-
பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 28
அம்மா அவளைதான் எழுப்பி கொண்டிருந்தார். இன்னும் கொஞ்சம் தூங்கினா நல்லா இருக்குமே, ஏக்கத்துடன்தான் எழுந்தாள் அவள்.
மம்மி, ப்ளீஸ்……. என்ற போது……என்ன குட்டிமா, எவ்வளவு நேரம் தூக்கம். நானும், அப்பாவும் அப்பவே prayer முடிச்சிட்டு, உன்னோட ஜெபம் பண்ணத்தான் வெயிட் பண்ணிட்டு இருக்கோம். சீக்கிரம் எழுந்திருமா……என்ற போது……
அச்சோ, prayerக்கு நேரம் ஆச்சா……ஒரு குதிப்புடன் எழுந்தாள். மம்மி, கொஞ்சம் நேரத்தில நான் வந்திருவேன்…….ஓட்டமாய் பாத்ரூமில் நுழைத்தாள்.
ஸ்கூலில் ஏதோ கலவரம் நடந்து கொண்டிருந்ததை மட்டும் அவள் புரிந்து கொண்டாள். ஆனால் அது என்ன…..என்பதுதான் அவளுக்கு தெரியாத புதிர்……
தீடீரென்னு அவளுக்கு பாடம் நடத்திட்டு இருந்த அவளுடைய கணக்கு டீச்சர்…..வேறு ஒரு டீச்சர் பதட்டமாய் ஏதோ சொல்ல வரவும்……
ஸ்டுடென்ட்ஸ், நீங்க லீடர் எழுதி போடுறதை பார்த்து அப்படியே காப்பி பண்ணுங்க. நான் கொஞ்ச நேரத்தில வந்திர்றேன்……வந்திருந்த டீச்சரின் பதட்டம் அவருக்கும் பற்றி கொள்ள, ரகசியமாய் பேசி கொண்டே சென்றனர்.
போகும் அவர்களைதான் எல்லாரும் பார்த்து கொண்டிருந்தனர்.
எல்லாரும் போர்டை பார்த்து எழுதுங்க, வெளியே வேடிக்கை பார்க்க கூடாது……அவளுடைய கிளாஸ் லீடர் அவர்களை அரட்டவும் வெளியே இருந்த விசயத்தை மறந்தவர்களாய் போர்டை பார்த்து எழுத தொடங்கினர்.
நான் எதுக்கு தேவையில்லாத காரியங்களை பத்தி யோசிக்கணும். என்னுடைய இயேசப்பா நேற்றுதான் சொல்லி கொடுத்தாங்க. அப்படி இருந்தும் ஏன் என் மனசை போட்டு குழப்பிக்கணும். இந்த உலகத்தில என் இயேசப்பா எந்த காரியத்தை செய்தாலும், அது நல்லதா இல்லை கெட்டதா என் பார்வைக்கு தெரிந்தாலும், அதை முழுக்க முழுக்க நல்லதுக்காக மட்டுமே செய்திருப்பாங்க……மனதினில் நினைத்தவளாய் போர்டில் தன் கிளாஸ் லீடர் எழுதி கொண்டிருந்ததை அவளும் பார்த்து எழுத ஆரம்பித்தாள்.
கொஞ்சம் நிமிடங்கள் கூட ஆயிருக்காது. யாரோ அலறும் சத்தம் கேட்கவும், கிளாஸ் ரூமில் இருந்த பிள்ளைகள் ஜன்னல் வழியாகவும், கதவு வழியாகவும் ஏதாவது விசயத்தை தெரிந்து கொள்ள முடியுமா….என்றுதான் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தனர்.
ஒரு அம்மா போல வயதை ஒத்தவர் தான் ஏதோ ஒரு திசையை நோக்கி ஓடி கொண்டிருந்தார்.
கண்டிப்பா அவளுடைய கிளாஸ் பிரெண்ட் அம்மா கிடையாது என்பது அவளுக்கு நன்றாக தெரியும். அப்ப யாரு……… மனதினில் நினைத்து கொண்டிருந்த போதுதான், அவளுடைய கிளாஸ் டீச்சரும் வகுப்பினில் நுழைந்தார். எல்லா பிள்ளைகளும் அவருடைய முகத்தை தான் ஆர்வமாக பார்த்தனர்,. ஏதாவது ஒரு உண்மை தெரிந்திடாதா…..என்பது தான் அவர்கள் எதிர்பார்ப்பு…..
