-
பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 46
என் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நாமத்திற்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக!
ஏதோ ஒரு பிரச்சனை என்று தெரிந்து கொண்டாலே தவிர தன் பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஏஞ்சல் தன் வாய் வார்த்தைகளை பிடுங்க பார்க்கிறார் என்று இன்னும் அவள் தெரிந்து கொள்ள வில்லை.
உங்க உலகத்தில் நம்ம எஜமானரை நீங்க எந்த வகையில் வரவேற்பீங்க…..கேட்ட ஏஞ்சலின் உண்மை நிலையை புரிந்து கொள்ள அதற்கு மேல் நேரம் எடுக்க வில்லை அவளுக்கு.
நீங்க இப்பதான சொன்னீங்க ஏஞ்சல்….இன்னும் ஆயத்தத்தையே மேற்கொள்ளாம நாங்க எங்க எஜமானருடைய வருகையை எதிர்பார்க்க முடியுமா??? அவள் சொன்ன போது
எங்க இடத்தில எங்களை பார்த்துக்க, நம்ம எஜமானரை பற்றி தெரிவிக்க, அவருடைய கீழ்படிகிற கீழ்படிதலையும், அவருக்கு நாங்க கொடுக்க வேண்டிய மரியாதை கத்து கொடுக்க எங்க கண்காணிப்பவர் இருக்காரு…..உங்களுக்கு….??? அந்த ஏஞ்சல் கேட்ட போது என்ன சொல்லி சமாளிக்க திணறினாள்.
உண்மையில் அவளுக்கு தெரிந்த பதில்தான்….எங்களுக்கு பரிசுத்த ஆவியானவர்தான் எல்லாம் பார்த்து கொள்ளுறாரு….நீங்க சொன்ன எல்லா காரியங்கள் மட்டும் கிடையாது கூடுதலா உங்களுக்கு இந்த ஏதேன் தோட்டம் மாதிரி எங்களுக்கு உலகம் உண்டு. அதிலயும்….அதில் இருக்கிற எந்த காரியங்களையும் குறித்தும் எங்களுக்கு கத்து கொடுக்கிறது மட்டுமில்ல அதில என்றும் உன் மனதில் வைக்காம உன்னை படைத்த தேவன் மேலயே உன் வாஞ்சை இருக்கட்டும்ன்னு கத்துக் கொடுக்க தான் எங்க இயேசப்பாவும், எங்க பிதப்பாவும் எங்களுக்கு ஒரு குருவா எங்க பரிசுத்த ஆவியானவரை தந்திருக்காங்க….ஆனா இந்த காரியம் எல்லாம் எங்க இயேசப்பா உங்க கண்காணிப்பவர்ன்னு நீங்க சொல்லுகிற சாத்தானை சிலுவையில் வெற்றி சிறந்த பிறகு நடக்கிற காரியங்களே….அப்ப எப்படி என்னால இதை பத்தி உங்ககிட்ட சொல்ல முடியும்???? யோசிக்க ஆரம்பித்தாள்.
அவள் முகத்தையே அந்த ஏஞ்சல் பார்த்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அவளுக்கு வாயில் இருந்து வந்த வார்த்தை…..நீங்க கண்காணிப்பவர்ன்னு சொல்லுற மாதிரி நாங்க எங்க குருன்னு சொல்லுவோம்….மத்தப் படி அவரை பத்தி சரியா எனக்கு விளக்கம் கொடுக்க தெரியாது….அவள் சொன்ன போது அதற்கு மேல அவளுடைய குருவை பத்தி அந்த ஏஞ்சலாலும் கேள்வி கேட்க முடிய வில்லை.
கேள்வியை மாத்தி கேட்க ஆரம்பித்தது அந்த ஏஞ்சல்…. சரி எங்களுக்கு இங்க எங்க பிரெண்ட்ஸ் இருக்கிற மாதிரி உனக்கு உண்டா….என்று கேட்ட போது
இயேசப்பா….நீங்க என் கிட்ட நம்ம ஏஞ்சல் மூலமா சொல்லி இருக்கீங்க. எந்த விசயமும் என்னை குறித்து சொல்லக் கூடாதுன்னு….ஆனா இந்த ஏஞ்சல் மாறி மாறி என்னை பத்தியே கேட்குது….நான் என்ன செய்யன்னு தெரியலை ஏஞ்சல்…… அவள் கேட்ட போது பதில் வர வில்லை.
