• பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 39

    ஏஞ்சலின் முகத்தில் இன்னும் கவலை தெரிந்தது. கேட்கலாமா…..கேட்க கூடாதா மனதில் எண்ணங்கள் அலை மோதின. இப்படி யோசித்து மனதை போட்டு குழப்பி கொள்ளுறதை விட….நேரடியா கேட்டுருலாமே…. அடுத்து நம்மால தேவையில்லாம ஏன் இந்த மாதிரி புழுக்கள் பெருக்கம் வரணும்…..எண்ணம் கொண்டவளாய்

    ஏஞ்சல்….நான் ஒண்ணு கேட்கலாமா…. சொன்ன அடுத்த நொடியே

    லிசாபத்தி தெரிந்து கொள்ள ஆசைபடுறியா…..என்று கேட்டவுடனே

    கண்டிப்பா ஏஞ்சல்.  உங்க முகம் இந்த அக்கா கத்துறதை பார்த்து சரியே இல்லை. அது மட்டுமில்ல உங்க வேதனை என் இயேசப்பா வேதனையால வந்திருக்கும் என்பது எனக்கு நல்லா தெரியும்…..அதுனாலத்தான்….அவள் சொல்லி முடிக்க கொஞ்சம் திணற த்தான் செய்தாள். சப்போஸ் இயேசப்பா சித்தம் இல்லாம இதை பத்தி தெரிந்து கொள்ள நினைக்கிறதே தப்பான காரியம் ஆச்சே….அவள் நினைத்து கொண்டிருந்த போதே

    உன்னை நம்ம இயேசப்பா, தேவையில்லாத எண்ணங்கள் எந்த அளவுக்கு ஒரு மனிதனை வேதனைபடுத்த வல்லது என்பதை கத்து கொடுக்கத்தான் இங்க கூட்டிட்டு வந்தாங்க. நீ அனுபவித்த வேதனை மனிதன் அறிக்கையிடாம தன் பாவங்களை தன் தேவனிடம் இருந்து வைக்கும் போது, அது எவ்வளவு பெரிய விளைவை ஏற்படுத்தும் என்பதைதான் உனக்கு சொல்லி கொடுத்தாங்க…… ஏஞ்சல் சொல்லி கொண்டிருக்கும் போதே

    ஏஞ்சல் எனக்கு ஒரு சந்தேகம் உண்டா….கேட்கலாமா…..என்ற போது

    சொல்லு குட்டிமா….. ஏஞ்சல் சொன்னவுடன்

    நான் தப்புகள் பண்ணிட்டே இருந்து ஒவ்வொரு நேரமும் என் பாவங்களை அறிக்கையிட்டா அது என் தேவனுக்கு பிடிக்காத காரியம் ஆச்சே ஏஞ்சல். அப்ப என் தப்புகளுக்கும், பாவம் அறிக்கையிடுதலுக்கும், என் தேவன் என்னை மன்னிகிறதுக்கும் கண்டிப்பா ஒரு அளவு வைச்சிருப்பாங்களே. அதை பத்தி சொல்லுவீங்களா???

    நீ நம்ம இயேசப்பா சீஷர் பேதுரு மன்னிப்பை பத்தி கேட்டப்ப, அதற்கு கொடுத்த பதில்தான் அளவுகோல்.….என்ற ஏஞ்சலை ஆச்சரியமாய் பார்த்தவள்

    என் இயேசப்பா பேதுருகிட்ட சொல்லிருப்பாங்க. ஏழேழுபது தரம் சொல்லியிருப்பாங்க. அப்படின்னு கணக்கு பார்த்தாலும் கூட…..கிட்டத்தட்ட ஒரு நாள்ல நான் எனக்கு விரோதமா தப்பு பண்ணுறவங்களை 490 தடவை மன்னிக்கணுமே. அப்ப என் இயேசப்பா கூட என்னை ஒரு நாள்ல நான் 490 தடவை தப்பு பண்ணிட்டு கடைசியில போய் சாரி இயேசப்பா….ன்னு சொன்னா மன்னிச்சிருவாங்களா……கேட்டவளை பார்த்து அந்த நேரம், அந்த இடத்தில் கூட ஏஞ்சலுக்கு சிரிப்பு தான் வந்தது.

