• பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக)- 38

    இன்னிக்கி ஏஞ்சல் என்னை எங்க கூட்டிட்டு போறாங்க….அன்னிக்கி ஒரு வீட்டுக்கு என் இயேசப்பா கூட்டிட்டு போன மாதிரி இன்னிக்கும் ஏதாவது ஒரு வீட்டுக்கு நான் போகணும்னு என்பது என்னுடைய இயேசப்பா சித்தமா இருக்கும் போல…..மனதினில் நினைத்து கொண்டாள்.

    ஆனால் பாதை மாறி போகவே பயம் வந்து அவளை சூழ்ந்து கொண்டது….ஏஞ்சல்….ஏன் இந்த பாதையில போறாங்க. இது அன்னிக்கி அந்த பூதம் கூட்டிட்டு போற பாதை மாறி மாதிரி தெரியுதே. அப்ப நான் நரகத்திற்குத்தான் போறேனா…..நினைத்த போதே அவளை ஒரு பயம் சூழ்ந்து கொண்டது.

    என்னை……. தேவையில்லாம தன்னை பத்தியே கவலைப்பட்டு கஷ்டபடுறவங்களை பத்தி காண்பிக்கத்தான் கூட்டிட்டு போறேன்ன்னு சொன்னாங்க. ஆனா இப்ப பார்த்தா….நரகத்திற்கு….அவள் சொல்லி கொண்டிருந்த போதே…..நரகத்தின் நுழை வாயிலை நெருங்கி விட்டார்கள். இன்னைக்கும், அன்றைக்கும் உள்ளது ஒரே வித்தியாசம் மட்டுமே. அன்னிக்கி என் இயேசப்பா என்னை மன்னிச்சதை பத்தி தெரிந்து கொள்ளாம போனேன். ஆனா இன்னிக்கி என் இயேசப்பா என்னை மன்னிச்சதை தெரிந்து கொண்டது மட்டுமில்ல….நான் தேவையில்லாம யோசிக்கிறது என் தேவனை எந்த அளவுக்கு கஷ்டபடுத்த வல்லது என்பதை படிக்க போறேன்….மனதினில் சொல்லி கொண்டாள்.

    என்ன குட்டிமா…..போகலாமா….கேள்வியுடன் கேட்டவருக்கு

    கண்டிப்பா….இந்த இடத்தில போய்தான் நான் இந்த பாடத்தை கத்துக்கணும்னு என் இயேசப்பா விருப்பமா இருக்கும் போது….அதுக்கு நான் முழுமையா கீழ்படியுறேன்…..சொன்ன அவளை பார்த்து ஆச்சரியபட்டார்.

    உனக்கு நரகத்தை பார்த்து கவலையில்லையா…… அவர் கேட்ட போது

    பொய் சொல்ல விரும்பலை ஏஞ்சல். ஆனா என் இயேசப்பா என் கூட இருக்கும் போது, அந்த பொல்லாத சாத்தானால் என்னை என்ன செய்ய முடியும்…என்கிற நம்பிக்கை மனதில தோணுது ….அவள் சொல்லி முடிக்க

    இப்பவும் நான் உனக்கு சொல்ல வேண்டிய ஒரு முக்கியமான விசயத்தை சொல்லிர்றேன். அது என்னதுன்னா…..நீ பார்க்க போற இடம் நரகத்தில ஒரு பகுதி….அந்த இடத்தில நீ உணர்ச்சி வசப்பட்டா நீயும் அந்த வேதனையை தாங்க வேண்டியதா போயிரும் குட்டிமா……என்று சொன்ன ஏஞ்சலின் வார்த்தைகளை புரிந்து கொள்ள முடியாமல் பார்த்தாள்.

    இப்ப பாடம் மட்டும்தான கத்துக்க போறோம் ஏஞ்சல். அப்படி இருக்கும் போது நான் ஏன் அந்த கஷ்டத்தை அனுபவிக்க வேண்டியதா போயிரும்ன்னு சொல்லுறீங்க….அவள் கேள்வி கேட்டாள்.

    இப்ப நான் சொன்னா புரியாத மாதிரி தான் தோணும்….ஆனா அங்க வந்து பார்த்த பிறகு நீயும் புரிஞ்சுக்குவ….அவர் பூடகமாய் சொன்னதை புரிந்து கொள்ள முடியாமல் பார்த்தாள்

    ஏஞ்சல் சொல்லுறதை பார்த்தா….அது பனிஸ்மென்ட்டா இருந்தாலும் இல்ல வெறும் படிக்கிற பாடமா இருந்தாலும் சரி, அது என்னுடைய கையில இருக்கிற மாதிரி சொல்லிட்டாங்க…..சரி, இயேசப்பா கூட இருக்காங்க….என் இயேசப்பா பார்த்துக்குவாங்க….மனதினில் நினைத்து கொண்டாள்.

