-
வலிமையான ஜெபம் – 8
ஹாய் குட்டிஸ், வலிமையான ஜெபம் என்கிற தலைப்பில மீண்டும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நம்ம இயேசப்பா அன்புக்குள்ள ரொம்பவே சந்தோசப்படுகிறோம்.
நம்ம தேவனை நோக்கி எந்த சூழ்நிலையிலும் கூப்பிடணும்னு நம்ம இயேசப்பா நமக்கு சொல்லி கொடுத்திருக்காங்க குட்டிகளா.
ஆனா உங்க மனதில இப்பவும்……..தாவீதா எவ்வளவு பெரிய தவறு செய்தாங்க? நம்ம தேவனால் எப்படி தாவீது செய்த தப்பை மன்னிக்க முடிந்தது? இல்லை எங்ககிட்ட பொய் சொல்ல வேண்டாம். நான் சண்டே ஸ்கூல்ல படிச்சிருக்கேன். நம்ம தேவன் ரொம்பவே பரிசுத்தமானவர். அதுனால அவருடைய பிள்ளைகளாகிய நம்மளையும் பரிசுத்தமா இருக்கத்தான் அழைச்சிருக்காங்கன்னு சொல்லி கொடுத்திருக்காங்க. அப்படி இருக்கும் போது எப்படி நம்ம பரிசுத்தமான தேவனால் தாவீதுடைய தப்புகளை மன்னிக்க முடிந்தது?
தாவீதுக்கு எப்படி நம்ம தேவனால் மன்னிப்பு கிடைச்சதுன்னு எங்களுக்கு தெரியாது. ஆனா எங்களுக்கு எப்பவும் எங்க மனதில தோணுற விஷயம்……..எங்க தேவன் பரிசுத்தமான தேவன். நாங்க என்றும் தப்பு செய்கிறவங்க. இப்படி இருக்கும் போது நாங்க எப்படி எங்க இயேசப்பாவை நோக்கி கூப்பிட முடியும்? நாங்க எங்க இயேசப்பாவை நோக்கி கூப்பிடணும்னு நினைக்கும் போதே, நாங்க அவர் பேச்சை மீறி நடந்து கொண்ட விஷயம் தான் ஞாபகம் வருது. இப்படி இருக்கும் போது எப்படி எங்களால் இந்த குற்ற மனச்சாட்சியோட எங்க இயேசப்பாவை கூப்பிட முடியும்?ன்னு நீங்க உங்களையே வருத்தப்படுத்திட்டு இருக்கிறது நம்ம இயேசப்பாக்கு தெரியாம இல்லை குட்டிகளா.
நம்ம தேவன் பரிசுத்தமான தேவன், ஒளியா இருக்கிறாங்க. பாவத்தை பாராத சுத்த கண்ணன்னு நம்ம பைபிள்ல சொல்லப்பட்டிருக்கிறது உண்மைதான். ஆனா இவ்வளவு தூரம் நம்மளை உருவாக்கி, இந்த பூமியில நமக்கான எல்லாவற்றையும் பார்த்து, பார்த்து செய்து வருகிற அவர்கிட்ட இன்னொரு முக்கியமான குணநலன் இருக்கு குட்டிகளா. அது என்ன தெரியுமா?
தேவன் அன்பாகவே இருக்கிறார்.
I யோவான் 4 : 16
யெஸ்….நம்ம தேவன் நம்ம மேல ரொம்பவே அன்பா இருக்கிறாங்க. அதை இந்த உலகத்தில இருக்கிற எந்த உறவுகளோடயும் நம்மளால கண்டிப்பா ஒத்து பார்க்க முடியாது. ஏன்னா
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.
யோவான் 3 : 16
இந்த வார்த்தைகளின் அர்த்தம் நமக்கு தெரியும் குட்டிகளா. தெரியாம இருக்கிற நம்ம நண்பர்களுக்கு நம்ம இயேசப்பா என்ன சொல்லி கொடுக்கிறாங்கன்னு தெரிந்து கொள்ளலாமா?