    அப்ப நான் 491வது தடவை போய் மன்னிப்பு கேட்டா, இல்லை யாராவது என்கிட்டே வந்து மன்னிப்பு கேட்டா நான் மன்னிக்க வேண்டியது கிடையாதா…..சொன்னவளை பார்த்து

    நான் இந்த பொண்ணு லிசாவை பத்தி முதல்ல சொல்லுறேன். அதற்கடுத்து உனக்கும் புரிஞ்சுக்க முடியும். ஏன் நம்ம இயேசப்பா மன்னிப்பை  குறித்து ஒரு நாள்ல 490 தடவைன்னு சொல்லி இருக்காங்கன்னு…..ஏஞ்சல் சொல்லும் போது அவளும் ஆச்சரியப்பட்டாள். நம்ம இயேசப்பா எங்களை மன்னிக்கிறதுக்கும், இந்த எண்ணிக்கைக்கும் அப்படி என்ன சம்பந்தம் வந்திர போகுது…… என்று யோசித்து கொண்டிருந்தவளை பார்த்து

    உன்னை ரொம்ப நிறைய யோசிக்க கூடாதுன்னு சொல்லி இருக்கேனே குட்டிமா. அதற்குள்ள ஏன் மறந்து போன….. உன் மனதில என்ன சந்தேகங்கள் வந்தாலும் தயவு செய்து….அந்த எண்ணம் வந்த நொடியே….வாய் திறந்து உன் இயேசப்பாகிட்டயே கேட்டிரு. அதை விட்டுட்டு அதுவா இருக்குமோ….இதுவா இருக்குமோ….நீயே கற்பனை செய்து தேவையில்லாத இந்த வேதனையை ஏற்றுக் கொள்ளாதே…..ஏஞ்சல் கொஞ்சம் கோபமாகவே சொன்னார். ஏஞ்சலின் கோபத்தில் அமைதியானாள். 

    மனதினில் வேண்டினாள்…..இயேசப்பா ப்ளீஸ்…..நான் ரொம்பவே பலவீனமானவ. எனக்கு என்னுடைய எண்ணத்தோட சண்டை போடுற அளவுக்கோ, இல்லை போராடுற அளவுக்கோ கொஞ்சம் கூட தைரியம் கிடையாது. அதுனால நீங்களே இந்த பொறுப்பை எடுத்து கொள்ளுங்க….ஆமென்  மனதினில் வேண்டினாள். மெல்லிய காற்றால் இயேசப்பா அவளோடு இடைப்படுவாங்க என்று எதிர்பார்த்தவளுக்கு ஏமாற்றம் மட்டுமே.

    கண்களில் நீர் கூட எட்டி பார்த்தது. நீ கேட்ட 490 கணக்கு இதுதான் குட்டிமா. அதுனால தப்பு செய்திட்டு இப்படி யோசித்து வேதனைப்படுவதை விட, முதல்லயே அவர்கிட்ட அதற்கான பலத்தை வாங்கலாமே???? ஏஞ்சல் சொன்ன போது வாயடைத்து போனாள். இனி என் இயேசப்பா எப்ப பேசுவாங்க….என்ற ஏக்கம் மட்டுமே அவளில்.

    உன் மனதில் தேவையில்லாத குழப்பம் வேண்டாம் குட்டிமா. ஏன்னா நம்ம இயேசப்பா இரக்கங்களும் கிருபைகளும் நிறைந்தவர். அதுனால சோர்ந்து போகாம அவர் சன்னிதானத்தை தேடு……. இன்னும் கூட அவள் முகத்தில் இருந்து சோகம் போக வில்லை. நான் என் இயேசப்பாவை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேனோ…..எண்ணங்கள் அதில் தான் இருந்தது.

    அவள் வாயில் இருந்து அந்த வார்த்தைகள் ஏன் வந்தது கூட அவளுக்கு தெரியாது. தேவனுக்கே மகிமை உண்டாவதாக…..சத்தமாக சொன்னாள். அந்த நொடியே அவள் மேல் அந்த மெல்லிய காற்று படவும் அழ ஆரம்பித்து விட்டாள்.

