-
பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 17
இவளில் ஏற்பட்ட எந்த மாற்றங்களையும் புரிந்து கொள்ளாத பூதங்கள் தன்னுடைய பேச்சை நிறுத்த வில்லை.
ஆமா, நீ சொல்லுறது சரி. ஆனா இந்த அளவுக்கு நம்ம தேவனுடைய குமாரன் விரும்புறார்னா, அவர் எப்படி இவளை இங்க வருறதுக்கு விட்டார். அடுத்த பூதம் கேள்வி கேட்கவும்
அது என்னுடைய தப்புதான். நான் என்னுடைய தேவையில்லாத குணத்தால இங்க வர வேண்டியதா போயிருச்சு. என் இயேசப்பா மேல எந்த தப்பும் இல்லை. அவர் என்னை நேசிக்கிற தகப்பனா இருந்தாலும் நியாயம்ன்னு வரும் போது, அதை விட முடியாதவர். நான் தான் காரணம்…..ஓங்கி கத்த தோன்றியது அவளுக்கு.
அது நமக்கெல்லாம் தெரிந்த விசயம்தான். தேவன் சட்டத்தை உருவாக்கினவரா இருந்தாலும் அதை விட்டு விலகாத நீதி பரரும் கூட. அந்த ஒரே ஒரு ஆயுதத்தை எடுத்துத்தான சாத்தான் இங்க ஏரளாமான ஆத்துமாக்களை கொண்டு வந்திட்டு இருக்கான். உண்மையில் இந்த மனிதர்கள் பாவம் தெரியுமா…..
ஏன் இப்படி சொல்லுற. எனக்கே இப்ப தோண ஆரம்பிச்சிருச்சு. நம்ம வாழ்கை ஒரு வாழ்கையே கிடையாது. நம்மளை காட்டிலும் இவங்க என்ன அவ்வளவு பாவமானவங்களா!!!!! கண்டிப்பா கிடையாது. அழகான உலகம். அதுல இவங்களுக்கு எத்தனை விதமா அவர் எல்லா காரியங்களையும் பார்த்து பார்த்து பண்ணுறார். அது மட்டுமில்ல அவங்க ஓட்டம் வெற்றியா முடியும் போது, பரலோகத்தில இவங்களை அணைத்து கொள்ளத்தான் அவர் இருக்காரே. இந்த மாதிரி ஒரு இளவரசன்/இளவரசி வாழ்க்கை வாழுற இவங்க எந்த விதத்தில பாவமானவங்கன்னு சொல்லுற?????
நீ சொல்லறது எல்லாம் சரிதான். நம்மளுக்கு எந்த வகையிலும் இந்த மாதிரி வாய்புக்கள் கொடுக்காம அவங்களை தாங்கி நம்ம தேவன் பிடிக்கிறதால உண்மையில் அதிர்ஷ்டசாலிகள் தான். ஆனா அவங்களை எப்பவும் தள்ளி விடத்தான் சாத்தான் இவங்க பக்கத்திலேயே இருந்து போராடிட்டு இருக்கானே. சாத்தானை பத்தி தெரிந்த உனக்கு இப்ப புரிந்திருக்கும்.
நீ சொல்லுறது இப்ப புரியுது. நாம நம்ம தேவன் கொடுத்த ஆதி மேன்மைகளை நாமளாத்தான், நம்ம மடதனத்தினால்தான் இழந்து போனோம். ஆனா இவங்க அதை பெற்றுக் கொள்ளாம இருக்க சாத்தான் இருக்கானே. அதை மறந்தே போனேன். தான் வாழ முடியாத பரலோக ராஜ்யத்தில் அவன் நம்ம தேவன் நேசிக்கிற மக்களை விடுறதில்லை.
ஆனா கண் கெட்ட பிறகு இப்படி நாம யோசித்து என்ன ஆகபோகுது. ஒண்ணும் ஆகப் போறதில்லை. ஆனாலும் இந்த மனிதர்களுக்கு நம்ம தேவன் அவங்க பூமியில இருக்கிற நாள் வரைக்கும் எத்தனை முறை வாய்ப்புகள் கொடுத்து தன் பக்கம் வர வைக்க பிரயாசபடுறார். அதே மாதிரி நமக்கும் ரொம்ப வேண்டாம். ஒரே ஒரு முறை வாய்ப்பு கொடுத்தா எவ்வளவு நல்லா இருக்கும். என்னைக்கும் அவர் காலடியில் விழுந்து கிடக்கலாமே…...பெரு மூச்சு விட்டது.
