-
பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 35
உண்மையில் அவன் அம்மாவின் பார்வை மட்டும் ரொம்பவே பரிதாபமாக இருந்தது. ஏதோ நடக்க கூடாத விபரீதத்தை நடந்தது போல திகைத்தார்.
என்னடி….அம்மாவும், பையனும் ஒவ்வொரு வீடா நுழைந்து என் பெயரை கெடுக்குறீங்களா??? கையை, காலை வெட்டி போட்டா எப்படி ஒவ்வொரு வீடா நுழைய முடியும்னு நானும் பார்க்கிறேன்???? வேதா அப்பா வார்த்தைகளை அள்ளி வீச எல்லாருக்கும் வேதனையாகி விட்டது. கொஞ்சம் நேரத்திக்கு முன் இருந்த சந்தோசம் எல்லாம்……அப்படியே எங்கோ தொலைந்து போனதை போல உணர்ந்தாள் அவள். அதுவும் முதன்முறையாக அவள் இந்த மாதிரி உள்ள காரியங்களை பார்ப்பதால் உண்மையில் பயந்து போனாள்.
யாரும் ஒன்றும் பேச வில்லை. வேதாதான் தன் அம்மாவின் கரங்களை பற்றி கொண்டு, அம்மா வாங்க. நாம வீட்டுக்கு கிளம்பலாம். இங்க இதற்கு மேல் இருப்பது எல்லாருக்கும் வேதனை…..அவன் நகர முற்பட்ட போது.
என்னடி, உன் உத்தம புத்திரன் ரொம்ப நல்ல பிள்ளையா பேசுறான். அப்ப, ஊர்க்காரன் பேசினது எல்லாம் உண்மைதானா……ஏதோ ஒரு அற்புதம் நடந்துருச்சா…….. ரொம்பவே நக்கலா கேட்கவும்
வேதாவின் அம்மாவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்து விட்டது. தன் பையனின் சந்தோசத்தை கூட ரசிக்க தெரிய முடியாத அளவுக்கு கூடவா ஒரு மனிதனை கெட்ட செய்கைகள் அடைத்து விட முடியும்???? அவள் மனதினில் வியந்தாள்.
ரூபன்…..கொஞ்சம் நில்லு. இப்ப நீ ரொம்பவே உணர்ச்சி வயத்தில இருக்க. உன் பிள்ளைக்கு முழுமையா நம்ம இயேசப்பா அற்புதம் பண்ணியிருக்காங்க. அந்த சந்தோசத்தை முதல்ல மனதில புரிஞ்சுக்கோ. அதை விட்டுட்டு, இந்த பொல்லாத கோபத்தோட போனா, யாருக்கும் சரி வராது…..ஜான் அங்கிள் பேசி கொண்டே போக
இந்த பாருங்கையா….உலகத்துக்கு உத்தமன் வந்திட்டான். என் வீட்டு விசயத்தில தலையிடுறதுக்கு உனக்கு என்ன உரிமை இருக்கு. நான் என் பொண்டாட்டியையும், பிள்ளையையும் என்ன வேணும்னாலும் செய்வேன். அதை கேட்கிறதுக்கு நீ யார்??? அவர் கர்ஜனையா பேச ஒன்றும் பேச முடியாமல் ஆனார் ஜான் அங்கிள்.
அதற்கு மேல் பொறுமை காக்க முடியாதவராய் வேதாவின் அம்மா வெடித்து விட்டார். அண்ணன்….நீங்க ஏன் அந்த மனுஷன் கிட்ட பேசுறீங்க. மனுஷன்னா நீங்க சொல்லுறது ஏதாவது புரியும். ஆனா ஒண்ணும் புரிஞ்சுக்க முடியாத மிருகம் மாதிரி ஆனவரை நீங்க ஏன் தடுத்து நிறுத்த பார்க்குறீங்க…..அவர் சொல்ல
என்னடி, ரொம்பவே வாய் நீளுது. எல்லாரும் உன் பக்கத்தில இருக்காங்கன்னு தைரியத்தில் பேசிறியா…..எப்படின்னாலும் வீட்டுக்குதான் வரணும்….அடுத்து எங்கயும் போக முடியாத அளவுக்கு பண்ணியிருவேன்….அவர் கோபத்தோடு பேச
போதும். இனிமே உன்கூட நான் வாழ வர்றது மாதிரி இல்லை. நீ இது வரை செய்த பாவத்திற்கே என் பிள்ளை ஒரு பைத்தியக்காரன் மாதிரி கஷ்டப்பட்டுட்டான். அந்த சமயம் கூட, புத்தி சரி இல்லாத பிள்ளையை நீ என்ன வேதனைப்படுத்தின. இனி உன் கூட அவன் இருந்தான்னா அவனை என்னவும் பண்ணுவ. இனிமே நாங்க எங்க வழியை நாங்களே பார்த்து கொள்ளுறோம். எங்களை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாம நீ உன்னை பார்த்துக்கோ…...வேதாவின் அம்மா பேசிக் கொண்டே போக யாரும் இதை எதிர்பார்க்கலை.
பொறுமைசாலி என்று பெயர் எடுத்த வேதாவின் அம்மாவா பேசுறது……உண்மையில் பாட்டியும், ஜான் அங்கிளும் குழப்பத்தில் நின்றனர்.
