• பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 41

    வீட்டிற்கு வந்த பிறகும் கூட ரம்யா வீட்டில் நடந்த காரியங்களை நம்ப முடியாமல் யோசித்தாள் அவள். அப்பா அவளுடைய காரியங்களை குறித்து பேசி கொள்ள வில்லை. அவள் அப்பா ரம்யாவிடம்தான் பேசினார்.

    ரம்யா….இந்த உலகத்திலேயே உன்னுடைய பிறந்தநாள் தான் ரொம்பவே விசேஷமானது. எத்தனை பெரிய ஆச்சரியத்தை இயேசப்பா உன்னுடைய வாழ்கையில் ஏற்படுத்தி தந்திருக்காங்க. அது மட்டுமில்ல உனக்கு நம்ம இயேசப்பா கொடுத்த கிப்ட்தான் ரொம்பவே விலை மதிக்க முடியாத பொக்கிஷம்…….

     அவள் அப்பா சொன்ன போது ரம்யா சிரித்த வண்ணம்….. தயவு செய்து என்னை அந்த அளவுக்கு பாராட்ட வேண்டாம் அங்கிள். இது முழுக்க முழுக்க நம்ம தேவனின் மகிமைக்காக என் இயேசப்பா நிகழ்த்தின அதிசயம். இதுல என்னுடைய பங்கு ஒண்ணு கூட கிடையாது. அவருடைய நாமத்திற்கே மகிமை உண்டாவதாக!!! ரம்யா சொன்ன போது உண்மையில் ஆச்சரியபட்டாள் அவளும். ஏன்னா இது முழுக்க முழுக்க ரம்யா வேண்டுதலுக்காக என்னுடைய இயேசப்பா கொடுத்த பரிசாச்சே!!! எத்தனை நாள் அவளை பத்தி கூட மறந்து தன்னை சுத்தியுள்ள மக்களுக்காக, அவளுடைய பிரெண்ட்ஸ்க்காக, அவ சொந்தகாரங்களுக்காக, அவளுடைய அம்மா, அப்பாவுக்கு தெரிந்தவங்களுக்காக……… அவள் கண்ணீரோடு ஜெபம் பண்ணியிருந்தா என் இயேசப்பா இவ்வளவு பெரிய கிப்டை அவளுக்கு தந்திருப்பாங்க…. ஆச்சரியமாய் நினைத்தாள்.

    ரம்யா ஜெபம் உண்மையில் எனக்கு ஒரு நல்ல பாடம்…..தன் மனதில் சொல்லி கொண்டாள். ரம்யா அப்பா முகம் முழுமையும் இன்னும் தன் வாழ்கையில் நடந்த காரியத்தை நம்ப முடியாத நிலையில் இருந்தார். தன்னோடு, தனக்கு தெரிந்தவங்க கூட இயேசப்பாவை ஏற்றுக் கொண்டனரே!!! அவரால் இன்னும் ஆச்சரியத்தை தாங்க முடியாத நிலையில் இருந்தார். அதை விட அவருடைய மன கஷ்டம்……இத்தனை அன்பு நிறைந்த அவரையா நான் வேதனைப்படுத்தி வாழ்ந்தேன்…..உண்மையில் அவரால் தன் குற்ற மனசாட்சியில் இருந்து வெளியே வர முடிய வில்லை. வீட்டுக்கு வந்த எல்லா விருந்தினர்கள் போன பிறகும் கூட அவருடைய கண்கள் கலங்கியே இருந்தது.

    நான் என்னை நேசிச்ச என் இயேசப்பாவை ஏன் இந்த அளவுக்கு கஷ்டப்படுதினேன்…..அவர் மனதில ஒரு குரல் கேட்டுக் கொண்டே இருந்தது…… தன் கணவரை எந்த வகையில் ஆறுதல் படுத்த என்ற நிலையில் தான் ரம்யா அம்மா நின்று கொண்டிருந்தார்.

    அவள் அப்பா கூட இந்த கலக்கத்தை புரிந்து கொண்டார். சுரேஷ்….நான் உங்ககிட்ட ஒண்ணு சொல்லலாமா???? கேட்ட போது அவரும் தலை அசைத்தார்.