சரி புலம்புறதை நிப்பாட்டு. ஆகுற காரியத்தை நாம பார்ப்போம். இந்த பொண்ணு எப்ப எழுந்திரிக்க. நாம எப்ப நம்ம மாஸ்டர்கிட்ட இவளை கூட்டிட்டு போக……ஒன்று எரிச்சலோடு கேட்கவும்
நீ ஏன் இதை குறித்து கவலைபடுற. நம்ம மாஸ்டர் எப்ப கூப்பிடுவாரோ அப்பதான போக முடியும். அது வரைக்கும் கொஞ்சம் பொறுமையா இரு…..
ஆனா நீ சொன்ன பிறகு எனக்கும் இந்த பொண்ணு மேல ஏதோ ஒரு அபிப்ராயம் வந்திருச்சு. அந்த சாத்தான் இவளை என்ன பாடு படுத்த போறானோன்னு எனக்கு கூட பயமா இருக்கு.
என்ன பண்ணுவான். எப்படியும் இவளுக்கு கந்தக சகதி இருக்கும். ஆனா அதற்கு மேல இன்னும் எத்தனை தண்டனைகளை கூட்ட போறானோ….. சாதாரணமானவங்கலையே அவன் விட்டு வைக்கிறதில்லை. இதுல தேவனுடைய வார்தைகளின் ரகசியங்களை வேற இந்த பொண்ணுக்கு நம்ம தேவன் வெளிப்படுத்தி இருக்காங்களாம். அப்ப நம்ம தேவன் மேல இருக்கிற மொத்த விரோதத்தையும் இந்த பொண்ணு மேல வைச்சு வாங்க போறானோ…..
கொஞ்சம் எனக்கு விளக்கமா சொல்லு. இந்த பொண்ணுக்கு நம்ம தேவன் தன்னுடைய வார்த்தைகளை குறித்த ரகசியங்களை சொல்லி கொடுத்திருக்காரா…………..அது எப்படி உனக்கு தெரியும்???
நேற்று நம்ம மாஸ்டர் என்னை இந்த பொண்ணை பத்தி பேச கூப்பிட்டார். நான் போயிருந்த அந்த சமயம்தான் அவர், அந்த பொறாமை பூதம்கிட்ட பேசிட்டு இருந்தார். எந்த வகையில இந்த பொண்ணை நம்ம வலையில் இழுக்கனும்னு…..நான் கேட்டிட்டு இருந்ததை நல்ல வேளை அவங்க பார்க்கலை……
அவள் தன்னையே அடித்து கொள்ள நினைத்தாள். எல்லாம் சாத்தான் தந்திரம்……எத்தனை தடவை என் இயேசப்பா சொல்லி இருக்காங்க. சாத்தான் ரொம்ப பொல்லாதவன். அவன் யாரடா பிடிக்கலாம்னு கெர்ச்சிக்கிற சிங்கம் மாதிரி சுத்திட்டு இருப்பான்னு பேதுரு புத்தகத்தில கூட சொல்லி இருக்காரே…… நான்தான் ஏமாந்து போனேன்…..ஆனா இந்த நரகத்தில எனக்கு ஒரு பெரிய தண்டனையை சாத்தான் ஏற்கனவே ரெடி பண்ணி வைச்சிருப்பான் போல…….மனதினில் நினைத்து கொண்டிருந்தவளிடம் .
சரி, எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. நீ இவளை பார்த்துக்கோ…..இவளை இங்கு கூட்டிட்டு வந்த பூதம் மற்றதிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு சென்றது.
சீக்கிரமா வந்து சேரு. என்னால்தான் ரொம்ப நேரம் இருக்க முடியாது….அந்த பூதம் அந்த இடத்தில் இருந்து போன பின்பும் அதிக நேரம் இவள் அருகில் இருந்த பூதம் புலம்பி கொண்டுதான் இருந்தது.