    எப்ப நீ நம்ம தேவனின் வல்லமையை மறந்து, காரியங்களை உன் விருப்பப்படி எடுக்குறியோ அப்ப, நம்ம தேவனால் அந்த காரியத்தில் இடப்பட முடியாது. ஆனா அதே நேரம் நீ அந்த காரியத்தில உன் தேவனின் வல்லமையை தெரிந்து கொண்டு, அவரை உயர்த்தி நீ அந்த காரியத்தின் பாரத்தில் இருந்து வெளியேறி நிற்குறியோ அப்பதான் நம்ம இயேசப்பாவால அவர் நினைத்த அந்த நேர்த்திக்கு அந்த காரியத்தை செய்ய முடியும்…….. ஏஞ்சல் சொன்ன போது உண்மையில் குழப்பம் தான் வந்தது அவளுக்கும்.

    எப்ப உன் வாய் திறமையால நீ உன் இயேசப்பாவின் மன்னிப்பை பெற முடியும் நினைச்சியோ, அப்ப உன் இயேசப்பா உன் பெருமைக்கு எதிர்த்து நின்னார் குட்டிமா. ஆனா அதே நேரம் என் இயேசப்பா என்னை மன்னிக்கிறதுக்கு ரெடியா இல்லை என்பது மட்டுமில்ல, இன்னிக்கி என் தேவன் எனக்கு மன்னித்த தப்புகளின் எண்ணிக்கை 490 அதற்குள்ள முடிஞ்சிருச்சா….நினைச்சி ஒரு நொடி உன்னை நீ தாழ்த்தின பாரு, அது நம்ம இயேசப்பா மனதை கூட உருக்கிருச்சு…..இப்ப புரியுதா….490 என்பது கணக்கில இல்லை. உன் இயேசப்பா உன்னை நினைத்து உருகி கொடுக்கிற இரக்கத்தில இருக்கு….ன்னு

    அப்ப என் இயேசப்பா என்னை மன்னிச்சது….இது 491வது தடவையா….என்று சந்தோசத்தோடு கேட்க

    யாருக்கு தெரியும் குட்டிமா….அது 1000த்தை கூட தாண்டியிருக்கும்….என்று சொன்ன போது உண்மையில் விக்கித்து போனாள்.

    ஏஞ்சல் என்னை கிண்டலடிக்க தான் இப்படி சொன்னீங்க……சிறிது அழுகையுடன் தான் கேட்டாள்.

    நீ உன் தேவன்கிட்ட நெருங்கி சேராத வரைக்கும் உன்னால எப்படி தெரிந்து கொள்ள முடியும். அவருடைய சித்தத்தையும், அதற்கு நீ எந்த அளவுக்கு கீழ்படிஞ்ச என்கிற ரகசியத்தையும்….. தெரிந்தா நீயும் சொல்லலாம். அது 10 வது தடவை….இது 79வது தடவைன்னு…..ஆனா உனக்கு தெரியுமா குட்டிமா.அப்படி நம்ம இயேசப்பாகிட்ட நெருங்கி சேருகிற ஒரு மனுஷன் கண்டிப்பா தப்பு செய்ய துணிய கூட மாட்டான். ஏன்னா அவனுக்கு தெரியும் . தன்னுடைய ஒரு சின்ன தப்பு கூட தன் தேவனை குதறடித்து விடும்ன்னு…….சொல்லி கொண்டிருந்த போதே அவள் அழுது விட்டாள்.

    சாரி இயேசப்பா.  நான் என்னமோ எனக்கு தான் எல்லாமே தெரியும் போல நினைத்து உங்களை வேதனைப்படுத்திட்டேன். உங்ககிட்ட இப்ப என்ன சொல்லி இந்த தேவையில்லாத யோசிக்கிற பழக்கதில இருந்து வெளியே வரணும்னு கூட தெரியலை பிரெண்ட். உங்களுக்கு பிடிக்காத இந்த குணத்தை உங்க பாதங்களில் வைச்சிட்டேன். ப்ளீஸ் பிரெண்ட்….தயவு செய்து என்னை காப்பாத்துங்க….. சொல்லி விட்டு அழுதாள் தன் இருதயத்திள் இருந்து.

