• பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக)-37

    வீட்டில் வந்த உடனேயே தன் ரூமில் தான் நுழைந்தாள். அவள் சத்தத்தை கேட்டு ஹால் வரும் வரை வந்த அம்மா தன் பெண்ணை அங்கே தென்படாமல் போகவும் தெரிந்து கொண்டார்…..தன் பொண்ணுக்கு இன்னும் குழப்பம் தீரலை போல…..என்று. அந்த நொடியே தன் தேவனிடம் வேண்டினார்.

    இயேசப்பா, என் பொண்ணு கஷ்டபடுறான்னு உங்ககிட்ட சொல்லி அழ நான் இப்ப உங்களை கூப்பிடலை. அவளுக்கு நீங்க என்ன செய்தாலும் அதுல உங்க ஞானம் விளங்கும்ன்னு நான் முழுமையா நம்புறேன். இப்ப உனக்கிட நான் விண்ணப்பம் பண்ணுறது…..ஒரு அம்மாவா நான் அவகிட்ட என்ன பேசணும்னு தெரியலை….அவளை எப்படி ஆறுதல் படுத்தணும்னு தெரியலை. உங்ககிட்ட நான் அவளை நான் முழுமையா ஏற்கனவே ஒப்பு கொடுத்திட்டேன்…என்ன அவகிட்ட பேசணும்னு நீங்கத்தான் எனக்கு உதவி செய்யணும்…அது கண்டிப்பா உணர்வுகள் சம்பந்தமா இல்லாம என் தேவன் மகிமை வெளிப்பட அமைய உங்ககிட்ட கெஞ்சி கேட்கிறேன் இயேசப்பா….ஆமென்….நன்றிகள் சொல்லி விட்டு தன் பெண்ணின் அறையில் நுழைந்தார்.

    தன் ஸ்கூல் பேக்கை ஒரு ஓரத்தில் வைத்து விட்டு அவள் பெட்டில் படுத்திருந்தாள். குட்டிமா….என்று அழைத்த போது அவள்  நிமிர்ந்து தன் அம்மாவை பார்த்தாள். சாரிமா….ரொம்ப டயர்டா இருந்துச்சு….தலை வலி வேறு…அதுனாலத்தான் வந்ததும் உங்களை கூட தேடாம வந்து படுத்திட்டேன். சாரிமா….என்று சொல்லவும்

    சரி குட்டிமா அதை பத்தி ஒண்ணுமில்லை. தலை வலி போக அம்மா உனக்கு சூடா காபி தரவா….என்று ஆறுதலா சொல்லவும் அவள் கண்களில் எட்டி பார்த்தது.

    பேசாம அம்மாகிட்ட சொல்லிருவோமா…நம்ம கேள்வியை கேட்டுருவோமா..என்று கூட நினைத்து பார்த்தாள். ம்கூம்….இது என் இயேசப்பாக்கும், எனக்கும் உள்ள விஷயம்…இதுல எங்க அம்மாவையும் இழுத்து ஏன் அவங்களையும் கஷ்டப்படுத்தனும்..மனதில் நினைத்தவளாய் உடனே தன் முடிவை மாற்றி கொண்டாள்.

    ஸ்கூல் வொர்க் கஷ்டமா இருக்கா….இப்பெல்லாம் உன் முகம் ரொம்ப டயர்டா இருக்கு…அம்மா கேட்கவும் அவளும் புரிந்து கொண்டாள். அம்மா, அப்பா கூட தன்னை தெரிந்து கொண்டார்.கள். ஆனா எனக்கு பதிலை எங்க அம்மா, அப்பாவால சொல்ல முடியாதே. அப்படி இருக்கும் போது ஏன் அவளை கஷ்டபடுத்தனும் மனதினில் நினைத்து கொண்டாள்.

    அது வந்துமா…..அவள் மனசில் நினைத்து கொண்டிருக்கும் போதே…சரி. .இப்போதைக்கு அதை பத்தி ஏன் யோசிக்கிற. நீ ஒண்ணும் சின்ன பொண்ணு கிடையாது. உனக்கு ஒவ்வொரு நாள் கூட கூட அதுக்கு ஏற்றார்போல் படிப்பும் கூடத்தான் செய்யும். அதை குறித்து யோசித்து கவலைபட்டுட்டு இருந்தா கண்டிப்பா மேலே வர முடியாது….ரொம்பவே கீழ போக வேண்டியதா போயுரும் குட்டிமா….அம்மா சொல்லவும் அந்த வார்த்தையில் ஏதோ அர்த்தம் இருப்பதை போல உணர்ந்தாள். அம்மா சப்போஸ் படிப்பு சம்பந்தமா சொல்லி இருந்தாலும் இதில வேறு ஒரு அர்த்தம் இருப்பதையும் தெரிந்து கொண்டாள்….மனதினில அவள் யோசித்து கொண்டிருக்கும் போதே….

    அம்மா உனக்கு காபி கொண்டுவரேன், சரியா…நீ முதல்ல எழுந்து முகம் கழுவிட்டு, வேற டிரஸ் மாத்து. அதுக்குள்ள அம்மா உனக்கு காபி ரெடி பண்ணி கொண்டு வந்துருவேன், சரியா என்று கேட்டதற்கு லேசாக சிரித்தாள். அந்த சின்ன சிரிப்பு கூட அவள் அம்மாக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்தது. தேங்க்ஸ் lord என்று சொல்லி கொண்டார் மனதினில்.

    அம்மா அங்கிருந்து கிளம்பிய பிறகு, எழுந்து முகம் கழுவ கூட தோணாமல் அம்மா சொன்ன வார்த்தைகளை தான் மீண்டும் அசைபோட்டாள். ஏதோ புரிந்த மாதிரியும், புரியாத மாதிரியும் தோணியது. அம்மா சொன்ன வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அவள் காதில் ரீங்காரமிட்டது..