வீட்டு விசயத்தை வெளியே பேச வேண்டாம். எல்லாரும் உள்ள வாங்க. வெளியே எல்லாரும் வேடிக்கை பார்த்துட்டு இருக்காங்க…..ஜான் அங்கிள் பேசவும்
என்ன ரொம்ப நல்லவன் மாதிரி பேசுற….எனக்கு எதிரா என் பொண்டாட்டியை பேச விட்டுட்டு, நடுவில நல்லவன் மாதிரி வேஷம் போடுறியா…..மீண்டும் அதே கோபம்.
அண்ணன். நீங்க அவர்கிட்ட பேசி உங்களை நீங்களே தாழ்த்தி கொள்ளாதீங்க. நாங்க எங்க அம்மா வீட்டுக்கு கிளம்புறோம். இதுக்கு மேல நாங்க இங்க நின்னா உங்களுக்குதான் தேவையில்லாத வேதனை வரும்….. வேதாவின் அம்மா வேதனையோடு சொல்ல
அவளுக்குதான் வேதனையாகி விட்டது. தன் கண்களுக்கு முன்பு ஒரு குடும்பம் உடைகிற நிலை…..மனதினில் வருத்ததோடு தன் தேவனிடம் வேண்டினாள். அம்மா, அப்பா, பிள்ளை….என்று ஒரு அழகான குடும்பத்தை கொடுத்து, அவங்க உங்க அன்பினில் என்றும் வாழ்ந்து மற்றவங்களுக்கும் சாட்சியா வாழ நீங்க கட்டளை கொடுத்திருக்கீங்க இயேசப்பா. ஆனா என் கண் முன்னாடியே ஒரு குடும்பம் உடைய போகுதே……அவள் மனதினில் வேதனையோடு கேள்விகளை அடுக்கினாள்.
வேதாவின் முகமும் வேதனையால் நிறைந்திருந்தது. அவளின் அப்பாதான் பேச்சை ஆரம்பித்தார்..
ரூபன்…ஊர்ல உங்களுக்கு ஒரு நல்ல பெயர் இருக்கு. அதை ஏன் எப்படி கஷ்டப்படுத்துறீங்க. உங்க மனைவியையும், பையனையும் உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய் சந்தோசமா இருங்க….என்றைக்கும்….அவர் பேச
உள்ளுர்ல என்னை யார் மூலமாகவும் எதிர்க்க முடியாதுன்னு வெளியூர்ல ஒரு ரௌடியை பிடிச்சிட்டு வந்தியா….ரொம்பவே இளக்காரமாக அவர் பேச
இவளுக்கும் வேதனையாகி விட்டது. தன் அப்பாவை எப்படி இவர் ரௌடின்னு சொல்லலாம்…..கோபம் வந்தது அவளுக்கு.
அம்மா….நாம இங்க நிற்க வேண்டாம். தாத்தா வீட்டுக்கு போகலாம்…..என்று வேதா சொல்ல
என்னடா….உனக்கு அந்த தைரியம் வந்திருச்சா….புத்தி சரியானவுடன் என்னையே எதிர்க்கிற…..என்று சொன்னவர் அந்த கோபத்திலேயே வேதாவின் கன்னங்களை பதம் பார்த்தார் தன் கைகளால்.
அலறி விட்டான் அந்த அடியின் வேகத்தில் வேதாவும். அவளுக்கு எப்படியோ ஆகி விட்டது. அவளும் அழுது விட்டாள். இயேசப்பா….நீங்க எனக்கு கொடுத்த பிரெண்ட்….காப்பாத்துங்க ப்ளீஸ்….அவன் அப்பா மனம் மாறும் படி செய்யுங்க……தன் தேவனிடம் கதறினாள்.
உண்மையில் பிரச்சனையை இழுப்பதற்குத்தான் அவர் வந்திருக்கிறார் என்று அனைவரும் தெரிந்து கொண்டனர். அதுனால் யாரும் ஒன்றும் வாய் திறக்க வில்லை.
இந்த ஊரே உனக்கு எதிரா வந்தப்ப கூட உனக்கு புத்தி வரலையே. உன் என்னை செய்ய போறேன் பாரு….இன்னைக்கே முடிவாகணும்…..இந்த ஊர்ல நீ பெரியவனா….இல்லை நான் பெரியவனா….. பிரச்சனை என்ன என்று அவளால் புரிந்து கொள்ள முடிய வில்லை என்றாலும் ஜான் அங்கிளுக்கும் வேதா அப்பாக்கும் உள்ள பிரச்சனை….யார் பெரியவன் என்பதுதான்….ஆனா ஜான் அங்கிள் என்னைக்கும் இந்த மாதிரி பிரச்சனையில் தலையிடுறவர் கிடையாதே. அப்ப…..அவளுக்கும் தெளிவாக தெரிந்தது. வேதாவின் அப்பாக்கு இருக்கும் அந்த பொறாமையும், பெருமையும் சேர்ந்த குணம்….. ஆனா இந்த குணம் ரொம்ப பிரச்சனை ஆச்சே…..என்னை நரகம் வரைக்கும் கொண்டுட்டு போன குணம்…..அவள் நினைத்து கொண்டிருக்கும் போதே….அவள் அருகில் மிகவும் வெளிச்சம் தோன்றவும் புரிந்து கொண்டாள்.
