-
பைபிள் சம்பவங்கள்(குழந்தைகளுக்காக) – 8
தேவையில்லாத கனவுகள். இது ஏன் இப்படி இருக்கு?ன்னு மனதில கேட்டால் ஒழிய எழ மனதில்லை அவளுக்கு. ரொம்பவே பயங்கரமான இருள். நம்ம இயேசப்பா சில நேரங்களில் சொன்ன அந்தகார இருள் இதுவாத்தான் இருக்குமோநினைத்து கொண்டே அந்த இடத்தை மீண்டும் மீண்டும் பார்த்தாள். ஒன்றும் புலப்படவில்லை. ஆனா பயம் மட்டும் தானாகவே வந்து ஒட்டிக் கொண்டது.
இது என்ன? ஏன் முழுமையா இருட்டா இருக்கு. அதுவும் பார்க்கவே பயங்கரமா. ஏன் இவ்வளவு இருள்? நான் எதுவும் இன்னைக்கி என் இயேசப்பா மனதை கஷ்டப்படுத்திட்னேனோ?
யோசித்தவளுக்கு பதில்தான் கிடைக்கவில்லை. இன்னைக்கி எக்ஸாம், அடுத்து தமிழ், இங்கிலீஷ் அடுத்து கணக்கு பாடம் மட்டும்தான நடத்தினாங்க. யாராவது என் பிரெண்ட்ஸ் மனது கஷ்டப்படுற மாதிரி பேசிட்டேனா? இல்லை டீச்சர் கொடுத்த பாடத்தை படிக்காம விட்டுட்டேனா? இல்லையே இயேசப்பா கிருபையால எல்லாத்தையும் நல்லபடியா முடிக்க அவரே உதவி செய்தாங்க. வேற எனக்கே தெரியாம என் இயேசப்பா மனது கஷ்டபடுற மாதிரி என்னுடைய வார்த்தைகளோ இல்லை செயல்கள் இருந்திருக்குமோ? யோசித்து கொண்டே மீண்டும் பார்த்தவளுக்கு வெறும் காரிருள் மட்டும்தான் தெரிந்தது. வேற எதுவும் கண்ணுக்கு தெரியலையே? சப்போஸ் தாவீது தாத்தா மரண இருள்ன்னு சங்கீதம் புத்தகத்தில சொல்லி இருக்கிறது இது பத்திதான…….
இன்னும் இதுலயே இருந்தேன்னா, கண்டிப்பா கத்த தான் போறேன் போல. இயேசப்பா, இது எதுக்கு? நீங்க என் கூட பேசும் போது, ரொம்பவே பிரகாசமான ஏஞ்சலும் கூட இருப்பாங்களே. ஆனா இன்னைக்கி பாருங்க. யாருமே இல்லை. வெறும் இருட்டு. அதுவும் காரிருள். ஏதோ நரகத்திற்கு பக்கத்தில வந்த மாதிரி தெரியுது.
எந்த பதில் குரலும் இல்லை. அப்ப நான் நரகத்திற்குதான் வந்திட்டேனா? நான் இன்னும் என் தேவன் எனக்கு கொடுத்த பொறுப்புகளை முடிக்காம வந்திட்டேனே? மனதில் புலம்பி கொண்டிருந்தவளை
சற்றும் எதிர்பாராத நேரத்தில் ஒரு வேகமான பெரிய கடல் அலை வந்து அவளை உள்ளே இழுக்க பார்த்தது. எந்த அளவுக்கு அவளுக்கு ஓட தெரியுமோ, ஓடினாள். ம்கூம்…..ரொம்பவே மோசமான அந்த கரிய அலை அவளை பின்தொடர்ந்தது. இயேசப்பா, என்ன இது, ஒண்ணும் புரியலை. என் கூட நீங்க இருக்கீங்களே. நீ தண்ணீர்களை கடக்கும் போது கூட இருப்பேன்னு ஏசாயா புத்தகத்தில சொல்லி இருக்கீங்களே. இந்த அலை நேரா என்னை பாதளத்தில் போடுற வரைக்கும் ஓயாது போலப்பா. இயேசப்பா, ப்ளீஸ் என்னை காப்பாத்துங்க.
இன்னும் இன்னும் பெரிய அலையாகத்தான் அது மாறி கொண்டிருந்ததே தவிர எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அலைக்கு பயந்து வேகமா ஓடும் அந்த நேரத்திலும் கூட………சுனாமி நேரத்தில பெரிய அலையில மாட்டி கொள்ளுகிரவங்க என்னை மாதிரிதான் ஸ்பீடா ஓடுவாங்களோன்னு புலம்பி கொண்டே ஓடினாள். அவளுக்கு ரொம்பவே பக்கத்தில் அந்த கரிய அலை. அவளை விட ஆயிரம் மடங்கு பெரியதாய் இருந்த அந்த அலைக்கு முன்னாடி, தான் நிற்பது தூசு மாதிரி அவளுக்கு தோணியது.
சாரி இயேசப்பா, இதற்கு மேல என்னால ஓட முடியாது. இன்னைக்கி தான் என்னுடைய கடைசி நாள் போல. உங்க இரக்கம் இருந்தா, உங்களை பரலோகத்தில் சந்திக்கிறேன்பா என்று சொல்லியவள் அப்படியே நின்று விட்டாள். அந்த அலை அவளை திமிங்கலம் மாதிரி முழுங்க வாய் திறந்த நிலையில் வந்தது. ஆனால் அவள் சற்றும் எதிர்பாராத ஆச்சர்யம். எந்த வேகத்தில் அவளை விழுங்க வந்ததோ அதே வேகத்தில் தீடீர் என்று திரும்பி சென்றது.
