போகுதுன்னு நினைக்கிறேன்….. அவர் சொல்லி கொண்டிருக்கும் போதே, இவள்மனதினில் அழ ஆரம்பித்தாள். இயேசப்பா, அவர் உங்க பிள்ளை. ரொம்பவே நம்பிக்கையா இருக்கார். தன் பொண்ணை திரும்பவும் பார்த்திருவோமோன்னு. ஆனா…….

    சரி பீட்டர்….. கார் வொர்க் முடிஞ்சிருச்சா….. என்று அவர் கேட்கவும் தான் அவளுக்கு புரிந்தது. நீங்க தரிசனத்தில் சொன்னது சரிதான் இயேசப்பா. கார் என்ற காரியம் மூலமாதான் இவரை நீங்க இங்க கூட்டி வந்திருக்கீங்க…….

    எல்லா வொர்க்கும் முடிஞ்சிருச்சு பாஸ்டர். இனி கவலைஇல்லாம நீங்க உங்க கோயம்புத்தூர் பிரயாணத்தை ஆரம்பிக்கலாம்…..என்று அவள் மாமா சொல்லி கொண்டிருக்கும் போது

    ஏற்கனவே நேரம் ஆச்சு பாஸ்டர்……. எங்க வீட்டுல சாப்பாடு முடிச்சிட்டு நீங்க உங்க பிரயாணத்தை ஆரம்பிங்க…… அவள் அம்மாதான் சொல்லி கொண்டிருந்தார்.

    இல்லைமா….. இன்னைக்கி எல்லா காரியத்தையும் நம்ம இயேசப்பாதான் வாய்க்க பண்ணியிருக்காங்க. கார் பிரேக் டவுன் ஆனது, உங்க தம்பியை அந்த வழியில பார்த்தது, அவர் எங்க அக்கா வீடு பக்கத்திலதான் இருக்குதுன்னு இங்க எங்களை கூட்டிட்டு வந்தது……என் பொண்ணு விசயத்தை பற்றி சில நம்பிக்கைகள் கிடைத்தது எல்லாமே தேவ சித்தம்தான். ஆனா ஏற்கனவே லேட்டா ஆச்சு. இதுக்கு மேல நாங்க நேரம் தாமதம் பண்ணினா கோயம்புத்தூர் மீட்டிங்கில் கலந்து கொள்ள நேரம் ஆயிரும். பீட்டர்…..ரொம்ப தேங்க்ஸ். உங்க வேலையை கூட விட்டுட்டு எனக்காக எல்லா காரியத்தையும் பார்த்து கொண்டதற்காக ரோம்ப தேங்க்ஸ்ப்பா…….

    அதுல என்ன இருக்கு பாஸ்டர். நீங்க நித்தமும் என்னை மாதிரி உள்ள ஆத்துமாக்களுக்காக தேவ சந்நிதியில் உட்கார்ந்து அவருடைய வார்த்தைகளை எங்களுக்கு சொல்லுறீங்க. நீங்க எங்களுக்காக செய்யுற நன்மைகளை நினைக்கும் போது, நான் செய்தது ரொம்ப சாதாரணம்…..அடக்கமுடன் அவளுடைய மாமா சொல்லி கொண்டிருந்தார். இவளுக்குதான் என்ன செய்வது என்று தெரிய வில்லை. அப்பா, நீங்க விசயத்தை சொல்லணும்ன்னு சொன்னீங்க. ஆனா அவர் கிளம்பின மாதிரி தெரியுது……மீண்டும் குழம்ப ஆரம்பித்தாள்.

