• பைபிள் சம்பவங்கள்(குழந்தைகளுக்காக) – 20

    ஏன் எனக்கு அடிக்கடி இந்த மாதிரி ஆகுது??? எழும் போதே புலம்பி கொண்டேதான் எழுந்தாள்.

    எழுந்தவளுக்கு வழக்கம் போல் அதிர்ச்சி. அவள் உடல் காணாமல் போயிருந்தது. என்ன ஆச்சு அந்த பொண்ணை காணும்…..தன் தலையை தட்டி கொண்டவள்…..என் உடம்பை காணும்……. புலம்பி கொண்டே குகையின் வெளிப்புறத்தை எட்டி பார்த்தாள்.

    எந்த நடமாட்டமும் தெரிய வில்லை. எவ்வளவு நேரம் நான் மயக்கத்தில இருந்தேனோ…… அவள் யோசித்து பார்த்தும் பதில் கிடைக்காததால் வெளியே வந்து நின்று எந்த பாதையில் போகலாம்……. என்று யோசித்து கொண்டிருந்தாள்.

    அப்பொழுதான் இரண்டு பெரிய பூதங்கள் ஒரு பொண்ணை இழுத்து கொண்டு சென்று கொண்டிருந்தனர். அவர்கள் இழுத்த இழுப்பில் அவள் கையில் இருந்த சதை அந்த பூதங்களின் கையில் வந்தது. வலி தாங்காமல் அந்த பெண் கத்திக் கொண்டிருக்க அந்த பூதங்கள் எதையும் கண்டு கொள்ளாமல் தன் வேலையை பார்த்தது.

    அவர்கள் இழுத்து கொண்டு சென்றதில் அந்த பெண்ணின் கால்கள் கீழே இருந்த கல்லில் பட்டு அது வேறு அந்த பெண்ணுக்கு வலியை கொடுத்து கொண்டிருந்தது. பார்த்த அவளுக்கு கண்களில் கண்ணீர் எட்டி பார்த்தது.

    நாங்க பூமியில் இருக்கும் போது, எங்களை எங்க தேவன் என்ன அழகாக பார்த்து கொள்றார்ன்னு இப்பதான் எங்களுக்கு புரியுது. ஆனா அதற்காக ஒரு நாள் கூட நாங்க அவருக்கு நன்றிகள் சொன்னதா ஞாபகம் இல்லை.

    உண்மையில் அந்த பூதங்கள் சொன்னது உண்மைதான். நாங்க பரலோகத்திற்கு போன பிறகு மட்டுமில்ல, பூமியில் வாழும் போதும் கூட எங்களை ஒரு இளவரசன்/ இளவரசி மாதிரிதான எங்க தேவன் எங்களை நடத்துறாங்க. ஆனா அதெல்லாம் அவர் நடத்தினப்ப தெரியலையே. எதை பார்த்தாலும் குறை……இது இல்லை….அது இல்லை…..எனக்கு இதை உங்களால் கொடுக்க முடியாதா…….. எத்தனை தடவை இயேசப்பாகிட்ட நான் போராடி இருக்கேன். இப்ப என்னுடைய உடம்பு அந்த சாத்தான் நினைக்கிற, அவன் ஆசைபடுகிற பிரகாரமாய் வேதனைபட்டுட்டிருக்கு. இதே என்னுடைய இயேசப்பாவா இருந்தா….. என்னை இந்த மாதிரி கஷ்டப்படுத்தி பார்ப்பாரா………….

    என்னுடைய இயேசப்பா மாதிரி யாரும் கிடையாது…….. மனதில் ஒரு ஏக்க பெரு மூச்சு விட்டவள் எந்த பாதையில் செல்லலாம் என்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தாள்…… மீண்டும் அந்த பெண்ணின் குரல். அப்ப இன்னும் அவங்க ரொம்ப தூரம் போகலையா……மனதினில் நினைத்தவள்….. இப்போது நமக்கு தெரிந்த பாதை இது மட்டும்தான்….. பூதங்களை follow பண்ணித்தான் சாத்தான் இருக்கிற இடத்தை கண்டுபிடிக்க முடியும்.

