• பைபிள் சம்பவங்கள் ( குழந்தைகளுக்காக) – 45

    மீண்டும் அந்த எக்காள சத்தம் கேட்கவும் என்ன என்பது போல பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஏஞ்சலின் முகத்தை பார்த்தாள். இப்பனாச்சும் நம்ம எஜமானர் வந்துட்டாங்க…..என்கிற சந்தோஷ செய்தியை கேட்க மாட்டேனா என்கிற ஏக்கம் அதில் தெரிந்தது. அதை புரிந்து கொண்ட ஏஞ்சல் அவளை பார்த்து சிரித்தவராய்……இன்னும் ஆயத்தங்களே மேற்கொள்ளாம உடனே என் எஜமானரை பார்க்கணும்னு நினைக்கிறது சரி வருமா…..ன்னு நீயே சொல்லு….அவர் சொன்ன போது அவளாலும் ஒன்று சொல்ல முடிய வில்லை. அமைதியாக இருந்தாள்.

    ஆனால் ஒரு கேள்வியை கேட்டே விட வேண்டும் என்று அவள் எண்ணங்கள் தூண்டியது. இல்லாட்டி என்னை ஒண்ணுமே இல்லைன்னு இந்த ஏஞ்சல் நினைச்சிர கூடாதே…..மனதினில் எண்ணங்கள் உந்த தேவையில்லாமல் ஒரு கேள்வியை கேட்க நினைத்தாள்.

    சாத்தானை குறித்த கேள்வியை கேட்டு விட கூடாது என்பதில் அவள் ரொம்பவே தெளிவாகவே இருந்தாள். ஏற்கனவே அவளுடைய ஏஞ்சல் எச்சரித்து போன காரியம் ஆயிற்றே… ஆனாலும் இந்த ஏஞ்சல் என்னையும் அறிவாளின்னு சொல்லுற அளவுக்கு என்ன கேள்வி கேட்கலாம்….. மண்டையை போட்டு உடைத்து கொண்டாள்.

    ஏஞ்சல்….நீங்க நம்ம எஜமானருடைய வருகைக்கு உங்களை ரொம்பவே தயார் படுத்தி கொள்ளுறீங்க…..ஆனா என்னால இன்னும் ஒரு காரியம் தெரிந்து கொள்ள முடியலை. இந்த ஏதேன் தோட்டத்தில நம்ம எஜமானர் உங்களுக்கு அப்படி என்ன வேலை கொடுத்திருக்காங்கன்னு நான் தெரிந்து கொள்ளலாமா??? அவள் கேட்ட போது

    அந்த ஏஞ்சல் அவளை பார்த்து சிரித்தவராய் நீயே பார்க்கிறியே. இந்த ஏதேன் தோட்டத்தை பராமரிக்கிற வேலை….இந்த ஏதேன் தோட்டம் பற்றிய ஒரு உண்மை உனக்கு தெரியுமா…. இது நம்ம எஜமானாரல் உருவாக்கப்பட்ட தோட்டம். அப்ப அவர் பார்த்து பார்த்து உருவாக்கின அவர் படைப்பை நாங்க எந்த வகையில் பத்திரமா பார்த்து கொள்ளனும்….ஏஞ்சல் சொல்லி முடித்த போது என்ன சொல்லுவது என்று அவளுக்கு தெரிய வில்லை.

    ஏதாவது தன்னை பற்றி கதை கதையா சொல்லுவார்….என்று எதிர்பார்த்தவளுக்கு சீக்கிரமாகவே தன் வேலையை பத்தி சொல்லி முடிக்கவும் ஒன்றும் சொல்ல முடியாமல் அமைதியாக தன் முன்பு நின்று கொண்டிருந்த ஏஞ்சலை நோக்கினாள்.

    இயேசப்பா உங்களுடைய ரெண்டாவது வருகைக்கு நாங்க என்ன ஏற்பாடுகள் செய்யணும் என்பதை  இந்த ஏஞ்சல் மூலமா நீங்க சொல்லி கொடுத்தீங்க….ஆனா இந்த ஏஞ்சல்களை பற்றியும், இவர்களுக்கு கண்காணிப்பாளரா நீங்க உயர்த்தி வைச்சிருக்கிற சாத்தான் பற்றியும் ஒண்ணுமே தெரிஞ்சுக்க முடியலை….தன் தேவனிடம் முறையிட்டு கொண்டிருந்தாள்.

