-
பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 44
இத்தனை பெரிய இக்கட்டில் மாட்டி விடுற அளவுக்கு நான் என்ன தப்பு பண்ணினேன் இயேசப்பா…..மீண்டும் புலம்ப ஆரம்பித்தாள். தேவன் தன்னுடைய பிள்ளைகள் தன்னோடு வழக்காடும்படி பரமானதொன்றையும் சுமத்த ,மாட்டார் என்கிற வசனம் அவளுக்கு அந்த நேரம் காற்றில் பறந்து போனதுதான் துரதிர்ஷ்டம்.
ஏன் நீ அழுதிட்டே இருக்க…… நீ செய்யுற காரியம் உன் எஜமானருக்கு பிடித்தமானதுன்னு நம்புறியா…..அந்த ஏஞ்சல் கேட்ட போது பதில் சொல்லாமல் அமைதியானாள்.
உனக்கே தெரியும். நம்ம தேவன் ரொம்பவே அன்பு நிறைந்தவர். அவர்கிட்ட இதே மாதிரி துக்கங்களோ, துயரங்களோ, வேதனையோ நாங்க பார்த்ததே இல்லை. அப்படி இருக்கும் போது அவருடைய சுவாசத்தை பெற்றுக் கொண்ட உன்னால மட்டுமே அந்த மாதிரி விசயங்களை வெளியே காண்பிக்க முடியுது…..கேட்ட போது பதில் சொல்ல முடியாமல் அந்த ஏஞ்சலின் முகத்தை பார்த்தாள்.
உண்மைதான….இந்த நிமிஷம் வரை என்னை தன்னுடைய கண்மணி போல பாதுகாத்து வந்தது மட்டுமில்ல, இப்பவும் என்ன பிரச்சனை வந்தாலும் என்னை பார்த்து கொள்றதுக்காக இலட்சணக்கான ஏஞ்சல்களை என்னுடைய பாதுகாப்புக்காக அவர் அனுப்பி இருக்கும் போது, நான் இந்த மாதிரி அழுறது அவர் அன்பை நான் சந்தேகப்படுகிறதுக்கு சமானம் ஆச்சே…..தன்னையே திட்டி கொண்டாள் அவள்.
அப்பொழுதான் தன்னை இப்போதும் தொட்டு கொண்டிருக்கும் அந்த மெல்லிய காற்றை உணர்ந்தாள். இதை எப்படி கவனிக்காம போனேன்……மனதினில் நினைத்தவளாய் சாரி பிரெண்ட்…..நான் என்னுடைய பயத்தில் நீங்க என் பக்கத்தில் இருக்கிறதை கூட உணர முடியாம போயிட்டேனே…..ப்ளீஸ் என்னை மன்னிச்சிருங்க…..தன் தேவனிடம் மன்னிப்புக்காக கெஞ்சி நின்றாள். அந்த மெல்லிய காற்றின் ஸ்பரிசம் அவளை இன்னும் தொட்டு கொண்டிருந்தது. கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் வடிந்து கொண்டே இருந்தது.
சாரி…..சாரி….மனதினில் சொல்லி கொண்டே இருந்தாள். நம்முடைய சின்ன அவிசுவாசம் கூட நம் தேவனை நாம உணர முடியாத அளவுக்கு எத்தனை பெரிய பலவீனத்தை நமக்கு கொடுக்குது. அதோட அவர் அன்பை வேற வேதனைப்படுத்துகிறது. அவள் யோசித்து கொண்டிருந்த அந்த நேரம் ஒரு ஏஞ்சல் எக்காளம் ஊதவும் மனதினில் சிரித்தவளாய் என் பிதாப்பாவும், இயேசப்பாவும் வந்துட்டங்களா…..அவள் சந்தோசத்தோடு தன் பக்கம் இருந்த ஏஞ்சலை நோக்கினாள்.
