• பைபிள் சம்பவங்கள்(குழந்தைகளுக்காக) – 21

    சாத்தானின் சிரிப்பும், சுற்றிலும் இருந்த பூதங்களின் சிரிப்பும் இன்னும் அடங்க வில்லை. வலியின் மிகுதியில் முனங்கினாள். எழும்பி உட்கார முயன்றாள். ம்கூம்….. உடலை அசைக்க கூட முடியாதவளாய் திணறினாள். குளோரி இவளை பாவமாய் பார்ப்பது அவளுக்கும் புரிந்தது.

    முகத்தில் சிரிப்பை கூட கொண்டு வர இயல வில்லை அவளால். தலையை குனிந்தவளாய் படுத்திருந்தாள்.

    மீண்டும் பூதங்கள் இவளை சுற்றி நிற்கவும் பயந்து போனாள். என்ன செய்ய போறாங்க….. மனதின் பயத்தை மறைக்க முயன்றாள். முடிய வில்லை. ஆனா போயும் போயும் இந்த பூதங்கள்கிட்டயும், சாத்தான்கிட்டயுமா நான் என்னுடைய பயத்தை காண்பிக்கணும். அன்னைக்கி இயேசப்பா ஏஞ்சல் கூட சொன்னாங்களே….. அவன் விழுந்து போன ஒரு சாதாரண தூதன். அவனுக்கே இந்த அளவுக்கு வல்லமை உண்டுன்னா அவனையே உருவாக்கின என்னுடைய தேவன் எவ்வளவு வல்லமையுள்ளவரா இருப்பார். அதுனால இனிமே இந்த சாத்தான் காண்பிக்கிற பூச்சாண்டி வேலைக்கு நான் பயப்பட மாட்டேன்….. மனதினில் தைரியத்தை வரவழைத்து கொண்டாள்.

    அவளை தூக்கி மீண்டும் சாத்தான் முன் நிப்பாட்டினர். வலியில் உடல் துடித்து கொண்டிருந்தாலும், தன் தேவன் வைத்த நம்பிக்கையினால் தைரியமாய் நிமிர்ந்து நின்றாள். இது வரை சிரித்து கொண்டிருந்த சாத்தான் கூட பேச்சிழந்து போனான்.

    உனக்கு இது வரை பட்ட அடிகளும், வேதனையும் போதாது போல….. இன்னும் என் எதிரி மேல உள்ள நம்பிக்கையால தான் இந்த திமிர்ல நிற்கிற…... ஒன்றும் அவள் பதில் சொல்ல வில்லை.

    உனக்கு அவனால் என்ன பூமியில் கொடுக்க முடிந்தது…… ஒண்ணும் இல்லையே. இதை செய்யாதே…. அதை தொடாதே…. அப்படின்னு தேவையில்லாத கட்டளைகளைதான் உனக்கு கொடுத்தான். அப்படி இருந்தும் அவன் மேல் இன்னும் உனக்கு தேவையில்லாத நம்பிக்கை….. இகழ்ச்சியாய் பேசினான்.

    அவள் என்ன சொல்லுவாள் என்று குளோரி கூட அவள் முகத்தையே பார்த்து கொண்டிருந்தாள். தன்னிடம் இல்லாத பக்தி வைராக்கியம் அவளில் ததும்மி இருப்பதை கண்டு உண்மையில் ஆச்சர்யப்பட்டாள்.

    மீண்டும் அவளிடம் அமைதி.

    இந்த நரகத்தில வந்து உன் தேவன் உன்னை காப்பாற்றுவான்னு பகல் கனவா….. கண்டிப்பா அது நடக்காது என்பதை மட்டும் நல்லா புரிஞ்சுக்கோ….சீறினான் அவன்.