    நுழை வாயிலை எட்டி விட்டனர். உள்ளே….நினைத்த போதே மனம் கலங்குவதை உணர்ந்தாள்.  பெரிய பெரிய பாம்பு….வழியில படுத்து கிடக்குமே….அதை எப்படி கிராஸ் பண்ண போறோமோ…..மனதினில் கேட்டு கொண்டாள்.

    உள்ளே நுழையவும் செய்தனர்…எந்த மாற்றமும் இல்லை அந்த பாதையில். அதே பிண வாடையும்…..எங்கு பார்த்தாலும் இருட்டை மட்டுமே அவளால் பார்க்க முடிந்தது. மூக்கை பொத்தி கொள்ளத்தான் நினைத்தாள். ஆனா ஏஞ்சல் சொல்லி இருக்காங்களே….உணர்ச்சி வசப்படா வேதனையை ஏத்துக்க வேண்டியதா போயிரும்….மனதை சமாதானப்படுத்தினாள்.

    என் இயேசப்பா என் கூட இருக்காங்க….நான் பயப்பட மாட்டேன்…..நான் பயப்பட மாட்டேன்…..இயேசு என்னோடு இருப்பதினால்…..பாட்டு பாட ஆரம்பித்தாள். இரண்டு முறை அல்லெலூயா சொல்லி கொண்டாள். இவளை பார்த்து ஏஞ்சல் சிரிப்பதை அவளும் புரிந்து கொண்டாள். ஏன்…..என்று மனதில் கேள்வி எழும்பினாலும் நோ…..இப்ப வேற எதை பத்தியும் யோசிக்க கூடாது…..சொல்லி கொண்டாள் மனதினில்.

    ஆனா அவள் பயந்த மாதிரி ஒன்றும் நடக்காமல் ஏஞ்சலை இவள் கையை பிடித்து பறந்து தான் சென்றார்…..சே….போயும் போயும் இதை பத்தி தெரிஞ்சுக்காம தான் இந்த பயம் பயந்தேனா….தன்னையே திட்டி கொண்டாள். அப்பாடா…..முதல் ஆபத்து கடந்து போயிற்று.

    அடுத்து என்ன நடக்க போகுது….மனதினில் கேள்வி எழும்பினாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

    அவள் போன அறை ஒன்றும் பிரமாதமாக இல்லை. வெட்டி வெளி போல தோணியது. யாராவது இருக்காங்களா…..என்று அவள் நினைத்த கொண்டிருந்த போதுதான் அவள் உணர்ந்தாள். இங்க தன்னை கூட்டிட்டு வந்த ஏஞ்சல் எங்க போனாங்க….மனதினில் நினைத்து கொண்டிருந்த போதே புரிந்து கொண்டாள். இது தனியாக படிக்க வேண்டிய பாடம்…..ஆனா இயேசப்பா…அந்த கடல் அலையா இருக்கட்டும், இல்லை உடம்பு சரியில்லாம இருந்த அந்த அக்கா வீட்டுக்கு போன காரியமா இருக்கட்டும்….அது இருள் சூழ்ந்த இந்த நரகம் கிடையாதே.

    ஆனா இங்க….ஏற்கனவே நான் சாத்தானை பார்த்திருக்கேனே…..அவன் ரொம்ப மோசமானவன்…..அவள் சொல்லி கொண்டிருந்த போதே….. அவ்வளவு பெரிய பாம்பை அவள் டிஸ்கவரி சேனலில் கூட பார்த்தது கிடையாது.

    இயேசப்பா….பாம்பு….குதிக்காத குறைதான். பாம்பு துரத்தும் போது….என்ன மாதிரி ஓடணும்….புரிஞ்சுக்க முடியாதவளாய்….இந்த நரகம் வந்தா….பாம்பு கடி வாங்குறதுதான் ஸ்பெஷல் வரவேற்பு போல தன்னை சமாதானப்படுத்தி கொண்டாள். அது மிகவும் அவள் நெருக்கத்தில்…. என்னை விசுவாசிக்கிறவர்கள் சர்ப்பங்களை எடுப்பார்கள். சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது…..அந்த வார்த்தை எங்க இருக்கு எனக்கு ஏன் தீடீர்னு தோணுச்சு…..அவள் மனதினில் நினைத்து கொண்டிருந்த போதே….அந்த பாம்பு கிட்டத்தட்ட அந்த அறையையே அடைத்து கொண்டு திமிறி கொண்டு வந்த அது அவள் இருப்பதையே கண்டு கொள்ளாதது போல தன் பாதையை பார்த்து சென்றது…..

