• பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 51

    அவளுடைய அந்த மகிழ்ச்சியான முகம் ஏஞ்சலுக்கும் சந்தோசத்தை கொடுத்தது. சரி குட்டிமா….உன் மன பாரம் இப்ப காணாம போச்சா…..கேட்ட ஏஞ்சலுக்கு

    ஆமா ஏஞ்சல். நான் என் மன பாரத்தை என் இயேசப்பாகிட்ட வைச்சிட்டேன்….அதுனால….அவர் என்னை அழகா பார்த்து கொள்ளும் இருக்கும் போது இன்னும் நான் என்னை குழப்பி கொண்டா அது அவரை காயப்படுத்துமே!! சொன்னவளை பார்த்து சிரித்தவாறே

    நீ நம்ம தேவ வசனங்களுக்கு கீழ்படிகிற காரியத்தில் ரொம்பவே ஆர்வமா இருக்கிறது எனக்கு சந்தோசமா இருக்கு குட்டிமா….ஆனா உன்னுடைய தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிய நீ காண்பிக்கிற அதே ஆர்வம் கடைசி வரை அதை விட்டு விலக கூடாதுன்னு என்பதிலும் இருக்கணும், சரியா??? கேட்ட போது

    அந்த பலத்தை என் இயேசப்பா எனக்கு அவர் தரணும்னு நித்தமும் அவர் சமூகத்தில் கேட்பேன் ஏஞ்சல்….அவள் சொல்லி முடித்த போது

    குட் குட்டிமா….ஏதேன் தோட்டத்தை பார்த்து வந்த காரியம் எப்படி இருந்துச்சு……ஏஞ்சல் கேட்கவும்

    ரொம்பவே நல்லா இருந்தது ஏஞ்சல்….. சாத்தானின் முதல் மேன்மை கண்ணுக்கு முன்னாடி பார்த்தப்ப ஆச்சரியப்படாம இருக்க முடியலை….ஆனா இத்தனை மகிமையையும் தனக்கு கொடுத்த தேவனையே அவன் எதிர்க்கிற அளவு பண்ணனும்னா அந்த பெருமை ஆவி எவ்வளவு மோசமான விசயமா இருக்கணும் ஏஞ்சல்…. கொஞ்சம் பயமா கூட இருக்கு….ஏன்னா நம்ம தேவனால் ஆசீர்வதிக்க பட்டு அவரால் உயர்த்தப்பட்டு நியாயாதிபதிகளாகவும், ராஜாக்களாகவும், அப்போஸ்தலர்களாகவும், தீர்ததரிசிகளாகவும் உயர்த்தப்பட்ட எத்தனையோ அவருடைய பிள்ளைகள் தவறி போக அவங்க பலவீனங்கள் காரணமா இருந்தாலும் அவங்க விழுந்து மண்ணோட மண்ணா ஆக்கின பெரிய ஆயுதம் இந்த பெருமையாக தான் இருக்கு ஏஞ்சல்….உண்மையில் ஒரு மனுஷனால இந்த பெருமை காரியத்தில் அகப்படாம பரலோக பாதையில் சரியா நடந்து அங்க போயிற முடியுமா??? கேட்டவளை பார்த்து சிரித்தார்.

    ஏன் சிரிக்கிறீங்க ஏஞ்சல்….இது என்னுடைய உண்மையான பயம்…. விழுந்தே கிடந்தா தப்பா போச்சே ஏஞ்சல்….திரும்பவும் என் இயேசப்பாக்குள்ள எழும்பனும்னு முதல்ல எண்ணம் வரணுமே….அதுதான் எனக்கு பயமா இருக்கு…அந்த பெருமை வந்திட்டா தலையில இருக்கிற மூளையில் இருந்து கால் இருக்கிற பாதங்கள் வரைக்கும் என் இயேசப்பா பேச்சு கேட்காம கீழ்படியாம மெத்தனமா மாறிரும்….அப்ப நான் எப்ப திரும்ப என் தேவன் வார்த்தைகளுக்கு கீழ்படியணும்னு எண்ணம் வர….விழுந்த இடத்தில் இருந்து எழுந்து தூசியை தட்டி, திரும்பவும் ஓடணுமே…..என் இயேசப்பா கொடுத்திருக்கிற நாட்கள் வரைக்கும்….அவள் முகம் மீண்டும் சோகமானதை ஏஞ்சலும் கவனித்தார்.

