• பைபிள் சம்பவங்கள்(குழந்தைகளுக்காக) – 12

    ஏஞ்சல், நம்ம இயேசப்பா எனக்கு கடலுடைய சீற்றத்தை எப்படி கதவுகள், தாழ்பாள்கள் போட்டு அடக்கினாங்கன்னு காண்பித்தாங்க. அப்ப நம்ம தேவன் பூமியை உருவாக்கின அந்த வல்லமையும் காண்பிப்பாங்களா?

    கண்டிப்பா குட்டிமா, அது தேவனுடைய சித்தத்திற்கு உட்பட்டதா இருந்தா?

    நான் உங்ககிட்ட ஒரு சந்தேகம் கேட்கணும்னு நினைச்சேன் ஏஞ்சல். தேவனுடைய சித்தம்ன்னு அடிக்கடி சொல்லுறீங்களே, அப்படின்னா என்ன அர்த்தம். ஏன்னா எங்க அம்மா கூட அடிக்கடி இந்த வார்த்தையை use பண்ணுவாங்க.

    தேவனுடைய சித்தம்ன்னா அவருடைய தீர்மானம். அதாவது இந்த உலகத்தில தன்னுடைய செயல்கள் இந்த வகையில் இருக்கணும்னு நம்ம தேவன் ஏற்கனவே தீர்மானித்த விசயங்கள்.

    எனக்கு புரிந்து கொள்ள இன்னும் கஷ்டமா இருக்கு ஏஞ்சல்????

    உன்னை எந்த நேரத்தில, எந்த வீட்டில, யாருடைய பாராமரிப்பில உருவாக்கணும்னு நம்ம தேவன் நீ பிறக்குறதுக்கு முன்னாடியே தீர்மானிச்சுட்டாங்க.

    உண்மைதான் ஏஞ்சல். நான் எங்க அம்மா, அப்பாக்கு பொண்ணா, 10 வருசங்களுக்கு முன்னாடியே அவங்க வாழ்கையில நுழைந்திட்டேன். அது மட்டுமில்ல, நான் இன்னிக்கி உங்க கிட்ட பேசுறது, இனி நாளைக்கி பேச போறது, இன்னும் என்னுடைய ஆயுசு முழுக்க எனக்கு என்ன நடக்கணும்னு என் தேவ ஏற்கனவே தீர்மானிச்சிட்டார்.

    அப்ப இதுல உனக்கு என்ன குழப்பம் குட்டிமா?

    நம்ம தாவீது தாத்தா 139 ம் சங்கீதத்தில சொல்லுற மாதிரி என் கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம், என் உள்ளத்தில நான் நினைக்கிறது, நான் அடுத்து என்ன பேச போறேன் வரைக்கும் என் தேவனுக்கும் நல்லாவே தெரியும் ஏஞ்சல். ஆனா இதுல தேவனுடைய சித்தம் ன்னா என்ன?

    தேவனுடைய தீர்மானம் அவரை தேடுற பிள்ளைகளுக்கு என்றும் நன்மையானதா இருக்கும் குட்டிமா.

    இதுதான் ஏஞ்சல், எனக்குள்ள சந்தேகம். என்னுடைய தேவனை பற்றி தெரிந்திருந்தாலும், தெரியாம இருந்தாலும் எல்லாரும் அவருடைய பிள்ளைகள்தான். அப்ப எல்லாருக்கும் என் தேவன் தீர்மானித்த காரியம் உண்டு, அப்படிதான. அப்ப ஏன் தேவ பிள்ளைகளுக்கும், அவரை அறிந்து கொள்ளாத பிள்ளைகளுக்கும் வேறுபாடுகள் வருது?

    தன்னை சிருஷ்டித்த தன்னுடைய தேவனை அறிந்து கொள்ள அவருடைய பிள்ளைகளுக்கு கண்டிப்பா அவர் வாய்ப்புகள் கொடுக்கிறார் குட்டிமா. அதை அவர்கள் அறிந்து கொள்ளாம சே….அவர் பாரபட்சம் காண்பிக்கிறார்ன்னு சொன்னா அதுக்கு நம்ம தேவனால் என்ன பண்ண முடியும்?

    ஏஞ்சல், நான் ஏற்கனவே ஒரு குழப்பத்தில இருந்தேன். இன்னும் என் சந்தேகத்தை நீங்க அதிகப் படுத்திட்டீங்க. எனக்கு புரியுற வகையில ப்ளீஸ்…..

