• வலிமையான ஜெபம் – 1

    ஹாய் குட்டிஸ், உங்களை “வலிமையான ஜெபம்” என்கிற தலைப்பில சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நம்ம இயேசப்பா அன்புக்குள்ள ரொம்பவே சந்தோசப்படுகிறோம்.

    வலிமையான ஜெபம் என்கிற தலைப்பை பார்த்ததும் நீங்க ரொம்பவே ஆச்சர்யப்படுவீங்க. ஜெபம் என்பதை பத்தி உங்களுக்கு நல்லாவே தெரிந்திருக்கும். ஆனா வலிமையான ஜெபம் என்பது என்ன?ன்னு நீங்க எங்ககிட்ட கேள்வி கேட்க நினைக்கலாம்.

    ஆனா குட்டிகளா, நாம வலிமையான ஜெபத்தை பற்றி நம்ம இயேசப்பா சொல்லி கொடுக்கிறதை கேட்கறதுக்கு முன்னாடி நம்ம இயேசப்பா பத்தி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா குட்டிகளா? நாம ஆராதிக்கிற நம்ம இயேசப்பா எப்படிப்பட்டவர்ன்னு தெரிந்து கொள்ளாம வெறுமனே ஜெபம் என்பதை பத்தி தெரிந்து கொள்ள வேண்டாம்னு எங்களுக்கு தோணுது. நீங்களும் அதைத்தான் யோசிப்பீங்க. நீங்க நம்ம இயேசப்பாவை நல்லா தெரிந்து வைச்சிருந்தாலும் இன்னும் நல்லா தெரிந்து கொள்ளலாமே.

    நம்ம இயேசப்பா பற்றி நாம தெரிந்து கொள்ளணும்னு நாம ஆசைபட்டா புதிய ஏற்பாடுல இருந்து இல்லை குட்டிகளா, பழைய ஏற்பாடுல ஆதியாகமம் முதல் அதிகாரத்தில இருந்துதான் நீங்க ஆரம்பிக்கணும். உண்மையாகவான்னு நீங்க ஆச்சர்யப்படுறீங்களா?.

    1 யோவான் 1 : 1 வசனமும் ஆதியாகமம் 1 : 3 வசனமும் நீங்க வாசித்து பார்த்தா நம்ம பிதாப்பா வாயில இருந்து வந்த வார்த்தைதான் நம்ம இயேசப்பான்னு நீங்க தெரிந்து கொள்ளலாம். நீதிமொழிகள் 8ம் அதிகாரம் 22ல ஆரம்பிச்சி 31 வரை வாசித்து பார்த்தா நம்ம இயேசப்பாவும்  நம்ம பிதாப்பாவும் இந்த வானத்தையும், பூமியையும் படைத்த நேரத்தில எந்த அளவு சந்தோசபட்டாங்க என்பதும், ஆதாம், ஏவாள் இந்த உலகத்தில நம்ம தேவனால் இந்த அளவு நேசிக்கப்பட்டாங்க என்பதும் உங்களுக்கும் புரிஞ்சிருக்கும். ஒரு வீட்டுல ஒரு குட்டி குழந்தை வரும் போது அந்த வீட்டுல எத்தனை பேருக்கு சந்தோசத்தை கொடுக்குது குட்டிகளா.

    உன்னுடைய தம்பியோ, தங்கையோ முதன்முதல்ல ஒரு குட்டி குழந்தையா உங்க வீட்டுல வந்த போது நீங்க எவ்வளவு சந்தோசப்பட்டிருப்பீங்க குட்டிகளா. உன்னுடைய குட்டி பாப்பாகிட்ட உங்க அம்மா அண்ணன்/அக்காவை பாரு, சிரின்னு சொன்னப்ப பாதி தூக்கத்தில சிரிச்ச அந்த நொடி உங்களுக்கு ஞாபகம் இருக்கா குட்டிகளா. உன்னுடைய குட்டி பாப்பாவை தொட்டு பார்த்தப்ப என்ன தோணுச்சு குட்டிகளா. இப்ப உங்களால நம்ம இயேசப்பாவும், நம்ம பிதாப்பாவும் எந்த அளவு ஆதாம், ஏவாள் மேல அன்பு வைச்சிருந்தாங்கன்னு உங்களால புரிந்து கொள்ள முடியுதா குட்டிகளா.

    அது மட்டுமில்ல அன்னைக்கி ஆதாம், ஏவாள் தன் அருகில எப்பவும் இருக்கணும் என்பதற்காக அவர்களுக்காக ஏதேன் தோட்டத்தை உருவாக்கின அவருடைய அன்பு, ஏதும் அவர்களுடைய தவறுகளால் குறைந்து போயிருக்கோமான்னு  நீங்க சந்தேகப்பட வேண்டாம் குட்டிகளா. இந்த நிமிஷம் வரைக்கும் அது ஒரு போதும் குறைந்து போகலை குட்டிகளா. இப்பவும் நம்ம இயேசப்பா நம்ம மேல அன்பா இருக்காங்க குட்டிகளா. நம்மளுடைய தப்புகள் சின்னதா இருந்தாலும், பெரியதா இருந்தாலும், இந்த உலகம் நம்மளை நல்லவங்கன்னு சொன்னாலும், கெட்டவங்கன்னு சொன்னாலும் அவருடைய அன்பு மட்டுமே என்றும் குறையாதது குட்டிகளா. நீ உன்னுடைய உடல் சரியில்லாத சமயம் முடியலைன்னு கதறுகிற நேரம், உனக்காக அந்த வேதனையை ஒருத்தர் அனுபவிச்சிட்டிருக்கிறார்ன்னு இப்ப புரிய முடியுதா குட்டிகளா. ஏன்னா தன்னுடைய பிள்ளைகள் அழுகிற சமயம் வருத்தப்படாத அப்பா இருக்க முடியுமா குட்டிகளா. இனிமே உங்க இயேசப்பாவை கூப்பிடாம இருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறோம், சரிதானே!

    வலிமையான ஜெபம் என்பதை குறித்து நம்ம இயேசப்பா(சர்வ வல்லமையுள்ள தேவனின் வார்த்தை) நமக்கு சொல்லி கொடுக்கிற காரியங்களை அடுத்த முறை கேட்கலாமா. நமது தேவனுக்குள் சந்திப்போம்……

    Related Post

    Categories: வலிமையான ஜெபம்

    Tags: , ,

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    6 − one =

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>