    நான் நினைக்கிறேன் இயேசப்பா….நீங்க என்னை கூட்டிட்டு வந்த வேலை முடிஞ்சிருச்சுன்னு நினைக்கிறேன்….அதுனால நாம நம்ம வீட்டுக்கு போகலாமா இயேசப்பா…..அவள் பேசி முடித்து விட்டு தன் தேவனின் வார்த்தைகளுக்காக காத்திருந்தாள். பதில் தான் வந்த பாடில்லை. ஏன் என்ன காரணம்….அவள் தனக்குள் கேட்டு கொண்டாள்.

    என்னுடைய ஏஞ்சல் என்கிட்டே சொன்னது உண்மைதான். இங்க என் இயேசப்பா சாத்தான் எந்த நிலையில் இருந்து தள்ளப்பட்டான் என்பதை வெளிப்படுத்துற வரைக்கும் காத்திருக்க சொன்னாங்க…. ஆனா இதுக்கு மேல என் பக்கத்தில் நின்னுட்டு இருக்கிற ஏஞ்சல்கிட்ட என்ன சத்தியங்களை தெரிந்து கொள்ள முடியும்??? கேள்வியோடு நின்று கொண்டிருந்தாள்.

    இன்னொரு புறம் அவள் மனமே அவளை இடித்து காண்பித்தது. இங்க எப்ப வந்தேனோ அந்த நிமிஷத்தில் இருந்து எப்ப வீட்டுக்கு போவோம்….என்ற வார்த்தையை தான் வேறு வேறு வகையில் நான் என் இயேசப்பாகிட்ட கேட்டுட்டு இருக்கேன்…. ஆனா அந்த பூமி, அதுல இருக்கிற எந்த காரியங்களிலும் என் இயேசப்பா அன்பு கூராதீர்கள்ன்னு சொல்லி கொடுத்திருக்காங்க….இந்த இடம் எப்படி எனக்கு ஏதோ அந்நியமான தேசம் என்று உணர்வு கொடுக்கிறதை மாதிரி ஏன் …..நான் வசிக்கிற பூமி, அதுல இருக்கிற ஆட்கள், என்னுடைய பொருட்கள்ன்னு நான் நினைச்சிட்டு இருக்கிற காரியங்கள் அன்னியமா தோணலை….நான் பூமிக்கு உரியவ கிடையாதே….அப்பவெல்லாம் தோணாத விசயம்…இந்த இடத்தில் வந்ததில் இருந்து ஏன் தோணனும்??? தனக்குள்ளே கேட்டு கொண்டாள். ஆனால் பதில் தான் அவளுக்கு கிடைக்க வில்லை.

    ஏஞ்சல் இவள் முகத்தை பார்த்தவாறு நிற்கவும் என்ன என்பது போல அவளும் பார்த்தாள்.

    நீ பாதி நேரங்களில் என் கூட பேசிட்டு இருக்கும் போதே ஆழ்ந்த யோசனைக்கு போயிற…..ஏன் அப்படி…..அந்த ஏஞ்சல் கேட்ட கேள்விக்கு எப்படி பதில் சொல்ல முடியும்….ஆனாலும் தன் உணர்வை மறைத்தவளாய்

    இந்த இடத்தை பத்தி யோசித்திட்டு இருந்தேன். இந்த இடத்தில் நீங்க வாழுற வாழ்க்கை….உங்க எஜமானர் மேல நீங்க வைச்சிருக்கிற மரியாதை, உங்க கண்காணிப்பவர் எல்லாமே எனக்கு ரொம்பவே ஆச்சரியமான காரியங்களா இருக்கு….அதை பத்தி தான் முழுமையா தெரிந்து கொள்ளலையேன்னு யோசித்திட்டு இருந்தேன்…..ஒருவாறு அவள் சொல்லி முடிக்கவே போதும் போதும் என்றாகி விட்டது. பேசி முடித்த பிறகு ஒரு பெரு மூச்சையும் விட்டாள்.

