• மனம் திரும்பி விட்டீர்களா?(1)

    பயமா?

    fear

    தலைப்பை பார்த்ததும் நீங்க ஏற்கனவே யோசிக்க ஆரம்பிச்சிட்டீங்க …..மனம் திரும்பியாச்சான்னு எத்தனை பேருதான் கேட்பாங்க. நாங்களும் எத்தனை தடவை தான் எல்லாருக்கும் புரிய வைக்கிறது.

    நீங்க கேட்கிறதால நாங்களும் சொல்லுறோம். நான் பிறந்தது ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில். அது மட்டுமில்ல எங்க குடும்பம் தலைமுறை தலைமுறையா நம்ம இயேசப்பாவை பின்பற்றுகிற குடும்பம். வாரம் வாரம் தவறாம சர்ச்க்கு போறவன்//போறவள். சின்ன வயசில சண்டே ஸ்கூல், வாலிப வயதில யூத் மீட்டிங், அடுத்து ஆண்கள் ஐக்கிய சங்கம்/ பெண்கள் ஐக்கிய சங்கம், அடுத்து வீட்டுல prayer மீட்டிங் நடத்துறோம்…..உங்களுக்கு தெரியுமா?? இது எதையும் நாங்க எங்க சுய பலத்தினால் செய்யுறதே கிடையாது…அது மட்டுமில்ல ஒரு நாள் கூட prayer பண்ணாம, பைபிள் வாசிக்கமா நாங்க எங்க வாழ்கையை கடந்து போனதில்லை. இப்படி இருக்கும் போது எப்படி எங்களை பார்த்து நீங்க இந்த கேள்வியை கேட்கலாம்….. கொஞ்சம் எங்க கூட சண்டை போட வந்தது மாதிரி இருக்கே???

    தேங்க் யூ சோ மச் பிரெண்ட்ஸ் …எங்களுக்காக உங்க வாழ்கையை திரும்பி பார்த்து எங்களுக்கு பதில் சொன்னதற்காக திரும்பவும் ஒரு முறை தேங்க்ஸ் சொல்லிக்க ஆசைபடுறோம். எங்களுக்கு ஒரு உதவி செய்ய முடியுமா? இந்த உலகத்து மக்களை மொத்தமா ரெண்டே பிரிவா பிரிக்க சொன்னா நீங்களும் ஈஸியா சொல்லிருவீங்க….. நம்ம இயேசப்பாவை ஏற்றுக் கொண்டவங்க…ஏற்றுக் கொள்ளாதவங்க. சரியா??? திரும்பவும் உங்களுக்கு இன்னொரு முறை தேங்க்ஸ்.

    இன்னமும் கொஞ்சம் ஆழமா சொன்னா நம்ம இயேசப்பாக்குள்ள வந்த பிள்ளைகளை விசுவாசிகள், அவிசுவாசிகள்ன்னு பிரிக்க முடியும்…..ஆனா நம்ம இயேசப்பா தன்னுடைய பிள்ளைகளை(எல்லாரும் அவர் பிள்ளைகள்தான்) மனம் திரும்பின நிலை….இன்னும் மனம் திரும்பாத நிலைன்னு சொல்லி தான் பிரிச்சி பார்க்கிறார். உங்களுக்குள்ளே நிறைய கேள்விகள் வரலாம்…. விசுவாசம், அவிசுவாசம் என்கிற நிலையே என் தேவன் கிட்ட  என் மனம் திரும்பும் போதுதான் நடக்கிற காரியம். அப்ப இதுல என்ன இந்த புதிய வகைன்னு நீங்க யோசிக்கலாம்……

    கேட்கிற உங்களுக்கு நம்ம இயேசப்பா என்ன சொல்லுறாங்கன்னு கேட்போமா??? அப்போஸ்தலர் விசுவாச பிரமாணத்தின் மூலமா நாம நம்ம தேவன் கிட்ட நம்ம விசுவாசத்தை சொல்லும் போது, நாங்க எங்க தேவனை நம்புறோம், எங்க தேவன் எங்களுக்காக கொடுத்த இயேசப்பாவை நம்புறோம். அவர் எனக்காக இந்த பூமியில் வந்து, பாடுபட்டு, சிலுவையில் வேதனைப்பட்டு, மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, மூன்றாம் நாள் உயிரோட எழுந்தவர். இப்ப பிதாப்பா வலது பக்கத்தில இருக்கிறார் என்பதை முழுமையா இருதயத்தில் விசுவாசித்து, நம்ம வாய் மூலமாகவும் அறிக்கையிடுகிறோம். நம்ம இயேசப்பா திரும்பவும் இந்த உலகத்திற்கு வருவார் என்பதையும் நாம அறிக்கை இடுகிறோம்.

    இதுதான் நம்ம கிறிஸ்தவ வாழ்கைக்கே ஆதாரம். அப்படி இருக்கும் போது இந்த விசுவாச பிரமாணத்தின் மூலமா நம்ம இயேசப்பா அப்படி என்னதான் சொல்ல போறாங்கன்னு உங்களை மாதிரியே எங்களுக்கும் ரொம்பவே ஆர்வமா இருக்கு. இத்தனை விசுவாசத்தையும் வரி விடாம சொல்லுற என்னுடைய பிள்ளை இருதயத்தில் நீ போய் பார்த்தா கண்டிப்பா நான் இருக்க மாட்டேன்னு சொல்லுறார். நம்ம இயேசப்பா நம்ம மனதில் இல்லாம இருந்தா எப்படி நம்மால அவருக்காக நம்மளை வருத்தி வாரம் ரெண்டு நாள் உபவாசம், பைபிள் வாசிப்பு, prayerன்னு ஓட முடியும்????

    வெறும்…. தப்பு செய்தா தண்டனை கிடைக்கும் என்கிற ரீதியில் தான் தன் பிள்ளைகள் கூட தன்னை நினைச்சி பார்க்கிறாங்கன்னு அவர் சொன்னா நம்மால கண்டிப்பா இல்லைன்னு சொல்ல முடியுமா???

    சாரி பிரெண்ட்ஸ், இதை அவர் சொல்லும் போது நீங்க மட்டுமில்ல, இந்த உலகத்தில் எல்லாரும் ஒரு முறை தலை கவிழ வேண்டிய நிலையில் இருக்கிறோம் என்பது தான் உண்மை. நம்ம இயேசப்பா அவர் வார்த்தையை சொல்லும் போது நம்மால ஒரு வார்த்தை கூட சொல்ல முடியலை, அப்படிதான. வெறும் அவர் மேல உள்ள பயத்தில் தான் அவருடைய பிள்ளைகள் அவரை நினைச்சி பார்க்கிறாங்கன்னு அவர் சொன்ன வார்த்தைக்கே நம்மால நம்ம இயேசப்பாகிட்ட அடுத்த வார்த்தையை சொல்ல முடியலையே??? அப்படி இருக்கும் போது என் பிள்ளைகள் என்கிட்டே முழுவதுமா மனம் திரும்பலைன்னு சொல்லி அவர் பேச ஆரம்பிச்சா நாம என்ன ஆவோம்????

    Related Post

    Categories: மனம் திரும்புதல்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    − six = 2

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>