-
வலிமையான ஜெபம்
வலிமையான ஜெபம் - 1
நாம ஆராதிக்கிற நம்ம இயேசப்பா எப்படிப்பட்டவர்ன்னு தெரிந்து கொள்ளாம வெறுமனே ஜெபம் என்பதை பத்தி தெரிந்து கொள்ள வேண்டாம்னு எங்களுக்கு தோணுது. நீங்களும் அதைத்தான் யோசிப்பீங்க. நீங்க நம்ம இயேசப்பாவை நல்லா தெரிந்து வைச்சிருந்தாலும் இன்னும் நல்லா தெரிந்து கொள்ளலாமே.
நம்ம இயேசப்பா பற்றி நாம தெரிந்து கொள்ளணும்னு நாம ஆசைபட்டா புதிய ஏற்பாடுல இருந்து இல்லை குட்டிகளா, பழைய ஏற்பாடுல ஆதியாகமம் முதல் அதிகாரத்தில இருந்துதான் நீங்க ஆரம்பிக்கணும். உண்மையாகவான்னு நீங்க ஆச்சர்யப்படுறீங்களா?வலிமையான ஜெபம் - 2
நம்ம பிதாப்பா இந்த உலகத்தை உருவாக்கின விதமும்(ஆதியாகமம் 1,2 ம் அதிகாரங்கள்), நம்ம பிதாப்பா இந்த உலகத்தை உருவாக்கின நேரம் நம்ம இயேசப்பா எந்த அளவு சந்தோசப்பட்டாங்க(நீதிமொழிகள் 8 : 22 – 31) என்பதையும் நீங்க நல்லா தெரிந்து வைச்சிருப்பீங்க குட்டிகளா. உங்ககிட்ட ஒரு சின்ன கேள்வி கேட்கலாமா ?
நம்ம பிதாப்பா தான் உலகத்தை உருவாக்கின விதத்தை குறித்து ஒரு தேவ மனிதர்கிட்ட ரொம்பவே விளக்கமா பைபிள்ல ஒரு புத்தகத்தில் சொல்லியிருக்காங்க. நம்ம பைபிள்ல அது எந்த புத்தகம்னு சொல்ல முடியுமா குட்டிகளா? அந்த தேவ மனிதர் யார்னு சொல்ல முடியுமா?வலிமையான ஜெபம் - 3
உங்களுடைய ஜெப வாழ்க்கை நம்ம தேவனுக்குள்ள எப்படி இருக்கு குட்டிகளா? இப்ப நம்ம தேவனுக்கு நன்றிகள் ஜெபத்தில சொல்லறது உங்களுக்கு எந்த அளவு பிடிச்சிருக்கு குட்டிகளா?
சில பேரு உங்களுக்குள்ள எனக்கு என்னுடைய இயேசப்பா என்ன செய்து கொடுத்திருக்காங்க? நான் ஏன் அவருக்கு நன்றிகள் சொல்லணும்?ன்னு உங்க மனதில கேள்விகள் கேட்கலாம் குட்டிகளா. உங்க கேள்விகள் ரொம்பவே நியாயமானதா உங்களுக்கு தோணலாம்.
