• பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 27

    அவள் மனம் இன்னும் ஏன்….என்றுதான் கேட்டுக் கொண்டிருந்தது. என்னுடைய இயேசப்பா ரொம்ப எங்க மேல அன்பா இருக்காங்களே. அப்ப ஏன் நீதிமானா ஆக நினைக்கிறவங்க கூட அவர் சமூகத்தில பிரவேசிக்க முடியலை.

    என் இயேசப்பா என்னை முழுமையா நேசிக்கிற தகப்பனா இருந்தாலும், அவர் நீதி தவறாத நீதிபரர் என்பது அவள் மனதுக்கு தெரிந்தாலும், என் இயேசப்பா ஏற்றுக் கொள்ள நினைத்த ஆவி, அவரை பற்றி தெரிந்து கொள்ளுறதுக்கு முன்னாடியே நரகத்தில சித்திரவதை பட போயிருச்சே என்பதுதான் அவளுடைய ஆதங்கம்.

    கண்ணீரை துடைத்து விட்டு, தன் அன்றாட பணியில் ஈடுபட ஆரம்பித்தாள்.

    அம்மா, என்னுடைய சூவை பார்த்தீங்களா???? அவள்தான் தன் அம்மாவிடம் கேட்டு கொண்டிருந்தாள்.

    அங்கதான் வைச்சேன் குட்டிமா, நல்லா தேடிப்பாரு…….. அம்மாவின் வார்த்தைகள் கிச்சனில் இருந்து வந்தது. அவளுக்கு ஸ்கூல் கிளம்பும் நேரம். அவசர அவசரமா அவளுடைய லஞ்ச் பேக்கை ரெடி பணி கொண்டிருந்தார்.

    தேடி பார்த்தாள். பாவம் அவள் இருந்த மன நிலையில் அவளுடைய கண்களுக்கு சூ தென்படவே இல்லை. தனது ரூமை முழுக்க முழுக்க புரட்டி பார்த்து விட்டாள். ஆனால் சூ மட்டும்தான் கிடைத்த பாடில்லை.

    சிறிது நேரம் என்ன செய்வதென்றே தெரியாமல் அப்படியே உட்கார்ந்து விட்டாள். அவளுக்கு அழுகை மட்டுமே வந்தது. இந்த சூ கூட என் கண்ணுக்கு தென் பட மாட்டிக்குது………… ஏன் இயேசப்பா, நீங்க கூட என்னை இப்படி சோதிக்கிறீங்க…….. காலையில் இருந்து என்னை அழ வைச்சிட்டே இருக்கீங்க……… உட்கார்ந்து அழ ஆரம்பித்தாள்.

    என்ன செய்வதென்றே அவளுக்கு தெரிய வில்லை. இன்னும் ஐந்து நிமிசத்தில் அவளுடைய வேன் வந்து விடும். ஆனால் இது வரை அவள் தன்னை தயார் படுத்தி கொள்ளவே இல்லை. சுவரை பார்த்து வெறித்த மாதிரி உட்கார்ந்து விட்டாள். இன்னைக்கி ஸ்கூல் அவ்வளவுதான் போல……மனதினில் நினைத்து கொண்டாள்.

    ஏன் இயேசப்பா சொல்லுங்க…… உண்மையில் ராசிகா அப்பா இன்னிக்கி தான் உங்களை உண்மையான கடவுள்ன்னு புரிஞ்சிக்கிட்டார். ஆனா அடுத்து அவர் உங்களை பத்தி தெரியறதுக்குள்ள நரகம் போயிட்டாரே…… இதுதான் நீங்க எங்க மேல வைச்சிருக்கிற பாசமா….. அட்லீஸ்ட் ஒரு நாள் அவருக்கு கிருபை பாராட்டி இருந்தா கூட அவரும் உங்களை பத்தி தெரிஞ்சிருப்பாரே……அடுத்து உங்களை மனதில ஏற்றுக் கொள்ளுறதும், வேண்டாம்னு விலகி போறதும் அவருடைய இஷ்டம். பட் நீங்க வாய்ப்பு கூட கொடுக்கலையே……. நான் எப்படி வெளியே போய் என் இயேசப்பா ரொம்ப அன்பானவங்கன்னு சொல்ல முடியும்…… எல்லாரும் என்கிட்ட கேட்பாங்களே…… உங்க இயேசப்பா உன் பிரெண்ட் அப்பாவுக்கு கொஞ்சம் கூடுதல் டைம் கொடுத்திருந்தா நல்லா இருக்குமே. அப்ப நான்  என் முகத்தை போய் எங்க வைச்சுக்குவேன்……. சொல்லி கொண்டே அழுதாள்.

    நீங்க இதுக்கு பதில் சொல்லுற வரைக்கும் நான் ஸ்கூல் போக மாட்டேன்…..அழுது கொண்டே சத்தியாக்கிரகம் பண்ண ஆரம்பித்தாள். நீங்க சொல்லுங்க….இப்பவே பதில் சொல்லுங்க….. அவள் அப்படி பிடிவாதம் பிடித்து கொண்டிருப்பது அவளுக்கே ஓவராக தோன்றினாலும் அந்த நேரத்தில் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்தாள்.

