• பைபிள் சம்பவங்கள் ( குழந்தைகளுக்காக ) – 19

    தூங்கி அவள் எழுந்த போது அந்த அறை காலியாக இருந்தது. எனக்கு என்ன ஆச்சு……..நான் சாலொமோன் ராஜாவை அந்த பூதங்கள் கஷ்டப்படுத்துறதைதான பார்த்திட்டு இருந்தேன்…..அப்ப தீடீர்னு எனக்கு எப்படி தூக்கம் வந்தது……….சுற்றிலும் நோட்டம் விட்டாள். ஒன்றையும் காணும். சாலோமோன் ராஜாவை எங்க தூக்கிட்டு போனாங்க……மற்றவங்களையும் காணுமே…….தலையை குழப்பி கொண்டாள்.

    மெதுவாக எழுந்தவள் நடக்க ஆரம்பித்தாள். எங்க போணும்……நான் போற பாதையில பூதங்கள் வந்து…….எங்க போன……ஓட பார்க்குறியா…..ன்னு கேள்வி கேட்டா என்ன செய்வேன்……மனது முழுக்க கேள்விகளோடு நடக்க ஆரம்பித்தாள்.

    அறையில் இருந்து வெளியே வந்தவளுக்கு முன் இருந்த பாதை குழப்பத்தை மட்டுமே தந்தது. ரொம்பவே சிக்கலான பாதைகள். இந்த பாதை இந்த இடத்திற்கு போகும் என்ற தெளிவு வேறு அவளிடத்தில் இல்லை. சப்போஸ் இதுல ஏதாவது ஒரு பாதை, அந்த சாத்தான் இருக்கிற இடத்திற்கே என்னை கூட்டிட்டு போயிட்டா என்ன செய்ய…….மனதினில் கேள்விகள் இருந்ததேயன்றி பதில்கள் கிடைக்க வில்லை.

    சரி, நீங்க விட்ட வழி இயேசப்பா……முழு நம்பிக்கையாய் ஒரு பாதையை தேர்ந்தெடுத்து அதில் நடக்க ஆரம்பித்தாள். வழியில் எந்த பாம்போ…..இல்லை இவளை காயப்படுத்துற விலங்குகளோ இல்லாதது அவளுக்கு பெரிய நிம்மதியை கொடுத்தது.

    ஆமா…..இந்த பாதையில் போனா என்ன வரும்…..யோசித்து கொண்டே நடையை துரிதப்படுத்தினாள். நேரே அந்த பாதையும் ஒரு குகையில் தான் முடிந்தது. என்ன இயேசப்பா……இந்த குகையில யாரை பார்க்க போறேனோ…..தெரியலை…….மனதினுள் புலம்பினாள்.

    அந்த குகையும் கந்தக தீயினால் ஜொலித்தது………உள்ளே நுழைந்த போது கந்தக தீ மிகவும் உயரமாய் எரிந்து கொண்டிருந்தது. முனகல் சத்தம்…..எதுவும் இல்லாமல் ரொம்பவே அமைதியாய்……. அவளுள் ஆச்சர்யம் தாங்க முடியவில்லை.

    என்ன இயேசப்பா, இங்க யாரும் கத்தலை……ரொம்பவே அமைதியாய்……நான் நினைக்கிறேன்…..இங்க யாரும் இருக்க மாட்டாங்க போல…….கொஞ்சம் நேரம் இருந்து பார்க்கலாம்…..மனது சொன்னாலும்…..ஆனா யாரும் சத்தம் கொடுக்கவே இல்லை…..யாரும் இல்லாம இருந்தா நின்னு வெயிட் பண்ணுறது வேஸ்ட்……மனதினில் யோசித்து கொண்டிருந்த போதுதான்……தீ அவளையும் விட்டு வைக்க வில்லை. ஐயோ……என்னது இது என்னையும் கஷ்டப்படுத்துது…….சிறுது விலகி நின்றாள்……..தீ உயரமாகி கொண்டே இருந்ததே தவிர நிற்க வில்லை…… அதற்கு மேல் அங்கு நிற்க அவளுக்கு பொறுமை இல்லை……

