-
வலிமையான ஜெபம் – 6
ஹாய் குட்டிஸ், “வலிமையான ஜெபம்” என்கிற தலைப்பில உங்களை மீண்டும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நம்ம இயேசப்பா அன்புக்குள்ள ரொம்பவே சந்தோசப்படுகிறோம்.
நாம எந்த தப்பும் செய்யாத சமயம், நம்மளை இந்த உலகம் ஒரு விரோதியா, கெட்டவனா பார்த்தா நமக்கு கோபங்கள் மட்டுமில்ல குட்டிகளா, இனி என்னுடைய வாழ்கையில் என்ன இருக்கு என்கிற எண்ணமும் கூட சேர்ந்தார்மாதிரி வரும். ஆனா இந்த மன வேதனையோ இல்லை விரக்தியான விஷயங்களையோ, உங்களுடைய ஆருயிர் நண்பர்கள்கிட்ட பகிர்ந்து கொண்டது உண்டா?
சரி குட்டிகளா, உங்களுக்கு ஒரு சிறு சம்பவம் மூலமா இந்த காரியத்தை பற்றி தெரிவிக்க நம்ம இயேசப்பா ஆசைபடுறாங்க.
பீட்டர் என்கிற குட்டி பையன் உங்களை மாதிரியே ரொம்பவே நல்ல பையன். அவன் அவனுடைய அம்மா, அப்பாக்கு ஒரே செல்லம். தன்னுடைய சின்ன வயசுல இருந்தே தன்னுடைய அம்மா, அப்பா மூலமா நம்ம தேவனை தெரிந்து கொண்டதால நம்ம இயேசப்பான்னா அவனுக்கு ரொம்ப பிரியம், அது மட்டுமில்ல நம்ம இயேசப்பாக்கு பிரியமான வாழ்க்கை வாழணும் என்கிற விருப்பம் அவனுக்கு எப்பவும் உண்டு.
தன்னுடைய வகுப்பில எப்பவும் அவன்தான் முதல் மாணவன். படிப்பிலும் சரி, மற்ற திறமைகளிலும் சரி. எப்படி வீட்டில் செல்லமா இருந்தானோ அதே மாதிரி அவன் படித்த ஸ்கூல்லயும் அவன்தான் பல பேருக்கு செல்லம். இத்தனை சந்தோசத்தில் இருந்த நம்ம பீட்டர்க்கு எதிரிகள் இல்லாம இல்லை. அவனை மட்டுமே எல்லாரும் உயர்த்தி பேச ஸ்கூல்ல இருந்ததால அதை பிடிக்காத பசங்களும் அவன் வகுப்பிலேயே இருந்தாங்க.
அந்த பசங்களை நம்ம பீட்டர் ஒரு பொருட்டா எடுக்காததால் என்னைக்கும் அவர்களை பற்றி கவலைப்பட்டதில்லை. ஆனா நம்ம பீட்டர் கூட அதை ஒரு பொருட்டா எடுக்க வேண்டிய ஒரு சந்தர்ப்பம் அமைந்தது.
அன்னைக்கி நம்ம பீட்டர் ரொம்பவே சந்தோசமா இருந்தான். இன்னைக்கி அவன் பிறந்த நாளா இருந்ததால அவனுடைய தாத்தாவும், பாட்டியும் அவனுடைய வீட்டுக்கு வர போற விசயத்தை காலையிலேயே அவன் அம்மா சொல்லிட்டாங்க. காலையிலேயே எவ்வளவோ அம்மாகிட்ட கெஞ்சி பார்த்தும் அம்மா ஸ்கூல் போய்தான் ஆகணும்னு சொல்லிட்டாங்க. கிளாஸ் டீச்சர்கிட்ட கேட்டப்ப கூட சாரி பீட்டர், இன்னைக்கி சாயந்திரம் ட்ராயிங் போட்டி இருக்கு. அதுனால கொஞ்சம் லேட்டாதான் வீட்டுக்கு நீ போக வேண்டியதா இருக்கும்ன்னு பேச்சை நிறுத்திட்டாங்க.