நம்ப முடியாத ஆச்சர்யத்துடன் திரும்பி சென்ற அலையையே பார்த்து கொண்டிருந்தாள். மீண்டும் மீண்டும் பெரிய அலைகள் அவளை நோக்கி வந்ததே தவிர ஒண்ணு கூட அவள் பாதங்களை கூட தொட முடிய வில்லை. எல்லா அலைகளும் கூட அவளை தொட ஆசைப்பட்டு வந்தும், அவள் இருந்த இடத்திற்கு மேல் வர இயலவில்லை. அப்போதுதான் தான் நின்றிருந்த இடத்தை பார்த்தாள். ரொம்பவே அழகான வேலிகள், வார்த்தையால் சொல்ல முடியாத நேர்த்தியானவைகள். கடல் அலைகளை அதற்கு மேல் வர விடாமல் தடுத்து கொண்டிருந்தது.
இப்ப தான் அவளுக்கு முழுமையும் புரிந்தது. நான் இயேசப்பாகிட்ட கடலுக்கு அவர் எப்படி கதவுகளையும், தாழ்ப்பாள்களையும் போட்டு எல்லையை உண்டாக்கினாங்கன்னு பார்க்க ஆசைபடுறேன்னு ஏஞ்சல்கிட்ட சொன்னேன்ல. இயேசப்பா நல்ல பாடம் எனக்கு. ஆனா இனிமே நான் கடல் அலைகளை பார்க்கும் போதெல்லாம் இப்ப நான் அனுபவித்த அழகான காரியம் ஞாபகத்திற்கு வரும். இயேசப்பா, உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்க ஆசைபடுறேன். கேட்கலாமா?
ஒரு மெல்லிய காற்றை அவள் உணர்ந்ததும், ஓகே பிரெண்ட், நீங்க கேள்வி கேட்க அனுமதி கொடுத்ததை இந்த மெல்லிய காற்று மூலமா புரிஞ்சிக்கிட்டேன். அப்பா, நான் முதல்ல பார்த்த ரொம்பவே காரிருள், அதாவது அந்தகார இருள் மாதிரி இருந்த பகுதி, சமுத்திரத்தின் கடையாந்திரம்னு நீங்க சொல்லி இருக்கீங்களே அந்த பகுதியா?
மெல்லிய காற்று மீண்டும் அவளை தொடவும், தேங்க்ஸ் இயேசப்பா. நீங்க எனக்கு உணர்த்தின சத்தியத்திற்காக நன்றிகள். சங்கீத புத்தகத்தில தாவீது தாத்தா நான் விடியற்காலத்துச் செட்டைகளை எடுத்து, சமுத்திரத்தின் கடையாந்திரங்களில் போய்த் தங்கினாலும், அங்கேயும் உமது கை என்னை நடத்தும்ன்னு சொன்ன இடம் இதுதானப்பா. மீண்டும் எட்டி பார்த்தாள். பார்க்கும் போதே பயங்கரமாக இருந்தது.
இயேசப்பா சமுத்திரத்தின் கடையாந்திரத்தையும், அதன் வேலிகளையும் காண்பிச்சிட்டாங்க. அப்ப அடுத்து, பூமியை எப்படி உருவாக்கப்போறாங்க என்பதை பார்க்க போறேனா? மனதிற்குள் மகிழ்ந்து கொண்டிருக்கும் போது ஹாய் குட்டிமா, எப்படி இருந்துச்சு நம்ம இயேசப்பா கடல் அலைகளுக்கு வேலி போட்டது?
ரொம்ப, ரொம்ப, ரொம்பவே………ஆச்சர்யமா இருந்தச்சு ஏஞ்சல். ஆமா நீங்க ஏன் முதல்லயே வரலை.
அந்த சம்பவங்கள் நீ மட்டும் தனியா உணர்வதற்காக தேவன் தீர்மானித்த காரியம். அதுனாலத்தான் என்னை தேவன் உன் கூட வருவதற்கு அனுமதிக்கலை.
ஆனா உயிர் போய் வந்த மாதிரி இருந்துச்சு ஏஞ்சல். இங்க பாருங்க. இன்னும் இளைக்குது. தன்னை அமைதிபடுத்த எவ்வளவோ முயன்றாள். இன்னும் இளைப்பு நிக்கலை. தேங்க்ஸ் lord. நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும், பொல்லாப்புக்கு பயப்படேன். தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர். உண்மையில் ஜீவனுள்ள வார்த்தைகள் ஏஞ்சல். என்ன அழகாக நம்ம தேவன் தாவீது தாத்தாக்கு வெளிப்படுத்தி இருக்காங்க. என்னையும் பாதுகாத்து கொண்டாங்க. கோடான கோடி ஸ்தோத்திரங்கள் உமக்கே உண்டாவதாக என் ஜீவனுள்ள கர்த்தாவே! ஆமென்.
பைபிள் சம்பவங்கள்(குழந்தைகளுக்காக) – 7 பைபிள் சம்பவங்கள்(குழந்தைகளுக்காக) – 9
பைபிள் சம்பவங்கள்(குழந்தைகளுக்காக) – 8
Daily Bible Verse
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
« Feb | ||||||
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
Newsletter
Categories
Archives