• பைபிள் சம்பவங்கள்(குழந்தைகளுக்காக) – 13

    மெல்லிய காற்றின் ஸ்பரிசத்தில் இருவரும் தேவனுக்கு நன்றிகள் செலுத்திக் கொண்டே எழுந்து நின்றனர்.

    அவர்கள் நின்று கொண்டிருந்த இடம் ஆடவும் பயமடைந்தவளாய் ஏஞ்சலின் கரத்தை இறுக பற்றி கொண்டாள்.

    ஏஞ்சல் என்ன ஆச்சு, ஏன் இந்த மாதிரி நாம நின்னுட்டிருக்கிற இடம் ஆடுது?

    நீ நம்ம தேவன் இந்த பூமியை உருவாக்கினதை பார்க்கணும்னு ஆசைப்பட்டது?

    ஆமா ஏஞ்சல், மறந்தே போனேன். ஏதோ நிறைய கற்களை கொட்டுற சத்தம் கேட்குது.

    நீயே வந்து பார்த்து தெரிஞ்சுக்கோ குட்டிமா.

    ஏஞ்சல் அவளின் கரங்களை பற்றி கொண்டு ஒரு ஆழமான இடத்தை நோக்கி பறந்து கொண்டிருந்தார்.

    எதையும் பார்த்து உணர முடியாத ஒரு இருளான இடத்தை நோக்கி பறந்து கொண்டிருந்த நிலையில் அவள் இருந்தாள்.

    அவளில் ஆயிரக்கணக்கான கேள்விகள்.  நான் ஏஞ்சல்கிட்ட நம்ம இயேசப்பாவும், பிதாப்பாவும் பூமியை உருவாக்கினதை பத்திதான கேட்டேன். ஆனா இந்த மாதிரி இருட்டான இடத்தை பார்க்கணும்னு ஆசைபடலையே.

    அவள் மன எண்ணங்கள் புரிந்தாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் இன்னும் பூமியின் தாழ்விடத்தை நோக்கி பறந்து கொண்டிருந்தார்.

    சரி குட்டிமா, இப்ப பாரு. நம்ம தேவன் இந்த பூமியை உருவாக்கினதை?

    சுற்றி முற்றி திரும்பி பார்த்தாள். கண்களுக்கு ஒன்றும் புலப்படவில்லை. ஏஞ்சல் என்கிட்ட எதுவும் விளையாட்டு காண்பிக்கறாங்களா? புரியாமல் ஏஞ்சலின் முகத்தை பார்த்தாள்.

    என்ன குட்டிமா, ஏன் என்னை பார்க்கிற?

    ஏஞ்சல், சப்போஸ் நான் நம்ம தேவன் பூமியை உருவாக்கினதை பார்க்கறது அவருடைய சித்தமா இல்லாம இருந்தா முதலிலேயே சொல்லிருங்க. இப்படி என்னை ஏமாற்ற வேண்டாம்.

    குட்டிமா, நீயா வேற எண்ணங்களை மனதில நினைச்சிட்டு வெளியே உள்ளதை பார்த்தா, உன் தேவன் உனக்காக வைச்சிருக்கிற காரியங்களை உன்னால புரிந்து கொள்ள முடியாது. அவிசுவாசியா இராம விசுவாசியா இரு.

    ஏன் இப்படியெல்லாம் ஏஞ்சல் சொல்லுறாங்க? மனதில் குழப்பி கொண்டாள்.

    பெரிய பெரிய கற்கள் அவளை நோக்கி ஓடி வருவதை அப்போதுதான் பார்த்தாள்.

    ஏன் இப்படி ஓடி வருது ஏஞ்சல்?ன்னு கேட்டு பக்கத்தில் பார்த்தவளுக்கு ஏஞ்சல் இல்லாதது அதிர்ச்சியை தந்தது.