பதில் கிடைக்காத வேதனை வேறு அவளுக்கு….அந்த ஏஞ்சலின் கண்கள் இவள் அடுத்து என்ன சொல்லப் போகிறாள் என்பதில் தான் இருந்தது….நான் பதில் சொல்லாட்டி என்ன ஆகும்…..அவள் யோசித்து கொண்டிருந்த போது
அவர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும் போது: எப்படிப் பேசுவோம் என்றும், என்னத்தை பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள்; நீங்கள் பேசவேண்டுவது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும்.
பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்.
அந்த வார்த்தைகள் அந்த நேரத்தில் அவளுக்கு மனதில் வந்தது உண்மையில் பரிசுத்த ஆவியானவரின் செயல் என்பது அவளும் புரிந்து கொண்டாள். இயேசப்பா….நீங்க எனக்குள்ள இருக்கீங்க…..சோ….எனக்காக ப்ளீஸ் இந்த ஏஞ்சலோட நீங்களே பேசிக் கொள்ளுங்க…..அவள் மனதில் தன் தேவனிடம் பேசி கொண்டிருந்தாள்.
இன்னும் பதில் சொல்லலை…..என்று அந்த ஏஞ்சல் அவளை கேட்ட போது
எனக்கு பெஸ்ட் பிரெண்ட் நம்ம எஜமானருடைய பையன் மட்டும்தான்…..அவள் சொன்ன போது
உண்மையில் அதை குறித்து அதற்கு மேலும் கேட்க முடிய வில்லை அந்த ஏஞ்சலால். சப்போஸ் கேட்டாலும் இதே மாதிரி ஒரு பதிலை தான் தருவாள் என்று அந்த ஏஞ்சலும் புரிந்து கொண்டது….ரொம்ப விவரமான பொண்ணா தெரியுறா…அடுத்த கேள்வியை எப்படி கேட்குறது…அந்த ஏஞ்சல் மனதுள் யோசித்து கொண்டிருந்தது….
அடுத்த கேள்வியை மண்டையை போட்டு உடைத்து அந்த ஏஞ்சலும் கண்டுபிடித்தது. ஆனால் கேட்க அது எத்தனித்த அந்த நேரம்……அவள் பக்கத்தில் அந்த ஏஞ்சலுடைய கண்காணிப்பவர் வந்து நிற்கவும்….அந்த ஏஞ்சல்வணக்கம் செலுத்த தன் சிறகுகளை மடக்கி குனிந்த நேரம்….அப்பாடா….பிழைச்சேன்….மனதினில் நினைத்து கொண்டாள்…
அந்த ஏஞ்சலின் மரியாதையை ஏற்றுக் கொண்ட கண்காணிப்பவர் இவளை பார்த்துதான் முதலில் பேசியது….எப்படி இருக்கு பெண்ணே….தேவன் தந்த இந்த அரண்மனையில் நேரங்களை கழிக்கிறதுக்கு….கேட்ட போது
ஒன்றும் பதில் சொல்லாமல் வெறும் ஒரு புன்னகையை மட்டும் உதிர்த்தாள். இந்த சாத்தானிடம் பேச என்ன இருக்கு…..மனதினில் நினைத்து கொண்டாள். இந்த ஏஞ்சலை என்கிட்டே வேவு பார்க்க அனுப்பினது இந்த சாத்தான்தான…..மனதினில் திட்டி கொண்டாள்.
என் ஏஞ்சல்கிட்ட நல்லா பேசுற….என்கிட்ட மட்டும் ஏன் ஒரு வார்த்தைகூட பேச மாட்டிக்கிற…..கேட்டதுக்கும் அவள் பதில் சொல்லலை.
என்னை பார்த்து பயமா…. கண்காணிப்பவர் கேட்ட போது தலையை மட்டும் அசைத்தாள்.
தன்னோடு இருந்த ஏஞ்சலை அந்த கண்காணிப்பவர் கூட்டி கொண்டு சிறிது தூரம் சென்றுதான் பேசி கொண்டிருந்தது….ஆனாலும் அவளால் அவர்கள் பேசி கொண்டிருந்த காரியத்தை தெளிவாக அவள் நின்று கொண்டிருந்த இடத்தில் இருந்தே கேட்க முடிந்தது…..
