• விசேஷித்தவர்களாய் மாற்றுபவர்

    பல வருடங்களாக அந்த மரம் அக்காட்டிலே இருந்தது. மிகுந்த ருசியுள்ள நல்ல கனிகளைக் கொடுத்து, பறவைகள், விலங்குகள், வழிப்போக்கர்கள் என அனைவரும் பசியாற பழங்களைக் கொடுத்தது, ஆனால் ஒருநாள் வீசிய பலத்த காற்றில் வேரோடு சாய்ந்தது அந்த மரம். அவ்வழியே சென்ற ஒருவரும் அதை தூக்கி நிறுத்த முன்வரவில்லை. பரிதாபத்தோடு அதைப் பார்த்துவிட்டு சென்று விட்டனர். அந்த மரமோ, ‘நான் எவ்வளவோ கனிகளைக் கொடுத்து மற்றவர்களுக்கு உதவியாகத்தானே இருந்தேன். எனக்கு இப்படி ஒரு நிலை வந்துவிட்டதே’ என மிகவும் வருத்தப்பட்டுக் கொண்டது.

    .

    நாட்கள் உருண்டோடி வருடங்களாயின. மரம் மண்ணுக்குள் புதைந்து போனது. பூமியின் உஷ்ணம் மற்றும் அழுத்தத்தினால் அது நிலக்கரியாக மாறியது. ஒருநாள் சாலையமைப்பதற்காக ஆட்கள் வந்து தோண்டினபோது நிலக்கரி இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். மேலும் தோண்டினபோது மிகவும் கடினமான கல்போன்ற ஒரு பகுதியை கண்டு அதை வெட்டி எடுத்து சோதித்தபோது அது விலையுயர்ந்த வைரம் என்று கண்டுபிடித்தனர். இறுதியில் சரியான அளவில் வெட்டப்பட்டு, ஜொலிக்கிற வைரமாக மாறினது.

    .

    பிரியமானவர்களே, நீங்களும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு, அவருக்காக வாழ்ந்து மிகுந்த கனிகளை கொடுத்து வருகிறவர்களாக இருக்கலாம். ஆனால் அதினிமித்தம் உங்கள் குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள் உங்களை வெறுத்து, ஒதுக்கிதத்ள்ளி தனிமைப்படுத்தலாம். இருப்பினும் எல்லா கஷ்டங்களையும் அவதூறான வார்த்தைகளையும் பொறுமையாய் சகித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் நீங்கள் கண்ணீரோடு மறைந்திருந்த ஜெபிக்கிற ஜெபங்கள் உங்களை விலையுயர்ந்ததாக்கி, உங்கள் குடும்பத்தாரையும் இரட்சிக்கும். ஒருநாளில் கர்த்தர் உங்களுக்கு ஜீவக்கிரீடத்தை தருவார். சோர்ந்து போகாதிருங்கள். நீங்கள் விசேஷித்தவர்கள்!

    .

    வேதத்தில் யோசேப்பினுடைய வாழ்க்கையும் இப்படித்தான் இருந்தது. ஆகாது என்று தள்ளிவிடப்பட்டப்ட்டவராக, பாழும் கிணற்றில் தள்ளப்பட்டு, கிடந்தார். துன்பங்களையும் துயரங்களையும் பொறுமையாய் சகித்தார். முடிவு ஜொலிக்கிற வைரத்தைப் போல விலையேறப்பெற்றவனானார். அவருடைய வாழ்க்கை பல ஆண்டுகள் கடந்தும் நம்மோடு பேசுகிறது.

    .

    வேத வசனம்:
    —————–

    வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று. அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது. – (சங்கீதம் 118: 22-23).

    பின்பு, பார்வோன் யோசேப்பை நோக்கி: தேவன் இவையெல்லாவற்றையும் உனக்கு வெளிப்படுத்தியிருக்கிறபடியால், உன்னைப்போல விவேகமும் ஞானமுமுள்ளவன் வேறொருவனும் இல்லை. நீ என் அரமனைக்கு அதிகாரியாயிருப்பாய்; உன் வாக்கின்படியே என் ஜனங்கள் எல்லாரும் அடங்கி நடக்கக்கடவர்கள்; சிங்காசனத்தில் மாத்திரம் உன்னிலும் நான் பெரியவனாய் இருப்பேன் என்றான். (ஆதியாகமம் 41:39-40)

    .

    Original Source From: anudhinamanna.net

    Related Post

    Categories: சிந்திக்க சில விசயங்கள்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    9 − one =

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>