ஒரு நியாய தீர்ப்பு எழுதப் பட போகுது….அன்னைக்கு பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சாருக்கு…..இன்னிக்கி வேதா அப்பாக்கு.
அந்த நேரம் தான் அவளுடைய அம்மாவும், மேரி ஆன்ட்டியும் வீட்டின் வாசலில் நுழைந்து கொண்டிருந்தனர். அம்மா…நீங்க ரொம்ப மென்மையானவங்க. உங்க கண் முன்னாடியே ஒரு விபரீதம் நடக்க போகுதே….நீங்க எத்தனை நாள் புலம்ப போறீங்களோ….நான் இங்க இருக்கிற நேரமா இந்த பிரச்சனை நடக்கணும்….அவள் தன்னையே கேள்வி கேட்டு கொண்டிருக்கும் போது…..ரொம்பவே பிரகாசமாக ஏஞ்சல் அவள் முன் தோன்றினார். அவளுக்கு கூட ஆச்சரியம்.
அத்தனை கூட்டத்தின் மத்தியிலும் தன் பெண்ணைதான் அவர் தேடினார். வேகமாக தன் பொண்ணின் பக்கத்தில் வந்து நின்றார். ஏதோ வித்தியாசம்….அவளுடைய அம்மாவால் கூட உணர முடிந்தது. தன் பெண்ணுக்கு முன்னாடி நிற்கும் நபரால் விபரீதம் நடந்து விட கூடாது என்பதுதான் அவருடைய பயமாக இருந்தது.
மேரி ஆன்ட்டியும் வேதாவின் அருகில் வந்து நின்றார். பயத்தோடு அவன் கரங்களை பிடித்து கொண்டார் மேரி ஆன்ட்டி.
அவளோடு என்றும் பேசும் ஏஞ்சல்தான். என்ன குட்டிமா…. எப்படி சண்டை போயிட்டு இருக்கு….. அவர் கேட்க
ஏஞ்சல்…அம்மா பக்கத்தில நிற்கிறாங்க. நான் எப்படி பேச முடியும். அம்மா கண்டுபிடிச்சிட்டா…..அவள் கெஞ்சி கேட்கவும்
சரி, நான் சொல்ல வேண்டிய விசயத்தை சொல்லிறேன்….அவர் சீரியசாக சொல்ல
நீங்க வந்ததுமே தெரிந்சிக்கிட்டேன் ஏஞ்சல். இங்க எதுவும் பெரிய பிரச்சனை நடக்காதுன்னு…..அதுனால இப்ப நான் பயப்படாம இருப்பேன்…அவள் சந்தோசமாக சொல்ல
அது உன் கையில் தான் இருக்கு குட்டிமா. நீ எந்த அளவுக்கு நம்ம இயேசப்பா பேச்சுக்கு கீழ்படிகிறகிரயோ அதை பொறுத்துதான் மன மாற்றமா…..இல்லை நரகமா என்பது தீர்மானிக்க படும்.
உண்மையில் அவளால் புரிந்து கொள்ள முடிய வில்லை. இவள் பேசி கொண்டிருக்கும் போதே…… வேதாவின் அப்பாகையில் எப்படி அந்த கூர்மையான ஆயுதம் கிடைத்தது என்று அவளுக்கே தெரியாது. வீட்டுக்கு முன் இருந்த தோட்டத்தில் எடுத்தாரா இல்லை…..ஏற்கனவே கையில் கொண்டு வந்திருந்தாரா….அவள் மனதில் கேட்டு கொண்டு இருக்கும் போதே…..
அந்த இடத்தில் இருந்து அவளை வீட்டுக்குள் கூட்டி செல்ல அவள் அம்மாவும், வேதாவை கூட்டிட்டு செல்ல மேரி ஆன்ட்டியும் பிரயாசம் எடுத்து கொண்டிருந்தனர்.
வேதா அப்பாவின் கையில் இருந்த ஆயுதத்தை வேதாவின் அம்மா அகற்ற போராடி கொண்டிருந்தார்.
ஏன் பைத்தியக்காரன் மாதிரி நடந்துக்குறீங்க. இது வரை ஜான் அண்ணனுக்கு பண்ணின பிரச்சனை போதாதுன்னு இப்ப அவரை கொலை செய்யவே நினைக்கிறீங்க…..முதல்ல கையில இருக்கிற அதை கீழே போடுங்க. உட்கார்ந்து பேசுவோம்…..அவர் சொல்லுவதை வேதாவின் அப்பா காதில எடுத்து கொண்டதாக தெரிய வில்லை.
இன்னைக்கே எனக்கு முடிவு தெரியணும். இது வரை இவனுக்கு விரோதமா இருந்தவன் எல்லாம் இப்ப….. ஜான் அப்படி பண்ணிருக்க மாட்டார். அதுனால இனி பிரச்சனை இல்லாம அவரோடு நல்ல படியா இருப்போம். இப்படி ஊரே பிரிஞ்சி இருந்தா நல்லாவா இருக்கும்…ன்னு எனக்கே புத்தி சொல்லுறான். ஊர்ல ஒருத்தன் கூட என்னை மதிக்க மாட்டீங்கிறான். எப்ப பார்த்தாலும் ஜான் இதை பண்ணினார்….இதை சொன்னார்…..எப்ப பார்த்தாலும் இவனை பத்திதான் பேசுறாங்க…..அப்ப நான் என்ன இளிச்சவாயனா….அவர் ஒவ்வொரு வார்த்தையாக சொல்ல இவளுக்கும் புரிந்தது. ஆனா நான் என்ன செய்ய முடியும்….என்று இவள் யோசிக்க, கோபத்தின் ஆக்ரோஷத்தில் அதை ஜான் அங்கிள் பக்கம் நீட்டவே முயற்சிகள் எடுத்தார்.