    என் கிருபை என்றும் உன் கூட உண்டு…..அந்த மெல்லிய சத்தம் அவளால் உணர முடிந்தது. அது தன் இயேசப்பாவின் சத்தம் என்று…..சந்தோசத்தில் தான் நின்று கொண்டிருந்த இடம் என்ன என்பதை கூட மறந்து, கால் கீழ் நின்று கொண்டிருந்த அந்த புழுக்கள், பாம்புகள் மேல் அப்படியே விழுந்து தன் தேவனை தொழுது கொண்டாள். தேங்க் யூ இயேசப்பா…..உங்க அன்பிற்காக நன்றிகள் ஆண்டவரே!!! சொன்ன போது மீண்டும் மெல்லிய காற்றை உணர்ந்தாள். ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் இயேசப்பா….. சொல்லி கொண்டே இருந்தவள் கண்கள் அப்படியே தூக்கம் சொக்குவதை போல உணர்ந்தாள்.

    ஆனால் அவளை அதற்குள் கைத்தாங்கலாய் ஏஞ்சல் தூக்கினார். இப்ப சொல்லுங்க ஏஞ்சல். அந்த அக்கா லிசா பத்தி தெரிந்து கொள்ள ஆசைபடுறேன். சொல்லுவீங்களா????

    அவள் முகத்தை பார்த்து சிரித்தவர், என்ன தீடீர்னு குட்டிமா…… என்று கேட்டவருக்கு

    நீங்கதான் சொன்னீங்களே ஏஞ்சல். என்னுடைய சின்ன தப்பு கூட என் இயேசப்பாவை வேதனைப்படுத்திரும்னு. அதுனால இந்த நிமிஷத்தில் இருந்து என்னால முடிந்த வரைக்கும் என் தேவனை கஷ்டப்படுத்த கூடாதுன்னு முடிவு பண்ணியிருக்கேன்…..என்று சொல்லி அவள் சிரித்தாள்.

    ஆனா இன்னொரு உண்மையையும் உன் மனசில நல்லாவே நிறுத்தி கொள்மா.  உன் தப்புகளோ இல்லை பாவங்களில் இருந்து விடுதலை ஆகுறதுக்கு எப்படி அவர் அன்பு உதவி செய்யுதோ, அதே மாதிரிதான் உன் தேவனுக்கு உண்மையா வாழணும்னு நினைக்கிற உன் எண்ணங்கள் கூட….. உன் திறமையால் செய்ய முடியாது. அது முழுக்க முழுக்க உன் தேவன் உனக்கு கொடுக்கிற பலத்தினால மட்டுமே செய்ய முடியும்…..அதுனால அவர் பாதங்களை என்றும் இறுக பிடிச்சிக்கோ…..ஏஞ்சல் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அவள் இதயத்தில் முழுமையாய் இறங்கியது.

    இப்ப லிசா பத்தி சொல்லவா…..ஏஞ்சல் கேட்ட போது

    கண்டிப்பா ஏஞ்சல். இது எனக்கு ஒரு நல்ல படிப்பினையா இருக்கும்னு நம்புறேன்….அவள் சொன்னாள்.

    லிசா ஒரு உண்மையான கிறிஸ்தவ குடும்பத்தை சேர்ந்த பொண்ணு. அப்பா ஒரு பிரைவேட் கம்பெனியில் குடும்ப செலவுக்காக வேலை பார்த்தாலும், அடுத்த தன் நேரத்தை நம்ம தேவனின் ஊழியத்தில செலவழிக்கிற ஒரு உண்மையான விசுவாசி.  tracts கொடுக்கிறதும், தேவ நற்செய்திகள் நிறைந்த நூல்களை இலவசமாக தேவனை பத்தி தெரியாத மக்களுக்கு அவர் அன்பை எடுத்து சொல்லி அதை கொடுக்கிற ஒரு உன்னதமான ஊழியம்….. ஏஞ்சல் சொல்லுவதை கவனமாக கேட்டுக் கொண்டிருந்தாள்.

    லிசா அம்மா அந்த விசுவாச குடும்பத்தை தன் கணவனுக்கு ஒரு நல்ல மனைவியா இருந்து, தேவன் கொடுத்த நல்ல ஞானத்தினால தாங்குற நல்ல ஸ்திரி. அவளுக்கு கொடுத்த இரண்டு தம்பிமார்கள் கூட தேவனுக்குள் பயந்து வாழுற நல்ல பிள்ளைகள். இந்த அளவுக்கு நம்ம தேவனுடைய அன்புக்கு கீழ்படிந்திருந்த அந்த குடும்பத்தின் நிம்மதியை கெடுக்கிற மாதிரி ஒரு குடும்பம் அவங்க குடும்பம் பக்கத்தில குடி வந்தது.