    உங்க இயேசப்பா உங்களை நேசிக்கிற காரியத்தை ஒரு சந்தோஷமான காரியமா நினைக்காம அதை ஏன் ஒரு மன பாரமா நினைக்கிறீங்க??? கேட்ட போது ரம்யா அப்பா தலையை தொங்க போட்டவராய்

    என் இயேசப்பா என்னை நேசிக்கிறது எனக்கு ரொம்ப சந்தோஷமான காரியமா இருந்தாலும், அவரை இது வரை வேதனைபடுத்தினது உண்மைதான சார். என்னை பத்தி நான் நினைச்சி பார்க்கும் போது, ரொம்பவே அருவருப்பா இருக்கு தெரியுமா…..எத்தனையோ தடவை என் வொய்ப் பைபிள் எடுத்து வாசிக்க உட்கார்ந்த போது, ஏதோ பைத்தியக்காரன் மாதிரி நடந்திருக்கேன்…… என் பொண்ணு இயேசப்பா கிட்ட இன்னிக்கி இதை குறித்து prayer பண்ணினேன். இவங்களை குறித்து prayer பண்ணினேன் சொன்னப்ப ஏதோ காதே கேட்காத செவிடன் மாதிரி நடந்து கொண்டிருக்கேன்……இப்ப எல்லாத்தையும் யோசித்து பார்த்தா ரொம்பவே மனசு கஷ்டமா இருக்கு. என் மனைவியுடைய அழுகை, அவளுடைய கெஞ்சுதல் எதை பத்தியுமே தெரிந்து கொள்ள முடியாத ஒரு கல்லான மனுஷனா வாழ்ந்திருக்கேனே,…….ன்னு நினைக்கும் போது, ரொம்பவே கஷ்டமா இருக்கு…..அவர் புலம்ப ஆரம்பிக்கவும் ரம்யா அம்மா முகத்திலும் கவலை வந்து சேர்ந்தது.

    சுரேஷ்…..உங்ககிட்ட ஒரே விசயத்தைதான் சொல்ல ஆசைபடுறேன்.உங்க குற்ற மனசாட்சி நல்ல விஷயம் தான். ஆனா அதே ஒரு எல்லையை கடந்து போனா மீண்டும் உங்க பழைய நிலைக்கு திரும்ப போக வேண்டியதா போயிரும்…..சிறிது எச்சரிக்கையாகவே சொன்னார் அவள் அப்பா.

    நீயே சொல்லு குட்டிமா அங்கிள்கிட்ட….ஏன் தன் பிள்ளைகள் கிட்ட குற்ற மனசாட்சி இருக்க கூடாதுன்னு இயேசப்பா சொல்லுறாங்கன்னு…..அவள் அப்பா அவளிடம் கேட்ட போதுஉண்மையில் புரியாமல் விழித்தாள்.

    அடுத்த நிமிசமே தன்னை தன் தேவனுக்குள் திடபடுத்தினவளாய்,

    அங்கிள் நாம எல்லாரும் இயேசப்பா பிள்ளைகள்ன்னு உங்களுக்கும் தெரிந்திருக்கும். அவரை நீங்க இது வரை அறிந்து கொள்ளாம இருந்தது உண்மைதான். ஆனா எப்படி அந்த குருடனை குறித்து நம்ம இயேசப்பா சொன்னாங்களோ….அதேதான் உங்களை குறித்தும் சொல்ல ஆசைப்படுறாங்க….அவள் சொன்ன போது எல்லாரும் அவள் பேசுவதை தான் பார்த்து கொண்டிருந்தனர்.

    இது முழுக்க முழுக்க தேவ நாமம் மகிமைப்பட…..உங்களால எத்தனையோ பேரு நம்ம தேவனின் அன்புக்குள் வர காரணமா இருந்திருக்கீங்க. அப்படி இருக்கும் போது உங்களுக்குள்ள ஏன் தேவையில்லாத மன கஷ்டம்…… அவள் சொன்ன போது

    ஆனா என்னை நேசிச்ச தேவனை கஷ்டப்படுத்தினது உண்மைதான….மீண்டும் அதே புலம்பலை அவர் பாடவும்

