• பைபிள் சம்பவங்கள்(குழந்தைகளுக்காக) – 9

    ஏஞ்சல், உண்மையில் நம்ம தேவன் வல்லமையுள்ள தேவன்தான்.

    என்ன தீடீர்னு இப்படி சொல்லுற குட்டிமா, நம்ம தேவன் என்றென்றும் வல்லமையுள்ள தேவன்தான?

    ரொம்பவே சாதாரணமா ஒருத்தராதான் என் இயேசப்பாவை நான் இது வரை என் வாழ்கையில் உனார்ந்திருக்கேன். அதாவது என்னுடைய பிரெண்ட்டா, என்னுடைய வழிகாட்டியா……….ஆனா இன்னைக்கி சமுத்திரத்தின் மும்முரத்தையும், அதின் அலைகளின் இரைச்சலின் சத்தத்தையும் அடக்கி ஆளுற ஒரு வல்லமையுள்ள தேவனா அவரை உணர்ந்து கொண்டதால அந்த சந்தோசம் இன்னும் எனக்குள்ள ஆச்சர்யமா இருக்கு.

    கடல் அலைகளின் சத்தத்தையும், அதனுடைய வேகத்தை பார்த்ததுக்கே இவ்வளவு பயப்படுறியே குட்டிமா. சப்போஸ் நம்ம இயேசப்பா நரகத்தை உருவாக்கினதை நேர்ல பார்த்தா என்ன ஆவ?

    ப்ளீஸ் ஏஞ்சல், விளையாட்டுக்காக கூட அப்படி சொல்லாதீங்க. ஏன்னா எங்க அம்மா மூலமா அதை பத்தி நிறையவே கேட்டிருக்கேன். அதுல இப்பவும் கத்துற மக்களுடைய சத்தமும், அவங்க படுகிற வேதனையும், அவங்களுக்கு மீட்பே கிடையாது என்கிற சத்தியமும் ரொம்பவே வேதனையான விசயம். அதை பத்தி இப்ப ஏன் ஞாபகப்படுத்துறீங்க?

    நம்ம தேவன் இந்த உலகத்தை எவ்வளவு அழகாக, ரொம்பவே நேர்த்தியானதா உருவாக்கியும். அவருடைய பிள்ளைகளாகிய மக்களால் அவரை பற்றி நினைக்க கூட நேரம் இல்லாம போகுதேன்னு யோசிக்கும் போதுதான் கஷ்டமா இருக்குது.

    ஏஞ்சல், இந்த மாதிரி நம்ம தேவன் அவர் தான் படைத்த எல்லா படைப்புகளை விட மனிதன் மேல அன்பா இருக்கிறதை பார்க்கும் போது உங்களுக்கு கோபம் வர்றது உண்டா? ஏன்னா, நீங்க அவருடைய படைப்புகள்தான். ஆனா உங்களை விட எங்க மேல எங்க தேவன் இந்த அளவு அன்பு பாராட்டும் போது, என்னடா இந்த தேவன். அவரை ஒரு விசயமாகவே எடுத்து கொள்ளாத மனுசங்க மேல இவ்வளவு அன்பு செலுத்துறார். ஆனா எங்களை மட்டும் இந்த நிலமையில யோசித்து பார்க்கறதே கிடையாதுன்னு……

    ஏஞ்சலிடம் இருந்து பதில் வரவே இல்லை. உண்மையில் பயந்து விட்டாள். நான் எதுவும் தப்பா பேசிட்டேனோ? மனதுக்குள் நினைத்து கொண்டிருக்கும் போதே,

    இனியொரு முறை இந்த மாதிரி தேவையில்லாத கேள்விகள் கேட்க கூடாது குட்டிமா. உனக்கு நம்ம தேவன் உன் மேல அன்பா இருக்கிறது எப்படி தெரியும்? சப்போஸ் உங்க அம்மா மூலமா, உன்னை இப்படி இயேசப்பா பார்த்துக்குறாங்க. இந்த மாதிரியெல்லாம் உதவிகள் செய்யுறாங்க, தேவனுடைய வார்த்தைகள் மூலமா இன்னும் நம்ம தேவனுடைய அன்பை ரொம்பவே விளக்கி சொல்லி இருப்பாங்க. மற்றப்படி நம்ம தேவனுடைய அன்பை நீ நேரடியாக எப்ப உணர்ந்திருக்க?