    பெண் பிள்ளைகள் தன் பக்கத்து வீட்டு ஆட்களோட எந்த அளவுக்கு பழகணும் என்கிற காரியத்தில அம்மாமார்கள் எந்த அளவுக்கு விழிப்பா இருக்கணும் என்பதை லிசா அம்மா கண்டு கொள்ள மறந்து போயிட்டாங்க. பக்கத்து வீட்டுல இருக்கிறது வெறும் பெண் பிள்ளைகள் தானன்னு அப்ப தான் டீன் ஏஜ்ஜின் முடிவில இருந்த லிசாவை தாராளமா பழக விட்டுட்டாங்க. அதுனுடைய விளைவு தான் இது……ஏஞ்சல்  சொல்லி கொண்டிருந்த போது, அவர் கண்களிலும் எட்டி பார்த்தது. இப்படி ஏஞ்சல் கூட அழுற அளவுக்கு அப்படி என்னதான் நடந்துச்சு…..மனதினில் கேட்டு கொண்டாள்.

    அந்த வீட்டில் இருந்த பெண் பிள்ளைகளோட பழகின பழக்கத்தில லிசா கத்து கொண்டது, தேவையில்லாத கதை புக் வாசிக்கிற பழக்கம்….. அவர் சொன்ன போது….

    அதுனால தான் எனக்கும் அந்த அக்கா வேதனைப்பட்டு கொண்டிருந்த கஷ்டத்தை அனுபவிக்க வேண்டியதா போச்சா….ஆனா ஒரு கதை புக் வாசிக்கிற பழக்கம் இந்த அளவுக்கு….என் இயேசப்பா, ஏஞ்சல் கூட வேதனைப்படுற அளவுக்கு அவ்வளவு கஷ்டத்தை கொடுக்க முடியுமா என்ன….அவள் யோசித்து கொண்டிருந்த போதே…

    ஒரு டிவி பார்த்த பழக்கம் தன் வாழ்கையை எந்த வகையில பாதிச்சதுன்னு  குளோரி சொன்னதை நீயும் கேட்டியே குட்டிமா. அதை விட ரொம்பவே ஒரு மோசமான காரியத்தை தான் லிசா வாழ்கையில் செய்தது.  ஆரம்பத்தில இதை கண்டு கொள்ளாத லிசா அம்மாக்கு இந்த விஷயம் தெரிந்தப்ப ரொம்பவே வேதனைப்பட்டாங்க. ஆனா விசயம் தெரிந்து கண்டித்த சமயம், அதை எல்லாம் தாண்டின நிலைமையில போயிட்டா என்பதை மட்டும்தான் அவங்களால்  தெரிஞ்சுக்க முடிஞ்சது.

    முழுமையா கதை புத்தகம் படிக்கிற காரியத்தில் ஒரு பைத்தியக்காரி தான் மாறி நடந்து கொள்ள ஆரம்பிச்சா.  தன் படிப்பை மறந்து, தான் இது வரை நேசித்த தன் தேவனை மறந்து ஒரு கற்பனை வாழ்கையில் நடந்து கொள்ள ஆரம்பித்தா. அவளுடைய கற்பனை வாழ்கையில் அவளுடைய தேவன் அவளுக்கு கொடுத்த வார்த்தைகள் அவள் இருதயத்தை கூட தொட முடியாத வண்ணம் அந்த கதைகள் அவள் இருதயத்தை மயக்கி வைச்சிருந்தது…..கண்கள் இருந்தும் குருடராயும், காதுகள் இருந்தும் செவிடாகவும் அவள் நிலைமை மாறி போன பின்பும் கூட அவ அம்மாவால தன்  பொண்ணை கண்டிக்க கூட முடியலை. கதையில் படித்த தேவையில்லாத வசனங்களை வெளியே சொல்லி பயமுறுத்த ஆரம்பிச்சா.