மதியம் சாப்பாடு அவனுக்கு பிடித்தமான வெஜிடபிள் பிரியாணி. தன்னுடைய நண்பர்களோடு மதிய சாப்பாடை சந்தோசமா ஷேர் பண்ணின பீட்டர், வேகமாகவே சாப்பிட்டும் முடிச்சிட்டான். தன்னுடைய லஞ்ச் பேக்கை வைக்க போன சமயம்தான் அந்த 1000 ரூ நோட்டை பார்த்தான். அது யாருடையதா இருக்கும்னு நினைச்சவனுக்கு எதுவும் புரியாததால, தன்னுடைய ஸ்கூல் பேக்கிலேயே அதை வைச்சான். மதியம் டீச்சர் வந்ததும் கொடுக்கணும்னு மனதில நினைச்சிக்கிட்டான்.
மதியம் நேரம் கணக்கு வேளை. நம்ம பீட்டர்க்கு பிடித்தமான பாடம் என்பதால 1000 ரூ தாள் அவனுக்கு மறந்து போச்சு. எல்லா கணக்குகளையும் முதல்லயே போட்டு எப்பவும் போல கணக்கு டீச்சர் பாராட்டை நம்ம பீட்டர்தான் வாங்கினான். கணக்கு வேளை முடிந்து இண்டர்வல் நேரம், பீட்டர் கிளாஸ் டீச்சர் ரொம்பவே அவசரமா நுழைஞ்சாங்க. எல்லாருக்கும் ஆச்சர்யம். ஆனா அதை விட நுழைந்த வேகத்தில பீட்டர் நீ இப்படி செய்வன்னு நான் எதிர்ப்பார்க்கலை. எங்க வைச்சிருக்க என்னுடைய ரூபாயை. பீட்டரால் நம்ம முடியலை. தன்னுடைய கிளாஸ் டீச்சர் தன்னை பத்திதான் சொல்லுறாங்களா!!!!!!!!!!
அவன் கிளாஸ்ல இருந்த எல்லா பசங்களும், பொண்ணுகளும் அவனைத்தான் பார்த்தாங்க. அவனுடைய கிளாஸ் டீச்சர் அவன் அருகில் வந்ததும் தன்னுடைய பேக்கில் இருந்த ரூபாயை எடுத்து நீட்டினான், இன்னும் அவன் அதிர்ச்சியில இருந்து விடுபடலை. அந்த பசங்க சொன்னப்ப கூட நான் நம்பலை பீட்டர். உன் மேல உள்ள கோபத்திலதான் பேசுறாங்களோன்னு நினைச்சேன். ஆனா…அதற்கு மேல அவன் டீச்சர் கூட பேச முடியாம தயங்கினாங்க.
சாரி டீச்சர்…..என்கிற வார்த்தை மட்டுமே பீட்டர் வாயில இருந்து வந்துச்சு. அதுவும் கண்ணீரோட வந்துச்சு. நான் கீழே கிடந்த ரூபாயை டீச்சர்கிட்ட கொடுக்கணும்னு சொல்லித்தான் பேக்குல வைச்சேன்னு மனசுக்குள்ள மட்டும்தான் அவனால சொல்ல முடிஞ்ச்சு. ஏன்னா கிளாஸ் இருக்கிற எல்லாரும் அவனை ஒரு குற்றவாளியாதான் பார்த்தாங்க. இது வரைக்கும் இந்த ஸ்கூல்க்கே ஹீரோவா தெரிந்த நம்ம பீட்டர் ஒரே நாள்ல கெட்டவனா தெரிய ஆரம்பிச்சான்.
