• பைபிள் சம்பவங்கள்(குழந்தைகளுக்காக) – 7

    என்னமா, தூங்கி எழும்பும் போதே, ரொம்ப டயர்டா இருக்க. தூக்கம் சரியில்லையா? அம்மாவுடைய கேள்வியில் இருந்த அன்பு சந்தோசத்தை அளித்தது அவளுக்கு.

    இல்லைமா, அப்படி ஒண்ணும் கிடையாது. இன்னைக்கிதான் இந்த மாதத்துக்கான டெஸ்ட் ஆரம்பிக்குது. இன்னைக்கி உள்ள டெஸ்ட்க்கு ரொம்ப தெளிவா படிச்சதா தோணலை. அதுனாலத்தான் யோசித்திட்டு இருக்கேன்.    

    இப்பவும் உன் மன பாரங்களை ஷேர் பண்ணுறதுக்கு உனக்குதான் நம்ம இயேசப்பா இருக்காங்களே. அவர்கிட்ட உன்னுடைய எந்த எண்ணங்களா இருந்தாலும்  சொல்லு. அவர் உனக்கு நல்ல வழியை வெளிப்படுத்துவார்.

    ஆனா என்னுடைய இயேசப்பா, படிக்காம இருந்து டிமிக்கி கொடுக்கிற காரியங்களை என்றும் ஊக்கப்படுத்த மாட்டாரே. தன்னுடைய பிள்ளைகள் அவர் கொடுக்கிற வேலைகளை ரொம்பவே சந்தோசமா, அதுவும் அவர் கொடுத்த பலத்தினால் நேர்த்தியா செய்யணும்னு ஆசைபடுவாரே. எனக்கு நேற்று படிக்கிறதுக்கு கொடுத்திருந்த பகுதி கஷ்டமா தோணுச்சு. முதல்லயே என் இயேசப்பாகிட்ட கேட்டிருந்தா அவர் எனக்கு உதவி செய்திருப்பார். அந்த பகுதியை நான் ஈஸியா புரிந்து கொள்ள வைச்சிருப்பார். அப்பெல்லாம் விட்டுட்டு, கடைசி நேரத்தில ஐயோ….என்ன செய்யப்போறேன்னு இப்ப நான் புலம்புறதால என்ன மாற்றங்கள் நடக்க முடியும்.

    நீ சொன்னது சரிதான் குட்டிமா. ஏன்னா தேவ பிள்ளைகள் கூட தன்னுடைய தேவனுடைய வார்த்தையை தேட வேண்டிய சமயத்தில இந்த உலக காரியங்களுக்கு முதலிடம் கொடுத்திட்டு, அடுத்து வந்து ஐயோ….அப்ப என்னுடைய இயேசப்பா என்னை ஜெபிக்க கூப்பிட்டது/ பைபிள் வாசிக்க சொன்னது என்னுடைய நல்லதுக்குன்னு தெரியாம போச்சே. இப்ப தேவையில்லாம கஷ்டப்படுறேன்னு புலம்புறது உண்டு.

    ஆமா அம்மா. நான் கூட அப்படிதான. என்னுடைய இயேசப்பாவுடைய உதவியை கேட்க வேண்டிய நேரத்தில தேவையில்லாத காரியத்தில கவனத்தை செலுத்திட்டு இப்ப என் இயேசப்பா முகத்தில போய் எப்படி முழிப்பேன்? இயேசப்பா எனக்கு நேற்று படித்த போர்ஷன்ஸ்ல இந்த கேள்வி மட்டும் தெரியலை. இந்த கேள்வி மட்டும் வரக் கூடாதுன்னா கேட்க முடியும்?

    ஆனா உனக்குள்ள பரிசுத்த ஆவிப்பா கூப்பிடுகிற காரியங்களை அசட்டை பண்ணுறது அதை விட பெரிய தப்பு குட்டிமா.

    எனக்கு புரியலைமா!!!!

    இந்த நேரமாச்சும் அவர் உதவியை கேளுன்னு பரிசுத்த ஆவிப்பா உன்னை கூப்பிடுகிறாரே?

    அம்மா, இந்த உலகத்தில வாழுற வரைக்கும் என் தேவனை பற்றி நினைக்காம இருந்துட்டு கடைசி, அதுவும் சாக போற நேரத்தில இயேசப்பா என்னை மன்னிச்சிருங்க. உங்க பிள்ளையா தான் சாக ஆசைபடுறேன்ன்னு சொல்லுற மாதிரி இல்லை. ஒவ்வொரு நிமிசமும் குட்டிமா…..குட்டிமான்னு அவர் கூப்பிடுகிற சத்தத்தை அசட்டை பண்ணிட்டு, செத்து போற இடம் மட்டும் பரலோகமா இருக்கணும்னு ஆசைபடுறது ரொம்பவே பேராசைதானமா.