    அது போன சில நிமிசத்தில் கதறும் சத்தம் கேட்கவும் யார் அங்க கத்துறா….. கேள்வி எழும்பியது. ஆனா போய் பார்க்கலாமா…..வேண்டாமா ஆயிரம் கேள்விகள். போய்தான் பார்ப்போமே…..மனதினில் முடிவெடுத்தவளாய் குரல் வந்த திசையை நோக்கி நடந்தாள். எதாவது குகைதான் வரப்போகுது மனதினில் நினைத்து கொண்டிருந்தவளுக்கு….அந்த விஸ்தாரமான இடத்திற்கு பக்கத்தில் இருந்தது ரொம்பவே விஸ்தாரமான அறையைதான் பார்க்க முடிந்தது. எந்த அக்கினி தீயும் தென்பட வில்லை. வழியெல்லாம் புழுக்களும், அளவில் சின்ன பெரிய, பாம்புகள் கூட்டத்தை தான் அவளால் பார்க்க முடிந்தது.

    கடிச்சிருமோ…….பயத்தில் காலை பார்த்து வைத்துதான் நடந்தாள். ஆனால் கண்ணுக்கு எட்டின தூரம் இருந்த ஆட்கள் முழுவதும் கொஞ்சம் கூட டிரஸ் இல்லாம தலையில் கை வைத்த நிலையில் உட்கார்ந்திருந்தனர். ஏன் சில பேரு உருளுறாங்க….அவள் நினைத்து கொண்டு கொஞ்சம் பக்கத்தில போய் பார்ப்போமா….அவள் நினைத்து கொண்டிருந்த போது….யாரோ தன்னை முன்னே தள்ளுவதை போல உணர்ந்தாள்.

    ரொம்பவே பக்கத்தில் அவள் பார்த்த அந்த காரியம் அவளை உறைய வைத்தது. ஒருவருடைய தலையில்…அவள் பார்த்த அதே பாம்பு அவள் கழுத்தை சுற்றி கொண்டு மலை பாம்பு மாதிரி அவர் தலையை உள்ளே இழுத்து கடித்து கொண்டிருந்தது. அந்த பாம்பின் பல்லில் இருந்து ரத்தம் வடிந்து கொண்டிருந்தது கூட அவளால் பார்க்க முடிந்தது.

    இயேசப்பா….ஏன் இப்படி….இவர் என்னதான் தப்பு பண்ணினார். ஆனா அதுக்காக எவ்வளவு பெரிய தண்டனையா….பாருங்க அவர் தலையில் இருந்து கூட ரத்தம் கொட்டுது. அந்த பாம்பை போக சொல்லுங்க இயேசப்பா….அவள் வேண்டி கொண்டிருந்த போதே…. அந்த பாம்பு பக்கத்தில் நின்ற இவளையும் சீறி கொத்த நின்றது.

    பயத்தில் தள்ளி நின்றவள், வேறு யாரோ மேல் முட்டி நின்றாள்.

    அங்கே அவள் பார்த்தது, ஒரு பெண்ணின் தலையில் ஆயிரக்கணக்கான புழுக்கள் மொய்த்து கொண்டிருந்ததை பார்த்தாள். அவள் நரகத்தில இருந்தப்ப பார்த்த அதே காட்சி….அவை உள்ளே போய் வெளியே வந்து அந்த பெண்ணின் தலையை சாப்பிட்டு கொண்டிருந்தன. பார்க்கவே குமட்ட தோணியது அவளுக்கு.

    அந்த புழுக்களின் வாயில் எல்லாம் ரத்தத்தோடு அது சாப்பிட்ட சதையை போன்ற ஒரு பொருளும் தெரிந்தது. பாம்பு கொஞ்சம் கொஞ்சமா கொத்தி தின்று கொண்டிருந்த அந்த ஆண் கூட அப்படியே சிலை மாதிரி உட்கார்ந்திருந்தார். ஆனா இந்த பொண்ணு…..ஆஆ….கத்தி கொண்டிருந்தாள்….முடியலை,….தன் கையால அந்த புழுவை எல்லாம் எடுக்க முயற்சித்து கொண்டிருந்தாள். ஆனா அவள் எடுத்து கீழே போட….போட….மீண்டும் அவை அந்த பெண்ணின் தலையை மட்டுமே குறியாக வைச்சி ஏறி அவளுடைய தலையை மொய்த்து கொண்டன…..திரும்பவும் கதறினாள். வழி தாங்க முடியாதவளாய் கீழே விழுந்து புரள ஆரம்பித்தாள். பக்கத்தில் போய் கொண்டிருந்த பாம்பு வேறு தலையில் ஏற ஆரம்பித்தது. அது ஏறவும் ஓட எழுந்தவளை அவள் கையிலும் காலிலும் போட்டிருந்த சங்கிலிகள் ஓட விடாமல் தடுத்தது. அந்த பாம்பு தன் வாயை விரிவாக திறந்த போதே,….. அவள் பயந்து போனாள்.