ஸ்டுடென்ட்ஸ் இன்னிக்கி மதியம் ஸ்கூல் கிடையாது. அதுனால ஸ்கூல் வேன் போறவங்க மட்டும் ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ண வேண்டியாதிருக்கும்…..மற்றவங்க இப்ப பெல் அடிப்பாங்க…..உடனே கிளம்பலாம்…..என்று அவர்கள் சொல்லி கொண்டிருந்த போது, ஒன்றும் புரியாமல் பிள்ளைகள் தங்களுக்குள் பார்த்து கொண்டனர்.
நம்ம ஸ்கூல்ல 6 ம் வகுப்பு படிச்சிட்டு இருந்த ரேகா என்ற பொண்ணு, இப்பதான் இறந்து போனா…..அவளுடைய இறப்புக்காக நம்ம ஸ்கூல்ல இன்னிக்கி…… டீச்சரின் குரல் உடைந்திருந்தது. அவராலும் கூட அந்த துக்கத்தை தாங்க முடிய வில்லை என்பதை அவருடைய குரலும், முகமும் காட்டி கொடுத்தது.
அதுனால இன்னிக்கி மதியம் ஸ்கூல் லீவ்…..இதுவரைக்கும் ஹோம் வொர்க் கொடுக்காததால இன்னிக்கி எந்த ஹோம் வொர்க்ம் கிடையாது…… என்று சொல்லி கொண்டிருந்தவர்…….. பாவம் அந்த பொண்ணு, நல்ல பொண்ணுதான். ஆனா அவளா தன் வாழ்கையை முடிச்சிக்கிட்டா……என்றவாறு அவர் சொல்லி முடிக்கவும் எல்லார் மனதும் ஏதோ துக்கத்தால் அடைத்ததை போல உணர்ந்தனர். உண்மையில் மதியம் லீவ் என்ற காரியமும், ஹோம் வொர்க் இல்லை என்ற விஷயம் கூட யார் மனதையும் ஈர்க்க முடியாத வண்ணம் துக்கம் தொண்டையை அடைத்தது எல்லாருக்கும்.
ஆனால் எல்லார் மனதிலும் இருந்த கேள்வி……அந்த அக்கா எப்படி இறந்து போனாங்க……. ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக் கொண்டனர்……..
வேன்க்காக அவள் காத்து கொண்டிருந்த நேரத்திலும் அவள் மனதில எழுந்த கேள்வி…..என்ன இயேசப்பா……நான் எப்ப பார்த்தாலும் ஏதாவது துக்கமான, இல்லை இறப்பு விசயத்தைதான் கேட்டுட்டு இருக்கேன்…… கஷ்டமா இருக்கு. இந்த உலகத்தில இருக்கிற எல்லாரையும் நீங்க உங்க அன்பினால் நேசிக்கிறீங்க…..ஆனா உங்க அன்பை விட, சாத்தான் தன் மரண கயிறால் தான் உங்க பிள்ளைகளை இழுத்துட்டு இருக்கானோன்னு தோணுது பிரெண்ட்……. கண்களில் மட்டும் கண்ணீர் வந்து சேர்ந்தது அவளுக்கு. பார்த்து கூட அறியாத அந்த பெண்ணுக்காக இவள் அழுது கொண்டிருந்தாள்.
வேகமாக வீடு திரும்பிய தன் பெண்ணை ஆச்சரியமாக பார்த்தார். என்ன என்று கேட்ட போது, ஸ்கூலில் நடந்தவற்றை சொன்னாள். அவளை மாதிரி அவளுடைய அம்மாவும் ஆச்சரியப்பட்டனர்.
மற்ற எந்த வார்த்தையையும் அவள் அம்மா கேட்டு கொள்ள வில்லை. சரி குட்டிமா, ஏதாவது சாப்பிடுறியா…..என்ற போது தலையை அசைத்து இல்லைமா என்றவள்……அம்மா, எங்களுக்கு ஹோம் வொர்க் இன்னிக்கி கொடுக்கலை. அதுனால கொஞ்சம் நேரம் நான் ரெஸ்ட் எடுத்துக்கலாமா……. என்ற அவள் கேட்ட போது, அவளுடைய அம்மாவும் சரி என்று சொல்லி விட்டார்.