அவள் முக மாற்றத்தை கண்டு கொண்ட அந்த ஏஞ்சல்….முகத்தில சந்தோசமே இருக்கு…கேட்கவும்
நீங்கதான சொன்னீங்க ஏஞ்சல். நம்ம எஜமானரை சுவாசத்தை பெற்று இருக்கிற நாங்க என்றும் கலக்கம் அடையுரதுல அவர் பிரியமா இருக்க மாட்டாங்கன்னு…..அதுனால என்னால ரொம்ப முடியாட்டியும்….அட்லீஸ்ட் கொஞ்சமனாசும் நான் என்னுடைய எஜமானரை சந்தோசப்படுத்த ஆசைபடுறேன்….அவள் சொன்ன போது
பரவாயில்லையே. உன் எஜமானரை பிரியப்படுத்த முயற்சிக்கிறதில நீயும் எங்க கண்காணிப்பவர் மாதிரி யோசிக்கிறியே….அவளை மெச்சி கொண்டது.
இப்ப ஏன் இந்த எக்காளம் சத்தம்ன்னு தெரிந்து கொள்ளலாமா??? அவள் கேட்ட போது
இது எங்களுக்குரிய விசேஷமான ஒலி. வேலையில் நாங்க களைப்பா இருக்கும் போது எங்க கண்காணிப்பவரால் ஒலிக்க படுகிற எங்களை எங்க வேலையில் அதிக மகிழ்ச்சியோடு செய்ய ஊக்கப்படுத்துற உற்சாக ஒலி. இதை கேட்டதும் எல்லா ஏஞ்சல்களும் சந்தோசமா தங்கள் வேலையை குறித்து தங்களுக்கு பக்கத்தில் இருக்கிற தன்னுடைய நண்பர்களுக்கு சொல்லி….இது எங்க எஜமானரால் எங்களுக்கு கிடைத்த கிருபைன்னு சொல்லி கொள்ளுவாங்க…. இப்ப அந்த விஷேச சத்தத்தை உன்னாலயும் கேட்க முடியும்….அந்த ஏஞ்சல் சொல்லி கொண்டிருந்த போதே…..
பாடல் இசை போன்று ஒரு சத்தத்தை அவளால் கேட்க முடிந்தது. மிக இனிமையான இசை……காதுக்கு விருந்தாக அமைந்தது.
நானும் அதை நேரா பார்க்க நினைக்கிறேன்….பார்க்க முடியுமா…..அவள் கேட்ட போது
உன்னுடைய விருப்பத்தை நிறைவேற்ற எங்க கண்காணிப்பவர் ஏற்கனவே சொல்லி இருக்காங்க….அதுனால கண்டிப்பா நாம பார்க்கலாம்…..அந்த ஏஞ்சல் சொன்ன போது சந்தோசத்தில் துள்ளி குதிக்க நினைத்தாள்.
அந்த ஏஞ்சல் அவளை தூக்கி கொண்டு பறக்க ஆரம்பித்தது. அந்த அரண்மனையின் மேல் அலங்கத்தில் அந்த ஏஞ்சல் அவளை நிப்பாட்டின போதும் கூட அவளால் அந்த இசையை கேட்க முடிந்தது. காதுகளுக்கு ரொம்பவே இதமாக, இனிமையான இசையில் அவர்கள் பாடின பாடல் போன்ற தேவனை உயர்த்தின துதி கண்களுக்கு மட்டும் அல்லாமல் உடலையே உருக்குவது போல அவளுக்கு தோன்றியது. அவர்கள் என்ன பேசி கொண்டு தங்கள் எஜமானரை உயர்த்துவார்கள் என்பதை அவளால் புரிந்து கொள்ள முடிய வில்லை என்றாலும்….அவளுக்கு புரிந்த வரை அந்த இசையும், அதோடு சேர்ந்த ஒவ்வொரு ஏஞ்சலும் தன் துதியை செலுத்தின நேரம்….முழு இருதயத்தில் இருந்து புறப்பட்ட நன்றிகள் மட்டும் அவளால் தெரிந்து கொள்ள முடிந்தது.
அவர்கள் தங்கள் தலையை முழுமையாக தாழ்த்தி தனது எஜமானரை உயர்த்தின அந்த காட்சி அவள் இருதயத்தை என்னமோ செய்தது. உண்மையில் எங்க தேவன் எங்ககிட்ட எதிர்பார்க்கிற நன்றிகள் சொல்லுற விதமும் கூட இதுதானா…..அவள் மனதினில் நினைத்து கொண்டாள்.