    அவளுடைய லஞ்ச் மற்றும் ஸ்கூல் பேக்கோடு அவளை பார்க்க வந்த அவளுடைய அம்மா, உண்மையில் வியப்படைந்தார். இன்னும் தன் அருமை மகள் கிளம்பாமல் அமர்ந்திருப்பது அவருக்கு கூட ஆச்சர்யம்.

    என்ன குட்டிமா, என்ன ஆச்சு உனக்கு…….உடம்பு ஏதும் சரியில்லையா…… கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் இல்லை என்று பதில் சொல்லியவள்…..

    அப்ப ஏன் இப்படியே உட்கார்ந்துட்ட…..இப்ப வேன் வர்ற நேரம். வேகமா கிளம்பு…… என்று அம்மா பதட்டத்தோடு சொல்லி கொண்டிருக்க…..

    நீங்க என்னதான் அம்மா மூலமா என்னை சாந்தப்படுத்த நினைத்தாலும், நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுற வரைக்கும் நான் உங்களை விட மாட்டேன்…….. தனக்குள் சபதம் எடுத்துக் கொண்டாள்.

    பாவம் அவள் மனதில் நடந்து கொண்டிருக்கும் போராட்டத்தை தெரிந்து கொள்ள  முடியாத அம்மா, அவளை இன்னும் தாங்கி கொண்டிருந்தார். எதுவும் சரியில்லையா….. அவருடைய கேள்வி அதுவாகவே இருந்தது.

    வாயை திறந்து, நான் இன்னைக்கி ஸ்கூல் போகலைமா…… வீட்டினில்தான் இருக்க போறேன்…….என்றவாறு முகத்தை தூக்கி வைத்து கொண்டு சொல்லவும் அம்மாக்கும் சிறிதளவு புரிந்து விட்டது.

    தன் செல்ல பொண்ணு தேவையில்லாமல் பிடிவாதம் பிடிக்கிறாள் என்று அவருக்கும் புரிய ஆரம்பித்தது.

    அவளிடம் சமாதானப்படுத்த நினைப்பதற்குள் ஸ்கூல் வேன் வந்து ஒலி எழுப்பி கொண்டிருந்ததை அவள் அம்மா பார்த்தவர்…….. வேறு வழியின்றி இப்ப எழுந்திரிக்க போறியா….. இல்லை அடி வேணுமா….. ஒரு வார்த்தைதான் கடினமாக கேட்டார். அவள் தானாக எழுந்து கிளம்ப ஆரம்பித்தாள். சூ கூட அந்த நேரம் அவள் கண்களில் தென்பட்டது.

    வேகமாக சூவை மாட்டிக் கொண்டவள், உம்மென்ற முகத்தோடு கிளம்பினாள். இவள் வருவதற்காக வேன் ஐந்து நிமிடம் நிற்க வேண்டியதிருந்தது. முகம் ஏன் இப்படி போகுது….. கிளம்பும் போது, கொஞ்சம் சிரிச்சிட்டி போ….. என்ற அவளுடைய அம்மாக்காக போலியாக சிரித்து வைத்தாள். bye…. என்று சொல்லிய வண்ணம் கிளம்பினாள்.

    அவளுடைய அம்மா வேன் அவரிடம் இருந்து கடந்த பின்பும் கூட, கையசைத்து கொண்டிருந்தது, அவள் கண்களுக்கு தெரிந்தது.

    ஒரு நிமிடம் யாரோ அவள் இதயத்தை எதையோ வைத்து தாக்குவதை போல உணர்ந்தாள். இல்ல வலிக்குது இயேசப்பா….. முடியலை……. புரிந்து கொண்டாள். பிடிவாதத்தால் தன் இயேசப்பாவை தான்தான் காயப்படுத்தினோம் என்று. கண்களில் கண்ணீர் திரண்டது. என்னை நரகத்தில இருந்து பூமியில் எடுத்தவர், குளோரி அக்காவுக்கும் கிருபை பாராட்டி ஆவிகளின் உலகத்தில் இடம் கொடுத்து, ஒரு ஊழியத்தையும் கொடுத்தவர், உலகத்திற்கு பின்னாடி ஓடிட்டு இருந்த குளோரி அக்கா அம்மாவை ஊழியத்தின் பாதையில் அழைத்து போய் கொண்டிருப்பவர், குளோரி அப்பாக்கு இன்னும் மன வைராக்கியத்தை கொடுத்து, அவருடைய வழியில் நடத்தி செல்பவர்……அவருக்கு தெரியாதா…… யாருக்கு கிருபை பாராட்டணும்னு….. என் எனக்கு அந்த அளவு பிடிவாதம் வந்தது…… யோசித்து பார்த்தாள். ம்கூம்…..பதில் கிடைக்க வில்லை. தன் பிரெண்ட்ஸ் தன்னை பார்ப்பதற்குள் அவசரமாக கண்ணீரை துடைத்தாள்.

