-
கர்த்தர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்
The last supper என்று சொல்லப்படும் படத்தை வரைந்தவர் மிகவும் அழகாக அதை வரைந்து முடித்து, தன் நண்பர்களிடம் அந்த படத்தை குறித்து அவர்களது கருத்தை கேட்டார். அவர்கள் அந்த அழகிய படத்தை பார்த்து விட்டு, மேலிருந்து தொங்கி அந்த அறையை அலங்கரித்திருந்த, அழகிய வண்ண விளக்கை புகழ்ந்து ‘என்ன ஒரு அருமையான விளக்கு’ என்று பாராட்டினார்கள். .
மற்ற ஓவியர்களாயிருந்தால் புகழ்ந்தவுடன் மயங்கி போயிருந்திருப்பார்கள். ஆனால் இவரோ, உடனே அந்த விளக்கை அந்த படத்திலிருந்து நீக்கி விட்டார். அவருடைய எண்ணமெல்லாம், எல்லாருடைய கவனமும் எஜமானாகிய கிறிஸ்துவின் மேல்தான் இருக்க வேண்டும், அதை தவிர வேறு எதுவும் மேலானதாக படக்கூடாது என்பதுதான். அதனால் இந்நாள் வரை அந்தப் படத்தில் விளக்கு இல்லாமல் வரையப்பட்டிருப்பதை காணலாம்.
.
யோவான் ஸ்நானகன் தன்னை ஒருபோதும் வெளிப்படுத்தவே இல்லை. அவருடைய பிரசங்கத்தில் கர்த்தரைக் குறித்தே மேன்மைப்படுத்தி, வனாந்தரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தமாக, வரப்போகிற மேசியாவாகிய கிறிஸ்துவிற்கு வழியை ஆயத்தப்படுத்துகிறவராகவே வாழ்ந்து, மரித்தார்.
.
கிறிஸ்துவும் அவரைக் குறித்து, ‘அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான்ளூ நீங்களும் சிலகாலம் அவன் வெளிச்சத்திலே களிகூர மனதாயிருந்தீர்கள்’ (யோவான் 5:35) என்று சாட்சிக் கொடுத்தார்.
.
நாமும் எதைச் செய்தாலும் கிறிஸ்துவே அதில் பிரதானமாக இருக்க வேண்டும். உலக காரியங்களில் எந்த முடிவெடுப்பதானாலும் முதலில் அவரிடம் ஜெபித்து விட்டு, நீரே வழிநடத்த வேண்டும் என்று அவருடைய கரத்தில் ஒப்படைத்துவிட்டு, அவருடைய சித்தத்தின்படி முடிவெடுக்க வேண்டும். அவரை முதன்மையாக வைத்து செய்யப்படுகிற காரியங்கள் எதுவும் தோல்வியை பெறுவதில்லை.
.
வேத வசனம்:
—————–‘அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும். உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்; பூமியிலிருந்துண்டானவன் பூமியின் தன்மையுள்ளவனாயிருந்து, பூமிக்கடுத்தவைகளைப் பேசுகிறான்; பரலோகத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானர். – (யோவான் 3:30-31)
.
Original Source From: anudhinamanna.net
பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக)- 38 இரக்கமற்ற பணியாளன்
கர்த்தர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்
Daily Bible Verse
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
« Feb | ||||||
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
Newsletter
Categories
Archives