• பைபிள் சம்பவங்கள்(குழந்தைகளுக்காக) – 1

    என்ன எங்க பார்த்தாலும் இருட்டு, ஒரு சத்தமும் காணும்……..என்னால ஒண்ணும் பார்க்க முடியலை, உங்களுக்கு ஏதாவது தெரியுதா, உங்களால எதையாது கேட்க முடியுதா……..என்ன ஒரு சத்தத்தையும் காணும், யாராவது பக்கத்தில இருக்கீங்களா பிரெண்ட்ஸ்………

    நான் எதுவும் கனவு பார்த்திட்டு இருக்கேனோ……இல்லை என் கண்லத்தான் எதுவும் பிரச்சனை வந்திருச்சோ….தயவு செய்து யாராவது பேசுங்களேன், ப்ளீஸ்…..

    ஆ…..கிள்ளினா கை வலிக்குதே. அப்ப இது கனவில்லை. அப்ப நான் படுத்திருந்த பெட் எங்க? எங்க அம்மா, அப்பாவை காணும். எங்க வீடு எங்க போச்சு?

    என்ன தீடீர்னு ஒரு வெளிச்சம், யாரது? கண் ரொம்பவே கூசுது. என்ன இது, இவ்வளவு வெளிச்சமா…….யாரோ ஒருத்தர் மாதிரி தோணுது. அப்பா போல……அப்பா, இது வரைக்கும் நான் கூப்பிட்ட நேரம் எங்க இருந்தீங்க? (தொட முற்பட்ட போது) ஆ…….கரண்ட் ஷாக் அடித்த மாதிரி இருக்கு! இல்லை நீங்க என் அப்பா இல்லை, யார் நீங்க?

    ஒரு கணம் தயங்கியவள், நீங்க ஏஞ்சல்தான……

    அருகில் நின்ற பிரகாசமான நபர், ஆமா…..எப்படி உனக்கு தெரியும் நான் ஏஞ்சல்ன்னு(குரல் கணீரென்று இருந்தது)

    அப்ப நான் செத்து போயிட்டேனா……அச்சோ அம்மா……என்னை பார்க்காம எப்படிதான் இருக்க போறீங்களோ…..எத்தனை தடவை என்னை சொன்னீங்க, குட்டிமா பொய் சொல்லக் கூடாது, சினிமா பார்க்க கூடாது……யாரையும் கஷ்டபடுத்த கூடாதுன்னு. நீங்க சொன்ன நேரம் கேட்காம போயிட்டேனே. தப்பு செய்தா இயேசப்பா தண்டனை கொடுப்பாங்கன்னு வேற சொன்னீங்களே….எனக்கு தண்டனை கொடுக்க போறாங்க…….இயேசப்பா என்னை கூட்டிட்டு போக தன் ஏஞ்சலை அனுப்பி வைச்சிட்டாங்க……..(மீண்டும் அழுகையை தொடர்ந்தாள்)

    உனக்கு யார் சொன்னது குட்டிமா, நீ செத்து போயிட்டன்னு…..

    என்னை நம்ம இயேசப்பாகிட்ட கூட்டிட்டு போக நீங்க வந்திருக்கீங்களே…..

    ஏஞ்சல் வந்தா ஒருத்தர் செத்து போன பிறகுதான் வருவாங்கன்னு உனக்கு யார் சொன்னது…….

    எங்க அம்மா என்கிட்ட அடிக்கடி சொல்லுவாங்க, குட்டிமா, நீ இயேசப்பா பிள்ளை. நீ இந்த உலகத்தில என்ன பண்ணிட்டு இருக்கன்னு நம்ம இயேசப்பா ஒவ்வொரு நிமிசமும் பார்த்துட்டு இருப்பாங்க, அது மட்டுமில்ல நம்ம இயேசப்பாவின் ஏஞ்சல்ஸ் கூட பார்த்திட்டு இருப்பாங்க. நீ நல்லது செய்யும் போது உன்னை பாராட்டுற அவர், தப்புகள் செய்யும் போது, உன்னுடைய தவறுகள் பெருகும் போது, தண்டிக்கவும் தயங்க மாட்டார். நீ இறந்த பிறகு என்றும் எரியுற தீயில கஷ்டப்பட வேண்டியதா போயிரும்னு நிறைய தடவை சொல்லி இருக்காங்க.

    அதுனாலத்தான் நீ செத்து போயிட்டன்னு நினைச்சியா……

    ஆமா, நேற்று கூட அம்மா ஏரியா prayer செல்லுக்கு போயிட்டாங்க. நான் அம்மா வரதுக்குள் கார்ட்டூன் படம் பார்த்தேன். அம்மா சொன்ன பிறகும் தப்பு செய்தா இயேசப்பா தண்டனை கொடுக்க தான செய்வாங்க…….