    சாரி இயேசப்பா….உங்களை நான் கஷ்டப்படுதிட்டேன்…..சாரி…..ஒண்ணும் தெரியாத நான் ஏதோ எல்லாம் தெரிந்த மாதிரி நீங்க செய்து கொண்டு வருகிற அழகான கிரியையை குறை சொல்லிட்டேன்……சாரி…..நான் கூட யோபு தாத்தா மாதிரி…….தெரியாத வார்த்தைகளால் ரொம்பவே அலப்பிட்டேன்…..சாரி இயேசப்பா……நான் எத்தனை தடவை சாரி சொன்னாலும் உங்க மனதை காயப்படுத்தினதை கண்டிப்பா இது ஆற்றாதுன்னு தெரியும்……ஆனா……. உள்ளுக்குள் உண்மையில் உடைந்து போனாள்.

    எத்தனை அழகான இயேசப்பாவை நான் பெற்றிருக்கிறேன்……ஆனா என் மடத்தனத்தால் இப்படி பேசிட்டேனே…….. சாரி பிரெண்ட். ….ப்ளீஸ்…..அதற்கு மேல் பேச முடிய வில்லை. அவளையும் மீறி கண்களில் இருந்து கண்ணீர் வர ஆரம்பித்தது. என்ன ஆச்சு…..ஏய் என்ன ஆச்சு…..அவளுடைய சீட்டில் இருந்த அவள் பிரெண்ட்ஸ் கூடி விசாரிக்க ஒண்ணுமில்லை…..என்றவாறு பேச்சை முடித்து கொண்டாள்.

    இரவு தூங்குவதற்கு முன்பு ரொம்பவே வெயிட்டாக இயேசப்பாவிடம் மன்னிப்பு கேட்டாள். அவள் அம்மாக்கே அவள் முகம் சரியில்லாம இருந்தது என்னவோ போல தோன்றியது. காலையில் நான் திட்டினதால்தான் இப்படி இருக்களோ…..பாவம் மனதில் குழப்பி கொண்டார்.

    படுக்கையில் படுத்த பின்பும் கூட…..நான் என்னுடைய இயேசப்பாவை அப்படி சொல்லியிருக்க கூடாது….. ஏதோ அவருக்கு கொஞ்சம் கூட இரக்கம் இல்லை என்பது போல பேசிட்டேனே…. அவர் எவ்வளவு துடிச்சி போயிருப்பார்…..எனக்கு கூட வலிச்சதே….எனக்கே அந்த வலின்னா அதை முழுமையா என் வார்த்தையால வேதனைபட்ட அவர் எவ்வளவு  அனுபவிச்சிருப்பார்…… சாரி பிரெண்ட்…..இனிமே இப்படி பேச மாட்டேன்…..நான் சொன்னதெல்லாம் தப்புதான்…… அழுதாள்.

    இப்போது மட்டும் அவள் இயேசப்பா முன் வந்து நின்றால் காலில் விழுந்து கதறி இருப்பாள்…..அப்படிதான் அவள் கூட நினைத்து கொண்டிருந்தாள். அழுத சோர்வில் தூங்கியும் போனாள்.

    காதில் கேட்ட சத்தம் அவளை எழுப்பி விட்டது.

    மனிதன் தேவனை பார்க்கிலும் உத்தமனாய் இருப்பானோ……

    அந்த சத்தம் கேட்டு எழுந்தவள் அந்த வார்த்தை தன்னை குறித்துதான் சொல்லப்பட்டது என்பதை அழகாக தெரிந்து கொண்டாள். ஆனால் சுற்றிலும் இருட்டு…..ஒன்றும் சொல்ல தோன்ற வில்லை அவளுக்கு. சப்போஸ் இயேசப்பா என் மேல கோபமா இருப்பாங்களோ. ஏன் எப்பவும் பார்க்கிற ஏஞ்சலை கூட இன்னைக்கி பார்க்க முடியலை…..சாரி இயேசப்பா, நீங்க என் மேல கோபமா இருப்பீங்களா….சான்சே இல்லை…..நான் திரும்பவும் வாய் விட்டுட்டேனா……ஒன்றும் சொல்லாமல் அமைதியானாள்.

    அவளுடைய கண் முன்பு ஒரு சிறு குழந்தை அழுது கொண்டிருந்தது. அதன் உடம்பில் இரத்த திட்டுகள் தெரிந்தது அப்போதுதான் பிறந்த குழந்தை என்று அவளுக்கும் புரிந்தது. ஆனா இதை யார் இங்க வைச்சிட்டு போனது…..பதட்டத்தில் அதை அவள் தூக்க போவதற்குள் ஏதோ ஒரு கரம் அந்த குழந்தையை தூக்கி வீசி எறிந்தது……. அந்த குழந்தை வீல் ……என்ற சத்தத்தோடு எங்கோ விழும் சத்தத்தை கேட்டாள். இயேசப்பா……குழந்தை…..அந்த இருட்டிலும் அவள் அந்த குழந்தையை தேட ஆரம்பித்தாள்.

