• பைபிள் சம்பவங்கள்(குழந்தைகளுக்காக) – 10

    இன்னிக்கின்னு பார்த்து ஏன்தான் இந்த ஸ்கூல் வேன் வர இவ்வளவு நேரம் ஆகுது? முணுமுணுத்து கொண்டே வேன் வரும் வழியை எதிர்பார்த்தாள்.

    பக்கத்தில் அவளுடைய அம்மா, தன்னுடைய மகளின் பதட்டத்தை பார்த்த வண்ணம் இருந்தாள்.

    அம்மா, வேன் டிரைவர்க்கு போன் பண்ணீங்களா?

    போன் பண்ணினேன் குட்டிமா. ஆனா அவர் எடுக்கலை. நான் உன்கிட்ட முதல்ல இருந்தே சொல்லிட்டு இருக்கேன். நாம ஆட்டோல போலாம்னு சொன்னேன். நீதான் இல்லைமா, என் ஸ்கூல் வேன் வந்திரும்னு அரை மணி நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்க. இப்பனாச்சும் கிளம்பலாமா?

    அம்மா, ஸ்கூல் வேன்ல போனா, என் பிரெண்ட்ஸ் கூட நிறைய பேசலாம். அது மட்டுமில்ல என்ன அவங்க படிச்சிருக்காங்கன்னு தெரிந்தும் கொள்ளலாம்.

    ஆனா அவங்க என்ன படிச்சிருக்காங்கன்னு தெரிந்து கொள்றதால உனக்கு என்ன ஆகப் போகுது குட்டிமா. நாம மட்டும்தான் இத்தனையும் படிச்சிருக்கோம்ன்னு பெருமைபடவா?

    நீங்க நிறைய முறை என்னை திட்டி இருக்கீங்க. ஆனாலும் இந்த தேவையில்லாத ஆர்வ கோளாறு என்னை விட்டு போக மாட்டேங்குதுமா.

    குட்டிமா, எப்பவும் நீ ஞாபகத்தில வைச்சுக்க வேண்டியது. நீ நம்ம இயேசப்பாவுடைய குழந்தை. தேவ பிள்ளைகள் மற்றவங்களுடைய குறைகளை பார்த்து திருப்தி அடையுற இந்த பொல்லாத செய்கை நம்ம தேவனுடைய கண்களுக்கு முன்பா ரொம்பவே அருவருப்பா இருக்கும்.

    அம்மாவிடம் பதில் சொல்ல முடியாமல் தலைகளை தாழ்த்தினாள். இப்ப சொல்லு குட்டிமா, என்ன செய்யலாம். ஸ்கூல் வேன்ல போறியா? இல்லை நாம ஆட்டோல போலாமா?

    நாம ஆட்டோல போலாம். குரல் ரொம்ப நிதானமாக வந்தது அவளிடம்.

    இந்த அம்மா இப்படித்தான். நான் என்ன தப்பு செய்தாலும் உடனே, உடனே திட்டுறாங்க. உடனே நீ இயேசப்பா பிள்ளை, இப்படி செய்ய கூடாது, அந்த காரியம் செய்ய கூடாது. உன்னுடைய நல்ல செயல்களை பார்த்து உன்னை சுற்றியுள்ளவங்க, நம்ம தேவனை மகிமைப்படுத்துற மாதிரி நடந்து கொள்ளணும்ன்னு எப்ப பார்த்தாலும் 1008  அட்வைஸ். மனதினில் கருமி கொண்டே வந்தாள்.

    ஆட்டோ சீக்கிரம் கிடைக்கவும் எக்ஸாம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே ஸ்கூல் வந்தும் சேர்ந்து விட்டாள். அம்மா, சந்தோசமாக கையசைக்கவும் பதிலுக்கு கையசைத்தாள். ஆனால் முகத்தில சிறிது கூட சந்தோசம் இல்லை.

    அம்மாக்கும் புரிந்தது அவளுடைய கோபம். பரவாயில்லைன்னு உதடுகள் சொன்னாலும் மனதிற்குள் எப்படியோ பிசைந்த மாதிரி இருந்தது. கண்களில் வெளியே வந்த கண்ணீரை அடக்கி கொண்டு ஆட்டோவில் ஏறினார்.

    இயேசப்பா, நீங்கதான் நிரந்தரம்ன்னு 1000 முறை சொல்லி கொண்டார், ஆட்டோவில் வரும் போதே அவளுடைய அம்மா. வீட்டுக்கு போனவுடன் தேவனின் சந்நிதானத்தைத்தான் தேடினார். சமாதானம் மனதை நிறைக்கவும் தன்னுடைய அன்றாட வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தார்.