    இதை வரையும் இவளை பார்த்து சிரித்து கொண்டிருந்த அந்த ஏஞ்சல் அவளை உன்னிப்பாக நோக்கவும் பயந்தே போனாள். நான் ஏதாவது தப்பா கேள்வி கேட்டுட்டேனோ….தனக்குள் கேட்டு கொண்டாள். எவ்வளவு யோசித்து பார்த்தும் என்ன கேள்வியை கேட்டோம் என்பது முழுமையாக நினைவுக்கு வர வில்லை.

    நீ ஏன் அப்படி யோசிக்கிற….என்று அந்த ஏஞ்சல் அவளை கேட்ட போது நான் என்ன யோசிச்சேன்….தனக்குள் கேட்டு கொண்டாள்.

    நீ முதல்லயே என்கிட்டே கேட்டிருக்கலாமே. உனக்கு நான் சொல்லி இருப்பேனே….அந்த ஏஞ்சல் கேட்ட போது உண்மையில். அவளுக்கு ஆச்சரியம் மட்டுமே எட்டி பார்த்தது.

    அந்த காரியங்கள் மறைவான விஷயங்களா இருக்குமோ…..ன்னு நினைச்சேன். அதுனாலதான் நான் கேட்கலை…..ஒருவாறு சமாளித்தாள்.

    அவருடைய சுவாசம் வெளிப்பட்ட சமயத்தில் அவரால் உருவாக்கப்பட்டவங்க நாங்க….என்று அவர் சொன்ன போது உடனேயே தன் இதயத்தில் நிறுத்தி கொண்டாள். இது ஏற்கனவே இயேசப்பா அனுப்பின ஏஞ்சல் சொன்ன விஷயம். என் தேவன் வாயில் இருந்து வெளிப்பட்ட சுவாசத்தில் வெளி வந்தவங்க….ன்னு சொல்லி இருக்காங்களே…..ஆனா எந்த நேரம்ன்னு மட்டும் மறைவான காரியம்ன்னு சொன்னாங்க. சோ அந்த காரியத்தில் நான் தலையிட கூடாது. ஆனா என் தேவன் ஆதியில் வானத்தையும், பூமியையும் சிருஷ்டித்த பின்பா……மனதினில் கேள்வி எட்டி பார்த்தது….அவளை அந்த அளவுக்கு யோசிக்க விடுவதற்கு முன்பே

    எங்களை தேவன் உருவாக்கின அவர் பராக்கிரமத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. வானமும், இந்த பூமியும் அவரை கொள்ள முடியாது….அந்த அளவுக்கு உன்னதமானவர் நம்ம எஜமானர்…..அந்த ஏஞ்சலின் முகத்தில் இருந்த சந்தோசம் அவளையும் சந்தோசப்படுத்தியது. அந்த ஏஞ்சலின் முகத்தில் இருந்தே தன் தேவனின் பராக்கிரமத்தை தெரிந்து கொண்டதை போல உணர்ந்தார்.

    நம்ம எஜமானர் எங்களை பேரு பேராக உருவாக்கின பிறகு, எங்களை வல்லமையா ஆளுகிற எங்க எஜமானருடைய பையனையும் நாங்க காண்பதற்கு எங்களுக்கு கிருபை பாராட்டினார். அவருடைய அழகை வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு அத்தனை சிறப்பானது. நாங்க எங்க சொந்த கண்களால் நம்ம தேவன் இந்த பூமியை உருவாக்கின சந்தோசத்தை பார்த்த அந்த நேரங்கள் என்றும் மறக்க முடியாத இனிமையான அனுபவம்….நம்ம எஜமானரால் உருவாக்கப்பட்ட அவருடைய சர்வ சேனையாகிய நாங்க அந்த சந்தோசத்தை எவ்வளவு சந்தோஷமாய் கொண்டாடினோம் தெரியுமா???? கேள்வி கேட்டு விட்டு அவளை பார்த்தது…..அவளில் இருந்த குழப்பம் தீர்ந்தது…. என் தேவன் பூமியை உருவாக்குறதுக்கு முன்பே  எல்லா ஏஞ்சல்களையும் படைச்சிட்டாங்களா!!! கேள்வியோடு அவள் யோசித்து கொண்டிருந்த போதே

