• பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 33

    இவர்கள் இருவரும் ஜான் அங்கிள் வீட்டினில் நுழைந்த போது, பாட்டிமா கூட அதே மாதிரிதான் பார்த்தார். உண்மையில் அவரால் கூட ஆச்சரியத்தை வார்த்தைகளால் சொல்ல முடிய வில்லை. இது எப்படி சாத்தியம்…..மனதினில் நினைத்து கொண்டார்.

    கேட்டின் முன் கூட ஆட்கள் நின்று அவர்கள் இருவரையும் பற்றிதான் பேசி கொண்டிருந்தனர். பாட்டிமா கூட கவனித்தார். கேட்டின் அருகில் ஆட்கள் கூட்டம் நின்று கொண்டிருந்தது.

    பாட்டி….முதலில் இவள்தான் பேச்சை ஆரம்பித்தார். எனக்கு என்னுடைய இயேசப்பா கொடுத்திருக்கிற பிரெண்ட். இவன் பேரு வேதா….அவனை அறிமுக படுத்தி வைத்தாள். இருவரும் அறிமுகம் தேவை இல்லை என்பது போல ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டனர்.

    சாரி பாட்டி, நான் மறந்தே போனேன். நீங்க ரெண்டு பேரும் ஒரே ஊர்தான. உங்களுக்கு நல்லாவே தெரிந்திருக்கும்…..அவள் சொல்லவும்

    கண்டிப்பா. நான் முந்தி நல்லா இருந்தப்ப இங்க பாட்டிகிட்டதான்  எப்பவும் கதை கேட்டுட்டு இருப்பேன்……அவன் விளக்கம் கொடுத்தான்.

    உன்கிட்ட இந்த மாறுதல் எப்படி வந்துச்சுச்சு வேதா…..பாட்டி ஆச்சரியமாக கேட்டார். அவன் என்ன சொல்லுவான் என்று அவள் கூட ஆர்வமா காத்திருந்தாள். இருவருக்கும் ஏற்கனவே ஏஞ்சல் ஆர்டர் போயிட்டு போயிருக்காங்க. சோ….உண்மையை சொல்ல முடியாது. பிள்ளை எப்படித்தான் சாமாளிக்க போறானோ…..மனதினில் கேட்டு கொண்டாள்.

    பொய் சொல்ல கூடாது என்பது அவனுக்கும் தெரியும்…… நான் எப்படி மலைக்கு போனேன் தெரியலை பாட்டி. ஆனா கீழே இறங்கி இருந்த சமயம் முழுக்க குணமாகி இருந்தேன். நம்ம இயேசப்பாதான் பாட்டி அந்த சமயத்தில என் புத்தியை தெளிய வைச்சிருக்கார்…..அவன் சொல்லவும் இவள் கூட ஆச்சர்யப்பட்டு போனாள்.

    பொய்யையும் சொல்ல வில்லை. தேவன் கொடுத்த கட்டளையையும் மதிச்சிருக்கிறான். ஆனா….எப்படி…..அவனால் இந்த மாதிரி சொல்ல முடிந்தது. நான் கூட எத்தனையோ தடவை பொய் சொல்ல கூடாதுன்னு நினைச்சி காரியத்தை மறைச்சி சொதப்பி வைச்சிருக்கேன். ஆனா இவனால மட்டும் எப்படி….கொஞ்சம் கூட பதட்டப்படாம சொல்ல முடிந்தது…..மனதினில் உண்மையில் வியந்து போனாள் அவன் புத்திசாலித்தனத்தை பார்த்து.

    கண்களால் பாராட்டுகளை தெரிவித்தாள் அவள். அவனும் தன் சிரிப்பால் ஏற்றுக் கொண்டான்.

    ஆனா உனக்கு தெரியுமா….இது என் இயேசப்பா கொடுத்த ஞானம்….அதுனால அவருக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக….என்று அவன் அவளிடம் சொன்ன போது உண்மையில் இவளுக்கு அவமானமாகி விட்டது.

