-
வலிமையான ஜெபம் – 2
ஹாய் குட்டிஸ், உங்களை “வலிமையான ஜெபம்” என்கிற தலைப்பில மறுபடியும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நம்ம இயேசப்பா அன்புக்குள்ள ரொம்பவே சந்தோசப்படுகிறோம்.
நம்ம பிதாப்பா இந்த உலகத்தை உருவாக்கின விதமும்(ஆதியாகமம் 1,2 ம் அதிகாரங்கள்), நம்ம பிதாப்பா இந்த உலகத்தை உருவாக்கின நேரம் நம்ம இயேசப்பா எந்த அளவு சந்தோசப்பட்டாங்க(நீதிமொழிகள் 8 : 22 – 31) என்பதையும் நீங்க நல்லா தெரிந்து வைச்சிருப்பீங்க குட்டிகளா. உங்ககிட்ட ஒரு சின்ன கேள்வி கேட்கலாமா ?
நம்ம பிதாப்பா தான் உலகத்தை உருவாக்கின விதத்தை குறித்து ஒரு தேவ மனிதர்கிட்ட ரொம்பவே விளக்கமா பைபிள்ல ஒரு புத்தகத்தில் சொல்லியிருக்காங்க. நம்ம பைபிள்ல அது எந்த புத்தகம்னு சொல்ல முடியுமா குட்டிகளா? அந்த தேவ மனிதர் யார்னு சொல்ல முடியுமா?
உங்களுடைய அரையாண்டு விடுமுறையை அடுத்து இப்ப நீங்க பரபரப்பா ஸ்கூல் போயிட்டிருக்க நேரம். இந்த பரபரப்பான நேரங்களை தவிர்த்து, நீங்க ரொம்ப ரிலாக்ஸா இருக்கிற நேரம் உங்களை சுத்தி இருக்கிற சூழ்நிலைகளை ரசித்து பார்த்தது உண்டா குட்டிகளா. நம்ம பிதாப்பாவும், நம்ம இயேசப்பாவும் எவ்வளவு அழகா உலகத்தை உருவாக்கி இருக்காங்கன்னு என்னைக்காவது நீங்க யோசித்து பார்த்தது உண்டா குட்டிகளா.
அவருடைய அழகான படைப்புகளில் நீங்களும் ஒரு அழகான படைப்பு என்பதை யோசித்து பார்த்திருக்கீங்களா குட்டிகளா?
உங்களுக்கு இங்கிலீஷ் ரைம்ஸ்ல தெரிந்த பாட்டுதான்.
Chubby cheeks dimple chin…….உங்களுடைய LKG வகுப்பில நீங்க விரும்பி அபினயங்களோட படித்த பாட்டு. இப்ப அந்த பாட்டை யோசித்து பார்த்தது உண்டா குட்டிகளா? எத்தனை அழகாக நம்ம இயேசப்பா நம்மளை படைச்சிருக்காங்க குட்டிகளா. இவ்வளவு அழகாக நம்மளை இந்த உலகத்தில உருவாக்கி, எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லாம ஒவ்வொரு நொடியும் அன்பாகவே உங்களை நோக்கி கரங்களை விரிச்சி காத்திட்டிருக்கிறார் என்பதை இதன் மூலமா உங்களுக்கு சொல்ல ஆசைபடுகிறோம் குட்டிகளா.
உங்களுக்கு நியூஸ் பேப்பர் வாசிக்கிற பழக்கம் உண்டா குட்டிகளா? நம்ம இயேசப்பா அழகாக பார்த்து செய்த உலகத்தில எத்தனை வன்முறைகள் குட்டிகளா. பொறாமை, கொலை, கொள்ளை, இன்னும் யோசித்தே பார்க்க முடியாத எத்தனையோ விபரீதங்கள் ஒவ்வொரு நாளும் நடந்திட்டேதான் இருக்கு குட்டிகளா. ஆனா இத்தனை சூழ்நிலைகளிலும் இந்த டாக்குமெண்டை வாசிக்கிறதே நம்ம தேவன் கொடுத்த ஈவுதான் காரணம்.
உங்ககிட்ட முதல்லயே நாங்க சொன்னோம் குட்டிகளா, நம்ம இயேசப்பாவை தெரிந்து கொண்ட பிறகே ஜெபம் பத்தி தெரிந்து கொள்ளலாமேன்னு. ஆனா ஒரு விஷயம் உங்ககிட்ட ஜெபம் பத்தி கேட்கலாமா குட்டிகளா?
நம்ம பிதாப்பா படைத்த படைப்புகளில் நாம்தான் பிரதானமான படைப்பு குட்டிகளா. அது உங்களுக்கும் தெரியும். உங்க கண், மூக்கு, உங்க உடம்பில இருக்கிற ஒவ்வொரு அமைப்பும் நம்ம தேவன், உங்களை விரும்பி அழகாக செதுக்கின காரியம் குட்டிகளா. அது மட்டுமில்ல வாழ்கையில உங்களுடைய எல்லா தேவைகளையும் சந்திக்கிறவர் அவர்தான் குட்டிகளா. அவைகளுக்காக என்னைக்காவது நீங்க உங்களுடைய ஜெபத்தில நன்றிகள் சொன்னது உண்டா குட்டிகளா?
உங்களை குறை சொல்றதுக்காகவோ உங்களுடைய தப்புகளை எடுத்து சொல்றதுக்காகவோ இதை நாங்க சொல்லலை குட்டிகளா. நம்ம தேவன் அன்பானவர் குட்டிகளா. அவருடைய ஒரே குமாரனை நமக்காக கொடுத்தால் இன்னும் அவருடைய அன்பை நீங்க தெரிந்து கொள்ளலாம் குட்டிகளா(யோவான் 3: 16). அப்படிப்பட்டவருக்கு வெறும் ஒரு வழிபாடா மட்டும் ஜெபம் பண்ணறது உங்களுக்கு சரியா தோணுதா குட்டிகளா? அந்த ஜெபத்தில அவருக்கு நன்றிகள் சொல்லறதை வெறும் வார்த்தையாக வாயில இருந்து சொன்னா போதுமா குட்டிகளா? இப்ப உங்களுக்கும் புரிந்திருக்கும் குட்டிகளா. நம்மளுடைய ஜெபத்தில நம்ம தேவனுக்கு நன்றிகள் சொல்லறது எவ்வளவு முக்கியம் என்பதை நீங்களே நம்ம இயேசப்பா சமூகத்தில கேட்டு தெரிந்து கொள்ளுங்களேன்.
வலிமையான ஜெபம் என்பதை குறித்து நம்ம இயேசப்பா(சர்வ வல்லமையுள்ள தேவனின் வார்த்தை) நமக்கு சொல்லி கொடுக்கிற காரியங்களை அடுத்த முறை கேட்கலாமா. நமது தேவனுக்குள் சந்திப்போம்……
வலிமையான ஜெபம் – 1 வலிமையான ஜெபம் – 3
வலிமையான ஜெபம் – 2
Daily Bible Verse
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
« Feb | ||||||
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
Newsletter
Categories
Archives