• பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 42

    தூக்கத்தின் நடுவிலும் தேவனுடைய நாமத்தை உயர்த்துவது உண்மையில் அவளுக்கு பிரியமாகவே இருந்தது. எந்த ஒரு குழப்பமான கனவுகள், நினைவுகள், எண்ணங்கள் இல்லாமல் முழுக்க தேவனின் பிரசன்னத்தில் இருப்பதை போல உணர்ந்தாள்.

    அந்த வெளிச்சமான பாதையில் நடந்து கொண்டே இருக்க அவளுக்கு பிடித்திருந்தது. எல்லா பக்கமும் பார்த்தாலும் பச்சை பசேல் என்றுதான் தெரிந்தது.

    இயேசப்பா உலகத்தில் எல்லா தாவரங்களையும் அதற்குள்ள படைச்சிட்டாங்களா…..மனதினில் நினைத்து சிரித்து கொண்டாள். இன்னிக்கி என்னோட ஏஞ்சல் வர மாட்டாங்க போல…..சரி இயேசப்பா, இந்த ரகசியத்தை நான் தனியாத்தான் தெரிந்து கொள்ளணும்னு நீங்க நினைச்சிருந்தா உங்க சித்தத்துக்கு நான் முழுமையா விட்டு கொடுக்கிறேன்……தேவனுக்கு மனதினில் நன்றிகள் சொல்லி விட்டு சுற்றியிருந்த இயற்கை காட்சியை ரசித்தாள்.

    தூரத்தில் மலையின் மேலே இருந்து வழிந்து கொண்டிருந்த நீரோடை கூட கண்களுக்கு விருந்தாகத்தான் அவளுக்கு தோணியது. இயேசப்பா நீங்க காண்பிக்கிற இந்த இயற்கை காட்சியை என்னுடைய பிரெண்ட்ஸ்,,,,,தேவையில்லாம வெட்டி கதை பேசும் போது சொல்ல தோணும். ஆனா உங்க கட்டளை ஞாபகத்திற்கு வந்ததும்….சரி ஒரு நாள் கண்டிப்பா எல்லா விசயத்தையும் சொல்ல சொல்லுவீங்க….அன்னைக்கு சொல்லுவோம்…ன்னு மனசில நினைச்சிக்குவேன் பிரெண்ட்……தன் தேவனிடம் சொன்னாள்.

    அவள் கால்கள் அருகாமையில் ஓடும் நீரோடையை கண்டதும் காலை அதில் விட்டு விளையாட தான் அவளுக்கும் ஆசையாக இருந்தது. ஆனா இயேசப்பா permission உண்டா….மனதுக்குள் கேட்டுக் கொண்டாள். இயேசப்பா சாரி, அட்லீஸ்ட் இந்த தண்ணீரை என் கையில் எடுத்துனாச்சும் பார்க்கலாமா??? கேட்ட போது தன் இயேசப்பா ஏதாவது ஒரு வகையில் பதில் தர மாட்டாங்களா ….குழப்பத்தோடு காத்திருந்தாள்.

    இன்னும் அவள் தேவன் அவளுக்கு பதில் தர வில்லை. ஏன்….எதுவும் பிரச்சனையா….. மனதினில் நினைத்தாள். சப்போஸ் அன்னிக்கி பூமி உருவாக்கப்பட்டதை பார்க்க முடியாம போச்சுன்னு இயேசப்பாகிட்ட கேட்டு, இயேசப்பா சரின்னு சொல்லி பார்த்துக்க permission கொடுத்தப்பதான அந்த தேவையில்லாத சோதனையில் மாட்டிகிட்டேன்….சோ….இப்ப கூட அந்த மாதிரி பிரச்சனை வரக் கூடாதுன்னு சொல்லித்தான் என் இயேசப்பா வேண்டாம்னு நினைக்கிறாங்களா???? மனதினில் கேள்வி கேட்டு கொண்டாள்.