    ரொம்பவே இருட்டான பாதையில் அவளுக்கு எது மேடு…..எது பள்ளம் என்று தெரிய வில்லை. ஒரு குத்து மதிப்பில் நடந்தாள். கஷ்டப்பட்டு குழந்தை சத்தத்தை வைத்து ஒரு தூரம் வரை நடந்து விட்டாள்.

    ஆனால் மனம் ஏதோ சொல்லியது…..முன் இருப்பது பெரிய பள்ளம்…..விழுந்தால் எழும்ப முடியாது என்று. புரிய வில்லை அவளுக்கு. ஓகே…..என்னதான் முன் இருக்கு….கால்களை எடுத்து வைக்காமல் சுற்றிலும் பார்த்தாள். முன் ஏதோ பள்ளம் போல தோன்றியது.

    எட்டி பார்த்தாலும் வெளிச்சம் இல்லாததால் கண்டிப்பா ஒண்ணும் பார்க்க முடியாது. ஆனா குழந்தை சத்தம் அந்த பள்ளத்தில் இருந்துதான் கேட்குது. அந்த குழந்தை செத்து போகறதுக்கு முன்னாடி காப்பாத்தணும் இயேசப்பா…..துணித்து முன் இருந்த பள்ளத்தை எட்டி பார்த்தாள். அதிகமாகவே வெளிச்சம் தெரிந்தது.

    நிறைய குழந்தைகள்…..கணக்கில் எடுத்து கொள்ள முடியாத அளவுக்கு….எல்லா குழந்தைகளும் அப்போதுதான் பிறந்த குழந்தைகள் என்று அவளுக்கு தோணியது. எல்லா குழந்தைகளும் வீல்….என்ற சத்தத்தோடு அழுது கொண்டிருந்தன. அவள் பார்த்து கொண்டிருந்த போதே இன்னொரு குழந்தை ஏதோ குப்பை துணி போல அந்த பள்ளத்தில் வீசப்பட்டது. சாப்பாடுக்காக எல்லாம் அழுது கொண்டிருந்தன. நரகத்தில் வேதனையில் கதறி கொண்டிருந்த மக்களின் சத்தத்தை காட்டிலும் இந்த கதறல் உண்மையில் மனதை வேதனைப்படுத்தியது.

    ஏன் எல்லா குழந்தைகளை இங்க எறியுறாங்க…..இவங்களுக்கு அம்மா, அப்பா யாரும் கிடையாதா…..ஏன்……இந்த குழந்தைகளுடைய அம்மா, அப்பா இவங்களை இப்படி தூக்கி எறிஞ்சிட்டாங்க……..மனதில் நினைத்த போது அவளுக்கு அழுகை வந்தது. இதற்கு மேல் அங்கு அவள் நின்றால் தலை சுற்றி அந்த பள்ளத்தில் தானும் விழுந்து விடுவோம் என தோண, அந்த இடத்தில் இருந்து கிளம்பி வந்தாள். ஆனால் மனதில் மட்டும் ஒரு கேள்வி இருந்து கொண்டே இருந்தது…..என்னுடைய இயேசப்பா இதை எதுக்கு எனக்கு காண்பிச்சாங்க……புரிய வில்லை.

    பாரு…..இந்த குழந்தைகளை அவங்க அம்மா, அப்பா கொஞ்சம் கூட இரக்கம் காண்பிக்காம தூக்கி போட்டுட்டாங்க…..ஆனா உன்னை பார்த்து கொள்ள நான் நல்ல அம்மா, அப்பாவை கொடுத்திருக்கேன்னு சொல்ல வர்றாங்களா…… உண்மையில் புரிய வில்லை.

    ஒன்றும் புரிந்து கொள்ள முடியாமல் நடந்து கொண்டிருந்தவளை ஒரு பெண்ணின் அழு குரல் தடுத்து நிறுத்தியது.

    யார் என்று அறிந்து கொள்ளும் ஆவல் வந்து விட்டது. குரல் வந்த திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். யாராவது அவங்களையும் தள்ளியோ, ஒதுக்கியோ விட்டுட்டாங்களோ??? கேள்விகளுடன் நடந்தாள். இயேசப்பாவிடம் ஒரு பெண் தன் உள்ள குமுறலை சொல்லி வேண்டி கொண்டிருந்தார். நாம ஏன் இதை கேட்டுட்டு…..இது என் தேவனுக்கும், அவங்களுக்கும் உள்ள அந்தரங்கம், அதில் நான் தலையிட கூடாது….மனதில் நினைத்தவளாய் அந்த இடத்தை கடந்து போக நினைத்தவளை, அவர்களுடைய அழு குரலும், அவர்களின் பேச்சு குரலும் தடுத்து நிறுத்தியது.

    இயேசப்பா, என் வாழ்கையில் இந்த எட்டு வருசமா உங்ககிட்ட குழந்தைக்காக கேட்டுட்டு இருக்கேன். ஆனா நான் கேட்டதுக்கு ஒரு பதில் கூட சொல்லலை. நானும் என் கணவரும் போகாத ஹாஸ்பிடல் இல்லை சாப்பிடாத மருந்தும் இல்லை…..ஆனா எங்களுக்கு ஏன் நீங்க குழந்தையை கொடுக்கலை…….அழுது கொண்டிருந்தார்.

