• பைபிள் சம்பவங்கள் (குழந்தைகளுக்காக) – 49

    தூக்கம் முடிந்து கண்களை திறந்து பார்த்த போது தன் வீட்டில் தான் படுத்து கொண்டிருந்தாள். ஆனால் பக்கத்தில் அம்மா முகம் முழுமையாய் வேதனையோடு இவளையே பார்த்து கொண்டிருந்தார்…….ஏன் என்ற கேள்விக்கு பதில் கிடைக்க அவளுக்கு அவகாசம் தேவை பட வில்லை….. தன்னுடைய அதிக நேர தூக்கம் அம்மாவை கஷ்டபடுத்தி விட்டது என்பதை அவளும் புரிந்து கொண்டாள்….ஆனா அந்த தூக்கத்தின் நடுவில் அவள் பார்த்த காரியம்….நினைத்த அந்த நொடியே அவள் கண்களில் கண்ணீர் வடிந்தது…..

    அவள் கண் முழித்ததை அவள் அம்மாவும் கண்டுகொண்டார். என்ன குட்டிமா…..என்னை இப்படி புலம்ப வைச்சிட்டேயே…..ஒப்பாரியே வைத்து விட்டார்….இவளுக்கும் புரிந்தது…. தன் அம்மா தன்னை நினைத்து தான் அழுது கொண்டிருந்தார் என்பது…..

    அம்மாவுடைய சத்தம் கேட்டு அவளுடைய அப்பாவும் அவள் அறையில் நுழைந்தார்…அவர் கண்களில் கூட பதட்டம்…ஆனால் அவளை பார்த்ததும் அது காணாமல் போனது.

    என்ன குட்டிமா….என்ன ஆச்சு. நீ எப்பவும் இவ்வளவு நேரம் தூங்க மாட்ட…ஆனா….வார்த்தைகள் அவரால் கோர்வையாக கூட சொல்ல முடிய வில்லை… என்ன பதில் சொல்ல போகிறாள் என்பதில் தான் அவருடைய முழு கவனமும் இருந்தது….. இது வரை அம்மா, அப்பாகிட்ட அவள் நடிக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்ததே இல்லை….ஆனா இதுதான் முதல் முறை….இயேசப்பா ஏன்…..மனதுக்குள் கேட்டு கொண்டாள்.

    என்னன்னு தெரியலைப்பா….தூங்கின மாதிரி தோணுச்சு….முழிச்சு பார்த்தா அம்மா அழுகிற மாதிரி உட்கார்ந்திருக்காங்க….ஏன் என்ன ஆச்சு….நான் ரொம்ப நேரம் தூங்கிட்டேனா….அவள் கேட்ட போது அவள் அம்மாவும், அப்பாவும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டனர்…..

    ஆமா குட்டிமா…நீ நிறையவே நேரம் தூங்கிட்ட….மணி கொஞ்சம் நேரம்தான் ஆகுது…. மணி இப்ப பன்னிரெண்டு….. அவள் அப்பா சொன்ன போது பொய்யாக ஆச்சரியப்படுகிற மாதிரி நடித்தாள்.

    ஏன் அப்ப என்னை எழுப்பலை….நான் ஸ்கூல் போக முடியாம போச்சு….அவள் சொன்ன போது

    அவள் அப்பா சிரித்து கொண்டே சொன்னார்….உங்க அம்மா காலையில ஆறு மணியில இருந்து உன்னை எழுப்புறா…..நீ எழுந்திரிக்கவே இல்லைடா…. உங்க அம்மா அப்பயே இருந்து இப்படித்தான் உட்கார்ந்திருக்கா….என்ன சொன்னாலும் உங்க அம்மா கேட்டாதான…..ஒரே புலம்பல்…. அவள் அப்பா பேசுவதை உண்மையில் முதன் முதலாக ரசித்து கேட்பதை போல உணர்ந்தாள்….

    இதுதான் என் வீடு…இவங்க தான் என் அம்மா, அப்பா…..இது என் இயேசப்பா முடிவு பண்ணின காரியம்….. என்னை எவ்வளவு அழகா பார்த்துக்குறாங்க….அப்ப உன்னுடைய அந்த அம்மா, அப்பா உன்னை ஒழுங்கா பார்த்து கொள்ள மாட்டாங்களா??? அவள் மனம் கேள்வி கேட்ட போதே உண்மையில் சோர்ந்து போனாள்.