    இயேசப்பா….என்ன ஒரு கொடூரமான தண்டனை….. அவள் மனதினில் நினைத்து கொண்டிருந்த போது தான் தன் காலிலும் ஒரு புழு ஏறுவதை உணர்ந்தாள். என்னது என் மேல ஏன் ஏறுது…..அதை எடுத்து கீழே போட்டு காலில் மிதித்து பார்த்தாலும், சாவது போல தெரிய வில்லை. அந்த நேரத்திலும் கூட….அவளுக்கு இயேசப்பா சொன்ன விசயம்தான் ஞாபகத்தில் வந்தது. அங்கே அவர்கள் புழுக்கள் சாகாமலும் இருக்கும்….என் இயேசப்பா சொன்னது எல்லாம் நிஜம்…மனதினில் நினைத்து கொண்டவள்…..ஆனா இது நரகத்தில் எந்த இடம். இங்க தீ எரியலை. அப்ப….அவள் யோசித்து கொண்டிருக்கும் போதே….. அந்த புழு தன் சகாக்களுடன் வந்து இவள் காலை தொட்டது.

    ஏதோ காலில் தென்பட கீழே குனிந்து பார்த்தவளுக்கு…. கீழே ஒரு புழு கூட்டமே நின்றது. அதுவும் அவளை வேதனைபடுத்த நின்றது போல தோணியது அவளுக்கு. இங்க நான் படிக்கதானவந்தேன்….அப்ப ஏன் புழு கூட்டம்….அவள் யோசித்து கொண்டிருப்பதற்குள்…அவள் கால், கை ஏதோ கட்டபட்டது போல உணர்ந்தாள். இயேசப்பா என்னை காப்பாத்துங்க….சொல்லி கத்தினாள். ஆனால் உதவி எதுவும் கிடைக்கத்தான் செய்ய வில்லை.

    அப்படியே அவள் உட்கார்ந்த அடுத்த நொடி…அந்த புழுக்கள் கூட்டம் ரொம்பவே சந்தோஷமாய் அவள் தலையை மொய்த்து கொண்டன. என்ன செய்ய போகுது….அவள் யோசித்து கொண்டிருந்த போதே….அவள் மூளை பகுதியில் ஏதோ ஊசி போடுவதை போன்ற வேதனையை உணர்ந்தாள். அப்ப இந்த புழு எல்லாம் இந்த மனுசங்க மூளையை தான் சாப்பிடுதா……..ஒவ்வொரு ஊசியாக உள்ளே குத்துவதை உணர்ந்தாள். காதில எறும்பு போனாலே….ஆ….ஊ….ன்னு கத்துவோம்….ஆனா எந்த மயக்க மருந்தும் கொடுக்காம, இந்த புழு எல்லாம் சேர்ந்தே என் மூளையில ஒரு அறுவை சிகிச்சை செய்யுற மாதிரி இருக்கே….அவள் நினைத்து கொண்டு இருக்கும் போது…. முதலில் கிச்சனமாக தெரிந்தவை குடையும் வேதனையை போல ஆரம்பித்தது. நான் என்ன தப்பு செஞ்சேன். ஏன் என்னுடைய இயேசப்பா இவ்வளவு பெரிய தண்டனை கொடுத்தாங்க. அதுவும் கொஞ்சம் கூட எனக்கு இரக்கம் பாராட்டாம. புலம்ப ஆரம்பித்தாள்.

    அவள் கண்களுக்கு முன்பாக எல்லா காரியங்களும் ஏதோ டிவியில் படம் பார்த்தது போல தோன்றியது அவளுக்கு. அன்னிக்கி அம்மாக்கு ஏரியா prayer செல்ன்னு காலையிலேயே கிளம்பி விட்டார்கள். ரொம்பவே லைட்டாக இருந்த சளியை காரணம் காண்பித்து….அவள் அம்மாவிடம் கெஞ்சி லீவும் எடுத்து கொண்டாள். அவள் பார்வை எல்லாம் அம்மா எப்ப கிளம்புவாங்க….என்பதாய் இருந்தது. அம்மா கிளம்பியதும் அவள் பார்வை அவள் பேக்கில் தான் நின்றது.