    புரிந்து கொண்டாள். இதுவும் என் தேவன் நான் மட்டும் தனியா உணர்ந்து கொள்ளுரதுக்காக தெரிந்து கொண்ட காரியம். தேங்க்ஸ் lord. நீங்க என் கூட இருக்கீங்களே? ஸ்தோத்திரம் ஆண்டவரே! மனதில் நன்றிகளை சொல்லி கொண்டு பார்க்க ஆரம்பித்தாள்.

    தான் நின்று கொண்டிருந்த இடத்தை அப்போதுதான் பார்த்தாள். ஒன்றும் கண்களுக்கு தெரிய வில்லை. சிறுது கூட அவளால் அளவிட முடியாத பெரிய கல் உருண்டு வந்து ஒரு இடத்தில் நிற்பதை பார்த்தாள்.

    இது எவ்வளவு பெரிய கல்லா இருக்கும்? மனதில் கேள்வியோடு அவள் அதை நெருங்குவதற்குள் ஒரு பயங்கரமான சத்தம் கேட்டது. இனிமையான இசையும், ஆரவார சத்தமும் கலந்தது போல அவளுக்கு தெரிந்தது. யோபு புத்தகத்தில இதை பத்தி சொல்லப்பட்டிருக்குன்னு ஏற்கனவே ஏஞ்சல் சொன்னாங்களே?

    அப்ப இந்த கல் நம்ம தேவன் இந்த பூமியை உருவாக்கிறதுக்காக போடப்பட்ட கோடி கல்லாதான் இருக்கும். அதுமட்டுமில்ல அந்த சத்தம் கூட தேவ புத்திரர்கள் எல்லாரும் கெம்பீரித்ததா யோபு புத்தகத்தில எழுதப்பட்டிருக்கே.

    இப்படி அவள் யோசித்து கொண்டிருக்கும் போதே, அந்த கோடி கல்லின் மேலே மேலே கற்கள் தானாக குவிய தொடங்கியது. கொஞ்சம் கூட சிந்தாம, எந்த வகையிலும் ஆபத்துகள் ஏற்படாம, கற்கள் அதன் மேல் நிரம்பி கொண்டே இருந்தது.

    பக்கத்தில ஒரு மேஸ்திரியும் இல்லை, கொத்தனாரும் இல்லை. ஆனா என்ன அழகாக வேலை நடக்குது. அப்போதுதான் தன்னுடைய பிரெண்ட் பிரியா தன் புது வீடு கட்டும் போது நடந்த காரியத்தை அழகாக சொன்ன காரியம் அவளுடைய ஞாபகத்திற்கு வந்தது.

    எங்க புது வீடு கட்டும் போது குத்தனார் ஒரு நாள் உடம்பு சரியிலைன்னு லீவ் போட்டுட்டார். அன்னைக்கின்னு பார்த்து வேலை பார்க்க வந்த மற்றவங்களுக்கு என்ன ஒரு சந்தோசம் நினைக்கிற. பாவம் எங்க அம்மாதான். வேலையை பாருங்க, வேலையை பாருங்க….ன்னு புலம்பிட்டு இருந்தாங்க.

    தட்டில செங்கல் அடுக்கி கொடுக்கிற சிற்றாள் கூட அன்னைக்கி வேலை ஒழுங்கா செய்யவே இல்லை. ரொம்ப சோம்பேறித்தனமா வேலை செய்தாங்க. சில டைம்ல நாம டிவில பார்க்கும் போது, ரொம்ப slow motionல படம் ஓடினா எப்படி இருக்கும். அதே மாதிரி இருந்துச்சு. எங்க அம்மா புலம்பும் போது கஷ்டமா இருந்தாலும், எங்க அம்மா கோபப்பட்டதை கூட கண்டுக்காம அந்த slow motionல அவங்க வேலை பார்த்த போது சிரிப்பாதான் இருந்தச்சு. நானும், எங்க அப்பாவும் எங்க அம்மாக்கு தெரியாம பயங்கரமா சிரிச்சிட்டு இருந்தோம்.

