• பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 30

    கண்களை திறக்கவே கஷ்டமாக தோணியது அவளுக்கு. ஒவ்வொரு நாளும் தன் தேவன் தனக்கு வெளிபடுத்தின சத்தியங்களை ஆச்சர்யமாய் யோசித்து பார்த்தாள். என் தேவன் என்னுடைய இயேசப்பா மூலமா இந்த உலகத்தில படைத்த எல்லா காரியங்களும் ரொம்பவே அபூர்வமான விசயங்கள். மனதில நினைத்து பார்த்து கொண்டே எழுந்தவளுக்கு அதற்கு மேல் தூங்க பிடிக்காமல் எழுந்து உட்கார்ந்தாள்.

    இன்னிக்கி ஏன் இன்னும் விடியலை. ஆனா ரொம்பவே நேரம் ஆன மாதிரி தோணுது???

    தன் படுக்கையில் உட்கார்ந்த மாதிரியே அம்மா, அப்பாவின் ரூமில் லைட் எரிகிறதா என்றவாறு பார்த்தாள். ம்கூம்….. இன்னும் லைட் வெளிச்சம் இல்லை. அப்ப….இன்னும் நாலு மணி கூட ஆகலையா…..மனதினில் நினைத்தவளாய் பேசாம இயேசப்பாகிட்ட prayer பண்ணலாமா??

    தூக்கமும் வரலை…..நல்ல வழியில் நேரத்தை செலவழிக்கலாமே? எண்ணியவளாய் கீழே இறங்க முற்பட்ட போது, ஏதோ பெரிய கரம் அவளை அப்படியே தூக்கியதை போல உணர்ந்தாள். நான் எதுவும் கனவு தான் பார்க்கிறேனா…..மனதினில் எண்ணியவளாய் தன் சுற்றிலும் பார்த்தாள். அவளுடைய வீடுதான், அவள் படுத்திருந்த கட்டில் பக்கத்தில்தான் தெரிந்தது.

    இன்னிக்கி கூட என் இயேசப்பா எனக்கு புதிய விசயத்தை கத்து கொடுக்க போறாங்க போல…..மனதினில் புரிந்து கொண்டவளாய் தேங்க்ஸ் இயேசப்பா…..உளமார செலுத்தினாள். இது யாருடைய கையா இருக்கும்…..கொஞ்சம் கூட அந்த எண்ணம் அவளில் வர் வில்லை.

    இன்னிக்கி என் இயேசப்பா எனக்கு என்ன கத்து கொடுக்க போறாங்க…..என்பது மட்டும் அவளில் இருந்த ஆர்வம்…..

    எல்லா இடங்களும் கடந்து போவதை அவள் உணர்ந்தாள். நாம எங்க போறோம்….மனதினில் கேட்டுக் கொண்டாள்.

    ரொம்பவே தொலைவில் அந்த அதிகாலை நேரத்திலும் கூட பிரகாசமான வெளிச்சத்தில் அந்த வீடு மின்னி கொண்டிருந்தது…… சப்போஸ் இந்த வீட்டில் உள்ளவங்க காலையிலேயே prayerக்கு எழுந்திருச்சுட்டாங்க போல….. மனதினில் நினைத்து கொண்டாள்.

    அந்த கரம் அவளை அந்த வீட்டின் முன் இறக்கி விட்டு வானத்தில் சென்று மறைந்தது. வீட்டின் முன் உள்ள இடத்தை பார்த்தாள். ஏதாவது நாய் வளர்க்கிறார்களா என்று…..இல்லை எந்த உறுமல் சத்தமும் இல்லை. தேங்க்ஸ் இயேசப்பா….அவள் மனதினில் இருந்த ஒரே கேள்வி…… ஏன் இன்னிக்கி என்னுடைய இயேசப்பா என் கூட ஏஞ்சலை அனுப்பலை….தன்னை தானே கேட்டுக் கொண்டவள்…… சரி….இந்த அனுபவம் என் இயேசப்பா நான் மட்டும் தனியா புரிந்து கொள்ளனும்ன்னு சப்போஸ் முடிவு பண்ணியிருப்பாங்க….மனதினில் நினைத்து கொண்டாள்.