உங்க கேள்விக்கான காரணம், உங்களுடைய வாழ்கையில நீங்க நினைத்த அளவுக்கு உங்ககிட்ட மாற்றம் வராம இருந்திருக்கும். இல்லை உங்களுக்கு வேணும்ன்னு நினைக்கிற சில விசயங்கள் இன்னும் உங்களுக்கு கிடைக்காம சில ஏமாற்றங்களை நீங்க சந்திச்சிருக்கலாம்.வலிமையான ஜெபம் - 4
நாம நம்ம தேவனிடத்தில் விண்ணப்பம் பண்ணனும்னு அவரே நம்மகிட்ட கேட்கும் போது உங்களுக்கு என்ன தோணுது குட்டிகளா? என்னை பத்தி தெரிந்தவர் என்னுடைய இயேசப்பா. என்னுடைய பழைய வாழ்க்கை, என்னுடைய பலவீனங்கள், என் சந்தோசம், மகிழ்ச்சி, விருப்பம், வெறுப்பு, என்னுடைய எதிர்கால வாழ்க்கை எல்லாமே அவருக்கு தெரியுமே. அப்படி இருக்கும் போது என்னுடைய பிரச்சனை, கஷ்டம், இப்ப எனக்கு என்ன தேவைன்னு நான் என் வாய் திறந்து கேட்டால்தான் அவர் எனக்கு தருவாரா? நம்ம இயேசப்பா என்னை சூழ்ந்திக்கிறவர் (சங்கீதம் 139 : 3, 4) எனக்கு உள்ளேயும் இருக்கிறவர்(கண்டிப்பா கீழேயுள்ள வசனங்கள் மூலமா நீங்களும் நம்புவீங்க குட்டிகளா).
தேவனாகிய கர்த்தர் மனஷருக்குள் வாசம்பண்ணும் பொருட்டு, துரோகிகளாகிய மனுஷர்களுக்காகவும் வரங்களைப் பெற்றுக் கொண்டீர்.வலிமையான ஜெபம் - 5
நம்ம இயேசப்பாவை நோக்கி கொஞ்சம் கூட தயங்காம நாம கூப்பிடனும்னு தெரிந்து கொண்ட உங்களுக்கு சில காரியங்கள் தடையா தோணலாம் குட்டிகளா.
அது ஒரு வேளை நம்மளுடைய பலவீனங்களா இருக்கலாம் இல்லை நம்மளுடைய பழைய வாழ்க்கையா இருக்கலாம் குட்டிகளா.
அதை கருத்தில வைச்சு நான் எந்த விதத்திலும் தகுதி இல்லாதவள்/ இல்லாதவன்.....என்னால எப்படி ஒரு பரிசுத்தமான தேவனை நோக்கி கூப்பிட முடியும்.
என்னுடைய பழைய வாழ்கையில நான் எத்தனையோ தப்புகள் பண்ணிருக்கேன். என்னால என்னுடைய இயேசப்பா எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்காங்க. இதுக்கும் மேலயும் நான் அவரை கஷ்டப்படுத்தி பார்க்கணுமா....என் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும்.......இனி என்றைக்கும் நான் இப்படி வாழணும்னு என்பது தான் என்னுடைய தேவனுடைய விருப்பமா கூட இருக்கும்....வலிமையான ஜெபம் - 6
நாம எந்த தப்பும் செய்யாத சமயம், நம்மளை இந்த உலகம் ஒரு விரோதியா, கெட்டவனா பார்த்தா நமக்கு கோபங்கள் மட்டுமில்ல குட்டிகளா, இனி என்னுடைய வாழ்கையில் என்ன இருக்கு என்கிற எண்ணமும் கூட சேர்ந்தார்மாதிரி வரும். ஆனா இந்த மன வேதனையோ இல்லை விரக்தியான விஷயங்களையோ, உங்களுடைய ஆருயிர் நண்பர்கள்கிட்ட பகிர்ந்து கொண்டது உண்டா?
சரி குட்டிகளா, உங்களுக்கு ஒரு சிறு சம்பவம் மூலமா இந்த காரியத்தை பற்றி தெரிவிக்க நம்ம இயேசப்பா ஆசைபடுறாங்க.