    எத்தனையோ சமயங்களில் என் தேவன் எனக்கு உயர்வுகள் கொடுத்தாலும், அதை, அந்த மகிமையை நானேதான ஏத்துருக்கேன்….ஆனா உண்மையில் இவன் கிரேட்தான். தனக்கு கிடைத்த முதல் பாராட்டையே என் தேவனுக்கு அர்பணிச்சிட்டானே!!! என் இயேசப்பா சொன்னது உண்மைதான். இவன் என் தேவன் ஊழியத்துக்காக தெரிந்து கொள்ளபட்டவன் தான்…..மனதினில் அவள் நினைத்து கொண்டிருந்தாலும்

    பாட்டியுடைய குழப்பத்தை இருவரும் கணக்கில் எடுத்து கொள்ள வில்லை. மற்றவர்களிடமும் இதைத்தான் சொல்ல போகிறார்கள். அதை மற்றவர்கள் புரிந்து கொள்ள முடியா விட்டாலும், தேவன் சொல்ல சொன்ன வார்த்தைகள் இவ்வளவுதான்…..மனதினில் நினைத்து கொண்டனர் இருவரும்.

    சரி….நீ இவளை எப்படி பார்த்தப்பா….என்று வேதாவிடம் கேட்ட போது, இவங்களும் அந்த நேரம் அங்க வந்திருக்காங்க….ரெண்டு பேரும் யாருன்னு விசாரிச்சிகிட்டோம். அப்பதான் சொன்னாங்க. நம்ம வீட்டுக்கு வந்திருக்கிற விருந்தாளி…. என்று அவன் சொன்னதை உண்மையில் பாட்டிம்மா ரசித்து கேட்டுக் கொண்டிருந்தார்.

    எத்தனை நாள் ஜெபத்தில் வைத்த விண்ணப்பம். இன்னிக்கி கண் முன்னாடி அந்த அதிசயத்தை அவர் கண்ட போது…..உண்மையில் தன் தேவனுக்கு கோடான கோடி நன்றிகளை செலுத்தினார் அந்த பாட்டிமா.

    நான் ஜான் அங்கிளை பார்க்கலாம்ன்னு வந்தேன். ஆனா அங்கிளை பார்க்க முடியலை. எங்க போயிருக்காங்க பாட்டி….அவன் உரிமையா கேட்ட போது

    குட்டிமா, உனக்கு வேதா யாருன்னு தெரியாதே. நம்ம கிராமத்து பஞ்சாயத்து தலைவர் பையன்தான் இவன். வேதாவுடைய அப்பா பெயர் அளவுக்குதான் கிறித்தவன். ஆனா செய்யுறதெல்லாம் அயோக்கியதனம். அவன் செய்யுற தப்பெல்லாம் பாவம் இந்த பையன் மேல விடிஞ்சிருச்சு. தீடீர்னு காய்ச்சல்னு சொன்னாங்க. ஆனா மூளையை குழப்பி விட்டது தான் யாரும் எதிர்பார்க்காத விசயம். இவனுடைய அம்மா என்ன செய்வா பாவம். ஒரு பக்கம் திருந்தாத புருஷன். இன்னொரு பக்கத்தில ஒரு வருசமா புத்தி இல்லாம வேதனைப்படுத்தின இவன். ரொம்பவே கஷ்டப்பட்டு போயிட்டா. பாவம் அவளுடைய ஜெபத்திற்கு நம்ம இயேசப்பா பதில் கொடுத்திட்டார். என் தேவனால் எல்லாம் கூடும்…..நான் முழுமையா நம்புறேன். ஆனா இந்த அதிசயம் கொஞ்சம் கூட கற்பனைக்கு கூட எட்டாத ஆச்சர்யமா இருக்கு….மனதினில் இன்னும் வியப்பின் உச்சத்தில் தான் இருந்தார் அந்த பாட்டிமா.