    அந்த நேரம் நாங்க எங்க எஜமானரை பாடல்கள் பாடி கொண்டாடினோம்…எத்தனை ஏஞ்சல்கள் இருந்தோம் தெரியுமா??? விடியற்காலத்து நட்சத்திரங்கள் மற்றும் தேவ புத்திரர்கள் எல்லாரும் சேர்ந்து அவருடைய பராக்கிரமத்தை பாராட்டினோம்???? ஏஞ்சல் சொல்லி கொண்டிருந்த போது அவளில் இருந்த கேள்வியை கேட்டே ஆக வேண்டும் என்று அவள் மனது தூண்டியது.

    ஏஞ்சல்…நீங்க என்கிட்டே விடியற்காலத்து நட்சத்திரங்கள்ன்னு சொன்னீங்க அடுத்து தேவ புத்திரர்கள்ன்னு சொன்னீங்க….இதுல என்ன விசேஷம் அடுத்து வித்தியாசம்ன்னு சொல்லுவீங்களா???? அவள் கேட்ட போது

    நம்ம தேவன் இந்த பூமியை உருவாக்கறதுக்கு முன்னாடியே நீ பார்க்கிற இந்த வானத்தையும் அதில் தனக்கு மகிமையா அவருடைய சர்வ சேனையாகிய எங்களை படைத்தார். இந்த சர்வ சேனைகளை இரண்டு வகையா நம்ம எஜமானர் பிரித்து வைத்தார். ஒன்று விடியற் காலத்து நட்சத்திரங்கள் அடுத்து தேவ புத்திரர்கள்…..  நம்ம தேவன் தன்னுடைய பணிக்காக இந்த ரெண்டு வகைகளை பிரித்தது உண்மை. அதுல நாங்க விடியற்காலத்து நட்சத்திரமாகிய நம்ம கண்காணிப்பவர் கீழ் தான் நாங்க இருக்கிறோம்… எங்களை தவிர்த்து இன்னும் ரெண்டு சர்வ சேனைகள் கூட்டம் இருக்கு… அதுல ஒரு பிரிவினர் நம்ம தேவனால் மிகாவேல் ன்னு அழைக்க படுகிற விடியற்காலத்து நட்சத்திரம் கீழ் இருக்காங்க….அடுத்த பிரிவினர் காபிரியேல் என்கிற விடியற்காலத்து நட்சத்திரம் கீழ் இருக்காங்க….எங்களுடைய பணிகள் தான் வேறுபடுகிறதே தவிர எல்லாரும் நாங்க எங்க ஒரே எஜமானரால் உருவாக்கப்பட்டவங்க…….அவர் சொல்லி கொண்டிருந்த போது வெளிப்படுத்தின விசேஷத்தில் எழுதப்பட்ட வானத்தில் இருந்த நட்சத்திரங்களில் மூன்றில் ஒரு பங்கை சாத்தான் தன் வாலால் பூமியில் கீழே விழத் தள்ளிற்று….சொல்லப்பட்டிருக்க அந்த  நட்சத்திரங்கள் இவங்கதானா அப்ப…..மனதினில் நினைத்து கொண்டாள். அப்ப பைபிள்ல எழுதப்பட்டிருக்க நட்சத்திரங்கள்ன்னு சொல்லி இருக்கிறது அவரால் உருவாக்க பட்ட இந்த ஏஞ்சல்களா??? மனதினில் நினைத்து கொண்டிருந்தாள்.

    தேவ புத்திரர்கள்ன்னு சொல்லப்பட்டவங்க யாரு??? அவள் யோசித்து கொண்டிருந்த போது……தேவ புத்திரர்கள் ரொம்பவே விசேஷமானவங்க. அவங்க என்றும் நம்ம எஜமானரின் சந்நிதியில் அவரை துதிக்க, அவருடைய வல்லமையை வாழ்த்துகிற கூட்டத்தினர்…..எங்களை பொறுத்த வரைக்கும் அவங்க ரொம்ப பாக்கியவான்கள்…..சொல்லி கொண்ட அந்த ஏஞ்சலின் முகத்தில் ஏக்கம் தெரிந்தது.