    நீ ஒண்ணும் சின்ன பொண்ணு கிடையாது. உனக்கு ஒவ்வொரு நாள் கூட கூட அதுக்கு ஏற்றார்போல் படிப்பும் கூடத்தான் செய்யும்.

    .நான் சின்ன பொண்ணு கிடையாது….ஆமா நான் ஒண்ணும் சின்ன பொண்ணு கிடையாது. இயேசப்பா ஏற்கனவே சொல்லி இருக்காங்களே. நான் இந்த உலகத்தில் பிறந்த போதே, எனக்குன்னு அவருடைய தீர்மானம் உண்டு. அதை என்னுடைய இந்த வயசில என் இயேசப்பா நிறைவேற்றிட்டு இருக்காங்க. அப்ப நான் இன்னும் சின்ன பொண்ணு இல்லைன்னு தான அர்த்தம்….என் தேவன் என் வாழ்கையில் முதல் நாளில் என்கிட்டே ஏஞ்சல் மூலமா சொன்ன காரியங்களை விட…இப்ப அவர் பகிர்ந்து கொள்ளுற விதம் மாறி இருக்கே. முதலில் ஏஞ்சல் மூலமா தேவ சத்தியங்களை சொல்லி கொடுத்தாங்க. அடுத்து ஒரு நாள்….அதுவும் அந்த கடல் அலைகள் என்றும் மறக்க முடியாத காரியம்…அது முழுக்க முழுக்க என் தேவனை என்னை தனியாத்தான் அனுமதிச்சாங்க.

    அடுத்து……நான் தப்பு செய்யும் போது கொடுக்கிற தண்டனைகள் கூட மாறுச்சே….. முதலில் மற்றவங்க குறைகளை கண்டு சந்தோசப்படுற குணம் இருந்தப்ப….ஒரு சின்ன ஸ்கூல் வேன் ஆக்சிடென்ட் மூலமா சொல்லி கொடுத்தாங்க. ஆனா என்னுடைய பொறாமை குணம் மற்றும் தப்புக்கு சாரி கேட்க முடியாத குற்ற மனசாட்சி வந்தப்ப…… நரகத்திற்கே கூட்டு போய் தான் என் இயேசப்பா சில காரியங்களை கத்து கொடுத்தாங்க. அது மட்டுமா குளோரி அக்காவுடைய அம்மா, அப்பாவை பத்திய தரிசனம், ஆவிகள் உலகத்தை என் இயேசப்பா எனக்கு காண்பிச்சது……. அடுத்து என் ஸ்கூல்ல நடந்த ரேகா என்கிற அக்காவுக்கு நடந்த ஆபத்து……அடுத்து இப்ப போயிட்டி வந்த ஊர் வரைக்கும் என் இயேசப்பா எனக்கு தன் வார்த்தைகளை கொடுத்த விதம் மாறிட்டே இருந்துச்சு….

    அப்படி இருக்கும் போது…எது எனக்கு புரிஞ்சுக்க ஈஸியா இருக்கும் என்பது மட்டுமில்ல…என் இயேசப்பா நான் செய்ய வேண்டிய காரியத்தை நான் கத்துக்கணும்னு ஆசைபடுறாங்க.. ஆனா நான்தான் வெறும் இயேசப்பாவுடைய அட்வைஸ் கேட்டதோட சரி, அடுத்த நிமிசம், பழைய குருடி, கதவை திறடி…..என்கிற மாதிரி இயேசப்பா நான் கடைபிடிக்க சொன்ன சட்ட திட்டங்களை மறந்திட்டு ஓடிட்டு இருக்கேன்னு மட்டும் இப்ப நல்லா புரியுது. என்ன தான் நான் சின்ன பொண்ணா இருந்தாலும் ஒவ்வொரு நாளும் என்னுடைய இயேசப்பா எனக்கு கத்து கொடுக்கிற விதங்கள் மட்டுமில்ல, கத்து கொடுக்கிற பாடங்களும் கூடிட்டு தான் போகுது. அதை எப்படி நான் மறந்தேன்…..அப்பொழுது தான் அவளுக்கு தன் செய்த தப்பு புரிந்தது.

    நான் சின்ன பொண்ணு கிடையாது மட்டுமில்லை ஒவ்வொரு நாளுக்கு ஏற்றாற்போல் படிப்பும் கூடும்…இப்ப அந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரிஞ்சிருச்சு இயேசப்பா. அடுத்து இதை பத்தி யோசித்திட்டு இருந்தா கவலைபட்டுட்டு இருந்தா மேலே  வர முடியாது…கீழே போக வேண்டியதா போயிரும்ன்னு அம்மா சொன்னாங்களே…அதுக்கு என்ன அர்த்தம்

    மேலேன்னு சொன்னது…சப்போஸ் பரலோகம் பத்தி சொல்லி இருப்பாங்களோ…..கீழே ன்னா அது நரகம் பத்தி சொல்லி இருப்பாங்களோ மண்டையை போட்டு உடைத்து கொண்டாள். என்னுடைய இயேசப்பா என் கூட பேசிட்டாங்க. அதுவும் எங்க அம்மா மூலமா. ரோமப சந்தோசமா இருக்கு இயேசப்பா. ஆனா என்ன பிரச்னைன்னா நீங்க சொன்ன வார்த்தையில் நான் பாதிக்குதான் அர்த்தம் தெரிஞ்சிருக்கேன். அடுத்த பாதிக்கு…..யோசித்த போதே மனம் சோர்வடைவதை உணர்ந்தாள்.

    ஆனாலும் இயேசப்பா…..நான் இனிமே இப்படி என் மனசை கஷ்டபடுத்திக்க மாட்டேன். ஏன்னா நீங்கதான் என் கூட பேசிட்டீங்களே. அது போதும் எனக்கு. என் கூட நீங்க நேரடியா பேசாம அம்மா மூலமா பேசினது கொஞ்சம் மனம் கஷ்டமாதான் இருக்கு..ஆனாலும் பரவாயில்லை…ஏன்னா நான் பத்து நாளா காத்திட்டு இருந்த என் தேவனுடைய மெல்லிய சத்தத்தை நான் கேட்டுட்டேன்….தேங்க்ஸ் பிரெண்ட்….மனம் முழுமையாக சந்தோசத்தோடு அவள் இருந்த இடத்திலேயே முழங்கால்கள் ஊன்றி தன் தேவனை தொழுதாள்.