அவளின் அப்பாவும் வேதாவின் அப்பாவை தடுத்து நிறுத்தி கொண்டிருந்தார். ஆனாலும் திமிறி கொண்டுதான் நின்றார். வெளியில் நின்று கொண்டிருந்த மக்களும் ஏதோ ஒரு சினிமா படம் பார்த்தது போல தோணியது.
அவள் அப்பாவின் கையில் கூட அந்த ஆயுதம் சில இடங்களில் குத்தி கிழித்தது. அவள் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. ஏஞ்சல்….எங்க அப்பாக்கு….அவள் அழுதாள்.
மேரி ஆன்ட்டி எவ்வளவோ சொல்லியும், ஜான் அங்கிள் ரூபனை சமாதானப்படுத்த முயற்சிகள் செய்து கொண்டிருந்தார்.
ரூபன். உன்னை நான் என்னைக்குமே எதிரா நினைச்சதே இல்லை. சப்போஸ் நான் வைச்சிருக்கிற விவசாய உயர் அதிகாரி பதவி கூட நீயே எடுத்துக்கோ. ஆனா இனிமே கோபம் மட்டும் படாதே….அவர் சொல்ல
நீ என்ன எனக்கு பிச்சை போடுறியா…… இன்னும் அவரில் கோபம் கூடவே செய்தது.
இதுக்கு எப்படியாவது முடிவு வரணும்…அவள் யோசித்தாள்.
சொல்லு குட்டிமா. நம்ம இயேசப்பா சொன்னதை செய்ய போறியா….ஏஞ்சல் இவளை பார்த்து கேட்கவும்
ஒன்றும் சொல்ல முடியாமல் திணறினாள். வேதாவின் அப்பாவை நகர முடியாத அளவுக்கு பிடித்திருந்த தன் அப்பாக்கு மட்டும் ஆபத்து சீக்கிரத்தில் நேரிட போகுதுன்னு அவள் மனம் சொல்லி கொண்டே இருந்தது.
சொல்லுங்க ஏஞ்சல். நான் என்ன பண்ணனும்….உடனே செய்யுறேன்….. அவள் அழுது கொண்டே கேட்க
இப்ப நீ ஏன் அழுற. உங்க அப்பாக்கு ஒண்ணும் ஆகாது. நரகம் காத்திட்டு இருக்கிறது வேதாவின் அப்பாக்கு…..நீ அவரை அதில இருந்து காப்பாத்தனும்ங்கிறது நம்ம இயேசப்பாவுடைய சித்தம்……உண்மையில் யோசித்தாள்.
ஆனா நான் ரொம்ப சின்ன பொண்ணு….என்னால என்ன செய்ய முடியும் ஏஞ்சல்…..அவள் கேள்வியோடு ஏஞ்சலை பார்த்தாள்.
மற்றவங்க வேதனைப்படும் போது அதை கண்டு துடிச்சி போவியே அந்த ஆத்துமா பாரம் போதும் குட்டிமா….அவர் சொல்ல
உண்மையில் தனக்குள் அப்படி என்ன நல்ல குணம் இருக்குதா என்ன….மனதினில் கேட்டுக் கொண்டாள். என்னை சமாதானப்படுத்த ஏஞ்சல் சொல்லுறாங்க…அவள் தன்னையே தேற்றிக் கொண்டாள்.
அவளுடைய மன எண்ணங்களுக்கு அவர் ஒன்றும் சொல்ல வில்லை.
குட்டிமா. ஒரு நிமிசம் வேதா அப்பா பக்கத்தில என்ன நடக்கிறதுன்னு பாரு…..ஏஞ்சல் சொல்ல
அப்படி என்ன அதிசயம் நடக்க போகுது…..மனதினில் யோசித்து கொண்டே பார்த்த போது உண்மையில் அதிர்ந்து போனாள்.
வேதா அப்பாவின் அருகில் இரு பெரிய பூதங்கள் நின்று கொண்டிருந்தன. ஏஞ்சல்….அதை பார்த்தா….ஆமா ஏஞ்சல்…நான் ஏற்கனவே இதை நரகத்தில் பார்த்திருக்கேன். அது எப்படி இங்க….அவள் சொல்லி கொண்டிருந்த போது
வேதா அப்பாவை கூட்டிட்டு போக வந்திருக்குது. இப்பனாச்சும் புரிஞ்சிக்கிவியா குட்டிமா. அவர் நரகத்திற்கு போகாம இருக்கணும்ன்னா நீ நம்ம இயேசப்பா வார்த்தைக்கு கீழ்படியனும்….அவர் சொன்ன போது
ஏஞ்சல்…எப்படி வேதாவின் வாழ்கையில் ஒரு அற்புதம் நடந்துச்சோ நீங்களே ஒரு அற்புதம் செய்யுங்க, ப்ளீஸ். நான் என்ன செய்ய போறேன்….நான் இங்க இருந்து கிட்டே அவருக்காக prayer பண்ணுறேன்…..அவள் சொல்ல
முதலில் தேவனுக்கு விரோதமான இந்த கீழ்படியாமை உன்கிட்ட இருந்து விலகட்டும்….. அவர் கோபமாக சொல்ல பயந்தே போனாள்.