    ஒரு பக்கம் தன் பொண்ணு இந்த மோசமான நிலைக்கு போயிட்டாளே…ங்கிற வேதனை. இன்னொரு பக்கம் அவளுடைய இந்த நிலைமைக்கு தான்தான் காரணம் என்கிற குற்றஉணர்வு கூட லிசா அம்மாவை காயப்படுத்த ஆரம்பிச்சது. அது வரை நம்ம இயேசப்பா அன்புக்குள்ள சந்தோசத்தில் திளைத்திருந்த அந்த குடும்பம் தன் பொண்ணு வெறித்தனமான செயல்களால்  ரொம்பவே ஆட்டம் கண்டது. …..என்று ஏஞ்சல் சொல்லி கொண்டிருந்த போது…அதென்ன வெறித்தனமான செயல்கள்…. அவள் நினைத்து கொண்டிருந்த போது

    இதுவரை எந்த காரியமா இருந்தாலும், அதற்காக பொறுமையா காத்திருந்து பெற்றுக் கொண்ட லிசா, இப்ப பிடிவாதம், கோபம்,  பொறாமை….எல்லாம் சேர்ந்த பொண்ணா ஆயிட்டா. அவளுடைய எல்லா காரியத்திலும் ஒரு முரட்டு தனம் தெரிய ஆரம்பிச்சிருச்சு……. ஏஞ்சல் சொல்லி கொண்டிருந்த போது

    ஆனா ஏஞ்சல்…இந்த தூரம் ஒரு பொண்ணால மாற முடியுமா என்ன???? அவள் கேட்ட போது

    நம்ம இயேசப்பா பைபிள்ல சொல்லியிருக்காங்களே …..பிசாசுக்கு இடம் கொடாமல் இருங்கள்…..ன்னு. இடம் கொடுத்தா என்னெல்லாம் ஆகும்னு நீ தெரிந்து கொள்ள ஆசைபடுறியா??? நம்ம இயேசப்பா உனக்கு வேலியா இருக்கும் வரைக்கும் தான் உன் வாழ்கையில் என்றும் சந்தோசம் குட்டிமா. ஆனா நீயே சாத்தானை  வருந்தி அழைச்சா என்ன ஆகும் தெரியுமா???  ஒரு சில நன்மைகளுக்காக பொல்லாத பிசாசுகள்கிட்ட உடன்படிக்கை பண்ணி கொள்ளுற மனிதர்கள் வாழ்க்கை எந்த அளவுக்கு ஆகியிறிக்குன்னு கேள்வி பட்டிருக்கியா??? தலை அசைத்து இல்லை என்று சொன்னாள்.

    ஏதோ ஒரு சில இடத்தை பிடித்து கொள்ள மட்டும் அவன் வர்றதில்லை குட்டிமா. முழுமையா வாரி கொள்ள, அதாவது அந்த மனிதனை நரகத்தில இழுத்துட்டு செல்ல தான் வர்றான்…..ஆனா அந்த உண்மையை தெரிந்து கொள்ள முடியாத அந்த மனிதன் இந்த உலகத்தை மறந்து, அவன் சொல்லுற பேச்சுக்கு கீழ்படிந்து, தன்னை தானே எல்லார் முன்னிலையிலும் அவமான ப்படுத்தி கொள்ளுறாங்க…….ஏஞ்சல் சொன்ன போது அவளும் புரிந்து கொண்டாள்.

    ஆனா தீடீர்னு ஆச்சரியம் என்னன்னா இது வரை ரொம்பவே முரடா நடந்து கொண்ட லிசா சாப்டா நடந்து கொள்ள ஆரம்பிக்கவும் உண்மையில் அவளுடைய அம்மாவும், அப்பாவும் சந்தோசபட்டாங்க. தன் பொண்ணை இயேசப்பா மாத்திட்டாங்கன்னு நினைச்சிட்டு இருக்கும் போது தான் அந்த விபரீதம் நடந்தது.  அவளுடைய தம்பிமார்கள் மூலமா அவள் ஒரு பையனை காதலிக்கிற காரியம் தெரிஞ்சது உண்மையில் பெரிய அதிர்ச்சியை கொடுத்தது அவங்களுக்கு.

