-
காணாமல் போன காசு
காணாமல் போன காசு இயேசு தனது போதனைகளின் போது கூறிய ஒரு உவமானக் கதையாகும். இது இயேசுவை பரிசேயர் இயேசுவை பாவிகளுடன் சேர்ந்து அவர்களுக்கு போதிக்கிறார் என குற்றஞ்சாட்டியபோது, மனம் திரும்புதல் பற்றி கூறிய மூன்று உவமைகளில் இரண்டாவதாகும். இயேசு நீதிமான்களுக்கன்றி பாவிகளுக்கே அதிகமாக தேவை என்பதை வழியுறுத்து முகமாக கூறப்பட்டது. காணாமல் போன ஆடு உவமை, ஊதாரி மைந்தன் உவமை என்பவற்றுடன் ஒரே பொருளை கொண்டிருக்கிறது.
.
உவமை
——————
ஒரு பெண்ணிடம் இருந்த பத்துத் வெள்ளிக்காசுகளுள் ஒன்று காணாமற் போய்விட்டால் அவர் எண்ணெய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும்வரை கவனமாகத் தேடுவதில்லையா? கண்டுபிடித்ததும், அவர் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, “என்னோடு மகிழுங்கள், ஏனெனில் காணாமற் போன வெள்ளிக்காசைக் கண்டுபிடித்துவிட்டேன்” என்பாள்..
பொருள்
——————-
காணாமல் போன காசு பாவ வழியில் சென்று கடவுளை விட்டு தூரமாக இருக்கும் மனிதரை குறிக்கிறது. அவன் மீண்டும் கடவுளிடம் திரும்பும் போது விண்ணரசில் மிக மகிழ்ச்சி உண்டாகும். பொருளை இவற்றுடன் ஒப்பிடுக; காணாமல் போன ஆடு உவமை, கெட்ட குமரன் உவமை..
Original Source From: ta.wikipedia.org
காணாமல் போன ஆடு Bible Incidents (for kids) – 39
காணாமல் போன காசு
Daily Bible Verse
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
« Feb | ||||||
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 |
Newsletter
Categories
Archives