• வலிமையான ஜெபம் – 3

    ஹாய் குட்டிஸ், “வலிமையான ஜெபம்” என்கிற தலைப்பில உங்களை மீண்டும் சந்திக்கிறதில உங்களுடைய நண்பர்களாகிய நாங்க நம்ம இயேசப்பா அன்புக்குள்ள ரொம்பவே சந்தோசப்படுகிறோம்.

    உங்களுடைய ஜெப வாழ்க்கை நம்ம தேவனுக்குள்ள எப்படி இருக்கு குட்டிகளா? இப்ப நம்ம தேவனுக்கு ஜெபத்தில நன்றிகள் சொல்லறது உங்களுக்கு எந்த அளவு பிடிச்சிருக்கு குட்டிகளா?

    சில பேரு உங்களுக்குள்ள எனக்கு என்னுடைய இயேசப்பா என்ன செய்து கொடுத்திருக்காங்க? நான் ஏன் அவருக்கு நன்றிகள் சொல்லணும்?ன்னு உங்க மனதில கேள்விகள் கேட்கலாம் குட்டிகளா. உங்க கேள்விகள் ரொம்பவே நியாயமானதா உங்களுக்கு தோணலாம்.

    உங்க கேள்விக்கான காரணம், உங்களுடைய வாழ்கையில நீங்க நினைத்த அளவுக்கு உங்ககிட்ட மாற்றம் வராம இருந்திருக்கும். இல்லை உங்களுக்கு வேணும்ன்னு நினைக்கிற சில விசயங்கள் இன்னும் உங்களுக்கு கிடைக்காம சில ஏமாற்றங்களை நீங்க சந்திச்சிருக்கலாம். அந்த வேதனைகள் உங்களுடைய படிப்பா இருக்கலாம், இல்லை நீங்க எதிர்ப்பார்க்கிற வசதி, வாய்புகளா இருக்கலாம், இல்லை உன்னுடைய வாழ்கையில இன்னும் நீ ஏங்கிட்டிருக்கிற உங்க அம்மா, அப்பா அன்பா இருக்கலாம் குட்டிகளா. அதுனால உங்களுடைய மனதில நீங்க இப்படி நினைக்கலாம் குட்டிகளா. உங்களுடைய வேதனைகளையோ இல்லை உங்க புலம்பல்களையோ நாங்க என்றும் குறை சொல்ல மாட்டோம் குட்டிகளா.

    ஏன்னா உங்களுடைய இதய புலம்பல்களை நம்ம இயேசப்பாவே பார்த்து உங்களுக்காக பரதபிக்கும் போது சாதாரண மனுசங்க குட்டிகளா நாங்க, எந்த வகையில உங்களை குறை சொல்ல முடியும். எங்க துன்பத்தை பார்த்து இயேசப்பா கவலைப்படுகிறாரா, கண்ணீர் விடுறாரா , சும்மா சொல்ல வேண்டாம், எங்களை சமாதானம் பண்ணுறதுக்காகன்னு நினைக்காதீங்க குட்டிகளா.

    உண்மையிலேயே உங்க வேதனையும், கஷ்டமும் நம்ம இயேசப்பாக்கு தெரியாத விசயங்கள் இல்லை குட்டிகளா. உங்களுக்குள்ளேயே இருந்து உங்களுடைய கஷ்டங்களுக்காக கஷ்டப்படுற அவருக்கு தெரியாதா குட்டிகளா உங்க வேதனைகள்????

    சங்கீதக்காரன் தாவீது தன்னுடைய வாழ்கையில நம்ம இயேசப்பாவை முழுமையா உணர்ந்ததால சங்கீதம் 139ல நமக்கும், நம்ம இயேசப்பாக்கும் எந்த அளவுக்கு தூரங்கள் இருக்குன்னு அழகாக எழுதி வைச்சிருக்கிறார் குட்டிகளா. நம்மளை பற்றி நம்ம இயேசப்பா எந்த அளவு தெரிந்து வைச்சிருக்காங்கன்னு நீங்களும் தெரிந்து கொள்ளுங்க குட்டிகளா.

    1. கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர்.

    2. என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர்.

    3. நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்; என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும்.

    4. முற்புறத்திலும் பிற்புறத்திலும் நீர் என்னை நெருக்கி, உமது கரத்தை என்மேல் வைக்கிறீர்.

