-
பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 50
தேவனாகிய கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக!!! அல்லெலூயா!!!
முன் இருந்த தூக்கம் தன்னிடம் இல்லை என்பதை அவளும் தெரிந்து கொண்டாள். பெட்டில் புரண்ட வண்ணமே இருந்தாள். காலையில் இருந்து அம்மாக்கிட்டயயும், அப்பாக்கிட்டயயும் எத்தனை தூரம் நடிச்சிட்டேன்!! வேதனையாக நினைத்தாள்.
மனதில் புலம்பினாளே தவிர தன் தேவனிடம் ஜெபிக்க ஏனோ அவளுக்கு தோண வில்லை. சுவரை வெறித்த வண்ணம் இருந்தாள். இயேசப்பா, என் வாழ்கையில் ஏன் இது நடந்துஞ்சு, நான் உங்க பொண்ணுதான…நீங்க என்னை எவ்வளவு நேசிக்கிறீங்க. ஆனா இப்ப என் மனசு முழுசும் ரொம்ப வேதனையா இருக்கு. நீங்க உங்க வார்த்தைகளை சொல்லி கொடுத்து அதை ரொம்பவே இரகசியமா வைக்க சொன்னப்ப இல்லாத பதட்டம், இப்ப நான் தெரிந்து கொண்ட உண்மை என்னை ரொம்பவே கஷ்டபடுத்துது….என் அம்மா, அப்பாகிட்ட என்னால உண்மையா நடந்துக்க முடியலை….ன்னு மனது ரொம்ப வேதனைபடுது இயேசப்பா. நான் ஒண்ணும் ரொம்ப நல்லவ கிடையாது. அது உங்களுக்கு நல்லாவே தெரியும் பிரெண்ட். ஆனா என்னை மாதிரி உள்ள எத்தனையோ சின்ன பிள்ளைகள் சினிமா, கார்ட்டூன், விளையாட்டு, இன்னமும் எத்தனையோ சந்தோசங்களில் திளைச்சி வாழ்ந்திட்டு இருக்காங்க….ஆனா உங்களை தான நான் தேடினேன்….உங்க வார்த்தைகளையும் உங்க அன்பையும் மட்டும்தான தேடினேன்…..ஆனா எனக்கு ஏன் இந்த நிலை….தன் இருதயம் அது விரும்பும் வண்ணம் பேசி கொண்டே போகிறது என்பதை அவள் தன் உணர்ச்சிகளின் மத்தியில் புரிந்து கொள்ள வில்லை…..
மனிதன் தேவனின் முன்பு நீதிமானாக இருப்பானோ!!!! என்ற குரல்…..தெளிவான வார்த்தை….. ஒரு நிமிஷம் அவள் இதயத்தில் இருந்த அந்த தேவையில்லாத பாரத்தை மறந்தவள், ஏஞ்சல்…..அவள் சொன்ன அடுத்த நிமிடம் ஏஞ்சல் அவள் முன்பு நின்றார். ஆனால் முகத்தில் மறந்தும் சந்தோசம் தெரிய வில்லை. ஏன்…..என்னுடைய புலம்பலா…. அவள் மனதில் யோசித்து கொண்டிருந்த போது
உன் வாழ்கையில் நடக்கிற எந்த காரியமா இருந்தாலும் அது என் இயேசப்பா என்னுடைய நல்லதுக்கு தான் அனுமதிப்பாங்கன்னு சொன்ன நீயா குட்டிமா…..இத்தனை தூரம் புலம்பின…. ஏன்???? ஏஞ்சல் கேட்ட போது
அவள் கண்களில் கண்ணீர் வடிந்தது. ஆனா ஏஞ்சல் என்னுடைய வாழ்கையில் நடந்த காரியம்???? சொல்லும் போதே அவள் குரல் தடைபட்டது.
ஏன் குட்டிமா. அம்மா, அப்பா இல்லாத எத்தனையோ குழந்தைகள் யாராவது தன் மேல அன்பு காட்ட மாட்டாங்களான்னு ஏங்கிட்டு இருக்கும் போது உன்னை உன் இயேசப்பா ரெண்டு அழகான குடும்பங்களுக்கு ஒரு இளவரசி மாதிரி கொடுத்திருக்காங்க….அப்ப ஏன் இந்த தேவையில்லாத வேதனை….கேட்ட போது
ஆனா ஒரு சின்ன பொண்ணான எனக்கு இந்த வேதனை கண்டிப்பா தேவையா ஏஞ்சல்?உடனே கேட்டவளுக்கு
ஏஞ்சல் சிரித்தவாறே நீ என்ன தேவனா??? கேட்ட குரலில் கோபமும் தெரிந்தது.
உன் வாழ்கையில் இந்த சமயத்தில் இது தான் நடக்கணும் என்பதை தீர்மானிக்கிற அளவுக்கு உனக்குள்ள எப்ப இந்த தேவையில்லாத பெருமை ஆவி வந்துச்சு??? கோபத்தோடு கேட்ட போது உடைந்து போய் அழ ஆரம்பித்து விட்டாள்.
ஏற்கனவே மனசு வேதனை தாங்க முடியாம புலம்பிட்டு இருந்தப்ப நீங்க வந்ததும் எவ்வளவு சந்தோசப்பட்டேன் ஏஞ்சல்…..ஆனா நீங்க என் மனசு கஷ்டபடுகிற மாதிரி தான் பேசுறீங்க??? அழுகையோடு அவள் சொன்ன போது
குட்டிமா. உன்னுடைய மன வேதனை எனக்கு மட்டுமில்ல உன்னை நேசிக்கிற நம்ம தேவன் இருக்கும் பரலோகத்திற்கே தெரியும்…..அப்படி இருக்கும் போது நான் கோபப்படுறேன்னா அதுக்கு கண்டிப்பா அர்த்தம் உண்டுன்னு உனக்கும் புரியும்??? ஏஞ்சல் சொன்ன போது ஒண்ணும் சொல்லாமல் அமைதியாக நின்றாள்.