    சரி…… இப்போ அந்த பொண்ணுக்கு என்ன ஆகுதுன்னு பார்க்கலாம்….. எண்ணத்தோடு குரல் வந்த திசையில் நடக்க ஆரம்பித்தாள். இப்பொழுதும் அந்த பூதங்களின் சத்தம் கேட்டு கொண்டுதான் இருந்தது. கிட்டத்தட்ட எட்டி விட்டாள். அவளுக்கு முன்னாகத்தான் அந்த பொண்ணை இழுத்து கொண்டு சென்று கொண்டிருந்தனர். அவள் தலையில் இருந்த முடி எல்லாம் அலங்கோலமாய் இருந்தது.

    பக்கத்தில் இருந்த பார்த்த போது அழகாவே தெரிந்தது. தன்னை விட மூத்தவள் என்பது….. அப்ப அக்கா போல…. நரகத்தில் எல்லா வயதுக்காரங்களும் பார பட்சமின்றி வராங்க……. அவ்வளவு தூரம் சாத்தானுக்கு எல்லா மக்கள் மேல ஒரு அபிப்பிராயம்…. தலையில் அடித்து கொண்டாள்.

    ஆமா….. என்னை ஏன் அப்படி பார்க்குற….. தீடீரென்று வந்த குரலால் தூக்கி வாரி போட்டவளாய் யார் அது……..என் கூட பேசுறது…..  சுற்றிலும் பார்த்தாள். இவளை விட வயதில் மூத்தவள் தான் இவள் பக்கத்தில் வந்து நின்றாள்.

    அப்பாடா….. நரகத்தில பேச்சு துணைக்கு ஆள் இருக்கு போல….. மனதில் நினைத்து கொண்டு அந்த பொண்ணை பார்த்தாள். ஆனா முகம்….. இப்ப இந்த பூதங்கள் தூக்கிட்டு போற முகம் போல தெரியுது……. கொஞ்சம் அதிர்ச்சியாகவே பார்த்தாள்.

    முதலில் அந்த அக்காதான் இவளோடு பேச ஆரம்பித்தார். இவ்வளவு சின்ன பொண்ணா இருக்க…. நீ கூடவா நரகத்திற்கு வந்திருக்க…… ஆச்சர்யபட்டாள். ஒன்றும் பேசாமல் அமைதியானாள். அவள் தான் ஆறுதல் படுத்தினாள்.

    சரி விடு, நீ இங்க என்ன பண்ணிடிருக்க…… என்று கேட்டவளுக்கு

    நான் என்னுடைய உடம்பை தேடிட்டி இருக்கேன்…… அப்பதான் உங்க குரல் கேட்டு உங்க பின்னாடியே வந்தேன்……அக்கா……… என்று சொன்னவளிடம்

    என் பெயர் குளோரி. குளோரின்னே கூப்பிடு……. சரி இந்த இடத்திற்கு வந்து எத்தனை நாள் ஆச்சு…..

    தெரியலை……. ஆனா உங்களை பார்த்த பிறகு கொஞ்சம் சந்தோஷமாய் இருக்கு. நீங்க இங்க எப்ப வந்தீங்க…… ஆர்வத்துடன் கேட்டாள்.

    கண்டிப்பா சொல்லுறேன்….. ஆனா அந்த பூதங்கள் பின்னாடி போய்கிட்டே பேசுவோமா….. இல்லை இவங்க என் உடம்பை எங்க கூட்டு போறாங்கன்னு தெரியாம போயிரும்……..

    சரி என்றவாறு தலை அசைத்தாள்.

    என்னுடைய உடம்பை சாத்தான்கிட்ட கூட்டிட்டு போறதா சொன்னாங்க….. அதுனாலதான் போயிட்டு இருக்கேன். அந்த சாத்தான் எப்படி தான் இருப்பானோ….. என்ன தண்டனை கொடுக்க போறான்னு வேற தெரிந்து கொள்ளணுமே….. கண்களில் பதட்டம் தெரிந்தது

    பாவம் இந்த அக்கா….. மனதினில் நினைத்தவள்….. தேங்க்ஸ் இயேசப்பா….. கடைசியில எனக்கு என்னுடைய உடம்பு எங்க இருக்கன்னு கண்டுபிடிக்க உதவி செய்திட்டீங்களே….. மனதினில் நன்றிகள் சொல்லி கொண்டாள்.