    உண்மையில் உங்க பொண்ணை இங்க பார்த்தது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. நான் என் பொண்ணை வளர்க்கும் போது தவறின காரியத்தை என் இயேசப்பா இப்ப உங்க பொண்ணு மூலமா சொல்லி கொடுத்திருக்காங்க…… ரொம்ப நன்றிகள்மா….. அவர் சொல்லி கொண்டிருக்கும் போதே

    பாஸ்டர் அந்த மாதிரியெல்லாம் சொல்ல வேண்டாம். ஏன்னா இயேசப்பா எங்களுக்கு கொடுக்கிற குழந்தைகள் எங்களுக்கு கிடைக்கிற சுதந்திரமா இருந்தாலும், அதை அவர்கிட்ட கொடுக்கும் போது, கிடைக்கிற ஒரு அமைதி உண்மையில் நல்ல திருப்தியை கொடுக்குது. அப்படி இருக்கும் போது, உங்களுக்கு உங்க பொண்ணை மீண்டும் நம்ம இயேசப்பா திரும்பவும் தருவாங்கன்னு நான் நம்புறேன்…….அவள் அம்மா சொல்லி கொண்டிருக்கும் போது இவளுக்குத்தான் தர்ம சங்கடமாய் இருந்தது. அம்மா…..ப்ளீஸ் எந்த வார்த்தையும் use பண்ணாதீங்க. அவருடைய பொண்ணு இப்ப உயிரோட இல்லை….. ஓங்கி கத்தத் தோன்றியது அவளுக்கு.

    அவள் மனதில் நினைத்து கொண்டிருக்கும் போது, பாஸ்டர் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்ல ஆசைபட்டேன். அது வந்து என் பொண்ணை பற்றித்தான்…….. இவளும் புரியாது தன் அம்மாவை நோக்கினாள்.

    இன்னைக்கி காலையில என் பொண்ணு வந்து, அம்மா…..எனக்கு ஒரு கனவு வந்துச்சு. யாரோ நம்ம வீட்டுக்கு வராங்க…..அவங்களை நான் இது வரை பார்த்தது கிடையாதுன்னு சொன்னா…… அவ சொன்னப்ப கூட எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனா இன்னிக்கி உங்களை பார்த்து, உங்க கூட பேசி என் பொண்ணு கனவில் நடந்தது எல்லாம் உண்மையாயிருச்சு…… அம்மா ஆச்சர்யத்தின் உச்சத்தில் இருப்பதை அவளும் தெரிந்து கொண்டாள். அம்மா உங்க பொண்ணுக்கு இயேசப்பா தரிசனத்தை கொடுத்திருக்காங்கன்னு சந்தோசப்படுறீங்க. ஆனா இது முழுக்க முழுக்க ஒரு தேவ பிள்ளையுடைய உடைந்து போன இருதயத்தை தன் அன்புக்குள் ஸ்திரப்படுத்த என் தேவன் தகுதி இல்லாத எனக்கு கொடுத்திருக்கிற ஒரு பாக்கியம்……. மனதினில் சொல்லிக் கொண்டாள்.

    அவளுக்கு ஒரு ஜெபம் பண்ணிருங்க பாஸ்டர்……. என்று அவளுடைய அம்மா சொல்லி கொண்டிருக்கும் போதுதான் பக்கத்துக்கு வீட்டு பெண் வந்து நின்றாள். ஆன்ட்டி….. அம்மா உங்களை அழைச்சிட்டு வரச் சொன்னாங்க…..ஏதோ அம்மாக்கு……அவள் கண்களில் கண்ணீர் வழிந்திருந்தது. பாஸ்டர்…..கொஞ்ச நேரத்தில வந்திறேன். நீயும் என் கூட வாப்பா….. தன் தம்பியையும் அழைத்து கொண்டு அந்த பெண்ணோடு அவளுடைய அம்மா புறப்பட்டார்.

    இவள்தான் என்ன சொல்லுவது என்று புரிந்து கொள்ள முடியாமல் உட்கார்ந்திருந்தாள். குளோரி அக்காவின் அம்மாவின் முகத்தை பார்த்தாள்.