தன் ரூமில் நுழைந்தவள் முதலில் தன் இயேசப்பாவின் சமுகத்திற்கு முன்னால் முழங்காலில் நின்றாள். இயேசப்பா……உங்களுக்கும் தெரியும். எப்ப பார்த்தாலும் இறப்பு விசயத்தையே கேட்டுட்டு இருக்கிற மாதிரி இருக்கு. முதலில் என்னுடைய இறப்பு, அடுத்து குளோரி அக்கா, என் பிரெண்டுடைய அப்பா இருந்த காரியம், நேற்று நீங்க சொன்ன சின்ன குழந்தைகள்…..இப்ப பார்த்தா என்னுடைய ஸ்கூல்ல படிக்கிற என்னை விட ஒரு வயதுதான் மூத்தவங்க…….அந்த அக்காவுமா??????
வேறு எதுவும் அவளுக்கு தன் தேவனிடத்தில் கேட்க தெரியவில்லை. அமைதியானாள். நேரங்கள் கடந்து கொண்டே இருந்தது. ஆனால் இயேசப்பாவிடம் இருந்து தான் பதில் வந்த பாடில்லை. இடையில் ஒரு முறை கூட அம்மா, சாப்பிடிறியா……என்று கேட்டு விட்டு வேறு சென்று விட்டார். அம்மா…..இன்னும் கொஞ்சம் நேரம் கழித்து…….என்று சொன்னதோடு சரி…..எழும்பவே இல்லை. அவளுடைய அம்மாவும் அதற்கு மேல் தொல்லை கொடுக்க வில்லை. தன் பெண் இயேசப்பா சமூகத்தில் தான் இருக்கிறாள் என்பது அவருக்கு தெரிந்திருந்ததால் அவளை தொல்லை படுத்த விரும்ப வில்லை.
முழங்கால்கள் வலிப்பதை அவளும் உணர்ந்தாள். ஆனால் அந்த வைராக்கியம்……..என் இயேசப்பாகிட்ட இருந்து அதற்க்கான பதிலை வாங்கிரணும்…..என்பதாய்தான் இருந்தது.
இன்னும் நிமிசங்கள் நேரங்களாக கடந்து போனது. ஆனால் தன் தேவன் இவ்வாறு பதில் தராமல் இருப்பது அவளுக்கே ஆச்சரியமாக தோணியது. என் இயேசப்பா….உங்களை நான் எந்த வகையிலாவது கஷ்டப்படுத்திட்டேனா……புலம்ப ஆரம்பித்து விட்டாள். ஆனால் அவளுடைய அந்த புலம்பலுக்கும் பதில் தர வில்லை அவள் இயேசப்பா.
முடியாது என்ற நிலை வந்த போது, முழங்காலில் நிற்க முடியாமல் அமர்ந்து விட்டாள்.
அந்த நேரம் ஏஞ்சல் அவள் முன் தோன்ற, சிறிது சந்தோசத்தை கொடுத்தாலும், ஏன் இது வரைக்கும் யாரும் வரலை…..என்ற எண்ணம்தான் அதிகமா இருந்தது.
என்ன குட்டிமா…..போராட்டம் முடிஞ்சிருச்சா……என்று சிரித்த போது அவளுக்கு தான் என்ன சொல்லுவது என்று தெரிய வில்லை.
நான் எவ்வளவு நேரம் உங்க மூலமாயோ இல்லை என் இயேசப்பாவே நேர்ல வந்து எனக்கு பதில் தருவீங்கன்னு நினைச்சிருந்தா, போராட்டம் முடிஞ்சிருச்சான்னு ஈஸியா கேட்டுடீங்க ஏஞ்சல்…..அப்ப என்னுடைய இயேசப்பா நான் அத்தனை தூரம் கதறின பிறகும் கூட பதில் தாரமா இருந்தது கூட ஒரு சின்ன டெஸ்ட் போல…….. என்று அவள் கொஞ்சம் கோபத்துடன் கேட்டாள்.
குட்டிமா, உனக்கு நல்லா தெரியுமே, உங்களால் சுமக்க முடியாத அளவு சுமையை, அதாவது வேதனையை அவர் கொடுத்ததே இல்லை…..அப்படி இருக்கும் போது, நீ உன் இயேசப்பாகிட்ட இப்பவே வந்து எனக்கு பதில் சொல்லுங்கன்னு சொல்லினா என்ன செய்ய முடியும்……ஏஞ்சலின் குரலில் வேதனை இருந்தது.