ரொம்ப முரடு இந்த பொண்ணு கண்காணிப்பவரே …..எத்தனை தூரம் நான் கேட்டு பார்த்த பிறகும் தான் எந்த இடத்தில் இருந்து வந்தேன் என்பதை மட்டும் சொல்லவே இல்லை….ஆனா ரொம்ப புத்திசாலி ஏஞ்சல்….நான் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் பதில் சொன்னா….ஆனா நமக்கு தேவையான காரியத்தை மட்டும் மறைச்சி……ரொம்ப ரொம்ப புத்திசாலியா தெரியுறா….அந்த ஏஞ்சல் சொன்ன போது
ஒரு சின்ன பொண்ணுகிட்ட அவளை பத்திய விசயத்தை மட்டும் தெரிந்து கொள்ளாம அவளை பாராட்டுறதால நமக்கு ஒண்ணும் கிடைக்க போறதில்லை. ஆனா நம்ம எஜமானர், தன் சுவாசத்தை பெற்ற இந்த பெண்ணை ஏன் இங்க கூட்டிட்டு வரணும்…..நம்மளுக்கு போட்டியாகவா….இல்லை அந்த அளவு கண்டிப்பா இருக்காது…..அப்ப எதுக்கு….இந்த பொண்ணை பத்தி ஒரு விசயமும் நம்மளால் தெரிஞ்சுக்க முடியலை இது வரைக்கும்….இதுல உனக்கு என்னுடைய பதவிக்கு அடுத்த இடம் வேறு….ரொம்ப புத்திசாலி ஏஞ்சல்…ன்னு பேரு வேற….அந்த கண்காணிப்பவர் சொல்லி கொண்டிருந்த போது
இவளுக்கு தன் புத்திசாலிதனத்தை கொஞ்சம் பெருமை எட்டி பார்த்தது உண்மை….பரவயில்லையே இந்த சாத்தான் கூட்டத்தில் இருக்கிற ஒரு பெரிய புத்திசாலி ஏஞ்சலை கூட நாம வீழ்த்தி விட்டோமே….அவள் தனக்குள் கர்வமா நினைத்த அந்த நொடி…..உடனேயே அவள் கால்களில் இருந்த ஏதோ ஒரு நரம்பு சுண்டி இழுத்ததை போல உணர்ந்தாள்….ஏன் என்ன ஆச்சு…..கத்தினா பிரச்சனை…..எதுக்கு….யோசிக்க அவளுக்கு அதிக நேரம் எடுக்க வில்லை….தன் பெருமைதான் காரணம் என்று புரிந்து கொண்டாள்.
ஆனா எனக்குள் ஏற்பட்ட வலி எதுக்காக??? கேட்ட கேள்விக்கும் பதில் தெரிந்து கொண்டாள்….அவளுடைய prayer….அப்பா உங்ககிட்ட என்னை முழுமையா ஒப்புவிச்சிச்டேன்…..சோ நீங்க என்னை வனையும் போது என்னுடைய பெருமை உங்களை வேதனைப்படுத்தினா நீங்க எதிர்த்து நிற்கிறது நிஜமான காரியம்….ஆனா உடைக்கிறதா இருந்தாலும், கட்டு போடுகிறதால இருந்தாலும் நீங்களே செய்யுங்க…..நீங்க என்னுடைய மேய்ப்பர்…..அந்த ஜெபம் அவள் மனதில் வரவும் கண்ணீரோடு தேங்க்ஸ் சொன்னாள் தன் தேவனுக்கு.
சாரி பிரெண்ட்…..எனக்குள்ள இருந்து பேசினது எல்லாம் நீங்க….அப்படி இருக்கும் போது அந்த மகிமையை நானே எடுத்துக் கொண்டது என் தப்புதான்….சாரி பிரெண்ட்….நீங்க என்னை அடித்ததற்காக நன்றிகள் ஆண்டவரே!!! நன்றிகள் சொன்னாள்.
சொல்லி கொண்டிருந்த அதே நேரத்தில் அவர்கள் பேசி கொண்டிருந்த நிமிஷங்களை மீண்டும் ஞாபகம் வந்தவுடன்…. இயேசப்பா….நீங்க கண்காணிப்பவரும் அவருடைய ஏஞ்சலும் பேசி கொண்டிருந்ததை கேட்க வைத்தீங்க.. என் பெருமை குணத்தால நான் அந்த பேச்சை கேட்க மறந்திட்டேன்….சாரி….என்று சொன்னவள் மீண்டும் கேட்க ஆரம்பித்தாள்.