    ஐயோ, பாம்பு……...உள்ளே இருந்து சத்தம் வரவும் திடுக்கிட்டு நின்றாள். என்ன சத்தம் கேட்குது……….நிற்கலாமா…….யோசித்து கொண்டிருந்த போது…….தீடீரென்று தீ முழுமையாய் இறங்கியது. யார் இருக்காங்க…….. ஆர்வத்துடன் எட்டி பார்த்தவளுக்கு எலும்பு கூடைதான் பார்க்க முடிந்தது….இது ஒண்ணும் நமக்கு புதுசு கிடையாதே……..இன்னும் கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணினா யார்னு பார்த்திரலாம். பொறுமையாக நின்றாள். ஆனா இந்த எலும்பு கூடு சின்னதா இருக்கே…..சப்போஸ் என் வயசில உள்ள பொண்ணா இருக்கும் போல…..மனதினில் யோசித்து கொண்டே பார்க்க ஆரம்பித்தாள்.

    எலும்பு கூட்டின் மேல் சதை வளர ஆரம்பித்தது. ஒவ்வொரு பகுதியாய் அந்த சதை வளரவும் ஐ….கை வந்திருச்சு…..இப்ப கால் வந்திருச்சு……இதோ கண்ணு வரப்போகுது……சொல்லி கொண்டே ஆர்வத்துடன் ரசித்து பார்த்தாள். அழுகின மாம்சம்தான் அவளால் புரிந்து கொள்ள முடிந்தது……ஆனா முழு உருவமும் உண்டான போதோ அவள் மயக்கம் போடாத குறைதான்……

    ஏனென்றால் அங்கு நின்று கொண்டிருந்தது அவள் உருவம்தான்…….. நானா…….திரும்பியும் தன்னையே பார்த்து கொண்டாள். முன் இருந்த உருவத்தையும் பார்த்தாள். கொஞ்சம் கூட மாற்றம் இல்லை. ரெண்டும் ஒரே மாதிரியா இருந்தது. சப்போஸ் என்னை போலவே இயேசப்பா வேறொரு பொண்ணையும் படைச்சிருப்பாங்க போல……. ஆனா கொஞ்சம் கூட மாற்றம் இல்லாம என்னை மாதிரி இருக்கே…..கண்ணாடியில் நின்னு பார்த்தா கூட இவ்வளவு தெளிவா இருக்குமா……யோசித்து பார்த்தாள்.

    ஆனா இயேசப்பா….நரகத்தில என்னை மாதிரி உள்ள சின்ன பிள்ளைகள் கூட இருக்காங்களா என்ன……நான் நரகத்தை பத்தி கேள்விப்பட்டப்ப இதுல ரொம்ப சின்ன குழந்தைகள்தான் இருக்க மாட்டாங்கன்னு சொன்னாங்களே…..ஆனா இங்க பாருங்க….என்னை மாதிரியே உள்ள ஒரு பொண்ணு…..நான்…..இப்படி இங்க கூட சின்ன பிள்ளைகள் இருக்காங்க……எங்க அம்மா சொன்னது ஞாபகம் வந்துருச்சு……..நரகத்தில அட்லீஸ்ட் 12 வயது உட்பட்ட பிள்ளைகள் இருக்க மாட்டாங்கன்னு அம்மா சொல்லி கேள்விப் பட்டிருக்கேன்……ஆனா அப்படி இருந்தாலும் எனக்கு 12 வயது முடியலையே……அப்ப நான் ஏன் இங்க வந்தேன்……அவள் சொல்லி கொண்டிருக்கும் போதே அவள் மன சாட்சி அவளை குத்தியது…..