    அவள் எழுந்திருக்கும் போதே அவளால் புரிது கொள்ள முடிந்தது. ரொம்பவே மிருதுவான காற்றை உணர்ந்தாள். அப்ப ஏஞ்சல் வரப் போறாங்களா மனதில் நினைத்து கொண்டிருக்கும் போதே…..அவள் கணகளுக்கு முன்பாக வந்தது அவளுடைய இயேசப்பா….சந்தோசத்தில் அவள் குதிக்காத குறைதான்….இயேசப்பா.நீங்களா???…அவள் மனதில இந்த நேரத்திலும் கூட ஏதோ ஒரு பாடல் ஓடியது ….இயேசப்பா ….இயேசப்பா. …..வேறேதும் வேண்டாம்….நல்ல பாட்டா இருக்கே…மனதினில் நினைத்து கொண்டாள். இயேசப்பா அவளை பார்த்து சிரிப்பதை அவளால் தெளிவாக பார்க்க முடிந்தது.

    இயேசப்பா….என்று மட்டும் தான் மீண்டும் மீண்டும் வார்த்தைகள் வந்து கொண்டே இருந்ததை தவிர வேறு எதுவும் அவளுக்கு தோண வில்லை. ஏன் தன் இயேசப்பாக்கு பக்கத்தில் போகனுன்னு கூட அவளுக்கு தோண வில்லை. தேங்க்ஸ் இயேசப்பா…தேங்க்ஸ் இயேசப்பா….. சொல்லி கொண்டு இருக்கும் போதே….இயேசப்பா மறைந்து போனார். அவ்வளவு தானா….அச்சோ…..நிறைய இயேசப்பாகிட்ட பேசணும்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா எப்பவும் இயேசப்பாவை பார்த்தா மட்டும் ஒண்ணும் ஏன் பேச முடியலை….மனதினில் நினைத்து யோசித்தவள்….இப்ப எதுக்கு தேவையில்லாத ஆராய்ச்சி………என்று யாரோ சொல்லவும் யார் என்று தெரிந்து கொள்ளும் நோக்கில்……திரும்பி பார்த்தாள்.

    அவளுடைய ஏஞ்சல்……முகம் முழுவதும் சிரிப்புடன்….குட் ஈவினிங் ஏஞ்சல்…..என்று சொன்னாள்……

    எவ்வளவு நாளா உங்களை எதிர்பார்க்கிறேன் தெரியுமா…..சிறிது கோபப்பட்டு கொண்டாள்.

    ஆனால் ஏஞ்சல் முகத்தில் கொஞ்சம் கூட சிரிப்பு இல்லை…ஏன் அவள் நினைத்து கொண்டிருக்கும் போதே…நீதான் என்னை வர விடாம ஆக்கிட்டியே குட்டிமா….உண்மையில் குரலில் வருத்தம் இருந்தது.

    சாரி ஏஞ்சல்….நான் எதுவும் உங்களையும், என் இயேசப்பாவையும் கஷ்டப்படுத்திட்டேனா ….கேள்வியுடன் ஏஞ்சல் முகத்தை பார்த்தாள்.

    எத்தனை நாள் கஷ்டம் தெரியுமா….கிட்டத்தட்ட ரெண்டு வாரம் எங்களை கஷ்டப்படுத்திட்ட…..உன்னுடைய இயேசப்பா உன்னை ரொம்பவே நேசிக்கிறதால் நீ கஷ்டப்பட கூடாதுன்னு உன்னைஎந்த விதத்திலும் கேள்வி கேட்காம போயிட்டாரு. ஆனா என்னால முடியலை குட்டிமா. ஏன் எங்க எல்லாரையும் கஷ்டப்படுத்திட்ட…..மீண்டும் அதே கேள்வியை கேட்கவும் ஒன்றும் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்தாள்.

    நான் எந்த வகையில் என் இயேசப்பாவை கஷ்டப்படுத்தினேன்…..உள்ளுக்குள் கேட்டு கொண்டாள். சரியா…..வேதா அப்பா தேவனால விடுவிக்கபட்ட அந்த நாளை கணக்கு வைச்சிதான் ஏஞ்சலும் சொல்லுறாங்க. அப்ப நான் என்னை பற்றியே தெரியாத அந்த வேளையில் எதுவும் என் இயேசப்பாக்கு விரோதமா தப்பு பண்ணிட்டேனோ….மனதில கேள்வி கேட்டுக் கொண்டாள்.

    உங்களுக்கு தெரியுமா ஏஞ்சல்…..நான் எல்லார் கிட்டயும் நான் எதுவும் என் இயேசப்பாக்கு விரோதமா தப்பு பண்ணிட்டேனா….ன்னு கேட்க இருந்தேன். வேதாகிட்ட கேட்டேன். ஆனா அவன் சொன்னது…. தேவையில்லாம மண்டையை போட்டு குழப்பிக்காதன்னு சொல்லிட்டான்….அவள் சொல்லி முடித்தாள். ஆனால் ஏஞ்சல் என்ன சொல்ல போகிறார் என்ற எதிர்ப்பார்பும் அவளுக்குள் இருந்தது.

    வேதா கரெக்ட்தான சொல்லி இருக்கான் குட்டிமா. நீ செய்த தப்பு அதுதான்……ஏஞ்சல் சொல்லிய போது உண்மையில் அவளால் புரிந்து கொள்ள முடிய வில்லை.