    இது வரைக்கும் ரொம்பவே தைரியமாக வந்து விட்டாள். ஆனா இந்த வீட்டில யார் இருக்காங்களோ….இந்த கிட்டத்தட்ட நைட் நேரத்தில நான் போய் நின்னா என்ன சொல்லுவாங்க…..இயேசப்பா இப்ப நான் என்ன செய்ய…..மனதினில் நினைத்தவளாய் பக்கத்தில இருந்து ஏதாவது ஹெல்ப் கிடைக்குமா என்ற ஆர்வத்தில் தேடி பார்த்தவளுக்கு…. வீட்டு கேட்டின் வெளியே நின்று ஒரு தெரு நாய் முறைத்து கொண்டிருப்பதை தான்  பார்க்க முடிந்தது.

    கண்டிப்பா உள்ளே போறதை தவிர்த்து வேற வழியில்லை…..உணர்ந்தவளாய்….வாசலில் கால் செப்பல்கள் இருக்கிறதா என்றவாறு நோட்டம் இட்டுக் கொண்டே உள்ளே போனாள். மறந்தும் ஒரு செப்பல் கூட இல்லை. அப்ப யார்தான் இருக்காங்க….மனதினில் நினைத்து கொண்டவள்….இயேசப்பா, உண்மையில் இது எனக்கு ரொம்பவே வித்தியாசமான அனுபவமா இருக்க போகுதுன்னு நினைக்கிறேன்…..பிரெண்ட்….மனதினில் தைரியத்தை வரவழைத்து கொண்டு உள்ளே நுழைந்தாள். பெரிய வீடுதான். ஹால் ரொம்பவே அழகாக இருந்தது…..ஆனா ஏன் இவ்வளவு அழுக்கா, கொஞ்சம் கூட சுத்தம் செய்யபடாம, எவ்வளவு தூசி…..மனதினில் நினைத்து கொண்டாள்.

    ஹாலில் கூட ஆள் இல்லாதது அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது. இவ்வளவு பெரிய வீட்டில் வீட்டை பார்த்து கொள்ள ஒரு காவலாளி கூட இல்லாதது முதல் ஆச்சர்யம். இப்படி வீட்டை திறந்து வைத்து விட்டு, ஹாலில் கூட ஆள் இல்லாதது அவளுடைய ரெண்டாவது ஆச்சர்யம்…..  அவளுக்கு தெரிந்த வகையில் வீட்டை பார்த்தாள். அழகான வீடுதான். ஆனா கொஞ்சம் கூட பேணப்படாம இருக்கிற வீடு….அவளுக்கு அப்படித்தான் தோன்றியது.

    ஏன்னா….தான் வீட்டை அவள் தினமும் பார்க்கிறாளே…..அவளுடைய அம்மா தினுமும் வீட்டை சுத்தமா வைத்து கொள்வதில் விருப்பம் உள்ளவர்….தனக்கும் சொல்லி கொடுத்தவர்….மனதினில் நினைத்தவாறு ஹலோ…..யாராவது இருக்கிறீங்களா……கூப்பிட்டாள். சப்போஸ் யாராவது கோபக்காரர் இருந்து நான் இருக்கிறதை பார்த்தா இன்னிக்கி எனக்கு தர்ம அடிதான்…..மனதினில் நினைத்தவளாய் யாராவது தென்பட மாட்டார்களா என்று பார்த்தாள்…..ஒரு ஈனமான குரல் மட்டும்தான் கேட்டது……

    யார் அது…..என்ன வேணும்…..என்று கேட்ட போதுதான் இவளுக்கு உயிரே வந்தது. அப்பாடா….வீட்ல ஆள் இருக்காங்க…..நல்ல வேளை கோபப்படாத ஆளா இருப்பாங்க போல…..தேங்க்ஸ் இயேசப்பா…..அவசர அவசரமாக நன்றிகள் தன் தேவனுக்கு செலுத்தினாள்.

    நான் இந்த ரூமில் இருக்கேன்….இங்க வாங்க…..என்றவாறு கேட்கவும் மனதினில் தைரியத்தை வரவழைத்து கொண்டு முன்னே நடந்தாள். ஹாலின் வலது புரத்தில் இருந்த ரூமில் இருந்துதான் அந்த குரல் வந்தது.

    அந்த ரூமில் நுழைந்தவளுக்கு உண்மையில் ஆச்சரியம்…..ரொம்பவே இளமையான பெண்….அவளுக்கு குளோரி அக்காவை ஞாபகப்படுத்துவது போல தோணியது….ஆனா முகம் எல்லாம் ஏன் இந்த புண்ணு…..கொஞ்சம் விகாரமாகத்தான் இருந்தது….. ஆனா இந்த வீட்டுக்கு ஏன் இயேசப்பா என்னை கூட்டிட்டு வந்தாங்க……. அதிக ஆச்சரியம் அவளை ஒட்டி கொண்டது.