    ஒரு முறை அம்மா வெளியே சென்று விட்டார்களா என்று பார்த்து வந்தாள். அம்மா தூரத்தில் போவதை பார்த்து உறுதி செய்து விட்டு, தன் பேக்கை திறந்தாள். ஒரு பழைய புஸ்தகம் தான். அவள் பிரெண்ட்……எங்க அம்மா எப்பவும் கதை புக் வாசிப்பாங்க. ஆனா நாங்க மட்டும் அதைதொட கூடாதுன்னு 1000 தடைகள். அம்மா நேத்து இந்த புத்தகத்தை வாசித்திட்டிருந்தை பார்த்தேன். அம்மா வெளியே போன பிறகு…

    நான் ஒரு ரெண்டு, மூணு பக்கம் வாசித்து பார்த்தேன். நாம பார்க்கிற சினிமா மாதிரி இருந்துச்சு…. சரி உனக்குத்தான் கதைன்னா ரொம்பவே பிடிக்குமே….அதை நீ படிக்கிறதுக்காக எடுத்துட்டு வந்தேன்….என்று அவள் பிரெண்ட் சொல்ல….நான் இப்ப டிவி பார்க்க ஆரம்பிச்சது உண்மைதான். ஆனா அது கூட எங்க அம்மாக்கு தெரியாம….தெரிந்தா தொலைச்சிருவாங்க என்னை….அவள் சொல்லி முடிக்க

    எப்படி டிவி தெரியாம பார்த்தியோ….அதை மாதிரி இதையும் படிச்சி எனக்கு கதை சொல்லு என்ன….என்று அவள் நீட்டிய போது….அந்த புத்தகத்தில் இருந்த முதல் படமே ரொம்பவே போதை ஊட்டுவது போலத்தான் தோன்றியது அவளுக்கு.

    பேர்…பார்த்தாலோ…சரி…தா….என்னால படிக்க முடியலைன்னா…. திருப்பி தந்துருவேன் சரியா….என்ற போது

    சரி…..இப்ப இந்த புத்தகத்தை வைச்சிக்கோ…என்றவளிடம் இருந்து புக்கை வாங்கி மறைவாக வைத்தாள் தன் பேக்கில்.

    அந்த புத்தகத்தை தான் இப்போது எடுத்தாள். தனது அறையில் ஓடி போய் படுத்து கொண்டாள். எங்க அம்மா கதை புக் படிப்பாங்க…..ஒரு புக்கை கூட விட மாட்டாங்க….தன் தோழியர் சொல்லி அவளும் கேட்டிருக்கிறாள். ஆனா இந்த கதை புத்தகத்தில் அப்படி என்ன தான் இருக்கு….அறிந்து கொள்ள நினைத்து முதல் பக்கத்தை திறந்தாள்.

    எப்போதும் போல சண்டே ஸ்கூல் புத்தகம் போல ஆரம்பித்து…..உள்ளே போக….உள்ளே போக…ரொம்பவே மனதினில் எண்ணங்களை மூழ்கடிப்பதை போல உணர்ந்தாள். அந்த புத்தகத்தில் அவள் வாசித்த எல்லா ஆட்களும் தன் முன் நடமாடுவதை போல உணர்ந்தாள். கொஞ்சம் நேரம் கூட கீழே அந்த புத்தகத்தை வைக்க முடியாத அளவுக்கு அந்த புத்தகத்தில் லயித்து விட்டாள். இடையில் அம்மா வந்த போது கூட, அதை மறைத்து வைக்க தான் செய்தாள். அன்று இரவு ஜெபம் கூட அவளுக்கு பண்ண தோண வில்லை. அடுத்து என்ன ஆச்சு….அடுத்து என்ன ஆச்சு….என்ற எண்ணம் மட்டும்தான் வந்து கொண்டிருந்தது.

    சிறிது லைட் ஆன் பண்ணி படிக்க நினைத்த போது….குட்டிமா….மணி ஏற்கனவே லேட்டா ஆச்சு. ஏன் இன்னும் தூங்காம இருக்க…..அம்மா குரல் கேட்டதும் லைட்டை ஆப் செய்து விட்டு தூங்க ஆரம்பித்தாள். தூக்கம் கூட சரி வர வில்லை. அதை பற்றிய எண்ணங்கள் மட்டும் மனம் முழுவதும். எப்படியும் நாளைக்கி வந்து புக்கை முடிச்சிரனும்….மனதினில் நினைத்து தூங்கியும் போனாள்.

    ஆனா அடுத்த நாள் அழுது கொண்டே வந்த தன் பிரெண்ட்டை கேட்ட போதுதான்….எங்க அம்மாக்கு தெரிஞ்சி போச்சு. நான்தான் அந்த புத்தகத்தை எடுத்துட்டேன்ன்னு கண்டுபிடிச்சி சரியான அடி…இந்த பாரு கையில தடம் கூட விழுந்திருக்கு….. என்று அவள் காட்டிய போது

    அவளுக்கு கூட பாவமாக தோன்றியது. புத்தகத்தை கொடு. எங்க அம்மா கேட்டாங்க. அம்மாகிட்ட உன்னை மாட்டி விட மனசு வரலை. ஸ்கூல்ல வைச்சிட்டு வந்துட்டேன் சொல்லி சமாளிச்சிட்டேன். இன்னிக்கி புக்கை தூக்கிட்டு போகாட்டி….அதற்கு மேல் அவளுடைய பிரெண்ட்டால் சொல்ல முடியவில்லை. புக்கை தன் பேக்கில் இருந்து எடுத்துக் கொடுத்தாள்.