    தயவு செய்து இந்த குற்ற மனசாட்சி உங்களுக்கு வேண்டாம் அங்கிள். உங்களுக்கு தெரியாத விசயம் இல்லை. இந்த உலகத்தை நம்ம தேவன் படைத்த போது ரொம்பவே அழகாக, நேர்த்தியாகத்தான் படைத்தார். ஆனா அவர் பார்த்து பார்த்து உருவாக்கின இந்த உலகத்தை பார்த்து கொள்ளுற பொறுப்பை நம்ம தேவன் இப்ப நம்ம சாத்தான் சொல்லுற லூசிபர்கிட்ட தான் கொடுத்தாங்க. ஆனா அவன் தன்னுடைய அழைப்பில உண்மையா நடந்துக்க முடியலை. அந்த கோபத்தினால தான் அங்கிள் இப்பவும் அவர்கிட்ட சேர நினைக்கிற, அவர் நம்மளை சேர்த்து கொள்ள நினைக்கிற எண்ணங்களை எல்லாம் இந்த தேவையில்லாத குற்ற மனசாட்சியால தடுத்து நிப்பாட்ட பார்க்குறான். நம்மளுடைய தப்புகளை நம்ம தேவனே பரிசுத்த ஆவியால் கடிந்து கொள்ளுரதும் உண்டு. ஆனா அது அவர்கிட்ட திரும்புறதுக்கே தவிர, கண்டிப்பா விலகி போற விசயமா இருந்தாலோ இல்லை மீண்டும் புலம்ப வைக்கிற காரியமா இருந்தாலோ சரி, அது நம்ம தேவன் நம்ம தப்பை நினைச்சி வருந்த கொடுக்கிற தருணங்கள் கிடையாது…..நம்மளை சாத்தான் நம்ம தேவன்கிட்ட இருந்து விலக்க நினைக்கிற தந்திரங்கள் அங்கிள்…..தயவு செய்து அவன் பேச்சை கேட்காதீங்க. நாம மனிதர்கள் அங்கிள். நாம நமக்கு தெரிந்தோ, தெரியாமையோ நிறைய தவறுகள் செய்யுறது உண்டு.

    ஆனா அதை எல்லாம் நம்ம இயேசப்பா நமக்காக ஏற்கனவே சுமந்து தீர்த்து, சிலுவையில் அதற்கான தண்டனையை ஏத்துக்கொண்டாங்க.    

    ஆனா என்னைக்கி நம்ம இயேசப்பாவை நீங்க புரிஞ்சி கொண்டீன்களோ, அவர் உங்களுடைய தப்புகளை எல்லாம் ஏத்துக்க வேதனை பட்டாங்கன்னு புரிஞ்சிக்கிட்டு, அவர்கிட்ட சாரி கேட்டீங்களோ, அந்த நிமிசமே அவர் உங்களுக்காக பட்ட காயத்திற்கு நீங்க உங்க கண்ணீரால் மருந்து போட ஆரம்பிச்சிட்டீங்க. அது மட்டுமில்ல உங்க தப்புகளுக்கு மன்னிப்பு கேட்டு, அப்பா நான் உங்களை நம்புறேன்…..உங்களை நேசிக்கிறேன்….ன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டீன்களோ….அப்பவே உங்க அன்புக்கு ஏங்கி சிலுவையில் அவர் விட்ட கண்ணீரை துடைச்சி…..அவருக்கு முத்தம் கொடுக்க ஆரம்பிச்சிட்டீங்கன்னு அர்த்தம்…..ஆனா இந்த சத்தியத்தை எல்லாம் உங்க இருதயத்தில் இருந்து மறக்கடிக்க….உங்க இயேசப்பாகிட்ட இருந்து உங்களை பிரிக்கிறதுக்காக தான் இந்த தேவையில்லாத மன கஷ்டத்தை கொடுத்திருக்கான்.