    மனதில் எண்ணங்களை அசைபோட்ட பிறகு, ஒரு சிறு புன்னகையுடன் மீண்டும் பூமி உருவாகி கொண்டிருந்த இடத்தை பார்த்தவளுக்கு ரொம்பவே அதிர்ச்சி. ரொம்பவே அழகாக, மிகவும் நேர்த்தியாய் வேலை முடிந்திருந்தது. என்ன இயேசப்பா, நான் முழுமையா பார்க்கிறதுக்குள்ள நீங்க பூமியை அழகாக உருவாக்கிட்டீங்களே. அந்த சிறு விழிகளில் கண்ணீர் எட்டி பார்த்தது.

    நான் ஏன் என் இயேசப்பா மேல கோபப்படணும்? இது என்னுடைய தப்புத்தான. என்னுடைய இயேசப்பா என் மேல கிருபை பாராட்டி நான் இந்த இடத்தில எல்லாம் பார்க்கிறதுக்கு உதவி செய்தாங்க. நான் தேவையில்லாம இந்த நேரத்தில என் பிரெண்ட் சொன்ன காரியத்தை நினைச்சி பார்க்கணுமா?

    தன்னையே வைது கொண்டிருந்தவள், கொஞ்சம் கூட அவள் பார்க்க முடியாத ஒரு காற்றினால் இழுக்கப்பட்டவளாய், புதிதாக உருவாகி இருந்த அந்த பெரிய பூமி நோக்கி மோதும் படி பறந்தாள்.

    எனக்கு என்ன ஆச்சு……நான் தப்பு செய்தற்கான தண்டனையா……….மனதில் நினைத்து கொண்டிருக்கும் போதே……..பூமியின் உள்ளே எந்த வேகத்தில இழுக்கப்பட்டாளோ அதே வேகத்தில் இன்னும் போய் கொண்டே இருந்தாள். எவ்வளவு பெரிய பூமியை கடந்து வந்திருக்கேன். ஆனா எனக்கு ஒண்ணும் ஆகலை. டிவியில டிஸ்கவரி சேனல்ல காண்பிக்கும் போது, பூமியின் மேல ஏதாவது பெரிய கல் மோத வந்தா, அது அப்படியே எத்தனை விதமான பீசஸ் ஆகி வெடிச்சி சிதறி போகுது. ஆனா எனக்கு ஒண்ணும் ஆகலை.  தேங்க்ஸ் lord. என்னை காப்பாற்றினதற்காக கோடான கோடி நன்றிகள்.

    வேறு ஏதோ ஒரு உருண்டை போல அமைப்பினுள் நுழைந்து கொண்டிருந்தாள். இது என்ன? நம்ம இயேசப்பா உருவாக்கின பூமி மாதிரி இருக்கு? ஆனா என்னது இது? உள்ளே இன்னும் நுழைந்து கொண்டிருந்தாள்.

    கண்களில் புலப்பட்டது எல்லாம் வெறும் மலைகள் போன்ற அமைப்பில் இருந்த மண் குவியல்கள். நம்ம அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் செய்யுற மாதிரி நாமளும் இந்த மண்ணை எடுத்துட்டு போய் ஆராய்ச்சி பண்ணிருவோமா? மனதில் நினைத்து மண்ணை எடுத்தவளுக்கு அது அவளுடைய கரங்களில் தூசியாக மாறி மறைந்து போனது. அப்ப இது மண் கூட இல்லையா? முழுக்க வியப்போடு அங்கே காணப்பட்ட எல்லா  மண் குவியல்களையும் பார்த்தாள்.

    எங்க இயேசப்பா பூமியை உருவாக்கும் போது அங்க இருந்த மண்ணும், கல்லும் அழகாக இருந்துச்சு. இதென்ன ஒண்ணும் கிடையாதா? கேள்வியோடு இருக்கும் போதே அவள் நுழைந்திருந்த உருண்டையில் இருந்து வெளி வந்திருந்தாள். வெளியே வந்தவளுக்கு ரொம்பவே ஆச்சர்யம். ஏன்னா அவள் நுழைந்த உருண்டை மாதிரியே இன்னும் அவள் கண்ணுக்கு தெரிந்த வரை நிறைய உருண்டைகள் தொங்கி கொண்டிருந்தன. அளவில் மட்டும் வித்தியாசமாய்.