    ஆனா ஒரு விசுவாசியா நடந்து கொள்ள வேண்டிய நேரத்தில தன் உணர்ச்சிகளுக்கு அடிமையாகி அவளுடைய அம்மாவும், அப்பாவும் அவளை கடிந்து கொள்ள அதை பொறுத்து கொள்ள முடியாதவ, வீட்டில இருந்து வெளியேறிட்டா. தன் கண்களுக்கு முன்பு வெளியேறி போனவளை அவளுடைய காலில் விழுந்து கூட கெஞ்சி பார்த்தாங்க அவளுடைய அம்மா. ஆனா எதற்கும் அவள் மசியலை. பொண்ணு சரியா வளர்க்க தெரியலைன்னு அழுது கொண்டே தான் இருக்க முடிந்தது அவ அம்மா, அப்பாவால.

    காதல், கல்யாணம்ன்னு கற்பனையில் வெளியேறி போனவ, தீடீர்னு அவள் காதலிச்ச பையன் சும்மாதான் உன் கூட பழகினேன்ன்னு சொல்ல மனம் உடைந்து போனா. தான் கடைசியா படிச்ச கதையும், அவளுடைய வாழ்க்கையிலும் நடந்ததும் ஒத்து போக, அந்த கதையின் முடிவைதான் தானும் எடுத்துட்டா. என்னன்னு உனக்கு புரிஞ்சிருக்கும் குட்டிமா. கடைசியா அவ எடுத்த முடிவு….. தற்கொலை…..ஏஞ்சல் சொல்லவும் உண்மையில் உடைந்து போனாள் அவள்.

    ஆனா அவளில் இருந்த கேள்வி…..இப்படி கூடவா படிச்ச கதையில் எடுத்த முடிவை தானும் எடுப்பாங்க….அவ்வளவு தூராம் ஒரு மனிதனை இந்த கற்பனை காரியங்கள் முடிவெடுக்க வைக்க முடியுமா??? அவள் யோசித்து கொண்டிருந்த போது…அவளுடைய எண்ணங்களை தெரிந்து கொண்டவராய்

    குட்டிமா….பார்த்த சினிமாவில் நடக்கிறதை உண்மைன்னு நம்பி அதுல நடிச்சவங்களுககாக இப்பவும் முகத்தில, தோள்ல்ல அவங்க பேரை பச்சை குத்துற கூட்டம் இன்னும் இருக்கே…..அவங்களுக்கு பிடிச்ச ஆக்டர் படம் முதல் நாள் வந்திட்டா பெரிய கட் அவுட்கள் வைச்சி பால் அபிஷேகம் நடத்துறதை பார்த்தில்லையா குட்டிமா…..தான் அபிமானம் வைச்சிருக்கிற ஏதாவது அரசியல் தலைவர்களுக்கு ஏதாவது பிரச்சனை நடந்திருச்சா….தீ குளிக்கிற கூட்டமும் இன்னும் உண்டே….. அடுத்து தான் விரும்புற ஸ்போர்ட்ஸ் ஸ்டார்க்கு ஏதாவது மற்ற புள்ளிகளோட பிரச்சனை வந்திட்டா அந்த எதிரிகளோட வீட்டுக்கு போய் ஆராஜகம் செய்யுறவங்க இருக்காங்களே. இதை எல்லாம் யார் நடத்துறாங்க தெரியுமா….மனிதனுக்கு நம்ம தேவன் கொடுத்த ஞானத்தை கொஞ்சம் கூட உபயோகிக்க முடியாத அளவுக்கு அவர்களை உணர்ச்சிகள்  மத்தியில சிக்க வைச்சிருக்கிற சாத்தனின் தந்திரம் தான் காரணம்…… இப்ப புரியுதா குட்டிமா. வெறும் சினிமா….பொய் உலகம்ன்னு கூட தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு ஒரு மனிதனை அவனுடைய எண்ணங்கள் மயக்கும் போது….கற்பனை உலகத்தின் சஞ்சாரத்தில் இருக்கும் ஒரு பொண்ணு தன் வாழ்க்கை போயிருச்சுன்னு நினைக்கும் போது, மனம் உடைந்து போன நிலைமையில நம்ம இயேசப்பாவை பற்றி புரிந்து கொள்ள முடியாத நிலைமையில் அவளை அது வரை வேதனைபடுத்தின, வழி நடத்தின அதே கற்பனை கதைகள் தான் அவளுடைய மரணத்திற்கும் வழி நடத்துச்சு….. இப்ப புரிந்து கொள்ள முடியுதா குட்டிமா….ஏஞ்சல் சொல்ல

    நிஜ வாழ்கையில் கூட இத்தனை காரியங்கள் நடக்குதா என்ன….சாத்தான் இந்த அளவுக்கா இருக்கும்….மனிதர்களை தன் வசபடுத்திகொள்ள முடியும்….அவள் நினைத்து கொண்டிருந்த போதே….