    ஆனா அன்றோடு அந்த கதை புக் படிக்கும் பழக்கத்துக்கு முற்று புள்ளி வைச்சதோடு சரி, அடுத்து அதை குறித்து அவள் நினைத்து கூட பார்த்தில்லை.

    எல்லா விசயங்களும் அவள் கண் முன் ஒரு டிவி மாறி தெரிந்து மறைந்து போனது. ஆனா இதெல்லாம் நான் இயேசப்பா சொல்லி கொடுக்கிற சத்தியங்களை தெரிந்து கொள்றதுக்கு முன்னாடி நடந்த காரியம் ஆச்சே…..அவள் நினைத்து கொண்டிருக்கும் போதுதான் அவள் கண் முன் மீண்டும் ஏஞ்சல் தோன்றினார்.

    ஏஞ்சல்….நீங்களுமா…என்னை விட்டுட்டு போயிட்டீங்க…அவள் சொன்ன போது…நான் ஏற்கனவே உன்கிட்ட சொன்னேனே குட்டிமா. அதை நீ ஏன் மறந்த..…என்று அவர் கேட்ட போது

    நீங்க சொன்ன மாதிரி நான் இயேசப்பா என் கூட இருக்கிறாங்க…. என்கிற தைரியத்தில் தான் உள்ளே நுழைந்தேன்….. அப்படி இருக்கும் போது….அவள் அழுது கொண்டே சொன்னாள்.

    அவள் வாய் வழியாக கூட ரத்தம் வடிய ஆரம்பித்தது. ஏஞ்சல் என்னால முடியலை. நான் என்ன தப்பு பண்ணியிருந்தாலும் என் இயேசப்பாகிட்ட மன்னிப்பு கேட்டுக் கொள்ளுகிறேன்….ப்ளீஸ்….வலி கூடி கொண்டே போக கதற ஆரம்பித்து விட்டாள்.

    சரி, உன் இயேசப்பாகிட்ட மன்னிப்பு கேளு. நீ அறிக்கை செய்யாம விட்டிருந்த இந்த பாவத்தை குறித்து நீயே பேசு அவர்கிட்ட…… ஏஞ்சல் சொல்லவும்

    அந்த வலியின் மிகுதியிலும்…..இயேசப்பா சாரி….நான் உங்களை ரொம்பவே கஷ்டபடுத்திட்டேன். தேவனை அறிந்த பொண்ணா இருந்தும் கூட, அம்மா, அப்பாக்கு தெரியாம தப்பு அழகாக பண்ணிட்டேனே….ன்னு அப்ப தோணுச்சு. ஆனா நீங்க என்னுடைய எல்லா பாவங்களையும், தப்புகளையும் கவனிக்கிறீங்க என்கிற உண்மையை மறந்தே போயிட்டேன். சாரி இயேசப்பா…..உங்களுக்கு பிடிக்காத கதை புத்தகம் வாசிக்கிறது மட்டுமில்ல, அந்த எண்ணங்களை என் மனசில ஏத்து உங்களை வேதனைபடுத்தினதற்க்காக சாரி இயேசப்பா….கண்களில் கண்ணீருடன் வேண்டினாள்.

    ஒரு மெல்லிய காற்றை உணர்ந்தாள். ஏஞ்சல் என் இயேசப்பா என்னை மன்னிச்சிட்டாங்க….அவள் சொல்லி கொண்டிருந்த போதே அவள் தலையை சுற்றி இருந்த புழுக்கள் மட்டுமில்ல அவள்  காலில் மாட்டப்பட்டிருந்த சங்கிலிகள் கூட கழன்று விழுந்தன.

    உடனே ஏஞ்சலின் பக்கத்தில் ஓடி வந்து நின்றவள் தேங்க்ஸ் இயேசப்பா…… என்று சத்தமாக சொன்னாள். உடனே அவள் முதலில் பார்த்த அந்த பெண் கீழே விழுந்து புரண்டு கொண்டிருந்தவள், இயேசப்பா……உங்களை நான் கஷ்டப்படுத்திட்டேனே சத்தமாக அழுதாள்.

    ஏஞ்சல் முகம் கூட சரியாக இல்லை. ஒரு இறுக்கம் அவர் முகத்தில் தெரிந்தது.