    ஒரே ஒரு நொடி தன் மனதை அவள் குழப்பி கொண்டது நிஜம். ஆனா அடுத்த நொடியே உங்களுக்கு பிரியம் இல்லாத காரியம் எனக்கும் வேண்டாம் இயேசப்பா…..முழு மனதோடு சொன்னாள் அவள்.ஒரு மெல்லிய காற்றை உணர்ந்தாள். தன் இயேசப்பாதான்…..அப்ப இந்த நீரோடை விசயத்தில் ஏதோ பிரச்சனை இருக்கு….ஆனா என் இயேசப்பா உருவாக்கின இந்த அழகான படைப்பில அப்படி என்ன பிரச்சனை வந்திர போகுது….கேள்வி கேட்டுக் கொண்டே நடக்க ஆரம்பித்தாள்.

    நீரோடையின் இரண்டு பக்கத்திலும் அதிகமாகவே மரங்கள் தெரிந்தது. ரொம்பவே உயரமான மரங்களாக இருந்தாலும் தரை தொடும் வண்ணம் அதன் கிளைகள் தாழ்ந்திருந்தது. தொட்டு பார்க்க தோன்றிய தன் ஆசையை மனதினிலே மறைத்து விட்டாள். சப்போஸ் இது ஆதாம், ஏவாள் காலமாக இருந்து நன்மை, தீமை மரமா இருந்தா என் பாடு திண்டாட்டம்தான்….தனக்குள் சொல்லி கொண்டாள்.

    இன்னொரு எண்ணம் அவள் மனதில் வந்து போனது. சப்போஸ் இது பரலோகமா இருக்குமா….ஏன்னா கண்ணுக்கு எட்டின வரை சூரியன் தெரியலை….பரலோகத்தில் தான் சூரியன் இருக்காதே. எங்க தேவன்தான் எங்களுக்கு நித்திய வெளிச்சமா இருப்பார். அது மட்டுமில்ல என் தேவனும், ஆட்டுகுட்டியானவருடைய சிங்காசனத்தில் இருந்து ஜீவ தண்ணீருள்ள சுத்த நதி புறப்பட்டு வரும்ன்னு சொல்லப்பட்டிருக்கு. அதன் இரு கரையிலும் ஜீவ விருட்சம் இருக்கும்னு வேற சொல்லப்பட்டிருக்கே. யோவான் தாத்தா சொன்ன காரியங்கள் எல்லாம் அப்படியே இங்க என்னால பார்க்க முடியுது. அப்ப இது பரலோகமா இருக்குமா??? அவளில் கேள்வி வந்து போனதும் நிஜம்…. ப்ளீஸ் இயேசப்பா, இதுக்கு மேல என்னால சஸ்பென்ஸ் தாங்க முடியாது. அதனால தயவு செய்து நீங்களே இது என்ன இடம்ன்னு சொல்ல முடியுமா, ப்ளீஸ்…..கேட்டு விட்டு காத்திருந்தாள் தன் தேவனின் பதிலுக்காக.

    பதில் மட்டும் தான் இன்னும் வந்த பாடில்லை. பரவாயில்லை இயேசப்பா, நீங்க பதில் சொன்ன பிறகே நாம போவோம். அது வரைக்கும் இங்க உங்க பதிலுக்காக வெயிட் பண்ணுறேன், சரியா…..சொல்லி விட்டு அங்கு காணப்பட்ட புல் வெளியில் அப்படியே அமர்ந்தாள். எந்த ஒரு அரிப்பையும் அந்த புல்கள் கொடுக்காமல் ரொம்பவே மெதுவாக இருந்தது அவள் அமர்வதுக்கு.

    அந்த மெதுமெதுப்பில் அதை தன் கரங்களால் தடவி கொடுத்தாள். எவ்வளவு சாப்ட்டா இருக்கு. என் இயேசப்பா இந்த பூமியை படைச்சப்ப என்ன அழகாக படைச்சிருக்காங்க. ஆனா இந்த அளவுக்கு உள்ள ஒரு அழகை ஏன் இப்ப எங்களால் பார்க்க முடியலை இந்த உலகத்தில்.…..வாய் திறந்து பேசினாள் ஆச்சரியம் தாங்காமல்.

