• பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 18

    அத்தனை இருட்டிலும் கந்தக தீயினால் அந்த குகை ஜொலிக்க தான் செய்தது. அப்படி என்னதான் இருக்கு…….என்று குகையை சுற்றிலும் நோட்டம் விட்டவள், அதில் ஒரு மனிதனுடைய ஈனமான குரல் மட்டும் கேட்டுக் கொண்டே இருந்தது. யார் அது…..இன்னும் யார் இங்க இருக்காங்கன்னு பார்க்க முடியலை…..அதிகமாகவே அவள் தேடல் இருந்தது.

    மனதினுள் தைரியத்தை வைத்து கொண்டு குகையின் நுழை வாயிலேயே நின்று கொண்டிருந்தவள் இப்போதுதான் உள்ளே நுழைந்து தீவிரமாகவே அலசி ஆராய்ந்தாள். ஒரு நிமிடம் குகையின் வெளி புறத்தையும் பார்த்து கொண்டாள். ஏதாவது பூதம் வருகிறதா…….கண்கள் வெளிப்பக்கமும் இருந்தது.

    குகையின் உள்ளே நுழைந்தவளுக்கு கந்தக தீயின் தாக்கம் வேதனையை கொடுத்தது. இவ்வளவு சூடா இருக்குமா என்ன……. வெளியே நிற்கிற எனக்கே இத்தனை கஷ்டம்னா உள்ளே வெந்திட்டு இருக்கிறவருக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும். அதுனாலதான் முணங்கி இருப்பாரோ ……எனக்கு கூட இந்த வேதனை நியமிக்க பட்டிருக்கே…..மனதினில் நினைத்தவள் அதற்கு மேல் யோசிக்காமல் சரி…இதை இதற்கு மேல் பார்த்தா இப்பவே feel பண்ண வேண்டியதா போயிரும். வேண்டாம், இங்க நிற்க வேண்டாம். எண்ணத்துடன் வெளியே கிளம்ப நினைத்த போதுதான் அந்த அலறலை கேட்டாள் அவள்.

    தேவனே……என்னை ஏன் மறந்துட்டீங்க……ஏன்……மீண்டும் கதறல் சத்தம்…..உள்ளே நிற்கிறவர் கதற கதற அந்த கந்தக தீயின் உயரம் அதிகரித்து கொண்டே இருந்தது. கந்தக தீ அவர் மேல் படவும் மீண்டும் கதறல். ஏன் இந்த சாத்தானுக்கு மனுசங்க மேல இத்தனை வன்மம்…….. இவ்வளவு கஷ்டப்படுத்தி பார்க்கணுமா என்ன…… மனதினில் நினைத்தவள் இனிமேலும் நின்னா சரி வராது……மனிதினில் ப்ளீஸ் இயேசப்பா, இதற்கு மேல் இதை நான் பார்க்க விரும்பலை. ஆனா ஒண்ணு மட்டும் தெரியுது. இப்ப உள்ளே எரிகிற மனிதனுக்கு உங்களை தெரிந்திருக்கும் போல…..

    என்னுடைய இயேசப்பா பிள்ளைகள் கூட அஜாக்கிரதையினால் இங்க வராங்களே…..புலம்பி கொண்டே நின்றாள். நீ கூட அப்படிப்பட்டவள் தானே….மனம் மறுபுறம் அவளை குத்தியது. வலியை மறைத்தவாறு அங்கிருந்து வெளியேற நினைத்தாலும் ஏதோ ஒரு ஆர்வமோ, அவளுக்கு புரியாத உணர்வு இந்த தீயால் யாருதான் கஷ்டப்படுறாங்கன்னு நின்னு பார்த்திருலாமே.

    சிறிது காத்திருந்தாள். தீ சிறு சிறிதாக கம்மியாக ஆரம்பித்தது. முகத்தை பார்த்திரலாம் போல…..ஆர்வத்தோடு எட்டி பார்த்தவளுக்கு முகம் அதிர்ச்சியால் உறைந்து போனது. அங்கு நின்றது ஒரு மனிதனே என்று சொல்ல முடியாத நிலையில் இருந்தது. அவள் முன்பு ஒரு எலும்பு கூடுதான் நின்றது.