    அவரை மாற்றும் எண்ணத்தில் ஏஞ்சல், நீங்க என் கிட்ட சொன்ன மாதிரிதான நான் இருந்தேன். எந்த விஷயம் கூட உணர்ச்சி வசப்பட்டு யோசிக்கலையே. அப்படி இருக்கும் போது….ஏன் இந்த தண்டனை. ஒரு வகையில என் வாழ்கையில் நான் அறிக்கை செய்யாம என் தேவன் கிட்ட இருந்து மன்னிப்பு வாங்காத காரியத்திற்கு இன்னிக்கி என் இயேசப்பா மன்னிப்பு கொடுத்தாங்க. இல்லைனா….என் வாழ்கையில் நான் கதை புக் வாசிக்கிறதும், அதை பத்தி யோசிக்கிறதும் கூட தப்போ,பாவமோ இல்லைன்னு நினைச்சிருந்திருப்பேன். ஆனா என்னுடைய இயேசப்பா இன்னிக்கி கொடுத்த தண்டனையால நல்லாவே தெரிந்து கொண்டேன். இது ரொம்பவே மோசமான காரியம்…பாவம்ன்னு…..

    நீ வேதனைபட்டதுக்கு காரணம் நீ உணர்ச்சி வசப்பட்டு ஒரு காரியத்திற்கு நீயே தீர்ப்பு எழுதினியே….அவர் சொன்ன போது சத்தியமாக அவளுக்கு புரிய வில்லை.

    அந்த பொண்ணு லிசா அந்த புழுக்கள் வேதனையிலும், அந்த பாம்பு கடித்த வேதனையிலும் அலறி துடிச்சப்ப….நீ உன் மனசில என்ன நினைச்ச ஞாபகம் இருக்கா…ஏஞ்சல் கேட்ட போது

    உண்மையில் அவளுக்கு கொஞ்சம் கூட ஞாபகம் இல்லை. குழப்பத்துடன் ஏஞ்சலை பார்த்தாள்.

    இந்த பொண்ணு என்ன தப்பு பண்ணிதற்கு இவ்வளவு பெரிய தண்டனை….நான் கூட இந்த தப்பு பண்ணியிருந்தா எனக்கும் இதே மாதிரி தண்டனை கிடைச்சிருக்குமே…..இதுதான் நீ நினைச்சி பார்த்தது….ஏஞ்சல் சொன்ன போது வாய் அடைத்து போனாள்.

    அவள் நினைத்த காரியம் தான். ஆனா நான் சாதாரணமா நினைச்ச விசயங்கள் கூட இந்த அளவுக்கு வேதனையை கொடுக்குமா என்ன…..வாய் திறந்து கேட்டே விட்டாள் ஏஞ்சலிடம்.

    உண்மையாக குட்டிமா. நீ யாருங்கிற விசயத்தை பல நேரங்களில் மறந்து போயிற.நீ மட்டுமில்ல உன்னை மாதிரி உள்ள தேவ பிள்ளைகளும்….ஏன் எல்லாரும் கூட மறந்து போயிறாங்க. எப்படி உங்க நல்ல செய்கைகள் உங்களுக்கான பொக்கிஷத்தை பரலோகத்தில் சேர்த்து வைக்கிறதோ அதே மாதிரிதான் ….கெட்ட செய்கைகள் உங்களுக்கு தண்டனைகளை நரகத்தில சேர்த்து வைக்குது.

    ஆனா செய்கைகள் தான் ஏஞ்சல்……நாங்க நினைக்கிற நல்ல எண்ணங்கள் அடுத்து கெட்ட எண்ணங்கள் கூடவா எங்களுக்கு இந்த மாதிரி கஷ்டங்களை கொடுக்க முடியும்….அவள் கேட்ட போது

    நான் உன்கிட்ட ஏற்கனவே சொன்னேனே குட்டிமா. நீங்க ஒண்ணும் சாதரணமான ஆட்கள் கிடையாது. நீங்க நம்ம தேவனுடைய வல்லமையை தாங்கி நிற்கிற அவருடைய பிள்ளைகள். அதுனால எப்படி நம்ம தேவன் நினைக்கும் போதே….படைப்புகள் உருவாக்கபட்டதோ….அதே மாதிரி நீங்க உங்க மனதில நினைக்கிற எண்ணங்கள் கூட….இதே மாற்றத்தை ஏற்படுத்த வல்லது…..புரியாமல் பார்த்தாள்.

    நீ சப்போஸ் மனசில இன்னிக்கி என் பிரெண்ட் எனக்கு பிடிச்ச பிரியாணி கொண்டு வந்தா நல்லா இருக்கும்…ன்னு நினைச்சிருப்ப….அதே மாதிரி நடந்தது உண்டா….ஏஞ்சல் சொன்ன போது யோசித்து நடந்த காரியத்தை நினைத்து ஆச்சரியப்பட்டாள்.