    அன்னிக்கி வேதா அப்பா வாழ்கையில் அதிசயத்தை நாம் இயேசப்பா உன் மூலமா செய்தப்ப…..என்ன் நடந்துச்சுன்னு தெரிந்து கொள்ள நீ நினைச்ச தேவையில்லாத உன் ஆர்வ கோளாறு தான் தப்புன்னு சொன்னேன்……ஏஞ்சல் சொல்லி முடித்த போது உண்மையில்,அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

    ஆனா….இது எப்படி தப்பா இருக்க முடியும்…..தனக்குள் கேட்டு கொண்டாள்.

    நீ எனக்கு ஒண்ணு சொல்வியா…….என்று ஏஞ்சல் கேட்கவும்

    அவசரமாக தலையசைத்தவள் சொல்லுங்க ஏஞ்சல்….என்றாள்

    ஒரு கேள்வியை போட்டு கிட்டத்தட்ட ரெண்டு வாரமா குழப்பினியே….அந்த பதிலை ஏன் தெரிஞ்சுக்க நினைச்ச…..என்று கேட்ட போது அவளுக்கு கூட ஒன்றும் சொல் வில்லை.

    இப்ப நினைச்சு பார்த்தா கண்டிப்பா அந்த பதிலை தெரிஞ்சிகிட்டு நான் என்ன பண்ண போறேன்….மனதினில் நினைத்தாள்.

    நான் சொல்லட்டுமா அந்த பதிலை……என்று ஏஞ்சல் கேட்ட போது…..உண்மையில் அவளுக்கு என்ன சொல்வது என்று தெரிய வில்லை..

    உன் மூலமா நம்ம இயேசப்பா அதிசயத்தை யாரும் பார்க்கலைன்னு வைச்சிக்கோ…..உனக்கு என்ன தோணும்….என்று கேட்ட போது

    பொய் சொல்ல முடியாதே அவளால். தேங்க்ஸ் இயேசப்பா. என் இயேசப்பா என்னை இந்த காரியத்தில் காட்டிக் கொடுக்காம இருந்தற்காக தேங்க்ஸ் சொல்லுவேன்…… அவள் சொல்லி முடிக்க

    சப்போஸ் தெரிந்திருந்தா என்ன ஆகும்……என்று கேட்டவருக்கு

    அம்மா, அப்பா என்னை பார்க்கிற விதம், பழகுற விதம் எல்லாம் மாறி போயிரும்…..என்று அவள் சொல்லி முடித்த போது

    உண்மையில் உனக்கு அந்த புகழ்ச்சி வேணுமா குட்டிமா…..என்று அவர் கேட்ட போது அவள் ஒரு நிமிடம் திகைத்து போனாள்.

    ஆனா அடுத்த நொடியே அவளுக்கும் புரிந்து விட்டது. தன் மனசில் இருந்த ஆசையைத்தான் ஏஞ்சல் சொல்லி இருக்கிறார் என்று. அது இயேசப்பாக்கு பிடிக்காத காரியம் ஆச்சே……மனதினில் அவள் நினைத்து கொண்டிருக்கும் போதுதான் ஏஞ்சல் பேச ஆரம்பித்தார்.

    குட்டிமா…..வேதா அப்பா வாழ்கையில் நடந்த அந்த அதிசயம் நம்ம இயேசப்பா அவர்க்கு கொடுத்த ஒரு சந்தர்ப்பம் என்பது உனக்கு நல்லாவே தெரியும். ஆனா அந்த வாழ்வா….சாவா என்கிற போராட்டத்தில் நீ ஏன் ஆதாயத்தை தேட நினைச்ச…..என்று கேட்ட போது அவமானத்தால் கூனி குறுகி போனாள்.

    எவ்வளவு பெரிய தேவையில்லாத தப்பை, பாவத்தை செய்திருக்கேன்….அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. என்னை பத்தி மத்தவங்க தெரிஞ்சுக்கணும், நான் ஒண்ணும் சாதரணமான பொண்ணு கிடையாது தெரியுமா…அப்படி யோசித்தது போல தோணுதே…தோணுது என்ன…அப்படித்தான் யோசித்திருக்கேன்…..எண்ணிய போதே கலங்கி போனாள்.

    அவளுக்கும் தெரியும்….தேவன் பெருமையுள்ளவனுக்கு எதிர்த்து நிற்கிறார்…..என்பது. ஆனா….அவள் சொல்வதற்கு முன்பே ஏஞ்சல் பேச ஆரம்பித்தார். இப்ப உனக்கு புரியுதா….நம்ம இயேசப்பா சொன்ன வார்த்தையின் அர்த்தம் என்னன்னு….என்று கேட்ட போது புரியாமல் ஏஞ்சலை பார்த்தாள்.

    உன் அம்மா மூலமா நம்ம இயேசப்பா உன்கிட்ட பேசினது…..ஏஞ்சல் கேட்ட போது புரிந்து கொண்டாள்.

    சாரி ஏஞ்சல்…நான் எத்தனை பெரிய தப்பு பண்ணியிருக்கேன் என்பதை இப்பதான் புரிஞ்சுகிட்டேன்….என் மனசில கூட எல்லாரும் என்னை பெருமையா பார்க்கணும்…என்னை புகழனும்னு ஒரு எண்ணம் இருந்ததை இப்ப தான் புரிஞ்சிக்கிட்டேன்….என் இயேசப்பா என்னை மன்னிப்பாரா ஏஞ்சல்….என்று கேட்டவளுக்கு

    உன்னை மன்னிக்காம இருந்தா உன்னை வந்து பார்த்திருக்க மாட்டரே குட்டிமா….அது மட்டுமில்ல நீ மனசில தாங்கி இருந்த பாரத்தை அவர் தூக்கிட்டு போயிருக்க மாட்டாரே…..சொன்ன போது அவளுக்கும் ஞாபகம் வந்தது.