    அவளுடைய ஆச்சர்யத்தை போல அந்த பெண்ணும் இவளை பார்த்து ஆச்சரியப்பட்டாள். நீங்க…..என்று அவளுடைய குரலில் கேட்ட போது…..உட்காருங்க…..என்று சொன்ன போது, அங்கு காணப்பட்ட சேரில் உட்கார்ந்தாள். என்ன கேட்கணும்……. மனதினில் எந்த கேள்வியும் அவளுக்கு தென் பட வில்லை. அந்த ரூமின் சுவரில் இருந்த வசனங்களை வாசித்து பார்த்தாள். எல்லா வசனங்களும் தாவீது தாத்தா எந்த  வேதனையின் மத்தியில் எழுதி இருந்தாரோ…..அதன் அடிப்படையில் எழுதப்பட்டிருந்தது. புரிந்து கொண்டாள்…..இந்த பெண் தான் எழுதியிருப்பார் போல……. மனதினில் நினைத்து கொண்டாள்.

    உண்மையில் ஒரு வசனம் அவளை ரொம்பவே கவர்ந்திருந்தது. ஆனா இது ஏதோ ஒரு பாடல் வரி போல தோணுது….நீசனாமெனைதான் இயேசு நேசிக்கிறார் ……என்பதாய் இருந்தது. இந்த பாட்டு நான் பாடி இருக்கேன். ஆனா இது எந்த பாட்டு……. யோசிக்க ஆரம்பித்தாள்.

    வீட்டுக்கு வந்தவங்களுக்கு ஏதாவது கொடுக்கணும் சொல்லுவாங்க……ஆனா இந்த வீட்டுல…… அந்த பெண் சொல்லி முடிப்பதற்குள் நிறையவே இரும்பி விட்டார். பக்கத்தில் யாரும் இல்லை.

    இவள் பதட்டம் அடைந்தவளாய் தண்ணீ வேணுமா….என்று கேட்ட போது, கிச்சன் அறையை காண்பித்தாள். இவள் ஓடி சென்று கிச்சனில் தேடி பார்த்தும் ஒன்று கூட தென்பட வில்லை. தண்ணீ இல்லை அங்க…..வேற எங்க இருக்கு……என்று கேட்ட போது…… விடுமா….. வேலைக்காரி வைக்க மறந்திருப்பாங்க…….. என்று சொல்லி அவள் கண்கள் கலங்கிய போது, அவளுக்கே எப்படியோ போய் விட்டது……

    வேலைக்காரி இருந்து பார்த்து கொள்ளுகிற வீடா…..என்கிற ஆச்சரியத்தில் கேட்டு விட்டாள். நான் யாரையும் குறை சொல்லுற நிலையில் இல்லை. எனக்கு என்றும் துணையா இயேசப்பா இருக்காங்க…… அது போதும்….. குரலில் சந்தோசம் தெரிந்தது…….

    நான் வெளியே….இல்லை பக்கத்து வீட்டில யார்கிட்டயாது தண்ணீர் வாங்கிட்டு வரேன்…..என்று சொல்லி புறப்பட போனவளை

    எனக்காக நீ கஷ்டப்பட வேண்டாம். நான் இந்த ஒரு வருசமா இதே மாதிரி நிறைய காரியங்களை பார்த்திட்டேன்…..இது ஒண்ணும் பபுதுசு இல்லை….. எழும்ப நினைத்தவள் முடியாமல் அப்படியே படுத்து விட்டாள்.

    நீ இங்க ஏன் வந்திருக்க……என்று கேட்ட போது…..என்ன என்று சொல்ல முடியாமல் திணறி போனாள். என்னுடைய இயேசப்பா தான் என்னை இங்க கூட்டிட்டு வந்தாங்க…… என்று எப்படி சொல்ல முடியும்…. வெறும் உதட்டை மட்டும் பிதுக்கினாள்.

    இந்த வீட்டில என்ன கிடைக்கும்னு பார்க்கிறதுக்காக வந்தியா குட்டிமா…….என்று அந்த பெண் கேட்ட போது உண்மையில் நொறுங்கி போனாள். நான்….நான்…..வார்த்தைகள் வர வில்லை.

    சாரிமா. இந்த வீட்டில என்னை தவிர வேறு ஒண்ணும் இல்லை. அதுவும் நான் இந்த ஒரு வருசமா இந்த ரூமில அடைஞ்சே கிடக்கிறதால வீடுல எந்த பொருள் எங்க இருக்குன்னு கூட எனக்கு தெரியாது…..வருத்ததுடன் சொன்ன போது இவள் கூட வேதனைப்பட்டாள்.