     சங்கீதம் 139

    தமிழ் இலக்கணப்படி சொல்லணும்னா குட்டிகளா, நம்ம இயேசப்பாக்கு நம்ம கடந்த காலம் தெரியும், அதாவது நான் எப்படிப்பட்டவ(சங்கீதம் 139 : 1)ன்னு அவருக்கு தெரியும். நம்ம நிகழ் காலம் தெரியும், நான் என்ன பண்ணிட்டு இருக்கேன்      (சங்கீதம் 139 : 2) என்பதும் அவருக்கு தெரியும் குட்டிகளா. நம்ம எதிர் காலமும் அவருக்கு தெரியும் குட்டிகளா(சங்கீதம் 139 : 3 , 4). இப்படி எங்களை பத்தி எல்லா தெரிந்திருந்தும் ஏன் இயேசப்பா எங்களுக்கு உதவி செய்ய மறுக்கிறாங்க? எங்களுடைய தேவைகளை ஏன் சந்திக்க வரலை?ன்னு உங்களுக்கு கேள்விகள் எழும்பலாம் குட்டிகளா. இப்பவும் சொல்லுறோம் குட்டிகளா, உங்க கேள்விகளை நம்ம இயேசப்பா தப்பா நினைக்க மாட்டாங்க. ஏன் தெரியுமா குட்டிகளா, உங்களை அன்பா அரவணைக்க நீட்டின அவருடைய கரம் இன்னும் நீட்டின படிதான் இருக்கு.

    நம்மளை எப்ப பார்த்தாலும் குறை சொல்லுகிற உலகம் மாதிரி நம்ம இயேசப்பா கிடையாது குட்டிகளா. ஏன்னா நம்ம பலவீனங்களை தெரிந்த தேவன் ஆச்சே அவர். ஆனாலும் உங்க வாழ்கையில, இன்னும் வேதனையில இருந்து நாம வெளியே வர முடியாததுக்கு என்ன காரணம் தெரியுமா குட்டிகளா? சங்கீதம் 139 : 3, 4ல சொல்லப்பட்ட உண்மையை மறக்கும் போது நம்ம கஷ்டம் நம்மளை விட்டு போக முடியலை குட்டிகளா. நாங்கதான் நம்ம இயேசப்பா எங்க எதிர் காலத்தையும் அறிந்தவர்ன்னு ஒத்துக்குறோமே, ஆனாலும் எங்க கஷ்டங்களை அவர் ஏன் எங்ககிட்ட இருந்து விலக்கி விடலைன்னு நீங்க யோசிக்கலாம் குட்டிகளா. ஒண்ணே ஒண்ணுதான் காரணம் குட்டிகளா. என்னுடைய வழிகளை தெரிந்த தேவன்னு நம்புற நாம அவர் என்னோட கூட இருக்கிறார் என்கிற சின்ன நம்பிக்கையை மட்டும் நமக்கு கஷ்டங்கள் வரும் போது மறந்திறோம் குட்டிகளா. சங்கீதம் 139 : 7ல ஆரம்பிச்சி 11 முடிய உள்ள ரகசியங்களை நாம மறக்கிறதுதான் நம்ம பலவீனமா மாறியிருது குட்டிகளா. அந்த வசனங்களை உங்களால முடிந்தா சத்தம் போட்டு வாசித்து பாருங்க குட்டிகளா.

    நம்ம இயேசப்பா எப்பவும் கூட இருக்கிறார் என்பதை இப்ப நம்ம மனதும் நமக்கு சொல்லுது, அப்படிதானே குட்டிகளா. என்னுடைய கஷ்டமான நேரங்களில் என்னுடைய இயேசப்பா என்னை விட்டு விலகலைன்னு உங்களுக்கு புரிந்திருக்கும் குட்டிகளா, அதுமட்டுமில்ல நான் தப்பு செய்திட்டதால அவர் எதுவும் என்னை விட்டுட்டு போயிட்டாரோன்னு இது வரைக்கும் நமக்கு இருந்த சந்தேகம் கூட போயிருக்கும் குட்டிகளா. இவை எல்லாத்தையும் நமக்கு சொல்லி கொடுத்த நம்ம இயேசப்பா  இன்னும் ஒரு முக்கியமான காரியம் தெரிந்து கொள்ளனும்னு ஆசைப்படுறாங்க குட்டிகளா.

    கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் வம்சதாருக்காக நான் இதை அநுக்கிரகஞ்செய்யும்படி அவர்கள் என்னிடத்தில் விண்ணபம் பண்ணவேண்டும்;

    எசேக்கியேல் 36 : 37

    உங்களுக்கும் புரிந்திருக்கும் குட்டிகளா. நாம நம்முடைய பிரச்சனையோ, இல்லை கஷ்டமோ , ஏதாவது தேவைகளோ, எது இருந்தாலும் அவர்கிட்ட விண்ணப்பம் பண்ணனும் என்பது தான் அவர் நம்மகிட்ட கேட்குற காரியம்.

    அம்மான்னு சொல்லி அழுறதுக்கும், வெறுமனே அழுறதுக்கும் வித்தியாசம் உண்டுன்னு உங்களுக்கும் தெரியுமே குட்டிகளா.

    வலிமையான ஜெபம் என்பதை குறித்து நம்ம இயேசப்பா(சர்வ வல்லமையுள்ள தேவனின் வார்த்தை) நமக்கு சொல்லி கொடுக்கிற காரியங்களை அடுத்த முறை கேட்கலாமா. நமது தேவனுக்குள் சந்திப்போம்……

    Related Post

    Categories: வலிமையான ஜெபம்

    Tags: , ,

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    + 7 = fourteen

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>