    தன் செய்கையை நினைத்து தான் வேதனை பட்ட அந்த சமயத்தை கூட….ஏதோ ஒரு வலியைதான் தன் மனதினில் உணர்ந்தாலே தவிர…..ரெண்டு வாரமா வாய் திறந்து கூட பேச முடியாத அளவுக்கு இருந்த துக்கம் தொண்டையை அடைச்ச மாதிரி இருந்த நிலையை அவளால் உணர முடியலை. எப்ப இந்த அதிசயம் நடந்துச்சு…….. யோசித்து பார்த்தவளுக்கு கடைசியாக இயேசப்பா வார்த்தையை கேட்டப்பவா….இல்லை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.

    இயேசப்பா வார்த்தையை கேட்டப்ப கூட….. பாதிக்குத்தான் அர்த்தம் தெரிஞ்சிருக்கு நினைச்சப்ப கூட திரும்பியும் அந்த பாரத்தை நான் உணர்ந்தேனே. அடுத்துதான் பாதினாச்சும் தெரிஞ்சிருக்கேன்னு சந்தோசமா இயேசப்பாக்கு நன்றி சொல்லி எழுந்து பார்த்தா என்  இயேசப்பா….. இப்போது புரிந்து கொண்டாள். என் இயேசப்பாவின் சிரிப்பு….அதை நான் ரசித்த அந்த சமயம்….என் பாரம் போயிருச்சா…. நம்ப முடியாமல் யோசித்து பார்த்தாள்.

    இயேசப்பா வேதா வாழ்க்கையிலும், வேதா அப்பா வாழ்க்கையிலும் செய்த அதிசயம் ஒரு வகைன்னா ….கொஞ்சம் கூட நான் நினைக்காத சமயத்தில்….என் வாழ்கையில் கூட அவருடைய ஒரே ஒரு சிரிப்பால அதிசயம் செய்திட்டாரே…….என் பாரத்தை அவர் தனக்குள்ள ஏற்றுக் கொண்டாரே……. அவள் இருந்த இடத்திலேயே சாஸ்டாங்கமாய் விழுந்து தான் தேவனுக்கு நன்றிகளை செலுத்தினாள். இயேசப்பா ரொம்ப தேங்க்ஸ்…..எனக்குள்ள நீங்க செய்திருக்கிற அழகான மாற்றத்திற்கு.

    இப்போதுதான் ஏஞ்சலின் முகத்திலும் சந்தோசம் தெரிந்தது. ஆனா நான் என்னுடைய இயேசப்பா எனக்கு செய்த நன்மைக்காக அவரை தொழுது கொண்டேன்…..இதுல நான் ஏஞ்சல் மனசை சந்தோசப்படும் படி என்ன பண்ணினேன்….ஒண்ணும் செய்யலையே…..அவள் நினைத்து கொண்டிருக்கும் போதே…..

    ரொம்ப யோசிக்க வேண்டாம் குட்டிமா….உன் எல்லா கேள்விகளுக்கும் நான் பதில் சொல்லுறேன்…ஏஞ்சல் சொன்ன போது ஆர்வமாக அவர் முகத்தை பார்த்தாள்.

    இயேசப்பா உன்கிட்ட சொன்ன பதிலுக்கு பாதி அர்த்தம் கண்டுபிடிச்சாச்சு, அப்படித்தான…..என்று கேட்ட போது

    இன்னொன்னும் எனக்கு தெரியும் ஏஞ்சல். அந்த வார்த்தைக்கு அர்த்தம் கொடுக்கிறதுக்காகத்தான் என் இயேசப்பா உங்களை அனுப்பி வைச்சிருக்காங்க என்பதும் தெரியும்….சரியா??? சிரிப்புடன் கேட்ட போது

    சரிதான் குட்டிமா….ஆனா எனக்கு ஒண்ணு சொல்லுவியா…..ஒரு அரைமணி நேரத்திற்கு முன்னாடி நீ உன்னை பத்தி யோசித்து புலம்பிட்டு இருந்த அந்த எண்ணங்களுக்கும் இப்ப நீ சந்தோசமா சிரிச்சி உன் இயேசப்பாவின் அன்பை தெரிந்து கொண்டப்ப ஏற்படுற இந்த மன நிலைக்கும் என்ன வித்தியாசம்….சொல்ல முடியுமா…என்று கேட்டவருக்கு

    நல்லா தெரியுது ஏஞ்சல், அப்ப ஏதோ என் மனசு முழுவதும் அழுது வடிஞ்ச மாதிரி இருந்துச்சு….ஆனா இப்ப விட்டா குதிச்சி…..என் இயேசப்பாவை துதிச்சி பாட்டு பாடி டான்ஸ் ஆட தோணுது….என்னால இவ்வளவுதான் சொல்ல தெரியுது ஏஞ்சல்……

    இதுதான் நம்ம தேவன் கொடுத்த வார்த்தையின் மற்ற பாதியின் அர்த்தம்….சொன்ன போது மீண்டும் இயேசப்பா அவளுக்கு கொடுத்த வார்த்தையை யோசித்து பார்த்தாள்.

    அதை பத்தி ஏன் யோசிக்கிற……என்ற வார்த்தைக்கு இப்ப அர்த்தம் கிடைச்சிருச்சு, அப்படிதான குட்டிமா…..புரியாமல் பார்த்தாள்.

