-
பைபிள் சம்பவங்கள்(குழந்தைகளுக்காக) – 2
அவள் சற்றும் எதிர்பாராத நேரம் அவளுடைய கைகளை பற்றிய ஏஞ்சல், காற்றின் வேகத்தை விட அதிக வேகமாய் பறந்தார். காற்று இவ்வளவு வேகமாகவா வீசும்……மனத்துக்குள் நினைத்து கொண்டாள். புயலா இருக்குமோ….கண்களை இறுக்க மூடி கொண்டாள்.
கண்களை திறந்த நேரம் ஏதோ ஒரு இருட்டினுள் இருந்த நிலை தோன்றியது அவளில்.
ஏஞ்சல் என்னை இந்த இடத்திற்கு ஏன் கூட்டிட்டு வந்தீங்க?
நீ என்ன பார்க்குற குட்டிமா?
கண்களில் அகல ஆச்சர்யத்துடன்…….ஒண்ணும் தெரியலை, ரொம்பவே இருட்டா இருக்குது. நீங்க பேசுற சத்தம் தவிர என்னால எதுவும் கேட்க முடியலை. ஆமா…..நாம எங்க இருக்கோம்?
பைபிள் முதல் புத்தகத்தில், முதல் அதிகாரத்தில், முதல் வசனத்தில் என்ன வாசித்தன்னு ஞாபகம் இருக்கா?
ம்…..ரொம்ப நல்லாவே…..ஆதியிலே தேவன் வானத்தையும், பூமியையும் சிருஷ்டித்தார்.
குட், கரெக்டா சொன்ன…..நாம அந்த நேரத்தில் தான் இருக்கோம்.
என்னது, நாம அந்த காலத்தில் தான் இருக்கோமா…..அப்ப நான் இந்த பூமியில் பிறந்திருக்கவே மாட்டேனே…..
ஆமா…..சரி குட்டிமா, இப்ப உன் கண்கள் என்ன பார்க்கிறதுன்னு சொல்ல முடியுமா….
நான் அப்பவே சொன்னேனே ஏஞ்சல்…..வெறும் இருட்டு….நிசப்தம்(சத்தம் இல்லாமை)…..வேற ஒண்ணும் என் கண்களுக்கு தெரியலையே
நல்லா கூர்மையா பார்க்கணும் குட்டிமா….வேற எதுவும் உன்னால பார்க்க முடியலையா?
ம்ம்ம்…..ஏஞ்சல் என் கால் கீழ தண்ணி மாதிரி ஒண்ணு தெரியுது……
சரி, அடுத்து…….
ஏஞ்சல் உங்களால் பார்க்க முடியுதா…..நம்மளுக்கு ரொம்பவே பக்கத்தில ஒருத்தர் இருக்கிற மாதிரி தோணுது….நீங்க பார்த்தீங்களா….ஆனா அவர் முகத்தை என்னால பார்க்க முடியலை, அவர் முகத்தை பார்க்கணும்ன்னு ஏனோ எனக்கு ஆசையா இருக்கு.
நீ சொன்னது சரிதான் குட்டிமா, அவர் நம்ம தேவன். ஆவியானவரா காணப்படுகிறார்….
என்னது நம்ம இயேசப்பாவா….வாங்க ஏஞ்சல், நான் என்னுடைய இயேசப்பாவை பார்க்கணும், பக்கத்தில, ரொம்பவே பக்கத்தில பார்க்கணும். தயவு செய்து என் கைகளை விடுங்க…நான் என் இயேசப்பாகிட்ட ஹாய் சொல்ல ஆசையா இருக்குது…..என்னுடைய இயேசப்பாவை நான் என் பக்கத்திலேயே…..ப்ளீஸ் ஏஞ்சல் நான் என் இயேசப்பாவை பார்க்கணும், பேசணும்…..(சிறு விழிகளில் கண்ணீர் எட்டி பார்த்தது)
குட்டிமா, இங்க உன்னுடைய உணர்வுகளுக்கு நீ இடம் கொடுக்க கூடாது. சில உண்மைகளை தெரிந்து கொள்ள இங்க வந்திருக்க….இது நம்ம இயேசப்பா உனக்கு கொடுத்த கிருபை…..அதற்கு மேல வேற விசயங்களை எதிர் பார்க்க கூடாது.