    ஒரு சின்ன சலனம் கூட அவர்கள் முகத்தில் இல்லை. ஆனால் அப்பாவுடைய முகம் முழுக்க முழுக்க வேதனையின் உச்சத்தில். தன் பொண்ணு என்ன ஆனான்னு கூடவா ஒரு அம்மா யோசிக்காம இருப்பாங்க. அவள் மனதில் கூட எண்ணங்கள் வந்து சென்றது. சாரி இயேசப்பா, ஏற்கனவே நீங்க சொல்லி இருக்கீங்க. யாரையும் நீ ஜட்ஜ் பண்ண கூடாதுன்னு. அவங்க கல்லான இருதயத்தை கூட நீங்க ஒரு நாள் சதையான இருதயமா மாற்ற வல்லவங்க. அதுனால நான் நினைத்த நினைவுக்காக சாரி பிரெண்ட்……

    குளோரி அக்காவின் அப்பாதான் பேச்சை ஆரம்பித்தார். உனக்கு நாங்க வரப்போறோம்னு காலையில கனவு மூலமா தெரியுமா…… ஆச்சர்யமாக கேட்டார். ஆமா பாஸ்டர்….. என்றவாறு அவள் சொல்லி வார்த்தையை முடித்து கொண்டாள்.

    எங்க போனாலும் உங்க பொண்ணு பற்றிதான் பேச்சா……அவ தன் புருசனுடன் சந்தோசமாதான் இருப்பா…..ஆனா நீங்க போற இடம் எல்லாம் ஏதோ எழவு விழுந்த மாதிரியே பேசுறீங்க…… குளோரி அம்மா தன் கணவனை கோபித்து கொண்டார். இவள் சின்ன பெண் என்பதால் இவர் தன் வருத்தத்தை காண்பித்து கொள்ள வில்லை.

    ஆனால் அவர் கண்களில் கண்ணீர் வந்து சேர்ந்ததை அவளும் கவனித்தாள். இயேசப்பா இவருடைய மன வருத்தம் என்னை ரொம்பவே கஷ்டபடுத்துது…… சொல்லட்டுமா…..ப்ளீஸ் நீங்கதான் எனக்கு தைரியத்தை தாங்க. அங்கிள் என்று சொல்லவா…… பாஸ்டர் என்று ஆரம்பிக்கவா….. தொடக்கமே அவளுக்குள் குழப்பம்.

    அங்கிள்……. நான் உங்ககிட்ட குளோரி அக்கா பற்றி சொல்லலாமா…… என்று அவள் சொல்லவும் இரண்டு பேரும் அதிர்ச்சி அடைந்தவர்களாய் இவளை பார்த்தனர்.

    என் பொண்ணை பற்றி உனக்கு எப்படி தெரியும். அதுவும் என் பொண்ணை வீட்டுல மட்டுமே நாங்க குளோரின்னு சொல்லுவோம்…… அவர்தான் கேட்டுக் கொண்டிருந்தார்.

    குளோரி அக்காவின் அம்மா முகத்தில் கூட அதிர்ச்சி.

    அங்கிள் நான் சொல்ல போற விசயங்கள் உங்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுக்கலாம். ஆனா இது கண்டிப்பா உங்களுக்கு தெரிவிக்கபடணும்னு என்பது நம்ம இயேசப்பாவுடைய கட்டளை…….. உண்மையில் அவள் சொல்லுவதை புரிந்து கொள்ள முடியாமல் பார்த்தார்.

    அங்கிள்…… ஒரு நிமிடம் நீண்ட மூச்சை விட்டவள்……. சாரி அங்கிள். உங்க பொண்ணு இப்ப உயிரோட இல்லை……. அவள் சொல்லி கொண்டிருக்கும் போதே….. ரொம்ப சின்ன பொண்ணுன்னு நினைச்சா நிறையவே சொல்லிட்டே போற…… குளோரி அம்மாதான் இவளை திட்ட ஆரம்பித்தார்.

    அவர்க்கு எங்கிருந்து தான் அவ்வளவு கோபம் வந்ததோ…… இப்ப பேசாம இருக்க போறியா….. இல்லை என் கையால அடி வாங்க ஆசையா…. தன் மனைவியை பார்த்து எச்சரிக்கவும் அப்படியே அமைதியாகி போனார். அதுதான் முதன் முதலாக அவர் காண்பித்த கோபம் என்று புரிந்து கொண்டாள்.