என்னை ரொம்பவே காயப்படுத்த வேண்டாம் கண்காணிப்பவரே….இது வரைக்கும் என்னை திட்டினது போனதும். அந்த பொண்ணை குறித்த ரொம்பவே பெரிய உண்மையை ஆனா நான் தெரிந்து கொண்டேன்…..அந்த ஏஞ்சல் சொன்ன போது இவளும் ஆர்வமாக கேட்க ஆரம்பித்தாள்.
தன்னை பற்றி மீண்டும் இப்போது தான் பேசி கொள்கிறார்கள்….என்ற வகையில் ஒரு நிம்மதி அவளுக்கு…… இந்த பொண்ணுக்கு மிக பெரிய பலவீனம் உண்டு….அது நம்ம எஜமானரை குறித்த காரியத்தில்…..என்று அந்த சொல்ல ஆரம்பித்த போது உண்மையில் அவளுக்கு புதிராக தான் இருந்தது…
என்னுடைய தேவன் தான் என் பலம்….அப்படி இருக்கும் போது நான் என்ன பலவீனம் அடைந்தேன்…..என் இயேசப்பாவை குறித்த காரியத்தில்….. அவள் யோசித்து கொண்டிருந்த போது
நம்ம எஜமானர் என்ன செய்தாலும் அதில் அவருடைய மகத்துவம் ரொம்பவே உன்னதமானது. அதை நித்தமும் நாம கண்ணார கண்டு அவரை வாழ்த்திட்டு இருக்கோம்….ஆனா இந்த பொண்ணுக்கு அந்த காரியத்தில் ரொம்பவே சந்தேகங்கள் உண்டு போல…..நம்ம எஜமானர் வருகையை குறித்து அந்த பொண்ணோடு பேசி கொண்டிருந்த சமயத்தில் துதிக்கிறதும், அவருக்கு பிரியமா நடந்து கொள்ளுறதையும் பத்தி பேசி கொண்டிருந்தோம். அப்ப அந்த பொண்ணு தன் எஜமானர் மேல அவ வைச்சிருக்கிற அன்பு மேலேயே அவளுக்கு நம்பிக்கை இல்லை….நம்மளோட தன்னை கம்பேர் பண்ணினது மட்டுமில்ல ரொம்பவே தன்னை தாழ்வா நினைச்சா….தாழ்மையா இருக்கிறவங்களை நம்ம எஜமானருக்கு ரொம்பவே பிடிக்கும்….ஆனா தாழ்வு மனப்பான்மை நம்ம தேவனுக்கு பிடிக்காதே??? அந்த ஏஞ்சல் சொல்லி கொண்டிருந்த போது என்ன சொல்லுவது என்று தெரியாமல் பேச்சை கேட்க ஆரம்பித்தாள்.
நீங்க எங்களுக்கு சொன்ன இரகசியத்தை பத்தியும் பேச அந்த பொண்ணு ஊக்கப்படுத்தினா….ஆனா நான்தான் சொல்லிட்டேன்…இது எங்களுக்கு உரிய காரியம்…நாங்க வெளியில் பேசிக்க மாட்டோம் இதை குறித்து…..அடுத்து அந்த பொண்ணு இதை குறித்து எதுவும் கேட்கலை….அந்த ஏஞ்சல் சொல்லும் போது ஏதோ புரிந்த மாதிரியும், புரியாத மாதிரியும் அவளுக்கும் தோணியது. தாழ்வு மனப்பான்மை என் தேவனுக்கு பிடிக்காத காரியம்….ஐயோ நான் அந்த ஊழியரை விட கொஞ்சம்தான் உங்களை துதிக்கிறேன்…. கொஞ்சமாதான் உங்க சந்நிதானத்தில் ஜெபம் பண்ணுறேன்….. ஐயோ இயேசப்பா என் பிரெண்ட்…பைபிள்ல எல்லா புத்தகங்களையும் முடிச்சிட்டா….ஆனா நான் பாருங்க….ரெண்டு நாள் இருந்து மூன்று நாள்ன்னு ஆகி பாதி புத்தகம் கூட முடியலை….நான் உங்க வார்த்தையில் அஜாக்கிரதையா இருந்திட்டேன்….சோ நீங்க என்னை விட என் பிரெண்ட்க்குதான அப்ப எல்லா நன்மைகளையும் கொடுப்பீங்க…..என்னை விட அவளைதான ரொம்ப விருப்புவீங்க…..நினைத்த போதே அவளுக்கே அருவருப்பா இருந்தது….