ஆதாம், ஏவாள் தேவன் சொன்ன வார்த்தையை மீறி என்னைக்கி அந்த நன்மை, தீமை மரத்தின் பழத்தை சாப்பிட்டாங்களோ, அந்த நாள்ல இருந்தே நமக்கும், நம்ம தேவனுக்கும் இருந்த ஒரு அழகான உறவு விட்டு போனது உண்மைதான் குட்டிகளா. ஆனா உங்களுக்கு தெரியாத விஷயம் இல்லை, ஆதாம், ஏவாளை இந்த உலகத்தில நம்ம தேவன் உருவாக்கினப்ப எந்த அளவுக்கு நம்ம தேவனுக்கும், நம்ம இயேசப்பாக்கும் சந்தோசமும், மகிழ்ச்சியும் இருந்தது என்பதை நம்ம இயேசப்பாவே தன்னுடைய வார்த்தைகளால் நீதிமொழிகள் 8ம் அதிகாரத்தில் சொல்லிருக்காங்க. அந்த அளவுக்கு சந்தோசமும், அன்பும் வைச்சிருந்த தன்னுடைய பிள்ளைகள் தன் பேச்சை மீறினப்ப எந்த அளவு நம்ம தேவன் வேதனைப்பட்டார் உங்களுக்கும் புரிந்திருக்கும்.
நம்ம தேவன் சர்வவல்லமையுள்ள தேவன் குட்டிகளா. ஆனாலும் நீதிக்கு உட்பட்ட தேவனும் கூட. ஆதாமும், ஏவாளும் சாத்தான் வலையில் விழுந்தது, விழுந்ததுதான்…..ஆனா அதுனால தன்னுடைய பிள்ளைகள் இழக்கப்போகிற தேவனுடைய உறவும், அவங்களா ஏற்றுக் கொண்ட மன கஷ்டம் மட்டுமே நம்ம தேவனை கஷ்டப்படுத்தினது. தன் பக்கத்தில என்றும் ராஜ குமாரரும், குமாரத்திகளுமாய் இருக்க வேண்டிய சந்தோசத்தை தங்களுடைய சிறு கீழ்படியாமையால அவங்க இழந்து போனப்ப அவர் மனம் எவ்வளவு நொறுங்கி போச்சு தெரியுமா.
ஆனா இந்த பிரிவை என்றும் தன்னுடைய தகப்பனால் தொடர முடியாதுன்னு நம்ம இயேசப்பா தெரிந்து கொண்டதால்தான் தன்னுடைய குழந்தைகளுக்காக தன்னுடைய உயிரை சிலுவையில கொடுக்க நம்ம இயேசப்பாவே முன் வந்தாங்க. நம்ம தேவன் மேல நம்ம இயேசப்பா வைச்சிருந்த அன்பு உங்களுக்கு ரொம்பவே சந்தோசத்தை கொடுக்குது, அப்படிதானே. ஆனா உங்களுடைய சந்தோஷத்தில் இன்னும் ஒரு முக்கியமான விசயத்தையும் தெரிந்து கொள்ளுங்க. நம்ம இயேசப்பா நம்ம மேல எந்த அளவுக்கு அன்பு வைச்சிருக்காங்க தெரியுமா குட்டிகளா. அவர் நம்ம மேல வைச்சிருந்த அன்பும், தன் தகப்பனுக்கு அவர் கீழ்படிந்த கீழ்படிதல் தான் நாம நம்ம இயேசப்பாவை ஒரு மனிதனா இந்த உலகத்தில பார்க்க முடிந்தது.
அது மட்டுமில்ல நம்ம தப்புகளை நம்ம தேவன் மன்னிக்கிறதுக்கு, நாம நம்ம இயேசப்பாவை நம்பி, அவர்கிட்ட நம்ம மனதை திறந்து சொல்லறது மட்டும்தான் ஒரே வழியாகவும் நம்ம தேவன் ஏற்கனவே முடிவு பண்ணி வைச்சிட்டார்.