    நீ சொல்லுமா…… நீ என் பொண்ணை எங்க பார்த்த. உனக்கு எப்படி அவளை பற்றி தெரியும்….. நிதானமாக பேச ஆரம்பித்தார்.

    அங்கிள் நான் சொல்லுற காரியம் உங்களால் எந்த அளவுக்கு நம்ப முடியும் என்பது எனக்கு புரியலை. ஆனா இது முழுக்க முழுக்க உண்மை. என் தேவன் எனக்கு வெளிப்படுத்தின காரியம்.

    இப்போது அந்த அம்மாவும் அவள் பேச்சை கவனிக்க ஆரம்பித்தார். ஆனால் ரொம்பவே கோபத்தோடு.

    நீ சொல்லு குட்டிமா. நான் கண்டிப்பா உனக்கு என் தேவன் தன் வார்த்தையை வெளிப்படுத்திருப்பாங்கன்னு நம்புறேன். என்னுடைய இயேசப்பா என்கிட்டே சொல்லுறாரு. நீ சொல்லுவதை கவனின்னு.

    அங்கிள்….. நான் குளோரி அக்காவை பார்த்தது நரகத்தில்….. சொல்லி விட்டு நிறுத்தினார்.

    உண்மையில் குளோரி அம்மா கூட அதிர்ந்து போனார். ரேஷ்மி விசயத்தை சுருக்கமா சொன்னவள் என்னை அந்த பூதம் நரகத்திற்கு கூட்டிட்டு போச்சு. அடுத்து என் உடம்பு அந்த நரக வேதனையில் கஷ்டப்படுகிறதை என் கண்களாலே பார்த்தேன். அடுத்து என் மயக்கத்திற்கு பிறகுதான் நான் குளோரி அக்காவை பார்த்தேன்.

    அவள் பேசுவதை இருவரும் கவனித்து கொண்டிருந்தனர். அடுத்துதான் இரண்டு பூதங்கள் ஒரு பெண்ணை தூக்கிட்டு போறதை பார்த்தேன். என்னை மாதிரியே குளோரி அக்கா ஆவி வடிவத்தில் இருந்தாங்க. எனக்கு ஆவி, ஆத்துமா, சரீரம் பற்றி அந்த அளவுக்கு தெரியாது. ஆனா நானும், குளோரி அக்காவும் ஆவி வடிவத்தில் இருந்தோம்என்பது மட்டும் எனக்கு புரிஞ்சிச்சு. அக்கா தன் உடம்பு பின்னாடி போயிட்டிருந்த போது தான் நான் அவங்களை பார்த்தேன்.

    உண்மையில் அதிரிச்சியில் உறைந்து போயிருந்தார் குளோரி அம்மா. அவர் தான் எல்லாவற்றையும் கவனமாக கேட்டு கொண்டிருந்தார்.

    முதல்ல ரொம்ப சின்ன பொண்ணா இருக்கிற நான் நரகத்தில் இருக்கிறதை பார்த்து ஆச்சர்யபட்டவங்க, தன்னை பற்றி அடுத்து சொன்னாங்க. தன் பேரு குளோரின்னும், அவங்க அப்பா பேரு பாஸ்டர் என்பதும்,……அம்மாவை குறித்து…….உலக வாழ்க்கை வாழுறவங்க என்பதும் சொன்னாங்க…..தயக்கமாய் சொன்னாள்.

    நீங்க உங்க பிரெண்ட் மூலமா நம்ம தேவ அன்பில் வந்ததையும், இப்பவும் தேவ பிள்ளையா வாழுறதையும் சொன்னாங்க. அவள் சொன்னதில் உண்மை இருந்ததை அவர் உணர்ந்து கொண்டார். இன்னும் அதிர்ச்சியில் குளோரி அம்மா. என் பொண்ணு இறந்து போயிட்டாளா….. நரகத்தில இருக்காளா…… நம்ப முடியாமல் அமர்ந்திருந்தார்.

