• வேதாகம பாத்திரங்கள்(3)

    அடிமையின் ரூபம்???

    vethak3

    ஹாய் குட்டிஸ், நம்ம தேவன் நம்மை தனது ரூபத்தின்படிதான் படைச்சார் என்பதில் இப்ப உங்களுக்கு கொஞ்சம் கூட சந்தேகம் இருக்காதுன்னு நம்புறோம்…..

    சோ நம்ம தேவன் தன்னுடைய பையனான நம்ம இயேசப்பாவை இந்த உலகத்துக்கு அனுப்பி வைக்கும் போது எப்படி ஆதாமை தன் ரூபத்தின் படி, சாயலின் படி ஏற்படுத்தினாரோ, அதே மாதிரிதான் அனுப்பி வைச்சார்……  இதுல நாம முக்கியமா கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா…… நம்ம இயேசப்பா இந்த உலகத்தை நம்ம தேவன் படைக்கும் போதும் சரி, இந்த உலகத்துக்கும் முன்னாடி எத்தனை விதமான மகிமையோட நம்ம பிதாப்பா கூட இருந்தாரோ…..அதில ஒரு சிறு துளி கூட இந்த உலகத்துக்கு வந்த போது அவரில் காணப்படலை என்பதுக்கு எடுத்துக்காட்டா

    தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.

                                                                                                                         பிலிப்பியர் 2 : 7

    இந்த வசனத்தை நீங்க வாசிக்கும் போது நீங்க என்ன தெரிந்து கொண்டீங்க குட்டிஸ்….. இந்த வசனத்தை வாசிக்கும் போது நீங்க சப்போஸ் நினைக்கலாம்…..நம்ம இயேசப்பா தம்மைத்தாமே வெறுமையாக்கின்னா ஓகே,  தன் தேவனோடு அவர் இருந்தப்ப என்னென்ன அவர்கிட்ட மகிமையும், வல்லமையும் காணப்பட்டதோ அதையெல்லாம் வேண்டாம்னு சொல்லி( நமக்காக) வெறுமையானார்….ஆனா அடிமையின் ரூபம்ன்னா என்ன….அப்ப நாங்க எங்க தேவனுக்கு முன்னாடி என்ன அடிமைகளா….அடிமையின் ரூபமா……உங்க மனதில் கேள்விகள் வருவது சகஜம்…. ஆனா குட்டிஸ், நம்ம தேவன் நமக்காக தன் ஒரே பையன் கூட பார்க்காம நம்ம இயேசப்பாவை சிலுவையில் ஒப்பு கொடுத்ததை பார்க்கும் போது கண்டிப்பா அவர்….  நம்மை அடிமைன்னு சொன்னாலும் கூட  சந்தோசம்தான் படனும்…..

    சரி குட்டிஸ், இப்ப நம்ம தேவன் ஏன் அடிமையின் ரூபம்ன்னு சொன்னாங்கன்னு அவர்கிட்டேயே கேட்டு தெரிந்து கொள்ளலாமா? அடிமைங்கிறது அவர் நமக்கு கொடுத்த ரூபம் இல்லை குட்டிஸ், உண்மையில் நாம ஏற்கனவே ஆதியாகமம் வசனத்தில் பார்த்தோமே…. அவர் நமது சாயலாகவும், நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக….. ( நமது என்பதுக்கு நம்ம தேவன் நம்மளை படைக்கும் போது அவர் கூட நம்ம இயேசப்பாவும் இருந்தாங்க…..நம்மை படைக்கும் போதும் மட்டுமில்ல இந்த உலகத்தில இருக்கிற எல்லாத்தையும் படைக்கும் போதும் கூட நம்ம தேவன் கூடதான் நம்ம இயேசப்பா இருந்தாங்க. இதை தெளிவா தெரிந்து கொள்ளணும்னா நீங்க நீதிமொழிகள் 8ம் அதிகாரத்தை வாசித்து தெரிந்து கொள்ளுங்க…..அது மட்டுமில்ல யோவான் 1 : 1 – 3 ம் வசனங்கள் வரை கூட அழகாவே நம்ம தேவன் வெளிப்படுத்தி இருப்பாங்க…..நம்ம இயேசப்பா மூலமாதான் நம்ம தேவன் சகலத்தையும் படைச்சாங்க….என்பது உங்களுக்கும் புரியும்). அப்ப நாம யார் சாயல் அடுத்து யார் ரூபம்…..எல்லாரும் கத்தி தேவனின் ரூபம்ன்னு சொல்லுறது எங்களாலும் கேட்க முடியுது குட்டிஸ்…..  அப்ப அந்த அடிமையின் ரூபம்ன்னு நம்ம தேவன் எதை குறித்து சொல்லுறாங்க……