நான் என் இயேசப்பாகிட்ட என் ஸ்கூல்ல நடந்த ஒரு துக்க நிகழ்ச்சியை பத்தி தெரிஞ்சுக்க தான் கேட்டேன். ஆனா………அவள் அடுத்து சொல்ல வருவதற்குள்
நீ கேட்கிற கேள்வியில்தான் உண்மையில் நீ ஆவலா தேடிட்டு இருக்கிற பதிலும் இருக்குது…..என்று சொல்லி ஏஞ்சல் சிரித்த போது உண்மையில் அவளுக்கு புரிய வில்லை.
நான் எப்ப பார்த்தாலும் இறப்பு விசயத்தை கேட்டுட்டு இருக்கேன். அது ஏன்னு இயேசப்பாகிட்ட கேட்டேன்……..என்று அவள் தன் கேள்வியை சந்தேகத்தோடு சொல்லி பார்த்தாள். இதுல என் பதில் இருக்கு……அவள் தன்னையே குழப்பி கொண்டாள்.
இறப்பு என்பது உனக்கு தெரிந்த விசயம்தான. இந்த உலகத்தில நம்ம இயேசப்பா தன் ஆவி, ஆத்துமா, அவரவர்களுக்கு தேவையான சரீரம்…..எல்லாம் கொடுத்து உங்களை இந்த பூமியில வாழ வைக்கிறாங்க. அதுனால என்னைக்கி அவர் தன் சுவாசத்தை வாங்கி கொள்ளுறாரோ, அவைகள் மாண்டு பூமிக்கு திரும்பும்……..
அவள் தன் மனதில் என் இயேசப்பா இதை எல்லாம் சங்கீதம் புத்தகத்தில் எழுதி இருக்காங்களே……நினைத்து கொண்டிருந்த போது
அப்ப ஒரு மனுஷன் ஒரு குழந்தையா இந்த பூமியில வருகிற போது, ஏற்படுகிற சந்தோசத்தை காட்டிலும், அவன் பூமியில் இருந்து எடுக்க படுகிற நாட்கள் சந்தோசம்தானே. ஏன்னா என்றென்றைக்கும் நம்ம இயேசப்பாவோடு வாழ போற நாட்கள் ஆச்சே…….ன்னு அவர் சொல்லி விட்டு பேச்சை நிறுத்திய போது…….அவள் முகம் சந்தோசப்பட ஆரம்பித்தது.
ஏஞ்சல்…..அப்ப அந்த அக்கா……பரலோகத்தில இருக்காங்களோ….என்ற படி அவள் சந்தோஷமாய் அவள் சொல்லி கொண்டிருந்த போது,
இல்லை குட்டிமா. நான் எந்த ஒரு இறப்பிலும் உன்னுடைய மனது கஷ்டப்பட கூடாது என்பதற்காக தான் அந்த சத்தியத்தை பற்றி சொன்னேன். ஏற்கனவே இது உனக்கு தெரிந்த விஷயம் தான். இது முழுக்க முழுக்க தேவனின் தீர்மானம்……..அவர் சொல்லி கொண்டிருந்த போது…..
ஆனா ஏஞ்சல், இன்னிக்கி காலையில இறந்து போன அந்த ரேகா என்பவங்க……எப்படி இறந்து போனாங்க…..என்பது தெரியாட்டியும் அது கண்டிப்பா குளோரி அக்கா மாதிரி அவசரப்பட்டு முடிவு பண்ணப்பட்ட காரியம் என்பது தான் எனக்கு தோணுச்சு……
நீ சொன்னது முழுக்க முழுக்க சரி……ஆனா ஏன் னு கேள்வி கேட்டியே அந்த பதிலும் உனக்கு தெரிந்த காரியம்தான்…….அவர் சொல்ல…….
ஏற்கனவே புரியலைன்னு சொல்லிதான இயேசப்பா சமூகத்தில் உட்கார்ந்திருந்தேன்…..தெரிந்திருந்தா இயேசப்பா தேங்க்ஸ்ன்னு சொல்லிட்டு அம்மாகிட்ட சாப்பாடு கேக்க போயிருப்பேனே……என்று அவள் மனதினில் புலம்பி கொண்டாள்.