    எலும்பு கூடா…..ஒரு மனுஷன் செத்த பிறகுதான இப்படி ஆவாங்க. அப்ப இங்க தீக்குள்ள எறிந்திட்டு இருக்கிறது எல்லாம் கல்லறையில புதைத்து வைத்தவங்களை, எலும்பு கூடா ஆன பிறகுதான் இந்த சாத்தான் அங்க தூக்கிட்டு வந்துருவானோ…..நினைத்து கொண்டிருக்கும் போதே, அந்த மனிதன் மேல் சதை படர ஆரம்பித்தது. பார்க்கவே அருவருப்பாக தோன்றியது அவளுக்கு. கண்களை மூடி கொண்டாள். ஆனால் அந்த மனிதனின் முனகல் சத்தத்தை கேட்க முடிந்தது. உடம்பின் ஒவ்வொரு பகுதியாக சதை வளர்ந்து கொண்டிருந்தது. ஏதோ ஒரு குழந்தைக்கு அவங்க அம்மா வயிற்றில் இருக்கும் போது தோல், சதை வளர்ற மாதிரியே இதுவும் அவளுக்கு தெரிந்தது.

    அந்த மனிதனின் உடம்பு முழுவதும் சதை தோலால் மூடி இருந்தது. ஆனா ஏன் இவங்க உடம்பு என்னுடைய உடம்பு மாதிரி இல்லை. செத்த பிறகு உடம்பெல்லாம் அழுகி போயிருக்குமே, ஏன் அதே மாதிரியே இருக்கு…..அப்ப எல்லா இடத்திலும் மனிதங்க எலும்பு கூடா வேகலையா…. அவங்களுக்கு கிடைச்சிருக்கிற இந்த அழுகி போன சதையில தான் தீ வேதனையை தாங்குறாங்களா….

    இயேசப்பா இதை பார்க்கவே இவ்வளவு கொடூரமா இருக்கே….அப்ப இதுல வேகும் போது எவ்வளவு கஷ்டமா இருக்கும்…….நான் என்ன செய்ய போறேனோ….எனக்கு கூட நான் பார்த்திட்டிருக்கிற அழகான உடம்பு அழுகி போய், இந்த தீயில் வெந்து, அடுத்து ஏதோ புழு வேற வருமாம்…..எப்படி வேதனையை தாங்க போறேன்னு தெரியலை இயேசப்பா…..ஆனா இப்ப தோணுது…..இந்த மாதிரி எனக்கு வரும்னு தெரிந்திருந்தா நான் அந்த தப்பே செய்திருக்க மாட்டேன்பா…..நான் உங்களை கஷ்டப்படுத்திட்டேன்……..கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.

    அந்த மனிதன் திரும்பவும் முனக ஆரம்பித்தான். பைபிள்ல கூட இயேசப்பா எழுதியிருக்காங்களே…….அங்கே அழுகையும், பற்கடிப்பும் இருக்கும்…. உண்மைதான் இயேசப்பா இந்த மனிதன் தன்னுடைய வலியை தாங்க முடியாம பல்லை கடிக்கிறதை என்னால் இப்ப பார்க்க முடியுது. அந்த மனிதன் புலம்ப ஆரம்பித்தான்.

    தேவனே……நான் உங்களை கஷ்டப்படுதிட்டேனே…….கதற ஆரம்பித்தான். இந்த மனுசன் அழுதிட்டே இருக்கார். ஆனா என்ன தப்புக்காக இங்க வந்தார்ன்னு தெரியலையே…..மனதினுள் நினைத்து கொண்டிருந்தவள்…..உங்களுக்காக நான் சர்ச்செல்லாம் கட்டினேனே…..அட்லீஸ்ட் அதற்காகனாச்சும் என் மேல கிருபை பாராட்டுங்க. சொல்லி விட்டு மீண்டும் விம்மி அழுதான்.