அந்த ஏஞ்சல் அவள் தன்னை அந்த ஏஞ்சல்களோட ஒப்புமை பார்த்ததை கூட எத்தனை அழகா கணக்கு வைத்துள்ளது. அப்ப வெறும் உலக அளவில் மட்டுமில்ல ஆவிக்குரிய காரியங்களில் கூட மற்றவங்களோட comparison நாங்க பண்ணுறது எங்க தேவனுக்கு பிடிக்காதா???? மனதினில் நினைத்து பார்த்தாள். ஆவிக்குரிய காரியங்களில் கூட நாங்க மற்ற தேவ பிள்ளைகள் மேல பொறாமை கொள்ளுறது என் தேவனுக்கு அப்ப பிடிக்காத காரியமா??? ஆச்சரியமா யோசித்தாள்….எத்தனை பெரிய சத்தியம்….இது தெரியாம தான எல்லா தேவ கூடாரங்களில் கூட அடி பிடி சண்டைகள் எல்லாம் பனிபோராகவோ இல்லை வெட்ட வெளியில் நடக்குது….அப்ப எல்லாத்துக்கும் காரணம்…ஒரே எளிய வார்த்தை தான…..ஆவிக்குரிய பொறாமையா….. கொஞ்சம் கூட அவள் எண்ணங்களில் வந்திராத உண்மை….எப்படி இந்த காரியத்தை நாங்க யோசிக்க கூட முடியாத வண்ணம் சாத்தான் இந்த காரியத்தை எங்க இதயத்துக்குள்ள ஒளிச்சி வைச்சிட்டான்……அவள் புலம்பி கொண்டிருந்தாள்.
அந்த மெல்லிய காற்றில் அவளால் புரிந்து கொண்ட உண்மை……
போதும் என்கிற மனதுடன் கூடிய தேவ பக்தியே மிகுந்த ஆதாயம்.
தேவன் கொடுத்த வார்த்தைகளின் அர்த்தம் அப்போதுதான் அவளுக்கு புரிந்தது. ஆனா அவங்க தங்களுக்குள்ள இரகசியம்ன்னு சொல்லி கொள்ளுகிற காரியம்தான் என்ன??? அவள் யோசித்து கொண்டிருந்த போது….
நம்ம எஜமானர் விரும்புறது தன் பிள்ளைகள் தன்னை என்றும் உண்மையா கூப்பிடுகிறதே தவிர நீ இன்னிக்கி எனக்கு எந்த அளவு கீழ்படிந்த….எந்த அளவுக்கு என்னை உண்மையா இருதயத்தில் இருந்து நன்றிகள் சொன்ன….. நான் விரும்புற நீதி நியாயங்களை எத்தனை தூரம் உண்மையா செய்த……என்கிற எந்த காரியத்திலும் கிடையாது…..பாவம் இந்த உண்மையை அந்த பொண்ணு தெரிந்து கொள்ளலை.. அந்த ஏஞ்சல் சொல்லி சிரித்த சத்தத்தை அவளும் கேட்டாள். கண்காணிப்பவர் சிரிக்கிற சத்தத்தை கூட அவள் கேட்டாள்.
நாங்க எங்க வேலையை செய்யும் போது ஏற்படும் சோர்வான சமயங்களில் நீங்க சொல்லுவீங்களே அந்த ரகசியத்தை….. நீ செய்யுற காரியங்களில் இல்லை அவருடைய அன்பு…அது நீ அவரை துதிக்கிற காரியமா இருக்கட்டும்….இல்லை அவருடைய வார்த்தைக்கு நீ கீழ்படிந்து செய்கிற அவருடைய காரியங்களா இருக்கட்டும்….. அதை பொறுத்து கண்டிப்பா அமையுறதில்லை…..உன்னுடைய முழு பலத்தில் நீ எந்த அளவுக்கு உன் தேவனுக்கு உண்மையா நடக்கணும் ஆசைபடுறியோ….அந்த எண்ணத்தில் தான் என்றும் அவர் பிரியமா இருக்கார்….நீ என்றும் பலவீனமுள்ளவன். ஆனா உன்னை நேசிக்கிற உன் தேவன் என்றும் பராக்கிரமசாலி ஆச்சே….முதலில் உன்னுடைய இந்த நிலையில் நீ உன் தேவனை பிரியப்படுத்த நினைக்க மட்டும் செய்…..தேவையான பலத்தை அவர் உனக்கு கொடுப்பார்….அவர் உன்னில் செய்கிற ஆச்சரியத்தை பார்க்கும் போது உன்னால கண்டிப்பா அவரை பாராட்டமா இருக்க முடியாது….அப்ப உன் துதி மட்டுமில்ல நீ கூட என்றும் அவர் அன்பில் நிறைவா இருப்ப…… ஒவ்வொரு நீங்க எங்களுக்கு சொல்லி கொடுக்கிற காரியம் கண்காணிப்பவரே ….. இது எவ்வளவு பெரிய உண்மை.