குட்டிமா, இன்னிக்கி நம்ம இயேசப்பா பதிலை வாங்குறதுக்கு எத்தனை மணி நேரம் முழங்காலில் நின்னுருப்ப…..என்றவரிடம்
ஏன் இதை ஏஞ்சல் கேட்குறாங்க…..சப்போஸ் இன்னும் கொஞ்சம் நேரம் கூடுதலா நான் முழங்காலில் நிற்கணும்ன்னு என் இயேசப்பா நினைச்சிருப்பாங்களோ…..என்று அவள் யோசித்து கொண்டிருக்க
குட்டிமா, நீ என்ன மனதில் நினைக்கறன்னு எனக்கு தெரியும்னு…..உனக்கு ஏற்கனவே தெரியும்……என்று அவர் சொல்லி கொண்டே போக….
சாரி ஏஞ்சல், நீங்க அதை ஏன் கேட்டீங்கன்னு எனக்கு புரியலை…..அதுனாலதான்….அவள் சொல்லி முடிக்கவே நேரம் சென்றது.
குட்டிமா, நீ கேட்ட கேள்விக்கும், நம்ம இயேசப்பா சந்நிதானத்தில் அவருடைய பதிலுக்காக காத்திருத்த நேரத்திற்கும் சம்பந்தம் உண்டு…..
உண்மையில் குழம்பி போனாள். ஏஞ்சல்…..எப்படியும் ரெண்டு மணி நேரத்திற்கு மேல இயேசப்பா பதிலுக்காக காத்திருந்தேன்….அவள் சொல்லி முடித்த போது
உன்னுடைய இயேசப்பா உனக்கு பதில் தரலைன்னு உனக்கு தோணினப்ப என்ன நினைச்ச…….என்று ஆவலாக கேட்டவரிடம்
சப்போஸ் நாம கேட்கிற கேள்விக்கு அப்பா பதில் தருவாங்களோ இல்லை தர மாட்டாங்களோன்னு சின்ன சந்தேகம்…..அதுனால கேட்கலாமா வேண்டாமான்னு இரண்டு எண்ணத்தோடுதான் கேட்டேன் ஏஞ்சல்……. அவள் சொல்லி முடித்த போது
அப்பவும் நம்ம இயேசப்பா உனக்கு பதில் தரலை…..அப்ப உனக்கு என்ன தோணுச்சு……என்று கேட்ட போது
முதல்ல என் முழங்கால் வலிக்க ஆரம்பிச்சிருச்சு. கொஞ்சம் வைராக்கியம் இருந்தது உண்மைதான். ஏன்னா எனக்கு முழங்கால் வலிச்சா என் இயேசப்பாக்கு கஷ்டமா இருக்குமே…..அதுனால கண்டிப்பா இயேசப்பா ஏதாவது பதில் சொல்லுவார்ன்னு நம்பிக்கையில நின்னேன்…….
அடுத்து முழங்கால் ரொம்பவே வலிச்ச நேரம்……..
அது ஏஞ்சல், உடல் பலவீனங்கள் கண்டிப்பா என் தேவன் கிட்ட நான் பேசுறதில தலையிட கூடாதுன்னு தோணுச்சு……. அவள் சொன்ன போது சிரித்தவர்….
கடைசியில ஆனா நீ உட்கார்ந்திட்டியே குட்டிமா…….. அவர் சொல்ல
ஏன் ஏஞ்சல் அப்படி சொல்லுகிறார் என்றாலும்….. அதுக்கு மேல நிற்க முடியாமத்தான் உட்கார்ந்தேன். ஆனா இயேசப்பாகிட்ட பேசாம இருக்கன்னு யோசிச்சி இல்லை உட்கார்ந்து இயேசப்பாகிட்ட இருந்து பதில் வாங்கிக்கலாமே ன்னு நம்பிக்கை……. அவள் சொல்லி கொண்டிருந்த போது, நான் எதுவும் தேவையில்லாத காரியத்துக்கு இத்தனை பிடிவாதம் பிடிச்சிட்டேனோ……அவளுக்கே ஒரு மாதிரி தோன்ற ஆரம்பித்தது.