இது என்னடா வாழ்க்கை…….நல்லா இருந்த என்னையும் புலம்ப வைச்சிட்டானே…..பூதம் தனக்குள் புலம்பி கொண்டிருக்க…..
நான் எப்படி இந்த நரகத்தில் இருந்து தப்பிக்கிறது……அவள் வேறு விதமாய் சிந்தித்து கொண்டிருந்தாள்…..பாதை கூட சரியா தெரியலை…அம்மா ஏற்கனவே சொல்லி இருக்காங்க. இந்த நரகத்தில ஒருத்தர் ஒரு முறை போயிட்டா மீண்டும் வந்தது கிடையாதுன்னு……நான் எப்படி இதுல இருந்து தப்பிக்க……இயேசப்பா, ப்ளீஸ் இதுல இருந்து தப்பிக்க வழி சொல்லுங்க……
சிறிது நேரம் ஆயிருக்காது. இவள் மேல் ஏதோ படவும் என்ன ஏதோ படுது….உடம்பில் பட்டு அந்த ஏதோ ஒன்று காந்தல் கொடுக்கவும், ஐயோ….மீண்டும் பாம்பா….அலறிக் கொண்டு எழுந்தாள். எழுந்தவள் பக்கத்தில் அந்த பூதம் தூங்கி கொண்டிருந்தது. அதிக தூக்கத்தில் இவள் மேல் சாய்ந்திருக்கும் போல……புரிந்து கொண்டவளாய் அதன் முகத்தை பார்த்தாள். நல்ல தூக்கம். குறட்டை சத்தம் கேட்க ஆரம்பித்து விட்டது.
மனதில் இதுதான் கரெக்ட்னா நேரம்…..தப்பி…..ஏதோ ஒரு சத்தம் கேட்கவும்……இல்லை….தப்பிக்கணும் நினைச்சாலே அந்த சாத்தான் கண்டுபிடிச்சு என்னை வேதனைபடுத்த ஆரம்பிச்சிருவான். இப்ப அமைதியா இருக்கிறதுதான் நல்லது….மனதை தேற்றி கொண்டாள்.
மீண்டும் அவள் மனதில் அதே சத்தம்….தப்பி……..அமராதே…..அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. சப்போஸ் ஏதும் சாத்தான்தான் இப்படி எனக்கு சொல்லி கொடுக்குதோ………இதில நான் தப்பு செய்தேனான்னா, அதை வைச்சு கூடுதலா பனிஷ்மென்ட் கொடுக்க அவன் நினைச்சிருப்பான். நோ…..சாத்தான் இனிமேலும் உன் தந்திரம் என்கிட்டே பலிக்காது…..நான் செய்த தப்புக்கு என்ன தண்டைனையோ அதை நான் ஏற்றுக் கொள்வேன். இனிமேலும் என்னை என் தேவனுக்கு விரோதமாய் எழுப்பி விட முடியாது….அப்பாலே போ……பைபிள் வார்த்தைகளை மனதில் உச்சரித்து விட்டு, தூங்கி கொண்டிருந்த அந்த பூதத்தின் முகத்தை பார்த்து கொண்டிருந்தாள்.
இனிமே என் வாழ்க்கை இங்கதான……அப்ப என்னுடைய இயேசப்பா முகத்தை நான் பார்க்க முடியாதே……இந்த மாதிரி பூதங்களின் முகத்தை தான் நான் பார்க்க வேண்டியதிருக்கோ……
மீண்டும் அதே சத்தம்…..எழும்பு……ஏன் இந்த குரல் கேட்குது…..சரி தப்பிக்க நினைக்க வேண்டாம். இந்த நரகத்தில அப்படி என்னதான் நடக்குதுன்னு பார்ப்போமே….. பூதங்கள் ஏதாவது செய்திருமோ……மனதில் நினைத்தவள்…..இதுக்கு மேல என்னை என்ன பண்ண முடியும்….என்ன வந்தாலும் அப்ப பார்த்துக்குவோம்………..மனதை திடப்படுத்தியவள் அவள் படுத்திருத்த ஏதோ வழ வழவென்ற இடத்தில் இருந்து இறங்க நினைத்தாள். ஆனால் கீழே பார்த்தவளுக்கு தலையை சுற்றி கொண்டு வந்தது.
