-
உம் வேதத்தை கற்றுத்தாருமே
வேதாகம ஆசிரியர் ஒருவர், தன்னுடைய கிழிந்துப்போன வேதாகமத்தை தூக்கிப்பிடித்துக் கொண்டு, ‘ஒவ்வொரு விசுவாசியும் வேதாகமத்தை பயன்படுத்தி, ஒவ்வொரு பத்து வருடங்களில் ஒவ்வொரு வேதாகமத்தையும் சேதப்படுத்த வேண்டும்’ என்றார். நம்முடைய வேதாகமங்கள் படிப்படியாக தாமாகவே கிழிந்துப் போகும் அளவு நாம் அவற்றை பயன்படுத்த வேண்டும் என்பதே அவருடைய கருத்தாகும்.
பாவத்தினால் தன் மனதை சேதப்படுத்தியவன் சேதமடையாத புத்தம் புதிய வேதாகமத்தை வைத்திருப்பான். சேதமடைந்த கிழிந்த வேதாகமத்தை வைத்திருப்பவனது மனதோ, கர்த்தருக்குள் களிகூர்ந்து பாதுகாப்பாய் இருக்கும்.ஆம், நாம் ஆர்வமாய் வேதத்தை வாசிக்கிறவர்களாக இருப்பவர்களானால் நாம் சேதமடைவதற்கு பதிலாக நமது வேதாகமம் சேதமடையும். நமது பாவத்தை உணர்த்தி, மனசாட்சியை கூர்மையாக்கி, நம்மை உணர்வுள்ளவர்களாக மாற்றும் உயிருள்ள வார்த்தைகளடங்கிய புத்தகம் நம் வேதாகமம் மட்டுமே! தினமும் நேரமிருந்தால் மட்டும் வாசிப்பவர்கள், விடுமுறை நாட்களில் மட்டும் வாசிப்பவர்கள் வரிசையில் நாம் இருப்போமென்றால் நம்நிலை பரிதாபமே. பாவமான காரியங்களை காந்தம் போல இழுககும் சக்தி வாய்ந்த நம் கண்களுக்கு வேத வசனம் என்னும் கலிங்கம் அனுதினமும் கட்டாயம் தேவை.
குடும்பங்களில் அன்றாடம் அப்பியாசிக்க வேண்டிய அன்பு, பொறுமை, சாந்தம் ஆசியவற்றை கற்றுத்தரும் வேதம், நமக்கு அனுதினமும் முதல் ஆசிரியராக இருந்தால் நம் குடும்பமே ஒரு குட்டி பரலோகமாக மாறிவிடும். ‘நான் ஆண்டவருக்கென்று ஊழியம் தானே செய்கிறேன்’ என்று ஊழிய வேலையில் மும்முரமாக ஈடுபட்டு, வேதத்தை மறந்து பின் பின்மாற்றமடைந்த ஊழியர்கள் ஏராளம்.இந்த சாத்தானின் வஞ்சக வார்த்தையைப் புரிந்து கொண்டு, தேவனுக்கும் அவரது வார்த்தைக்கும் முதலிடம் கொடுக்கும் ஊழியனைப் பார்த்துதான், ‘உண்மையும் உத்தமுமான ஊழியனே நீ கொஞ்சத்தில் உண்மையாயிருந்தாய்’ என்று தேவன் கூற முடியும்.
பிரியமானவர்களே நம்முடைய நிலைமையும், நம்முடைய வேதாகமத்தின் நிலைமையும் என்ன? சிலரது திருமணத்தில் பரிசாக கொடுக்கப்பட்ட வேதாகமம் வருடங்கள் பல கடந்தும் புத்தம் புதியதாக ஒட்டிய பக்கங்கள் கூட பிரிக்கப்படாமல் காணப்படும். ‘நீ என் வேதத்தை மறந்தால் நான் உன் பிள்ளைகளை மறப்பேன் என்று வேதம் எச்சரிக்கிறதல்லவா?
நாம் வேத வசனத்தை நம்முடைய இருதயத்தில் சுமந்தால், நம் சோதனை, வேதனை, வியாதி, கண்ணீரின் நேரங்களில் வேதம் நம்மை சுமக்கும்.
இத்தனை வருடங்களாகியும் வேதத்தை வாசிக்காதவராக இருந்தால், இன்றே ஒரு தீர்மானத்தை எடுப்போமா? எத்தனையோ மொழிகளில் வேதம் இன்னும் மொழி பெயர்க்காமல் இருக்கும்போது, நம்முடைய தாய் மொழியாகிய தமிழில் அற்புதமாக மொழி பெயர்க்கப்பட்டுள்ள அதிசய வேதத்தை நாம் வாசிக்காமல் இருந்தால் நாம் கர்த்தருக்கு கணக்கு கொடுக்க வேண்டுமல்லவா?வேதத்தை எடுப்போம், கர்த்தர் நம்மோடு பேசும் வார்த்தைகளை கோடிட்டு வைப்போம். புரியாத வசனங்களை குறித்து வைத்து, நல்ல வேத அறிவு உள்ளவர்களிடம் கேட்டு தெரிந்துக் கொள்வோம். நாம் தினமும் வேதத்தை வாசிப்பதினால் நம்வேதாகமம் பழுதடையட்டும். வாலிப வயதிலே படித்து படித்து வேதத்தை மனதில் வைப்போமானால் முதிர்வயதிலே பிள்ளைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் விலையேறப்பெற்றவர்களாக வேதத்தை போதிக்கிறவர்களாக இருப்போம். அதைவிட பெரிய பொக்கிஷம் எதுவும் இல்லை. ஆமென் அல்லேலூயா!.
வேத வசனம்:
உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன். – (சங்கீதம் 119:92).Original Source From: anudhinamanna.net
Bible Incidents (for kids) – 44 பைபிள் சம்பவங்கள் ( குழந்தைகளுக்காக) – 45
உம் வேதத்தை கற்றுத்தாருமே
Daily Bible Verse
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
« Feb | ||||||
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
Newsletter
Categories
Archives