    நான் எப்ப இங்க வந்தேன்னு கேட்டியே….. இன்னைக்குதான்….. இப்ப தான் வந்தேன்….. உண்மையில் இவளுக்கு ஆச்சர்யமாய் இருந்தது.

    உண்மையில் அந்த அக்காவை குறித்து தெரிந்து கொள்ள ஆசைபட்டாள். ஏன் அவர் இங்கு வந்தார் என்பதும் அவள் தெரிந்து கொள்ள விரும்பியது உண்மை…. ஆனா இதை வாய் தெரிந்து, அதுவும் இப்படிப்பட்ட பதட்டமான நிலையில் கேட்கிறது சரி வருமா….. மனதினில் நினைத்து கொண்டாள்.

    குளோரியே தன்னை பற்றி சொல்ல ஆரம்பித்தாள். நான் எங்க அம்மா அப்பாக்கு ஒரே பொண்ணு. தம்பியும் இருக்கான். ஆனா இந்த வயதிலயும் நாங்க ரெண்டு பேரும் எலி, பூனை மாதிரிதான் சண்டை போடுவோம்…… பெரு மூச்சு விட்டாள் குளோரி.

    குளோரி தன் கடந்த காலத்தை குறித்து கலங்குவது அவளுக்கும் புரிந்தது. அவள் அமைதியானாள். அவர்கள் சொல்லும் போது சொல்லட்டும்……. அமைதியாக குளோரி முகத்தை பார்த்தாள்.

    அப்பா சர்ச் போதகர்….. உண்மையில் இந்த வார்த்தையில் அவள் அரண்டு போனாள். ஆனால் குளோரி அதை எந்த சுவையும் இல்லாமல் சொன்னாள். இயேசப்பாவுக்கு ஊழியம் செய்கிறவர்களுடைய பிள்ளைகள் கூடவா இங்க வருவாங்க….. இவளுக்கு ஆச்சர்யம். அவள் மனது அவளுக்கு சொன்னது….. சாலொமோன் யாரு…… தேவனுக்கு ரொம்பவே பிரியமானவனுக்கு பையன்தான…. அது மட்டுமா முதன் முதலில் தேவனுக்கு ஆலயம் கட்டினவன்……. பொருத்தனைகளின் புத்திரன்ன்னு அவருடைய அம்மா அவரை குறித்து சொல்லி இருக்காங்க….. தாவீதுக்கு கூட தேவன் கொடுத்த வாக்குத்தத்ததினால் பிறந்தவர்தான….. ஆனா தன் கடைசி கால கீழ்படியாமையினால் இங்க வந்து கஷ்டபடுகிறாரே…… தன் தப்பை உணர்ந்து கொண்டாள். எங்க அம்மா, அப்பா இயேசப்பாக்கு உண்மையா வாழுறவங்க…… ஆனா அவங்க பிள்ளையா இருந்தும் நான் இதே நரகத்திலதான இருக்கேன்…..

    அவள் காதுக்கு கேட்கும் குரலில் ஒரு சத்தம் ஒலித்தது. அவரவர் செய்கிற நன்மைகள் படியே தேவன் நியாய தீர்ப்பு செய்வார்….. பெற்றோர்களுடைய நன்மையோ/ தீமையோ வைத்து பிள்ளைகள் நியாயம் தீர்க்க படுவதில்லை. பிள்ளைகளுடைய நன்மைகள்/ தீமைகள் வைத்து பெற்றோர்கள் நியாயம் தீர்க்க படுவதில்லை. தெளிவான குரல். அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது. என் தேவன் எனக்கு அனுப்பியிருக்கிற சத்தியம். எசேக்கியேல் புத்தகத்தில கூட தேவன் இதை குறித்து தெளிவா சொல்லி இருக்காங்களே….. ஆனா இந்த சத்தியத்தை இப்ப நான் தெரிந்து என்ன ஆகப்போகுது…… என் வாழ்க்கை இனி நரகத்தில் தான….. கண்களில் வந்த கண்ணீரை மறைக்க முடியாமல் அழுதாள்.