    என்கிட்டே இருக்கிற ஒரே பொக்கிஷம் இயேசப்பா மட்டும்தான்….அவர் என்னை ரொம்ப நேசிக்கிறார். அவர் அன்பை மட்டும்தான் என்னால் உனக்கு சொல்ல முடியும்…….. என்று அந்த பெண் சொன்ன போது உண்மையில் துக்கம் அடைத்தது….என்னை விடவா…உங்களுக்கு என் இயேசப்பா பற்றி தெரியும்…..அப்படி எதுவும் கேக்க அவளுக்கு தோண வில்லை.

    உன்னை மாதிரியே ஏற்கனவே ரெண்டு, மூணு பேரு இங்க ஏதாவது கிடைக்காதான்னு வந்தாங்க…..வந்த புதுசுல என்னை கஷ்டப்படுத்த கூட செய்தாங்க….பணத்தை எங்க வைச்சிருக்கிற….எதுவும் நாடகம் ஆடுறியான்னு….ஆனா என் உண்மையான நிலையை தெரிஞ்சிகிட்ட பிறகு, என் வாழ்கையை, என் இயேசப்பாவின் அன்பை தெரிந்து கொண்ட பிறகு அவங்க மன மாறுதலோடு திரும்பி போனது மட்டும்தான் என்னால அவங்களுக்கு கொடுக்க முடிந்த மிக பெரிய பொக்கிஷம்ன்னு நினைக்கிறேன்…..அந்த பெண் பேச கூட கஷ்டபடுவதை இவளும் தெரிந்து கொண்டாள்.

    நான் இன்னும் எத்தனை நாள் இருக்க போறேன்னு தெரியாது. ஆனா நான் பார்க்கிற அத்தனை பேர்கிட்டயும் என் இயேசப்பா அன்பை சொல்லணும்….ஏன்னா அது அவ்வளவு பெரிய சந்தோசம்…..என்று சொல்லி முடித்து விட்டு ஒரு பெரிய மூச்சை விட்டாள். பேச கஷ்டப்படுவதை கண்டு அவள் எவ்வளவோ தடுத்து பார்த்தும் அந்த பெண் விடுவதாக தெரிய வில்லை.

    சரி சொல்லுங்கக்கா…..என்ற போது அந்த பெண்ணின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.

    நீ பணத்துக்காக இங்க வந்த பொண்ணு மாதிரி தெரியலை. உங்க அம்மா, அப்பாவை விட்டு தனியா வந்திட்டியா…… என்று கேட்டவளுக்கு அவள் ஒன்றும் சொல்ல முடிய வில்லை.

    சில விசயங்களை வெளியே சொல்ல முடியாது. அது நம்ம தேவனுக்கும்….. சொல்வதற்குள் ப்ளீஸ் குட்டிமா. என்னை மாதிரி இன்னும் ஒரு பெண் உருவாக வேண்டாம்….என்று சொல்லி கத்தி அழுதவளை அவள் ஆச்சரியமாக பாரத்தாள்.

    என்னுடைய வாழ்க்கையை நீ  கண்டிப்பா தெரிந்து கொள்ளணும் குட்டிமா…… என்று சொல்லி விட்டு ஒரு நீண்ட மூச்சை விட்டார்.

    நான் எங்க அம்மா, அப்பாக்கு ரொம்பவே செல்ல பொண்ணு. நான் சின்ன வயசில இருந்து என்ன கேட்டாலும் அதை எல்லாம் வாங்கி தந்திருவாங்க. அப்பா வெளி நாட்ல வேலை பார்த்தார். வருசத்தில ஒரு முறை வருவதே ஆச்சரியமான காரியம்…..அம்மா வீட்டுக்கு அதிகமா வந்த பணத்தை எப்படி செலவழிக்கணும்னு தெரியாம கிளப், லேடீஸ் அமைப்பு….ன்னு ஏராளக்கணக்கான இடங்களுக்கு அலைஞ்சிட்டே இருந்தவங்க. நான் விவரம் தெரிந்த வயதில இருந்து பார்த்து எல்லாம் ஆயாமாதான்……. எனக்குள்ள பிடிவாதம், கோபம்….இன்னும் என்னென்னமோ குணங்கள் வந்து…… அது அதிகமான சமயங்களில் கூட அதை கண்டிக்கிறதுக்கு ஒரு அம்மாவா எங்க அம்மா எந்த நடவடிக்கையும் எடுத்ததே இல்லை…..ஒரே ஒரு வார்த்தை…உனக்கு வேணுமா….எடுத்துக்கோ……எதுக்கு கத்திட்டு இருக்க…..வேற எதுவும் எங்க அம்மா சொன்னதா எனக்கு ஞாபகம் இல்லை……