    அவளுக்கு கூட வேதனையா இருந்தது. என் தேவன்கிட்ட இருந்து குழந்தை என்கிற செல்வத்தை யாரும் ஈஸியா வாங்க முடியாது போல…..அப்ப எங்க அம்மா கூட இத்தனை வேண்டுதல்களின் மத்தியில் தான் என்னை இயேசப்பாகிட்ட இருந்து வாங்கி இருப்பாங்களோ……மனதில் நினைத்த போதே அவளுக்கும் அழ தோன்றியது.ஆனா நான் சில நேரம் எங்க அம்மாவை காயப்படுத்துற சமயங்கள்……. உண்மையில் இனி நான் எங்க அம்மாவை கஷ்டபடுத்த மாட்டேன்…..ஏன்தான் இயேசப்பாகிட்ட இருந்து இந்த குழந்தையை வாங்கினேனோன்னு …..அப்படி ஒரு நாளும் எங்க அம்மாவை நான் இனிமே நினைக்க விட மாட்டேன். நீங்க வெளிபடுத்தின வார்த்தைக்காக நன்றிகள் ஆண்டவரே!!! உண்மையில் அந்த பெண்ணின் வேண்டுதலும், பெரு மூச்சுக்களும் அவளை கூட அசைத்து பார்த்தது.

    இயேசப்பா…..உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்கலாமா???? அவள் கேட்டதுக்கு ஒரு பதிலும் வர வில்லை. அட்லீஸ்ட் ஒரு மென்மையான காற்றால் பதில் சொல்ல மாட்டாரா என்று எதிர்பார்த்தாள். இல்லை…..எந்த அடையாளமும் இல்லை. மனதினில் வருந்தினாள். இயேசப்பா உங்க மனதை நான் கஷ்டப்படுத்தினது உண்மைதான். ஆனா உங்க பதிலை நான் எதிர்பார்க்கும் போது, நீங்க ஒன்றும் சொல்லாம இருந்தா ரொம்பவே கஷ்டமா இருக்குது. ப்ளீஸ்பா…..என்னோட பேசுங்க..

    புலம்பி கொண்டே நடந்தாள். என் இயேசப்பா இங்க என்னை கூட்டிட்டு வந்திருக்காங்கன்னு புரியலையே. ஒரு சைடு பார்த்தா குழந்தையை ஒரு குப்பை மாதிரி வீசி எறிகிற கூட்டம்….இன்னொரு பக்கம் பார்த்தா குழந்தைக்காக ஏங்கி தன்னையே உருக்கி கொள்ளுகிற ஒரு கூட்டம்……எனக்கு புரியலை இயேசப்பா. எங்க அம்மாவின் வலியை நான் தெரிந்து கொண்டேன்……ஆனா எதுக்காக நீங்க எனக்கு இதை அனுமதிச்சீங்கன்னு சத்தியமா தெரியலை…….மனதில் சொல்லி கொண்டே நடந்தாள்.

    இதுக்கு மேல நான் எதை போய் பார்க்க போறேன்……ஒன்றும் புரியாமல் ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்தால் நல்லா இருக்குமே என்று நினைக்க தோன்றியது அவளுக்கு.

    உட்கார ஒரு இடம் தோதாக தோன்றவும் அப்படியே அமர்ந்தாள். மனதில் முழுமையும் கேள்வி மட்டுமே. இயேசப்பா எனக்கு பதில் சொல்ல மாட்டாங்களா……. கேள்விகளை அடுக்கினாள்.

    அவளையும் மீறி ஒரு குரல் அவளை திடுக்கிட பண்ணியது. அது வேறு எந்த குரலும் இல்லை. சற்று முன் தன் தேவனிடம் குழந்தைக்காக வேண்டிய அதே பெண்ணின் குரல்தான். அப்பா, அது உங்களுக்கும், உங்க பொண்ணுக்கும் உள்ள இரகசியம், அதில நான் தலையிட கூடாது பிரெண்ட்…..இயேசப்பாவிடம் கெஞ்சியே பார்த்தாள். ஆனால் அத்தனை தொலைவிலும் அந்த பெண்ணின் குரல் அவளுக்கு தெளிவாக கேட்டது.

    இயேசப்பா நான் என்னுடைய கல்லூரி நாட்களில் ஒருத்தனை காதலித்து அவன் மூலமா ஒரு குழந்தையை பெத்துகிட்டது உண்மைதான். ஆனா அந்தநேரத்தில் ஊருக்கு, எங்க அம்மா, அப்பாவுக்கு பயந்து அந்த குழந்தையை குப்பை தொட்டியில அனாதையா விட்டுட்டு வந்தது உண்மை…….அந்த பெண், தன் தேவனிடத்தில் தன் ரகசிய பாவங்களை அறிக்கை இட்டு கொண்டிருக்க இவளுக்குத்தான் ஒன்றும் விளங்க வில்லை. என் இயேசப்பாகிட்ட கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி குழந்தை வேணும்னு அழுது, பெரு மூச்சு விட்டு கொண்டிருந்தவங்களா இத்தனை பெரிய தப்பு செய்தாங்க. அந்த குழந்தை என்ன ஆச்சோ…..சப்போஸ் குப்பை தொட்டியில் போட்டிருந்த அந்த குழந்தையை நாய், பன்றின்னு ஏதாவது கடிச்சி, குதறி……அவளும்தான் நிறைய செய்தித்தாளில் வாசித்திருக்காளே………. எப்படி அவங்க இந்த தப்பை செய்தாங்க….. மனதினில் கேள்விகளை கேட்டு கொண்டாள்,

