-
வலிமையான ஜெபம் – 5
ஹாய் குட்டிஸ், “வலிமையான ஜெபம்” என்கிற தலைப்பில உங்களை மீண்டும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நம்ம இயேசப்பா அன்புக்குள்ள ரொம்பவே சந்தோசப்படுகிறோம்.
நம்ம இயேசப்பாவை நோக்கி கொஞ்சம் கூட தயங்காம நாம கூப்பிடனும்னு தெரிந்து கொண்ட உங்களுக்கு சில காரியங்கள் தடையா தோணலாம் குட்டிகளா.
அது ஒரு வேளை நம்மளுடைய பலவீனங்களா இருக்கலாம் இல்லை நம்மளுடைய பழைய வாழ்க்கையா இருக்கலாம் குட்டிகளா.
அதை கருத்தில வைச்சு நான் எந்த விதத்திலும் தகுதி இல்லாதவள்/ இல்லாதவன்…..என்னால எப்படி ஒரு பரிசுத்தமான தேவனை நோக்கி கூப்பிட முடியும்.
என்னுடைய பழைய வாழ்கையில நான் எத்தனையோ தப்புகள் பண்ணிருக்கேன். என்னால என்னுடைய இயேசப்பா எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்காங்க. இதுக்கும் மேலயும் நான் அவரை கஷ்டப்படுத்தி பார்க்கணுமா….என் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும்…….இனி என்றைக்கும் நான் இப்படி வாழணும்னு என்பது தான் என்னுடைய தேவனுடைய விருப்பமா கூட இருக்கும்…. உலகத்தில ஒரு பழமொழி சொல்லுவாங்களே. “உப்பு தின்னவன் தண்ணீர் குடிக்கணும்”ன்னு. நான் செய்த தப்புக்கு இதுதான் தண்டனை……ன்னு உங்க மனதுக்குள்ள நீங்களே ஒரு முடிவுக்கு வந்துட்டீங்களா குட்டிகளா. தயவு செய்து குட்டிகளா, உங்க மனதில அந்த ஒரு மாதிரி எண்ணங்கள் என்றைக்கும் வர வேண்டாம்.
உங்களுக்கு நம்ம பைபிள்ல தாவீதுடைய வாழ்க்கை ரொம்பவே பிடித்தமான விஷயம், அதுவும் தாவீது-கோலியாத் என்ற சம்பவம் இருக்கே…அது என்றைக்கும் நம்ம மனதில மறக்கமுடியாத தாக்கத்தை உண்டாக்கின காரியம். பல நாட்களில் நீங்க கூட உங்க அம்மா/அப்பாகிட்ட கேட்டிருக்கலாம். அப்பா எனக்கும் அந்த தாவீது மாதிரி என்னைக்கி எனர்ஜி கிடைக்கும்னு. உங்களுடைய நீண்ட நாள் கேள்விக்கு நாங்க பதில் சொல்லட்டுமா? தாவீதுக்கு அவ்வளவு எனர்ஜி எதுனால கிடைத்தது தெரியுமா? நம்ம தாவீது நம்ம தேவனை நோக்கி எப்பொழுதும், தன்னுடைய எந்த நிலைமையிலும் கூப்பிட்டதுதான் அவருடைய எனர்ஜிக்கான காரணம்.
நீங்க ரொம்பவே ஆச்சர்யமா பார்க்கலாம். உண்மையா குட்டிகளா, தாவீது தன்னுடைய வாழ்கையில எப்பவும், நமது தேவனை நோக்கி கூப்பிட்டதால்தான் அவரால நம்ம தேவனிடமிருந்து என் இருதயத்திற்கு ஏற்றவன்னு நல்ல சர்ட்டிபிகேட் வாங்க முடிந்தது. உடனே உங்க மனதில தாவீதை பற்றி உங்களுக்கு தெரியுமா….அவர் எவ்வளவு நல்லவர். என்றும் நம்ம பிதாப்பாவை நோக்கியே வாழ்ந்தவர். அவருக்கு நம்ம பிதாப்பா மேல நிறைய விசுவாசம் உண்டுன்னு எங்க அம்மா/அப்பா சொல்லியிருக்காங்க. அது மட்டுமில்ல அவருக்கு தாழ்மை அதிகமா உண்டுன்னு கேள்விப்பட்டிருக்கேன்.
சரி குட்டிகளா, நம்ம தாவீதை குறித்து சொல்லி முடிச்சிட்டீங்களா? தாவீது தன்னுடைய வாழ்கையில அத்தனை நிறைய விசுவாசத்தை, தாழ்மையை, தேவனுக்கு பிடித்த குணநலன்களை அடைந்தது ஒரே நாளில் நடக்கலை குட்டிகளா. நம்ம தாவீதும் நம்மளை மாதிரி சாதாரண மனிதன்தான். அவருடைய வாழ்கையை பற்றி உங்களில் நிறைய பேருக்கு தெரியும். ஆனாலும் தெரியாத மற்றவங்களுக்காக……
தாவீது இஸ்ரவேலில் யூதா வம்சத்தை சேர்ந்த ஈசாய் என்பவருடைய எட்டாவது மகன். அவருடைய முதல் மூன்று அண்ணன்கள் இஸ்ரவேலின் முதல் ராஜாவான சவுலுடைய படையில இருந்தப்ப, தாவீது தன்னுடைய மற்ற அண்ணன்களோட ஆடு மேய்க்கிற வேலையில இருந்தார். நம்ம தேவன் மூலமா சாமுவேல் தீர்க்கத்தரிசியால இஸ்ரவேலின் ராஜாவா அபிஷேகம் பண்ணப்பட்டார்(முன்னறிவிக்க பட்டார்) தாவீது. ஆனாலும் அந்த நாளில் இருந்து தாவீது தன்னுடைய வாழ்கையில நிறைய ஏற்ற தாழ்வுகளை சந்திக்க வேண்டியதா போச்சு குட்டிகளா. கோலியாத்தை கொன்றதால தாவீதை நேசித்த அதே சவுல் ராஜா தனக்கு பிறகு தாவீது அரசாள வந்திருவனோன்னு பயத்தில தாவீதை கொலை செய்ய தேடினார்.