    இவளுக்கு கூட என்ன சொல்லுவது என்று தெரிய வில்லை. ஸ்கூல். காலேஜ்….எல்லாம் நல்லாத்தான் இருந்தது…… ஆனா அது வரை என்னையும் வீட்டுல உள்ள பொருளா நினைச்ச அம்மாவும், அப்பாவும் எனக்கு மாப்பிளை பார்த்து முடிவு பண்ணினப்ப உண்மையில் எனக்கு அதிர்ச்சி….. அப்பாவுக்கு தெரிந்த நபர்….அவரோடு வெளி நாடில் வேலை பார்த்து கொண்டிருந்தவர்……என்னையும் ஒரு பிசினஸ் விசயமாதான் பேசி இருப்பாங்களோன்னு வேதனை……அதை விட இதே நரக வாழ்க்கை என் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தா என்ன ஆவேன்னு பயந்திட்டு…..முதலில் இருந்தே எதிர்த்தேன். ஆனா பொண்ணை விட…..பணம் மட்டுமே அவங்க கண்களுக்கு தெரிஞ்சிச்சு. சோ…..என் உணர்வுகள் அவங்களுக்கு புரியலை……கடைசியில அவங்களுக்கு தெரியாம இந்த ஊரை விட்டு கிளம்பிட்டேன்…… என்று சொல்லி மீண்டும் அழுதாள்.

    அம்மா, அப்பாவின் எந்த பாதுகாப்பிலும் வளராத எனக்கு நான் இறங்கிய புது ஊர் ரொம்பவே வேதனை அமைந்ததா இருந்தது…… போன ஊர்ல….பார்க்க உண்மையில் ரொம்ப நல்ல பெண்ணா தெரிந்தாங்க. ஆனா இழுத்து விட்ட இடம்….. விபசார விடுதி……

    என்னடா…..எந்த நேரமும் விபசாரம், விபசார விடுதின்னு கேள்வி படுறேன்….மனதில நினைத்து கொண்டாள். நீ நினைக்கலாம்……இந்த அளவுக்கு படித்த நீங்க எப்படி பெரிய விசயத்தில மாட்டி கொள்ளலாமா??? அந்த பெண்ணே கேள்வி கேட்டுக் கொண்டாள்.

    குட்டிமா, வீட்டுக்குள்ள இருக்கிற வரைக்கும் தான் எந்த குழந்தைக்கும் பாதுகாப்பு. வெளியே வந்திட்டா…..இப்ப இயேசப்பாவை தெரிந்து கொண்டதால புரிஞ்சுக்கிட்டேன். எப்படா….யாரை விழுங்கலாம்ன்னு சாத்தான் அலைவான்னு…. நான் மாட்டிக் கொண்டேன்.

    அம்மா, அப்பாவுடைய நரக வாழ்கையில் இருந்து வந்த எனக்கு அந்த வாழ்க்கை ஒண்ணும் பெரிய வித்தியாசமா தோணலை. சொல்ல போனா அந்த இடம் ஒரு நல்ல விசயமா நான் ஒரு கட்டத்தில நினைச்சிட்டேன். அப்படி இருக்கும் போதுதான் எனக்கு திடீர்னு உடம்பு சரியில்லாம போச்சு. டாக்டர் பார்த்தப்ப சொல்லிட்டாங்க…… உயிர் கொல்லி வியாதின்னு…..என்ன செய்வாங்க….என்னை எவ்வளவு பயன் படுத்திக் கொள்ளனுமோ….காரியம் முடிந்ததால….. அங்க இருந்து பத்தி விட்டுட்டாங்க…..