    ப்ளீஸ் அங்கிள்….உங்க தப்புக்காக உங்களுள்ள மன வருத்தம் வரது நல்ல விஷயம்தான். ஆனா அது உங்களை உங்க இயேசப்பாகிட்ட நடத்திட்டு போகுதா…..இல்லை சாத்தான்கிட்ட கூட்டிட்டு போகுதா…..ன்னு கவனமா இருங்க. இதுவரை உங்க தப்புக்காக சிலுவை சுமந்திட்டு இருக்கிற அவர் வேதனையை ஆறுதல் படுத்தி ஒப்புரவாகுற வேலையை விட்டுட்டு, தப்பு பண்ணிட்டேன்…..தப்பு பண்ணிட்டேன்ன்னு சொல்லி இன்னும் உங்க கையால அவரை சிலுவையில அறையாதீங்க…..ப்ளீஸ் அங்கிள்…..அவள் அழுது விட்டாள்…..உண்மையில் அவள் அப்பா கூட இத்தகைய போதிப்பை இதுவரை கேட்டதில்லை. தன் தேவன் தன்னிடமும் பேசி கொண்டிருக்கிறார் என்று அவரும் புரிந்து கொண்டார். ரம்யா அப்பா கூட தன் கண்களில் இருந்த கண்ணீரை துடைத்தவராய்

    நான் இப்ப என்ன செய்யணும் சொல்லு குட்டிமா. என்னுடைய இயேசப்பா இனிமேலும் என்னுடைய குற்ற மனசாட்சியால வருத்தப்பட விட மாட்டேன்….. அவர் காயத்திற்கு நான் மருந்து போட நான் என்ன செய்யணும்…..ரம்யா அப்பா கேட்ட போது

    எல்லார் முகத்திலும் சந்தோசம் நுழைந்தது. அவளும் சிரித்தவளாய்…..உங்க ரூமில் போய், முழங்கால் படியிட்டு, உங்க இயேசப்பாகிட்ட நீங்க செய்த எல்லா தப்புகளையும் சொல்லி, அவர்கிட்ட சாரி கேளுங்க அங்கிள். அது மட்டுமில்ல இனிமே என்றும் அவரை விட்டு விலகிடாத அன்பை அவர்கிட்டயே கேட்டு வாங்கிக்கோங்க…… சொன்ன போது

    அவர் முகத்திலும் சந்தோசம் கொண்டவராய் தேங்க்ஸ் குட்டிமா…..நான் என்னுடைய இயேசப்பாகிட்ட பேச போறேன்…..சிரித்த வண்ணம் தனது ரூமில் நுழைந்தார்……

    பார்த்து கொண்டிருந்த ரம்யா அம்மா, தாத்தா, பாட்டி, ரம்யா முகத்திலும் முழுக்க முழுக்க மகிழ்ச்சி……

    ரம்யா அம்மாதான் முதலில் பேச ஆரம்பித்தார். அண்ணன், உங்க பொண்ணு……அவர் சிறிது கண் கலங்கி பேச ஆரம்பித்த போதே அவள் அப்பா புரிந்து கொண்டவராய்

    ரம்யா…..உங்க வீட்டுக்கு உன் பிறந்த நாளுக்கு வந்திருக்கேன். இன்னும் ஒரு சாக்லேட் கூட எனக்கு தரலை……அவர் கேட்ட போது

    இருங்க அங்கிள்…நான் உங்களுக்கு கேக் எடுத்துட்டு வரேன்…..ரம்யா சந்தோசத்தோடு நுழைய புறப்பட்ட போது, குட்டிமா….நீயும் ரம்யா கூட அப்பாக்கு எடுத்துட்டு வாமா…. அவளை சேர்த்து அனுப்பி வைத்தார்.

    இருவரும் கிச்சனில் நுழைந்த பிறகே பேச ஆரம்பித்தார் அவள் அப்பா. அதுவும் மெதுவாக…..

    அவர் சொன்ன காரியங்களை கேட்டுக் கொண்டிருந்த அங்கிருந்த ரம்யா அம்மா, பாட்டி, தாத்தா கூட பயந்து போனார்கள். ஒரு புறம் அவள் மேல் தேவன் வைத்திருக்கும் அன்பை கண்டு வியந்து போனவர்கள், மறு புறம்….அத்தகைய அன்பு கொண்ட தன் பிள்ளைகள் மேல் கூட எந்த நேரம் தேவன் எதிர்த்து நிற்க எது காரணமா இருக்கும்….என்பதை தெரிந்து கொண்ட போது உண்மையில் ஒரு பக்கம் பயம் அவர்களை ஒட்டி கொண்டது.

    தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார்மா. இதை கேட்டு நீங்க ஏன் பயப்படுறீங்க…… அவர் சொல்லி கொண்டிருந்த போதே இருவரும் உள்ளே நுழைந்தனர்.