    நீ எதற்காக இங்க வந்திருக்க…..ன்னு அதுக்குள்ள மறந்திட்டியா…..அவளுக்கு புரிந்தது. நான் மறந்தே போனேன்…..நான் ரேஷ்மி விசயத்தை எப்படி மறந்தேன். தன்னையே திட்டி கொண்டாள். சரி இந்த பொண்ணு எதற்காக இங்க வந்திருக்கான்னு தெரிஞ்சுக்குவோம்…… மீண்டும் அந்த பொண்ணை பார்க்க ஆரம்பித்தாள். ஒன்று கூட வாய் திறந்து பேச வில்லை. அப்படியே நின்று கொண்டிருந்தாள். சுற்றிலும் இருந்தவற்றை மட்டும் பார்த்தாள். அழுதாள். ஏன்…..சத்தம் இல்லாம இந்த பொண்ணு அழுறா…..சப்போஸ் அழுதா சாத்தான் வந்து கஷ்டப்படுத்திருவானோன்னு பயமா……பதிலை தேடி பார்த்தாள். பதில்தான் கிடைக்க வில்லை.

    நாம பேசி பார்க்கலாமா……யோசித்து கொண்டிருந்த போது அந்த பொண்ணு நின்று கொண்டிருந்த இடம் கீழே போக ஆரம்பித்தது…..என்ன ஆச்சு….இந்த பொண்ணு தீடீர்னு பள்ளத்திற்கு போறா…….உண்மையில் அவள் எட்டித்தான் பார்க்க வேண்டியது வந்தது…………கொஞ்சம் பள்ளம்தான்…..ஆனா இதென்ன…..பள்ளத்தில் என்ன இருக்குது…….ஏதோ பசை மாதிரி இருக்குது………. அந்த பசை போன்ற தண்ணீர் இருந்த போதும் அதிலும் கூட கொஞ்சம் கொஞ்சம் தீ கங்குகள் அவளுக்கு தெரிந்து……என்னது இது…….இப்படி இருக்கு…..இது என்ன பள்ளம்….அந்த பொண்ணு அந்த பசையில மிதந்திட்டு இருக்கா…….

    மிதக்க தெரியாதவளாய் அடிக்கடி அந்த பொண்ணின் தலை அந்த பசையில் மூழ்கி மூழ்கி எழுந்தாள். உண்மையில் இது என்னது…..புரியலை…..இயேசப்பா……இந்த பொண்ணு எதுலதான் மிதந்திட்டிருக்கா…….. இன்னும் கொஞ்சம் ஆழத்திற்குள் போனாள். அந்த இருட்டிலும் அந்த பொண்ணின் முகம் அவளுக்கு சரியாக தெரிந்தது……. எப்படி மறக்க முடியும்….தன்னுடைய முகத்தை போலவே இருக்கே…..நினைத்து கொண்டாள்…….

    ஒரு பெரிய பாம்பு அந்த பசையில் மிதக்க ஆரம்பித்தது. ஐயோ….பாம்பு…..இவள்தான் வெளியே இருந்து கத்தினாள். அந்த பொண்ணு அப்பவும் சத்தம் கொடுக்காமல் அமைதியாய்  இருந்தாள். ஏன் இந்த பொண்ணுக்கு வாய் பேச தெரியாதோ….இத்தனை கஷ்டம்….வேதனை வந்த பிறகும் கூட. அவளுக்கும் கூட அந்த பொண்ணின் மேல் கோபம் வர ஆரம்பித்தது.

    அடுத்த விசயத்தை பார்த்தவள் தலை சுற்ற ஆரம்பித்தது. அந்த பெரிய பாம்பு…..இது கூட மலை பாம்பு மாதிரி பெருசா இருக்கே……..அந்த பொண்ணின் வாயில் நுழைய ஆரம்பித்தது…….வாய் பெருசாகவே கிழிந்தது…..இரத்தம் போல ஏதோ ஒன்று அந்த பொண்ணின் வாயின் இரு சதையும் கிழியும் போது வடிந்தது……அந்த பொண்ணு எந்த சத்தமும் எழுப்ப வில்லை. முழு பாம்பும் அவள் வாய்க்குள் சென்று கொண்டிருந்தது………தலை வேறு அந்த பசையில் மூழ்கி மூழ்கி எழும்பியது.