தாவீதுக்கு தன்னுடைய ஒவ்வொரு நாளும் சவுல் ராஜாவால தனக்கு ஆபத்து வந்திருவோமோன்னு பயத்திலதான் கழிக்க வேண்டியதா இருந்தது. அந்த நாட்களில் அவர் எவ்வளவு தூரம் நம்ம தேவனை மட்டுமே நம்பியிருந்தார்னு உங்களுக்கும் தெரியும் குட்டிகளா.
பலவானே, பொல்லாப்பில் ஏன் பெருமைபாராட்டுகிறாய்? தேவனுடைய கிருபை எந்நாளுமுள்ளது.
சங்கீதம் 52 : 1
இந்த சங்கீதம் நம்ம தாவீதால எப்ப பாடப்பட்டது தெரியுமா குட்டிகளா? சவுல் ராஜாவுக்கு பயந்து தாவீது அபிமலேக்கு(ஆசாரியன்) வீட்டிற்கு வந்த விசயத்தை தோவேக்கு மூலமா சவுல் ராஜாவுக்கு அறிவிக்க பட்டபின்பு தாவீது தன்னுடைய மனதில உள்ள பாரங்களை நமது தேவனிடம் பாடியது.
தாவீது தன்னுடைய பாரங்களில் கூட எவ்வளவு அழகாக நம்ம தேவனை மட்டும் சார்ந்திகிறார்ன்னு பார்த்தீங்களா?ன்னு எங்ககிட்ட நீங்க கேள்வி கேட்க நினைக்கிறது எங்களுக்கும் புரியுது குட்டிகளா. நம்ம இயேசப்பா கூட நம்மகிட்ட இதேதான் எதிர்ப்பார்கிறாங்க. நம்ம எந்த தப்பும் செய்யாத நேரத்தில இந்த உலகமே நம்மளை எதிர்த்தா நமக்கு கஷ்டமாதான் இருக்கும். என்னை போய் இப்படி செய்யுராங்களேன்னு……கோபங்கள் வரும் குட்டிகளா. நீங்க கோபப்படுங்க குட்டிகளா, நம்ம இயேசப்பாவும் உங்களை தவறுதலா நினைக்க மாட்டாங்க. ஆனா உங்க கோபம் மனுசங்க முன்னாடி இல்லை குட்டிகளா, நம்ம தேவனுடைய சமூகத்தில, அவர்கிட்ட மட்டும் உங்க கோபங்களையும், மன வேதனைகளையும் சொன்ன தாவீது மாதிரி இருந்தா உண்மையிலேயே அவர் சந்தோஷப்படுவார்.
உங்களுக்காக வழக்காட நம்ம தேவன் இருக்கிறாரே குட்டிகளா. சப்போஸ் கோபத்தில நாம வார்த்தைகள் மற்றவங்க முன்னாடி விடுறது சகஜம்தான். இன்னும் அதிக கோபத்தில இனி வாழ்கையில என்ன இருக்குன்னு அதிக நேரங்கள் நீங்க நினைத்திருக்கலாம். என்னுடைய கோபத்தினால என்னை விரும்பினவங்க முன்னாடி எல்லாம் அவமானப்பட்டுட்டேன். இனி என்னை மதிக்கிறதுக்கோ, என் மேல அன்பு வைக்கிறதுக்கோ யாருமே இல்லை. என்னுடைய கோபத்தினால நானே எனக்கு விரோதமா எல்லா காரியங்களையும் ஏற்படுத்திட்டேன். ஆனா நம்ம வாழ்க்கை முடியலை குட்டிகளா. இன்னும் கூட நம்ம தேவன் நமக்கு தருணங்கள் கொடுத்திருக்காங்க. இந்த நேரம் கூட நம்ம தவறுதல்களை நம்ம வாயால கேட்க நம்ம இயேசப்பா ஆசைபடுகிறார். ஆனா அதுல அவர் நம்மகிட்ட எதிர்ப்பார்கிறது எல்லாம் உண்மையை மட்டுமே.
நாம தேவனை சார்ந்து மட்டுமே நம்மளுடைய பலவீனங்களில் இருக்கணும்னு தெரிந்திருப்பீங்க. அதுவும் ஜெபத்தில அதை அவர்கிட்ட சொல்லிட்டு அவருக்காக காத்திருந்தா அவர் எவ்வளவு சந்தோஷப்படுவார் தெரியுமா குட்டிகளா. உங்களுக்கும் நம்ம இயேசப்பாவின் சந்தோசத்தை நேரடியாக பார்க்கணும்னு ஆசை வந்திருச்சுன்னு நினைக்கிறோம், சரிதானே குட்டிகளா.
வலிமையான ஜெபம் என்பதை குறித்து நம்ம இயேசப்பா(சர்வ வல்லமையுள்ள தேவனின் வார்த்தை) நமக்கு சொல்லி கொடுக்கிற காரியங்களை அடுத்த முறை கேட்கலாமா. நமது தேவனுக்குள் சந்திப்போம்……
வலிமையான ஜெபம் – 4 வலிமையான ஜெபம் – 6
வலிமையான ஜெபம் – 5
Daily Bible Verse
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
« Feb | ||||||
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
Newsletter
Categories
Archives