    அன்னைக்கின்னு பார்த்து அவளுடைய அப்பா சீக்கிரமாகவே வீட்டுக்கு வந்து விட்டார். மகளின் முகத்தை ஆர்வமா தேடி கொண்டு வந்தவருக்கு, மனைவியின் பதட்டமான முகத்தைதான் பார்க்க முடிந்தது.

    என்ன ஆச்சுமா, ஏன் இந்த பதட்டம்.

    இப்பதான் நம்ம பொண்ணுடைய டீச்சர் பேசினாங்க. நீங்களே வந்து உங்க பொண்ணை கூட்டிட்டு போயிருங்கன்னு சொன்னாங்க.

    இதுல பதட்டபட வேண்டியது என்ன இருக்கு. சப்போஸ் ஸ்கூல் வேன் பிரேக் டவுன் ஆயிருக்கலாம். அதுனால நம்மளை வந்து கூப்பிட வரச் சொல்லி இருக்கலாம்.

    நீங்க சொல்லுறது உண்மை. காலையில கூட ஸ்கூல் வேன் வரலை.

    அப்ப என்ன குழப்பம்.

    நம்ம பொண்ணு ஸ்கூல்ல இந்த ஒரு ஸ்கூல் வேன் மட்டும் இல்லை, நிறைய வேன்கள் இருக்கு. அதுனால சாயந்திரம் வரை பிரேக் டவுன் ஆன வேன்க்காக வெயிட் பண்ணிட்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

    சரி, எதை போட்டும் மனதை குழப்பிக்காத. நான் அவளை கூப்பிட்டு வர்றேன்.

    டூ வீலரில் தன்னுடைய கணவர் செல்வதை கவனித்து கொண்டிருந்தார்.

    வாய் திறந்து தனது தேவனிடம் கதறி விட்டார். அப்பா ப்ளீஸ், என்னுடைய பொண்ணுக்கு எந்த ஆபத்தும் இல்லாம காப்பாத்துங்க.

    கையில் ஸ்தோத்திர பலிகளுடன் தேவ சந்நிதானத்தில் அமர்ந்தார். ஏதோ பிரச்சனை என்று மட்டும் மனதினில் சத்தம் கேட்டது. ஆனா என்ன என்றும் அவரால் புரிந்து கொள்ள முடியலை. இது சாத்தானின் தந்திரம் இல்லைன்னு மட்டும் அவருக்கு தெளிவாகவே தெரிந்தது.

    தன்னுடைய தேவன் இதை ஏதோ ஒரு நன்மைக்காகவே வைத்திருப்பார் என்ற நம்பிக்கை வந்தவுடன் தேவனுக்கு ஸ்தோத்திரங்கள் செலுத்தி விட்டு, தனது பெண்ணின் வருகையை எதிர்பார்க்க ஆரம்பித்தார்.

    முகத்தில் முழு பயத்துடன், கவலையுடனும், கண்ணீரோடும் தன்னை பார்த்து வந்து நின்ற தனது பெண்ணை மார்போடு அணைத்து கொண்டவர், என்ன ஆச்சு குட்டிமா. என் அழுகுற…..ஸ்கூல்ல எதுவும் பிரச்சனையா…டீச்சர் எதுவும் அடிச்சிட்டாங்களா….இல்லை உடம்புக்கு ஏதும் பிரச்னையா…….

    ஒன்றும் சொல்லாமல் அழுது கொண்டே இருந்தாள். என்ன ஆச்சுங்க, ஏன் எப்படி இவ அழுதிட்டே இருக்கா. புலம்பலுடன் அவர் தன்னுடைய கணவரை ஏறெடுக்கவும்,

    இன்னைக்கி நம்ம பொண்ணு எப்பவும் வருகிற ஸ்கூல் வேன்ல ஆக்சிடெண்ட். இரண்டு குழந்தைகள் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணியிருக்காங்க. கொஞ்சம் கிரிடிகல் நிலமைன்னுதான் டாக்டர்ஸ் சொல்லுறாங்களாம்.

    உண்மையா குட்டிமா. உன்னுடைய பிரெண்ட்ஸ்க்குத்தான் அடிபட்டிருச்சா. அதுக்காக ஏன் கவலைபடுற. நாம நம்ம இயேசப்பாகிட்ட கேட்போம். உன் பிரெண்ட்ஸ்க்கு எந்த பிரச்சனையும் இல்லாம நம்ம இயேசப்பா காப்பாத்திருவாங்க.