    சரி பாட்டி, ஏன் பழைய கதையை போட்டு பேசிட்டு இருக்கீங்க. எனக்கு நம்பிக்கை இருக்கு இன்னமும். என் அப்பா கண்டிப்பா ஒரு நாள் இயேசப்பாக்குள்ள வருவாங்க. அன்னைக்கி இந்த ஊரே என் அப்பா வாழ்க்கையால என் இயேசப்பாக்குள்ள வரப் போகுது……அவன் நம்பிக்கையுடன் சொல்லவும்

    உனக்கு நம்பிக்கை இருக்குதுல்ல ராஜா, அது போதும் எனக்கு……அவர் வருத்ததுடன் சொல்லி கொண்டிருந்தார்.

    எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த அவளுக்கு சிறிதளவு அவனுடைய குடும்பத்தை பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் இதிலும் மிகுந்த ஆச்சரியம் மட்டுமே அவளுக்கு மிஞ்சியது. நான் கூட பிறந்தில இருந்தே…. எங்க அம்மா, அப்பா வாழ்க்கை பார்த்து என் இயேசப்பாவை தெரிந்து கொண்டேன். ஆனா இவன்…..அம்மா இயேசப்பாவை தேடினாலும், அப்பா….முழுக்க முழுக்க தேவனுடைய நாமத்தை வேதனைப்படுத்தரவாறாக இருக்கும் போது, இவன் மட்டும் அவங்க அப்பா வழிகளை தெரிந்து கொள்ளாம எப்படி என் இயேசப்பா மேல பிரியமா இருக்க முடியுது. அவன் நினைச்சிருந்தா என் இயேசப்பாவை தேடாம கூட வாழ்ந்திருக்கலாமே. ஆனா ஏன்…….மனதினில் கேட்டுக் கொண்டாள்.

    அவள் முக ஓட்டத்தை தான் அவனும் பார்த்து கொண்டிருந்தான். என்னவோ யோசித்திட்டு இருக்க மாதிரி தெரியுது…….அவன் கேட்டதுக்கு அவளும் தன் வாய் திறந்து தன் மனதில் இருந்த சந்தேகத்தை சொன்னாள்.

    உனக்கு தெரிந்திருக்கும்னு நினைக்கிறேன். எல்லார் வாழ்கையும் கண்டிப்பா பஞ்சில நடந்து போற வாழ்க்கை கிடையாது. சில பேருக்கு வேணா அப்படி அமையலாம். ஆனா எல்லாருக்கும் அப்படி கிடையாது. சில பேருக்கு அது முள்ளுகள் நிறைந்ததா இருக்கும். சில பேருக்கு மேடுகள், பள்ளங்கள் நிறைந்ததா இருக்கும். சில பேருக்கு வழியில் சிங்கம், வலு சர்ப்பம் நிறைந்ததா கூட இருக்கலாம். ஆனா அந்த பாதையில்……அவன் சொல்லி கொண்டிருந்த போதே