உனக்கு கொடுக்கப் பட்ட கடமையை முழுமையா செய்யு குட்டிமா….ஏன்னா அவருடைய பிள்ளைகள் கூட பைபிளை ஏதோ ஒரு புத்தகமா நினைக்க ஆரம்பிச்சிட்டாங்க. தேவன் கொடுத்த பைபிளில் இருப்பது எல்லாம் சத்தியம் என்பதை அவர் பிள்ளைகளாலே உணர முடியாட்டி அவங்களால எப்படி தன்னுடைய சகோதர்களுக்கு தைரியமா சொல்ல முடியும் பைபிள் என்பது சத்தியம்னு?
நான் இப்ப என்ன செய்யணும் ஏஞ்சல்……
சரியான கேள்வி குட்டிமா…..உன் கண்கள் காண்பதை நீ உன்னுடைய நண்பர்களுக்கு சொல்ல அழைக்கப்பட்டிருக்க…….
சரி ஏஞ்சல், நீங்க சொல்லுவதை கண்டிப்பா செய்வேன்…..
நான் சொல்லுற காரியம் கிடையாது குட்டிமா….இது தேவன் உனக்கு கொடுத்திருக்கிற கட்டளை…..உன் முகம் ஆனா…..உம்முன்னு இருந்தா நல்லா இல்லை. எப்பவும் சிரித்த முகமாய்……..
சாரி ஏஞ்சல்…..என்னுடைய இயேசப்பாவை பக்கத்தில பார்த்தும் அவரோட பேசாட்டி….என்னமோ கஷ்டமா தோணுது.
தேவ வார்த்தைகளை ஏற்கனவே உன்னுடைய அம்மா நீ சின்ன பிள்ளையா இருக்கிறதில இருந்தே சொல்லி கொடுத்திருக்காங்க, அப்படிதான……நம்ம இயேசப்பா பக்கத்தில பார்த்தும் பேசாம போனதற்காக நீ ரொம்பவே வருத்தமா இருக்கறது புரியுது. ஆனா வாழ்நாள் முழுவதும் அவரை பார்க்க முடியாட்டி என்ன செய்வ…..
புரியாமல் முழித்தவளை…..உன்னுடைய சின்ன தவறுகளை கூட தேவனுடைய ஏஞ்சல்ஸ் எழுதிட்டு இருக்காங்க குட்டிமா. நீ ஒரு நாள் நம்ம இயேசப்பா முன்னாடி உன்னுடைய தவறுகளுக்காக வந்து நிற்கும் போது இதெல்லாம் நான் செய்யலைன்னு மறுதலிக்க முடியுமா?
உதடுகளை பிதுக்கினாள்.
உன்னுடைய தவறுகளுக்காக சப்போஸ் நரகம்ன்னு முடிவானா என்ன செய்வ……
கண்களில் கண்ணீர் மட்டும் வந்தது.
இந்த நேரங்கள் நீ நம்ம தேவன் கொடுக்கிற சத்தியங்களை தெரிந்து கொள்வதற்கு மட்டுமில்ல உன் வழிகளை திருத்தி கொள்வதற்கு அவர் கொடுத்த அழகான சந்தர்ப்பம்……..