    அது ஏஞ்சல் உங்ககிட்ட ஏற்கனவே சொன்னேனே. அம்மா, அப்பா எப்பவாது வெளியே போன சமயம், அந்த தனிமை என்னை கஷ்டப்படுத்தும் போது, என் இயேசப்பா அரவணைப்பை, அவர் என் கூட இருக்கிறதை ஒரு மெல்லிய காற்றா feel பண்ணிருக்கேன். அடுத்து பல நேரங்களில் என்னுடைய மனதில் குழப்பங்களோ, என் உடம்பு சரியில்லாம போன நேரம் கூட அவரை நான் உணர்ந்திருக்கேன் அவருடைய வார்த்தைகள் மூலமா. மற்றபடி இப்ப நான் சந்தித்த மரண பள்ளத்தாக்கு……இந்த மாதிரி நிறைய காரியங்கள் சொல்லலாம்.

    ஆனா உன்னால சொல்ல முடியுமா குட்டிமா, ஆதாம் மேலயும், ஏவாள் மேலயும் நம்ம தேவன் எவ்வளவு அன்பு வைச்சிருந்தாங்கன்னு?

    அந்த அளவுக்கு எனக்கு தெரியாது ஏஞ்சல்.

    நம்ம தேவன் தான் உருவாக்கின தன்னுடைய பிள்ளைகள் மேல ரொம்பவே அன்பா இருந்தாங்க. அவங்களை விட்டு பிரிய கூட மனதில்லாம, எப்ப பார்த்தாலும் அவங்களோட தன்னுடைய நேரத்தை செலவழிக்கிறதில கொஞ்சம் கூட யோசித்தது கிடையாது. ஒரு முழுமையான சந்தோசம்ன்னு தமிழ்ல எந்த வார்த்தையை சொன்னா சரி வருமோ, அந்த நிலையில் தான் இருந்தாங்க. ஆனா எப்ப அவங்க நம்ம தேவனை உதறி தள்ளிட்டு இந்த உலகம் பேசுற விசயங்களை கேட்டுட்டு, உலகத்தை பார்த்து போக ஆரம்பிச்சாட்டாங்களோ, அப்பவே நம்ம தேவனுடைய அந்த சந்தோசம் முடிவுக்கு வந்திருச்சு. இந்த விசயத்தை இப்ப நான் உனக்கு சொல்லுறதுக்கான காரணம், ஆதாம், ஏவாள் செய்த தப்பால, அவங்க மேல நம்ம தேவனுக்கு இருந்த அன்பு குறைந்திருச்சின்னு நீ யோசிக்க வேண்டாம். கோபம் வந்ததே தவிர, அவங்க மேல இருந்த அன்பு, இன்னும் அப்படியேதான் இருக்கு.

    அப்ப ஏஞ்சல், ஆதாம், ஏவாள் மூலமா எங்க மேலயும் தேவ கோபம் இருக்குன்னு சொல்லப்படுதே. அது மட்டுமில்ல அவங்க மூலமா இந்த உலகத்திற்கு பாவம் வந்ததால, எங்களுக்கும் மரணம் நிச்சயக்கப்பட்டிருக்கே.