நீ இந்த காரியம் வழியா நடந்து போகணும்னு என்பது நம்ம தேவனுடைய தீர்மானம்….. ஏஞ்சல் சொன்ன போது
ஏன் என்று அவள் மனதில் கேட்கும் முன்பு
நீ உன்னை குறித்து எத்தனையோ நேரங்களில் பெருமைப்பட்டிருக்க குட்டிமா…. ஏஞ்சல் சொல்லி கொண்டிருந்த போது
ஆனா நான் எல்லா பெருமைகளுக்காகவும் என் இயேசப்பாகிட்ட மன்னிப்பு கேட்டு இருக்கேனே ஏஞ்சல்? அப்ப….. அவள் சொன்ன போது
ஆனா நம்ம பவுலுக்கும் நம்ம தேவன் ஒரு முள் கொடுத்தாரே அவர் சரீரத்தில்??? அவர் சொன்ன போது
ஒன்றும் அவள் சொல்ல முடியாமல் அமைதியானாள்.
குட்டிமா…..தேவன் கொடுத்த வல்லமையால் முழுக்க முழுக்க மனுசங்க முன்பு பவுல் அப்போஸ்தலர் பிரகாசிக்கிற ஒரு ஒளியா இருந்தாலும் அந்த முள் அவரை குத்தும் போது நான் எத்தனையோ பிரகாசிக்கிற ஒளியா இருந்தாலும் நான் ஒரு மனுஷன் தான்….என்னை என் தேவன் களி மண்ணால்தான் உருவாக்கினாங்க….என்ற உண்மையை அந்த முள் அவருக்கு உணர்த்துச்சு. அது மட்டுமில்ல அந்த வலி அவர் தன் தேவன்கிட்ட இன்னும் எவ்வளவு நெருங்கி சேரணும்னு என்பதையும் உணர்த்துச்சு…. இப்ப புரியுதா குட்டிமா…..உன் தேவன் உனக்கு கொடுத்திருக்கிற இந்த முள் எதுக்குன்னு??? அவர் சொன்ன போது மனம் உடைந்து அழ ஆரம்பித்தாள்.
நீ இது வரை அம்மா, அப்பான்னு சொல்லிட்டு இருந்த உறவுகள் உண்மையில் உண்மையானது கிடையாது….அது மட்டுமில்ல உண்மையில் உன்னை இந்த உலகத்துக்கு வர காரணமாக இருந்த அப்பா ஒரு காலத்துல உன்னை தன் அக்கிரமத்தின் மிகுதியான குணத்தால வேண்டாம்னு சொல்லி ஒதுக்கி தள்ளின ஒரு சூழ்நிலை…..இதெல்லாம் உன்னை வேதனைப்படுத்தின காரியமா இருந்தாலும்…… உன்னை இந்த நேரத்தில் யாரும் வெறுத்து நீ வேண்டாம்னு வீட்டை விட்டு விரட்டி விடலையே….அதுவே உன்னுடைய இயேசப்பா உன்னை நேசித்த காரியம் தான் குட்டிமா….. அது மட்டுமில்ல உன் உண்மையான சொந்தமும், நிரந்தரமும் அவர் ஒருத்தர் தான்….இந்த சத்தியத்தை தெரிந்து கொள்ளத்தான் நம்ம இயேசப்பா இந்த பாடுகள் வழியா உன்னை நடத்தினார்…… அவர் சொல்லி முடித்த போது தெரிந்து கொண்ட உண்மை அவளை சுட்டது.
இயேசப்பா…. நீங்க என்னை எவ்வளவு அதிகமா நேசிக்கிறீங்க….ஆனா அதை பத்தி தெரிந்து கொள்ளாம எங்க அம்மா, அப்பாக்கு நான் தெரிந்து கொண்ட உண்மை என்னைக்கும் தெரியாமயே போகட்டும்னு எவ்வளவு முட்டாள் தனமா உங்ககிட்ட prayer பண்ணினேன்….சாரி பிரெண்ட்….நீங்க வெளிபடுத்தின சத்தியத்திற்காக நன்றிகள் பிரெண்ட்…. சொல்லி முடித்து தலையை உயர்த்தியவள்……தேங்க்ஸ் இயேசப்பா….ஆமென்…..சொல்லி முடித்தவளின் முகத்தில் இருந்த சந்தோசம் ஏஞ்சலுக்கும் சந்தோசத்தை கொடுத்தது.
இப்ப சொல்லு குட்டிமா…..உன்னுடைய பழைய prayer இனி என்னவாகும்…. ஏஞ்சல் சிரித்து கொண்டே கேட்ட போது
எங்க அம்மா, அப்பாக்கு தெரிந்தாலும் இல்லை கடைசி வரை தெரியாமயே போனாலும்….நீங்க என்ன செய்தாலும் ஓகே பிரெண்ட்…..ஏன்னா நீங்க என்னை நேசிக்கிற தேவன்….தாவீது சொன்ன மாதிரி பாதாளத்தில் படுக்கை போட்டாலும் கர்த்தாவே நீர் அங்கேயும் இருக்கிறீர்…… சோ என் வாழ்கையில் என்ன நடந்தாலும் நான் பயப்பட மாட்டேன்….. அவள் சொன்ன போது ஏஞ்சலும் சேர்ந்து ஆமென் என்றார் சத்தமாக!!!!
பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 49 பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 51
பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 50
Daily Bible Verse
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
« Feb | ||||||
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
Newsletter
Categories
Archives