    அவள் பேசி கொண்டு இருக்கும் போதே, யாரோ கத்துவதை போல தோணவும் யாரது…..என்ற கேள்வியோடு சுற்றிலும் பார்த்தவளுக்கு நான் இங்க இருக்கேன்…… நீ உட்கார்ந்திருக்கிற புல் நான் தான். உன் கையால என்னை பிச்சிட்ட பாரு…..குரல் எழுப்பவும் தான் தன் கையில் இருந்த புல்லை பார்த்தாள்.

    அழகான தன் கண்களால் அவளை பார்த்தது அந்த புல். நடப்பது என்ன கனவா இல்லை நான் எதுவும் ஒரு நல்ல குழப்பத்தில இருக்கேனா….. வியப்போடு பார்த்தவளுக்கு நீங்க எங்களுடைய எஜமானருக்கு தெரிந்தவங்களா…….கேட்ட போது…..ஒன்றும் புரியாமல் பார்த்தாள். எஜமானன்…அவள் வாய் திறந்து கேட்ட போது…..

    எங்களை படைத்தவர் தான் எங்க எஜமானர்…அவருடைய பையனை நீங்க பார்த்திருக்கீங்களா….ரொம்பவே அன்பானவர்…. அது சொல்லவும் புரிந்து கொண்டாள் அவளும் சிறிதளவு.

    ம்….எனக்கு உங்க எஜமானனையும், அவருடைய பையனையும் தெரியும். நாங்க அவர்களை பிதாப்பா, இயேசப்பான்னு கூப்பிடுவோம். ரொம்ப ரொம்ப அன்பானவங்க…..சிரித்து கொண்டே சொன்னாள்.

    என்னை மாதிரி நிறைய பேரு இங்க வரது உண்டா….. என்று கேட்டவளுக்கு

    இல்லை. நீங்கதான் நான் பார்த்த முதல் விருந்தினர். ஆனா நீங்க பேசுறது, உங்க உருவம் எல்லாமே வித்தியாசமா இருக்கு. கொஞ்சம் எங்க எஜமானர் சாயலில் இருக்கீங்க…..சொல்லி விட்டு புல் தன் கரங்களால் அவளை தொட்டு பார்த்தது. ரொம்ப அழகா இருக்கீங்க…..சொல்லி விட்டு சிரித்தது.

    ஆமா….இது என்ன இடம்….இந்த இடத்தை என்னன்னு சொல்லுவீங்க….கேட்டு விட்டு அதன் முகத்தை ஆர்வமாக பார்த்தாள்.

    இந்த இடத்திற்கு பேர் ஏதேன்…..ஏதேன் தோட்டம்ன்னா உங்களுக்கு தெரியுமா….. அது கேட்ட போது

    அந்த புல்லின் கேள்விக்கு பதில் சொல்லுவதை காட்டிலும் அந்த இடத்தை பார்த்து தெரிந்து கொண்டதுதான் அவளுக்கு மன சந்தோசத்தை தந்தது. அப்ப என் இயேசப்பா என்னை ஏதேன் தோட்டத்துக்குதான் கூட்டிட்டு வந்திருக்காங்களா. இந்த தோட்டம் பைபிள் சொல்லப்பட்ட மாதிரி ரொம்பவே அழகாக இருக்கு. இந்த தோட்டத்தை சுத்தி நாலு ஆறுகள் பிரிந்து போகும்னு சொல்லப்பட்டிருக்கே. ஆனா போயும் போயும் இந்த இடத்தை பார்த்தா நான் பயப்பட்டேன்….அவள் யோசித்து கொண்டிருந்த போதே

    நீங்க ஏன் இப்படி தேவையில்லாம யோசிக்கிறீங்க. நம்ம எஜமானர் நம்ம கூட இருக்கும் போது எந்த வகையில தொல்லை வர முடியும்….அது சொன்ன போது அவளுக்கே தன்னை குறித்து வெட்கமாய் போய் விட்டது.

    சாரி இயேசப்பா, நான் உங்களை கஷ்டபடுத்திட்டேன்….மனதில்தன் தேவனிடம் மன்னிப்பு கேட்டாள்.