ஒரு பெரிய குன்று என்றுதான் அவளுக்கு தோன்றியது. இவ்வளவு பெரிய உயரத்தில இருந்து எப்படி கீழ இறங்க…….நான் கூட தப்பா நினைச்சிட்டேனே. ரொம்ப ஈஸியா கீழ இறங்கி போய், நரகத்தில எல்லா இடத்திலயும் பார்த்திட்டு வந்துரலாம்ன்னு எனக்கு யோசனை வேற……இந்த பெரிய மலையை யாரால….அதுவும் ஏதோ அந்தரத்தில தொங்குகிற மாதிரி இருக்கிற இந்த மலையில் யாரால இறங்க முடியும்…… மீண்டும் கீழே எட்டி பார்த்தாள். தலை சுற்றி கொண்டு வந்தது.
வேண்டாம், வேண்டாத வேலையை வேண்டாம். பேசாம இந்த பூதத்தின் பக்கத்தில் உட்காரதுதான் நல்லது.
இறங்கு…..மீண்டும் அதே குரல். எனக்கு என்ன ஆச்சு…..இந்த நரகத்தில ரொம்ப கஷ்டப்பட வேண்டியதா ஆயிரும்னு நினைச்சு என் மனசுதான் இப்படியெல்லாம் புலம்புதோ….தன்னையே குழப்பி கொண்டாள். நிதானமாக அவள் பேசினாள். மனம் நீ ரொம்ப குழம்பி போயிருக்கன்னு நினைக்கிறேன். இவ்வளவு பெரிய மலையில் இருந்து, அதுவும் அந்தரங்கத்தில் தொங்கிட்டு இருக்கிற இந்த மலையில் இருந்து நம்மளால் இறங்கவே முடியாது. அது மட்டுமில்லை, இங்க எங்கெல்லாம் அந்த சாத்தான் கேமரா மாட்டிருக்கோ…..தெரிந்தா நாம செத்தோம்…..சொல்லி கொண்டிருக்கும் போதே அவளையும் அறியாமல் கீழே விழுந்தாள். கீழே விழுந்ததில் சரியான அடி முழங்கால்களில். வலியில் முனங்கினாள்.
எல்லாம் அந்த பூதம்தான் தள்ளி விட்டிருக்கும்…. அப்ப இருந்தே என் மேல எரிச்சல் அதுக்கு. அதான் என்னை இப்படி கீழே தள்ளி விட்டு சந்தோசப் படுது……..கீழே வரட்டும், என்னன்னு கேட்கணும்…..கேள்வியோடு நின்று கொண்டிருந்தாள். பூதம்தான் வந்த பாடில்லை.
ஏன், என்ன ஆச்சு. பூதம் வரலை. அப்ப இனிமே கீழதான் தண்டனை கொடுக்க போறாங்களா? இல்லை சாத்தான் தண்டனை கொடுக்க என்னை கூப்பிட்டு வரச் சொல்லி இருப்பானோ…..ஒன்றும் புரியாமல் தன்னையே குழப்பி கொண்டாள்.
அப்போதுதான் அவள் அந்த ஈனமான குரலை கேட்டாள். காப்பாத்துங்க…….என்னை காப்பாத்துங்க……சுற்றிலும் தேடி பார்த்தாள். யார் இப்படி முணங்குறது……தேடி பார்த்தவளுக்கு அவள் வலது பக்கத்தில் ஒரு குகை, அதில் தீ வெளிச்சம் அதிகமாகவே தெரிந்தது. இங்க இருந்துதான் சத்தம் வருதோ……..சத்தம் வந்த திசையில், நடந்து, அந்த குகையில் நுழைந்தவள் அதிர்ச்சியில் உறைந்து போனாள்.
Bible Incidents (for kids) – 16 Bible Incidents (for kids) – 17
பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 17
Daily Bible Verse
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
« Feb | ||||||
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
Newsletter
Categories
Archives