தேவன் உன்கிட்ட சொல்லுற காரியத்தை செய்யு முதல்ல…..இதுதான் அவளுக்கு முதல் முறை, ஏஞ்சலின் கோபத்தை பார்க்கிறாள். என்றும் ஏஞ்சலின் சிரித்த முகத்தை பார்த்தவள் கொஞ்சம் பயந்து போனாள்.
என்ன செய்ய ஏஞ்சல்…... அவள் கேட்க
நீ முதல்ல வேதாவின் அப்பா முன்னால நில்லு……. என்று ஏஞ்சல் ஆணையிட
குழப்பத்தின் மத்தியில், சண்டைகள் நடந்து கொண்டிருக்கும் போது….எப்படி தன்னால் அவர் முன் நிற்க முடியும்….அவர் யோசித்து கொண்டிருக்கும் போதே
ஏஞ்சல் அவளின் கைகளை பிடித்து கொண்டு செல்வதை அவள் உணர்ந்தாள். அவள் அம்மாதான் பயந்து விட்டார்கள். குட்டிமா….அங்க போகாத….அவர் கத்தி கொண்டு இருக்கும் போதே
ஏஞ்சல் அவளை வேதாவின் அப்பா அருகில் நிப்பாட்டி விட்டார். ஜான் அங்கிள், அவள் அப்பா, மேரி ஆன்ட்டி, அவள் அப்பா, வேதா கூட பயந்து போனான்.
அவன் ஓடி அவள் அருகில் வந்தான். நான் என்ன செய்ய ஏஞ்சல் எப்ப??? அவள் கேட்டதுக்கு
முதல்ல நீ நம்ம தேவனின் சித்தத்தை செய்யறதுக்கு ஒப்பு கொடு….. மிச்சத்தை நம்ம இயேசப்பாவே பார்த்து கொள்ளுவாங்க….அவர் சொல்ல
சாரி இயேசப்பா. நான் ரொம்பவே விளையாட்டா இருந்துட்டேன். ஆனா உங்க மன பாரத்தை என்னால புரிஞ்சுக்க முடியுது. வேதா அப்பாக்கு நீங்க கொடுக்கிற கடைசி சந்தர்ப்பம். இதுலயயும் அவர் தோத்து போயிட்டார்னா….அடுத்து அவர் நரகத்திற்குத்தான் போக வேண்டியதா ஆயிரும். என் இயேசப்பாவுடைய இருதய வலியை முதலில் அசட்டை பண்ணினதற்காக சாரி கேட்டுக்குறேன்….ப்ளீஸ்….உங்க சித்தத்தை நீங்க செய்ய நான் முழுமையா என்னை அர்ப்பணிக்கிறேன்…..அவள் கண் மூடி தன் தேவனை வேண்டினாள்.
என்ன செய்யுற…..வேதா கத்துவது மட்டும்தான் அவளுக்கு கேட்டது.
வேதாவின் அப்பா ஜான் அங்கிளை விட்டு இவள் மீது அந்த ஆயுதத்தை நீட்ட வருவதை இவள் கண்களும் பார்த்தது. அவள் அம்மாவும், அப்பாவும் குட்டிமா….கத்துகிற குரலும் இவளால் கேட்க முடிந்தது.
ஜான் அங்கிள், மேரி ஆன்ட்டி, பாட்டிமா, வேதாவின் அம்மா….எல்லாரும் …அவளை ஒண்ணும் பண்ணாத…… அதிகமாகவே கதறல் சத்தம் கேட்டது.
கிட்டதட்ட அந்த ஆயுதம் அவள் கழுத்து பக்கம் வரைக்கும் வந்து விட்டது….அவளாலும் பார்க்க முடிந்தது. இயேசப்பா….ஒரே வார்த்தை தான் சொன்னாள்.
அந்த ஆயுதம் அவள் கழுத்தை தொடும் முன், அது சுக்கல் சுக்கலா உடைந்து சிதறி போனது. எல்லோரும் வாயை திறந்து பார்த்து கொண்டிருந்தனர். வேதா மட்டும் புரிந்து கொண்டான். தேவனுடைய அற்புதம் நடை பெறுகிறது என்று…..கண்களை மூடி தேவனுக்கு ஸ்தோத்திரங்களை செலுத்திய வண்ணம் நின்றான்.
வேதாவின் அப்பா கூட பயந்து போனார். ஆனால் அவர் பயந்துஓட நினைப்பதற்குள்…..அவள் அப்பா கூட அவளை பிடித்து அவர் பக்கம் இழுக்க நினைப்பதற்குள்…………….
அவள் வாயில் இருந்து வந்த அந்த வார்த்தையை யாரும் எதிர்பார்க்க வில்லை. ஏன் ……அவள் கூட எதிர் பார்க்க வில்லை.