    இந்த பொண்ணுக்கு இது எதுவும் வலிக்கலையா……………..மனதினில் அவள் நினைத்து கொண்டாள். இவ்வளவு சின்ன பொண்ணா இருக்கா…..ஆனா இதை எப்படி அவளால் தாங்கிக்க முடியுது…….. உண்மையில் இந்த பொண்ணுக்கு மன பலம் அதிகம் போல………………. மீண்டும் அந்த பாம்பு அவள் வாய் வழியாகவே வெளியே வந்தது……… இந்த நேரத்தில இந்த பொண்ணு எத்தனை தடவை கத்திருக்கணும்…..ஆனா ஒரு உணர்ச்சியை காண்பிக்காம அப்படியே மண்ணு மாதிரி இருக்கா……அந்த பொண்ணை திட்ட தான் நினைத்தாள்….

    மீண்டும் அந்த பொண்ணு மிதந்து கொண்டிருந்த பசை மாதிரி உள்ள இடம் மாயமாய் மறைந்தது. திரும்பியும் அவள் இடத்திற்கே வந்தாள். வலியை தாங்க முடியாதவளாய் அந்த சிறுபெண் அந்த இடத்தில் அமர்ந்து அழ ஆரம்பித்தாள். மீண்டும் காலடி சத்தத்தை அவளால் கேட்க முடிந்தது…..

    அட்லீஸ்ட் இப்ப பூதங்கள் வந்தா தெரிஞ்சிரும் இந்த பொண்ணை பற்றி……… மனதினுள் அவள் நினைத்து கொண்டிருக்கும் போது, அந்த பொண்ணு தன் கண்ணீரை அவசரமாக துடைத்தாள். சின்ன சின்ன பூதங்கள்தான் தூரத்தில் வந்து கொண்டிருந்தது……நான் நினைச்ச மாதிரிதான் போல…..சின்ன பிள்ளைகளுக்கு சின்ன பூதங்கள் போல………

    எங்கேயும் ஒழிய வேண்டும் என்ற எண்ணங்கள் கூட இல்லாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தது அப்பொழுதான் அவளுக்கும் புரிந்தது. வேகமாகவே இடத்தை தேடி பார்த்தாள்…..ம்கூம்…..ஒன்றும் புலப்பட வில்லை. சுற்றிலும் நோட்டம் இட்டாள். நோ….இன்னையோட நான் தொலைந்தேன்….மனதினுள் நினைத்து கொண்டாள்…..சப்போஸ் அந்த பூதங்கள் கண்ணில தெரியாமல் வெளியே போக முடிஞ்சா….

    அதற்குள் அவைகள் உள்ளே நுழைந்து விட்டன. ஒன்றும் புரியாமல் அந்த பூதங்களை பார்த்தாள். பூதங்கள் அவள் இருந்த திசையை எட்டி பார்க்க கூட இல்லை. இதுல ஆச்சர்யம் என்னன்னா அந்த பூதங்கள் ரெண்டு பேரும் கொஞ்சம் நேரத்திற்கு முன் வரை இவளை பாதுகாத்து கொண்டிருந்தவை…… உண்மையில் ஆச்சர்யம்தான் அவளுக்கு….. இத்தனை பெரிய உருவமாய் நான் நின்னாலும் இவங்களுக்கு என்னை ஏன் தெரியலை…….. அவர்கள் முன் கூட நின்று பார்த்தாள்.

    ம்கூம்…..அவர்கள் அவளை கண்டு கொள்ளவே இல்லை. எனக்கு என்ன ஆச்சு……அப்ப சாலொமோன் ராஜாக்கு முன்ன நின்னப்ப கூட அவரும் என்னை பார்க்கலை. அங்க நின்ன பூதங்கள்…..அடுத்து அந்த விஸ்தாரமான ரூம்…..எல்லாத்திலயும் நான் நின்னதை ஏன் யாரும் பார்க்கலை…..பார்க்கலையா….இல்லை என்னை பார்க்க முடியலையா….. தன்னை மீண்டும் பார்த்தாள். ஒன்றும் யோசிக்க முடியாதவளாய் அவர்கள் முகத்தையே பார்த்து கொண்டு நின்றாள்.

    இந்த பூதங்கள் அந்த பொண்ணை பார்த்து ஒன்றும் சொல்ல வில்லை. அமைதியாய் நின்றன. அந்த பொண்ணும் ஒன்றும் பேச வில்லை. என்னோட இருந்த பூதங்கள் நல்ல பூதங்கள் போல…..இந்த பொண்ணையும் எதுவும் கஷ்டபடுற மாதிரி கூட பேசலை…..பூதத்தில என்ன நல்லது, கெட்டது……ன்னு அவள் மனது அவளை பார்த்து சிரித்தது.