    உன் மனசில நீ தேவையில்லாத பாரத்தை ஏத்தி வைச்சுகிட்டதே…… அன்னிக்கி அப்படி என்னதான் நடந்துச்சுன்னு நீயே உன்னை பத்தி யோசித்து தேவையில்லாத புகழ்ச்சியை மனிதர்கள் மூலமா தேடினதாலதான்….. இப்ப புரிஞ்சதா…..என்று கேட்டவர்க்கு

    முழுமையான சந்தோசத்துடன்….ஆமாம் ஏஞ்சல். புரிஞ்சிகிட்டேன். இன்னொன்னு கூட நம்ம இயேசப்பா வார்த்தை மூலமா புரிஞ்சிகிட்டேன் ஏஞ்சல். அது என்னதுன்னா…..ஒரு மனிதன் இந்த உலகத்தில உள்ள மக்கள் முகத்தை பார்த்து தன் வாழ்கையை தேடினா….அதாவது என்னை பத்தி இப்பவாது புரிஞ்சிக்க மாட்டாங்களான்னு தேடினா…..கண்டிப்பா வேதனையை மட்டுமே என்னை மாதிரி ஏத்துக்க வேண்டியதா ஆயிரும் .ஆனா என் இயேசப்பா முகத்தை தேடினா….என்னைக்கும் அதுல சந்தோசம் மட்டுமே கிடைக்கும். அதுனால என் கண்கள் எப்பவும் என் இயேசப்பா மேல மட்டும்தான் இருக்கணும் என்பதை தெரிஞ்சிகிட்டேன் ஏஞ்சல்….அவள் சொல்லி முடித்த போது ஏஞ்சல் அவளை பார்த்து….குட். நல்லா தெரிஞ்சி வைச்சிருக்க….என்று பாராட்டவும்

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக……என்று அவள் சொல்லவும்

    ஆமென்….என்றுஏஞ்சலும் சத்தமாக சொன்னார். சொல்லி விட்டு சிரித்தார் அவளை பார்த்து.

    சரி அடுத்த காரியம்……அதை குறித்து யோசித்து கவலைபட்டுட்டு இருந்தா கண்டிப்பா மேலே வர முடியாது….ரொம்பவே கீழ போக வேண்டியதா போயுரும்……..என்று ஏஞ்சல் சொன்ன போது

    அவள் கேள்வியுடன்…..ஏஞ்சல் அதுல மேலே அடுத்து கீழே சொன்னது பரலோகம் அடுத்து நரகம்தான…..என்று கேட்ட போது

    அப்படியும் வைத்து கொள்ளலாம். ஆனா நம்ம இயேசப்பா சொன்னப்ப அது உனக்குரிய ஆவிக்குரிய வளர்ச்சி….ன்னு அர்த்தம்….என்ற போது

    புரியாமல் ஏஞ்சலை பார்த்தாள். நீ நம்ம தேவனை பற்றி தெரிந்து கொள்ளுற எல்லா காரியங்கள் மூலமாயும் வளர்ச்சி அடையுறது உனக்குள்ள இருக்கிற ஆவிதான். பைபிள்ல ஒரு இடத்தில பவுல் கூட சொல்லி இருப்பாரு….நீங்க ஆவியில குழந்தை மாதிரி இருந்ததால உங்களுக்கு பலமான ஆகாரம் இல்ல பாலையையே கொடுக்க வேண்டியதா போயிருச்சு……ன்னு….என்ற போது

    ஆமா ஏஞ்சல். நானும் படிச்சிருக்கேன்.ஆனா இதுல வளர்ச்சி அடையுறது….புரியலை….

    உன்னை ஒவ்வொரு நாளும் நம்ம தேவன் தன் வார்த்தைகளால் உன் ஆவியை உரமேற்றிட்டு இருக்காங்க. ஏன்னா நீ பரலோகத்தில் சேரணுமே. அப்ப அதுக்குரிய குணங்கள், சாயல்கள் எல்லாமே இருந்தா மட்டுமே அங்க உன்னால போக முடியும். இது ஏதோ ஒரு நாளோ, இல்லை ஒரு குறிப்பிட நாட்கள் மட்டும் நடக்கிற வனைதல் வேலை இல்லை குட்டிமா. உன் வாழ்நாட்கள் முடியுற வரைக்கும் உன்னை நம்ம இயேசப்பா தன் வார்த்தைகளால், தன் கிரியைகளால் தொடர்ந்து வனைஞ்சிட்டே இருக்காங்க. அந்த ஆவிக்குரிய வளர்ச்சி கிட்டத்தட்ட ஒரு ஏணிப்படி மாதிரிதான். நீ ஒவ்வொரு படியா நடக்க வேண்டியதா இருக்கும். அதன் முடிவுதான் நம்ம தேவனுக்குள் என்றும் இளைப்பாறுகிற பரலோகம்……

    ஏஞ்சல் சொல்வதை கவனமாக கேட்டு கொண்டிருந்தாள். இப்ப நீ முதல் படியில் இருக்கன்னு வைச்சிக்கோ…… சப்போஸ் நீ இந்த கத்துக் கொண்ட …….மனுசங்க முகத்தை பார்க்காதே…..தேவன் மேலேயே உன் கண்கள் எப்பவும் இருக்கட்டும்னு இருந்தா…..நீ அந்த படியை கடந்து அடுத்த படிக்கு போயிட்டியா குட்டிமா…..கேள்வி கேட்ட போது

    தெரியலை ஏஞ்சல். என் இயேசப்பா எனக்கு கொடுத்த ஒரு அழகான படிப்பினை. இதுல நான் தேறினா தான அடுத்த படிக்கட்டுக்கு போக முடியும் ஏஞ்சல்….எனக்கு தெரிந்த வரைக்கும் இன்னும் நாட்கள் எடுக்கும்ன்னு நினைக்கிறேன்….என்றவளை பார்த்து….

    ஆனா இதே படிக்கட்டிலேயே நீ உன் வாழ்கையை முழுவதும் கடத்த முடியாதே குட்டிமா. அடுத்த படிக்கட்டுக்கு வந்துதான ஆகணும். இல்லாட்டி உன் வாழ்க்கை பரலோகத்திற்கு போகாம பின் தங்கின நிலைமையிலேயே இருந்துருமே….என்ற ஏஞ்சலை ஆச்சரியமாக பார்த்தாள்.

    ஏன் குட்டிமா….என்ன ஆச்சு என்றவருக்கு

    ஏஞ்சல்…இப்பதான் எனக்கு ஒரு வசனம் ஞாபகத்திற்கு வருது. முந்தினோர் அநேகர் பிந்தினோராகவும், பிந்தினோர் அநேகர் முந்தினோராகவும் இருப்பார்கள்.