    அங்கிள்…கேக் எடுத்து கொள்ளுங்க….ரம்யா சொல்லவும்….

    தேங்க்ஸ் ரம்யா….தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக….என்று சொல்லவும்

    அங்கிள்….நாங்க வரும் போது பெருமை பத்தி ஏதோ சொல்லி கொண்டிருந்தீங்க…… ரம்யா கேட்கவும்

    என்ன சொல்லுவது என்று ஒரு கணம் எல்லாரும் திகைத்து போனார்கள். ரம்யா சிரித்து கொண்டே சொன்னாள்…..

    அங்கிள்….தேவன் பெருமையுள்ளவங்களுக்கு எதிர்த்து நிற்குறது எல்லாம் உண்மைதான். ஆனா அந்த கோபத்தில் அவர் நம்ம எலும்பை நொறுக்கினாலும் கூட…..நம்ம காயங்களுக்கு கட்டு போட்டு நம்மை ஆறுதல் படுத்துற தேவனும் அவர்தான் அங்கிள். அப்ப நாம ஏன் பயப்படணும்…. சப்போஸ் எனக்குள்ள பெருமை குணம் இருந்து ஐயோ….ஐயோ….இப்படி என் தேவனுக்கு பிடிக்காத குணம் இருக்குன்னு பயந்து சாகுறதை விட…. என் இயேசப்பாகிட்ட என் குணத்தை ஒப்பு கொடுக்கலாமே…

    இயேசப்பா உங்களுக்கே தெரியுமே….நான் கொஞ்சம் என்னை பத்தி யாராவது புகழ்ந்து தள்ளிட்டாலோ, இல்லை என்னை யாராவது ஒரு நல்ல காரியம் பண்ணிட்டா புகழ மாட்டங்களான்னு நாய் மாதிரி அலையுற ரகம்….அதுனால என் வாழ்கையில் நான் எவ்வளவு பெரிய இடத்திற்கு போனாலும், அதன் மூலமா பெரிய புகழ்ச்சிகள் வந்தாலும் சரி…..எங்கள் ஆதி பிதாக்களை உங்க கிட்ட பிரிக்க நினைச்ச  அதே சாத்தான் எங்களுக்குள்ளயும் கண்டிப்பா பெருமையை போடத்தான் செய்வான். அதுனால நீங்களும் கோபப்பட்டு கண்டிப்பா எதிர்த்து நிற்கத்தான் செய்வீங்க. ஆனா ஒரே ஒரு விண்ணப்பம்….அப்படி நீங்க அடிக்கிறது எங்க நல்லதுக்காகதான. ஆனா என்ன அடி கொடுத்தாலும் நீங்களே அடிச்சி கொள்ளுங்க. நீங்களே காயத்திற்கு மருந்தும் போட்டு கொள்ளுங்க. ஆனா தயவு செய்து அந்த சாத்தான் கிட்ட மட்டும் எங்களை ஒப்பு கொடுக்க கூடாது. நான் என் கண்களை மூடும் போது, நீங்கதான் என்னை அரவணைத்து கொள்ளனும்…உங்களோட பரலோகத்திற்கு கூட்டிட்டு போகணும். அந்த சாத்தானுக்கு அன்னைக்கி எப்படி மோசே உடம்பு மேல கூட அதிகாரம் கொடுக்கலையோ அதே மாதிரி எங்க மேலயும் எந்த காரியத்திலயும் சாத்தானுக்கு அதிகாரம் இல்லை. நீங்க உங்க ரத்தத்தினால் மீட்டு எடுத்த உங்க சொத்து நாங்க….அதுனால உங்களுக்கு மட்டும்தான் எங்க மேல எல்லா உரிமையும் உண்டு….அதுனால நீங்க அடி கொடுத்தா கூட சந்தோசம்தான் எங்களுக்கு……அப்படி சொல்லிட்டா பிரச்சனை இல்லையே அங்கிள்….

    ரம்யா சொல்லி சிரித்த போது எல்லார் கண்களிலும் கூட கண்ணீர் வந்து விட்டது. ஒரு மாதமாக தன் மண்டையை போட்டு குழப்பி கொண்டு வேதனைப்பட்டு கொண்டிருந்தவருக்கு இதுதான் பதில்……என்று தன் தேவனே சொல்லுவதை போல உணர்ந்தார் அவள் அப்பா.