    ஆனா இந்த விடியற்காலத்து நட்சத்திரங்கள் குறித்தாவது கேருபீன்கள்ன்னு பைபிள் மூலமா சொல்லப்பட்டிருக்கு. ஆனா இந்த தேவ புத்திரர்கள்ன்னா யாரு??? அவங்களை குறித்து ஏதாவது பைபிள்ல சொல்லப்பட்டிருக்கா???? மூளையை கசக்கி கொண்டாள். என் தேவன் பூமியை படைக்கும் போது அவர்கள் சந்தோசத்தால் கெம்பீரித்த நிகழ்ச்சியை தவிர்த்து வேற இடங்களில் ஏதாவது சொல்லப்பட்டிருக்கா???? யோசித்தாள். இந்த ஏஞ்சல்கிட்ட என்னால கேட்க முடியாதே….பைபிள்ன்னு சொல்ல ஆரம்பிச்சி அது என்னதுன்னு இந்த ஏஞ்சல் கேட்டு….என்னை பத்திய உண்மை தெரிய வருமே???? யோசித்தவளாய் அந்த எண்ணத்தை கை விட்டாள்.

    ஆனா யாரு அவங்க….அந்த ஏஞ்சல்ஸ் இவங்களை விட எந்த வகையில் விசேஷமானவங்க….மனம் கேள்வி கேட்காமல் இல்லை. அந்த நேரம் தான் அவளுக்கு ரொம்பவே மிக அருகில் அந்த காற்றை உணர்ந்தாள். சிறிது வெப்பத்தை தாங்கி வந்த தென்றல்….என்று சொன்னால் சரி வரும்….அவளுக்கு காதுக்கு மிக அருகில் அது ஏதோ வார்த்தையை உச்சரித்து கொண்டிருந்ததை அவளும் புரிந்து கொண்டாள். சேராபீன்கள்…..தெளிவாக அந்த குரலை உணர்ந்தாள். என்னது சேராபீன்களா…..முழுக்க ஆச்சரியத்தில் கத்தியே விட்டாள்.

    உனக்கு எப்படி தெரியும்??? அவங்க பேரை…..ஏஞ்சல் கேட்ட போது உண்மையில் அவளுக்கு வியப்பாக தான் இருந்தது….எந்த சாக்கு போக்கும் சொல்ல விரும்பாதவளாய் சிரிக்க மட்டும் செய்தாள்.

    அவங்களுடைய பெயர் சேராபீன்கள்ன்னும் சொல்லப்படும்….. நம்ம தேவனின் பிரசன்னத்தில் என்றும் அவர் புகழ் பாடணும்னா அது எவ்வளவு பெரிய பாக்கியம்…..மீண்டும் அது தன் ஏக்கத்தை வெளிப்படுத்திய போது இவளுக்கு ஆச்சரியம் எட்டி பார்த்தது. ஏஞ்சல்ஸ்க்கு கூட இந்த மாதிரி விருப்பங்கள் இருக்குமா என்ன …..தனக்குள் கேட்டு கொண்டாள்.

    அப்ப என்னுடைய ஏஞ்சல் எந்த வகையை சேர்ந்தவங்க….இந்த தேவ புத்திரர் வகையோடு சேருவாங்களா??? இல்லை கேருபீன்களில் மிகாவேல் என்பவரோடா இல்லை காபிரியேல் என்பவரோட…. எந்த கூட்டத்தை சேர்ந்தவரா இருப்பாங்க??? மனதினில் தேவையில்லாமல் குழப்பி கொண்டாள்.

    நம்ம எஜமானர் எங்களை தனித்தனியா பிரிவுகள் உண்டு பண்ணின பிறகு எங்களுக்குரிய வேலையை எங்களுக்கு அறிவிச்சாங்க. அதில எங்க கண்காணிப்பவருக்கு இந்த ஏதேன் தோட்டத்தை உருவாக்கி இதை பார்த்து கொள்ளுற பொறுப்பை ஒப்படைச்சார். எங்க கண்காணிப்பவர் கீழ் நாங்க எங்க எஜமானர் கொடுத்த வேலையை சந்தோசமா செய்திட்டு இருக்கோம். இதே மாதிரி தான் மிகாவேல் அடுத்து காபிரியேல் அவர்களுக்கு கொடுத்திருக்கிற வேலைகள் கூட…… என்று சொல்லி கொண்டிருந்த போது அவளில் ஆச்சரியம் மட்டும் நிரம்பி வழிந்தது.