    குட்டிமா, நீ புரிந்து கொள்ளனும்னு நினைக்கிறது ரொம்ப சரியான விசயம். ஆனா அதன் அர்த்தம் இதுதான் இருக்குமோன்னு மனதில எதையாவது யோசித்து கேட்டீன்னா உன்னால கண்டிப்பா நம்ம தேவ ரகசியங்களை தெரிந்து கொள்ள முடியாது. உனக்கு புரியுற வகையில சொல்லணும்னா நீ, நம்ம தேவ சந்நிதானத்தில் அவருடைய வார்த்தைகளை வாசிக்கும் போது, அவர் உன்னோட வந்து இடைப்பட நீ இடம் கொடுக்கணும். அதை விட்டுட்டு, எனக்குதான் இதனுடைய அர்த்தம் தெரியுமேன்னு வாசிக்க ஆரம்பிச்சா, ஒரு நாள் எந்த பைபிள் வார்த்தைகளை குறித்து நீ உன்னுடைய வாழ்க்கையில வைராக்கியம் காண்பிச்சியோ, அதே பைபிள் வைச்சு பெருமை பாராட்ட ஆரம்பிச்சிருவ.

    சாரி ஏஞ்சல். நான் என் மனதில பெருமை கொண்டிருந்தேன்னு தெரியாம போச்சு. ஆனா என் தேவன் என்னை மன்னிச்சிட்டாரா???

    உன்னை மன்னிக்காம இருந்தா, உன்னோட இப்படி பேசிட்டு இருக்க மாட்டார் குட்டிமா.

    ஏன் ஏஞ்சல் ஒரு மனிதனை பெருமை இந்த அளவுக்கு கஷ்டப்படுத்துது.

    அது இல்லாம ஒரு மனிதனால தன் வாழ்கையை சுகமா கொண்டு போக முடியாதா?

    முடியும் குட்டிமா. என்றும் என்னை சுற்றி மட்டுமில்ல, எனக்குள்ள இருக்கிற அனைத்தும் கூட என் தேவனுடைய சொத்து. அதாவது நீயே அவருக்கு சொந்தமானவள்ன்னு எப்ப உனக்குள்ள எண்ணங்கள் வருதோ, அப்ப எந்த பெருமையும் உன்னை மேற்கொள்ள முடியாது.

    தேங்க்ஸ் lord. என்றும் நான் உங்களுடையவள்ன்னு எண்ணங்களை கொடுங்க, ப்ளீஸ்…….

    ஆமென். இப்ப நீ கேட்டதுக்கான அர்த்தம் நான் சொல்லுறேன் குட்டிமா. இந்த உலகத்தில பிறக்கிற எந்த பிள்ளையா இருந்தாலும், அவர்களை குறித்து நம்ம தேவன் பரலோகத்தைதான் நியமனமா வைச்சிருக்காங்க.

    ஆனா ஏஞ்சல், என்னை மாதிரி இல்லாம என் தேவன் பற்றி தெரிந்து கொள்ள முடியாத சூழ்நிலையில வளர்கிற பிள்ளைகளுக்கு?

    அவர்கள் வாழ்க்கையிலும் நம்ம தேவனை பற்றி தெரிந்து கொள்ளுகிற வாய்ப்புகளை அவரே அமைத்து கொடுக்கிறார். 

    என்னுடைய பிரெண்ட்ஸ் நிறைய பேர் நம்ம இயேசப்பாவை பற்றி தெரிந்து கொள்ளாத நிலமையில இருக்கிறவங்க. அப்ப அவங்களுக்கு அந்த வாய்ப்புகள் எப்படி வரும் ஏஞ்சல்?

    அது நம்ம தேவனுடைய அனாதி தீர்மானம் குட்டிமா. அதை உன்னால அறிஞ்சுக்க முடியாது. உன்னால முடிந்தா, உன் பிரெண்ட்ஸ்கிட்ட போய் உனக்கு இயேசப்பாவை தெரியுமான்னு கேட்டு பாரு. கண்டிப்பா அவருடைய பேரைனாச்சும் தெரிந்து வைச்சிருப்பாங்க.

    அப்ப நம்ம இயேசப்பா அன்பை ருசிக்க எனக்கு கொடுத்த கிருபை மாதிரி அவங்களுக்கு எப்ப அமையும் ஏஞ்சல்?

    அதற்குத்தான் நீங்க இருக்கீங்களே குட்டிமா. அவருடைய அன்பை ருசித்த ஒருத்தராலும் தான் மட்டும் வாழ்நாள் முழுவதும் அதை ருசிக்கணும்னு கள்ளத்தனமா மறைச்சு வைக்க முடியாது. ஏன்னா நம்ம இயேசப்பா அன்பு அப்படிப்பட்டது. அவருடைய அன்பு மற்றவங்களையும் டேஸ்ட் பண்ண வைக்கிற அன்பு.