சாரி ஏஞ்சல், எங்க அம்மா என்னை எத்தனையோ முறை கண்டிச்சப்ப எனக்கு புரியலை. இந்த அம்மாமார்களே இப்படிதான் இருப்பாங்க போலன்னு இயேசப்பாகிட்டயே நிறைய தடவை குறை சொல்லி இருக்கேன். ஆனா இப்பதான் புரிந்து கொண்டேன். எங்க அம்மாவை விட என்னுடைய சின்ன தப்புகள் கூட என் இயேசப்பாவைத்தான் அதிகமா கஷ்டப்படுத்திருக்கு. எனக்கு ரொம்பவே பக்கத்திலதான் என்னுடைய இயேசப்பா இருக்காங்க…..நான் இப்பவே முழுமையா என்னுடைய இயேசப்பாகிட்ட சாரி கேட்க போறேன்……சாரி இயேசப்பா, நான் உங்களை என்னுடைய தப்புகளால் நிறையவே கஷ்டப்படுத்தி இருக்கேன். சாரி இயேசப்பா. இனிமே உங்களை கஷ்டப்படுத்துற எந்த காரியங்களையும் நான் செய்யாத வண்ணம் உங்க அன்பினால் காத்து கொள்ளுங்க….
ஆமென்……ஏஞ்சல் சொல்லி விட்டு சிரிக்கவும், அவளும் சிரித்தாள். ஒரு மெல்லிய காற்று இருவரையும் வருடியது.
ஏஞ்சல் உங்களால் உணர முடிந்ததா? ரொம்பவே மெல்லிய காற்று நம்மகிட்ட வந்ததே…….
ஆமா குட்டிமா…..அது என்னதுன்னு உன்னால புரிய முடிந்ததா?
ம், கண்டிப்பா. அம்மா, அப்பா வீட்டுல எப்பயாவது இல்லாத நேரம் ரொம்பவே போர் அடிக்கும். அப்ப நான் மட்டும் தனியா இருக்க மாதிரி தோணும். அந்த நேரங்களில் எல்லாம் இதே மாதிரி மெல்லிய காற்றை உணர்ந்திருக்கேன். அம்மாகிட்ட கேட்டப்ப சொன்னாங்க. இது நம்ம இயேசப்பா உன்னோட இருக்கிற சமயம். தன் பிள்ளையை அவர் என்றும் பாதுகாக்கிற சமயம்னு. அதுனால என் இயேசப்பா என்னுடைய தப்பை மன்னிச்சிட்டாங்கன்னு எனக்கு நம்பிக்கை வந்துருச்சு ஏஞ்சல். நான் ரொம்பவே சந்தோசமா இருக்கேன்…….
உனக்கு இந்த பொறுப்பை ஏன் கொடுத்தாங்கன்னு இப்ப நானும் புரிந்து கொண்டேன் குட்டிமா. உன்னை மாதிரி அப்படியே நம்ம தேவனை ஏற்றுக் கொள்ளுகிற சின்ன இருதயங்களைதான் அவர் என்றும் வாஞ்சிக்கிறார். சரி குட்டிமா, இனி உனக்கு நம்ம தேவன் வெளிப்படுத்துகிற இரகசியங்களை தெரிந்து கொள்ள என்னை மாதிரி நீயும் ஆர்வமா இருக்கன்னு நினைக்கிறேன், சரியா?
கண்டிப்பா ஏஞ்சல், நான் என்னுடைய தேவனை பற்றி பைபிள் மூலமா தெரிந்து கொண்ட காரியங்களை நேரிலேயே பார்க்கணும்னா எவ்வளவு சந்தோசமா இருக்கும். இயேசப்பா, உங்க அடிமை நீங்க வெளிபடுத்த போற சத்தியங்களை தெரிந்து கொள்ள முழு இருதயத்தோட காத்திட்டு இருக்கேன்……
ஆமென்……..(ஏஞ்சல் தலை கவிழ்ந்து தேவனை வணங்கினார்)
பைபிள் சம்பவங்கள்(குழந்தைகளுக்காக) – 1 பைபிள் சம்பவங்கள்(குழந்தைகளுக்காக) – 3
பைபிள் சம்பவங்கள்(குழந்தைகளுக்காக) – 2
Daily Bible Verse
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
« Feb | ||||||
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
Newsletter
Categories
Archives