    இந்த மாதிரி என் தேவன் தன்னுடைய  சர்வ சேனைகளையும் உருவாக்கி அவங்களுக்கு அழகான வேலைகளை வேறே கொடுத்திருக்காங்க. ஆனா எங்களுக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு…..இந்த பூமியில் மட்டும்தான் எங்களுக்கு பாடுகளும், வருத்தங்களும்….ஆனா இந்த பூமியில் இருந்து விடுதலையாகி பரலோகம் போற சமயத்தில் எங்களை ராஜாக்களும், ராணிகளும் ஆக்கி எங்களுக்கு சில பகுதிகளை கொடுத்து எங்க தேவன் எங்களை இந்த பூமியை ஆட்சி செய்யுறாரோ அதே மாதிரி எங்களை ஆளுகை செய்ய வைக்கிறாரே???? ஏன்….இவர்களுக்கும் எங்களுக்கும் எங்க தேவன் இந்த மாதிரி வேற்றுமை படுத்தியிருக்காங்க???/ மனதினில் கேட்டு கொண்டாள்.

    மீண்டும் எக்காளம் சத்தம்……. சிந்தனையில் இருந்து கலைந்தவளாய் ஏஞ்சலின் முகத்தை பார்த்தாள். அவளிடம் சொல்லுவதற்கு அவருக்கும் விசயம் இருந்ததை தெரிந்து கொண்டாள்.

    என்ன ஏஞ்சல்….ஏதாவது விசேஷமா??? கேட்ட போது முகத்தில் முழுமையான புன்னகையுடன்….நீ இது வரை எதிர்பார்த்திருந்த நம்ம எஜமானரும், அவருடைய பையனும் இன்னும் கொஞ்ச நேரத்தில் இங்க வரப் போறாங்க…...முழுமையான சந்தோசத்தோடு சொன்ன போது அந்த எஞ்சலில் இருந்த சந்தோசம் இவளிலும் தொற்றி கொண்டது.

    இப்பன்னா…..உடனே வரப் போறாங்களா ஏஞ்சல்??? அவள் கேட்ட போது

    கிட்டதட்ட அப்படித்தான்….இப்ப ஒரு எக்காளம் சத்தத்தை நீ கேட்டிருப்ப….அப்படிதான….கேட்ட போது

    ஆமாம் ஏஞ்சல்….ஆனா இந்த சத்தம் முதலில் ஒலித்த சத்தம் மாதிரி இல்லாம ரொம்பவே வேறு விதமாய் இருந்தது….இதன் அர்த்தம் என்னன்னு சொல்லுவீங்களா???? அவள் கேட்ட போது

    இது எல்லா ஏஞ்சல்களும், நம்ம எஜமானர் வருகைக்காக கொடுக்க பட்ட வேலையை செய்து முடிச்சிட்டாங்களான்னு கேட்கிறதுக்காக எங்க கண்காணிப்பவரால் எழுப்பப்படுகிற ஒலி……. இன்னும் கொஞ்ச நேரத்தில் இன்னொரு ஒலி கூட உன்னால கேட்க முடியும்?? ஏஞ்சல் சொல்லி கொண்டிருந்த போதே எக்காளம் சத்தம் கேட்க ஆரம்பித்தது….ஆனால் ஒலி அதிகமான சத்தத்தோடு….ரொம்பவே கெம்பீரமாய்….சந்தோசத்தோடு ஒலித்தது……. புரிந்து கொண்டாள்….வேலையை எல்லா ஏஞ்சலும் முடித்ததால் ஏற்பட்ட கெம்பீர சத்தம் என்று….

    கொஞ்சம் நேரத்தில் இறைக்கைகள் படப்படக்கும் சத்தம் அதிகமாகவே அவள் அருகில் கேட்டது…..இதுவும் அவளுக்கு புரிந்து போனது….