    அதே மாதிரி உன் முன்னாடி போன ஏதாவது சைக்கிள் ஓட்டுற பையனுக்கு கீழே விழ போறான்னு….நீ நினைச்சிட்டு இருக்கும் போதே….அவன் உன் கண் முன்னாடி விழுந்ததை நான் பார்த்திருப்ப….இதுதான் உன் எண்ணங்களுக்கு இருக்கிற வலிமை. அதை நீங்க தேவையில்லாம பயன் படுத்த சாத்தான் எப்போதும் தூண்டுறான். நீங்களும் அவன் தந்திரம் புரியாம யோசிக்கிறீங்க, யோசிக்கிறீங்க….கடைசி வரை யோசித்திட்டு இந்த நரகத்தில் வந்து கஷ்டபடுறீங்க….அவர் சொல்லி முடித்த போது உண்மையில் கலங்கி போனாள்.

    அப்ப எத்தனை தடவை இதே மாதிரி தேவையில்லாம யோசிச்சிருக்கேன். அதுக்கு மொத்தமா என் இயேசப்பாகிட்ட மன்னிப்பு கேட்கணும் முதல்ல…. மனதினில் நினைத்து கொண்டாள்.

    ஆனா இந்த புழுக்கள், பாம்பு…இதெல்லாம் என்ன ஏஞ்சல்….என்று அவள் கேட்கவும்

    உன்னை வேதனைப்படுத்தின அந்த புழுக்கள் கூட்டத்தை பற்றி மட்டும் இப்ப சொல்லுறேன்…. நீ பூமியில இருந்த சமயத்தில் அதுவும்….. அந்த கதை புத்தகம் படிச்சி அந்த எண்ணங்களில் உன்னை நீயே மறந்து நடமாடின நேரத்தில உன் எண்ணத்தால உருவாக்கபட்ட புழுக்கள் தான் இவை….என்று சொன்ன போது உண்மையில் ஆச்சரியப்பட்டாள்.

    ஏஞ்சல்…மரத்தை உருவாக்கிறது பத்தி கேள்விபட்டிருக்கேன். ஆனா இது என்னுடைய எண்ணத்தால் புழுக்கள் கூட வர முடியுமா என்ன???

    கண்டிப்பா. நீ நம்ம தேவனுடைய மகிமையை சுமந்திட்டிருக்கிற அவருடைய பிள்ளை. அதுனால உன் தப்பான எண்ணம் கண்டிப்பா இந்த அந்நிய ஜீவன்களை உருவாக்குறதுக்கு கண்டிப்பா வல்லமை உடையது…..அவர் சொன்ன போது அவள் மயக்கம் போடாத குறைதான்.

    என்னுடைய எண்ணங்கள் கூட எனக்கு குழி வெட்டுறதுக்காக இந்த நரகத்தில் புழுக்கள் கூட்டத்தை சேர்த்து வைக்குதே…..நோ….இனிமே தேவையில்லாத எண்ணங்களுக்கு என்றும் புல் ஸ்டாப்தான்….மனதினில் உறுதி எடுத்து கொண்டாள்.

    அப்ப நான் தேவையில்லாம என் இயேசப்பாக்கு விரோதமா செய்கிற காரியங்கள் மட்டுமில்ல, எண்ணங்கள் கூட….இந்த மாதிரி தண்டனைகளை சேர்த்து வைக்கும், அப்படிதான ஏஞ்சல்…..என்று கேட்டவளுக்கு

    கரெக்ட்டா சொன்ன. உன் வாழ்கையை உன் இயேசப்பா கையில ஒப்பு கொடுத்த பிறகு…அவர் மேல நம்பிக்கை வைக்காம ஏன் இந்த தேவையில்லாத குழப்பம்….அதுனால ஏன் தேவையில்லாத தண்டனைகள் கூட….அவர் சொல்லி கொண்டிருக்கும் போதே ஏஞ்சல் சொன்ன அந்த பெண் லிசா மீண்டும் கதறி கொண்டிருந்தார்.

    ஏஞ்சல் கண்களில் கண்ணீர் வந்தது….அப்ப என் இயேசப்பா கூட இப்ப இந்த பெண்ணுக்காக வேதனைப்பட்டுட்டு இருப்பாங்களே…..அவள் மனதினில் நினைத்தது மட்டுமில்ல ஆர்வ மிகுதியில் கேட்டும் விட்டாள். ஆனால் அவள் தெரிந்து கொண்ட காரியம் அவளுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.

    Related Post

    Categories: பைபிள் சம்பவங்கள்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    three − = 1

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>