    ஏன் இயேசப்பா எனக்கு அத்தனை பெரிய கஷ்டத்தை கொடுத்தீங்க….அம்மா, அப்பா முகத்தை பார்க்கும் போது, அவங்க என் மேல அன்பு காண்பிக்கும் போது இவங்க என் உண்மையான அம்மா, அப்பா கிடையாதுன்னு மனசு சொல்லுதுப்பா….நான் என்ன செய்யணும்னு நீங்களே சொல்லுங்க ப்ளீஸ்…..தன் தேவனிடம் வேண்டினாள்.

    அவள் அப்பாதான் இன்னும் பேசி கொண்டிருந்தார். அவள் அப்பா இவ்வளவு நேரம் பேசி அவள் கூட பார்த்ததே இல்லை….தன்னை சமாதானப்படுத்தவா….இல்லை எனக்கு என்னமோ ஆச்சுன்னு பயந்திருந்த அம்மாவை சமாதானப்படுத்தவா…..யோசித்து பார்த்தவளுக்கு பதில் கிடைக்கவே இல்லை….

    கடைசியில் உங்க அம்மா புலம்பலை தாங்காம டாக்டரை வேற கூப்பிட்டு அவர் உன்னை செக் பண்ணி பார்த்து உனக்கு ஒண்ணும் இல்லை….பிள்ளை நல்லா தூங்கிட்டு இருக்கா….தூங்கட்டுமேன்னு சொன்ன பிறகுதான் உங்க அம்மா சமாதானம் ஆனா…..அவள் அப்பா அவளை பார்த்து சிரித்த போது உண்மையில் தன் அம்மாவை பார்த்து சிரிப்புதான் வந்தது அவளுக்கும்.

    எல்லாரும் என்னை பார்த்து சிரிங்க….அவள் அம்மா செல்லமாக கோபப்பட்டதை அவளும் கவனித்தாள்….உண்மையில் அழகாக இருந்தது….ஏன் நான் தீடீர்னு எங்க அம்மாவையே ரசிக்க ஆரம்பிச்சிட்டேன்….அவள் தன்னை குழப்பி கொண்டாள்.

    அடுத்து உனக்கு இன்னொரு விஷயம் தெரியுமா குட்டிமா…நம்ம டாக்டர் கிளம்பும் போது…. சாயந்திரம் ஆன பிறகும் பிள்ளை எழும்பலைன்னா ஹாஸ்பிடல்லுக்கு கூட்டிட்டு வாங்கன்னு கொஞ்சம் முகத்தை சோகமாக வைச்சி சொன்னதுதான் நேரம் உங்க அம்மா மீண்டும் புலம்பலை ஆரம்பிச்சிட்டா…. சொல்லி விட்டு சிரித்த போது அவளும் கூட சேர்ந்து சிரித்தாள்.

    சரி அப்பாவும், பொண்ணும் என்னை கிண்டல் அடிச்சி சிரித்தது போதும். இன்னும் நாம family prayer பண்ணலை…முதல்ல prayer பண்ணுவோம்…. அம்மா சொன்னவுடன் அந்த இடத்திலேயே மூவரும் முழங்காலில் நின்று ஜெபிக்க ஆரம்பித்தனர்.

    அம்மா தனக்காக விசேஷமாக ஜெபம் பண்ணினது அவளுடைய காதுக்கும் கேட்டது…..என் அம்மா என் மேல எத்தனை பாசமாக இருக்காங்க. இப்படிப்பட்ட ஒரு அம்மாவை கொடுத்ததே என் இயேசப்பா செயல் தான….அப்ப என் வாழ்கையில் ஏன் தேவையில்லாம நான் காலையில் கண்ட காரியம் நடந்தது…..மனசை குழப்பி கொண்டாள்.

    அம்மா கண்ணீரோடு பாரமாக அவளுடைய உடல் ஆரோக்கியத்திற்காக ஜெபித்து கொண்டிருந்தார்….இயேசப்பா….ப்ளீஸ் நீங்க கொடுத்த இந்த அம்மா, அப்பா மட்டும் எனக்கு போதும். நான் பார்த்த, கேட்ட உண்மைகள், சத்தியங்கள் எல்லாம் வெறும் கனவா மட்டும் இருக்கட்டும் இயேசப்பா….என்னுடைய எந்த நாளிலும் எங்க அம்மா, அப்பாக்கு நான் அவங்க பொண்ணு இல்லைங்கிற உண்மையை நான் தெரிந்து கொண்டேன் என்பது தெரியாமயே போகட்டும்….அவள் தன் மனதில் ரொம்பவே சீரியசாக ஜெபம் பண்ணினாள். அம்மா ஜெபம் பண்ணி முடித்த பிறகு ஆமென் சொன்ன பிறகு

    என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி, என் முழு உள்ளமே அவர் பரிசுத்த நாமத்தை  ஸ்தோத்திரி

    என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி, அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே….