    அவங்க செய்த தப்புக்கு அந்த குழந்தை என்ன பண்ணினது. அட்லீஸ்ட் ஊருக்கு, அம்மா, அப்பாக்கு பயந்தாங்கன்னா, அந்த குழந்தையை ஒரு அனாதை விடுதியில கொடுத்திருக்கலாமே…….மனதினில் நினைத்து கொண்டாள்.

    மேலும் அந்த பெண் பேசிய வார்த்தைகளில் தலையே சுற்றுவது போல தோன்றியது அவளுக்கு. அடுத்தும் அவன் கூட இருக்கிற பழக்கத்தை விட பிடிக்காம நிறைய தடவை குழந்தை வயிற்றில இருக்கும் போதே அழிச்சிருக்கேன்……. அந்த வார்த்தை சொன்ன போது, அந்த பெண்ணின் குரல் கூட நடுங்கியது. இவளால் ஒன்றும் யோசிக்க கூட முடிய வில்லை.கொஞ்சம் நேரத்துக்கு முன் கூட அந்த பெண்ணுக்காக இயேசப்பாவிடம் விண்ணப்பம் பண்ண நினைத்திருந்தாள். இயேசப்பா, ப்ளீஸ் அவங்களுக்கு ஒரு குழந்தை கொடுங்க, என்று….. ஆனால் இப்போது என்ன சொல்ல முடியும் என்று அவளுக்கு கூட தோண வில்லை. எத்தனை குழந்தைகளை அப்ப இவங்க கொன்னுருப்பாங்க…..என்னுடைய இயேசப்பாக்கு சின்ன குழந்தைகள்ன்னா ரொம்பவே பிடிக்கும், அது மட்டுமில்ல அப்படிப்பட்ட குழந்தைகளுக்குரியதுதான் பரலோக ராஜ்ஜியம்ன்னு சொல்லி இருக்காங்க…… ஆனா அப்படிப்பட்ட சின்ன சிசுக்களை இவங்க கொன்னு இருக்கும் போது…..எப்படி என் தேவனிடத்தில் கிருபைக்காக கெஞ்ச முடியும்?????

    அவள் மனதில் நினைத்து கொண்டிருந்த போதே, அவள் அருகில் ஏஞ்சல் வந்தார்.

    என்ன ஏஞ்சல், நீங்க கூட என்னை தனியா விட்டுட்டீங்க…… குறை பட்டு கொண்டாள்.

    யார் குட்டிமா, உன்னை தனியா விட்டது. அதுவும் உன்னை உன் தாயின் கருவில் இருந்து தெரிந்து கொண்ட உன் இயேசப்பா தனியா விடுவாரா……ஏஞ்சல் கேட்ட போது, என்னை சமாதானப்படுத்த தான் அவர் அப்படி சொல்லுகிறார் என்று மனதில் நினைத்து கொண்டாள்.

    நீ மனதில நினைக்கிறது கூட எனக்கு தெரியும் என்பது உனக்கும் தெரியுமே குட்டிமா……ஏஞ்சல் கேட்ட போது

    உங்களுக்கு தெரியுமா ஏஞ்சல்…..இன்னிக்கி நான் இயேசப்பாவை நிறைய முறை கூப்பிட்டேன். ஆனா அவர் குரலே கொடுக்கலை தெரியுமா…… மனதில் உள்ளதை அப்படியே சொல்லி விட்டு,

    ஆனா சாரி ஏஞ்சல், நான் என்னுடைய இயேசப்பாவை ரொம்பவே மனம் கஷ்டப்படுற வண்ணம் பேசிட்டேன். அதுனால அவர் இது வரைக்கும் என்கிட்ட பேச கூட இல்லை….சொல்லி கொண்டிருந்தவளின் கண்கள் கலங்கியது.

    உங்களுக்கு தெரியுமா ஏஞ்சல், எல்லா நேரத்திலும் அவருடைய குரலை கேட்டுட்டு, அவர் அண்மையை உணர்ந்துட்டு அது இல்லைன்னு புரிந்த நேரம் ரொம்பவே கஷ்டமா இருந்துச்சு. நான் ஏன் அந்த பிடிவாதம் பிடிக்கணும்….. அடுத்து என் இயேசப்பாவின் அண்மையை இழந்து போகணும்ன்னு தோணுச்சு ஏஞ்சல்…… ஆனா இது எல்லாம் காலம் கடந்த யோசனை…… கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது.