    ஆனா அப்படிபட்டவங்களுக்கு இரக்கம் பாராட்டுறதும் இல்லை விட்டு விடுவதும் நம்ம தேவனின் தீர்மானம். அதில நீ ஏன் தலையிடுற? ஜாக்கிரதை குட்டிமா, நம்ம தேவனுக்கு இந்த காரியம் கண்டிப்பா பிடிக்காது. இந்த உலகத்தை விட்டு போற வரைக்கும் தேவனை தேடாத மக்களை நம்ம தேவனின் பேர்ல கடிந்து கொள்ளறதுக்கு அதுவும் நம்ம இயேசப்பா permission கொடுத்தா கடிந்து கொள்ளலாம். ஆனா அவர்களை என்றும் ஜட்ஜ் பண்ணுறதுக்கு நம்ம தேவன் என்றும் permission கொடுக்க மாட்டார்.

    இப்ப நான் என்ன செய்யணும்ன்னு சொல்லுங்கமா.

    முதலில் துன்மார்க்கர் குறித்து உன் மனதில இருக்கிற தேவையில்லாத பொறாமைகளை எடுத்து போட நம்ம இயேசப்பா உதவியை நாடு. அடுத்து உன்னுடைய படிக்க முடியலைன்னு நீ நினைக்கிற பகுதியை புரிந்து கொள்ளுறதுக்கு நம்ம இயேசப்பா உதவியை நாடு. ஏன்னா இப்ப கூட உனக்கு உதவி செய்ய நம்ம இயேசப்பா வல்லமையுள்ளவரா இருக்கார்.

    சாரிமா, நான் உங்களையும் கஷ்டப்படுத்திட்டேன். என் இயேசப்பா மனதையும் என்னுடைய எண்ணங்களாலும், வார்த்தையாலும் ரொம்பவே கஷ்டப்படுத்திடேன். கண்டிப்பா என் இயேசப்பாகிட்ட prayerல மன்னிப்பு கேட்பேன். அடுத்து அந்த பகுதியை திரும்பியும் உட்கார்ந்து படிப்பேன் என் தேவனின் துணையோட.

    துன்மார்க்கர் மேல பொறமைபடுறதோ இல்லை பாவிகளை குறித்து எரிச்சல் அடையுறதோ நீ மட்டும் இல்லை குட்டிமா, உன்னை மாதிரி உள்ள தேவ பிள்ளைகளுக்கும் வருகிற காரியம்தான். ஏன் தேவனுடைய பரிசுத்தவான்கள் கூட இதுல அகப்பட்டது உண்டு.

    உண்மையா அம்மா?

    உண்மையா. ஆனா இதை பத்தி பிறகு நாம பேசுவோம். ஏன்னா இது நீ நம்ம இயேசப்பாகிட்ட பேச வேண்டிய நேரம். அதுனால முதல்ல முகம் கழுவிட்டு போய் நம்ம தேவன் சந்நிதானத்தில உட்காரு. அடுத்து நீ படிக்க வேண்டியதை படிச்சு முடி. அடுத்து இதை பத்தி பேசலாமே.

    முகம் கழுவ பாத்ரூமில் நுழைந்தவளையே பார்த்து கொண்டிருந்தவர், தேவா, உம்முடைய வார்த்தைகளையும், அதின் அர்த்தங்களையும் நீங்க இந்த மாதிரி உள்ள சிறு குழந்தைகளுக்கு வெளிபடுத்துவதற்காக கோடி நன்றிகள்பா.

    சமையல் அறையில் நுழைந்து வேலைகளை பார்த்து கொண்டிருந்தவருக்கு, மிதமான இசையில் தேவ வார்த்தைகள் நிரம்பிய பாடல் முழுமையான சமாதானத்தை கொடுத்து கொண்டிருந்தது.

