• பைபிள் சம்பவங்கள்(குழந்தைகளுக்காக) – 5

    படுக்கையில் திரும்பி திரும்பி படுத்தாள். தூக்கம் வந்தபாடில்லை. உண்மையில் ஏஞ்சல் வந்தாங்களா? இல்லை நானாதான் அப்படி யோசித்து பார்த்தேனா?

    எவ்வளவு தூரம் யோசித்து பார்த்தும் பதில் கிடைக்க வில்லை. இயேசப்பா ஒண்ணும் புரியலை. இன்னிக்கி காலையில prayer பண்ணுற நேரம் நீங்க என் மேல மெல்லிய காற்றா வந்தது நிஜம். ஆனா ஏஞ்சல் வந்து என்னை, நீங்க உலகத்தை படைக்கிற நேரத்தில கூட்டிட்டு போய் கண்ணார பார்க்க வைத்தது, நான் எதுவும் கனவு பார்த்திருப்பேனோ? சப்போஸ் அது நிஜம்ன்னா இனிமே எப்ப திரும்பவும் என் தேவனை பார்ப்பேன்?

    மீண்டும் மனதில் வேதனை தொட்டதை உணர்ந்தாள். என்னுடைய இயேசப்பாக்கு ஏற்கனவே இந்த சந்தேகம் என்கிற காரியம் பிடிக்காது. நான் எதுவும் சந்தேகப்பட கூடாது.

    தூங்க நினைத்தாள். கண்களை சிறிது, சிறிதாக தூக்கம் தழுவ ஆரம்பித்தது. மீண்டும் தீடீர்னு பிரகாசம். மனதுக்குள் சந்தோசம் பரவ ஆரம்பித்தது. நான் என் இயேசப்பாவை பார்க்க போறேன். நினைத்து கொண்டிருக்கும் போதே, ஏஞ்சல் வந்து புன்னகையுடன், ஹாய் குட்டிமா, நல்ல தூக்கமா?

    ஆமான்னு சொல்ல மாட்டேன் ஏஞ்சல். உண்மையில் தேவையில்லாத விசயங்களை பத்திதான் யோசித்திட்டு இருந்தேன். ஆனா தேங்க்ஸ் lord. எதுவும் அதை பத்திய எண்ணங்கள் கனவில வரலை. நீங்களே வந்துட்டீங்க.

    என்ன எண்ணங்கள் நீ நினைச்சிட்டிருந்தன்னு எனக்கும் தெரியும். ஆனா உன்னை மாதிரி உள்ள தேவ பிள்ளைகள் கூட தேவன் தங்களுக்கு கொடுக்கிற நல்ல ஆசீர்வாதங்களை சப்போஸ் தவறுதலா எதுவும் நடக்கதோன்னு நினைச்சே அதை நழுவ விடுறாங்க.

    எனக்கு புரியலை ஏஞ்சல். ஆசீர்வாதங்கள் அடுத்து அதை நம்ப மறுக்கிறது என்னால புரிந்து கொள்ள முடியலை.

    உன் தேவன் உன்னை அழைத்த அழைப்பை சந்தேகப்பட்டது உண்மைதான.

    வேதனையோடு தலை கவிழ்ந்தாள். தப்புதான் ஏஞ்சல். ஆனா இந்த மாதிரி சந்தேகமோ குழப்பங்களோ இனிமே வராம இருக்கணும்ன்னா என்ன செய்யணும்?

    தேவனுடைய சந்நிதானம் மட்டுமே அடைக்கலம். இது சப்போஸ் கனவா இருக்குமோன்னு குழப்பிட்டு இருந்த அந்த நேரம் நம்ம இயேசப்பாவையே கேட்டிருக்கலாமே. இயேசப்பா இந்த மாதிரி குழப்பம் வருது. நீங்க சொல்லுங்க. இந்த குழப்பத்தை தீர்த்து வைங்கன்னு சொன்னா அவர் தன்னுடைய வார்த்தையால உனக்கு புரிய வைக்க மாட்டாங்களா?

    சாரி ஏஞ்சல். என்னை மன்னிச்சிருங்க. இயேசப்பா நீங்க என்னை முதலில் மன்னிச்சிருங்க. நான் இனிமே என் வாழ்கையில் இந்த மாதிரி எந்த குழப்பங்கள் வந்தாலும், நம்ம தேவன் சந்நிதானத்தை மட்டுமே தேட எனக்கு உதவி செய்யுங்க இயேசப்பா.

    இனி நாம நம்ம தேவன் வெளிப்படுத்துற சத்தியங்களை தெரிந்து கொள்ள போகலாமா?

    கண்டிப்பா ஏஞ்சல், போகலாம்.

    கண்ணிமைக்கும் நேரத்தில் மீண்டும் நேற்று நின்று கொண்டிருந்த இடத்திற்கே வந்து சேர்ந்தார்கள்.