    அவள் அதை ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ள வில்லை. தன் தேவன் தன்னை இந்த நேரத்தில் கூட நேசிக்கிறார் என்ற எண்ணம் மட்டுமே அவளில் சந்தோஷமாய். அன்னைக்கி இயேசப்பா ஏஞ்சல் சொன்னாங்களே …. இந்த நரகத்தில வந்த பிறகும் கூட என்னுடைய இயேசப்பா எனக்காக வேதனைப்பட்டுட்டு இருப்பார். அவர் என் மேல இத்தனை அன்பு வைக்கும் போது, நான் ஒரு பொல்லாத சாத்தானை பார்த்து ஏன் பயப்படணும்….. இவனால என்னை செய்ய முடியும். என்னை இன்னும் என்ன கஷ்டப்படுத்தி பார்க்கணும் நினைப்பானோ அந்த அளவு கஷ்டம் கொடுப்பான். ஆனா என்னுடைய இயேசப்பா என் மேல இப்பவும் வைச்சிருக்கிற அன்பை அவனால  என்ன செய்ய முடியும். முடியாது.

    என்னுடைய இயேசப்பா அன்பை பற்றி நினைக்கிறப்பவே உடல் வலி அந்த அளவுக்கு தெரியலையே. இனி அவனால என்ன செய்து என் மனதில இருக்கிற இந்த சந்தோசத்தை திருட முடியும்….. முடியாது கண்டிப்பாய்….. மனதினில் நினைத்து கொண்டாள்.

    மீண்டும் அவனுக்குள் ஆங்காரம். எழுந்து நின்று கத்த ஆரம்பித்தான். இந்த நரகமே என்னை பார்த்து பயப்படுது. ஆனா ஒரு பொடி பொண்ணு நீ உன் மனதில என்னை எந்த அளவுக்கு தூஷிக்கிற…….

    ஒன்றும் பதில் பேச வில்லை அவள். எதற்கு சாத்தான் கத்துகிறான் என்பதை புரிந்து கொள்ள முடிய வில்லையினினும், சே….. இந்த நரகத்தில கூட வந்து ஒருத்தர் சாத்தானை கதி கலங்க வைக்க முடியுதே. உண்மையில் சந்தோசப்பட்டாள் குளோரி……

    எனக்கு பதில் சொல்லாம இன்னும் எத்தனை நேரம் இதே மாதிரி அமைதியா இருக்க போற….. கேள்வியுடன் அவள் அருகில் நின்றான்.

    ஒன்றும் பேசாமல் அவன் முகத்தை பார்க்க நினைத்தாள். முழுக்க முழுக்க இருள் மட்டுமே. என்னுடைய இயேசப்பா முகம் இவ்வளவு அழகாக இருந்துச்சு. நான் தனியா இருக்கும் போது, அவர் என் அருகில் வர்ற அந்த சுகந்த வாசனை இருக்கே….. உண்மையில இப்ப கூட அது எவ்வளவு அருமையானதா இருக்குது…… அவள் நினைத்து கொண்டிருக்கும் போதே… அவள் கன்னத்தில் தன் விரல்களால் பதம் பார்த்தான் சாத்தான்.

    உண்மையில் அவள் அதை எதிர்பார்க்க வில்லை. அடிபட்ட வேகத்தில் கீழே விழுந்தாள். குளோரியும் விக்கித்து போனாள். அந்த பொண்ணு என்ன செய்ய போறாளோ……. 

    முழு உடல் நரம்புகள் அனைத்தும் ஒரு சேர இழுத்து கொண்டதை போல உணர்ந்தாள். ஆனாலும் கஷ்டப்பட்டு எழுந்து நின்றாள். வாய் அடைத்து போய் நின்றனர் அங்கிருத்த பூதங்கள் கூட……

    தன் பதட்டத்தை வெளியே காண்பிக்காதவனாய் இன்னும் நீ உன் மனதில அவனை பற்றிதான புகழ்ந்திட்டிருக்க…..

    இப்பவும் அவளுக்கு பதில் சொல்ல தோன்ற வில்லை. உன்னை என்ன செய்து துன்புறுத்தினா நீ வாய் திறப்ப….. என்று கேட்டவனுக்கு

    வழக்குக்கு விலகுவது மனுசனுக்கு மேன்மைன்னு என்னுடைய இயேசப்பா சொல்லி இருக்காங்க…… வெகு திருத்தமாய் வார்த்தைகளை உச்சரித்தாள் அவள்.

    பயங்கரமாய் சிரிக்க ஆரம்பித்தான். எல்லா பூதங்களின் பார்வையும் அவர்கள் மேல்தான் இருந்தது. குளோரி கூட அவளைதான் பார்த்து கொண்டிருந்தாள்.