    தான் நின்று கொண்டிருந்ததை அவன் பார்த்தானா……சந்தேகத்தோடு பார்த்தாள். அவன் தன்னை நினைத்துதான் கதறி கொண்டு நின்றான். சப்போஸ் அவர் ரொம்ப துக்கத்தில இருக்கிறதினால என்னை பார்த்திருக்க மாட்டார்…….ஏதோ ஒரு சத்தத்தை அவளும் உணர்ந்தாள். அச்சோ…..யாரோ வர்றாங்க…..மனம் சொன்னவுடன் எங்கே ஒளியலாம்…..நான் இங்க இருக்கிறது மட்டும் தெரிந்தா…..நினைக்கும் போதே அவளுக்கு தலை சுற்றியது……

    எங்க…..எங்க போய் ஒளிய…….அதிக பரபரப்புடன் இடத்தை தேடி பார்த்தாள். அந்த குகையில் அவளுக்கு தெரிந்த வகையில் ஏதோ ஒன்றைத்தான் கண்டுபிடித்தாள். குகையின் மறு பக்கத்தில் ஒரு ஆள் உள்ளே போகும் அளவுக்கு ஓட்டையை பார்த்தாள். ஆனா இதுல என் முழு உடம்பையும் மறைக்க முடியுமா…..கலக்கத்தை உணர்ந்தாள். காலடி சத்தம் பக்கத்தில் கேட்க ஆரம்பித்து விட்டது. ஓடி அந்த ஓட்டையில் தன்னை மறைத்து கொண்டாள். அவள் பாதி உடம்பு வெளியே தான் தெரிந்து கொண்டிருந்தது. உள்ளே இழுக்க முயற்சி செய்தும் பலன் இல்லை.

    இன்னைக்கி நான் செத்தேன்……வாயில் இருந்து வார்த்தைகள் வந்து கொண்டிருந்த நேரம் பார்க்கவே பயங்கரமாய் இருந்த இரண்டு பூதங்கள் தெரிந்தது. அவள் ஏற்கனவே பார்த்த பூதங்களை விட அதிக உயரம். நான் சின்ன பொண்ணா இருந்ததால்தான் சின்ன பூதமா……யோசித்து கொண்டாள்.

    அந்த மனிதனின் முன்பு நின்ற இரண்டு பூதங்களும் அவனை பார்த்து இளக்காரமாக சிரிக்க ஆரம்பித்தது. சிறிது நேரம் சிரித்த பிறகுதான் அமைதியாயின. ஏன்…..இந்த பூதங்களுக்கு இத்தனை இளக்காரம்…..மனதினில் நினைத்து கொண்டாள்.

    ராஜாதி ராஜா வாழ்க……உன் மகிமை வாழ்க…..நின் புகழ் வாழ்க…..நீ கட்டின எருசலேம் ஆலயம் வாழ்க…….ஒரு நிமிடம் தன் காதுகளை அவளே நம்ப வில்லை. எருசலேம் ஆலயமா……அது சாலோமோன் ராஜா கட்டினதாச்சே……..ஆனா இதை ஏன் இங்க உள்ள மனிதனை பார்த்து சொல்லணும்…….சப்போஸ் இவர் கூட எருசலேமில் சர்ச் கட்ட நினைச்சிருப்பாரோ…….மனதினில் வேகமாக எந்த யூதா ராஜாக்கள் எருசலேம் ஆலயம் மேல் வாஞ்சையாயிருந்தாங்கன்னு நினைவுபடுத்தி பார்த்தாள். அவளுக்கு புரிந்த வகையில் ஆசா ராஜாதான் முதலில் தேட ஆரம்பித்து, பின்பு தேவனை தேடாம வாழ்க்கை ஓட்டத்தை முடித்தவர். அப்ப இங்க இருக்கிறது ஆசா ராஜாவா இருக்குமோ……மனதினில் நினைத்து கொண்டாள். ஆனாள் அந்த மனிதன் இவர்கள் சொன்ன காரியத்தை கண்டு கொள்ளவே இல்லை.

    நான் கூட….என்னை கூட இந்த பூதங்கள் கிண்டல் அடிக்குமோ…..கண்டிப்பா இந்த மனிதன் மாதிரி பேசமாதான் இருக்கணும்….இல்லாட்டி நம்மளை எதையாவது வைச்சு குத்தினாலும் குத்திருவாங்க………மனதினில் தன்னை தேற்றினாள்.

    பூதங்கள் பேச ஆரம்பித்தன. என்ன ராஜா, பேச்சையே காணும். முதல்ல இங்க வந்த புதுசுல ரொம்பவே உறுமின……இப்ப என்ன ஆச்சு உனக்கு……நக்கலா பேசினர்.