    சின்ன பிள்ளையா இருக்கும் போது உங்களை பார்த்து இயேசப்பா பிள்ளையா இருந்தவங்க தன் டீன்ஏஜில் தன் வாழ்க்கை மாறி போனதா சொன்னாங்க. எல்லாம் உண்மை…… குளோரி அம்மா வாய் உச்சரித்தது.

    முதலில் டிவி காரியத்தைதான் சொன்னாங்க. அதுதான் அவங்க வாழ்கையில் வேதனை ஆரம்பம்ன்னு சொன்னாங்க. அதை பார்த்தப்ப, நீங்க கோபப்பட்டதையும், அவங்க அம்மா அவங்களை சப்போர்ட் பண்ணிதையும் சொன்னாங்க……இப்போது குளோரி அம்மா கூட அழுது விட்டார்கள்.

    இந்த பொண்ணு சொல்லுவது எல்லாம் உண்மை…….இருவரும் அவள் பேசுவதைதான் கவனித்து கொண்டிருந்தனர்.

    அடுத்து அவங்க வாழ்கையில் சினிமா, கெட்ட பிரெண்ட்ஸ், பிக்னிக்….காதல்……தயக்கமாய் சொன்னாள். அவங்க அம்மா அவங்களுடைய தப்பிதத்தை கண்டிக்காம தப்பான வழியில் போறதுக்கு காரணமா இருந்தாங்க…..என்று சொல்லி கொண்டிருந்தாள். அவளுக்கும் புரிந்தது. இதை எல்லாம் சொல்ல கூடாது என்று தான் நினைத்து கொண்டிருந்தாள். ஆனா தன் வாய் தன் அதிகாரத்தில் இல்லை மட்டும் என்பதை உணர்ந்து கொண்டாள். தேவ சித்தத்துக்கு தன்னை ஒப்படைத்து விட்டாள்.

    உங்க பேச்சையும் மீறி வீட்டை விட்டு அந்த ஆளோடு வெளியேறியதையும், அவன் அவங்களை ஏதோ விபச்சார வாழ்கையில் தள்ளிட்டதாகவும் சொன்னாங்க…… அவளுக்கே வேதனையாக இருந்தது. குளோரி அம்மா கூட உடைந்து அழ ஆரம்பித்து விட்டார். என்னால்தான்….. என் பொண்ணு இந்த வேதனை பட்டிருக்கா….. புலம்பல் கூட ஆரம்பித்து விட்டது.

    நான் சந்தித்த அன்னைக்கி காலையில்தான் அந்த விபச்சார வாழ்க்கை பிடிக்காம தற்கொலை செய்து கொண்டதா சொன்னாங்க…….என் பொண்ணு……அவரும் கூட குலுங்கி அழ ஆரம்பித்தார்.

    சாத்தான் என்னை முழுமையா விழுங்க வந்த சமயத்தில் அக்காதான் என் இயேசப்பா என்னை நேசிக்கிறாங்க என்பதை சொல்லி, அவர்கிட்ட நான் கண்டிப்பா உடனே மன்னிப்பு கேட்க சொன்னாங்க….. சில காரியங்கள் தேவ ஆவியானவரே மறைத்து விட்டார். என்கிட்டே அந்த விசயத்தை சொன்னதும் சாத்தான் அக்காவை கோபமா சித்ரவதை அறையில் போட சொல்லிட்டான். அக்காவை பூதங்கள் தூக்கிட்டு போக வந்தாங்க. அப்ப கடைசியா சொன்னாங்க….. நீ எங்க அம்மா, அப்பாவை பார்த்தா நான் இப்பவும் அவங்களை நேசிக்கிறேன்னு சொல்லு…… அதுதான் கடைசியா நான் கேட்ட வார்த்தை.