    இந்த பொண்ணுக்கு தீடீர்னு இந்த அளவுக்கு தைரியம் எங்க இருந்து வந்தது….. குழம்பி போய் நின்றாள்.

    போயும் போயும் வெறும் வார்த்தைகள்….. அதன் மேல நம்பிக்கை வைச்சுதான் என்னை நீ இளக்காரமா நினைக்கிறியா……. மீண்டும் சீற ஆரம்பித்தான்.

    உனக்கும் நல்லா தெரியும். அது வெறும் வார்த்தைகள் இல்ல. என் தேவனில் இருந்து புறப்பட்ட என் இயேசு கிறிஸ்து……ன்னு.

    ஓ….. அந்த நம்பிக்கையால்தான் என்னையே எதிர்க்கிறியா. அந்த சாலொமோன் மூலமா நீ வார்த்தைன்னு சொன்ன உன்னுடைய இயேசப்பா அனுப்பின வார்த்தைதான…….. சொல்லி விட்டு மீண்டும் சிரித்தான்.

    அவள் ஒன்றும் சொல்ல வில்லை.

    அந்த சாலொமோனே இந்த நரகத்தில்தான் கஷ்டப்பட்டுட்டு இருக்கான். அதை பார்த்தும் கூட உனக்கு அந்த வார்த்தைகள் மேல அவ்வளவு நம்பிக்கை இருக்கா என்ன………. இளக்காரமாக சிரித்தான்.

    நீ என்னுடைய தேவனால் தள்ளப்பட்ட ஒரு தூதனா இருந்தும் கூட உன்னால என் தேவனுக்கு இன்னும் பயப்படமா இருக்க முடியலையே….. அப்படி இருக்கும் போது எங்களை ஒரு ராஜா/ராணி மாதிரி இந்த பூமியில நடத்திட்டு வருகிற அவர் வார்த்தையை மட்டும் நாங்க எப்படி விட்டு கொடுக்க முடியும்….. தைரியமாக பதில் சொன்னாள்.

    நானா…. உன் தேவனை பார்த்து பயப்படுறதா….. வீணா நீயா கற்பனைகள் வளர்க்காத. அது இன்னும் நீ என்கிட்டே உதைபட காரணமாக போகுது…… சொல்லி விட்டு அவள் முகத்தை பார்த்தான்.

    அவன் இத்தனை பேச்சிலும் அவள் ஒன்று கூட காதில் போட்டு கொள்வதில்லை என்பது மட்டும் புரிந்தது அவனுக்கு.

    குளோரியும் அவள் முகத்தை பார்த்தாள். அவள் முகத்தில் இருந்த திடம் அவளுக்கே ஆச்சர்யமாய் இருந்தது.

    எந்த தண்டனையும் அவள் மனதை மாற்ற முடியாது என்பதை புரிந்தவனாய் நீ சொல்லுற உன்னுடைய இயேசப்பாவே என்கிட்டே போட்டி போட முடியாம தோத்து போனவர்தான……. சிரித்தான் அவன்.

    அவன் மனம் எல்லாம் அவள் அந்த சந்தோசத்தை, நம்பிக்கையை வற்ற வைத்தால்தான் வழிக்கு வருவாள் என்பதாய் இருந்தது.

    அவள் பதில் சொல்ல வில்லை.

    மீண்டும் சீற ஆரம்பித்தான். என்ன பதிலை காணும்….. பைபிள்ல வாசித்த வார்த்தைகள் எல்லாம் மறந்து போயிருச்சா……..

    என்னுடைய இயேசப்பா உன்னை தன்னுடைய சிலுவையில் ஜெயித்த பிறகும் நீயா தோத்து போகலைன்னு உன்னை ஏமாற்றிக் கொண்டா அதுக்கு அவர் பொறுப்பில்லை…… சொல்லி விட்டு அமைதியானாள்.

    உண்மையில் இந்த பொண்ணுக்கு என்ன ஆச்சு…. இது வரைக்கும் ஒரு சாதரணமான பொண்ணா என்கிட்டே பேசினவ இப்ப என் தேவனுடைய வார்த்தைகளை என்ன அழகாக சொல்லுறா….. நான்தான் என் வாழ்கையில் விழுந்து போயிட்டேன். அட்லீஸ்ட் தற்கொலை பண்ணிக்கிறதுக்கு ஒரு நொடி முன்னாடி யோசித்திருந்தா இந்த வேதனைகளை அனுபவிக்க வேண்டியது வந்திருக்காது…… புலம்பினாள் குளோரி.