    எல்லாம் உண்மைதான் குட்டிமா. ஆனா அவருடைய கோபமா இருக்கட்டும் இல்லை அவர் நீதியுள்ள நியாயாதிபதியா இருந்து செய்த தீர்ப்பான, தப்புக்கு தண்டனையா மரணம் என்கிற சாபம் இன்னும் தலைமுறை தலைமுறையா, எல்லா மனுசங்களுக்கும் வர்றதா இருக்கட்டும், அவர் நம்ம மேல வைத்த அன்பை தடுத்திர முடியாது. அதாவது ஒருத்தன் செய்யுற தப்பு, அவன் மேல நம்ம தேவன் வைத்த அன்பை கண்டிப்பா குறைக்க முடியாது.

    அதுனாலத்தான் பவுல் தாத்தா இப்படி சொல்லி இருக்காங்களா ஏஞ்சல். மரணம் கூட என்னுடைய இயேசப்பாக்குள்ள இருக்கிற தேவனுடைய அன்பை விட்டு நம்மை பிரிக்க மாட்டாதென்று நிச்சயத்திருக்கிறேன்னு சொல்லி இருக்கிறார்.

    ரொம்ப சரி குட்டிமா. நம்ம தேவன் உங்க மேல வைச்சிருக்கிற அன்பை எந்த காரியமும் பிரிக்கவோ இல்லை விட்டு விலக்கவோ முடியாது.

    எனக்கு ரொம்பவே பெரிய சந்தேகம் உண்டு ஏஞ்சல். நம்ம இயேசப்பா நரகத்தில போடுற ஆத்துமாக்களை குறித்து?

    அந்த மனுசங்க மேல நம்ம இயேசப்பாக்கு அன்பு கிடையாதுன்னா?

    சரியா கண்டுப்பிடிச்சிட்டீங்க ஏஞ்சல்.

    அவங்க மேலயும் நம்ம தேவனுடைய அன்பு உண்டு. இப்ப நரகத்தில வெந்திட்டு இருக்கிற கோடான கோடி ஆத்துமாக்கள் மேல கூட நம்ம இயேசப்பாவுடைய அன்பு உண்டு குட்டிமா.

    அப்ப ஏன் ஏஞ்சல் நம்ம இயேசப்பா அவங்களை காப்பாத்தலாமே?

    நம்ம இயேசப்பா அவங்களுக்கு நியமிக்க பட்ட காலம் வரைக்கும் கிருபை பாராட்டதான் செய்தாங்க. எத்தனை சந்தர்ப்பங்கள்…..ஆனா ஒண்ணுல கூட அவங்களுக்கு நம்ம தேவனுடைய அன்பு புரியலை. அவங்க மேல எப்பவும் உயிரை வைச்சிருக்கிற நம்ம தேவனை விட அக்கினி கடலில் தனக்கு கூட்டா எரியுரதுக்கு ஆள் பிடிக்கிற சாத்தான் தந்திரம்தான் பிடிச்சிருக்கு குட்டிமா. அந்த கிருபை காலங்களுக்கு மேல கிருபை பாராட்ட நம்ம தேவனுக்கு கூட அனுமதி இல்லை. ஏன்னா சட்டம் இயற்றின அவரே சட்டத்தை மாற்ற முடியாதே. அதுனாலத்தான் நரகத்தில விழுற மனுசங்களா இருக்கட்டும், இல்லை வெந்திட்டு இருக்கிற ஏராளாமான மனுசங்களா இருக்கட்டும், நம்ம தேவன் அந்த வேதனையை மனதில அடக்கிட்டு அமைதியா இருக்கிறார். அவர் உங்களுக்காக வடிக்கிற கண்ணீரை உங்களால் கணக்கிட முடியாதுமா.

    சிறிது நேரம் அமைதி காத்தார் ஏஞ்சல். அவளுக்கும் கூட துக்கம் தொண்டை வரை அடைத்தது போல தோன்றியது. இத்தனை அன்பு நிறைந்தவரா என் தேவன்னு………..எண்ணம் மட்டும் ஓடிக்கொண்டிருந்தது.