    உன் இயேசப்பா இப்பவும் உன் பக்கத்தில தான் இருக்காங்க. குட்டிமா. ஏஞ்சலின் முகத்தை மறுக்க நினைத்தவள், அவர் ஏதோ ஒரு பக்கத்தை பார்த்து பேசி கொண்டிருக்கவும், அவளும் அந்த இடத்தை பார்த்தாள். அவளுடைய இயேசப்பாதான் அங்கு நின்று கொண்டிருந்தார்.

    இயேசப்பா, என்னுடைய இயேசப்பா…….அவள் அந்த இடத்தை நோக்கி ஓடினாள். அந்த இடம் எப்படிப்பட்ட இடம் என்று கூட யோசிக்காமல் அங்கேயே முழங்கால் போட்டாள். சாரி இயேசப்பா, நான் உங்களை இன்னிக்கி உங்க மனம் கஷ்டப்படும் வண்ணம் பேசிட்டேன். சாரி பிரெண்ட்……என்று அவள் சொல்லி கொண்டிருந்த நேரம் இயேசப்பா அவள் முகத்தை பார்த்து சிரித்தது அவளும் கண்டாள்.

    இயேசப்பா….. அப்ப நீங்க என்னை மன்னிச்சிடீங்களா……என்ற போது

    நீ  உன் முழு மனதையும் என் முன் திறந்து காட்டி, சாரி இயேசப்பான்னு வேன்ல இருக்கும் போது சொன்னியே அப்பவே உன்னை மன்னிச்சிடேன்….. ஆனா நீதான்….. அவர் முகம் சோர்வடையவும் இவளுக்கு ஏதோ போல தோன்றியது.

    நீ ஸ்கூல் போன பிறகும் இதை பத்திதான் யோசித்த…..என் இயேசப்பாஎன்னை மன்னிபாங்களா, இல்லையா…… அடுத்து வீட்டுக்கு திரும்ப வந்த பிறகும் கூட புலம்பல்…..நான் என் இயேசப்பாவை கஷ்டப்படுத்திட்டேன்……….ன்னு

    நீ என் மனதை கஷ்டப்படுத்தியது உண்மைதான். ஆனா உன்னை நான் மன்னிச்ச பிறகும் கூட, நீ என்னை நம்பாதது தான் என்னை ரொம்பவே காயப்படுத்தினது. ஆனா அதை பத்தி தெரிந்து கொள்ளாம இன்னும் என்னை கஷ்டப்படுத்திறியே குட்டிமா……அவர் குரலில் இருந்த வருத்தம் அவளையும் வருத்தப்படுத்தியது.

    நான் இப்பயும் உன்னை நேசிக்கிறேன் குட்டிமா,என்னை விட….அதுனால இந்த சந்தேகம் இனிமே உனக்கு என்றும் வேண்டாம். நான் எப்பவும் உன் பக்கத்தில, உனக்குள்ள இருக்கேன் குட்டிமா. இதை என்னைக்கும் மறக்காத…… அவர் சொல்லி கொண்டிருந்த போதே அழ ஆரம்பித்து விட்டாள்.

    இயேசப்பா, சாரி…..சாரி……இனிமே உங்களை நான் சந்தேகபட மாட்டேன் இயேசப்பா…..அழுது கொண்டே சொல்லி கொண்டிருந்தவளுக்கு ஏதோ புரிந்து கொள்ள முடியாதசந்தோசமா இல்லை சமாதானமா….. புரிய வில்லை. முகம் முழுவதும் சந்தோசத்தோடு, என்னை என் இயேசப்பா ரொம்ப நேசிக்கிறாங்க……..எழுந்தாள். இயேசப்பா அவள் முன் இல்லை. அவர் தன்னை விட்டு விலகி போக வில்லை, தன் கூடவே இருக்கிறார் என்பதை புரிந்து கொண்டாள்.

    என்ன குட்டிமா, இப்ப ஏதாவது நம்ம இயேசப்பா குறித்து மன தாங்கல் உண்டா…..கேட்ட ஏஞ்சலிடம்

    கொஞ்சம் கூட இல்லை ஏஞ்சல். என் இயேசப்பா என்னை அதிகமா நேசிக்கிறாங்க….. இந்த சந்தோசம் இருக்கும் போது நான் எப்படி மன வருத்தம் அடைய முடியும்……சந்தோசத்தோடு சொன்னாள்.

    இந்த அளவுக்கு உன்னை நேசிக்கிற உன்னுடைய இயேசப்பா, எப்படி பாரபட்சம் பார்த்திட்டார்ன்னு ஈஸியா சொல்லிட்ட குட்டிமா……..வருத்ததோடு சொன்னார்.