    அவள் தன் தேவன் வைத்திருக்கும் நம்பிக்கையை அசைக்க வைப்பது கடினமானது என்பதை புரிந்தவனாய் பேச்சை மாற்றினான்.

    ஆமா….. இத்தனை வேகமாய் என்னுடைய இயேசப்பா இப்படிபட்டவர்…. அவ்வளவு அழகானவர்ன்னு சொல்ல தெரிந்த நீ, ஒரு வகையில அவருக்கு உன் தப்பால சிலுவை வேதனையை கொடுத்தவதான…….. சொல்லி விட்டு அவன் சிரிக்கவும்…. விக்கித்து போய் நின்றாள் அவள்.

    இது வரை அவள் வைத்திருந்த நம்பிக்கை, சந்தோசம் எல்லாம் வற்ற ஆரம்பித்து விட்டது. நானும் என் இயேசப்பாவை என்னுடைய தப்பால சிலுவையில அறைஞ்சிட்டேனா …… அப்ப நான் பொல்லாதவ….. மற்றவங்களை சொல்ல எனக்கு என்ன யோக்கியதை இருக்கு….. என்னால தான் நீங்க கஷ்டப்பட்டீங்க……. அப்பா….. நான்தான் காரணம்……. முழுக்க உடைந்து அழ ஆரம்பித்தாள்.

    அவள் அழும் சத்தத்தை குளோரியாலும் கேட்க முடிந்தது. இது வரை நிசப்தமாய் இருந்த அந்த அறை மீண்டும் பூதங்களும், சாத்தானும் சிரிக்க ஆரம்பிக்கவும் கூப்பாடு சத்தமாய் மாறி போனது.

    இந்த சின்ன பொண்ணு என்ன தப்புக்காக வந்திருக்கான்னு எனக்கு தெரியாது. ஆனா தன்னுடைய தப்பால் தான் தன் இயேசப்பா வேதனைபடுறாங்கன்னு தெரிந்ததும் எவ்வளவு கஷ்டப்படுறா….. நானும் இருக்கேனே. இது வரைக்கு நான் இந்த அளவுக்கு கஷ்டபட்டதுக்கு எங்க அம்மா, அவன்தான் காரணம் சொல்லிட்டே இருந்தேனே…… ஆனா தப்பை துணிகரமா செய்திட்டு மற்றவங்களை குற்றப்படுத்தினது நான் தான. எங்க அம்மாதான் என்னை கண்டுக்காட்டியும் என்னை நேசிக்கிற என் இயேசப்பா என்னை தேடி எத்தனை முறை வந்தார். குட்டிமா இந்த தப்பை செய்யாத…… இது நல்லதில்லைன்னு…. எங்க அப்பா மூலமா, என்னுடைய நல்ல பிரெண்ட்ஸ் மூலமா, ஏன் அவன் பிரெண்டே சொன்னானே…. சிஸ்டர் இவனை நம்பாதீங்க. இவன் உங்களுக்கு துரோகம் பண்ணிருவான். ரொம்ப மோசமானவன்….ன்னு சொன்னப்ப அவனை என்னென்னதான் கேட்டேன். 