    வேலையை முடித்த சந்தோஷத்தில் எல்லா ஏஞ்சல்களும் அரண்மனையை நோக்கி வந்து கொண்டிருப்பதை……ஏஞ்சல்….எல்லா ஏஞ்சல்களும் இப்ப அரண்மனைக்கு வந்திட்டு இருக்காங்களா???? அவள் கேட்ட போது ஆச்சரியத்துடன் நீ சொன்னது உண்மைதான்…உனக்கு எப்படி தெரியும்??? கேட்ட போது

    இவ்வளவு நேரம் இங்கயே இருந்திட்டேனே…..அதுனால சில விசயங்கள், அந்த ஒலிகள் எல்லாம் எனக்கும் பழக்கப்பட்டு போச்சு…சொன்ன போது அந்த ஏஞ்சல் அவளை பார்த்து சிரித்தார்.

    உன்கிட்ட நான் கேட்கணும்னு நினைச்சேன்….. உன்கிட்ட எங்க கண்காணிப்பவர் பேசிட்டு இருக்கும் போது, உன்னை பத்தி கேட்டப்ப நீ அமைதியான….சரிதான…..நீ பதில் சொல்லாத கோபத்தில் ஒரு ஏஞ்சல் தன் பட்டயத்தால் உன்னை தாக்க வந்திச்சே….. நீ கொஞ்சம் கூட பயப்படவே இல்லை…. என்று கேட்ட போது

    உண்மையில் அவளுக்கு சொல்ல தோணின காரியம்….உங்களுக்கு தெரியாது ஏஞ்சல்….அந்த நேரத்தில் ரொம்பவே மிரண்டு போயிட்டேன்…..சொல்ல நினைத்த அவள் வார்த்தைகள் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாமல்

    நீங்கதான சொன்னீங்க ஏஞ்சல்….நம்ம எஜமானரை சுவாசத்தை பெற்ற நான் பயப்பட கூடாதுன்னு….அதுனால நான் பயப்படலை…அவள் சொன்ன போது

    ஆனா இது நான் உன்கிட்ட பேசும் போது சொன்னது….அதுக்கு முன்னாடியே நீ ரொம்ப தைரியமா இருந்த…..அது எப்படி??? அவர் கேட்ட போது

    என்னமோ தோணுச்சு….நான் பயப்படுறது என் எஜமானருக்கு.பிடிக்காத காரியம்ன்னு…அவள் சொன்ன போது அந்த ஏஞ்சல் முகம் சுருக்குவதை அவளும் உணர்ந்தாள்.

    இந்த மாதிரி தேவையில்லாம பயப்படுறதை விட நீ யாருங்கிற உண்மையை எங்க கண்காணிப்பவர்கிட்ட நீ சொல்லியிருலாமே???? அந்த ஏஞ்சல் கேட்ட போது முதன் முதலில் புதிதாக நோக்கினாள் அவள்….

    ஏன் இந்த ஏஞ்சல் தீடீர்னு இப்படி பேசுறது…அவள் தனக்குள் யோசித்து கொண்டிருந்த போது….நீ தேவையில்லாம காயம் அடைஞ்சிருப்பியே…..அதுனாலத்தான் சொன்னேன்…வேற ஒண்ணும் இல்லை….அந்த ஏஞ்சல் சொன்ன போதே அவளுக்கு புரிந்து விட்டது….ஏதோ ஒரு காரியத்தை இந்த ஏஞ்சல் என்னிடம் இருந்து மறைத்து வைக்கிறது என்று…..

    இயேசப்பா ப்ளீஸ்…..என் வாய்க்கு காவல் வையும்….என் உதடுகளின் வாசலை காத்துக் கொள்ளும்….தன் தேவனிடம் வேண்டினாள்.

    எந்த வகையில் இருந்து இந்த பெண்ணிடம் அவளை குறித்த காரியங்களை வாங்குவது……யோசிக்க ஆரம்பித்து ஏஞ்சல்…..

    உண்மையில் அது அவளை பாதுகாக்க வந்த ஏஞ்சல் அல்ல அவளை பற்றி தெரிந்து கொள்ள கண்காணிப்பவர் வேவு பார்க்க அனுப்பின ஏஞ்சல்….என்று எப்பொழுது தெரிந்து கொள்வாள்…….அவள்

    Related Post

    Categories: பைபிள் சம்பவங்கள்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    five − = 3

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>