என்னை படைத்த தேவனுக்கு நான் என்னால முயன்ற வகையில் ஏதாவது செய்யணும்…..நினைக்கும் போது என்னுடைய பழைய ஆவிக்குரிய தொய்வு நிலையா இருந்தாலும்….. கூட எத்தனை மோசமான அந்த நிலை கூட என் தேவன் அந்த நிலையை மாற்ற ஒரு அழகான பிளாட்பார்ம் அமைச்சி கொடுக்கும்….. என் தேவன் என்னில் செய்யும் ஆச்சரியமான காரியத்தை பார்க்கும் போது…..நான் இப்படிப்பட்டவ தான…..ஆனா என் தேவன் எத்தனை பெரிய ஆச்சரியத்தை எனக்குள்ள இருந்து செஞ்சிருக்காங்க….அப்படி இருக்கும் போது என் தேவ நாமத்திற்கு மகிமை செலுத்தாம நான் அந்த மகிமையை எடுக்துக்க தோணாது….அது மட்டுமில்ல அது என் புத்திக்கு மேலாக நடந்த காரியம்….. அப்ப என் தேவனை நான் துதிக்கிறது கூட முழு இருதயத்தில் இருந்து பிறக்குமே….
அப்ப என் தேவன் நீதியை தேட சொன்னது என்னை நேசிக்கிற என் தேவனுக்காக ஏதாவது செய்யணும்னு நினைக்கிற என் உண்மையான ஆசை யை கூட என் தேவனால ஆச்சரியமா மாற்ற முடியுமா???? ஆச்சரியத்தின் உச்சத்தில் அவள். அப்ப என் தேவன் வருகைக்கு நான் என்னை ஆயத்தப்படுத்த இந்த ஒரே ஒரு உண்மையான ஆசை போதுமா??? இயேசப்பா!!! அவள் கூப்பிட்ட போது அந்த மெல்லிய காற்றை உணர்ந்தாள்.
சாரி பிரெண்ட்…..இந்த உண்மையை நான் தெரியாம தான் கண்ட இடமெல்லாம் அலைந்தேனா….கடைசியில் உண்மை ரொம்ப சின்ன காரியம்….என்னை நேசிக்கிற என் தேவனை அறிந்து கொள்ளுறது ஒரு மிக பெரிய உண்மை….அந்த உண்மை தெரிந்து கொண்ட பிறகு கண்டிப்பா அந்த அன்பு என்னை சும்மா இருக்க வொட்டாது. அப்ப என் இருதயத்தில் பிறக்கிற என்னை நேசிக்கிற என் தேவனுக்காக ஏதாவது செய்யனும்னு ங்கிற ஆசை…..இயேசப்பா….இதுதான் உங்க பிள்ளைகளை எல்லா இடங்களிலும் உங்களை குறித்த நற்செய்தியை சொல்ல தூண்டுதா???? பனின்னு பார்க்காம…..கொடும் வெயில்ன்னு யோசிக்கமா…..காட்டு மிராண்டிகளா இருந்தா என்ன….இல்லை எங்களையே சாப்பிட நினைக்கிற நர பட்சிகளா பரவாயில்லை…..நாங்க எங்க இயேசப்பாவை குறித்தே சொல்லியே தீருவோம்….எங்களுக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை….எங்க தேவனின் நாமம் மகிமைப்பட்டா போதும்…… புரிந்து கொண்ட சத்தியம் அவள் இருதயத்தை உடைத்தது. வலி தாங்காமல் அழ ஆரம்பித்தாள்…..
உனக்கு இருக்கிற இந்த பலத்தோடே போ…..உன்னை அனுப்பினவர் நான் அல்லவா…..
சத்தியமான வார்த்தை………. அவள் தன்னையும் அடக்க முடியாமல் அழ ஆரம்பித்த அந்த நொடி அந்த கதறல் சத்தம் வானில் இருந்த எல்லா ஏஞ்சல்கூட்டத்தையும் அழ வைத்தது.
Bible Incidents (for kids) – 45 Bible Incidents (for kids) – 46
பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 46
Daily Bible Verse
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
« Feb | ||||||
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
Newsletter
Categories
Archives