சப்போஸ் அப்பயும் உன்னுடைய இயேசப்பா பதில் தராம இருந்தா என்ன பண்ணிருப்ப……என்றவருக்கு
ஆனா நீங்கதான் அதுக்குள்ள வந்திடீங்களே ஏஞ்சல்……என்று ஒரு சிரிப்புடன் சொல்லியவளுக்கு
சப்போஸ் நான் வாராம இருந்திருந்தா…………அவர் கேள்வி கேட்கவும்
உண்மையில் நான் ஏதாவது தப்பு பண்ணிட்டேனோ…..அதான் ஏஞ்சல் இப்படி கேள்வி கேட்குறாங்களோ…..மனதினில் நினைத்து கொண்டாள்.
ஆனா நான் என்ன பண்ணிரிப்பேனோ…..அதைத்தான் சொல்லணும்….ஏன்னா என் இயேசப்பாக்கு கூட்டியோ…..குறைத்தோ காரியத்தை சொல்லுவது பிடித்தம் இல்லாத விஷயம்…. அதுனால என்ன திட்டுகள் கிடைச்சாலும் பரவாயில்லை…..மனதினில் நினைத்தவள்….
ஏஞ்சல் நான் கண்டிப்பா இன்னும் கொஞ்சம் நேரம் என் இயேசப்பா சமூகத்தில் வெயிட் பண்ணிருப்பேன்…..அடுத்து அப்படியும் என் இயேசப்பா பதில் சொல்லாட்டி ஒண்ணு இந்த காரியத்தை பத்தி என் இயேசப்பா இப்போதைக்கு பேச பிரியபடலைன்னு நினைச்சிருப்பேன். இல்லைன்னா இது வேண்டாத விஷயம். அதை குறித்து பேசினதால்தான் என் இயேசப்பா என் மேல கோபமா இருக்காங்கன்னு நினைச்சிக்குவேன்…….என்று சொல்லி முடித்தாள்.
சப்போஸ் உன் இயேசப்பா உனக்கு பதில் தரலைன்னு நீயே உன் வாழ்கையை முடித்து கொள்ள நினைப்பியா குட்டிம்மா…..என்று அவர் கேட்ட போது
என்ன ஏஞ்சல், இப்படி சொல்லுறீங்க. ஏற்கனவே நரகம், ஆவிகளின் உலகம் எல்லாம் என் இயேசப்பா எனக்கு சொல்லி கொடுத்துட்டாங்க. அது மட்டுமில்ல என் இயேசப்பா என்னை ரொம்பவும் விரும்பறாங்க. அப்படி என் மேல முழுமையா அன்பு வைச்சிருக்கிற என் இயேசப்பா அந்த காரியத்தை பத்தி சொல்லாட்டி அது சப்போஸ் எனக்கு தேவையில்லாத காரியம் என்பதுதான அர்த்தம். அப்படி இருக்கும் போது, என் வாழ்கையில எல்லா காரியத்தையும் என் இயேசப்பா எனக்கு நன்மையா செய்து முடிக்கிறவரா இருக்கும் போது, அவரை என்னைக்கும் பழி வாங்கி அழ வாங்கணும் நினைச்சி அந்த பெரிய தப்பாகிய தற்கொலையை செய்வேனா ஏஞ்சல்…… என்று சொல்லி கொண்டிருக்கும் போதே அவள் குரல் நடுங்கியது.
ஏன் ஏஞ்சல் அப்படி கேட்டீங்க. என்னுடைய இயேசப்பாவை நிரந்தரமா நான் அழ வைக்கணும்ன்னு நினைச்சி அந்த காரியத்தை செய்வேனா…..இந்த விஷயம் என்கிட்டே என் இயேசப்பா சொன்னாலும், சொல்லாட்டியும் அவர் என் மேல அன்பா இருக்கிறார்னு எனக்கு தெரியுமே…..நான் எப்படி அந்த மாதிரி ஒரு பைத்தியகாரமான வேலையை செய்வேன்…..அதுவும் உயிரோடு விளையாடி எப்பவும் நரகம்……அது ரொம்ப மோசம் ஏஞ்சல்…..உண்மையில் அழுது விட்டாள்.
நான் எதுவும் இந்த கேள்வியை கேட்டு என் இயேசப்பாவை கஷ்டப்படுத்திட்டேனா…….அழ தொடங்கி விட்டாள்.