    அவள் உடனே சொன்னாள். உண்மையில் வேதா, என்னுடைய அம்மாவா இருக்கட்டும், அப்பாவா இருக்கட்டும்…..என் இயேசப்பாக்குள்ள சாட்சியுள்ள வாழ்கை வாழுறவங்க. நான் சில நேரங்களில் என் இயேசப்பா வார்த்தைகளை மீறி நடக்கும் போது, அம்மா அடிக்கடி ஞாபகப்படுத்துவாங்க. குட்டிமா, இது உன் இயேசப்பாக்கு பிடித்தமானது கிடையாது. அதுனால உன்னை நீ இயேசப்பாகிட்ட சொல்லி மாத்திக்கோ…..அப்படின்னு சொல்லுவாங்க. அந்த நேரத்தில என்னுடைய இயல்பான மாம்ச பலவீனம் கேள்வி கேட்கும்…இதென்ன அவ்வளவு பெரிய தப்பா….ன்னு கேட்டாலும் அடுத்த கொஞ்ச நேரத்தில நான் செய்தது தப்புன்னு உணர வைப்பாங்க இயேசப்பா. அடுத்து அவர் என்னில் உருவாக்குற அந்த மாற்றத்தை நானும் ரசிப்பேன்……ஆனா என்னால என் அம்மாவையோ, அப்பாவையோ ஒரு கேள்வி கூட கேட்க முடியாது. நீங்க என்ன யோக்கியமோ….என்னை குறை சொல்ல வந்திட்டீங்க…..ன்னு. ஏன்னா அவங்க சாட்சிகளா வாழுறவங்க. அப்ப என் இயேசப்பா எனக்கு அவரை பற்றி தெரிந்து கொள்வதற்காக கொடுத்த பாதை, உண்மையில்  பஞ்சில நடந்து போற பாதைதான்……ஆனா உனக்கு….உன்னுடைய அம்மா உன் கண்ணுக்கு முன்னாடி இயேசப்பாவை தேடுறவங்களா இருந்தாலும், அந்த சாட்சி எல்லாம் உன் அப்பாவுடைய வாழ்கையால தீய்ஞ்சி போயிருமே…. உன்னால அப்ப எப்படி அந்த சூழ்நிலையிலும் சாட்சியாக வாழ முடியுது….என்று கேட்டாள்.

    என்னுடைய பாதை முள்ளுகள் நிறைந்த பாதைன்னு சப்போஸ் நீ நினைச்சிருந்தாலும் எனக்கு இந்த பாதை ரொம்ப பிடிச்சிருக்கு தெரியுமா….. அம்மாவுடைய ஏக்கங்களும், அப்பாவுடைய முரட்டாங்களையும் நான் என் சின்ன வயசில இருந்தே பார்த்து வளர்ந்தேன். அந்த நேரம் எனக்கு வீடு ஏதோ நெருக்கபட்ட சூழ்நிலையா தெரிந்தது நிஜம். ஆனா அந்த நெருக்கமான, குறுகலான, இடுக்கமான பாதை என்னை வீட்டில் இருந்து வெளியே தள்ளியது உண்மை. மன சமாதானத்தை தேடி வந்தப்ப, அந்த நேரம் ஜான் அங்கிள் வீடு, எனக்கு ஒரு அடைக்கலமா இருந்தது நிஜம். வீட்டில் ஏதாவது சண்டைகள் வந்தாலும் கூட, இங்க வந்து உட்கார்ந்திருவேன். பாட்டிமா நம்ம இயேசப்பா செய்த அதிசயங்களையும், அவருடைய அன்பையும் சொல்லும் போது, ரொம்பவே நிம்மதியா உணர்வேன். அடுத்து சாயந்திரம் ஆகறதுக்குள்ள மேரி ஆன்ட்டியும், ஜான் அங்கிளும் வந்திருவாங்க. அடுத்து அவங்களுக்கு நான் செல்ல பிள்ளைன்னால என்னுடைய வீடு மாதிரி உரிமை எடுத்து பழகுவேன். திரும்பவும் என் வீட்டிற்கு போகும் போது, மீண்டும் இங்கதான வரப் போறேன்…..என்கிற சந்தோஷத்தில் கிளம்புவேன்…….அவன் சொல்லி கொண்டிருந்த போது உண்மையில் அவளுக்கும் மனது கனத்தது.

    இயேசப்பா, எனக்கு நல்ல அம்மா, அப்பாவை கொடுத்திருக்கீங்க. இதுக்காகவே நான் என் வாழ்நாள் முழுவதும் நன்றிகள் சொல்லுவேன்….அவள் மனதினில் சொல்லி கொண்டாள்.