    என்ன இப்பவும் அழுதிட்டு…. உங்க அம்மா அப்பாவை குறித்து யோசித்தியா….. என்று கேட்ட குளோரிக்கு இல்லை என்று சொல்ல மனம் இல்லாதததால் அமைதியாக இருந்தாள்.

    எனக்கு கூட ரொம்பவே அழுகையா வருது….. ஆனா மொத்தமா பூமியில இருக்கும் போதே அழுது தீர்த்துட்டேன்….. அதுனால இப்ப அழுகை வரலை…… கொஞ்சம் நேரம் மீண்டும் அமைதியானாள்.

    பூதங்கள் குளோரியின் உடம்பை இன்னமும் சுமந்து கொண்டுதான் சென்று கொண்டிருந்தன. எப்ப இந்த சாத்தானை பார்க்க போறோம்….. என்ற எண்ணம் மனதினில் தோன்றினாலும் குளோரியின் கதை உண்மையில் வேதனை நிறைந்தது என்பதை மட்டும் அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.

    அப்பா முதலில் நம்ம தேவனை தெரியாத குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். ஆனா தன்னுடைய வாலிப வயதில அன்புக்காக ஏங்கிய சமயம் தன்னுடைய பிரெண்ட் மூலமா நம்ம இயேசப்பாவை பற்றி தெரிந்து கொண்டு, இந்த நிமிசம் வரை அவருடைய பிள்ளையா வாழ்கிறவர். ஒரு விசயத்தில கூட எங்க அப்பாவை நான் குறை சொல்ல மாட்டேன். ஆனா எங்க அம்மா…………… பெரு மூச்சு விட்டாள்.

    முழுக்க முழுக்க இந்த உலக வாழ்கையை வாழ்கிறவங்க. அவங்களுக்கு வாழ்க்கைனா நல்ல டிரஸ், நல்ல பிரயாணம்…… நகை…. மேக்கப்….. இன்னமும் எத்தனையோ விசயங்கள். எங்க அப்பா வாழ்க்கை பார்த்து எந்த அளவுக்கு சின்ன வயதில ஒரு கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்ந்தேனோ, அது அப்படியே என்னுடைய டீன் ஏஜ்ல முழுமையா மாறி போச்சு…… முதலில் டிவி…… என்னால அதை மறக்கவே முடியாது. என்னுடைய கற்பனை உணர்வகளை எழுப்பி விட்டதே இந்த டிவி காரியம்தான்….. முதன் முதலில் நான் டிவி பார்த்த போது, எங்க அப்பா என்னை ரொம்பவே கண்டிச்சாங்க….. ஆனா எங்க அம்மா டிவிதான…. பார்த்துட்டு போகட்டுமே….. இதுல என்ன தப்பு வந்துற போகுதுன்னு என்னுடைய தப்புக்கு துணை நின்னு என்னை நரகத்திற்கு வழி அனுப்பி வைச்சவங்களே அவங்கதான்…..

    உண்மையில் அவள் தன்னுடைய அம்மாவை நினைத்து பெருமைபட்டு கொண்டாள். நான் தப்பு செய்த போதெல்லாம் அம்மா என்னை சப்போர்ட் பண்ணினதே கிடையாது….. இது தப்பு…. அது தப்புன்னு அம்மா சொல்லும் போது நான் எத்தனை தடவை எங்க அம்மா மேல கோபப்பட்டிருக்கேன்….. மனதினுள் நொந்து கொண்டாள்.