    இன்னும் அவள் அழுகையை நிப்பாட்டவில்லை.

    என்னங்க, காலையில நான் போன் பண்ணும் போது, அதுனாலத்தான் எடுக்காம இருந்திருக்காங்க போல.

    இல்லைமா. இன்னைக்கி உண்மையில் நடந்தது என்னன்னா……..நம்ம பொண்ணு எப்பவும் போற ஸ்கூல் வேன் லேட் ஆனதுக்கு காரணம், ஏற்கனவே வண்டி பிரேக் டவுன் ஆயிருந்ததாம். பேரண்ட்ஸ் திட்டுவாங்கன்னு நினைச்சி, அந்த டிரைவர் யார் காலையும் அட்டென்ட் பண்ணவே இல்லை. அடுத்து வந்து எல்லா பிள்ளைகளையும் ஏத்திட்டு போயிருக்காங்க. நம்ம ஸ்டாப் வந்தப்ப நீங்க அப்பதான் கிளம்பி போனதா, பக்கத்துக்கு வீட்டுல, சொன்னவுடன், மற்ற பிள்ளைகளையும் அழைச்சிட்டு ஸ்கூல் போன வழியிலதான், ஒரு லாரியை ஓவர்டேக் பண்ணின நேரம்  ஆக்சிடெண்ட். வண்டி பக்கத்தில இருந்த பிளை ஓவர் சுவற்றில மோதி அந்த சைடா இருந்த 2 பிள்ளைகளுக்கும் நல்ல அடி. வண்டி டிரைவர்க்கு சரியான அடி. அந்த பையன் தன்னை விட அந்த பிள்ளைகளை பற்றிதான் வேதனைப்பட்டுட்டு இருக்கானாம். தன்னால்தான் எல்லா பிள்ளைகளுக்கும் பிரச்சனை வந்துச்சுன்னு புலம்ப வேற செய்யுறானாம்.

    அவளுடைய அம்மாக்கு முழுமையும் புரிந்தது. தான் பொண்ணு ஏன் அழுகிறாள்ன்னு என்பது கூட புரிந்தது. ஆனா எந்த ஒரு வார்த்தை கூட இந்த நேரத்தில விட்டா, அவளை காயப்படுத்திருமோன்னு நினைத்து அமைதி காத்தார். அவள் அழுகை முடித்து விட்டு பேசட்டும் என்று காத்திருந்தார்.

    அழுகையை முடித்து விட்டு கண்ணீரை துடைத்தவள், மீண்டும் அம்மாவின் மடியில் வந்து அமர்ந்து, சாரிமா. நான் உங்களை ரொம்பவே கஷ்டப்படுத்திட்டேன். என்னை தயவு செய்து மன்னிச்சிருங்க.

    அப்பா ஒன்றும் புரியாதவராய் இரண்டு பேரையும் பார்த்தார். சைகையால் என்ன ஆச்சுன்னு என்ற கேட்டவர்க்கு பிறகு சொல்கிறேன் என்ற ரீதியில் அம்மா கண்களால் பதில் சொன்னார்.

    அதுனால ஒண்ணும் இல்லை குட்டிமா. என்னுடைய இயேசப்பா என்னுடைய செல்லத்தை எவ்வளவு அழகாக காப்பாத்தி கொடுத்திருக்காங்க. இந்த நேரத்தில நாம நம்ம தேவனுக்கு நன்றிகள் சொல்லணும். இப்ப எதுக்கு சாரி?

    இல்லைமா. நீங்க என்னை முதல்ல கோபப்பட்டதுக்கு அந்த நேரம் ரொம்பவே வேதனையா இருந்ததால, உங்க முகம் பார்த்து கூட நான் பை சொல்லலை. நீங்க முகம் சோர்ந்து போனது கூட எனக்கு தெரியும். ஆனா அப்ப கூட, என்னை எத்தனை நேரம் இதை செய்யாதே, அதை செய்யாதேன்னு முகம் சோர்ந்து போக செய்திருக்காங்க எங்க அம்மா. இந்த தடவை நல்லா கஷ்டப்படட்டும்ன்னு மனதில ஒரு திருப்தி. உங்ககிட்ட எதையும் மறைக்க விரும்பலைமா. ஆனா நான் அப்படி நினைச்சி பத்து நிமிசம் கூட ஆயிருக்காது. ஸ்கூல் வேன் ஆக்சிடெண்ட் ஆயிருந்திருக்கு. ரெண்டு பிள்ளைகளுக்கும், டிரைவர்க்கும் நல்ல அடின்னு எல்லா டீச்சரும் பரபரப்பா பேசிக்கிட்டாங்க. முதலில் நடந்திட்டிருந்த எக்ஸாமைதான் நிறுத்தினாங்க.