    அது ஒண்ணும் இல்லடா….எதுவும் பேசினா நாம ஏதாவது பண்ணிருவோம்னு நம்ம ராஜாவுக்கு தெரியாதா என்ன……மற்றொன்று சிரிக்க ஆரம்பித்தது.

    எப்படி ராஜா இருக்கு, நம்ம ஏசி அறை. நீங்க பூமியில இருந்தப்ப வாழ்ந்த அரண்மனை மாதிரி எங்களாலம செய்து கொடுக்க முடியாட்டியும் இது உங்களுக்கு பிடிச்சிருக்கும்னு நினைக்கிறோம்.

    ஆமா ராஜா, நீங்க பூமியில் இருந்தப்ப விபசாரம் பாவம்….அந்த வழியில போனவன் திரும்பியும் ஜீவ பாதை கண்டுபிடிக்க முடியாது…… என்னென்னமோ சொன்ன….ஆனா மற்றவங்களை காப்பாத்தின நீ இன்னைக்கி இந்த நரகத்தில எத்தனை வருசமா கஷ்டப்பட்டிட்டு இருக்க…..

    உண்மையில் வியர்த்து போனாள். அப்ப இது சாலொமோன் ராஜாவா……இல்லை இருக்க முடியாது. அவர் தாவீதுடைய பையன். அது மட்டுமில்ல எல்லா இராஜாக்கள் மேலயும் அதிகாரம் பண்ணின சாலோமோன் ராஜா எப்படி இந்த நரகத்திற்கு…..சான்சே இல்லை…..சப்போஸ் நான் எதுவும் பயங்கரமான கனவு பார்த்திட்டுத்தான் இருக்கேனோ…..சாலொமோன் ராஜாவுக்கே பரலோகத்தில் இடம் இல்லாட்டி யார் அங்க போக முடியும்……தனக்கு தெரிந்த வகையில் புலம்ப ஆரம்பித்தாள்.

    என்ன சார் கொஞ்சம் வருஷம்தான்…….எப்படியும் ஒரு 3000 வருசங்களுக்கு மேல இருக்கும்……மற்றொன்று கிண்டல் அடித்தது.

    அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று மிகவும் கூர்மையாக கவனிக்க ஆரம்பித்தாள்.

    சரி நேரம் ஆச்சு…….. அவனை தூக்கி பிடி…….இருவரும் அந்த மனிதனை….சாலொமோன் ராஜாவை தூக்கி நடக்க ஆரம்பித்தனர். அவளால் இன்னும் நம்ப முடியலை……என் இருதயத்திற்கு ஏற்றவன்ன்னு நம்ம தேவனால் சர்டிபிகேட் வாங்கின தாவீதின் பையன் சாலொமோன் ராஜாவைத்தான் நான் பார்த்தேனா…..இல்லை நான் கனவு கண்டிட்டி இருக்கேன்னு நினைக்கிறேன். இது கனவுன்னா இப்பவே நான் எழுந்திருக்கணும் இயேசப்பா…….ப்ளீஸ்….என்னை எழுப்புங்க…….அழுது கண்ணீர் விட்டாள்.

    ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. அப்ப இது உண்மையான நரகம் தானா. சாலொமோன் ராஜா இந்த நரகத்தில் கஷ்டப்படுறது உண்மையா……நம்ப முடியாதவளாய் நினைக்க ஆரம்பித்தாள். அவர் சாலோமோன் ராஜான்னா அவரை அந்த பூதங்கள் எங்க கூட்டிட்டு போறாங்க. என்னை கூட்டிட்டு வந்த பூதங்கள் கூட சொல்லுச்சே…..இந்த நரகத்தில சாதாரணமானவங்க வேதனைபடுகிறதைவிட, தேவனை அன்பை ருசிச்சிட்டு வந்தவங்க படுகிற பாடுகள் ரொம்ப அதிகமா இருக்கும்னு சொல்லுச்சே……..அப்ப அந்த மாதிரி ஒரு தண்டனைக்குதான் அவரை கூட்டிட்டு போறாங்களா…..

    மனதினில் நினைக்க ஆரம்பிக்கவும்……அவரை எங்க கூட்டு போறாங்கன்னு பார்க்கலாமே……பூதங்கள் என்னை பார்த்திருச்சுன்னா……கவலை இல்லை……என் தேவன் கொடுத்த ஞானத்தினால் முழுக்க முழுக்க நிரம்ப பெற்று தேவ வார்த்தைகளை பெற்ற சாலொமோன் ராஜாக்கு என்ன ஆகுதுன்னு நான் கண்டிப்பா பார்த்தே ஆகணும்……அழுது கொண்டே அவர்களை தொடர்ந்தாள்.