    தேவன் இவர்களுக்காகவே காத்திருந்த மாதிரியே அவளுக்கு தோணியது.  

    இன்னைக்கி நம்ம தேவன் உருவாக்கப்போற காரியங்களுக்காக காத்திருக்கேன் ஏஞ்சல். ஏன்னா நம்ம தேவன் இரண்டாவது நாள்தான வானம் படைத்தாங்க.

    சொல்லிக் கொண்டிருந்த நேரம் தேவனுடைய வார்த்தைகளின் வல்லமையை அவளால் உணர முடிந்தது. ஏஞ்சல் நம்ம தேவன் நம்ம பைபிளில் சொல்லப்பட்டிருக்கிற வானத்தை உருவாக்கும் சம்பவம் நடக்கப் போகுது.

    இந்த ஜலத்தின் மத்தியில் ஆகாய விரிவு உண்டாகக்கடவது என்றார்.

    ஒரு போர்வையை போன்ற பொருள் முழுமையா குழுமி இருந்த தண்ணீரின் மத்தியில் உருவான மாதிரி தோன்றியது அவளுக்கு.

    ஏஞ்சல் நம்ம தேவன் சொல்லும் போது ஒரு போர்வை மாதிரி நாம இருக்கிற இந்த தண்ணீர் மத்தியில் உருவானதை பார்த்தீங்களா?

    ஆமா குட்டிமா, இனி என்ன நடக்குது என்பதையும் தெளிவா பாரு.

    அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றார்.

    தேவன் வாயில் இருந்த அந்த வார்த்தைகள் வந்ததும், அந்த போர்வை போன்ற பொருள் இருந்த தண்ணீரை இரண்டாக பிரித்தது மட்டுமில்ல அந்த போர்வை தண்ணீரை அள்ளிக் கொண்டு மேலே நோக்கி நகர்வது போல தெரிந்தது.

    ஏஞ்சல் இது என்ன? ரொம்பவே அதிசயமா இருக்கு.

    நீயும் முழுமையா பார்க்க ஆசைபடுறியா?

    கண்டிப்பா.

    மேலே நின்று கொண்டிருந்த அவளுடைய கரங்களை பற்றி கொண்டு கீழே பறக்க ஆரம்பித்தார்.

    ஏஞ்சல் நாம இப்ப எங்க போறோம்?

    குட்டிமா இப்ப நாம நின்றது நம்ம தேவனால் உண்டாக்கப்பட்ட ஆகாயவிரிவு என்கிற பகுதிக்கு மேல.

    அப்ப நாம வானம்ன்னு சொல்லுற பகுதிக்கு மேலதான் இருக்கோமா?

    ஆமா.

    நம்ம தேவனுடைய பிள்ளை பவுல் என்பவர் தன்னை பற்றி சொல்லும் போது, மூன்றாவது வானம் வரை எடுக்கப்பட்டதா சொல்லி இருக்கிறார். அதுமட்டுமில்ல வானத்தை பற்றி ஆராய்ச்சி செய்யுற ஆராய்ச்சியாளர்கள் ஒரு பொருளை நாம மேல தூக்கி எறிஞ்சா அது ஒரு பகுதிக்கு மேல போன பிறகு மிதக்க ஆரம்பிச்சிடும்னு சொல்லுறாங்க. ஆனா அந்த பொருளை மட்டுமில்ல அதை மிதக்க பண்ணுகிற எந்த ஒரு விசையா இருந்தாலும், வானத்தின் தனித்துவமா இருந்தாலும், அதை கண்டுபிடித்தே ஆவேன் கங்கணம் கட்டிட்டு தேடுற அவங்க, ஒரு நொடி தன்னை அமைதிபடுத்தி விடை தேடினா பதில் தெரிந்து கொள்ள முடியுமே. இத்தனையும் படைத்தது நம்ம ஆண்டவர்ன்னு……….

    பேசி கொண்டிருக்கும் போதே வானத்தின் கீழ் பகுதிக்கு வந்து விட்டார்கள்.

    இந்த மாதிரி பறக்கிறது ரொம்பவே நல்லா இருக்கு ஏஞ்சல். பறவைகள் கூட இப்படித்தான பறந்திட்டே இருக்காங்க.

    தேவனின் சத்தம் மீண்டும் ஒலித்தது. ஏஞ்சல் நம்ம தேவன் இந்த ஆகாயவிரிவுக்கு வானம்ன்னு பேரு வைச்சிட்டாங்க.

    ஆமென்……தலை கவிழ்ந்து ஏஞ்சல் தேவனுக்கு துதிகளை செலுத்தினார். அவளும் தலை கவிழ்ந்து தேவனுக்கு துதிகளை செலுத்தினாள்.  

    Related Post

    Categories: பைபிள் சம்பவங்கள்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    1 × = four

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>