    அது வேறு ஒண்ணும் கிடையாது குட்டிஸ், நம்ம தேவன் ஆதாமை படைக்கும் போது தன் சாயலில் படைத்தது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை….. நம்ம தேவன் வார்த்தைக்கு ஆதாம் கீழ்படியாத சமயம்…. எப்படி சாத்தான் பாவம் என்கிற விதையை ஆதாமில் போட்டானோ, அது அவனை மட்டுமில்ல, அவன் சந்நிதியாகிய நம்மளையும் அந்த பாவம் என்கிற விதை ஆட்கொண்டது….. அதுனால நம்ம தேவன் நம்ம இயேசப்பாவை இந்த பூமியில் அனுப்பும் போது அதே பாவ விதையோட….அதாவது அடிமையின்(பாவத்துக்கு அடிமை) ரூபத்தில அனுப்பி வைத்தார்….இப்ப உங்களுக்கு நல்லாவே புரிஞ்சிருக்கும்…நம்ம தேவனின் தீர்மானம் என்னன்னு???

    உங்க மனசில இன்னொரு கேள்வி எழும்புவது இயற்கை….. சரி, அப்படினா நம்ம தேவன் நம்ம இயேசப்பாவை இந்த உலகத்தில படைக்கும் போது நேரடியா வானத்தில இருந்து ஒரு பெரிய வெளிச்சம் வந்து அதில இருந்து ஒரு சின்ன குழந்தையா அவரை அனுப்பி வைச்சிருக்கலாமே….. ஏன் ஒரு மனுஷி மூலமா படைக்கணும்.??? உண்மையில் சரியான கேள்வி குட்டிஸ்….

    நம்ம இயேசப்பா நம்ம தேவனில் இருந்து வெளி வந்தப்ப கூட அதே பரிசுத்ததோடதான் இருந்தார். அவரை அடிமையின் ரூபம் ஆக்கணும்னா கண்டிப்பா நீங்க இதுவரை டிவில பார்த்த மாதிரி தீடீர்னு ஒரு வெளிச்சம்….அதுல ஒரு குழந்தை அழுதுட்டே காணப்படுவது…..இது எல்லாம் நாம படிக்கிற கற்பனை கதைக்கு வேணா பொருந்துமே தவிர, சத்தியம் என்கிறதை மட்டுமே தன் பேரா கொண்ட நம்ம இயேசப்பாவுக்கு சரி வராது குட்டிஸ்……

    அதுனாலதான் தலை முறையா…தலை முறையா பாவத்துக்குள் மூழ்கி தேவன் கொடுத்த தண்டனையால வேதனைப்பட்டுட்டு இருந்த மனுஷி மூலமா பிறந்தார்…இதுல என்ன விசேஷம்ன்னா எந்த தண்டனையை ஏவாள் தப்பு செய்த போது கொடுத்தாரோ…..அதே தப்பை மன்னிக்கிறதுக்காக ஏவாளின் சந்நிதியாகிய மரியாளின் கர்ப்பம் மூலமா பிறந்து முதலில் ஏவாள் செய்த தப்பை நம்ம தேவன் மன்னிச்சாங்க…..இப்ப சொல்லுங்க, நம்ம தேவன் எப்படிப்பட்ட தேவன்….

    அப்பா…நான் தப்பு செய்திட்டேன்ப்பா, என்னை மன்னிச்சிருங்கன்னு  சொன்ன அடுத்த நொடியே நம்ம அக்கிரமங்களையும், மீறுதல்களையும் எப்படி நினிவே மக்களுக்கு மன்னிச்சாரோ, அதே மாதிரிதான் மன்னிப்பார்….மன்னிக்கிறது மட்டுமில்ல குட்டிஸ், அடுத்து அதையும் நினையாமலும் இருப்பார்….ஆனா நாம அப்படியா குட்டிஸ்….சப்போஸ் ஒரு விசயத்தை வைத்து கொள்ளுங்க…..