    சாரி ஏஞ்சல்…..அந்த நேரத்தில என் பிரெண்ட் அப்பா என் கண் முன்னால நரகம் போனதால எனக்கு ஏற்பட்ட கஷ்டத்தில சொல்லிட்டேன். ஆனா இப்ப புரிந்து கொண்டேன். முழுமையா புரிந்து கொள்ள முடியலைன்னாலும்

    கொஞ்சம் தெரிந்து கொண்டேன். பிறந்த குழந்தைகளை குப்பை மாதிரி வீசி எறியுற மக்கள், அதே சமயம் எத்தனையோ குழந்தைகளை தனக்குள்ள அழிச்சிட்டு இப்ப குழந்தைக்காக ஏங்கிட்டு இருக்கிற ஒரு அம்மாவின் கதறல்…….. அவங்களை குறை சொல்லுறதுக்கு எனக்கு எந்த அதிகாரமும் இல்லை ஏஞ்சல். ஆனா ஒண்ணு மட்டும் தோணுச்சு….அவங்களுக்கு இன்னும் இயேசப்பா ஒரு குழந்தையை கொடுக்காதது கூட எனக்கு ஒரு விஷயமா தோணலை. இன்னும் அவங்களுக்கும் கூட நம்ம இயேசப்பா கிருபை பாராட்டி உயிரோட வைச்சிருக்கிறதே அவருடைய அன்பை வெளிப்படுத்துற விஷயமா தோணுச்சு ஏஞ்சல்……ஒரு பெரு மூச்சு விட்டவள் நான் சொன்னது சரியா ஏஞ்சல்…..எனக்கு புரிந்தது இவ்வளவுதான்…..வேதனையோடு சொன்னாள்.

    நம்ம இயேசப்பா தன் பிள்ளைகளிடம் காண்பிக்கிற கிருபை முழுக்க முழுக்க அதிகமான காரியம்தான். அதுக்கு முழுமையான எடுத்துக்காட்டு நான்….. அடுத்து குளோரி அக்கா, என் பிரெண்ட் அப்பா கூட அடங்கும்ன்னு நினைக்கிறேன். அவர் தான் என் இயேசப்பா கொடுத்த கிருபையை புரிந்து கொள்ளாம சாத்தானோடு உடன்படிக்கை பண்ணி, தேவையில்லாம நரகம் போயிட்டார். இதுல நான் பேசினது முழுமையான தப்பு. இப்ப நான் நல்லா தெரிந்து கொண்டேன் ஏஞ்சல்……. அவள் பேசி முடித்த போது ஏஞ்சல் அவளை பார்த்து சிரித்தார்.

    நீ இன்னைக்கி தெரிந்து கொண்ட சத்தியம் மிகவும் அற்புதமான காரியம் குட்டிமா. நம்ம இயேசப்பா உங்களை அதிகமா நேசிக்கிறாங்க. நீங்க நரகத்தில போயிற கூடாதுன்னு யோசிக்கிறதை விட, உங்களுக்காக அதிகமாகவே அவர் பிரயாசபடுகிறார். அதிகமாகவே சந்தர்ப்பங்களை கொடுக்கிறார். உன் பிரெண்ட் அப்பாக்கு கொடுத்தது போல…..

    இந்த பூமியில இருந்த போது கொடுத்த சந்தர்ப்பங்கள் ஏராளம். அது மட்டுமில்ல அந்த ஆத்துமாவை நரகத்திற்கு அனுப்பாம, சப்போஸ் ஆவிகளின் உலகத்தில் இருந்தா, புரிந்து கொள்ளுவார்ன்னு…… ஆனா அப்ப கூட கண் முன் பார்த்த சந்தர்ப்பங்களை உதறி தள்ளிட்டு ஓடினா…. நம்ம இயேசப்பாவால என்ன செய்ய முடியும் குட்டிமா……ஏஞ்சல் வருத்ததோடு சொன்ன போது, இவளும் வேதனைப்பட்டார்.

    சாரி ஏஞ்சல், அவர் நரகம் போனது, ஏதோ எனக்கு மட்டும் வருத்தத்தை கொடுத்த மாதிரி யோசிச்சிட்டேன். ஆனா என்னை விட அது என் இயேசப்பாவை, முழு பரலோகத்தையே ரொம்ப காயப்படுத்தியிருச்சு என்பதை புரிந்து கொள்ள மறந்திட்டேன்….சாரி ஏஞ்சல்…அவள் அழுகையோடு சொல்லவும்

    ஓகே குட்டிமா, நம்ம தேவன் உனக்கு வெளிப்படுத்தின சத்தியத்தை தயவு செய்து மறந்திராத….. என்ற போது அவளும் சிரித்தாள்.

    எப்படி மறக்க முடியும் ஏஞ்சல். என் கண் முன்னாடி என் இயேசப்பா வந்து நின்னு, என்னை நேசிக்கிறாங்க……. சொன்னதை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் ஏஞ்சல்…… சொன்னாள் அவள்.

    சரி குட்டிமா…..இன்னைக்காவது முழுமையா தூங்கு…..என்று சொல்லியவர் குட் நைட் ….என்று சொல்லி கொண்டே மறைந்து போனார்……

    இனிமே எங்க தூங்க…… இயேசப்பாவை பார்த்ததே மனசு முழுவதும் சந்தோசமா தோணுது. இனிமே தூக்கம் வர்றது சந்தேகம்தான் என்று நினைத்து கொண்டிருந்த போதே அப்படியே தூங்கி போனாள்.

    அவரே தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார்.   

    Related Post

    Categories: பைபிள் சம்பவங்கள்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    × three = 15

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>