அவளை சமாதானப்படுத்தியவர் குட்டிமா, நீ கேட்ட கேள்வியிலே பதில் இருந்தது என்பது நிஜம். ஏன்னா, இறப்பு இந்த உலகத்தில எல்லா மனிதர்களும் நடக்கிற ஒரு காரியம். அது முன்ன, இல்லை பின்ன என்பது நம்ம தேவனின் தீர்மானம். ஆனா கண்டிப்பா நடக்கிற காரியம். உன்னை சுத்தி ஏதோ ரெண்டு, மூணு பேரு இறந்து போயிட்டாங்க என்பதற்காக எல்லாருமே செத்து போறாங்களேன்னு நீ நினைச்சது தப்பா…..சரியா……நீயே சொல்லு. அடுத்து மரணம் சாதாரணமா இருந்தாலும், பயங்கரமா இருந்தாலும் கண்டிப்பா நடந்தே தீரும். யாரலாயும் அதை தடுத்து நிறுத்த முடியாது. அப்படி இருக்கும் போது, இறந்து போனவங்களுக்காக அழுதிட்டு இருந்த நீ, இனிமே இதே மாதிரி துர்மரணம் ஏற்படாம இருக்க உன் இயேசப்பாகிட்ட கெஞ்சி கேட்கிறதை விட்டுட்டு ஏன் செத்தாங்க…..எதுக்கு செத்தாங்க….ன்னு புலம்புறது சரியா…..தப்பா….. கேட்டு விட்டு அமைதியானார்.
உண்மையில் தன் கேள்வியில் இத்தனை அர்த்தம் இருந்ததை அவளும் கண்டு கொண்டாள்.
ஆனா நீ கேட்குறதுக்கு முன்னாடியே இந்த காரியத்தை குறித்து உன்கிட்ட பேசணும்னு நம்ம இயேசப்பா ஏற்கனவே நினைச்சிருந்தாங்க…..என்று ஏஞ்சல் சொல்லிய போது அவளுக்கே தன்னை பத்தி வெட்கமாய் இருந்தது. ஒன்றும் அதற்கு மேல் பேச முடிய வில்லை. ஏற்கனவே என் பிரெண்ட் அப்பா காரியத்திலும் இதே தப்பைதான் செஞ்சேன். இப்பவும் எனக்குதான் எல்லாம் தெரியும்னு நினைச்சிட்டு, தேவையில்லாம இயேசப்பாகிட்ட கேள்வியை கேட்டு, அவர் மனசை கஷ்டப்படுத்திட்டேன்……வேற ஒண்ணும் எனக்கு சொல்ல தெரிய வில்லை. இயேசப்பா, ப்ளீஸ்…….சாரி…..என்கிட்டே இருக்கிற இந்த மெத்த மேதாவி குணத்தை மாத்துங்க பிரெண்ட்……. மனதினில் தன் இயேசப்பாவிடம் மன்னிப்பு கேட்டது கொஞ்சம் மூச்சு விட லேசானதை போல உணர்ந்தாள்.
அவளை பார்த்து சிரித்தவர், உன் ஏன் என்ற கேள்விக்கான பதில், உன் முழங்கால் யுத்தம்தான்…….உண்மையில் புரியாமல் ஏஞ்சலை பார்த்தாள்.
உன் இயேசப்பாகிட்ட கேள்விக்கு பதில் வாராட்டியும் அது எனக்கு தேவையில்லாத விசயம் என்பதால்தான் சொல்லாம இருந்திருப்பாங்களே தவிர நான் கண்டிப்பா தற்கொலைன்னு ஒரு தப்பை செய்து என்னை நேசிக்கிற என் இயேசப்பாவை நிரந்தரமா கஷ்டப்படுத்த மாட்டேன். அதுக்கு அந்த கேள்வியின் பதில் தெரியாட்டியும் பரவாயில்லை……ன்னு சொன்னியே குட்டிமா அதுதான் பதில்.
ஒன்றும் புரிந்து கொள்ள முடியாமல் ஏஞ்சலை பார்த்தாள்.