பொல்லாத பிசாசே….நீ எந்த இடத்தில் இருந்து வந்தியோ….மீண்டும் அதே இடத்திற்கே போ……இயேசுவின் நாமத்தினால்….அவள் குரல் பயங்கர அதிரலோடு ஒலித்தது. வேதாவின் அப்பா பக்கத்தில் இருந்த இரண்டு பூதங்கள் மட்டுமில்லை, வேதாவின் அப்பாவில் இருந்து கூட ஒரு பெரிய பூதம் வெளியே போவதை அவள் பார்த்தாள். அது பயங்கர சத்தம் எழுப்பி கொண்டு ஓடுவதை அவளால் பார்க்க முடிந்தது. இயேசப்பா…..உங்க நாமத்திற்கே என்றென்றும் மகிமை உண்டவாதாக….அவள் சொல்லி கொண்டிருக்கும் போதே….
தூரத்தில் வேதா….ஆமென்….சொல்லுவதை அவளும் கேட்டாள். ஆனால் அடுத்த நிமிடம் அவள் கண்கள் சொருகுவதை போல உணர்ந்தாள்.
அந்த நேரத்திலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடு கூட என்றென்றும் இருப்பாராக,…..ஏஞ்சலின் வார்த்தைகள் தெளிவாக கேட்டது அவளுக்கு. அடுத்த நிமிடம் மயங்கினாள் அவள். பக்கத்தில் ஏற்கனவே பயங்கர கத்தலோடு மயங்கின நிலையில் வேதாவின் அப்பாவும் கிடந்தார்.
அவள் கீழே விழுந்த போது அவள் அப்பாதான் பதைபதைத்து அவளை தூக்கினார். அவளுடைய அம்மா மயங்காத குறைதான். என்ன செய்வது….புரியாமல் எல்லாரும் முழித்து கொண்டிருந்த போது, வேதா சொன்னான்.
அங்கிள்….அவளுக்கு ஒண்ணும் இல்லை. இப்போதைக்கு ரெஸ்ட்தான் அவளுக்கு தேவை…அவளை வீட்டில போய் படுக்க வைங்க…அவன் சொல்லவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர். ஜான் அங்கிள்தான் பேச ஆரம்பித்தார்….வேதா சொல்லுறானே…..முதல்ல அவளுக்கு தேவையான ரெஸ்ட் கொடுப்போம்….என்று சொல்லவும்
அவளை அப்படியே தூக்கிய வண்ணம் வீட்டினில் கொண்டு சென்றனர். அவளை படுக்கையில் படுக்க வைத்தவர் அவள் பக்கத்திலேயே அமர்ந்தார். அவள் அம்மா கூட தன் மகளின் அருகிலயே அமர்ந்தார். இருவரின் கண்களில் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. நம்ம பொண்ணுக்கு தீடீர்னு என்ன ஆச்சு…..இருவரின் மனதிலும் கேள்வி எழும்பியது.
ஆனால் ஜான் அங்கிளால் புரிந்து கொள்ள முடிந்தது…… இது தேவன் அனுமதித்த காரியம் என்று…..ஆனா சின்ன பொண்ணுன்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா….அவரால் அதற்கு மேல் யோசிக்க முடிய வில்லை. கீழே விழுந்த வேதா அப்பாக்கு என்ன ஆயிற்று என்று பார்க்கா வேண்டுமே…..மனதினில் நினைத்தவாறு வெளியே விரைந்தார்.
வேதா அம்மாவும், அவனும் அவன் அப்பா அருகில் தான் இருந்தனர். அந்த மயக்கத்தில் கூட அவர் புலம்பி கொண்டே இருந்தார்.
அண்ணன்….இங்க கொஞ்சம் கேளுங்க…அவர் புலம்புறதை……வேதா அம்மா சொல்ல மேரி ஆன்ட்டி கூட கேட்க ஆரம்பித்தார்.
அந்த நிலத்துக்கு தீ வைத்தது என் பையன்தான். ஆனா யாரும் அங்க இல்லாததால், நான் என் மேல பழி வந்துரும்னு நினைச்சி ஜான் மேல பிரச்சனையை திருப்பி விட்டுட்டேன்……..அவர் புலம்பும் போதுதான் என்ன நடந்தது என்பதும், ஏன் பிரச்சனை வந்தது என்பதையும் புரிந்து கொண்டனர்.
ஆனால் ஜான் அங்கிளுக்கு முதலில் இருந்தே சந்தேகம் இருந்தது…வெளியில் காட்டிக் கொள்ள வில்லை. ஆனா இந்த பிரச்சனையில் வேதா உள்ளாகி இருப்பான் என்பது அவருக்கு கூட தெரியாத இரகசியம்.ஆனா….இதினால என்ன ஆகப் போகுது….மனதினில் நினைத்து கொண்டார்.
தேங்க்ஸ் இயேசப்பா, உங்க கிருபையால வேதா அப்பாவையும் எங்ககிட்ட திருப்பி தந்துடீங்களே. கோடான கோடி நன்றிகள் உமக்கே உண்டவாதாக, ஆமென்…….அவர் சத்தமாக சொன்னார்.
வேதா கூட தன் தேவனுக்கு நன்றிகளை செலுத்தினான்.
