-
வலிமையான ஜெபம் – 9
ஹாய் குட்டிஸ், வலிமையான ஜெபம் என்கிற தலைப்பில மீண்டும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நம்ம இயேசப்பா அன்புக்குள்ள ரொம்பவே சந்தோசப்படுகிறோம்.
நம்முடைய வாழ்கையில நம்ம இயேசப்பா எத்தனையோ காரியங்களை வலிமையான ஜெபம் என்கிற அழகான தலைப்பின் கீழ் சொல்லி கொடுத்திருக்காங்க, அப்படிதான குட்டிகளா.
ஒரு நண்பனா நம்முடைய உணர்வுகளை நம்ம இயேசப்பாகிட்ட நாம பகிர்ந்துகொள்ளணும்னு(share) ஆசைபடுறாங்க.
இந்த உலகத்தால நம்முடைய உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாதது மட்டுமில்ல குட்டிகளா, அவங்களால நம்ம இருதயத்திற்கு ஏற்ற ஆறுதல் வார்த்தைகளையோ இல்லை சூழ்நிலைகளையோ உருவாக்க முடியாது.
நாம எந்த சூழ்நிலையில இருந்தாலும், அவரை என்றும் கூப்பிட மட்டும் வெட்கப்படக் கூடாதுன்னு ரொம்பவே எதிர்ப்பார்க்கிறார்..
நம்மளுடைய தவறுகளோ இல்லை பின் மாற்றங்களாலோ ரொம்பவே தூரம் விலகி போயிருந்தாலும் கூட இந்த நிமிசமாச்சும் நாம அவரை நோக்கி கூப்பிட மாட்டோமான்னு கண்ணீரோட காத்திருக்கிறார்.
நாம செய்த தப்புகளால் குற்ற மனசாட்சியோட அவர்கிட்ட வர வெட்கப்பட்டா கூட, அன்னைக்கி கெட்டு திரும்பி வந்த கெட்ட குமாரனை அணைத்து கொள்ள ஆசைபட்டு ஓடின தகப்பன் மாதிரிதான், நம்மளை அரவணைக்க ஏங்கி காத்திருக்கிறார். ஆனா அவர் நம்மளை தொட தேவைப்படுறது ஒண்ணுதான் குட்டிகளா. நம்ம வாயில இருந்து வர வேண்டிய ஒரே வார்த்தை “அப்பா, ப்ளீஸ்…..என்னை மன்னிச்சிருங்க”……..
இத்தனை காரியங்களையும் நமக்கு அழகாக கற்றுக் கொடுத்த இயேசப்பா, அவர் மேல நாம வைக்க வேண்டிய விசுவாசம்தான் ரொம்பவே முக்கியமானதுன்னு ஏற்கனவே பைபிள்ல சொல்லி இருக்காங்க குட்டிகளா. ஏன்னா இத்தனை நாளும், நம்முடைய ஜெபம் வீணாயிருச்சேன்னு நாம வருத்தப்பட்டத்துக்கு காரணம் என்ன தெரியுமா குட்டிகளா. என்னுடைய இயேசப்பா என்னுடைய ஜெபத்தை கேட்டிட்டு இருக்காங்கன்னு நம்பாத காரணம் மட்டுமே. அது மட்டுமில்ல பல நேரங்களில் நாம பேசுற, நாம விண்ணப்பம் பண்ணுற நம்ம இயேசப்பாவுடைய வல்லமையை மறந்து போறதும் காரணம் குட்டிகளா.
நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்.
நாம் எதைக் கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம்.
I யோவான் 5 : 14, 15
இனிமே நம்ம இயேசப்பாவை நோக்கி கூப்பிட தயங்க மாட்டீங்கன்னு நம்புறோம் குட்டிகளா.
வலிமையான ஜெபம் – 8 BIBLE QUIZ ON RUTH – PART I
வலிமையான ஜெபம் – 9
Daily Bible Verse
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
« Feb | ||||||
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
Newsletter
Categories
Archives