ஆனா நான் இப்படி செய்யுறதில்லையே. பாதி நாள் என் தேவனை என்னுடைய அம்மா, அப்பா புகழ்ந்து பாடிட்டு இருக்கும் போது, எப்படா முடியும்….முடியலை….மனசில சொல்லி இருக்கேனே….ஆனா இவங்க தன்னை படைத்த தன் எஜமானரை எந்த அளவுக்கு உண்மையா துதிக்கிறாங்க…..அவள் கண்களில் கண்ணீர் எட்டி பார்த்தது.
அவள் பார்த்து கொண்டு இருக்கும் போதே எல்லா ஏஞ்சல்களும் தங்களை இறக்கைகளை உயர்த்தி சந்தோஷமாய் ஆர்பரித்தனர். மீண்டும் அவரவர் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டனர். அவர்கள் ரொம்பவே சந்தோஷமாய் இருப்பதை அவர்கள் முகமே காட்டி கொடுக்க ஆரம்பித்தது.
இதை மாதிரியே பூமியில் இருக்கிற நாங்க கூட எங்க தேவனை எங்க முழு இருதயத்தோடு துதித்து அவர் கொடுக்கிற அந்த சந்தோசத்தினால் வாழ்ந்தா எவ்வளவு நல்லா இருக்கும்???மனதில் கேட்டுக் கொண்டாள்.
நாம இப்ப போகலாமா….அவள் பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஏஞ்சல் கேட்ட போது சரி என்பது போல தலை அசைத்தாள்.
எப்ப இயேசப்பா வருவாங்க……அவள் மனம் கேட்க ஆரம்பித்து விட்டது.
அந்த தேடல் நேரத்திலும் அவளுக்கு இயேசுவின் இரண்டாவது வருகையை குறித்த உண்மை ஏதோ இந்த காரியம் சொல்லி கொடுத்ததைபோல உணர்ந்தாள். ஆனா இந்த ஏஞ்சல்கள் நம்ம தேவனை உயர்த்தினதற்கும் என் இயேசப்பா இரண்டாவது முறை எல்லா மக்களும் பார்க்கும் படி வரப் போவதற்கும் அப்படி என்ன சம்பந்தம் வந்திர போகுது….. தனக்குள் கேட்டு கொண்டாள்.
எனக்கு கொஞ்சம் சொல்ல முடியுமா….நம்ம எஜமானர் வரும் போது….என்ன மாதிரி ஆயத்தங்கள் செய்வீங்கன்னு சொல்லுவீங்களா ப்ளீஸ்…..அவள் கேட்ட போது
அந்த ஏஞ்சல் அவளை பார்த்து சிரித்து கொண்டே ஏன் அந்த விசயத்தை தெரிந்து கொள்ள நீ விருப்பப்படுற??? கேட்ட போது
நீங்க நம்ம எஜமானர் வரும் போது அவரை வரவேற்க உங்களை எத்தனையோ முறையில் தகுதிப்படுத்தி கொள்ளுறீங்க…..கொஞ்சம் கூட ரெஸ்ட் எடுக்காம…..எல்லா ஏஞ்சல்களும் தங்களுடைய வேலையை ரொம்பவே சந்தோசமா செய்யுறாங்க. ஆனா நான் மட்டும் பாருங்க. சும்மாவே இருக்கிற மாதிரி தோணுதே….அவள் கேட்ட போது
ஆனால எங்களால மட்டுமே செய்ய முடியுற வேலையே….இதை எல்லாம் சின்ன பெண்ணாகிய உன்னால செய்ய முடியாது…..அந்த ஏஞ்சல் கேள்வியோடு சொன்ன போது
என்னால நீங்க செய்யுற காரியத்தை செய்ய முடியா விட்டாலும் உங்களுடைய இந்த ஆர்வம், அதாவது நம்ம எஜமானரை பார்க்க நினைக்கிற இந்த ஆர்வம் எனக்கு ரொம்பவே ஆச்சரியமா இருக்கு. அதுனால நம்ம எஜமானர் வரும் போது என்னென்ன ஆயத்தங்கள் நீங்க கொள்ளுவீங்கன்னு உங்க மூலமா நான் தெரிந்து கொள்ளுறேனே…..அவள் கேட்ட போது உன்னிப்பாக அவள் முகத்தை அந்த ஏஞ்சல் பார்த்தார்.