    எப்ப நம்ம எஜமானர் இந்த இடத்தை பார்க்க வருவாங்க….அவள் கேட்ட போது

    இப்ப வருகிற நேரம்தான்…...அது சொல்லி கொண்டிருந்த போதே

    அதிகமான வெளிச்சத்தோடு இரண்டு தூதர்கள் அவள் பக்கத்தில் வந்து நிற்கவும் ஒரு நொடி பயந்து போனாள்.

    நீ யாரு….இங்க என்ன பண்ணிடிருக்க…..அந்த ஏஞ்சல்கள் அவளை பார்த்து கோபத்தோடு கேட்கவும் பயந்து போனாள்.

    என்ன சொல்லணும்….அவள் யோசித்து கொண்டிருந்த போது

    நீங்க கோபப்படுற மாதிரி ஒண்ணும் இவங்க இந்த தோட்டத்திற்கு அன்னியர் கிடையாது. நம்ம எஜமானுக்கு தெரிந்தவங்களாம்……அந்த புல் சொன்ன போது

    அவளை மேலே கீழே இறங்க புரியாமல் பார்த்தனர் இரு ஏஞ்சல்களும்.

    பார்த்தா நம்ம எஜமானரின் சாயல் தெரியுது. ஆனா இந்த மாதிரி உள்ள நபரை நாம பார்த்தது கூட கிடையாதே….ஒரு ஏஞ்சல் புல்லிடம் சொன்ன போது

    நான் கூட அப்படித்தான் நினைச்சேன். ஆனா அவங்க கையை நான் தொட்டு பார்த்தப்ப நம்ம எஜமானரின் சுவாசத்தை தெரிந்து கொண்டேன். அதுனால கண்டிப்பா இவங்க நம்ம எஜமானருடைய சொந்தகாரங்களாதான் இருப்பாங்க……அந்த புல் சொன்ன போது

    அப்படியா… இரு ஏஞ்சலும் ஆச்சரியப்பட்டு வானத்தில் பறந்து கொண்டிருந்த அவர்கள் அவள் முன் வந்து இறங்கினர். 

    தங்களை இந்த ஏதேன் தோட்டத்துக்கு வரவேற்கிறோம்…..அவர்கள் அவளை கையை பிடித்து தங்களோடு அழைத்து செல்ல ரெடியாக நின்றனர்.

    நாங்க இந்த…….உங்களை எப்படி உங்க உலகத்தில கூப்பிடுவாங்க….ஒரு ஏஞ்சல் தயக்கமாக கேட்ட போது

    நாங்க மனுசங்க. என்னை பொண்ணுன்னு சொல்லுவாங்க…….அவள் சொன்னவுடன்

    இந்த பொண்ணை நம்ம கண்காணிப்பவர்கிட்ட கூட்டிட்டு போறோம்…..அவர்கள் சொல்லி விட்டு அவளை தூக்கிய வண்ணம் அந்த புல்லுக்கு பை சொல்லி கிளம்பினர்.

    அவளும் அந்த புல்லுக்கு…..தனக்கு கிடைத்த முதல் நண்பனுக்கு பை என்று சொன்னாள்.

    நேரம் கிடைக்கும் போது கண்டிப்பா என்னோட பேச வரணும்……. அந்த புல் அவளை பார்த்து சொல்லவும்

    கண்டிப்பா…..அவள் சிரித்த வண்ணம் தன் கைகளை அசைத்தாள்.