அவனுடைய ப்ரெண்ட்ஸ் பக்கத்தில வந்து என்ன விஷயம்ன்னு கேட்டாங்க. ஆனா ஒருத்தர் கூட அவன் சொன்னதை நம்ப ரெடியா இல்லை. பணம் எடுத்தது எப்படி மறந்து போகும், டீச்சர்கிட்ட முதல்லயே சொல்லிருக்க வேண்டியதுதான……தங்களுடைய கருத்துகளை சொல்லிட்டு நகர ஆரம்பிச்சாங்க. எதுவும் சொல்ல முடியாமல் அந்த இடத்திலேயே அமர்ந்து கதற ஆரம்பித்தான் பீட்டர்.
14. நான் அவனை என் சிநேகிதனாகவும் சகோதரனாகவும் பாவித்து நடந்து கொண்டேன்; தாய்க்காகத் துக்கிறவனைப்போல்துக்கவஸ்திரம் தரித்துத் தலைகவிழ்ந்து நடந்தேன்.
15. ஆனாலும் எனக்கு ஆபத்துண்டானபோது அவர்கள் சந்தோசபட்டுக் கூட்டங்கூடினார்கள்.
சங்கீதம் 35
என்ன குட்டிகளா, மனசுக்கு கஷ்டமா இருக்கா? பீட்டர் என்ன பண்ண போறான்? இனி அந்த ஸ்கூல்ல இருக்கிற எல்லாரும் அவனை தப்பானவன்னு தான நினைப்பாங்க. இதுல இருந்து அவன் எப்படி தப்பிக்க முடியும்? சே…..அவன் ப்ரெண்ட்ஸ் கூட நம்பலையே…….உங்க மனது ஆயிரம் கேள்விகள் கேட்கலாம். ஆனா இதுதான் உண்மை. நம்ம வாழ்கையில கூட அப்படித்தானே குட்டிகளா, தீடிர்ன்னு நம்ம வாழ்கையே மாறி போகுற மாதிரி எத்தனையோ விசயங்கள் நடந்திருக்கு.
தாவீது பாடின சங்கீதத்தை வாசித்தீங்களா? என்ன தோணுது குட்டிகளா? நம்மளுடைய நண்பர்கள் கூட நம்மளை நம்பாத போது எவ்வளவு கஷ்டமா இருக்கும். அதுவும் தாவீது சொன்ன மாதிரி நம்முடைய ஆபத்துக்காக அவங்க சந்தோசபட்டா எப்படி இருக்கும் குட்டிகளா? நீங்க நம்பினாலும், நம்பலைன்னாலும் இதுதான் உண்மை குட்டிகளா. அதுனால என்னை இந்த உலகம் நம்பலையே……நான் எந்த தப்பும் பண்ணலையே…….எனக்கு நெருக்கமானவர்கள் கூட என்னை நம்ப மறுத்திட்டாங்க…….இனி நான்……என் வாழ்க்கை…….அப்படின்னு புலம்பிட்டு இருக்கிற நம்ம புலம்பலை நிறுத்திட்டு என்றும் நம்முடைய உண்மையான சிநேகிதராகிய நம்ம இயேசப்பாவை நோக்கி கூப்பிடுவோமா…..
இவரே என் சிநேகிதர்.
உன்னதப்பாட்டு 6 : 16
உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார்.
சங்கீதம் 22 : 24
ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்.
ஏசாயா 66 : 13
வலிமையான ஜெபம் என்பதை குறித்து நம்ம இயேசப்பா(சர்வ வல்லமையுள்ள தேவனின் வார்த்தை) நமக்கு சொல்லி கொடுக்கிற காரியங்களை அடுத்த முறை கேட்கலாமா. நமது தேவனுக்குள் சந்திப்போம்……
வலிமையான ஜெபம் – 5 வலிமையான ஜெபம் – 7
வலிமையான ஜெபம் – 6
Daily Bible Verse
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
« Feb | ||||||
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
Newsletter
Categories
Archives