    எங்க அப்பா எனக்காக முழங்காலில் நின்ன காரியங்கள் பார்த்த பிறகும் கூட என்னுடைய தப்பிதங்கள் பெருகிட்டே தான் இருந்தது. அடுத்து சினிமா…..கெட்ட பிரெண்ட்ஸ்…… தேவை இல்லாம ஜாலி ட்ரிப்…… காதல்…… சொல்லும் போதே முழுக்க உடைந்து போனாள் குளோரி. நான் இங்க இருக்குறதுக்கே அவன்தான் காரணம்……

    எங்க அப்பாவுடைய அழுகையை விட, என்னுடைய இயேசப்பா அன்பை விட அவனுடைய டிரஸ், ஸ்டைல்…. பேசின பேச்சு…… நடந்து கொண்ட விதம்….. நாயாய் என்னை துரத்தி துரத்தி காதலிக்கிறேன்னு சொன்ன காரியம்….. எல்லாம் அப்ப எனக்குள்ள ஒரு பெருமையை, போதையை கொடுத்திருச்சு. நான் வீட்டுக்கு லேட்டா வந்தாலும் அதை பெரிய விஷயமா எடுத்துக்காத எங்க அம்மாவுடைய அலட்சிய போக்கு இன்னமும் நான் தப்பு செய்ய தூண்டினது.

    அப்பா ரொம்ப கோபப் பட அவனோடதான் வாழ்க்கைன்னு சொல்லி வீட்டை விட்டே கிளம்பி போனதுக்கு அவன் எனக்கு கொடுத்தது விபச்சார வாழ்க்கை மட்டுமே…… உண்மையில் இந்த காரியங்களை எல்லாம் எங்க அப்பா தெரிஞ்சு கொண்டா உடைஞ்சு போயிருவார்…… தேம்பி தேம்பி அழுதாள். உங்க இயேசப்பா கூட உங்களை குறிச்சு ரொம்ப வேதனைப் பட்டிருப்பார்…… வாய் வரை வந்த வார்த்தையை அடக்கினாள் அவள். அந்த விபசார வாழ்கையை தொடர பிடிக்காம இன்னைக்கி நான் தற்கொலை செய்துக்கிட்டேன்……… அதிகமாகவே அழுதாள்.

    உண்மையில் அவளுடைய மனமும் கணத்தது. வாழ்கையில் இத்தனை பிரச்சனை உண்டா என்ன……. மனம் கேள்வி கேட்டு கொண்டிருக்கும் போதே, பூதங்கள் ஒரு இருட்டான அறையில் நுழைந்து கொண்டிருந்தனர். குளோரியின் தோள்களை தொட்டவள், சாத்தான் அறை வந்திருச்சு போல…… பதட்டமாக சொன்னாள்.

    இருவரும் ஒருவர் கையை ஒருவர் பிடித்தவாறு, அந்த அறையினுள் நுழைந்தனர். எல்லா பக்கமும் கந்தக தீ எரிந்து கொண்டிருந்த பிறகும் அந்த அறை ஏனோ இருட்டாக தான் இருந்தது. சுற்றிலும் நோட்டம் இட்டாள்.

    தேவனுடைய வார்த்தைகளின் இரகசியங்களை தெரிந்து கொண்ட சிறு பெண்ணே உன்னை நான் வரவேற்கிறேன்……… கர்ஜனையான குரலில் சாத்தான்தான் பேசி கொண்டிருந்தான். பயத்தில் இன்னும் குளோரியின் கரங்களை இறுக பற்றி கொண்டாள்.

    உள்ளே போகலாமா…. அப்படியே வெளியே போயிடலாமா…… குழம்பி நின்றாள்.

    குளோரி அவளுடைய முகத்தை ஆர்வமாக பார்த்தாள். பூதங்கள் அவர்கள் இருவரையும் இழுத்து கொண்டு, சாத்தானின் முன் நிப்பாட்டினர்…… அந்த குழப்பத்திலும் இவளுடைய கேள்வி…… இப்ப எப்படி பூதங்களுக்கு எங்களை பிடிக்க முடிஞ்சுச்சு…… குளோரி ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.

    எத்தனை நாள் உனக்காக வெயிட் பண்ணுறேன் தெரியுமா…… மீண்டும் அதே கர்ஜனையான குரல். தன்னுடைய உடலைத்தான் தேடி கொண்டிருந்தாள் அவள்……. ஏதோ அழுக்கு டிரெஸ்ஸை குப்பை தொட்டியில் போடுவது போல அதே கீழே போட்டிருந்தன பூதங்கள்.