நம்முடைய தப்புகள் நம்மளை குற்ற மனசாட்சியோட வேதனைப்படுத்துறது கரணம் தெரியுமா குட்டிகளா. ஏன்னா அடுத்து நாம தவறுகளை தொடர்ந்து செய்யாம நம்ம தேவன் நமக்கு கொடுத்த பரிசுத்த ஆவியானவர் உணர்த்துகிறார். ஆனா அதை மட்டுமே மனதில வைச்சிட்டு என் இயேசப்பாகிட்ட எதையும் சொல்ல மாட்டேன் என்பதோ, என் வாழ்க்கையே இப்படித்தான் கஷ்டத்தில்தான் இருக்கும் என்பதோ…..பரிசுத்த ஆவியானவர் சொல்லறது கிடையாது குட்டிகளா, அது முழுக்க முழுக்க சாத்தான் நம்மளை தேவன் கிட்ட, நம்ம இயேசப்பா கிட்ட நெருங்க விடாம தடுக்கிற ஒரு தந்திரம் குட்டிகளா. அன்னைக்கி இந்த காரியத்தில ஆதாம், ஏவாளை தோற்கடித்தான். இன்னைக்கி நம்மளை………விடலாமா குட்டிகளா.
நாம நம்ம இயேசப்பா வேண்டாம்னு சொன்ன பிறகும் சில காரியங்களில் தலையிட்டு அவருடைய மனதை காயப்படுத்தினது உண்மைதான் குட்டிகளா. ஆனா நம்ம தவறுகளால் வேதனைப்பட்டுட்டு இருக்கிற அவர்கிட்ட மன்னிப்பு கேட்டு அவருடைய மார்பில சாய்ந்து அவருடைய அன்பை ருசிக்காம, நான் தப்பு பண்ணிட்டேன்…..தப்பு பண்ணிட்டேன்னு அவரை விட்டு விலகி போறது இன்னும் அவருக்கு கஷ்டத்தை கொடுக்கும் என்பதை மட்டும் இதன் மூலமா நம்ம இயேசப்பா சொல்ல ஆசைபடுறாங்க.
தப்பு செய்கிற போது நாம நினைக்கிறது என்ன தெரியுமா குட்டிகளா…..
நம்ம இயேசப்பா நாம செய்த தப்புக்காக நம்மளை கம்பை தூக்கிட்டு கோபத்தோட விரட்டுற மாதிரி…..அதுனால தான ஓடி ஒளிய பார்க்கிறோம். ஆனா உண்மை அது இல்லை குட்டிகளா…
உண்மையிலே நாம தப்பு பண்ணும் போது அவருடைய உறவை மறுத்திட்டு ஓடுறோம். ஆனா நம்மளை விட்டு பிரிய முடியாத நம்ம இயேசப்பாதான் தன்கிட்ட வரச் சொல்லி அன்பால துரத்துறாங்க. நீங்க நல்லா கவனித்து பார்த்தா நமக்கும் தெரியும். கையில இருக்கிறது கம்பு இல்லை…..நம்மளை தாங்கி பிடிக்க நினைக்கிற அன்பு மட்டும்தான்னு.
இனியும் நாம ஓடலாமா இல்லை அவர்கிட்ட மன்னிப்பு கேட்டு அவருடைய மார்பில சாய்ந்து கொள்ளலாமா?
வலிமையான ஜெபம் என்பதை குறித்து நம்ம இயேசப்பா(சர்வ வல்லமையுள்ள தேவனின் வார்த்தை) நமக்கு சொல்லி கொடுக்கிற காரியங்களை அடுத்த முறை கேட்கலாமா. நமது தேவனுக்குள் சந்திப்போம்……
வலிமையான ஜெபம் – 7 வலிமையான ஜெபம் – 9
வலிமையான ஜெபம் – 8
Daily Bible Verse
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
« Feb | ||||||
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
Newsletter
Categories
Archives