உனக்கு ஒரு உண்மை தெரியுமா….இது உன்னுடைய சுய முயற்சியில் முடியாத காரியம்….ஏஞ்சல் சொன்ன போது
உதட்டை பிதுக்கினவளாய் நீங்க முதலில் சொல்லுங்க ஏஞ்சல்…அடுத்து என்னால முடியுமா இல்லை முடியாதான்னு பிறகு பார்ப்போமே….அவள் சிரித்து கொண்டே கேட்ட போது
சரி சொல்லுறேன்…. உன்னால உன் எஜமானரை முழு இருதயத்தோடு துதிக்க முடியுமா….அதாவது அவர் உனக்கு செய்யுற நன்மைகளுக்கு நன்றி சொல்ல முடியுமா……ஏஞ்சல் கேட்ட போது நல்ல கேள்வி….மனதினில் கேட்டுக் கொண்டாள்.
என்னால கண்டிப்பா முடியாதே….அப்ப கூட என் தேவனை இவங்க போற்றுற விதத்தை பார்த்து நான் ஆச்சரியப்பட்டேனே….. தனக்குள் சொல்லி கொண்டாள்.
என்ன பதில் சொல்லலை. உன்னால முடியாதா…..அந்த ஏஞ்சல் கேட்ட போது வேறு வழியின்றி உண்மையை ஒத்துக் கொண்டாள்.
உண்மையை சொல்லுறேன். நீங்க நம்ம எஜமானரை துதித்த அந்த நொடிகள் இன்னும் என் கண்ணுக்கு முன்னால நிக்குது. சாரி….என்னால அந்த அளவுக்கு கண்டிப்பா முடியாது….அவள் சொன்ன போது சிரித்தார்.
சரி அடுத்த காரியம்….உன்னால நம்ம எஜமானர் எப்பவும் உன்னை பார்த்து புகழும் வண்ணம் நடந்து கொள்ள முடியுமா…..அடுத்த கேள்வியை கேட்ட போது உண்மையில் மயக்கம் தான் வந்தது அவளுக்கு.
சாரி இயேசப்பா….இந்த மாதிரி கஷ்டமான காரியங்களையா இவங்க செய்யுறாங்க….உண்மையில் இவங்க ரொம்ப கிரேட்…..மனதினில் தன் தேவனிடம் சொல்லி கொண்டாள்.
என்ன பதில் சொல்லவே இல்லை….அந்த ஏஞ்சல் கேட்ட போது
சாரி ஏஞ்சல்…நான் என் தோல்வியை ஒத்துக்குறேன்….உங்களை மாதிரி நம்ம எஜமானரை என்னால துதிக்க வும் முடியாது…ரெண்டாவது என்னால அவரை என்றும் பிரியபடுத்தும் வகையில் நடந்து கொள்ளவும் முடியாது….அவள் சொல்ல போது
உண்மையில் இதுதான் பெண்ணே….நாங்க எங்க எஜமானர் வருகைக்கு எங்களை ஆயத்தப்படுத்துற ரெண்டு காரியங்கள்…..அவர் சொன்ன போது உண்மையில் மலைப்பாக தெரிந்தது அவளுக்கு.
என் எஜமானர் வருகைக்கு இவங்க சொல்லுற ரெண்டு காரியங்களும் கண்டிப்பா என்கிட்டே இல்லைன்னு மட்டும் எனக்கு தெரியுது. அப்ப என் இயேசப்பா தன் ரகசிய வருகையில் ஆயத்தமா இருக்கிறவங்களை மட்டும்தான தன்னோடு அழைச்சிட்டு போவாங்க….அப்ப என் நிலைமை அதோ கதிதானா????உள்ளுக்குள் அழுதாள்.