    அவளை தூக்கி கொண்டு அந்த ஏஞ்சல்கள் பறந்த போதும்…அவளில் முழுமையான குழப்பம். என் இயேசப்பா மனிதனை உருவாக்கின பிறகுதான ஏதேன் தோட்டத்தை உருவாக்கி, அதில் ஆதாமை வைச்சாங்க. ஆனா இந்த ஏஞ்சல்களும் சரி, அந்த புல்லா இருக்கட்டும். இப்ப தான் என்னை மாதிரி உள்ள மனுஷனையே முதல்ல பார்க்குறதா சொல்லுறாங்க…..உண்மையில் ஒண்ணும் புரியலை…அவளில் யோசித்து கொண்டிருந்த போதே

    அச்சோ….நான் மனதில் யோசிக்கிறது கூட இந்த ஏஞ்சல்களால புரிஞ்சுக்க முடியுமே….அவள் நினைத்து முடிப்பதற்குள்

    நீங்க எதுக்கும் கவலைப்பட வேண்டாம். உங்களுடைய .எந்த சந்தேகமா இருந்தாலும் அதை எங்க கண்காணிப்பவர்கிட்ட கேளுங்க. அவர் உங்களுக்கு கண்டிப்பா பதில் தருவார். ஏன்னா அவருடைய ஞானம்தான் இந்த ஏதேன் தோட்டம் முழுவதும் பிரசித்தி பெற்றதே!! அவர்கள் சொல்லி சிரித்த போது உண்மையில் அவள் குழம்பி போனாள். பிதாப்பா, இயேசப்பா, பரிசுத்த ஆவிப்பா…..இவங்க மூணு பேரு மட்டும்தான உண்டு. இதுல என்ன புதுசா….. கண்காணிப்பவர்….சப்போஸ் பரிசுத்த ஆவிப்பாவை தான் அவங்க அந்த பேர்ல கூப்பிடுறாங்களா??? மண்டையை உடைத்து கொண்டாள்.

    இயேசப்பா…எனக்கு துணையா நம்ம ஏஞ்சலையும் அனுப்பி இருக்கலாமே. இந்த ஏஞ்சல்களுக்கு என்னை பத்தியே ஒண்ணும் புரியலை…அவள் சொல்லி கொண்டிருந்த போதே அந்தநீளமான நதியை கடந்து விட்டனர்.

    தோட்டத்துக்கு நடுவில் ரொம்பவே அழகான அரண்மனையை போலத்தான் உணர்ந்தாள். வெளியில் இருந்து பார்த்தப்பவே தெரிந்தது….முழுக்க முழுக்க தங்கத்தால் கட்டப்பட்டிருந்தது அந்த அரண்மனை. அந்த அரண்மனையை சுற்றிலும் ஏஞ்சல்கள் கூட்டம் கூட்டமாக பறந்து கொண்டிருந்தனர். அரண்மனையை சுற்றிலும் கூட மரங்களின் கூட்டம் அழகாக இருந்தது. கிட்டத்தட்ட என் இயேசப்பா ஏதேன் தோட்டத்தை உருவாக்கும் போதே, பரலோக சாயலில் தான் உருவாக்கி இருக்காங்க போல…… சுற்றிலும் காணப்பட்ட இயற்கை காட்சியை ரசித்து கொண்டே உள்ளே நுழைந்தாள்.

    அரண்மனையின் தூண்கள் ரொம்பவே வேலைப்பாடு நிறைந்ததாக இருந்தது. பார்த்ததுமே அவள் தெரிந்து கொண்டாள். விலையேறப்பட்ட கற்கள் அனைத்தும் அதில் பதிக்க பட்டிருந்தது. எல்லா பக்கமும் அவளால் ஏஞ்சல்களை மட்டும்தான் பார்க்க முடிந்தது. மறந்தும் கூட எந்த மனுஷ சாயலை அவள் பார்க்க வில்லை.

    அரண்மனையின் ஒவ்வொரு அறையும் அற்புதமாக இருந்தது பார்ப்பதற்கே. சரி….இவங்க சொல்லுற அந்த கண்காணிப்பவர் யாரு…… அரண்மனையின் மையப்பகுதிக்கு கூட வந்து விட்டாள். ஆனால் இன்னும் அவர்கள் பெருமைப் பட்டுக் கொண்ட அந்த கண்காணிப்பவரை மட்டும்தான் அவள் பார்க்க முடிய வில்லை.