வேதா அப்பா கண் விழித்த போது, அவரால் எழும்ப கூட முடியாத அளவுக்கு அசதியாக உணர்ந்தார். பக்கத்தில் ஜான் அங்கிளைத்தான் முதலில் பார்த்தார்.
ஆனா…… இவனா…..என்று அவர் நினைத்து கொண்டிருக்கும் போதே…..அவர் வாய் அவரையும் மீறி பேச ஆரம்பித்தது.
ஜான்….என்னை மன்னிச்சிரு. நான் உன்னை ரொம்பவே கஷ்டப்படுத்திட்டேன். சாரி…..அவர் சொல்லுவதை அவரால் கூட நம்ப முடியலை. ….வியப்பாக தனக்குள் என்னவோ நடந்து விட்டது என்பதை மட்டும் உணர்ந்தார்.
அதெல்லாம் ஒண்ணும் கிடையாது ரூபன். நான் என்றும் உன் மேல் கோபப்பட்டதே இல்லை. நீ எங்க வேதாவுடைய அப்பா. எப்படி எங்களுக்கு உன் மேல கோபம் வரும். இந்த பதவி, போட்டி, பொறாமை, எல்லாம் தூக்கி போட்டிரு…..நான் இப்பவும் உன்னை என்னுடைய அண்ணனா நினைக்கிறேன். மத்தவங்க என்ன சொல்லுறாங்கன்னு நீ நினைக்காத. இன்னிக்கி உன்னை ஆகா….ஓகோன்னு புகழுர இதே உலகம்…..நாளைக்கே உன்னை கெட்டவன்னு சொல்லுறதுக்கு ஒரு நிமிசம் ஆகாது. என்னுடைய இயேசப்பா உன்னை நேசிக்கிறாங்க. நானும் உன்னை நேசிக்கிறேன்…..சப்போஸ் உனக்கு என் மேல இன்னும் மனஸ்தாபம் இருந்தா உன் கால்ல வேணா விழுந்து மன்னிப்பு கேட்குறேன்…..அவர் சொல்லி கொண்டே போக உண்மையில் உடைந்து போனார் வேதாவின் அப்பா. அவர் கண்களிலும் கண்ணீர் வந்தது.
நான்….இப்படிப்பட்ட ஒரு அருமையான மனுசனையா ஓட ஓட விரட்டி இருக்கேன்… அவருக்கே அவமானமா இருந்தது அவரை குறித்து.
நான் நிறைய தப்பு பண்ணிட்டேன் இயேசப்பா…..உங்களை மறந்து….உங்க அன்பை மறந்து….எல்லார் மேலயும் தப்பு கண்டுபிடிச்சிட்டே ஓடி கடைசியில நானே தப்பானவனா மாறிட்டேனே……என்னை மன்னிச்சிருங்க இயேசப்பா….ப்ளீஸ்… மனதினில் சொல்லி கதற ஆரம்பித்து விட்டார்.
உண்மையை சொல்லு….அவர் காதுக்கு அருகில் அந்த குரல் கேட்கவும்….தான் செய்த தப்பை நினைத்து தானே குருகியவராய் ஜான்….நான் உனக்கு விரோதமா ஒரு பெரிய தப்பு பண்ணிட்டேன்….என்று அவர் சொல்ல ஆரம்பித்த போதே….ஜான் அங்கிள்
எனக்கும் தெரியும் ரூபன். அந்த தீ விசயம் தான…..உன்னை நீ ரொம்பவே கஷ்டபடுத்தாத. அதுனால ஒண்ணும் இல்லை. நீ எங்களுக்கு மீண்டும் இயேசப்பா கிருபையால கிடைச்சிருக்கியே, அது போதும் எங்களுக்கு. பழசை எல்லாம் நம்ம இயேசப்பாகிட்ட சொல்லிட்டு மறந்திரு….. வெளியே இதை குறித்து பேசிக்க வேண்டாம்….இடையிலேயே பேச்சை விட்டார்.
உண்மையில் அவருக்கு ஜான் அங்கிள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க மனசில் ஆவி உம்பியது. எப்படி…இது எப்படி நடந்தது….என் கண் முன்னாடி என் இயேசப்பா எல்லாரையும் நல்லவங்களா உருவாக்கி இருக்கும் போது, அப்ப கண்ணை மூடிட்டே ஓடினேன். ஆனா இப்ப தெரியுதே…ஜான்கிட்ட காணப்படுற இந்த உயர்ந்த குணம், பொண்டாட்டி மனசில இருக்கிற அன்பு, என் பையன் என்கிட்டே எதிர்பார்க்கிற அன்பு….எல்லாம் என்னால இப்ப புரிஞ்சுக்க முடியுதே. நீங்க என் கண்களை திறந்து விட்டதற்காக நன்றிகள் ஆண்டவரே. இனி உங்க பிள்ளையா தான் என் கடைசி நொடி வரை வாழுவேன்….மனதினில் உறுதி எடுத்து கொண்டார்.
அவர் நின்று கொண்டிருந்த இடத்திற்கு பக்கத்தில் இருந்த மரத்தின் பூக்கள் அவர் மேல் விழுந்து அவரை அதிகமாக ஆசீர்வதிப்பது போல இருந்தது. நீங்க என் கூட இருக்கீங்கப்பா. இது போதும் எனக்கு….நம்பிக்கை கொண்டவராய் எழ முயன்றார். கஷ்டமாக உணர்ந்தார். மூவரும் அவரை தாங்கி பிடித்தனர்.