    நான் இந்த பூமிக்கு வரதுக்கு குளோரி அக்காதான் காரணம். ஆனா அவங்க இன்னமும் அங்க…… சொல்லி முடிக்க முடியாமல் அழ ஆரம்பித்தாள். குளோரி அக்கா ரொம்ப நல்லவங்க அங்கிள்…… அவங்க இப்ப என்ன கஷ்டப்படுறாங்களோ…... சொல்ல கூட அவளால் முடிய வில்லை. தன் பொண்ணை நினைத்து அழுது கொண்டிருந்தவர் இப்போது அவள் அழுகையை நிறுத்த வேண்டியதாக மாறியது.

    அங்கிள் குளோரி அக்கா ரொம்ப நல்லவங்க…… மீண்டும் அதே வார்த்தையைதான் சொன்னாள். குளோரி அம்மா முகம் கூட இவளைதான் பார்த்து வேதனைபட்டு கொண்டிருந்தது. நான் என் பொண்ணுக்காக அழுறேன். ஆனா இந்த பொண்ணு…… சே…..தெரியாம அந்த பொண்ணு மனசு கஷ்டப்படும் படிக்கு பேசிட்டேனே…… அவள் அருகில் வந்தவர்….. குட்டிமா…..என்னை மன்னிச்சிரு…… நான் உன் மனதை….. அழுதார்.

    ஆன்ட்டி முதலில் உங்க மேல கோபமா இருந்த குளோரி அக்கா, எங்க அம்மாவும் அவனும் சேர்ந்து தான் என்னை இப்படி நரகத்திற்கு அனுப்பிட்டாங்கன்னு சொன்னாங்க. ஆனா கடைசியில உங்களை நேசிக்கிறேன்னு சொன்னப்ப….. உங்களை மன்னிச்சதை புரிந்து கொண்டேன்……. அந்த இடத்திலேயே அமர்ந்து அழ ஆரம்பித்தார்.

    எதுக்கு இப்ப அழுதிட்டு இருக்க….. நரகத்தில போனவளை நம்மால திரும்பவும் கொண்டு வர முடியாது. ஆனா இருக்கிற ஒரு பையனையும், மற்ற எல்லா குழந்தைகளையும் நரகத்திற்கு போகாம இருக்க நீ ஒரு அம்மாவா இருந்து தேவன் உனக்கு கொடுக்கிற காரியங்களை செய்வியா…… குரலில் எதிர்பார்போடு கேட்டவரை கண்டிப்பாங்க…..என் தப்பை என் இயேசப்பா புரிய வைச்சிட்டார். இனி இந்த உலகத்தை பார்த்து நான் ஓடினது போதும். இனி வாழ போறது அவருக்காக மட்டுமே…… அழுது கொண்டே சொன்னார். நீங்க சொன்னது உண்மைதான். இனி எந்த குழந்ததையும் நரகம் செல்ல விட மாட்டேன்…..நம்ம பொண்ணுதான் அதுல கடைசி நபர்….. மீண்டும் அழ ஆரம்பித்தார். தகுதியே இல்லாத என் கையில கூட என் இயேசப்பா ஒரு ஊழியத்தை கொடுத்திருக்காங்க, தேங்க்ஸ் இயேசப்பா. உங்க கிருபைக்காக நன்றிகள் ஆண்டவரே…… அந்த இடத்திலேயே சாஸ்டாங்கமாய் விழுந்து தன் தேவனை தொழுது கொண்டிருந்தார்.

    பார்த்து கொண்டிருந்த அவளுக்கு உண்மையில் இது ஆச்சர்யமாக இருந்தது. உண்மையில் தன் தேவன் சொன்ன ஆத்துமா….. குளோரி அப்பா என்றுதான் நினைத்து கொண்டிருந்தாள். ஆனா நடந்தது….. குளோரி அம்மா என்று புரிந்த போது தன் தேவனுக்கு அவளும் முழங்காலில் நின்று துதிகளை செலுத்தினாள்………..

    Related Post

    Categories: பைபிள் சம்பவங்கள்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    four × = 24

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>