    சிங்கசானமும் அற்புதமாக இருந்தது. தூண்களையே பார்த்து பார்த்து அழகு படுத்தினவர்கள் சிங்காசனத்தை மட்டும் சும்மா விடுவார்களா என்ன….. மனதில் அவள் நினைத்து கொண்டிருக்கும் போதுதான் ஒரு ஏஞ்சல் அவள் காதுக்கு அருகில் வந்து இது எங்க கண்காணிப்பவருடைய சிங்காசனம்…..மெதுவாக சொன்னது.

    ஆனா ஏன் இவங்க இந்த அளவுக்கு மரியாதையை தன் கண்காணிப்பவருக்கு கொடுக்கிறாங்க. சப்போஸ் பவுல் தாத்தா அதிகாரங்களில் இருப்பவங்களுக்கு மரியாதை தரச் சொல்லியிருக்காங்களே….இதை எல்லாம் பார்த்து தான் சொல்லி இருப்பாரோ…. மனதில் அவள் நினைத்து கொண்டாள். ஆனால் அவள் வாய் சும்மா இருக்காமல் உங்க கண்காணிப்பவருக்கு வேற எதுவும் பேர் உண்டா…..அவள் கேட்ட போது

    ஏஞ்சல்கள் ரொம்பவே உற்சாகமாய்…….நம்ம எஜமானர் அவருக்கு நிறைய பேரு சொல்லி மகிழ்ந்திருக்காங்க. அதுல எங்களுக்கு பிடிச்சதும், நாங்க அவரை பாராட்டி மகிழ்றதும் விடிவெள்ளியே, தேவனின் முத்திரை மோதிரமேன்னு சொல்லித்தான் மனதுக்குள் பாராட்டுவோம். வெளியே அவர் என்றும் இந்த மாதிரி பாராட்டுகளை எல்லாம் ஏத்துக்க மாட்டார். என்றும் கனம், மகிமை, துதி…..நம்ம எஜமானருக்கு மட்டும்தான் செலுத்தணும்ன்னு சொல்லி கொடுத்திருக்கார்.

    இந்த அளவுக்கு ஒரு சொகுசான வாழ்கையில் இருந்த பிறகும் கூட, மற்றவர்கள் பாராட்டும் நிலையில் இருந்தும் கூட தன் தேவனுக்கு மட்டும்தான் துதிகளை செலுத்த கற்று கொடுத்த அந்த கண்காணிப்பவரை பார்க்க அவளுக்கும் ஆசை வந்து விட்டது…..சே….பெருமையே இல்லாத ஏஞ்சலா…..மனுஷனா இருக்க முடியாதே….  தனக்குள் சொல்லி கொண்டாள்.

    ஆனா அவள் மனதில் ஒரே ஒரு சந்தேகம்….. இந்த வெடிவெள்ளி, தேவனின் கையில் இருக்கும் முத்திரை மோதிரம்….எங்கயோ பைபிள்ல படிச்சி இருக்கேன்….ஆனா யாரு….புரியாமல் விழித்தாள்.

    எங்க கண்காணிப்பவர் வந்திட்டாரு…..அந்த ஏஞ்சல் பேசி கொண்டிருந்த போதே

    ரொம்பவே மிடுக்கான உடையுடன் அங்கே வந்து நின்ற அவ்வளவு பெரிய ஏஞ்சலை கொஞ்சம் அண்ணாந்து தான் பார்த்தாள். சரியான உயரம்….வந்து நின்ற அந்த கண்காணிப்பவர் ஏஞ்சலுக்கு முன்பு தான் ஒரு எறும்பை போல உணர்ந்தாள்.

    முழுமையாக பார்வையிட்டாள். ரொம்பவே அதிக அழகுடையதா அந்த ஏஞ்சலை உணர்ந்தாள். அதன் உடல் முழுவதும் எல்லா விலையேற பட்ட கற்களும் மூடியிருந்தது. அது டிரஸ்ஸா இல்லை உடம்பே தங்கத்தால் செய்திருப்பான்களோ…..என்று சொல்லும் வண்ணம் முழுக்க முழுக்க விலையேறப்பட்ட ஏஞ்சலாய் அவளுக்கு தோன்றியது.