    அந்த நொடியே தன் பெண்ணை தன் தேவனிடம் ஒப்படைத்து விட்டார் கண்களில் கண்ணீருடன். அவள் கூட தனக்குள் இருந்த முதல் படி பிரச்சனையை கடக்க தன் தேவன் கொடுத்த தீர்வாகத்தான் நினைத்தாள். தேங்க்ஸ் இயேசப்பா…..உங்க கையில என்னை ஒப்பு கொடுத்திட்டேன் பிரெண்ட் ….. அதுனால இனிமே இந்த பெருமை காரியத்திற்கு நான் பயப்பட போக போறதில்லை. எதுவா இருந்தாலும் எனக்கு அதை பத்தி சொல்லி கொடுக்கிறதுக்கும், அதை மீறி நான் தவறி நடக்கும் போது என்னை அடிச்சி உங்க வழியில் கூட்டிட்டு போறதுக்கும் தான் என்னுடைய மேய்ப்பராய் நீங்க பரலோகம் வரை கூட வர போறீங்களே….நான் இனிமே பயப்பட மாட்டேன்….தேங்க் யூ இயேசப்பா…..கண்களில் கண்ணீருடன் தன் தேவனுக்கு நன்றிகள் செலுத்தினாள்.

    ரம்யா அம்மா தன் மனதில் சந்தோசப்பட்டு கொண்டார்…..தேங்க்ஸ் இயேசப்பா……ரம்யா பத்தியும் நான் கவலைப்பட மாட்டேன்….நீங்க எனக்கு கொடுத்திருக்கிற இந்த குடும்பத்தையும் பத்தியும் நான் இனிமே கவலைப்பட மாட்டேன்….நீங்கதான் எங்க நல்ல மேய்ப்பர்……நன்றிகள் சொன்னார்…..ரம்யா அம்மா.

    ரம்யா மூலமா தேவன் கடைசியாக சொன்ன பெருமை குறித்த காரியம் மட்டும் இன்னமும் அவள் மனதில் ரீங்காரமிட்டு கொண்டிருந்தது. அவள் மனம் முழுமையும் தேங்க்ஸ் இயேசப்பா…..தேங்க்ஸ் இயேசப்பா…..சொல்லி கொண்டே இருந்தது. எத்தனை அழகாக நீங்க என்னை நடத்துறீங்க இயேசப்பா….என்னுடைய முதல் படிக்கட்டு…..நினைக்கும் போதே அவளுக்கு அழுகை வந்து விட்டது.

    தன் தேவனின் பாதத்தில் தன்னை முழுமையா ஒப்படைத்தவள் இது வரை இருந்த குழப்பத்தை எல்லாம் மறந்து அமைதியாக தூங்கினாள். தூக்கத்தில் கூட அவள் எண்ணங்களில் தேங்க்ஸ் இயேசப்பா….என்ற வார்த்தை தான் நிரம்பி இருந்தது….

    முகம் முழுவதும் சந்தோசத்துடன் தூங்கும் தன் மகளை அவள் அப்பாவும், அம்மாவும் சிறிது தூரத்தில் நின்றே ரசித்தனர். இதுவரை இருந்த மன குழப்பம் கூட அவர்கள் மனதை விட்டே காணாமல் போயிருந்தது….இனிமே எங்க பொண்ணை பத்தி என்னைக்குமே கவலைப்பட தேவையில்லை…..ரொம்பவே ஆறுதலாக உணர்ந்தனர்……

    ரம்யா, தன் பெண், வேதா…..மூலமாக தேவன் சிறு குழந்தைகளை நடத்தும் விதம்…… அவர்களை உண்மையில் ஆச்சரியப்பட வைத்தது.

    அந்த சந்தோஷத்தில் மீண்டும் தூங்கும் தன் பெண் முகத்தை பார்த்து விட்டு படுக்க சென்றனர் இருவரும்….

    ஆனால் எந்த நபரை இது வரை பார்க்க கூடாது என்று தனக்குள் நினைத்திருந்தாலோ….அந்த நபரை பார்க்க நேரிட்டால் அவளுடைய இந்த சந்தோசம் என்ன ஆகும்!!!!!!!

    Related Post

    Categories: பைபிள் சம்பவங்கள்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    − three = 6

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>