    உங்களுக்கும், உங்க அண்ணனுக்கும் விளையாட்டு சாமான் விசயத்தில் சண்டை…. நீங்க என்ன பண்ணிட்டீங்க. உங்க அப்பா உங்க அண்ணனுக்காக வாங்கிட்டு வந்த ஒரு நல்ல காரை அண்ணன் எவ்வளவு சொல்லியும் கேட்காம , அவன் கையில் இருந்த காரை…. பிடுங்கி அடுத்த நிமிடமே அது உடைஞ்சு…..உங்க வீட்டில கண்டிப்பா இது நடந்திருக்கும் குட்டிஸ், சரியா…..

    கொஞ்ச நேரத்தில் நீங்க செய்தது தப்புன்னு மனசில நம்ம இயேசப்பா உணர்த்தினதும், உடனே அண்ணன் கிட்ட சாரின்னு நீங்க சொல்ல அண்ணனும் சரின்னு சொல்லிட்டான்….. ஆனா உங்க அண்ணன் உன்னை முழு மனதோட அந்த நிமிஷத்தில் மன்னிச்சாலும் அடுத்து அவன் விளையாட்டு பொருட்களை நீ எடுக்கும் போதும் எல்லாம்…..அவன் மனசில ஒரு பயம் வருவது சகஜம்….தம்பி/தங்கச்சி இதையும் உடைச்சிருவானோ/ளோ????….அது அவன் முகத்தில் தெரியும் போது உங்களுக்கு எப்படி இருக்கும் குட்டிஸ்…. நான் முழு மனதோட மன்னிப்பு கேட்டாலும் ஏன் அண்ணன் மன்னிக்க வில்லை. சரியா குட்டிஸ்???

    நிறைய பேரு சொல்ல ஆரம்பிச்சிட்டீங்க…… முதலில் அந்த காரியம் எல்லாம் என் மனசை கஷ்டப்படுத்தினது உண்மை….ஆனா இப்பெல்லாம்….சாரி குட்டிஸ்….உங்களால் அதுக்கு மேல சொல்ல முடியாது. ஏன்னா உங்க மனதில அதுனால ஏற்பட்ட வடு இன்னும் இருக்கே…. ஆனா நம்ம இயேசப்பா அப்படி கிடையாது குட்டிஸ்…நம்ம தப்புக்கு முழுமையா மன்னிப்பு கேட்கும் போது அந்த நேரம் அதை மன்னிச்சது மட்டுமில்ல திரும்பவும் நீ அதை குறித்து அவர்கிட்ட கேட்கும் போதும்….. என்னிக்கி குட்டிமா, அதை செஞ்ச….எனக்கு மறந்து போச்சு…அதை பத்தி ஏன் யோசித்து மண்டையை போட்டு குழப்பிக்கிற….ன்னு நமக்கு ஆறுதல் சொல்லுற ஒரே ஒரு தெய்வம் அவர் மட்டும்தான் குட்டிஸ்.. இதுதான் மனுஷனுக்கும், நம்ம தேவனுக்கும் உள்ள வித்தியாசம்…… இப்ப உங்களுக்கும் புரியும்னு நம்புறோம் குட்டிஸ்…. நம்ம தேவன் மூலமா ஏவாளுக்கு கிடைத்த மன்னிப்பு அவங்களுக்கு மட்டுமில்ல முழு பெண்களுக்கும் கிடைத்த மன்னிப்புன்னு இப்ப நீங்களும் புரிஞ்சி வைச்சிருப்பீங்க.

    தேவன் நம்ம இயேசப்பா மூலமா வெளிப்படுத்தின அடிமையின் ரூபம் என்னதுன்னும், ஏன் ஒரு கன்னி மரியாள் மூலமா வந்தாங்க என்பதையும் இப்ப நீங்களும் தெரிந்திருப்பீங்க…..ஆனா இதன் காரணம் என்பதை அடுத்த வாரம் நம்ம தேவன் சொல்லி கொடுக்கும் போது தெரிந்து கொள்ளுவோமா?????

    Related Post

    Categories: வேதாகம பாத்திரங்கள்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    − seven = 2

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>