    என்ன என்னுடைய கதை கேட்டப்ப உனக்கு ரொம்ப கஷ்டமா ஆச்சா….நான் உன்கிட்ட முதல் சொன்ன மாதிரிதான். எல்லாருக்கும் பஞ்சில நடந்து போற பாதை கிடையாது. சப்போஸ் நான் முள்ளுகள் நிரம்பி இருக்கிற பாதை வழியா நடந்து போனாலும், என் இயேசப்பா எவ்வளவு போதுமானவரா இருக்கார் தெரியுமா?? இல்லாட்டி எனக்கு இப்படிப்பட்ட ஒரு அற்புதமான அடைக்கலமா ஜான் அங்கிளை கொடுத்திருக்க மாட்டாங்களே. என்னை மாதிரி முள்ளுகளின் மத்தியில் நடந்து போற எத்தனையோ பிள்ளைகளுக்கு தேவையான நேரத்தில அடைக்கலமா நம்ம இயேசப்பாவின் அன்பை ருசிக்கிறதுக்கு ஜான் அங்கிள் வீடு மாதிரி கிடைக்காம இருந்திருக்கலாம். அதுக்காக என்னுடைய இயேசப்பா எல்லார் மேலயும் வைச்சிருக்கிற அன்பு இல்லைன்னு ஆயிருமா??? இல்லையே, அப்ப ஏன் என்னை நேசிக்கிற என்னுடைய இயேசப்பாவை நான் விட்டு கொடுக்கணும். நான் முள்ளுகள் மத்தியிலயோ இல்லை சிங்கம், வலு சர்ப்பங்கள் மத்தியில் நடந்து போனாலும் கூட, அவரை நேசிக்காம இருக்க முடியாது. ஏன்னா அவர்தான் என்னுடைய தேடல். அவரை நான் தேடாம போனா….அந்த நாள் இந்த பூமியில் நான் உயிரோட இல்லைன்னு அர்த்தம்…..அவன் உணர்ச்சி வசப்பட்டு பேசி கொண்டிருந்தை அவளும் கவனித்தாள்.

    எவ்வளவு அழகாக என் தேவனை ருசிக்கிறான் என்பதே இவளுடைய ஆச்சர்யமாக இருந்தது……. தேங்க்ஸ் Lord….இன்னிக்கி எனக்கு உங்க அன்புக்குள்ள வாழுற ஒரு சாட்சியின் வாழ்க்கை காண்பிச்சதுக்காக ரொம்ப தேங்க்ஸ் பிரெண்ட்……..மனதினில் சொன்னாள்.

    மீண்டும் பேச்சை தொடர்ந்தான். உனக்கு ஒண்ணு தெரியுமா??? நாம எந்த பாதையில் நடந்து போறோமோ அதை பொறுத்து நம்ம தேவன் நம்ம கூட இடைபடுகிற விதம் இருக்கும். சப்போஸ் பாதை பஞ்சா இருந்தா அவங்க நம்ம இயேசப்பா உணர்ந்து கொண்ட விதம் ஒரு வகையில இருக்கும். பாதை முள்ளாகவோ இல்லை கொடிய மிருகங்கள் கொண்ட பாதையாகவோ இருந்தா அவங்க நம்ம இயேசப்பாவின் அன்பை ருசித்த விதம் வேறு விதமாக இருக்கும். ஆனா எந்த பாதையா இருந்தாலும் வழிகாட்டி அவர் நம்மை பரலோகத்தில் சேர்த்திருவார்ன்னு பாதையில போறவங்களுக்கு நம்பிக்கை இருந்தா போதும். அந்த பாதை எப்படிப்பட்ட மோசமானதாக இருந்தா கூட, அவர் தன் பிள்ளைகளை பரலோகத்தில் சேர்த்து கொள்ளுவார்…….அவளுக்கு இருந்த அதே ஆச்சர்யம்தான் பாட்டிமாக்கு கூட இருந்தது.