    இப்படி எனக்காக என் இயேசப்பா சொன்ன வார்த்தைகளை எல்லாம் அப்ப கண் இருந்து ஒரு குருடாய், காதிருந்தும் ஒரு செவிடாய் நடந்த நான் எப்படி மற்றவங்களை குறை சொல்ல முடியும். இப்ப நான் நம்புறேன் இயேசப்பா. உங்களை என் சின்ன வயதில ருசி பார்த்த அந்த சந்தோசத்தால சொல்லுறேன். நீங்க உண்மையில் ரொம்ப நல்லவங்க இயேசப்பா. நான் தவறி போன ஆடா இருந்த பிறகும் கூட என்னை தேடி நீங்க நிறைய முறை வந்தீங்க. அப்பெல்லாம் நான் எதை பத்தியும் யோசிக்காம, தப்பு, தப்பு, துரோகம்ன்னு மற்றவங்க மேலேயே என் கண்ணை வைச்சதால நான் நீங்க என்கிட்ட வந்ததை பார்க்கவே இல்லை. என்னையும் மீறி எத்தனை தடவை உங்க வார்த்தைகளை கொடுத்தீங்க. அப்ப வாழ்கையே போச்சு…. இனி நான் வாழ்ந்து என்ன செய்ய போறேங்கிற எண்ணம் மட்டும்தான் வந்துச்சு. ஆனா உண்மையில் இப்ப சொல்லுறேன் இயேசப்பா. நீங்க இன்னமும் என்னை நேசிக்கிறதை என்னால் உணர முடியுது. என் எல்லா தப்புக்கும் நான் என் முழு மனதோட மன்னிப்பு உங்ககிட்ட கேட்குறேன். சாரி இயேசப்பா……. குளோரியின் மனதில் இப்போது ஒரு தெளிவு இருந்தது.

    என்ன ஆச்சு….. இப்ப ஒரு பதிலும் சொல்லலை. என்னை மட்டும் துரோகின்னு உலகமே சொல்லுது. நீ மட்டும் என்ன பண்ணின. உன்னை அதிகமா நேசிக்கிற உன் தகப்பனை சிலுவையில் அறைந்தவதான நீ. பைபிள்ல வாசித்திறிப்பியே. ஒருத்தன் தன் தேவனுடைய அன்பை ருசி பார்த்தும் பின் வாங்கி போனால் அவனே தன் இயேசுவை சிலுவையில் அறைகிறான்னு……. சொல்லப்பட்ட வசனம் ஞாபகம் இருக்கா….. இகழ்ச்சியாய் சொன்னான்.  

    துடித்து போனாள் அவள். அப்பா….நானே உங்களை சிலுவையில் அறைஞ்சிட்டேனே….. கண்களில் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது.

    என்ன சொல்ல போற உன் தப்புக்கு….. நீ உன் தேவனை கஷ்டப்படுத்தினதை விட இந்த நரகத்தில நீ இது வரை கஷ்டப்பட்டது கொஞ்சம் கம்மிதான்…… மீண்டும் சிரித்தான்.

    ஐயோ….. இயேசப்பா உங்களை நான் ரொம்ப கஷ்டப்படுதிட்டேனே…. மார்பில் அடித்து கொண்டு அலற ஆரம்பித்தாள்.

    அவன் தன் அருகில் வருகிறான் என்பதை தெரிந்தும் அதில் கூட மனம் வைக்க முடியாதவளாய் அழுது கொண்டிருந்தாள்.

    அதுனால நீ செய்த தப்புக்கெல்லாம் நான் என்ன தண்டனை கொடுக்குறேனோ அதை அனுபவிச்சிட்டு சும்மா இரு…. இந்த வாய் ஜம்பம் வேண்டாம். தன்னை நேசித்த தேவனை வேதனைபடுத்தின உனக்கு எதுக்கு இந்த வாய்…… சொல்லி விட்டு மிகவும் நெருங்கி விட்டான்.

    அடுத்து என்ன நடக்குமோ….. பயத்தின் உச்சத்தில் குளோரி. இன்னும் அவன் அந்த சின்ன பெண்ணை நெருங்கி விட்டான் என்பதை மட்டும் தெரிந்து கொண்டாள், அடுத்து என்ன செய்ய போறான்…. மனதினில் கலக்கம் வந்தது.

    உன் இயேசப்பா உன்னை இன்னமும் நேசிக்கிறாங்க. நீ செய்த தப்பால் உன் இயேசப்பா சிலுவை வேதனைப்பட்டது உண்மைதான். ஆனா இப்ப அவர் உன்கிட்ட எதிர்பார்க்கிறது எல்லாம் உன்னுடைய வாயில் இருந்து வரபோற சாரி இயேசப்பா என்கிற வார்த்தைதான்…… சொல்ல தயங்காத…. குளோரியின் வாயில் இருந்து வார்த்தைகள் வந்ததும் அவள் அருகில் நெருங்கி கொண்டிருந்த சாத்தான் பயங்கரமாய் கத்தினான். ஆனால் குளோரியால் கூட தன் வாயை மூட முடிய வில்லை.