    ஆனா அதன் முகம் என்று சொல்லப்படும் பகுதி ரொம்பவே பிரகாசமாக தெரிந்தது. முகத்தை அந்த அளவுக்கு அவளால் தெளிவாக தெரிந்து இயல வில்லை. அத்தனை பிரகாசம் அந்த கண்காணிப்பவர் ஏஞ்சல் முகத்தில் இருந்தது.

    ஆனா விலையேறப்பட்ட கற்களால் மூடப்பட்ட ஏஞ்சல் பத்தி அம்மா கூட பைபிள் படிக்கும் போது விசேஷமா சொன்னாங்களே!! யார் அந்த ஏஞ்சல்….பேரு…..அவள் யோசித்து கொண்டிருந்த போதே

    எனது எஜமானரின் சுவாசத்தை பெற்ற பெண்ணே, உன்னை தேவனின் முத்திரை மோதிரமாகிய நான் இந்த தேவனின் தோட்டத்தில் வரவேற்கிறேன்!!!!! என்று அந்த ஏஞ்சல் சொன்னது தான் தாமதம் புரிந்து கொண்டாள்.

    இந்த குரல் நான் நரகத்தில தான் கேட்டிருக்கேன்…..இது வந்து…..அந்த சாத்தான் குரல்…..கர்ஜனையான குரல்…… யெஸ்….இது சாத்தான் தான்….தேவனின் தோட்டத்தில் அதாவது ஏதேனில் இருந்தவன்ன்னு இவனை குறித்து எசேக்கியேல் புத்தகத்தில சொல்லப்பட்டிருக்கு. அப்ப கண்டிப்பா இது சாத்தான்தான்…..ஆனா தேவன் முன்னாடி இவன் தன்னை உயர்த்துரதுக்கு முன்னாடி நடந்த சம்பவங்களா?????  மனதில் கேட்டுக் கொண்டாள்.

    என்ன பெண்ணே யோசித்திட்டு இருக்க…..அந்த கண்காணிப்பவர் கேட்ட போது

    அந்த கர்ஜனை குரலில் கோபமும், பயமும் அடைந்தவளாய் தயவு செய்து வாயை மூடுறியா…..கத்த தோன்றியது அவளுக்கு.

    ஏன் இயேசப்பா, நான் என்ன தப்பு பண்ணினேன். திரும்பியும் என்னை இவன் கிட்டயே விட்டுடீங்களே???? அழுதே விட்டாள் அவன் முன்பு.

    ஏன் என்ன ஆச்சு….நீ என்னமோ செய்யுற….உனக்கு ஏதாவது சரியில்லையா…... அந்த கண்காணிப்பவர் கேட்ட போது

    ஒன்றும் சொல்ல முடியாமல் அமைதியாக நின்றாள்.

    அவளை சுற்றிலும் அவனுடைய ஏஞ்சல் கூட்டம் வந்து நின்றது.

    என்ன ஆச்சு….என்ன ஆச்சு….அவர்கள் பாஷையில் பேசி கொண்டு இவளை தொட்டு பார்த்த வண்ணம் நின்றனர். கண்களில் கண்ணீர் மட்டும் நிற்காமல்…..

    இயேசப்பா ப்ளீஸ், சப்போஸ் இது கனவா இருந்தா இந்த நிமிசமே நான் எழுந்திரிக்கணும், நான் என்ன தப்பு பண்ணியிருந்தாலும் என்னை தயவு செய்து மன்னிச்சிருங்க, ப்ளீஸ்……முழங்காலில் நின்று கதற ஆரம்பித்தாள். வாயில் இருந்து மட்டும் வார்த்தைகள் வர வில்லை.

    அவளை சுற்றிலும் இருந்த அந்த கண்காணிப்பவர் ஏஞ்சல் கூட்டத்தை சுற்றிலும் அவளுடைய ஏஞ்சலும், ஏஞ்சல்கள் கூட்டமும் இருந்ததை பாவம் அவள் அந்த மன கலக்கத்தில் அறிந்து கொள்ள முடிய வில்லை……

    Related Post

    Categories: பைபிள் சம்பவங்கள்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    four − 4 =

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>