    தன்னுடைய கால் சத்தத்தை கொஞ்சம் குறைத்து கொண்டே நடக்க ஆரம்பித்தாள். பூதங்கள் அவரை தூக்கி கொண்டுதான் சென்றன. ஒவ்வொரு இடமாய் கடந்து போயின. ஒவ்வொரு அறையில் இருந்து கதறல் சத்தம் கேட்டது. ஆனா அதை நின்று கேட்கும் நிலையில் இல்லை அவள். என் தேவன் வார்த்தைகளை சொல்லி கொடுத்த சாலொமோன் ராஜாக்கு அப்படி என்னதான் ஆச்சு…….

    ஒரு வழியாய் ஒரு பெரிய அறையினில் நுழைந்தனர். சுற்றிலும் டிரஸ் கூட இல்லாமல் நிறைய பேர் அந்தரத்தில் தொங்கி கொண்டிருந்தனர். அவர்கள் உடம்பை கீழ் இருந்து பயங்கர ஆயுதங்களால் குத்தி கிழித்த வண்ணம் பூதங்கள். வலியில் கதறினர். காப்பாத்துங்க…… காப்பாத்துங்க…….அவர்கள் சத்தத்தால் அந்த நரகமே கலங்கியது.

    அப்ப சாலொமோன் ராஜாக்கு இதே மாதிரிதான் ஒரு தண்டனையா…..மனதில் நினைத்த போதே அவள் வலியை உணர்ந்தாள்….கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்ன்னு என் இயேசப்பா வார்த்தைகளை சொல்லி கொடுத்த சாலொமோன் ராஜா…….நின்ற இடத்திலேயே….நிற்க திராணி இல்லாதவளாய் மடங்கி உட்கார்ந்து அழ ஆரம்பித்தாள். ரொம்பவே நெருக்கமான ஒருத்தர் இறந்து போனா…..எந்த வலியை உணர்வாளோ அதே வலியை உணர்ந்தாள். கண்களில் கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது.

    கடைசியில் சாலொமோன் ராஜாவை ஒரு பள்ளத்தில் இறங்க வைத்தனர். அவர் போக தயங்குவது அவளுக்கும் புரிந்தது. அவர் தலை மட்டும்தான் வெளியே தெரிந்தது. அவர் கதற ஆரம்பித்தார். அவரைத்தான் யாரும் குத்தலையே…….அப்ப ஏன் கதருறார்…..மனதில் யோசித்து கொண்டு இருக்கும் போதே…..அந்த பள்ளத்தின் இருந்து வெளியே ஒன்று அவள் கண்களில் தெரிந்தது. ஒரு மலை பாம்பு போன்ற ஒன்றின் பாதி பாகம் வெளியே தெரிந்தது.

    வெளியேவே இந்த அளவுக்கு பெரிதா இருந்தா…..அப்ப ஒரு பெரிய பாம்புதான் அவரை கடிச்சிட்டு இருக்கோ…….சாத்தானை கூட வலு சர்ப்பம்ன்னு சொல்லபட்டிருக்கே….சப்போஸ் இவருக்கு தண்டனை கொடுக்க சாத்தானே வந்திருக்குமோ……யோசித்த போதே….அவளால் அந்த இடத்தில் இருக்க முடிய வில்லை. இல்லை…..அவரை தயவு செய்து அப்படி கஷ்டப்படுத்தாதீங்க……ப்ளீஸ்…..கத்த நினைத்தாள். ஆனால் குரல் மட்டும் வெளியே வர வில்லை.

     

    அந்த வலியின் வேதனையை தாங்காது அவர் துடித்து கொண்டிருக்க இரண்டு பூதங்கள் சுத்தியல் போன்றதொரு கனமான ஆயுதத்தை கையில் எடுத்து கொண்டு தயாராக இருந்தன. இது எதுக்கு அவள் நினைத்து கொண்டிருக்கும் போதே, அவள் கண்களை தூக்கம் தழுவியது.

    Related Post

    Categories: பைபிள் சம்பவங்கள்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    − six = 2

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>