    மூவரும் சொல்லி முடித்த பின்பு praise the lord…..சொல்லி கொண்டனர்.

    நீ பிரஸ் பண்ணிட்டு வா குட்டிமா….அம்மா உனக்கு சாப்பாடும், பாலும் எடுத்து வைக்கிறேன்….அவள் அம்மா சொல்லி விட்டு அந்த ரூமில் இருந்து கிளம்பிய பிறகும் நடந்த எல்லா காரியத்தையும் யோசித்து பார்த்தாள்….மனசை போட்டு குழப்பிக்க கூடாது என்று தன்னையே கடிந்து கொண்டாள்.

    கிச்சனில் அங்கிருந்த சேரில் உட்கார்ந்து அவளுடைய அம்மா அழுது கொண்டிருந்தார். அவள் அப்பாவால் தன் மனைவியை அமைதி ப்படுத்த முடிய வில்லை.

    நம்ம பொண்ணுதான் சரியாயிட்டாளே, அப்படி இருக்கும் போது ஏன் இன்னும் அழுகுற….உன்னுடைய அழுகையையை குறை சொல்லலை. ஆனா இன்னும் ஏன் கஷ்டப்படுற…… சொன்ன போதும் அவள் அம்மா அழுது கொண்டிருந்தார்.

    உங்களுக்கு ஒண்ணு தெரியுமா….ரெண்டு நாளுக்கு முன்னாடி நம்ம தேவனுடைய வார்த்தை எனக்கு வந்துச்சு…..சொல்லி விட்டு மீண்டும் அழ ஆரம்பிக்கவும்

    விசயத்தை சொல்லுமா….எதுவும் முக்கியமான காரியமா….அவர் கேட்ட போது

    நம்ம பொண்ணு அவளுடைய அம்மா, அப்பாவை பத்திய ரகசியத்தை தெரிந்து கொள்ள போறான்னு சொன்னாங்க….சொன்ன நிமிடமே நான் முழுமையா நொறுங்கிட்டேன். எவ்வளவு தூரமோ நான் இயேசப்பாகிட்ட சொல்லி பார்த்தேன்….இயேசப்பா அவ சின்ன பொண்ணு. சப்போஸ் இந்த உண்மையை தெரிந்து கொண்டா அவளால் தாங்க முடியாதுன்னு….ஆனா இயேசப்பா ஒரு பதிலும் சொல்லலை….அன்னையில இருந்து மனசுல கஷ்டமா இருக்கு….என்ன நடக்க போகுதுன்னு ஒரு பயம் இருந்துட்டே இருந்துச்சு….இன்னிக்கி தீடீர்னு நம்ம பொண்ணு தூங்க முழிக்க லேட்டானதும் அவளுக்கு என்னமோ ஆச்சுன்னு பயந்தே போனேன்…. எத்தனை வேதனை எனக்குள்ள இருந்துச்சு தெரியுமா…. என் பொண்ணை அவ அம்மா, அப்பாகிட்டதான் கூட்டிட்டு போக போறாருன்னு நினைச்சா….யாருக்குமே இல்லாம அவர் தான் கூடயே கூட்டிட்டு போயிட்டாரோ…ன்னு ரொம்பவே பயந்து போனேன்…..சொல்லி விட்டு அவர் மீண்டும் அழ ஆரம்பித்த போது அவர் அப்பாவால் கூட ஒண்ணும் சொல்ல முடிய வில்லை.

    தெரிந்து கொண்ட உண்மை அவரை கூட ஒரு முறை அசைத்து விட்டது….உண்மையா இயேசப்பா….நீங்க எங்களுக்கு கொடுத்த பொண்ணை திரும்பவும் அவளுடைய அம்மா, அப்பாகிட்ட கொடுக்க போறீங்களா??? கேள்விகள் எழுந்து கொண்டே இருந்தது.