    இப்ப என் வாழ்கையை எடுத்து கொள்ளுங்க ஏஞ்சல். நான் கொஞ்சம் தகுதி இல்லாம இருந்தும் கூட என் இயேசப்பா என் வாழ்கையில் அவருடைய அன்பை ஒவ்வொரு நிமிசமும் காண்பிக்கிறாங்க. அது மட்டுமில்ல உங்களை நான் பார்த்த அந்த முதல் நாளில் இருந்து இன்னிக்கி வரைக்கும் பார்த்தா என் இயேசப்பா எனக்கு கொடுத்த அவருடைய வார்த்தை என்கிற ஆகாரமும் கூட…..சொல்லி முடியாத அதிசயம்….ஆனா எல்லாம் தெரிஞ்ச பிறகும் கூட….நான் ஆவிக்குரிய படிக்கட்டு முதல் தான் எனக்கு பிடிச்சிருக்கு…அதுமட்டுமில்ல கொஞ்சம் கஷ்டமா கூட இருக்கு இயேசப்பா. அது எப்படி இயேசப்பா. மனுசங்க முகத்தை பார்க்காம, அவங்க என்னை புகழுர அந்த சத்தத்தை கேட்காம….எப்பவும் உங்க முகத்தை மட்டும் பார்த்திட்டே இருக்க முடியும். போர் அடிச்சிரும் இயேசப்பா….அதுனால சாரி…..ன்னு சொன்னா என் நிலை என்ன ஆகும் ஏஞ்சல்….என்றவளை பார்த்து

    சிரித்து கொண்டே அதே படிக்கட்டில் தான் உன் வாழ்க்கை அமைஞ்சிரும்….கத்து கொள்ள வேண்டிய அடுத்த படிக்கட்டுகள் பற்றி தெரிந்து கொள்ளாம மரணம் வந்தாலும் ஆச்சரிய படறதுக்கில்லை. என்ற போது

    அதே நேரம் என் பிரெண்ட் ரம்யா எடுத்து கொள்ளுங்க. அவளுக்கு என் இயேசப்பா பற்றி அந்த அளவுக்கு இப்போதைக்கு தெரியாட்டியும். என் வாழ்கையில் நடந்த அதிசயம் மாதிரி அவளுடைய வாழ்க்கையிலும் நடந்து….அவளை என் இயேசப்பா முதல் படிக்கட்டில் ஏற்றி விட்டுட்டாங்க வைச்சுகோங்க…அவள் என்னை மாதிரியே முதல் படிக்கட்டு சப்போஸ் மனுசங்க முகத்தை பார்க்காம….தேவன் மேலேயே உன் கண்கள் இருக்கட்டும் சொன்ன அந்த வார்த்தை ஆரம்பத்தில அவள் கஷ்டபட்டாலும் நம்ம இயேசப்பா மேல வைச்சிருக்கிற அன்பினால அதை கடந்து….அடுத்த படியையும் கடந்து….அதுக்கு மேலயும்….இப்படி எல்லா படிகட்டையும் கடந்து கடைசி வரை போயிட்டா…..நம்ம இயேசப்பா அவளை வாசலுக்கு பக்கத்திலேயே வந்து அவளை அணைச்சிட்டு போகறதை என்னால பார்க்க மட்டும்தான் முடியும்…..பட் ஒண்ணும் செய்ய முடியாது. கடைசி நேரம் பார்த்து தாவி தாவி எப்படி மேலே வர முடியும்….. என்ற போது ஏஞ்சலும் சிரித்தார்.

    ஆவிக்குரிய ஓட்டத்தில முந்தி ஆரம்பித்த நான்…..கடைசியில பிந்தின நிலை தான அடைய வேண்டியதா போயிரும்….அதே மாதிரி பிந்தி ஆரம்பித்த ரம்யா முந்தி ஏற்றுக் கொள்ளபட்டாளே……இப்பதான்…… நீங்க பரலோகத்திற்கு போகுற பாதை ஒரு படிக்கட்டு மாதிரின்னு சொன்ன பிறகுதான் இயேசப்பா சொன்ன வார்த்தையை நான் புரிஞ்சிகிட்டேன் ஏஞ்சல்….சாரி என் இயேசப்பா எனக்கு சொல்லி கொடுத்திருக்காங்க. முதல்ல இந்த வசனத்தை வாசித்தப்ப எனக்கு குழப்பம் வந்துச்சு. காலையில இருந்து வெயிலில் நின்னு வேலை பார்த்தவங்களுக்கும், சாயந்திரம் கொஞ்சம் நேரம் மட்டும் வேலை செய்திட்டு இருந்தவங்களுக்கும் ஒரே சம்பளமா….ன்னு யோசித்திருக்கேன்….ஆனா இயேசப்பா சொன்ன அர்த்தம் இப்பதான் புரியுது….காலையில் இருந்து சும்மா முதல் படிக்கட்டிலேயே நின்னா நம்ம இயேசப்பாவால மட்டும் என்ன செய்ய முடியும்… அவர் சம்பளம் கொடுக்கிறதே கிருபை ன்னுதான் தோணுது ஏஞ்சல்….சோகமாக சொன்னாள். தன்னை குறித்த பயமும் அவளுக்கு வந்து விட்டது. இயேசப்பா கொடுத்திருக்கிற இந்த பாடத்தில ஜெயித்து அடுத்த படிகட்டுக்கும் போகணுமே…..இன்னும் எத்தனை படிக்கட்டுகள் இருக்கோ…..அவள் கவலைப்படுவதை ஏஞ்சலும் கவனித்தார்.   

    இப்ப நீ படிக்கட்டுகள் பத்தி யோசித்து கவலைப்பட்டுட்டு இருந்தியே அதுதான் உன் இயேசப்பா உனக்கு கொடுத்த வார்த்தைகள் பூரணமாகுற விசயம். புரியாமல் பார்த்தாள்.