நான் இப்பவும் உங்களை நேசிக்கிறேன்ப்பா…… வேதா அவர் கைகளை பற்றி கொண்டு சொல்லவும் உடைந்தே போனார். நானும் குட்டிப்பா….அவர் சொன்ன வார்த்தைகளை நம்பாமல் அவரையே பார்த்து கொண்டிருந்தான். மனதினில் தன் தேவனுக்கு நன்றிகளை செலுத்தினான் அவன்.
உள்ளே அவரை தாங்கலாய் பிடித்து சென்றனர். அங்கிருந்த சேரில் அவரை உட்கார வைத்தனர். பாட்டிமா….கொஞ்சம் எங்க அப்பாக்கு காபி கிடைக்குமா….என்று வேதா கேட்ட போது
உங்க அப்பாக்கு இல்லாமையா…..பாட்டி சொல்ல....நானே கொண்டு வரேன் வேதா…மேரி ஆன்ட்டி கிச்சனில் நுழைந்தார்.
அப்பொழுதுதான் வேதா அப்பாவின் கண்கள் அந்த பெண்ணை தேடினது. ஜான்….அந்த பொண்ணு எங்க இருக்கா…… நான் அவளை கண்டிப்பா பார்க்கணும்...வேதாவின் அப்பா சொல்ல
கொஞ்சம் டயர்டா இருக்கா. அதுனால இப்ப தூங்கிட்டு இருக்கா….ஜான் அங்கிள் சொன்னார்.
உண்மையில் என்னதான் நடந்துசுப்பா…..பாட்டிமா கேட்கவும்
அது அம்மா, என்னன்னு தெரியலை…..நான் அந்த பொண்ணை நோக்கி அந்த ஆயுதத்தை நீட்டினப்ப என்னால தெளிவா பார்க்க முடிந்தது…..ரொம்பவே அந்த பொண்ணுக்குள்ள இருந்த பிரகாசமான உருவம், என்னுடைய அந்த ஆயுதத்தை உடைச்சிருச்சு. அப்ப நான் பயந்து போய் ஓட பார்த்தப்பதான், அந்த உருவம்……இப்ப புரியுது….அது என்னுடைய இயேசப்பா மறு ரூப மலையில நம்ம இயேசப்பா தன் சீசர்களுக்கு காட்சி அளித்தப்ப எப்படி இருந்தாரோ….அதே மாதிரித்தான் அவர் உருவம் இருந்துச்சு….. என்னை அவர் பிடிச்சாரு…அப்ப எனக்குள்ள இருந்து ஏதோ ஒண்ணு வெளியேறுகிற மாதிரி தோணுச்சு…. அது என்னவோ கத்தின மாதிரி கேட்டுச்சு….நான் இவனை விட்டு போக மாட்டேன்னு பயங்கரமாய் கத்துச்சு…அப்ப நம்ம இயேசப்பா ஒரே ஒரு உறுமல் சத்தம் மட்டும்தான் கொடுத்தார்….அது என்னை விட்டு ஓடுறதை நானும் பார்த்தேன்….அவர் சொல்ல எல்லாரும் ஆச்சரியத்தின் உச்சத்தில் இருந்தனர். அவள் அம்மா, அப்பா கூட நம்ப முடியாமல் கேட்டனர். தன் பெண்ணின் மூலமாய் தன் தேவன் செய்த அற்புதத்தை அவர்கள் மனம் முழுவதும் நன்றிகள் சொல்லி தன் தேவனை போற்றினர்.
கொஞ்சம் கஷ்டப்பட்டு அவள் இருக்கும் அறையில் வந்த வேதாவின் அப்பா, அவளை பார்த்தவாறு…..உண்மையிலேயே இந்த பொண்ணு என் வாழ்கையை மாத்தறதுக்காக என் இயேசப்பா அனுப்பி வைச்ச ஏஞ்சல்ன்னு நான் நம்புறேன்…...நன்றிகள் ஆண்டவரே!!! சத்தமாக சொன்னார்.
அப்பா, நீங்க மட்டுமில்லை. என்னுடைய இயேசப்பா என் வாழ்க்கையையும் மாத்தறதுக்காக இந்த பொண்ணை தான் என் பிரெண்டா அனுப்பி வைச்சாங்க….அவன் மனதினில் தன் தேவனுக்கு நன்றிகள் சொல்லி கொண்டான். தனக்கு நடந்த அற்புதத்திற்கும் அவள் தான் காரணம் என்று அவள் சொல்லாமலே அவனும் புரிந்து கொண்டான். ஆனால் வெளியே சொல்ல இயேசப்பாவின் அனுமதி இல்லாததால் அமைதியாக இருந்தான்.
அவர்கள் பேசும் எதை பற்றியும் தெரிந்து கொள்ளாத நிலையில் இருந்தாள் அவள். தேவனாகிய கர்த்தரே உம்முடைய நாமத்திற்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக…..மீண்டும் மீண்டும் அவள் மனம் அதை தான் சொல்லி கொண்டே இருந்தது.
Bible Incidents (for kids) – 34 Bible Incidents (for kids) – 35
பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 35
Daily Bible Verse
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
« Feb | ||||||
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
Newsletter
Categories
Archives