    இந்த அளவுக்கு எங்க தேவன் உள்ளுக்குள்ள உங்களை பற்றி யோசித்தே மறுகிட்டிருக்கும் போது, எப்படி நாங்க இதை பத்தி பொறாமை பட முடியும் குட்டிமா. ஒவ்வொரு நேரமும் நம்ம தேவன் வேதனைப்படும் போது, எங்களுக்கும் வேதனைமட்டும்தான் தோணுது. அச்சோ….என்னுடைய இயேசப்பா வேதனைபடுறாங்களே, என் தேவன் கண்ணீர் வடிக்கிறாரேன்னு தோணும் போது, எப்படி நாங்க மட்டும், என்ன மனுசங்க இவங்க….சாதாரண ஆட்கள்……அவங்களை பற்றி யோசித்தே இப்படி வேதனைபடுறதை விட எங்களை அவருடைய பிள்ளையாக நினைக்கலாமேன்னு எப்படி யோசிக்க தோணும்.

    உண்மையில் இது ஆச்சர்யமா இருக்கு ஏஞ்சல்.

    இதுதான் சத்தியம் குட்டிமா. நீ ஒருத்தர் மேல உண்மையில் அன்பு வைத்திருந்தா, அவங்களுடைய வேதனை உன்னை வேதனைபடுத்தும். அவங்களுடைய சந்தோசம் உன்னையும் சந்தோசப்படுத்தும். அவர் யார் மேல பிரியமா இருக்கிறாரோ அவங்க மேல உனக்கும் பாசம் வரும். எந்த காரியங்களை வெறுக்கிறாரோ அது மேல உனக்கும் வெறுப்பு வரும். இப்ப உனக்கு புரிஞ்சிருக்கும்னு நம்புறேன்.

    கண்டிப்பா. எங்க இயேசப்பாக்கு நாங்க எப்படி செல்லமோ உங்களுக்கும் நாங்க செல்லம். அப்படிதான ஏஞ்சல்.

    ஆமா குட்டிமா. அதுனாலதான் நம்ம தேவன் தன்னுடைய பிள்ளைகளை சில வேதனைகள், பாடுகள் வழியா பரலோகத்திற்கு கூட்டிட்டு வருகிற அந்த நேரங்களில் உங்களுக்கு ஹெல்ப் பண்ண எங்களை நம்ம தேவன் அனுப்புகிறார்……உனக்கு புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன். ஏன்னா பரலோகத்திற்கு வரும் வழி ரொம்பவே இடுக்கமும் நெருக்கமும் ஆனது. நீயும் நம்ம பைபிள்ல படிச்சிருப்ப. மனம் திரும்புகிற ஒரே பாவியின் நிமித்தம் பரலோகமே சந்தோசப்படும்னு.

    நல்லா புரிஞ்சிருச்சு ஏஞ்சல். என் தேவன் எந்த அளவுக்கு எங்க மேல அன்பா இருக்கிறார்ன்னும், உங்களை எங்க வாழ்கையில் தன்னுடைய பிள்ளைகளா நடத்திட்டு வர எப்படி அனுமதிக்கிறார்ன்னும், உங்க சந்தோசமும், எதிர்ப்பார்ப்பும் எங்களை பத்தி எவ்வளவு என்பதையும் தெரிஞ்சிகிட்டேன்.

    அப்ப நாம நம்ம தேவனுக்கு நன்றிகள் செலுத்தலாமா குட்டிமா.

    கண்டிப்பா ஏஞ்சல், முழு மனதோட செலுத்த ஆசைபடுறேன்.

    எங்கள் ஜீவனுள்ள தேவனாகிய கர்த்தாவே, நீர் எங்களுக்கு வெளிபடுத்தின எல்லா சத்தியங்களுக்காவும் நன்றிகள் ஆண்டவரே. நீங்க எங்க மேல வைத்திருக்கிற அன்பிற்காக கோடான கோடி ஸ்தோத்திரங்களும், கனங்களையும், துதிகளையும், மகிமையும் செலுத்துகிறோம். ஆமென்.

    Related Post

    Categories: பைபிள் சம்பவங்கள்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    9 + one =

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>