    உனக்கு நண்பனா, மேய்ப்பனா நம்ம இயேசப்பா தான் உன் கூடதான் இருக்காங்களே குட்டிமா….அப்ப இந்த தேவையில்லாத டென்ஷனை நீ ஏன் தலையில எடுத்துக்குற……ஏஞ்சல் சொன்ன போது

    ஆனா தப்பு செய்த எத்தனையோ பேரு சொல்லி கேட்டுருக்கேன் ஏஞ்சல்….நான் தப்பு செய்திட்டிருந்த நேரம்…என்னுடைய மனம் துணிகரமா செய்ய அதை செய்த நேரம் எல்லாம் என் கண் முன்னாடிதான் பைபிள் இருந்துச்சு….ஆனா அதை எடுத்து படிக்கணும்னு தோணினதே கிடையாது….சப்போஸ் அப்ப மட்டும் அவர் பேசுறதை நான் கேட்டிருந்தா இத்தனை கேவலமா நான் மத்தவங்க என்னை கிண்டல் பண்ணுற அளவுக்கு விழுந்து போயிருக்க மாட்டேன்….இப்ப இந்த உலகமே என்னை பார்த்து சிரிக்குது….ஆனா என்னால முடியலை, இவங்க ஏச்சை, பேச்சை கேட்டு கண்டிப்பா உயிரோட இருக்கணுமா என்னன்னு???? ஏன் ஏஞ்சல் என் மனசு துணிகரமா என் தேவனுக்கு விரோதமா இருக்கும் போது எப்படி என் தேவனால் என்னை நடத்த முடியும்??? அவர் வார்த்தை தான் நான் காது கொடுக்க கேட்காம இருக்கும் போது அவரால் நான் எப்படி நடத்தப்படுவேன்??? கேள்வியுடன் நோக்கியவளை

    அவங்க விழுந்து போனாலும் நேரா நரகத்தில் போய் விழுந்தாங்களா குட்டிமா….இந்த பூமியில தான….அப்ப நேரம் இருக்குமே….இன்னும் ஒரு முறை நம்ம தேவன் சொன்ன பாதையில் நடக்க??? அப்படி இருக்கும் போது ஏன் எப்படி கவலைப்படணும்??? ஏஞ்சல் சொன்ன போது

    ஆனா விழுந்தப்ப ஏற்பட்ட அடி ஏஞ்சல்???

    நரகத்தில விழலையேன்னு சந்தோசபடனுமே தவிர மத்தவங்க சிரிக்கிற மாதிரி, கிண்டல் பண்ணுற மாதிரி விழுந்துட்டேன்ன்னு கண்ணீர் ஏன் விடணும் குட்டிமா????

    ஆனா அந்த அவமானம் எந்த அளவுக்கு விழுறாங்க என்பதை பொறுத்து இருக்கதான செய்யும் ஏஞ்சல்….அப்பாடா யாரும் என்னை பார்க்கலைன்னு மண்ணை உதறிட்டு எழுந்து போற காரியமா என்ன???

    ஆனா நாம விழும் போது சிரிக்கிற கூட்டமா நம்மளை பரலோகத்திற்கு கூட்டிட்டு போக போறாங்க….இன்னிக்கி ஒருத்தன் விழுந்தப்ப சிரிக்கிற கூட்டம் நாளைக்கி இன்னொருத்தன் விழுந்தா அதே மாதிரி கொஞ்சம் கூட வித்தியாசம் காட்டாம சிரிக்கும், கிண்டல் அடிக்கும்…..  ஒண்ணும் சொல்லாமல் அமைதியாக நின்றாள்.

    குட்டிமா, தேவையானது ஒன்றே….நம்ம தேவன் ஒருத்தர் மட்டும்தான். அவர் நம்ம மேல அந்த நேரத்திலும் வைச்சிருக்கிற பாசம் மட்டும்தான். அவரை பத்தி நினைச்சிட்டா இந்த உலகம் உன்னை பத்தி என்ன சொல்லுதுன்னு நீ கவலைப்படவே மாட்ட. சப்போஸ் அந்த நேரத்தில் உன் மனசில உலகத்தை பத்திய நினைப்பு இருந்தா நீ கண்டிப்பா மீண்டும் எழும்ப மாட்ட. நாம நம்ம கண்களை ஒப்புவிக்க வேண்டியது நம்ம தேவனுக்கே தவிர மற்ற மக்களுக்கு அல்ல….அதுனால ஒரு மனுசனுக்கு இந்த சத்தியம் புரிஞ்சிருச்சுனா அவன் கண்டிப்பா இந்த உலகத்தை பார்த்து அவங்க என்ன சொல்லுவாங்க….இவங்க என்ன சொல்லுவாங்க….. யாராவது என்னை பத்தி என்ன நினைப்பாங்கன்னு…..தேவையில்லாத பயம் இருக்காது???? இப்ப புரிஞ்சதா??? நீ ஓட வேண்டியது யாரை பார்த்து??? யாரை பார்த்து இல்லைன்னு????