    ஆனால் அடுத்த நொடியில் தன் தேவனின் அன்பில் தன்னை திடப்படுத்தி கொண்டார். இயேசப்பா இது தான் உங்க அனாதி தீர்மானமா இருந்தா கண்டிப்பா அதுக்கு நான் முழுமையா கீழ்படியுறேன்…. என்று சொல்லி தனது கணவர் ஜெபம் பண்ணி கொண்டிருந்ததை பார்த்த அவருக்கு உண்மையில் அதிர்ச்சி….

    ஏன் நம்ம இயேசப்பாகிட்ட அப்படி சொன்னீங்க. நம்ம பொண்ணை எப்படி நம்மளால் முழு மனசோடு அவ ஆமா, அப்பாகிட்ட ஒப்படைக்க முடியும்….என்று சொன்னவரை பார்த்து

    நம்ம பொண்ணை நம்ம இயேசப்பா அவருடைய பொண்ணா எடுத்து நடத்தின நேரம் நம்மகிட்ட என்ன கேட்டாங்க…..கேட்டவரை வியப்பாய் பார்த்தார்.

    அவருடைய பொண்ணா அவர்கிட்ட முழு மனதோடு ஒப்படைக்க சொன்னாங்க….அப்படிதான…..என்று சொன்னவரை பார்த்து தலை அசைத்தார்.

    இப்ப அதனுடைய அடுத்த ஸ்டேஜ்…..நம்ம பொண்ணா இங்க இருந்த அவளை அவங்க பொண்ணா அவர் கூட்டிட்டு போய் ஒப்படைக்கும் போது நம்மால என்ன செய்ய முடியும்….அதை பார்த்து பெரு மூச்சு விட்டு அழுகிறதாலோ இல்லை மாட்டோம்ன்னு சொல்லி அடம் பிடிச்சி கதறதாலோ என்ன சாதிக்க போறோம்ன்னு சொல்லு….கேட்டவருக்கு ஒன்றும் சொல்ல முடியாமல் அவள் அம்மா அமைதியானாள்.

    அப்படி நாம நம்ம இயேசப்பா பேச்சை மீறி எடுத்து கொண்டா அந்த சுதந்திரம் உண்மையில் நமக்கு சந்தோசத்தை கொடுக்குமா??? அவர் கேட்ட போது அமைதியாக தான் இருந்தார்.

    அப்படி கிடைச்ச காரியம் நமக்கு உண்மையான சந்தோசத்தை தராதது மட்டுமில்ல வேதனையை தந்தா என்ன ஆவோம்??? கேட்ட போது

    ஏன் அப்படி யோசிக்கிறீங்க….. நம்ம பொண்ணுக்கு அப்படி ஒண்ணும் ஆகாது….அவள் அம்மா சொன்ன போது

    சப்போஸ் அப்படி ஆக கூடாதுன்னு முடிவு பண்ணி தான் நம்ம இயேசப்பா அவளை அங்க ஒப்பு கொடுக்கணும்னு நினைச்சிருந்தா….. உண்மையில் அதற்கு மேல் அவள் அம்மாவால் யோசித்து கூட பார்க்க முடிய வில்லை.

    தன் அழுகையோடு உங்க சித்தம் அதுவா இருந்தா நான் முழுமையா நீங்க கொடுத்த பொண்ணை உங்ககிட்ட ஒப்பு கொடுக்கிறேன்பா….அவளுடைய காரியங்களை இது வரை பார்த்து பார்த்து செய்தது நீங்கதான் இயேசப்பா. அதுனால நீங்க என்ன அவ வாழ்கையில் நடத்தணும்னு தீர்மானம் பண்ணி இருக்கீங்களோ, அதற்கு முழுமையா நான் என்னை ஒப்பு கொடுக்கிறேன்….சொல்லி விட்டு அவர் அழுத போது சமாதானப்படுத்த தெரியாமல் விழித்தார்.

    நம்ம பொண்ணு வர்ற நேரம்…நம்ம இயேசப்பா அவளை அவ வீட்டில் சேர்க்கும் வரை நம்ம பொண்ணா என்றும் நம்ம வீட்டில சந்தோசமா இருக்கட்டும். எந்த வகையிலயும் இதை நீ வெளிபடுத்தாத….சொல்லி கொண்டு இருக்கும் போதே…….அம்மா, சாப்பாடு ரெடியா….வயிறு பசிக்குது….சொல்லி கொண்டே நுழைந்தவளை அவள் அம்மா வேதனையோடு பார்த்தார்.

    மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்.

    Related Post

    Categories: பைபிள் சம்பவங்கள்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    seven − 5 =

    You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>