    சரி கிளம்பலாமா….ஒரு பூதம் தான் கேட்டது….

    எங்க…….அந்த பொண்ணு அப்பொழுதான் வாய் திறந்து பேசினாள்.

    சாத்தான் உன்னை கூப்பிட்டு வரச் சொல்லி இருக்கான்……….மற்றொன்று அமைதியாய் சொல்லியது.

    சரி, போகலாம்….. அந்த பொண்ணு மீண்டும் வாய் திறந்தாள்.

    இந்த பொண்ணுக்கு சாத்தானை பார்த்து பயமே இல்லையா…….எவ்வளவு ஈஸியா சொல்லிட்டா…..இவள் தனக்குள் திடுக்கிட்டாள்.

    மீண்டும் அவளை இங்கே கூட்டிட்டு வந்த பூதம் தான் பேசியது…..இங்க இருக்கிற ரொம்ப பேரு, எப்பவும் அழுதிட்டு, கத்திட்டு தன் தண்டனையை அனுபவிக்கிறாங்க……ஆனா நீ மட்டும் எதுவும் சொல்லாம கத்தாம…..ஏன்…..

    இவள் மனதினுள் ஒரு சந்தோசம்………..அப்பாடா இது வரை என்கிட்டே இருந்த கேள்விக்கு பதில் கிடைக்க போகுது…..பெருமூச்சு விட்டாள்.

    நான்…….என்னுடைய தப்பினால்தான இங்க வந்தேன்……..ஒரு முறை தேம்பி தேம்பி அழுதாள். இவளுக்கும் கண்ணீர் வந்தது.

    நல்ல பொண்ணு போல…..தெரியாம தப்பு பண்ணிட்டு என்னை போல இங்க வந்திருக்கா…..அந்த பொண்ணின் மேல் இவளுக்கும் பரிதாபம் தோன்றியது.

    நான் ஒரு சின்ன சின்ன பொண்ணை…..அதுவும் என்னை நம்பி….எங்க மாமா பொண்ணு ரேஷ்மியை என்னுடைய வாயாலேயே கொன்னுட்னேனே…..அப்ப எனக்கு இந்த தண்டனை தேவையான ஒன்றுதான….. சொல்லி விட்டு மீண்டும் அழுதாள்.

    உண்மையில் இவை அனைத்தும் கேட்டு கொண்டிருந்த அவளுக்கு தலை சுற்றுவது போல தோணியது.

    அப்ப இது நான்தானா….அந்த பொண்ணு நான்னா….அப்ப இந்த உருவம் இது யாருக்குள்ளது……தன்னுடைய கையை பிடித்து பார்த்தாள். பிடிக்க முடிய வில்லை. ஏன் எனக்கு என்ன ஆச்சு…….என்னுடைய கையை பிடிக்க முடியலை. முழுக்க வேறுபட்ட உணர்வை அடைந்தாள்.

    மனுஷனுடைய உடல்ல ஆவின்னு ஒண்ணு உண்டுன்னு பைபிள்ல சொல்லப்பட்டிருக்கே…..அப்ப நான் இருக்கிறது ஆவின்னா….அந்த பொண்ணு நானாத்தான் இருக்க முடியும். அதுனாலதான் நான் இறந்த பிறகும் என்னுடைய இந்த உருவத்திற்கு அழுகின உடம்பு கிடைக்கலை. ஆனா அந்த பொண்ணு உருவத்தில அழுகின உடம்பு இருக்கே……..மீண்டும் அழுதாள்.

    உனக்கு வலிக்கவே இல்லையா…..ஒரு பூதம் கேட்கவும்…..

    நான் சின்ன பொண்ணுதான……என்னால் வலியை தாங்கிக்கவே முடியலை…..ஆனா இது நான் செய்த தப்புக்குன்னு தண்டனையா இருக்கிறதால ஒண்ணும் செய்யாம இருக்கேன்……என்னுடைய வாயை பார்த்தீங்களா…..அந்த பாம்பு பிய்ச்சிருச்சு…..