    உண்மையில் இன்றுதான் அவளும் தெரிந்து கொண்டாள். பாதையில நம்பிக்கை வைக்க கூடாது மட்டுமில்ல, அதில் தன்னை நடத்தி செல்லும் என் இயேசப்பாவின் மேல் மட்டுமே என் நம்பிக்கை இருக்க வேண்டும் என்று…… ஏன்னா அவரே வழியும், சத்தியமும், ஜீவனுமாய் இருக்கிறார். பாதை….அது தன் பிள்ளைகளுக்கு அவர் தெரிந்து கொள்ளும் பாதை. ஏன்னா எல்லாரையும் அவர் பரலோகம் அழைக்கிறாரே. அதுனால அவரவருடைய ஆவி, ஆத்துமா, சரீரத்தை பொறுத்து பாதைகளை என்னுடைய இயேசப்பா தேர்ந்தெடுத்திருந்தாலும், வழிகாட்டி அவர் கூட இருக்கும் போது நான் ஏன் பயப்படணும்….இப்ப எனக்கு சப்போஸ் பஞ்சு பாதையா இருக்கலாம். ஆனா நாளைக்கே முள்ளுகள் நிறைஞ்சதா….இல்லை மேடு பள்ளமா இருந்தா கூட…..ஆட்டை கூட்டிட்டு போற மேய்ப்பனுக்கு தெரியுமே. எப்படி தன் ஆட்டை வீட்டுக்கு கூட்டிட்டு போகணும்னு. ஆடு ஏன் பாதையை பார்த்து பயப்படணும். அது மேய்ப்பனுடைய வேலை. அதுனால நான் என்றும் என் மேய்ப்பன் மேலேயே நம்பிக்கை வைப்பேன். தேங்க் யூ பிரெண்ட். நீங்க எனக்கு உங்க பிள்ளை மூலமா சொல்லி கொடுத்த இந்த அழகான பாடத்திற்காக சோ மெனி தேங்க்ஸ் Lord….. மனதினில் சொல்லி கொண்டாள்.

    தேங்க்ஸ் வேதா….உன் மூலமா என்னுடைய இயேசப்பா எனக்கு ஒரு நல்ல பாடத்தை கத்துக் கொடுத்திருக்காங்க இன்னிக்கி…..அவள் சொல்லி கொண்டிருந்த போது

    ப்ளீஸ்….இனியொரு தடவை எனக்கு நன்றி சொல்லாத. ஏன் தெரியுமா. இது உனக்கு மட்டும் நம்ம இயேசப்பா கத்துக் கொடுத்த பாடம் கிடையாது. எனக்கும் சேர்த்து தான் என் இயேசப்பா சொன்னாங்க. நான் என்றும் என் தேவன் மேலேயே நம்பிக்கை வைக்கணும்ன்னு சொல்லி கொடுத்திருக்காங்க. ஏன்னா…..இன்னும் கொஞ்சம் நேரத்தில் எனக்கு என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது. நான் என் அம்மாவை, அப்பாவை பார்க்கணும்….அவங்க என் இயேசப்பா எனக்குள்ள செய்த இந்த மாற்றத்தை எப்படி உணர்வாங்கன்னு எனக்கு தெரியாதே…… ஆனா அது எதுவா இருந்தாலும்….. குட்டிமா, நான் உன் கூடவே இருக்கேன்….ன்னு உன்கிட்ட நம்ம இயேசப்பா பேசிட்டிருந்த போது, எனக்கும் என் தேவன் ஆறுதல் சொல்லுறாங்க….. அவன் சொன்ன போது …..உண்மையில் சூப்பர் வேதா….என்று மீண்டும் பாராட்ட போனவள்

    என் தேவனுடைய நாமத்திற்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக….என்று அவள் சொல்ல

    ஆமென்….என்று அவனும் சொன்னான்.