    அத்தனை உருண்டைகளின் நடுவில நம்ம பூமி எங்க போச்சு? அவள் ஆராய்ந்து கொண்டிருந்த போது, ஒரு உருண்டை பல மடங்கு வெளிச்சத்துடன் மின்னுவதை பார்த்தாள். தேங்க்ஸ் இயேசப்பா, மின்னுற அந்த உருண்டைதான பூமி?

    அவளுக்கு ஒரு தெளிவான குரல் கேட்டது.

    வானங்களைச் சிருஷ்டித்துப் பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.

    என்னுடைய இயேசப்பா குரலா? மனதில யோசித்தவளுக்கு எல்லாம் புரிந்தது. இந்த பூமி மாதிரி எத்தனையோ உருண்டைகள்(கிரகங்கள்) இருந்தாலும் என்னுடைய தேவன் எங்களுடைய குடியிருப்புக்காக அழகுப்படுத்தினது நாங்க வசிக்கிற பூமி மட்டும்தான். தேங்க்ஸ் இயேசப்பா, நீங்க வெளிபடுத்தின சத்தியத்திற்காக நன்றிகள்பா.

    இயேசப்பா என் மனதில ஒரு சந்தேகம். இந்த பூமியை மட்டுமே நீங்க நாங்க வாழுறதுக்காக உருவாக்கி இருக்கும் போது, மற்ற உருண்டைகளையும் நாங்க ஆராய்ச்சி பண்ணி மனுசங்களை குடி போக வைச்சிருவோம்ன்னு ஏன் தேவையில்லாத வேலையை பார்த்திட்டு இருக்காங்க நம்ம அறிவியல் அறிஞர்கள்.

    ஒரு மெல்லிய காற்றினால் இயேசப்பா அவளை பாராட்டவும் மகிழ்ந்தவளாய்………..இயேசப்பா உங்ககிட்ட ஒரு விண்ணப்பம். பூமிக்குள் நுழையும் போது, என் தலை உடைந்திருமோன்னு பயத்தில வந்ததால நான் நீங்க பூமியில் உருவாக்கின அழகான காரியங்களை பார்க்க முடியாம போச்சு. எனக்கு இன்னொரு வாய்ப்பு தருவீங்களா. என்னுடைய தேவன் பூமியில் உருவாக்கின எல்லா காரியங்களையும் தொட்டு பார்க்க ஆசைபடுறேன். அனுமதிப்பீங்களா?

    கேள்வியோடு இயேசப்பா தரும் பதிலுக்காக காத்திருந்தாள். மெல்லிய காற்று வரவும், தேங்க்ஸ் இயேசப்பா, நீங்க என்னை அனுமதித்தற்காக நன்றிகள்பா. பூமியின் மேல் பறந்து கொண்டிருந்தவள், அதன் மேற் பரப்பில் நடக்க ஆரம்பிக்கவும், முழுமையான சந்தோசம் அவளில் இருந்தது.

    உனக்காகதான் இத்தனை நாள் காத்திட்டிருந்தேன். அவ்வளவுதான் நீ. இன்னையோட உன் நாள் முடிந்தது……..ஏதோ ஒரு குரல் அவளை பயமுறுத்துவது போல இருந்தது. நானா எதையும் நினைச்சேனோ? யார் பேசினாங்க. சரியா புரியலை. இயேசப்பா நீங்க ஏதாவது பேசினீங்களா? அவளை வரவேற்க நரகத்தில் சாத்தான் காத்து கொண்டிருந்தது தெரியாமல் சந்தோசத்தோடு தேவனுக்கு நன்றிகள் சொல்லி கொண்டே நடந்து கொண்டிருந்தாள்.

    ஆனால் அவளை என்றும் பாதுகாத்து கொண்டிருந்த ஏஞ்சலின் விழிகளில் மட்டும் கண்ணீர் எட்டி பார்த்தது.

    Related Post

    Categories: பைபிள் சம்பவங்கள்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    − 5 = four

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>