    பூதங்கள் அருகில் வந்து பார்த்தன…..இவளும் பார்த்தாள்……வாயில் இருந்து உள்ளே வரைக்கும் அந்த பாம்பு போய் வந்த பெரிய ஓட்டை தெரிந்தது. உள்ளே ஆயிரக்கணக்கில் புழுக்கள் அவள் உடம்பில் விளையாடி கொண்டிருந்தன…… அப்பொழுதுதான் ஒரே பெரிய புழு அவள் உடம்பை பெரிய துளையாக போட்டு வெளியே வந்தது…..வேதனை பொறுக்க முடியாதவளாய் கத்தினாள். கீழே படுத்து அங்கும் இங்கும் புரண்டாள். எல்லா புழுக்களும் கீழே விழுந்தன…… விழுந்த புழுக்கள் மீண்டும் அவசர அவசரமாக அவள் உடம்பில் ஏற ஆரம்பித்தது…….. அதிகமாகவே கத்த ஆரம்பித்தாள் அந்த சிறு பெண்ணும்…..அவளும் சேர்ந்து அழுதாள்…. ..

    தலை சுற்றுவதை உணர்ந்தாள். ம்கூம்….முடியலை……சொல்லி முடிப்பதற்குள் நின்ற இடத்திலேயே மயங்கி விழுந்தாள் அவள்.

     

    [தயவு செய்து பெற்றோர்களே! இன்னமும் நரகம் இருக்கா, பரலோகம் இருக்கான்னு உங்க மனதினில் ஆராய்ச்சி செய்திட்டிருகிறதை விட்டுட்டு உங்க பிள்ளைகள் நரகத்தில வந்து இதே மாதிரி வேகாம இருக்க அவர்களை உங்க தேவன் அன்புக்குள் நடத்துங்க, ப்ளீஸ்……..

    நரகம் உண்டு என்பதும், அதில் ஏராளமானவர் வெந்து கொண்டிருப்பதும் நம்ம இயேசப்பாவே தான் இருந்த காலத்தில் சொல்லி இருக்காங்க. பழைய ஏற்பாடு புத்தகத்திலும் நரகத்தை பற்றி குறிப்புகள் சொல்லப்பட்டிருக்கு. நாம எவ்வளவுதான் நம்ம பிள்ளைகளுக்காக உபவாசம் பண்ணி, அவர்களை குறித்து நம்ம தேவன்கிட்ட வரங்களை பெற்றுக் கொண்டாலும் பிள்ளைகளை நடத்த வேண்டிய வழியில் நடத்து…..ன்னு இயேசப்பாவே சொல்லி இருக்காங்க. அதுனால உங்க பிள்ளைகளை அவருடைய அன்புக்குள் வளர்க்கிற பலத்தை அவர் சந்நிதானத்தில் தினமும் கெஞ்சி கேளுங்க. பிள்ளைகள் தேவ வார்த்தைகளில் தவறும் போது, அவர்களுக்காக தேவ சந்நிதியில் கெஞ்சும் அந்த நேரத்தில அவர்கள் கண் முன்பு, அவர்கள் செய்த தவறை சுட்டி காண்பித்து, தேவ வார்த்தைகளை சொல்ல தயங்காதீங்க………. குழந்தைகள் நம்ம கர்த்தரால் கிடைத்த சுதந்திரம்……..அந்த சுதந்திரம் என்றும் நரகத்தை நோக்கி செல்ல அனுமதிக்காதீங்க…… தேவன்கிட்ட உங்க குழந்தைகளை முழுமையாய் ஒப்புவிக்கிற அதே அன்பு, அவர்களுக்காக திறப்பின் வாசலில் நிற்கவும், அவங்க தவறுகளை சுட்டி காண்பிக்கிறதில தயங்காம இருக்கவும் நமது தேவனாகிய கர்த்தர்தாமே உங்களுக்கு பலத்தை கொடுப்பாராக, ஆமென்.] 

    Related Post

    Categories: பைபிள் சம்பவங்கள்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    two × 7 =

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>