ஆனா இவங்களால் மட்டும் எப்படி இந்த ஆயத்தத்தை மேற்கொள்ள முடிந்தது….நாக்கு நுனி வரை அவளுக்கு விசயத்தை தெரிந்து கொள்ள ஆர்வம் வந்து விட்டது….ஆனா என்றும் தேவ பிரசன்னத்தில் வாழுற இவங்ககிட்ட போய் இதை பத்தி எப்படி தெரிந்து கொள்ள முடியும்….மனதினில் நினைத்து கொண்டாள்.
இவங்க முதலில் மனுசங்க கிடையாது. எங்களை மாதிரி உடல் பலவீனங்கள் கண்டிப்பா இருக்காது. அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, பிரெண்ட்ஸ்….அப்படின்னு எந்த உறவுகள் கூட்டமும் கிடையாது. அதே மாதிரி எங்களை மாதிரி இன்னிக்கி இந்த டெஸ்ட், நாளைக்கி இன்னொரு டெஸ்ட்ன்னு எந்த குழப்பமும் கிடையாது….அடுத்து ரொம்ப முக்கியம் சாத்தானால எந்த பிரச்சனையும் கிடையாது. ஆனா நாங்க அப்படியா….எல்லா உறவுகளாலும் கட்டப்பட்ட எல்லா உணர்ச்சிகளின் மத்தியில் வாழுற பாசத்துக்கு ஏங்குற அடிமைகள் நாங்க. இதுல எப்படி நாங்க இதை எல்லாம் மறந்துட்டு எங்க தேவனை முழு இருதயத்தோடு துதிக்க??? அடுத்து எங்க தேவனை என்றும் பிரியப்படுத்தற வேலையா…..கண்டிப்பா சாரி…. ஒவ்வொரு நாளும் நாங்க எங்க முகத்தை கண்ணாடியில் பார்த்து கொள்ளுறது கிடையவே கிடையாது. ஏன்னா அடுத்தவங்க எங்களை பார்த்து என்ன பிரதிபலிப்பு பண்ணுறாங்களோ அதை பார்த்து தான் ஓ….நான் இப்படி தான் என் வாழ்கையில் இருக்கேனா….அப்படின்னு தெரிந்து கொள்ளுற வெறும் ஊமை ஜனங்கள் நாங்க….சாரி ஏஞ்சல் உங்களால் இதை எல்லாம் புரிந்து கொள்ள முடியாது.
உங்களுக்கு தெரிந்தது எல்லாம் இந்த ஏதேன் தோட்டம்….உங்க கண்காணிப்பவர்…நம்ம எஜமானர்….அடுத்து உங்களுடைய வேலை…..உங்களுக்கும் ரோபோட்க்கும் என்ன வித்தியாசம் வந்திர போகுது….ஆனா நாங்க எல்லாம் அப்படி கிடையாது…எங்களுக்கு உணர்ச்சிகள் உண்டு. அந்த பலவீனங்களை எல்லாம் எங்க இயேசப்பா எங்களுக்காக சிலுவையில் ஏற்றுக் கொண்டாலும், அந்த சத்தியத்தை எல்லாம் தெரிந்து கொண்டாலும், அவர் எங்களில் கிரியை செய்ய கொஞ்சம் கூட இடம் கொடுக்காம இயேசப்பா….உங்களுக்கு இந்த காரியத்தை பத்தி ஒண்ணும் தெரியாது. அதுனால நீங்க கொஞ்சம் என் இருதயத்தில் ஓரமா உட்காருங்க….என் மேல கோபமா இருக்கிற என் பிரெண்டை எப்படி சமாதானப்படுத்துறேன்னு பார்த்து நீங்களும் தெரிந்து கொள்ளுங்க, சரியா…..அப்படின்னு எங்க இயேசப்பாக்கே அட்வைஸ் சொல்லிட்டி எங்க வேலையை பார்க்கிற எங்களுக்கு எப்படி அவரை பிரியப்படுத்த என்ன நினைக்கிறதுகே நேரம் இல்லை…ஏன்னா நாங்க ரொம்ப பிஸி….தன் மனதினில் சொல்லி கொண்டாள்.