    அப்ப நீங்க சொல்ல வர்றது ஏஞ்சல்?

    அதிகம் கொடுக்கிறவனிடத்தில் அதிகம் கேட்கப்படும்.

    அப்ப என் தேவன் இத்தனை தேவ இரகசியங்களை என்கிட்ட சொல்லுறாங்களே. அப்ப என்கிட்டயும் அதிகம் கேட்கப்படுமா?

    கண்டிப்பா குட்டிமா. நீ உன்னுடைய தேவனுக்காக எழும்பி பிரகாசிக்கிற விளக்கா இருக்கணும். ஏன்னா உன் மூலமா நம்ம தேவன் பரலோகத்தில இழுத்துட்டு வர போற ஆத்துமாக்கள் எண்ணிக்கை அதிகம். அதுனால நீ உன் தேவனுக்கு கீழ்படிகிற பிள்ளையா, அவர் சித்தம்…..அதாவது உன்னை குறித்து தேவன் தீர்மானித்த காரியம்……பல ஆத்துமாக்கள் நம்ம தேவனிடத்தில் சேரதுக்கு இந்த குட்டி பிள்ளையான நீ, தேவ வார்த்தைகளை என்றும் சோர்ந்து போகாம……தேவன் கொடுக்கிற பலத்தினால…..அவர் உனக்கு இந்த பூமியில கொடுத்திருக்கிற நாட்கள் வரைக்கும் சொல்லிட்டே இருக்க வேண்டியது தான் அவருடைய ஆசை.  

    எந்த கஷ்டங்கள் வந்தாலுமா ஏஞ்சல்?

    தேவனை நம்பி நடக்கிற பிள்ளைகளுக்கு என்றும் அது படிக்கட்டுகள் குட்டிமா. அதை புரிந்து கொள்ளாமதான் சில நேரத்தில தேவ பிள்ளைகள் விழுந்து, விழுந்து எழுறாங்க.

    நான் ரொம்பவே சாதாரணமானவ ஏஞ்சல். எனக்கு போய் என் தேவன் எவ்வளவு பெரிய பொறுப்பு, அதுவும் என்னை நம்பி?

    குட்டிமா. உனக்கு இப்ப தேவ சித்தம்ன்னா என்னன்னு புரிந்திருக்கும்னு நம்புறேன். உனக்கு எப்படி நம்ம தேவன் காரியங்களை தீர்மானித்தாங்களோ, அதே மாதிரிதான் இந்த உலகத்தில உள்ள எல்லாருக்கும் நம்ம தேவன் சில பொறுப்புகளை கொடுத்து ஓட விட்டுருக்காங்க. வெற்றி கிடைச்சு, கீரிடம் நம்ம இயேசப்பா கையால வாங்கிறவங்களும் உண்டு. நடுவிலயே சாத்தான் காண்பிக்கிற தந்திரங்களில சோர்ந்து போய், நரகத்தில விழுறவங்களும் உண்டு. ஆனா நம்ம தேவன் உங்க எல்லாரையும் பரம பந்தயத்திற்குத்தான் ஓட விட்டுருக்காங்க. யாரையும் நரகத்தை பார்த்து ஓடுன்னு நம்ம தேவன் சித்தம் வைக்கிறது கிடையாது. இதை என்றும் உன் மனதில தெளிவா வைச்சுக்கோ.

    அவளின் அழகான விழிகளில் கண்ணீர் திரண்டிருந்தது.

    இப்ப ஏன் அழுற குட்டிமா?

    ஏஞ்சல், என் தேவன் எனக்குன்னு நியமித்த தீர்மானங்கள் தெரியாம இது வரை ரொம்பவே விளையாட்டா நேரத்தை போக்கிட்டேன்னு தோணுச்சு.

    இன்னும் உனக்குன்னு நேரங்கள் கொடுத்திருக்காங்க குட்டிமா. தேவையில்லாம இந்த மாதிரி புலம்பவோ, கலக்கம் அடைய வைக்கிறதும் கூட சாத்தானின் தந்திரம்தான். அது தேவ பிள்ளையான உனக்கு தெரிந்த விசயம்தான்.

    கண்டிப்பா ஏஞ்சல். என் தேவன் எனக்குன்னு வைச்சிருக்கிற தீர்மானத்தை தெரிஞ்சிகிட்டதே அவருடைய கிருபை. என்றும் அவர் பிள்ளையா வாழ அவரிடம் நித்தமும் பலம் கேட்பேன்.

    ஆமென்…………இருவரும் ஒரு சேர ஒலித்தனர்.

    Related Post

    Categories: பைபிள் சம்பவங்கள்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    × four = 36

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>