    கேட்ட ஏஞ்சலுக்கு…… புரிஞ்சது ஏஞ்சல். ஆனா இதுக்கும் என் இயேசப்பா பலம் கண்டிப்பா வேணும் என்பதை மட்டும் தெரிஞ்சிகிட்டேன்……. அவள் சொல்லி சிரித்த போது

    உனக்கு எது வேணுமோ அதை கொடுக்க நம்ம தேவன் அனுமதி கொடுத்திருக்காங்க குட்டிமா…..உன்னுடைய விருப்பம் என்ன??? கேட்டவருக்கு

    நான் அப்படி எந்த ஒரு சாதனையும் பண்ணலையே ஏஞ்சல்…அப்படி இருக்கும் போது இந்த கிப்ட் எதுக்குன்னு தெரிந்து கொள்ளலாமா??? கேட்டவளை பார்த்த போது

    தேவன் உனக்கு கொடுத்த கட்டளையை நீ காத்து கொண்டதால…..ஏஞ்சல் சொன்ன போது புரியாமல் பார்த்தாள்.

    ஏதேன் தோட்டத்தில சாத்தானின் ஏஞ்சல் முன் நீ உன் வாயை காத்து கொண்டதால…..ஏஞ்சல் சொன்ன போது

    ஆனா ஏஞ்சல் நான் என் வாய் லொடலொடப்பால் என்னுடைய பலவீனம் என்னன்னு அவனுக்கு சொல்லி கொடுத்தேனே??? அவள் பதட்டத்தோடு கேட்ட போது

    ஆனா நீ சொல்லுறதுக்கு முன்னாடியே இந்த பலவீனம் சாத்தானாலும், அவன் ஏஞ்சல்களாலும் தெரிந்து கொண்ட உண்மை. இந்த பலவீனத்தை வைத்துதான் இப்பவும் அவன் நம்ம தேவனுடைய பிள்ளைகளை காயப்படுத்திட்டு இருக்கான்…… ஏஞ்சல் சொன்ன போது

    அப்ப என்னுடைய தேவனுடைய வார்த்தைகளை எந்த வகையில் காத்து கொண்டேன் ஏஞ்சல்??? அவள் கேட்ட போது

    நீ உனக்கு இருக்கிற கொஞ்ச பலத்தால் உன்னை பற்றிய உண்மையை சொல்லக் கூடாதுன்னு முயற்சி செய்தியே அந்த கீழ்படிதலைதான் நம்ம தேவன் ரொம்பவே சந்தோசமாக பார்த்தாங்க……. அவர் சொன்ன போது

    ஆனா அந்த நேரத்தை காரியத்தை வாய்க்க பண்ணினது என்னுடைய இயேசப்பாதான ஏஞ்சல்…..அவள் கேட்டாள்.

    ஆனா உன் தேவனுக்கு பிரியமானதை செய்ய நீ ஆசைபட்டியே அது போதுமே குட்டிமா நம்ம தேவனுக்கு……ஏஞ்சல் சொன்ன போது

    இயேசப்பா, நீங்க என் மேல பாராட்டின கிருபை ரொம்பவே பெரியது….தேங்க்ஸ் இயேசப்பா. தேங்க் யூ சோ மச்…..முழங்காலில் நின்று தன் தேவனுக்கு துதிகளை செலுத்தினாள்.

    எழுந்து நின்றவளை பார்த்து ஏஞ்சல் கேட்டார்….இப்ப சொல்லு குட்டிமா. உனக்கு என்ன வேணும்…எந்த இடத்தை பார்க்க போகணும்னு ஆசைப்படுற….இல்லாட்டி நம்ம தேவ வார்த்தைகளின் ரகசியங்களை ஏதாவது தெரிந்து கொள்ளணுமா??? கேட்டவருக்கு

    அவள் சொன்ன பதில் உண்மையில் ஏஞ்சலை கூட பதைபதைக்க வைத்தது. ஆனால் அவளை படைத்த தேவன் மட்டும் அவளை நினைத்து சந்தோசப்பட்டதை அவள் அறிந்திருக்க வில்லை.

    Related Post

    Categories: பைபிள் சம்பவங்கள்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    eight − = 7

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>