    நான் என்ன தப்பு பண்ணினேன்…..ரொம்பவே பணக்கார வீட்டில பிறந்தது தப்பா……கொஞ்சம் கூட அன்பே இல்லாத அம்மா, அப்பாக்கு பொண்ணா பிறந்ததை தவிர வேற எந்த தப்பும் இல்லைன்னு நான் ரோடில உட்கார்ந்து அழுதேன். ரோடில் போனவங்க எல்லாம் பைத்தியக்காரி போலத்தான் நினைச்சி என்னை பார்த்துட்டு போனாங்க. நான் எதிர்பார்த்தது எல்லாம் உண்மையான அன்பு மட்டுமே….அது இல்லாமே நான் செத்து போக போறேனா….அப்படி அழுதுட்டு இருந்த போதுதான் ஒரு சர்ச்சில் இயேசு நேசிக்கிறார்……ன்னு பாடலை பாடிட்டு இருந்தாங்க. அந்த தமிழ் மொழி இல்லாத ஊர்ல கூட அந்த பாடல் என்னை ரொம்பவே உருக்கிருச்சு….

    சர்ச்சுக்கு போனேன்…..முழுமையா தேவனுடைய வார்த்தைகளை கேட்டேன். ரொம்பவே சமாதானமா உணர்ந்தேன். ஆனா என்னை நேசிக்கிற தேவனை பத்தி நிறைய தெரிந்து கொள்ள ஆசைப்பட்டு, அந்த சர்ச் போதகர்கிட்ட பேசினேன். என்னுடைய வாழ்கையை கேட்டப்ப கொஞ்சம் கூட அவர் முகத்தை சுளிக்கலை. அவர் எனக்கு தன்னுடைய பைபிள்ளை கொடுத்து தினமும் வாசிக்க சொன்னாங்க. ஒரு ரூம் கூட கொடுத்து அங்க தங்க வைச்சி என்னை நல்லாவே அந்த போதகரும் , அவருடைய மனைவியும் பார்த்து கொண்டாங்க.

    அப்பதான் ஒரு நாள் கனவில என் இயேசப்பா வந்து திரும்பவும் என்னை பிறந்த ஊருக்கே போக சொன்னாங்க. நான் இங்க வந்து கிட்டத்தட்ட ரெண்டு வருசத்துக்கு மேல் ஆகுது. முதலில் எங்க அம்மாவும் , அப்பாவும் என்னை வீட்டை விட்டு விரட்டாத குறைதான். அவமானம்ன்னு சொன்னாங்க, கௌரவ குறைச்சல்ன்னு சொன்னாங்க…… அடுத்து என்ன நினைச்சாங்களோ தெரியலை….. நீ இந்த வீட்டிலயே இரு….. வேலைக்கு ஒரு ஆளை மட்டும் போட்டுட்டு அந்த நாளே வேற ஒரு இடத்திற்கு கிளம்பி போயிட்டாங்க….இது வரைக்கும் அவங்க எங்க இருக்காங்க, நான் எப்படி இருக்கேன்ன்னு கூட அவங்களுக்கு தெரியாது…..

    முதலில் என்கிட்டே ஆசையா பேச வந்த பக்கத்துக்கு வீட்டுக்காரங்க கூட, என் வியாதியை தெரிந்து கொண்டதால அப்படியே வெறுத்து ஒதுக்க ஆரம்பிச்சிட்டாங்க….. முதலில் சர்ச்…. சின்ன பிள்ளைகள் கூட்டம்ன்னு இருந்த நான் ஒரேடியா இப்ப படுக்கையில்…. சொல்லி விட்டு அழுது விட்டார்.

    இவளுடைய கண்களில் இருந்தும் கண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த ஊருக்கு வந்த ரெண்டு வருசங்களில் மற்றவங்களால் அவமானத்தை சந்திருந்தாலும், அவருடைய அன்பை இன்னும் இன்னும் அதிகமா ருசித்திட்டு இருக்கேன்…..உண்மையில நான் சின்ன வயசில இருந்தே எதிர்பார்த்த…..ஏங்கிய அன்பை இப்ப ….இந்த என் வாழ்நாள் கடைசி நாட்கள்ல ரொம்பவே அதிகமா ருசிக்கிறேன்…..வெளிப்படையா உடல் வேதனைகள் இருந்தாலும், உள்ளே ரொம்பவே சந்தோசமா இருக்கேன்…என் இயேசப்பா என்னை….பாவியாகிய என்னை கூட எவ்வளவு அதிகமா நேசிக்கிறாங்க தெரியுமா…..அதை வார்த்தைகளில் சொல்ல தெரியலை….அவர் உன்னையும் நேசிக்கிறார் குட்டிமா …… ரொம்பவே அதிகமா….உன் இதயத்தை கேட்டு பார்….அது சொல்லும்….உன் இயேசப்பா உன்னை எந்த அளவுக்கு நேசிக்கிறார்ன்னு…… அந்த மெல்லிய சத்தத்தை கேட்கும் போது……உன்னால அழாம இருக்க முடியாது…..இப்பவும் உன் இயேசப்பா உன்கிட்ட எதிர்ப்பார்கிறது எல்லாம் ஒன்னுதான்….

    இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும்….நீ வேண்டாம்னு உதறிட்டு போனாலும்….. காறி துப்பினாலும் கூட……… நான் உன்னை நேசிக்கிறேன் குட்டிமா…..ன்னு உன் இதயத்தில இருந்து சொல்லிட்டே இருப்பார்….அவர் அன்புக்கு இணையா உன்னால எதையும் கொடுக்க முடியாது…… நீ உன் இயேசப்பாகிட்ட சொல்லி பாரேன்…..இயேசப்பா நான் நீங்க என்னை விரும்புறதை நம்புறேன்ன்னு சொல்லி மட்டும் பாரேன்….ஒரு பெரிய ஆச்சர்யம் நடக்கும் பாரு….. என்று அவர் சொல்லி கொண்டே போக இவளுடைய இருதயமும் கூட உடைந்து விட்டது.

    நான் என் இயேசப்பாகிட்ட பேசலாமா…..என்ற போது….உற்சாகத்தின் மிகுதியால் படுக்கையில் எழ முற்பட்டு கீழே விழுந்தார்.

    என்னது இது அவள் பதறி அவளை தூக்க முயற்சிப்பதற்குள்…..ஒண்ணும் இல்லை…..முழங்கால் போடு. உன் வலது கையை எடுத்து உன் இருதயத்திற்கு பக்கத்தில வைச்சுக்கோ. சொல்லு…..உன் இயேசப்பாகிட்ட…… சொல்லு….நான் நம்புறேன் இயேசப்பா….நீங்க என்னை நேசிக்கிறதை….சொல்லு….மகிழ்ச்சியோடு சொல்லி கொண்டிருந்தார்.

    அவளும் முழங்கால் போட்டு, தன் கையை இருதயத்திற்கு நேராக வைத்து….. இயேசப்பா நான் நம்புறேன்…..நீங்க என்னை நேசிக்கிறதை…..சொன்ன அந்த நொடி……ஒரு பரவசம் அவளில் பரவுவதை உணர்ந்தாள். நானும் குட்டிமா…...உள்ளிருந்து வந்த சத்தத்தை அவளால் தெளிவாக கேட்க முடிந்தது.

    உண்மையில் அவளுக்கு இந்த அனுபவம் ரொம்பவே வித்தியாசமானதாக….அருமையானதாக இருந்தது. தேங்க் யூ பிரெண்ட்…..கண்ணீரோடு சொல்லி கண்களை திறந்தாள். அவளுடைய கண்கள் முன்பு ஏரளாமான தேவ தூதர்களும், பரிசுத்தவான்கள் கூட நின்று கொண்டிருந்ததை பார்த்தாள். இயேசப்பா…..என்று அவள் சொல்லி முடிப்பதற்குள்…..

    குட்டிமா……நம்ம இயேசப்பா நேசிக்கிற இந்த பொண்ணுடைய வாழ்க்கை இன்னிக்கி முடிய போகுது. அதுனாலதான் நம்ம இயேசப்பா உன்னை இங்க அனுப்பி வைச்சாங்க…… நீ கற்றுக் கொண்ட பாடத்தை என்றும் நினைவில் வைத்து கொள்…..அவளிடம் என்றும் பேசும் ஏஞ்சல் தான் பேசி கொண்டிருந்தார்.

    இவளுடைய கண்களில் கண்ணீர் வந்து விட்டது. ஏஞ்சல், ப்ளீஸ் இந்த அக்கா மூலமா இன்னும் நிறைய பேரு நம்ம இயேசப்பா அன்பை தெரிந்து கொள்ளட்டுமே….. அவள் கதறி சொன்ன போது, இல்லை குட்டிம்மா….நம்ம இயேசப்பாபின் மார்பில சாய்ந்து இளைப்பாற வேண்டிய நாள் அவளுக்கு வந்திருக்கும் போது, நீ அதை ஏன் தடுத்து நிறுத்தனும்…..