    இரு சிறு பிள்ளைகளும் தன்னுடைய தேவனை பற்றி தெரிந்து கொண்டிருந்த விதம் உண்மையில் பாட்டிமாக்கு நெகிழ்ச்சியை தருவதாக இருந்தது. ஆனால் வெளியே காட்டிக் கொள்ள அவர் விரும்ப வில்லை. அது தேவையில்லாத பெருமையை கொடுக்கும் என்பது அவருக்கும் தெரியுமே….ப்ளீஸ் இயேசப்பா, இந்த ரெண்டு பிள்ளைகளையும் நீங்கதான் பார்த்து கொள்ளணும்…..அவங்க வாழ்நாள் முழுவதும்……..மனதினில் வேண்டினார் அவர்.

    வேதா….நீ இங்க இருக்கிறது உங்க அம்மாக்கு தெரியுமா…..என்றவாறு பாட்டிமா கேட்கவும்

    நீங்க தேவையில்லாம டென்ஷன் ஆகாதீங்க பாட்டிமா…..எத்தனை பேரு நம்ம வீட்டை சுத்தி நின்னு பார்த்துட்டு இருக்காங்க. அதுனால கண்டிப்பா அம்மாக்கு இப்ப விஷயம் போயிருக்கும். இன்னும் கொஞ்சம் நேரத்தில அம்மா….இங்க வந்திருவாங்க பாருங்க…..அவன் சொன்னான்.

    இவள் தான் பயந்து போனாள். ஏன் என்று கேட்டவனுக்கு

    அம்மா உன்கிட்ட விசயத்தை கேட்பாங்களே….நீ என்ன சொல்லுவ…..என்று பதைபதைப்புடன் கேட்டவளுக்கு

    நீ எதுக்கு பயப்படுற. நம்ம இயேசப்பாதான் நாம என்ன சொல்லணும்னு ஏற்கனவே பாட்டிகிட்ட பேசும் போதே சொல்லி கொடுத்துட்டாங்களே. அதைத்தான் சொல்லணும்….அவன் ரொம்பவே ஈஸியாக சொல்லவும் இவளுக்கும் இருந்த டென்சன் குறைந்தது.

    வெளியே நிற்கிற கூட்டத்திற்கு கூட இதைத்தான் சொல்லுவியா….. என்று அவள் சத்தமாக கேட்கவும்

    அதை தான் சொல்லணும்…..அவனும் எப்பவும் போல பேச ஆரம்பித்தான்.

    பாட்டியும் இவர்கள் பேசுவதை கவனிக்க ஆரம்பித்தார்.

    ஆனா உனக்கு தெரியுமா. நம்ம இயேசப்பா நாமம் மகிமைப்படணும்னு இதை இயேசப்பா சாட்சியாக சொல்ல சொல்லி இருக்காங்க. ஆனா ஒரு பெரிய கூத்தே இதால நடந்தாலும் நடக்கும்….என்று அவன் சொன்ன போது பாட்டியும் புரிந்து கொண்டவராய் சிரித்தார். இவளுக்குதான் புரிய வில்லை.

    மலையிலதான் எனக்கு அதிசயம் நடந்தச்சுன்னு நம்ம இயேசப்பா சொல்லி இருக்காங்க…..அவன் கேட்க அவளும் ஆமாம் என்பது போல தலையசைத்தாள்.

    ஆனா அதிசயம் நம்ம இயேசப்பாவால நடந்தது என்கிற உண்மையை நம்ம மக்கள் மறந்திட்டு இந்த மலையை சாமியா கும்பிட ஆரம்பிச்சாலும் ஆச்சர்யபடுறதுக்கு இல்லை…..என்று அவன் முடித்த போது அவளும் புரிந்து கொண்டாள்.

    அவன் சொன்ன விதத்தில் மூன்று பேரும் சிரிக்க ஆரம்பித்தனர்.

    Related Post

    Categories: பைபிள் சம்பவங்கள்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    9 + two =

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>