    அப்பா, அவருடைய வேலையில் பிஸியாக இருந்தார். இன்னைக்கி அப்பாவுடைய ஆபிஸுக்கு  வெளிநாட்டுல இருந்து கஸ்டமர்ஸ், ஒரு முக்கியமான மீட்டிங்க்கு வரப் போறதால, அதற்கான தகவல்களை தன்னுடைய கம்ப்யூட்டரில் பதித்து கொண்டிருந்தார். அப்பா என்றும் பிஸியான ஆளாக இருந்தாலும் அவளோடு நேரம் செலவழிக்கிறதில தயங்கியதே கிடையாது. அப்பாக்குத்தான் அவருடைய ஆபிஸ்ல நிறைய மீட்டிங் கலந்து கொள்கிற வண்ணம் இருக்கும். அது மட்டுமில்ல அவளுடைய அப்பாவும் நிறைய மீட்டிங் எடுத்ததும் உண்டு. எப்போதாவது அம்மாவிடம் அப்பா, இந்த காரியங்களை பற்றி ஷேர் பண்ணும் போது அவளும் கேட்டிருக்கிறாள். தேவனுடைய கிருபையால, இன்னைக்கி மீட்டிங் நல்ல படியா முடிஞ்சுச்சு. நம்ம இயேசப்பா நம்ம மேல ரொம்பவே கிருபையா இருக்கிறார். எல்லாவற்றிலேயும் ஜெயம் தருகிறார்ன்னு. சில நேரம் சப்போஸ் தேவையில்லாத பிரச்சனைகள் வந்தா கூட, இன்னைக்கி நம்ம இயேசப்பா இந்த காரியத்தில ஒரு நல்ல படிப்பினையை கொடுத்தாங்கன்னு மட்டும்தான் அப்பா சொல்லி அவள் கேட்டதுண்டு. இந்த மாதிரி ஒரு மன நிறைவை நம்ம இயேசப்பாதான் எங்க அப்பாக்கு கொடுத்திருக்காங்கன்னு அவள் யோசித்து, தேவனுக்கு நன்றிகள் சொல்லி கொள்வாள்.

    அது மட்டுமில்ல உண்மையில் அவளுக்கு தன்னுடைய அப்பாவை ரொம்பவே பிடிக்கும். ஏன்னா என்னைக்கும் அப்பா அவளை வார்த்தையில் கூட கடிந்து கொண்டதா அவளுக்கு ஞாபகம் இல்லை. ஆனா அம்மா, சில நேரம் அதுவும், அவளுடைய தப்புகளோ இல்லை சில பிடிவாதங்கள் எல்லை மீறும் போதும் மட்டுமே. மற்றபடி எப்பவும் ஒரு புன்னகையான முகம் அவளுடைய அம்மாவுக்கு.

    அவளுடைய பிரண்ட்ஸ் கூட அடிக்கடி அவளை பார்த்து பொறாமைப்பட்டதும் உண்டு. எங்க அம்மா, அப்பா உங்க அம்மா, அப்பா மாதிரி கிடையாது. எப்ப பார்த்தாலும் அவங்களுக்குள்ள ஏதாவது சண்டை நடந்திட்டு  இருக்கும். அது மட்டுமில்ல, சில நேரம் அவங்க சண்டையில் நாங்க எந்த தப்பும் பண்ணாட்டி கூட அடிகள் வாங்கினதும் உண்டு. அம்மா, அப்பாகிட்ட உட்கார்ந்து ஒரு பிரெண்ட் மாதிரி பேசுறதா……. அதெல்லாம் எங்களுக்கு ஒரு கனவு மாதிரிதான். ஆனா உங்க வீட்டுக்குள்ள வந்தாலேயே ஏதோ ஒரு புரிந்து கொள்ள முடியாத அமைதி, சந்தோசம் மனதில தோணுது. அதுவும் உங்க அம்மா எங்களுக்கு இயேசப்பா பற்றி பேசுற நேரங்கள் எங்களுக்கு ரொம்பவே பிடித்த நேரம். இன்னும் எங்களுக்கு இயேசப்பாவை பற்றி தெரிந்து கொள்ள ஆசை. அதுனால கண்டிப்பா உங்க வீட்டுக்கு எப்பவும் வருவோம்.ன்னு சொல்லும் போது என்றும் மனதுக்குள் தன் தேவனுக்கு நன்றிகள் சொல்லி கொள்ளுவாள்.

    தன்னுடைய அறையில் தேவனுக்கு ஸ்தோத்திரங்கள் செலுத்தி கொண்டிருந்தவள், இயேசப்பா நீங்க என்னுடைய வாழ்கையில ரொம்பவே நிறைவானவரா இருக்கீங்க. தேங்க்ஸ்பா. நீங்க கொடுத்த எல்லாவற்றிக்காகவும் நன்றிகள் இயேசப்பா. துக்கங்களோ, துயரங்களோ, இல்லை வேதனைகளோ, சோதனைகளோ உங்ககிட்ட நான் இன்னும் நெருங்கி சேர உதவி செய்யுதுன்னு புரிந்து கொள்ள உதவி செய்யுங்க. அது மட்டுமில்ல அந்த நேரத்தில நீங்க என் கூடயே இருக்கிறதை நான் என்றும் மறந்து போகாத வண்ணம் எனக்குள்ள உங்க ஆவியானவரை தாங்க. நான் என் வாழ்நாள் முழுவதும் உம்முடைய பிள்ளையா, உமக்கு செவி கொடுக்கிற பிள்ளையா, உங்களுக்கு கீழ்படிகிற பிள்ளையா வாழ வழி காட்டுங்க. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கெஞ்சி கேட்கிறேன் என் ஜீவனுள்ள பிதாவே, ஆமென்.

    Related Post

    Categories: பைபிள் சம்பவங்கள்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    + nine = 10

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>