    அவளை பிடிச்சி அந்த சித்திரவதை ரூம்ல இருக்கிற சகதியில் தூக்கி போடுங்க….. குளோரியை வெறுப்பாக பார்த்தான்.

    பூதங்கள் குளோரியை நெருக்கியது. உன்னுடைய இயேசப்பா உன்னை இன்னமும் நேசிக்கிறாங்க. உன் தப்பை அவர் ஏற்கனவே மன்னிச்சிட்டாங்க. இந்த சாத்தான் சொன்னதை நம்பாத. அவர் இப்பவும் உன்னை எதிர்பார்க்கிறார் தன்னுடைய பிள்ளையா தன் ஊழியத்தை செய்ய….. சாரி சொல்லு…… எங்க அம்மா, அப்பாகிட்ட நான் அவங்களை இன்னமும் நேசிக்கிறேன் என்கிற உண்மையை சொல்லு…… சொல்லி கொண்டிருக்கும் போதே குளோரியை தூக்கி சென்று கொண்டிருந்தனர்.

    நடந்தவற்றை எல்லாம் நம்ப முடியாமல் பார்த்து கொண்டிருந்தாள் அவள். அந்த பைத்தியக்காரி சொல்லுறதை நம்புறியா….. இளக்காரமாக கேட்டு கொண்டே மீண்டும் நெருங்கினான். தேவ வார்த்தைகளில் நம்பிக்கை உடையவளாய் அந்த இடத்திலேயே முழங்காலில் நின்று கைகளை கூப்பினாள்.

    நீ செய்யுறது மடத்தனம்ன்னு உனக்கே தெரியலையா……. அதட்டி கொண்டே அருகில் வந்தான்.

    இயேசப்பா, நான் ரேஷ்மிமேல் உள்ள பொறாமையினால் என்னை மறந்து அந்த வார்த்தைகளை சொன்னது உண்மைதான். நான் செய்தது பெரிய தப்பு. அதுனால ரேஷ்மி பட்ட கஷ்டமும் ரொம்ப அதிகம். ஆனா என்னுடைய இயேசப்பா என்னால் நீங்க வேதனைப்பட்டது அதை விட ரொம்ப அதிகம். அதுனால என்னால நீங்க பட்ட சிலுவை வேதனைக்கு நான் தான் காரணம். என்னை தயவு செய்து மன்னிச்சிருங்க. நான் உங்களை கஷ்டபடுத்திட்டேன். என்னை மன்னிச்சிருங்க இயேசப்பா….. ப்ளீஸ். நான் திரும்பவும் எங்க அம்மா, அப்பாகிட்ட போவேனான்னு தெரியாது, ஆனா என்னை நேசிக்கிற என்னுடைய இயேசப்பா இருதயம் இன்னமும் கஷ்டப்பட நான் விட மாட்டேன். சாரி பிரெண்ட்….. என்னை மன்னிச்சிருங்க. நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏற்றுக் கொள்ளுறேன்பா. சாரி……

    சொல்லி விட்டு எழுந்து நின்றாள். ஒரு மாற்றமும் இல்லை. என்னுடைய தப்புக்கு இந்த நரகமா இருந்தாலும் பரவாயில்லை. துணிவோடு நின்றாள். சாத்தான் இவள் பக்கத்தில். இப்போது பயப்பட வில்லை. தன் வாயை அகல விரித்து அவளை விழுங்கதான் நின்றான்.

    இயேசப்பா இப்பவும் என்னை நேசிக்கிறீங்க, தேங்க்ஸ்பா. அது எனக்கு போதும். ஆனால் அவள் அந்த வார்த்தைகளை சொன்ன அடுத்த நொடி எல்லாம் மாறி போனது.

    அந்த அளவு வெளிச்சத்தை அவள் எதிர்பார்க்க வில்லை. சாத்தான் தூர விழுந்தது மட்டும் அவளுக்கு தெரியும். தன் மிதந்து கொண்டிருப்பதை போல உணர்ந்தாள்.

    மறு நிமிடம் கண் விழித்த போது தன் வீட்டில், தன் அறையில் படுத்து கொண்டிருந்தாள் அவள்.

    Related Post

    Categories: பைபிள் சம்பவங்கள்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    × four = 4

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>