    கார்ட்டூன் படம் பார்த்தா, இயேசப்பா எரியுற நரகத்தில போட்டுருவாங்கன்னு உனக்கு யார் சொன்னாங்க………

    எங்க அம்மா சொல்லி இருக்காங்க, நம்ம இயேசப்பா கண் முன்னாடி சின்ன தப்பு, பெரிய தப்புன்னு இல்லையாம். கீழ்படியாமை என்பது தான் நம்ம இயேசப்பா கணக்கிடுகிற விஷயமாம். அப்படின்னா நான் நிறைய முறை இந்த தப்பை பண்ணிட்டேன். நேற்று நான் டிவி பார்த்ததுதான் என்னுடைய இயேசப்பா மன்னிப்பின் எல்லையை கடந்த காரியம் போல. அதான் உங்களை அனுப்பி இருக்காங்க…….

    நீ சொன்னது சரிதான்….ஆனா நீ இறந்து போனதா ஏன் நினைச்ச…..

    என்னை சுற்றியும் ஒரே இருட்டு…..நான் என்ன சத்தம் போட்டாலும் யாரும் சத்தம் கொடுக்கலை, அதுமட்டுமில்லை உங்களை பார்த்ததும் முடிவுக்கே வந்திட்டேன். இயேசப்பா நான் செய்த எல்லா தப்புகளும் தண்டனை கொடுக்கத்தான் உங்களை அனுப்பி இருக்காங்கன்னு நினைச்சேன்…..

    நம்ம இயேசப்பாதான் என்னை அனுப்பி வைச்சாங்க, ஆனா உன்னை தண்டிக்க இல்லை. அது மட்டுமில்லை நீ செத்து போகலை. உயிரோடதான் இருக்க…..

    ஏஞ்சல் ஒரே ஒரு நிமிஷம். நான் என்னை தொட்டு பார்த்துகிரேனே…….இனிமே நாம எங்க வீட்டுக்கு போகலாமா…..

    சாரி குட்டிமா, நம்ம இயேசப்பா ஒரு உண்மையை உனக்கு புரிய வைக்கிறதுக்குதான் என்னை அனுப்பினாங்க……

    ஏஞ்சல், உங்க பேரு எனக்கு தெரியாது….அதுனால உங்களை ஏஞ்சல்ன்னு கூப்பிடுகிறதால உங்களுக்கு பிரச்சனை இல்லையே…..

    (ஏஞ்சல் சிரிப்பதை பார்த்ததும்) நீங்க ரொம்பவே அழகாக சிரிக்கிறீங்க ஏஞ்சல். உங்களை பார்த்தது ரொம்பவே சந்தோசமா இருக்கு. ஆனா நேரம் ஆச்சு பாருங்க. என் அம்மா என்னை எதிர்பார்த்துட்டு இருப்பாங்க. அம்மாகிட்ட போனதும் உங்களை பார்த்ததை பற்றியும், உங்ககிட்ட புலம்பனது பற்றியும் கண்டிப்பா சொல்லணும்………

    குட்டிமா, நான் சொன்னதை நீ சரியா கவனிக்கலைன்னு நினைக்கிறேன். உனக்கு சில தேவ உண்மைகளை எடுத்து சொல்லுறதுக்காக நான் நம்ம தேவனால் அனுப்பப்பட்ட தூதன்……

    ஆனா ஒரு சின்ன பொண்ணாகிய என்கிட்ட என் இயேசப்பா என்ன சொல்ல ஆசைபடுறாங்க. எங்க அம்மாக்குத்தான் நம்ம இயேசப்பா பற்றி நல்லா தெரியும். அவங்ககிட்ட சொன்னானாச்சும் பிரயோஜனம் இருக்கு. ஆனா நான்……….

    இது தேவனுடைய சித்தம்……உனக்கு நம்ம பைபிளில் இருக்கும் உண்மைகளை விளக்கி காண்பிக்க அவரால் அனுப்பப்பட்டேன். இதுதான் உண்மை.

    ஆனா எனக்குதான் பைபிளில் இருக்கும் எல்லா விசயங்களை பற்றியும் தெரியுமே. எங்க அம்மா நான் அவங்க வயிற்றில இருக்கும் போதே பைபிள் பற்றி சொல்ல ஆரம்பிச்சிட்டாங்களாம். அப்படி கணக்கு பார்த்தாலும் நான் கிட்டதட்ட 10 வருசமா பைபிள் வசனங்களை கேட்டுட்டு இருக்கேன். இனியும் நான் தெரிந்து கொள்ள ஏதாவது இருக்கா ஏஞ்சல்……

    கண்டிப்பா குட்டிமா, நிறைய இருக்கு……….(ஒரு கணம் அமைதியானார்)

    விழிகளில் ஆச்சர்யத்துடன் அவரையே பார்த்து கொண்டிருந்தவளுக்கு அடுத்து என்ன நடக்கும் என்பதுதான் யோசனையாக இருந்தது.

    Related Post

    Categories: பைபிள் சம்பவங்கள்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    6 − one =

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>