பீட்டர் என்கிற குட்டி பையன் உங்களை மாதிரியே ரொம்பவே நல்ல பையன். அவன் அவனுடைய அம்மா, அப்பாக்கு ஒரே செல்லம்.வலிமையான ஜெபம் - 7
உங்களில் சில பேரு........பீட்டர் தப்பு செய்யலை. ஆனாலும் அவன் தப்பு பண்ணினதா சூழ்நிலை வந்தப்ப, அவன் நம்ம இயேசப்பாவை நோக்கி கூப்பிட தயங்க வேண்டிய அவசியமில்லையே. அவன் பிரச்சனையை அவனுடைய நண்பர்கள் மறுத்தாலும் அவனை பத்தி தெரிந்த நம்ம இயேசப்பா இருக்காங்களே. அப்பான்னு அவன் ஒரு வார்த்தை சொன்னா போதும். உதவி செய்ய நம்ம இயேசப்பா ஓடோடி வந்துருவாங்களே. கண்டிப்பா எங்களுக்கு நம்பிக்கை இருக்கு. பீட்டர்க்காக வழக்காட நம்ம இயேசப்பா உண்டுன்னு நம்புறோம்.
இன்னும் சொல்லப் போனா பீட்டர் அந்த தப்பை செய்யலைன்னு எங்க இயேசப்பா கண்டிப்பா எல்லாருக்கும் உணர்த்துவாங்க. அடுத்து எப்பவும் போல பீட்டர் வாழ்கையில சந்தோசம்தான்........வலிமையான ஜெபம் - 8
நம்ம தேவனை நோக்கி எந்த சூழ்நிலையிலும் கூப்பிடணும்னு நம்ம இயேசப்பா நமக்கு சொல்லி கொடுத்திருக்காங்க குட்டிகளா.
ஆனா உங்க மனதில இப்பவும்........தாவீதா எவ்வளவு பெரிய தவறு செய்தாங்க? நம்ம தேவனால் எப்படி தாவீது செய்த தப்பை மன்னிக்க முடிந்தது? இல்லை எங்ககிட்ட பொய் சொல்ல வேண்டாம். நான் சண்டே ஸ்கூல்ல படிச்சிருக்கேன். நம்ம தேவன் ரொம்பவே பரிசுத்தமானவர். அதுனால அவருடைய பிள்ளைகளாகிய நம்மளையும் பரிசுத்தமா இருக்கத்தான் அழைச்சிருக்காங்கன்னு சொல்லி கொடுத்திருக்காங்க. அப்படி இருக்கும் போது எப்படி நம்ம பரிசுத்தமான தேவனால் தாவீதுடைய தப்புகளை மன்னிக்க முடிந்தது?வலிமையான ஜெபம் - 9
ஒரு நண்பனா நம்முடைய உணர்வுகளை நம்ம இயேசப்பாகிட்ட நாம பகிர்ந்துகொள்ளணும்னு(share) ஆசைபடுறாங்க.
இந்த உலகத்தால நம்முடைய உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாதது மட்டுமில்ல குட்டிகளா, அவங்களால நம்ம இருதயத்திற்கு ஏற்ற ஆறுதல் வார்த்தைகளையோ இல்லை சூழ்நிலைகளையோ உருவாக்க முடியாது.
நாம எந்த சூழ்நிலையில இருந்தாலும், அவரை என்றும் கூப்பிட மட்டும் வெட்கப்படக் கூடாதுன்னு ரொம்பவே எதிர்ப்பார்க்கிறார்..
நம்மளுடைய தவறுகளோ இல்லை பின் மாற்றங்களாலோ ரொம்பவே தூரம் விலகி போயிருந்தாலும் கூட இந்த நிமிசமாச்சும் நாம அவரை நோக்கி கூப்பிட மாட்டோமான்னு கண்ணீரோட காத்திருக்கிறார்.பைபிள் சம்பவங்கள் இயேசு கிறிஸ்து யார்?
One thought on “வலிமையான ஜெபம்”
Leave a Reply
வலிமையான ஜெபம்
Daily Bible Verse
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
« Feb | ||||||
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
Newsletter
Categories
Archives
It’s an awesome article in support of all the web visitors; they
will get advantage from it I am sure.
this is not because of us. Glory to the Lord. Jesus loves you
your friend