    உன் உடம்பு உனக்கு வேணுமா……. ரொம்பவே இகழ்ச்சியாக அவன் கேட்டான். முகத்தை உன்னிப்பாக பார்க்க முற்பட்டும் அவளால் சாத்தானை பார்க்க முடியலை. சுற்றிலும் இருந்த இருட்டு, முழுக்க முழுக்க அவன் முகத்தை மறைத்திருந்தது. ஆனால் குரல் மட்டும் கெர்ச்சிக்கும் சிங்கம் போல…… என்னுடைய இயேசப்பா குரல் எவ்வளவு அழகாக இருக்கும். அவர் யூத ராஜ சிங்கம்…. இது வெறும் மோசமான சிங்கம் மனதினுள் நினைத்து கொண்டாள்…..

    எங்கிருந்துதான் அவனுக்கு ஆவேசம் வந்ததோ பயங்கரமாக கத்த ஆரம்பித்தான். ஏன்…… குளோரியும் அவளும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டனர்.

    என் முன்னாடி எப்படி நீ என் எதிரியை குறித்து புகழுவ….. கணீரென்று கூறியதில் விக்கித்து போனாள். நான் மனதில பேசுறது இவனுக்கு எப்படி கேட்டுச்சு…..

    கோபத்தில் நடு அறை வரை வந்தவன், ஏற்கனவே துடித்து கொண்டிருந்த அவளுடைய உடலை எடுத்து தூக்கி சுவற்றில் மோதும் படி வீசி எறிந்தான். குளோரியே கலங்கி விட்டாள். அந்த இடத்திலேயே உட்கார்ந்து அழ ஆரம்பித்தாள் அவள்.

    சாத்தான் தன் பக்கத்தில் வருவதை பார்த்ததும் எழுந்தவள் விலகி போய் நின்றாள்.

    உனக்கு உன் உடம்பு வேணுமா….. பாசமாய் கேட்டான் அவன்

    ஒன்றும் சொல்லாமல் அமைதியாக நின்றாள்.

    நீ வேணா உன் உடம்பை எடுத்துட்டு உங்க வீட்டுக்கு போகலாம்….. போ உன் உடம்பை எடுத்துக்கோ….. ரொம்பவே பாசமாய் பேசினான். நம்ப முடியாமல் நின்றாள்.

    உண்மையை தான் சொல்லுறேன்……….. அவன் சொன்ன வார்த்தையில் ஒரு நிமிடம் தடுமாறி போனாள்.

    தன் உடம்பை எடுக்க ஓடினாள்.

    ஓடாத, அவன் உன்னை ஏமாற்ற பார்க்கிறான்…... குளோரி சொன்ன வார்த்தைகள் கேட்ட அடுத்த நொடி அந்த தன்னுடைய உடம்பில் தான்(ஆவி) அடைபட்டது அப்போதுதான் அவளுக்கு புரிந்தது.

    உடம்பெல்லாம் வலித்தது. வேதனை தாங்க முடியாமல் கீழே உருள ஆரம்பித்தாள். எல்லா பூதங்களும் அவளை பார்த்து சிரித்து கொண்டிருந்தன. சாத்தானும் சிரித்து கொண்டிருந்தான். குளோரி நடந்ததை பார்த்து கலங்கி கொண்டிருந்தாள். தனக்கு என்ன நடக்கும் என்ற பயத்தை விட, அந்த சிறு பெண்ணின் வேதனைதான் குளோரியை காயப்படுத்தியது.

    Related Post

    Categories: பைபிள் சம்பவங்கள்

    One thought on “பைபிள் சம்பவங்கள்(குழந்தைகளுக்காக) – 20

    • Galen says:

      I wanted to type a simple message in order
      to say thanks to you for those precious strategies you are
      placing on this site. My particularly long internet look up has at the end been honored with brilliant knowledge to go over with my colleagues.
      I ‘d believe that most of us visitors are truly blessed to exist
      in a decent community with many lovely professionals with helpful hints.

      I feel somewhat happy to have encountered your entire webpage and look forward to
      plenty of more brilliant moments reading here. Thanks again for
      a lot of things.

      this is not because of us. Glory to the Lord. Jesus loves you.
      your friend

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    − five = 2

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>