    படிக்கட்டில ஏறுகிற வேலையை விட்டுட்டு இதே மாதிரி வெறும் கன்னத்தில கை வைச்சு உட்கார்ந்திட்டா…..படிக்கட்டை எண்ண     தான் முடியும்…..ஏற முடியாது குட்டிமா…..என்றவரை பார்த்து சிறிதாக சிரித்தாள்.

    ஆனா இயேசப்பா சொன்னது மேலே போக முடியாது….கீழயே இருக்க வேண்டியதா போயிரும்ன்னு சொன்னாங்க ஏஞ்சல்……முதல் படின்னா ஒகே….கீழே…ன்னு அர்த்தம்…. ஆனா பரலோகத்திற்கு போகிற படிக்கு முந்தின வரைக்கும் போயிட்டு கடைசி படி மட்டும் ஒருத்தர் கடக்க  முடியாம என்னை மாதிரியே  யோசித்து கன்னத்தில கை வைச்சா அது எப்படி ஏஞ்சல்…..கீழயே இருக்க வேண்டியதா போயிரும்….அவள் கேட்ட போது

    அவளின் கேட்ட கேள்வியின் அர்த்தம் புரிந்து கொண்டவராய் சிரித்தார். அதற்கு என்ன பேர் சொல்லுவாங்க…..பரலோகத்திற்கு முந்தின படிக்கட்டிலேயே இருக்க வேண்டியதா போயிரும்ன்னு சொன்னா சரி வருமா ஏஞ்சல்….அவள் சிரித்து கொண்டே கேட்டாள்.

    ஆனா நீ ஒரு விசயத்தை மறந்திட்ட குட்டிமா. எப்பவும் எல்லார் வாழ்கையிலும் ஒரு படி முடிஞ்சு…அடுத்த படி…..அடுத்து அந்த படி முடிஞ்சி….அடுத்த படி…..கண்டிப்பா சாத்தியம் இல்லை. ஏன்னா நீ ஒரு படியில் இருந்து அடுத்த படிக்கு போவதற்கு முன் ஒரு டெஸ்ட் வைக்க படும்….அந்த டெஸ்ட்டில் பாஸ் பண்ணினா மட்டுமே அடுத்த படிக்கட்டு….இல்லாட்டி அதே படியில் இன்னும் நாட்கள் நீட்டிக்கும்….என்ற போது

    அப்ப நான் சொன்னது சரிதான ஏஞ்சல்…..என்றவளை பார்த்து

    ஆனா உன்னை மாதிரி கன்னத்தில கை வைச்சி உட்கார்ந்து யோசிக்கிற சமயம் சாத்தான் இடைபடுகிற சமயமாச்சே….அவன் இடைபட்டா என்ன ஆகும்….

    தெரியும் ஏஞ்சல்….அடுத்து அந்த பாம்பு கட்டம் விளையாட்டு மாதிரிதான்….ஒரே கடியில திரும்பவும் எந்த இடத்தில ஆரம்பிச்சோமோ அதே இடத்திற்கு வர வேண்டியாதா போயிரும்…..என்று சொல்லி வேதனை பட்டு கொண்டாள்.

    இப்ப புரியுதா குட்டிமா. ஏன் முன்னாடி இருக்கிற படிக்கட்டுகளை பார்த்து மலைச்சி கவலைப்பட கூடாதுன்னு…….ஏஞ்சல் சொல்லவும்

    ஆனா இது ரொம்ப டூ மச் ஏஞ்சல்….எனக்கு அடுத்த நாள் டெஸ்ட் இருக்குதுன்னா அதை குறித்து கூட பீல் பண்ணி ஒரு வார்த்தை கூட பேச முடியாது போல……என்று சொல்லி சிரித்தாள்.

    உனக்கு ஒரு விசயம் புரிஞ்சிக்க முடியலை குட்டிமா. இந்த வெறும் கவலைப்படுறதனால என்ன வாழ்கையில நடக்குதுன்னு புரிஞ்சிக்கலை நீ……

    இயேசப்பா சொன்னது ஞாபகம் வந்திருச்சு ஏஞ்சல்……யாராலயும் தன் சரீரத்தோடு ஒரு முழத்தை கூட்ட முடியாதுன்னு சொல்லி இருக்காங்க….என்று சொன்னவளை பார்த்து

    அந்த வசனத்தை நம்ம இயேசப்பா ஏன் அவ்வளவு வேதனையோடு சொன்னாங்க…..ன்னு உனக்கும் தெரிஞ்சிக்க ஆசையா….. என்று கேட்ட போது

    கண்டிப்பா…..ஆனா நீங்க வேதனைபடுரதை பார்த்தா எனக்கு என்னமோ தோணுது….தேவையில்லாம கவலைப்படுறது கூட ஒரு பாவம் போல தோணுது ஏஞ்சல்….அவள் சொல்லி முடித்த போது

    நான் உன்னை அந்த இடத்திற்கு கூட்டிட்டு போன பிறகு நீயே தெரிஞ்சிக்குவ குட்டிமா….போகலாமா…..என்றவரை பார்த்து சிரித்தாள்.

    காபியோடு தன் மகளின் அறையில் நுழைந்தவர்….என்ன அதுக்குள்ள தூங்கிட்டா….என்று ஆச்சரியப்பட்டவர்….தூங்கும் தன் பெண்ணின் முகத்தில் இருந்த சந்தோசத்தை பார்த்து சிரித்து கொண்டார். தேங்க்ஸ் இயேசப்பா. என் பொண்ணுக்கு மீண்டும் உங்க சந்தோசத்தை கொடுத்தற்காக கோடி கோடி நன்றிகள் ஆண்டவரே!!! மனதினில் சொல்லி கொண்டார்.

    ஆனால் தன் பெண் சென்று கொண்டிருக்கிற இடம் இருளும், வேதனையும், கதறலும் சேர்ந்த நரகம் என்பதை தெரிந்து கொண்டால் என்ன ஆவார்?????

    Related Post

    Categories: பைபிள் சம்பவங்கள்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    4 × = twelve

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>