தன் நிலையை நினைத்த போதே அவளுக்கு வெட்கமாய் இருந்தது. உண்மையில் இந்த பூமி காரியங்களை பத்தி நான் யோசித்திட்டே இருக்கேனே….ஆனா ஒரு நாள் இதுல இருந்து விடுபட வேண்டிய கட்டாயம் இருக்கே….அப்ப என் உறவுகளை நோக்கி ஓடின கால்களை எந்த வகையில் என் தேவனை நோக்கி திருப்ப முடியும்….அடுத்தவங்க என் சொல்லுறாங்க…… இந்த உலகத்தில் அப்படி என்னதான் நடந்திட்டிருக்குன்னு எப்பவுமே திறந்து வைச்சிருக்கிற காதுகளை எப்படி தீடீர்ன்னு என் தேவனுடைய வார்த்தைகளை நோக்க வைக்க முடியும்….அடுத்து இந்த கண் இருக்கு பாருங்க….அது எப்பவும் ஒரு இடத்தில் பார்க்காது….சுத்தி சுத்தி….ஏற்கனவே நான் சொன்னேனே….அடுத்தவங்களை பார்த்துதான் நாங்க எங்களையே தெரிந்து கொள்ளுறோம்னா பாருங்க….ஆனா தீடீர்னு இதை எல்லாம் எப்படிங்க கடிவாளம் போட்டு அடக்க முடியும்….இந்த பூமியில் என் தேவன் கொடுத்த நாட்களிலேயே இதை அடக்காம அவர் வரும் சத்தம் கேட்ட அந்த நொடி ஏதாவது செய்து மாற்ற முடியுமா என்ன……தன்னை பற்றி நினைத்த போது ஒரு புறம் அவளில் பயம் வந்தது உண்மை. அதை மறக்க ஏஞ்சலை பார்த்து சிரித்தாள்.
அவளுடைய சிரிப்பிற்கு பதிலாக அந்த ஏஞ்சலும் சிரித்தார். உன்னால கண்டிப்பா முடியாது என்பது நம்ம எஜமானருக்கும் கூட தெரிந்த விசயம்தான்….. ஏன் எங்களுக்கும் கூட சில நேரங்களில் இந்த கீழ்படிதலில் குழப்பங்கள் வரும் போது….நாங்க செய்ய வேண்டிய காரியம்னு எங்க கண்காணிப்பவர் ஏற்கனவே ஒரு இரகசியத்தை சொல்லி கொடுத்திருக்காங்க….அதை நாங்க செய்த உடனே எங்களுடைய குழப்பங்கள் மாறி போய் மீண்டும் எங்க எஜமானர் சத்தத்தை கேட்க ஆரம்பிச்சிருவோம்….அந்த ஏஞ்சல் சொன்ன போது அவள் மேலேயே அவளுக்கு கோபம் வந்தது. இவங்களை போய் நான் ரோபோட்ன்னு சொல்லிட்டேனே….தன்னையே திட்டி கொண்டாள்.
அது என்ன ரகசியம்……என்று கேட்க அவள் மனதினிலும் கேள்வி எட்டி பார்த்தது. ஆனா கேட்கலாமா….மறு புறம் அவள் யோசிக்க ஆரம்பித்தாள்.
ஆனா சாரி பெண்ணே….இது எங்களுக்குள்ள இருக்கிற ரகசியம்…அதை மத்தவங்களுக்கு எங்களால் சொல்ல முடியாது…என்று அந்த ஏஞ்சல் சொன்ன போது அவளுக்கு உஷ்…என்று தோணியது.
ஓகே….நம்ம ஏஞ்சல் வரும் போது கேட்டு கொள்ளலாம்….அது என்னன்னு தெரிந்து கொள்ள முடியலைன்னாலும் கண்டிப்பா ரொம்பவே ஆர்வத்தை தூண்டுற காரியமா இருக்கும் போல…..தன் மனதினில் சொல்லி கொண்டாள் அவள்.
அது என்னவா இருக்கும்….மனம் ஆராய்ச்சி செய்ய நினைத்தாலும் தன் மனதை கடிவாளம் போட்டு கட்டி வைப்பது போல அடக்கி வைத்தாள்.
Bible Incidents (for kids) – 43 ஆத்துமா நஷ்டமானால் லாபம் என்ன?
பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 44
Daily Bible Verse
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
« Feb | ||||||
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
Newsletter
Categories
Archives