    எந்த பேரண்ட்ஸ்க்கும் தகவல் சொல்லலை. ஏன்னா பெரிய பிரச்சனையாயிரும்னு நினைச்சி முதல்ல அடிபட்ட பிள்ளைகளின் அம்மாமார்களை மட்டுந்தான் கூப்பிட்டாங்க. நான் என் கண் முன்னாடியே பார்த்தேன்மா. அவங்க கதறி அழுதுட்டு ஹாஸ்பிடல் நோக்கி ஓடினதை. எனக்கு இப்படி ஆயிருந்தா நீங்க கூட இந்த மாதிரிதான் வேதனைப்பட்டிருப்பீங்கன்னு அப்ப தோணுச்சு. இன்னொரு விஷயம் உங்களுக்கு தெரியுமா அம்மா?

    அவர் என்ன என்று கேட்பதற்கு முன்னாடி அவளே தொடர்ந்தார். இன்னைக்கி அடிப்பட்டது, என்னுடைய திக்கெஸ்ட் பிரெண்ட்ஸ்மா. அவங்க உட்கார்ந்திருந்தது, நான் எப்பவும் உட்கார்ற சீட். என்னுடைய பிரெண்ட்ஸ் நான் இல்லைன்னாலும் என்னுடைய சீட்ல உட்காராம இருந்தாலதான் அடி உயிருக்கு ஆபத்து இல்லாம முடிஞ்சுச்சு. சப்போஸ் நான் மட்டும் அந்த வேன்ல போயிருந்தேன்னா, கண்டிப்பா இப்ப உயிரோட இருந்திருக்க மாட்டேன்மா. சாரிமா, இன்னைக்கி நான் உங்க மனதை கஷ்டப்படுத்தினாலும் கூட…….ஒரு முறை கூட நீங்க நான் அப்பவே சொன்னேனேன்னு ஒரு வாரத்தை சொல்லியிருந்தா நான் உண்மையில் உடைந்து போயிருப்பேன்மா. ஆனா நான் இப்ப சொல்லுறேன்மா. உண்மையில் நான் என்னுடைய இயேசப்பா எனக்காக கொடுத்த அம்மாக்காக கோடி நன்றிகளை செலுத்துகிறேன் அவருக்கு.

    இது வரை அமைதியா இருந்த அவளுடைய அப்பா, குட்டிமா, உனக்கு இன்னைக்கி நம்ம தேவன் ஒரு அழகான படிப்பினையை கொடுத்திருக்காங்க. அந்த காரியத்தையும் என்றைக்கும் மறந்து போக கூடாது.

    கண்டிப்பா அப்பா. அம்மாவுடைய நினைவுகள் ஸ்கூல்ல வந்ததும், முதலில் என்னுடைய இயேசப்பா எனக்கு சொன்னது உன் தாயின் போதகத்தை தள்ளாதே……என்கிற வசனம்தான் ஞாபகத்திற்கு வந்துச்சு. அம்மா, இப்ப நான் உங்ககிட்ட தைரியமாகவே சொல்லுவேன். இனிமே என்னுடைய வாழ்கையில கண்டிப்பா மற்றவங்க குறைகளை நினைத்து திருப்திபடுற அந்த மாதிரி உள்ள மோசமான குணம் இருக்காதுமா. என்னுடைய இயேசப்பா எனக்கு ஒரு அழகான படிப்பினையை தந்திருக்காங்க. அவரே என் கூட இருந்து இனி என் வாழ்கையில் இந்த குணம் என்றுமே வராத வண்ணம் என்னை வழிநடத்துவாங்க. ஆமென் என்று மூவரும் ஒரே நேரத்தில் சொல்லவும், மெல்லிய காற்று மூவரையும் தழுவியது. அம்மாவும், அப்பாவும் அவளுடைய ஸ்கூல் பேக்கை எடுத்து கொண்டு ரூமில் நுழையவும், அந்த காற்றில் தென்பட்ட தன் தேவனின் அன்பை உணர்ந்தவளாய், தேங்க் யூ பிரெண்ட்…….முழு இருதயத்தோடு தன் நன்றிகளை செலுத்தினாள்.

    Related Post

    Categories: பைபிள் சம்பவங்கள்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    seven − 5 =

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>