உனக்கு தெரிந்த அந்த உண்மை(சத்தியம்) உன் ஸ்கூல்ல படிச்ச அந்த ரேகா பொண்ணுக்கு தெரியாம இருந்ததாலதான் இந்த பெரிய விபரீதம் நடந்துஞ்சு…..என்று அவர் சொல்லி கொண்டிருக்கும் போதே அவர் குரல் கூட உடைந்தது. அவளுக்கும் தெரியும், மரணத்திற்கு பின் உள்ள வாழ்கையில் ரேகா படும் பாடுகளை நினைத்து தான் அவர் வருந்துகிறார் என்று…..முழு பரலோகமே…… என் இயேசப்பா விடுகிற கண்ணீரை நினைத்து……அவளுக்கும் கூட அழுகை வந்தது.
நான் செய்த தப்பு கேள்வி….அப்ப அந்த ரேகா அக்கா செய்த தப்பு…… என்று அவள் நினைத்து கொண்டிருந்த போதே……
அவளுடைய பிரெண்ட் பிறந்த நாளுக்கு அவள் கேட்டு அடம் பிடிச்ச டிரஸ் தான் காரணம் குட்டிமா. அவங்க அம்மா கொஞ்சம் கஷ்டப்படுறவங்க. அதுனால வீணா செலவழிக்க கூடாதுன்னு சொல்லி, அதை தர மாட்டேன்னு சொன்னதால, நீ பண்ணின முழங்கால் யுத்தம் பண்ணின மாதிரியே அவளும் அவளுக்கு தெரிந்த எல்லா காரியங்களும் செய்தா. ஆனா அவங்க அதுக்கு இடம் கொடுக்கலை. கடைசியில அவ எடுத்த ஆயுதம்தான் தற்கொலை. உண்மையில் அவங்க அம்மா இதை எதிர்பார்க்கலை. ஆனா தனக்கு டிரஸ் எடுத்து கொடுக்கலைன்னு அவ தன்னையே அழித்து கொண்டது ரொம்பவே பெரிய வேதனை குட்டிமா. உண்மையில் அவங்க அம்மாவை பழி வாங்க அதை எடுக்கலை. அவளுக்கும் தெரியும் அவளுடைய அம்மா அவளை முழுமையா விரும்புறாங்க…..வெறும் ப்ளாக் மெயில்லா செய்த காரியம்……தன் பிடிவாதத்தை நிலை நிறுத்தி கொள்ளதான் அதை பண்ணினா…… ஆனா இப்ப அவ உயிரோட இல்லை. அவளை மட்டுமே தன் வாழ்க்கையா நினைச்சு வாழ்ந்திட்டிருந்த அவளுடைய அம்மா நிலை ரொம்பவே பரிதாபம்…..பிள்ளைகளை சின்ன வயசில இருந்தே பிடிவாத விசயத்தில கண்டிக்க தவறியதற்காக அவங்களுக்கு கிடைத்த பெரிய தண்டனை….. ஏஞ்சல் எல்லா காரியத்தையும் சொல்லி முடித்த போதே இவளுக்கும் கண்கள் கலங்கி விட்டது.
எங்களுடைய சின்ன பிடிவாதம் கூட எத்தனை பெரிய துன்பத்தை எத்தனை பேருக்கு கொடுத்திருது……..கண்களில் இருந்து கண்ணீர் வந்து விட்டது.
தேவன் உனக்கு வெளிபடுத்தின சத்தியத்தை மறந்து போகாத குட்டிம்மா……. அதை உன் இருதயத்தில் எழுதிக் கொள்……..ஓகே குட்டிமா, bye…..என்றவாறு மறைந்து போனார்.
[பெற்றோர்களே!!! சின்ன பிள்ளைதான…..இந்த வயசில இல்லாட்டி எப்ப பிடிவாதம் பிடிக்க போறான்னு…..உங்க பிள்ளைகளின் பிடிவாதத்திற்கு நீங்களே உரம் போட்டு வளர்க்காதீர்கள். செடியை கிள்ளி எறிவது எளிது…..மரம் ஆன பிறகு ஏறிய ஆசைப்பட்டு வாழ்கையை தொலைத்து விடாதீர்கள். நமது தேவனாகிய கர்த்தர்தாமே உங்களோடு கூட இருந்து குழந்தைகளை எல்லா வகையிலும் அவர் சித்தத்தின் படி வளர்க்க துணை புரிவாராக, ஆமென்].
Bible Incidents (for kids) – 27 Bible Incidents (for kids) – 28
பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 28
Daily Bible Verse
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
« Feb | ||||||
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
Newsletter
Categories
Archives