    அவள் அழுதே விட்டாள். ரொம்பவே உடல் பலவீனத்தில் மயங்கி காணப்பட்டாள் அந்த பெண்…… அங்கு நின்று கொண்டிருந்த ஏஞ்சல் அந்த பெண்ணின் கரங்களை தொட்டு எழுப்பிய போது…… அவள் ஏஞ்சலை பார்த்த சந்தோஷத்தில் எழும்பி உட்கார ஆசைப்பட்டாள். முடிய வில்லை. சந்தோசத்தினால் மூச்சுகள் ரொம்பவே வேகமாக வந்தது. மரணத்தின் கடைசி நொடி…..அவளால் அந்த வேதனையை தாங்க முடியவில்லை. ஆனால் அந்த பெண் சந்தோசத்தோடுதான் காணப்பட்டாள். இயேசப்பா, ப்ளீஸ்…..அந்த அக்கா…… அழுது கொண்ட அமர போனவளை

    அங்கிருத்த பரிசுத்தவான் ஒருவர் அவளை அணைத்து ஆறுதல் சொன்னார். குட்டிமா….இந்த ஒரே ஒரு நிமிடம்தான்…..அடுத்து உன் அக்கா….நம்ம இயேசப்பா அரவணைப்பில்…..எப்பவும் சந்தோஷமாய்…..அழுகாத குட்டிமா……

    மெதுவாக முழு சந்தோசத்தோடு அந்த அக்காவின் கண்கள் அப்படியே மூடியது. ஆவி மேலே எழும்பியது….. அதற்கென்று கொடுக்க பட்ட சரீரத்தோடு……ரொம்பவே அழகான……ஏஞ்சலை போன்ற வெளிச்சத்தோடு அந்த உடல் காணப்பட அதை பார்த்து ஆச்சர்யபட்ட அந்த பெண்…..இவளை பார்த்து சிரித்தார்….. இவளும் இப்போது சிரித்தாள்.

    அந்த பெண்ணும், எல்லா ஏஞ்சலும், பரிசுத்தவான்களும் வானத்தில் பறந்து கொண்டிருக்க தானும் பறக்கவே ஆச்சர்யப்பட்டாள். ஏஞ்சல்…..அவள் சொல்ல அவளை பார்த்து சிரித்தார்.

    எல்லா மேகங்கள் கூட கடந்து போன போது…..நான் என்னுடைய இயேசப்பாவை பார்க்க போறேன்…..இரண்டு பெண்களின் ஏக்கமும் அப்படித்தான் இருந்தது……… அவளுடைய இயேசப்பா அந்த பரலோக வாசலின் படியில் வந்து நின்று தன் பெண்ணுக்காக காத்திருந்தார். இயேசப்பாவோடும் எல்லா தேவ தூதர்களும் நிற்பது அவளால் பார்க்க முடிந்தது.

    அந்த பெண் பரலோக வாசலை தொட்டவுடன்… எக்காள சத்தம் ஒலித்தது. எல்லா ஏஞ்சல்களும், பரிசுத்தவான்கள், தேவ புத்திரர்கள் ஆர்ப்பரிக்கும் சத்தத்தை அவளும் கேட்டாள். அந்த பெண் இயேசப்பாவின் மார்பில் ஓடி போய் ஒட்டி கொண்டாள். அவளை அப்படியே அணைத்து கொண்டு இயேசப்பா பரலோகத்தின் உள்ளே நுழைவதை ஏக்கத்துடன் அவள் பார்த்து கொண்டு நின்றாள்.

    நாம கிளம்பலாமா குட்டிமா…..அவள் பக்கத்தில் வந்து ஏஞ்சல் சொல்லவும்… சரி ஏஞ்சல்…..என்று சொன்னாள்.

    அடுத்த நொடி தன் வீட்டினில் இருந்தாள். bye குட்டிமா…..என்று சொல்லி ஏஞ்சல் கிளம்பிய போதும் கூட…..நான் எப்ப அப்படி…… மனம் கேட்டு கொண்டே இருந்தது. ஆனா என் ஓட்டம் முடியலையே…… மனம் உடைந்து அழுதவள்….உங்க அன்பை அந்த அக்கா மூலமா உணர்ந்த பிறகு இன்னும் உங்க அன்பை என் மனம் நாடுது….ப்ளீஸ் பிரெண்ட்…… என்று அவள் அழுத போது…..நான் எப்பவும் உன் கூடத்தான் இருக்கேன் குட்டிமா….தெளிவாக கேட்க முடிந்தது….அழுதே விட்டாள்…..

    தேங்க்ஸ் பிரெண்ட்……முழங்காலில் நின்று தன் தேவனுக்கு நன்றிகள் சொல்லி கொண்டிருந்த தன் பெண்ணை ஆச்சரியமாக பார்த்து கொண்டிருந்தார் அவளுடைய அம்மா.

    Related Post

    Categories: பைபிள் சம்பவங்கள்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    × six = 18

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>