    உன்னுடைய பொறாமை எண்ணங்களால் ரேஷ்மி கஷ்டப்பட்ட போது, உன்னுடைய குற்ற மனச்சாட்சி உன்னை கடிந்து கொண்டப்ப நீயே உன் தப்புக்கு தப்பான தீர்ப்பு எழுதினியே…..இயேசப்பாவின் நிழலில் இருந்த உன்னையே சாத்தான் குற்ற மனச்சாட்சியால் நரகத்துக்கு இழுத்துட்டு போகும் போது, கற்பனை உலகத்தில வாழ்ந்து கொண்டிருந்த பொண்ணை சாத்தான் ஏமாற்றுறது எத்தனை அதிகம்….உண்மையான காரியமும் கூட……

    புரிந்து கொண்டாள் அவள். எந்த ஒரு ஆபத்தான சாத்தானின் தந்திரத்தில் லிசா மாட்டி கொண்டாள்…..அந்த நேரத்தில் கூட மனம் திறந்து சொன்னாள்….நான் கூட அப்ப நினைச்சேன் இயேசப்பா. ஒரு சாதாரணமான கதை புத்தகம் காரியத்திற்காக என் இயேசப்பா இப்படி புழுக்கள் கடிக்கிற வேதனையை அனுபவிக்க விட்டுட்டேங்களேன்னு….. ஆனா இப்ப புரியுது இயேசப்பா. நீங்க கத்து கொடுத்த பாடத்திற்காக நன்றிகள் ஆண்டவரே!!!! ஆமென்……என்று ஏஞ்சல் சொன்ன அடுத்த நொடி கண்களை திறந்து பார்த்த போது, தன் வீட்டில் தன் படுக்கையில் படுத்து கொண்டிருந்தாள் அவள்……

    கற்பனை உலகம்….என்னைக்கும் எனக்கு வேண்டாம் இயேசப்பா….ப்ளீஸ்…..அவள் கதறி அழுத போது அவள் சத்தத்தை அவளுடைய அம்மாவால தெளிவாக கேட்க முடிந்தது….. அவள் அறையில் நுழைய வந்தவர், ஒன்றும் சொல்லாமல் அப்படியே திரும்பி போனார்.

    தன் பொண்ணுக்கு இயேசப்பா ஏதோ ஒரு பாடம் கற்றுக் கொடுத்திருக்காங்க என்பது மட்டுமில்ல அவளுடைய கதறலின் மூலமா அது ரொம்பவே முக்கியமானது என்பது மட்டுமே அவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது…..இயேசப்பா…ஒரு அப்பாவா நீங்க அவள் வாழ்கையில் இருந்து அவளை நடத்தும் எல்லா காரியத்திற்காகவும் நன்றிகள் ஆண்டவரே…. ஆமென்….அவள் சொல்லி கொண்டிருந்த போது, அவள் அம்மாவின் அருகில் கூட .ஒரு ஏஞ்சல் நின்று ஆமென் சொல்லுகிற காட்சியை அவளால் பார்க்க முடிந்தது. அம்மா பார்ப்பதற்கு முன் வேகமாக தன் ரூமில் நுழைந்தாள் அவள்…..

    இயேசப்பா, அம்மா பக்கத்தில் கூட ஏஞ்சல் இருந்தாங்க……சந்தோசத்தால் அவள் சொல்லி கொண்டிருந்த போதே…..சொல்லாதே குட்டிம்மா……சத்தம் தனக்குள் இருந்து வந்ததை புரிந்து கொண்டாள் அவள். இயேசப்பாவின் சத்தம்……கண்டிப்பா இயேசப்பா. உங்க வார்த்தைக்கு கீழ்படியுறேன்…..ஆமென்….மனதினில் ஆழமாக சொன்னாள்.

    Related Post

    Categories: பைபிள் சம்பவங்கள்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    four − = 2

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>